Home நிகழ்வுகள் இந்தியா இந்திய – சீனா எல்லை மோதலை கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா அறிக்கை வெளியீடு

இந்திய – சீனா எல்லை மோதலை கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா அறிக்கை வெளியீடு

china_india_border_issue

புதுடெல்லி:  இந்திய மற்றும் சீனாவிற்கு இடையேயான எல்லை  கட்டுப்பாட்டு பகுதியில் ஏற்பட்டிருக்கும் மோதலை கூர்ந்து கவனித்து வருவதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டு உள்ளது.

உயிரிழந்த 20 இந்திய இராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா இரங்கல்

சீன-இந்திய எல்லையில் நடந்த மோதலில் உயிரை தியாகம் செய்த 20 இந்திய இராணுவ வீரர்களுக்கு அமெரிக்க வெளியுரவுத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்து உள்ளது.

மேலும் அந்த செய்தியில் நரேந்திரமோடி மற்றும் அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் ஆகியோர் சீன எல்லையில் உள்ள பிரச்சனை குறித்து ஜீன் 2 இல் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியை செப்டம்பரில் நடக்கவிருக்கும் ஜீ-7 மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் சரி செய்ய அமெரிக்கா உதவும்

“சீனா மற்றும் இந்தியா எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் சூழலை அமைதியான முறையில் சரி செய்ய அமெரிக்கா உதவும்,” என புதன்கிழமை இரவு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வருடத்தில் மோசமான மோதல் இதுதான்

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே திங்கள் கிழமை நடந்த மோசமான மோதல் கடந்த 45 வருடத்தில் இதுதான் முதல் முறை என தெரிகிறது.

இந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்களும், சீன தரப்பில் 43 இராணுவத்தினரும் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here