Home நிகழ்வுகள் தமிழகம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காணமல்போன முகிலன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காணமல்போன முகிலன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

331
0
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காணமல்போன முகிலன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் இறந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது என முகிலன் என்ற சமூக ஆர்வலர் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஆதாரத்துடன் கூடிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இந்தச் சந்திப்பு முடிந்த அன்று இரவு மதுரை செல்ல எழும்பூர் ரயில் நிலையம் சென்று ரயிலில் ஏறினார்.

10:30 மணியளவில் நண்பர்களுடன் பேசியுள்ளார். அதன்பிறகே முகிலன் மாயமாகியுள்ளார். அவரைப் போலீசார் அல்லது ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் கடத்தியிருக்கலாம் எனக் கூறப்பட்டது.

ரயிலில் ஏறிய முகிலன் பாதி வழியிலேயே மாயமானதாக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து, சுதா ராமலிங்கம் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தார்.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர், காஞ்சிபுரம், விழுப்புரம் எஸ்பிக்கள் உடனே விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், முகிலன் மாயமான வழக்கை சிபிசிஐடிக்கு, தமிழக டிஜிபி ராஜேந்திரன் மாற்றி உத்தரவிட்டுள்ளார். எனவே, விரைவில் முகிலன் குறித்த தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleசுட்டெரிக்கும் வெயில் ஆரம்பமாகிவிட்டது
Next articleஓர்பிஷ் கரை ஒதுங்கியது; சுனாமி பீதியால் மக்கள் கவலை
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here