Home நிகழ்வுகள் உலகம் விமானத்தைக் கடத்தியவரை சுட்டுக்கொன்றது ராணுவம்

விமானத்தைக் கடத்தியவரை சுட்டுக்கொன்றது ராணுவம்

492
0
விமானத்தைக்

விமானத்தைக் கடத்தியவரை சுட்டுக்கொன்றது ராணுவம்

வங்கதேசம் தலைநகர் டாக்கா விமானநிலையத்தில் இருந்து துபாய் நோக்கி சென்றுகொண்டு இருந்த பிமன் ஏர்லைன்ஸ் BG147 ரக விமானத்தை துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் கடத்தினான்.

இதனால் விமானம் சிட்டாகாங் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 148 பயணிகள், விமானப் பணிப்பெண்களை வெளியில் செல்ல அனுமதித்த அந்த மர்மநபர் விமானிகளை மட்டும் பணையக்கைதியாகப் பிடித்து வைத்துக்கொண்டான்.

கடத்தல் நபரை பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் எனத் தெரிய வந்தது.

இதனால் விமானத்திற்குள் நுழைந்து கடத்தல் நபரை சுட்டு விமானியை மீட்டனர் வங்கதேச ராணுவத்தினர்.

குண்டுக்காயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் கடத்தல்காரன் உயிரிழந்தான்.

Previous articleஏற்காடு மலையடிவாரம் காப்புக்காட்டில் காட்டுத்தீ
Next articleமனிதன் ஒரு சர்வாதிகாரி? விலங்குகள் உனக்கு அடிமையா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here