ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. கடந்த 24 மணிநேரத்தில் 111 பேர் கொரோனாவால் இறந்தனர்.
இதுவரை 2,100 பேர் அந்நாட்டில் கொரோனாவால் இறந்துள்ளதாக தெரிகிறது.
தென் ஆப்பிரிக்காவில் சோதனை முறையில் தடுப்பு மருந்து
கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை தென் ஆப்பிரிக்காவில் சோதனை முறையில் பயண்படுத்த உள்ளனர். இந்த நிகழ்வில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் பங்கெடுக்க உள்ளதாக தெரிகிறது.
இதுவரை ஆப்பிரிக்காவில் 3,25,000 வைரஸ் தொற்றுகள்
ஆப்பிரிக்காவில் தற்போது 3,25,000 வைரஸ் தொற்றுகள் உள்ளன. அந்நாட்டுமக்களிடமிருந்து பொருளாதார அழுத்தம் ஏற்பட்டதால், அரசு ஊரடங்கை தளர்த்தி உள்ளது.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பற்றாகுறை அந்நாட்டில் பெரும் பிரச்சனையாக உருமாறியுள்ளது.
அடுத்த கொரோனா மையமாக ஆப்பிரிக்கா உருவாகும் ஆபத்து
தற்போது இருக்கும் நிலை நீடித்தால் உலகத்தின் அடுத்த கொரோனா மையமாக ஆப்பிரிக்கா உருவாகும் என்பது உறுதி.