நாடுமுழுவதும் கொரோனா பரவலைத் தடுப்பதற்க்காக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளதால் மதுப்பிரியர்கள் மதுபானம் அருந்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
திடீர் என்று மது அருந்துவதை நிறுத்த முடியாமல் சாயம் பூச பயண்படும் “வார்னிஷ்” போன்ற திரவங்களைக் குடித்து உயிர் இழந்தச் சம்பவங்களும் நிகழ்ந்தன.
சில இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டூம், குடோன்களிலிருந்து மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
இவ்வாறு தொடர்ந்து மது அருந்தியவர்கள் திடீர் என அருந்தாமல் விட்டால் உடல் நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்.
டாஸ்மாக் கடைகளை திறக்கக் கோரிய மனு
இது போன்ற காரணங்களாலும், கள்ளச்சாராயம் பெருக வாய்ப்பு உள்ளதாலும் அரசு குறைந்த பட்சம் 2 மணி நேரம் திறக்கவேண்டும் என ஸ்டாலின் இராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு , “பிற மாநிலத்திலும் இதுபோன்ற மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதை”
சுட்டிகாட்டிய அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்க வலியுறுத்திய மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மது அருந்தும் சிலர் இந்த ஊரடங்கு நாட்களை பயண்படுத்தி மது அருந்தாமல் வாழ முயற்றி மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.