Home Latest News Tamil வாட்ஸ்ஆப் புதிய வசதி: ஒரு க்ரூப்பில் 1000 பேர்; வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் இன்வைட் லிங்க்

வாட்ஸ்ஆப் புதிய வசதி: ஒரு க்ரூப்பில் 1000 பேர்; வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் இன்வைட் லிங்க்

971
0
வாட்ஸ்ஆப் புதிய வசதி

வாட்ஸ்ஆப் புதிய வசதி: ஒரு க்ரூப்பில் 1000 பேர்; வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் இன்வைட் லிங்க்

நீண்ட நாட்களாக வாட்ஸ்ஆப் பயனர்கள் வைக்கும் ஒரு கோரிக்கை வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் இன்வைட் லிங்க் வசதி வேண்டும் என்பதே.

வாட்ஸ்ஆப்பை விட குறைந்த பயனாளர்களைக் கொண்ட டெலிகிராம் நிறுவனம் ஒரு குரூப்பில் 1 லட்சம் பேர் வரை இணைக்கும் வசதியை அறிமுகப்படுத்தி விட்டது.

ஆனால் வாட்ஸ்ஆப், பேஸ்புக் நிறுவனதிற்கு கைமாறிய பிறகு நவீன வசதிகளை செயல்படுத்துவதில் மிகவும் தாமதப்படுத்திக்கொண்டே இருந்தது.

புதிய வசதி பயனாளர்களுக்குப் பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்திவிடக் கூடாது என்பது ஒரு காரணம்.

பேஸ்புக் பயனாளர்கள் குறைந்துவிடக்கூடாது என வாட்ஸ்ஆப் குழுவில் அதிக உறுப்பினர்களை இணைக்கும் வசதி வழங்கப்படவில்லை என்பதும் ஒரு காரணம்.

தற்பொழுது வாட்ஸ்ஆப் மகிழ்சிகரமான ஒரு முடிவை எடுத்துள்ளது. இன்னும் இதை வாட்ஸ்ஆப் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

WhatsApp API டெவலப்பர்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும். அனைவரும் பயன்படுத்துவதற்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்.

வாட்ஸ்ஆப்பின் புதிய வசதிகள்

  1. வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் (WhatsApp Broadcast Link) இன்வைட் லிங்க் வசதி.
  2. வாட்ஸ்ஆப் குழுவில் 1000 பேர் வரை இணைக்கலாம்.
  3. வாட்ஸ்ஆப் குழுவில் உங்களை யார் இணைக்க வேண்டும் என ப்ரைவசி சென்ட்டிங் வசதியும் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது யாரவது உங்களை ஒரு குழுவில் தேவை இல்லாமல் சேர்க்க முயற்சித்தால் நீங்கள் சேர விருப்பமா என உங்களிடம் கேட்டுக்கும். அதன் பிறகே உங்களை அந்தக்குழுவில் இணைக்க முடியும்..

வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் (WhatsApp Broadcast) என்றால் என்ன?

வாட்ஸ்ஆப் குழுவைப் போன்று தான் இதுவும். ஆனால் உங்களுடைய நம்பரை அட்மினைத் தவிர வேறு ஒருவர் பார்க்க முடியாது.

எங்களுடைய வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் மற்றும் டெலிகிராம் குழுவில் இணைய கிளிக் செய்யவும்.

நியூஸ்டாக் செயலியில் இதைப் படித்துக்கொண்டு இருந்தால் மூல வலைதளத்தை கிளிக் செய்து இணைந்துகொள்ளவும்.

whatsapp broadcast invite

Previous articleகமல்.. கமல்… 35 முறை தொடர்ந்து முழங்கிய பாஜக தலைவர் – ட்ரெண்டிங் வீடியோ
Next articleவெறும் 12 மணி நேரத்தில் இரு வெவ்வேறு அணிகளுக்கு விளையாடி 10 விக்கெட்டுகள் எடுத்த லாசித் மலிங்கா
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here