Home Latest News Tamil தூரத் தூரப் போனால்; துரத்தி துரத்தி வருமாம்! – லவ்

தூரத் தூரப் போனால்; துரத்தி துரத்தி வருமாம்! – லவ்

764
0
தூரத் தூரப் போனால் லவ்

தூரத் தூரப் போனால்; துரத்தி துரத்தி வருமாம்!  லவ் பண்ணுறீங்களா பாஸ்… இத கண்டிப்பா படிங்க…

காதலர்கள் இருவரும் வெவ்வேறு இடத்தில் இருக்கலாம். வெவ்வேறு இடத்தில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் இருக்கும்.

இந்த சூழ்நிலை இருவருக்குமே சவால் நிறைந்து இருக்கும். இது இருவரையும் உடலளவில் நெருங்கவிடவில்லை என்றாலும், மனதளவில் நங்கூரமிட்ட பிணைப்பை உருவாக்கும்.

ஒவ்வொரு வாரமும் சந்திக்க இயலாது. வெறும் ஃபோன் கால்களில் மட்டுமே தொடர்பு கொள்ள இயலும்.

ஆனால் இந்த தொலைதூரக் காதல்தான் காதலர்கள் இருவரிடமும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆய்வு கூறுகிறது.

லி கிரிஸ்டல் ஜியாங் ஆய்வு

ஹாங்காங் நகரத்தில் இருக்கும் சிட்டி பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்கு 30 தொலைதூரக் காதலர்களையும் 33 அருகில் வசிக்கும் காதலர்களையும் எடுத்துக்கொண்டனர்.

வெவ்வேறு வகையான கேள்விகளை இருவகையான காதலர்களிடம் கேட்கும்பொழுது பதில்கள் எதிர்பார்ப்பதை விட வித்தியாசமாக இருந்தது.

தொலைதூரக் காதலர்களே தங்களுடைய காதலைப் பற்றி அதிகமாக பேசவும் விவரிக்கவும் செய்தனர். இருவரிடையேயும் புரிதல்கள் அதிகமாக இருந்தது.

இருவரும் வெவ்வேறு இடத்தில் இருப்பது அவர்களுடைய காதலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

டெக்னாலஜியின் வளர்ச்சி, காதலர்கள் எளிதாக எந்தவித தடையுமின்றி தொடர்புகொள்ள வசதியாக இருக்கிறது.

தூரத் தூரப் போனால்; துரத்தி துரத்தி வருமாம்! – லவ்…. தொலைதூரக் காதலர்களுக்கு சமர்ப்பணம் இக்கவிதைகள்

நீ காற்றோடு 
கைகோர்த்து நடைபோடுகிறாய் தனியே!
நான் விண்மீன்களை 
எண்ணிக்கொண்டிருக்கிறேன் தனியே! 


தொலைதூரப் பயணம்,
தொலைதூரத் தேடல்,
எப்போதுகாண்பேன் உன்னை..

Previous articleபெரிய தம்பி சிறுத்தை: மாடிக்கு ஜம்ப் அடித்து வாலிபரைக் குதறியது – வீடியோ
Next articleகாதலர்கள் மனதளவில் நெருக்கமாவது எப்படி?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here