Home நிகழ்வுகள் உலகம் கோமா பெண் கர்ப்பம்: டி.என்.ஏ. மூலம் சிக்கிய கருப்பு ஆடு!

கோமா பெண் கர்ப்பம்: டி.என்.ஏ. மூலம் சிக்கிய கருப்பு ஆடு!

470
0
கோமா பெண் கர்ப்பம்

கோமா பெண் கர்ப்பம்: டி.என்.ஏ. மூலம் சிக்கிய கருப்பு ஆடு!

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் 14 ஆண்டுகளாக அம்மருத்துவமனையில் கோமா நிலையில் உள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இவருக்கு குழந்தை பிறந்தது.

கோமாவில் உள்ள பெண்ணுக்கு எப்படி குழந்தை பிறந்தது என மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சியடைந்து, போலீசில் புகார் அளித்தது.

இந்த வழக்கை விசாரணை செய்த போலீசார், கோமா நிலையில் இப்பெண்ணை யாரோ பாலியல் வன்புணர்வு செய்ததின் காரணமாக அவர் கர்ப்பமடைந்திருக்கலாம் என முடிவு செய்தனர்.

இதனால் மருத்துவமனையில் உள்ள ஆண் ஊழியர்கள் அனைவருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்வது என முடிவு செய்தனர்.

டி.என்.ஏ. பரிசோதனை முடிவில், நாதன் சதர்லாந்து என்பவரின் டி.என்.ஏ. குழந்தையின் டி.என்.ஏ.வுடன் ஒத்துப்போவது கண்டறியப்பட்டது.

இதனால், நாதன் சதர்லாந்து என்ற ஊழியர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட கோமா பெண்ணிற்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனை நஷ்டஈடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous article14 வயது சிறுமியும், நடிகை பானுப்பிரியாவும்: தாய் கதறல்!
Next articleபாண்ட்யா-ராகுல் தலை தப்பியது: பிசிசிஐ கிரின் சிக்னல்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here