நாங்கள் என்றோ எடுத்த டார்ச் லைட்டை இன்றுதான் பிரதமர் கையில் எடுத்திருக்கிறார் என்று கமலஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் 204 நாடுகளுக்கு மேல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
10 லட்சத்துக்கும் மக்கள் மேற்பட்ட பாதிப்புகளும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டுவர பல நாடுகள் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
கனடா பிரதமரின் மனைவி பிரிட்டன் பிரதமர் பிரிட்டன் இளவரசர் போன்றவர்களும் இந்தப் கொரோனாவால் பாதித் உள்ளார்கள்.
பிரதமர் மோடி ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று மார்ச் 3ஆம் தேதி பிரதமர் மோடி காலை 9 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றினார்
” மக்கள் அனைவரும் மார்ச் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைத்து விளக்குகளையும் அணைத்து வைத்து மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட்டை ஏற்றி வைக்கவும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதை சமூகவலைதளங்களில் பலர் விமர்சித்து வருகிறார்கள். தற்போது மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமலஹாசன் சமூகத்தில் விமர்சித்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் “பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்” என்று பதிவிட்டுள்ளார்
இதை பல பகிர்ந்தும் ஆதரவும் வருகிறார்கள்