வில் ஸ்மித்தின் புர்ஜ் கலிஃபா வீடியோ: இன்ஸ்டாகிரம்
50 வயதான பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோ 7 மில்லியன் பார்வைகளும் 1.7 மில்லியன் லைக்குகளும் 26000 கமெண்ட்டுகளும் பெற்றுள்ளது.
இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்தார். இவருக்கு முன் நடிகர் ராக், நடிகை ப்ரியங்கா சோப்ரா ஆகியோர் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றனர்.
ஹாலிவுட் ஒவ்வொரு மாதமும் மோஸ்ட் ஃபேமஸ் டிவி பிரபலங்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
இந்த மாதம் வெளியிட்ட பட்டியலில் வில் ஸ்மித் 10ஆவது இடத்தில் இருந்து முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
சமூக வலைத்தளங்களில் ஒரு நபரின் முழு ஈடுபாடு மற்றும் வரவேற்பை பொறுத்து இந்த லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது.
வில் ஸ்மித் நடித்த ‘பக்கெட் லிஸ்ட்’ என்ற இணைய தொடரின் டிரைலர் பேஸ்புக் தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து வில் ஸ்மித் அலாவுதீன், பேட் பாய்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அலாவுதீன் படம் படிப்பிடிப்புகள் முடிந்ததால் வருகிற மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.