கட்சியும் வேண்டாம், சின்னமும் வேண்டாம்: சுயேட்சையாக போட்டியிடுவோம்!
இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் எடப்பாடி அணிக்கே என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் கவலைப்படப் போவதில்லை.
தேவைப்பட்டால் அனைத்து தொகுதியிலும் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெறுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.