Home Latest News Tamil பபுக் புயல்: பெயருக்கேற்ற புயலின் சேட்டை!

பபுக் புயல்: பெயருக்கேற்ற புயலின் சேட்டை!

903
0
பபுக் புயல்

பபுக் புயல்: பெயருக்கேற்ற புயலின் சேட்டை! தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை; அந்தமான், மலேசியாவின் கதி?

பபுக் புயல் (Pabuk Cyclone) என்றால் என்ன?

Pabuk Meaning

ບຶກ (Lao)   –  giant, catfish (English) – பெரிய கெளுத்தி மீன்
ປາດຸກ (Lao) – catfish (English) – கெளுத்தி மீன்

பபுக் புயல், மேற்குப் பசிபிக்பெருங்கடலில் உருவாகியுள்ளது. இந்தப் புயலுக்கு பெயர் வைத்த நாடு, லாவோஸ். லாவோ மொழியில் பபுக் என்றால் பெரிய கெளுத்தி மீன் என்று அர்த்தம்.

பெயருக்கு ஏற்றார்போலே புயலின் சேட்டையும் அமைந்துள்ளது. கெளுத்தி மீன் குத்தினால் பாம்பு கொத்தியதைப்போல் இருக்கும், ஆனால் விஷம் இருக்காது. அதே போன்றே தாய்லாந்தின் ஒரு பகுதியைக் கலக்கி வருகின்றது.

பபுக் புயலால் பாதிக்கப்படும் நாடுகள்

தற்பொழுது தாய்லாந்து கடற்கரை சீற்றத்துடன் காணப்படுகிறது. கனமழை பெய்துவருகின்றது.

இப்புயல் இன்று, வடக்கு மலேசியப் பகுதியைக் கடக்க உள்ளது. இருப்பினும் இப்புயலால் பெரிய ஆபத்து மலேசியாவிற்கு இருக்காது.

அங்கிருந்து 45 மைல் வேகத்தில் அந்தமானைச் சென்றடையும். 6-ம் தேதி அந்தமானை கடக்கும். இன்று இரவு மலேசியா எவ்வளவு பாதிக்கப்பட உள்ளது என்பதைப் பொறுத்தே அந்தமானின் பதிப்புகளை கணிக்க முடியும்.

தமிழகத்தை தாக்குமா?

இரண்டு நாட்கள் முன்புவரை இப்புயல் தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பபுக்புயல் அந்தமான் தீவுடன் வலுவிழந்த நிலையில் பர்மா, தாய்லாந்து பகுதியை நோக்கிச்செல்லவே வாய்ப்பு அதிகம் உள்ளது.

இருப்பினும், தமிழக மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்தமான் கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleசக்தியின் கற்பழிப்பும்; மைனர் குஞ்சு தீர்ப்பும்! நியாயமா?
Next articleபூமியைப் படைத்தவர் யார் தெரியுமா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here