Home நிகழ்வுகள் உலகம் அடுத்து அதிகமக்களை இழக்கப்போறது ஆப்ரிக்காதான் – உலகசுகாதார நிறுவனம் எச்சரிக்கை

அடுத்து அதிகமக்களை இழக்கப்போறது ஆப்ரிக்காதான் – உலகசுகாதார நிறுவனம் எச்சரிக்கை

271
0
அடுத்து அதிகமக்களை இழக்கப்போறது ஆப்ரிக்காத்தான் - உலகசுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Coronavirus in Africa : உலகில் கொரோனவைரஸ் அடுத்து அதிக மக்களை பழிவாங்கப்போறது ஆப்ரிக்காவில்தான் என உலக சுகாதாரநிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனாவைரஸ் சீனாவில் வூஹான் மாகாணத்தில் தோன்றினாலும், இதுவரை உலகில் அதிக மக்களை பாதித்தது அமெரிக்காவில்தான்.

உலகம் முழுவதும் பல நாடுகள் பலவிதமான கட்டுப்பாடுகளுடன் கொரோனாவினை எதிர்த்து வரும் இந்தவேளையில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஆப்ரிக்கத்தான் கொரோனவினால் அதிகமாக பாதிக்கப்படப்போவதாக உலக சுகாதாரண நிறுவனம் எச்சரித்துள்ளது.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளே கொரோனாவினை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் இந்நேரத்தில், பெரிதளவு மருத்துவவசதி இல்லாத நாடுகள் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று.

Coronavirus in Africa

கடந்த சில வாரங்களாக ஆப்ரிக்காவில் கொரோனாவைரஸின் தாக்கம் வேகமாக அதிகரித்துளள்ளது. இதுவரை 1000 பேர் இருந்ததோடு மட்டுமல்லாமல் 18000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனால், ஆப்ரிக்க அரசாங்கத்திற்கு மருத்துவ கருவிகள் தட்டுப்பாடு வரலாம் எனவும் மேலும் இதனை குறைக்க முடிந்தளவு சமூக இடைவெளியினை கடைபிடிக்கவும் என்று கூறியுள்ளது WHO.

அரசாங்கம் என்னதான் கூறினாலும் மக்களுக்கு இதன் தீவிரம் தெரியாமல் வழக்கம்போல நடமாடுகின்றனர். அதோடு ஆப்பிரிக்காவில் பல இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கமுடியாத சூழ்நிலைகளும் உள்ளது.

அது மட்டுமல்லாமல் ஆப்ரிக்காவில் இறந்த ஒரு நபருக்கு வெண்டிலேட்டர் இல்லாததால் மருத்துவம் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளது அந்நாட்டு அரசு.

இப்பொழுதும் நீங்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றால், உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு மனிதர்கள் பலியாகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் ஆப்ரிக்க அரசினை எச்சரித்துள்ளது.

Previous articleபுருஷனை கலாய்த்த பொண்டாட்டி: மாடர்ன் திருவள்ளுவரான சாந்தனு!
Next articleடாஸ்மாக் கடைகளை திறக்கக் கோரிய மனு தள்ளுபடி!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here