சென்னை: புதன் கிழமை தமிழகத்தில் 6 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர், 817 புதிய தொற்றுகள் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 18,545 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 558 பேர் பாதிப்பு
சென்னையில் இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 558 பேரில் 138 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் என மாநில அரசு தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133ஐ தொட்டது.
கள்ளகுறிச்சியில் உள்ளூரில் இருந்த நபர் ஒவருக்கு கொரோனா தொற்றும் மற்றும் மராட்டியத்திலிருந்து கள்ளகுறிச்சிக்கு திரும்பியவர்கள் 73 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் 131 பேருக்கு கொரோனா
புதன் கிழமை வரையில் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் மொத்தம் 131 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுதவிர தனிமை படுத்தப்பட்டிருந்த தொடர்வண்டி பயணிகள் 67 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 4.23 இலட்சம் கொரோனா பரிசோதனை
தமிழகத்தில் மொத்தம் 70 அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை கூடங்கள் உள்ளன, கடந்த 24 மணிநேரத்தில் 10,661 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. இதுவரை 4.23 இலட்சம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.
புதன் கிழமை 567 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் மொத்தம் 9,909 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 8,500 பேர் தற்போது தனிமைபடுத்தப்பட்டு கண்கானிப்பில் உள்ளனர்.