Home Latest News Tamil தேங்காய் அழுகினால் அபசகுணமா?

தேங்காய் அழுகினால் அபசகுணமா?

793
1
தேங்காய் அழுகினால் அபசகுணமா? ஏன் தேங்காய் உடைத்து பூஜை செய்கிறோம்? பூஜையின் போது தேங்காய் அழுகினால் என்ன பலன்? அழுகி இருந்தால்

தேங்காய் அழுகினால் அபசகுணமா? ஏன் தேங்காய் உடைத்து பூஜை செய்கிறோம்? பூஜையின் போது தேங்காய் அழுகினால் அழுகி இருந்தால் என்ன பலன்?

நமது வழிபாட்டு முறைகளில் மிகவும் தொன்மையானது இறைவனுக்கு அமுது படைப்பது.

அமுது படைத்தலில் கண்டிப்பாக தேங்காய் உடைத்து இறைவனுக்கு சமர்பித்தல் முக்கியமானதாக இருக்கும்.

அனைவரும் கோயிலுக்குச் சென்றால் தேங்காய், வாழைப்பழம், மலர், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்லுதல் வழக்கமாக உள்ளது.

இதில் தேங்காய் உடைத்தல் மற்றும் உடையும் விதத்தை மிகவும் உன்னிப்பாகவும் சகுனம் பார்க்கவும் பயன்படுத்தி வருகிறோம்.

அப்படி என்ன உள்ளது தேங்காய் உடைப்பதில்? ஏன் தேங்காய் உடைத்து பூஜை செய்கிறோம்? தேங்காய் உடைப்பதின் தாத்பர்யம் பற்றி விரிவாகக் காண்போம்.

தேங்காய் உடைப்பதின் தாத்பர்யம்

ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படுகின்ற மும்மலங்களை உடைத்து எறிந்து இறைவனிடம் சராணாகதி அடைகிறேன் என்பதை உணர்த்தும் பொருட்டே தேங்காய் உடைக்கின்றனர்.

இதில் சகுணங்கள் பார்ப்பது நம்மில் பலரும் பல காலங்களாக வழக்கத்தில் வைத்துள்ளனர்.

தேங்காய் அழுகினால் என்ன பலன்?

நாம் இறைவனுக்கு படைக்கும் பொருட்கள் அனைத்தும் நல்ல பரிசுத்தமானதாக இருக்க வேண்டும் என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங்குவோம்.

ஆனால் தேங்காய் ஒன்று மட்டுமே உள்ளே எப்படி இருக்கிறது என்று பார்க்க இயலாது.

உள்ளிருக்கும் தேங்காய் நல்ல நிலையில் உள்ளதா? என அனுபவசாலிகள் கையில் எடுத்ததுமே கண்டுபிடித்து விடுவர்.

நம்மில் பலருக்கு அது தெரியாது. மேலும், கோயிலில் அர்ச்சகர் உடைத்து அது அழுகிய நிலையில் இருந்தால் பலரும் மனம் வேதனை அடைவர்.

அந்த அளவிற்கு நாம் தவறான நம்பிக்கை கலந்த பயத்துடன் வாழ்ந்து வருகிறோம். பூஜையில் உடைக்கும் தேங்காய் அழுகினால் அபசகுணமா?

உண்மையில் கோயில் மற்றும் வீட்டு பூஜைகளில் தேங்காய் அழுகி இருந்தால் மனம் வருந்த வேண்டாம்.

நமக்கு தொல்லை தரக்கூடிய திருஷ்டி, சங்கடங்கள் இறைவன் முன் தொலைந்தது என்று அர்த்தமாகும்.

நாம் நம்முடைய கவலைகள், குறைகள் எல்லாம் நீங்கிப் போக வேண்டும் என்று இறைவனிடம் பிராத்திக்க தான் பூஜைகள் செய்கிறோம்.

அப்படி எல்லா வளங்களையும் தரக்கூடிய இறைவன் மீது நம்பிக்கை வேண்டும்.

அவரால் நாம் எல்லா கஷ்டங்களையும் தீர்த்து வைக்க இயலும் என்று இருக்கும் போது ஏன் வெறுமனே தேங்காய் அழுகியதற்கு அஞ்ச வேண்டும்.

பயமே மனிதனை கொல்லும் சக்தியாக மாறிவிடும். உண்மையில் இறைவனை முழுமையாக நம்புபவர்கள் இது போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி கிடக்கமாட்டார்கள்.

நம்முடைய எண்ணங்கள் நல்லவையாக இருக்க வேண்டும். தேங்காய் அழுகி இருப்பது அபசகுணம் என்று எண்ணி தீமை வரும் என்றே எண்ணங்கள் இருந்தால்.

அந்த பயத்தின் மீதுள்ள நம்பிக்கையே நாம் நினைத்த தீங்கை உண்டாக்கிவிடும்.

இறை நம்பிக்கை வேண்டும்

சகுணத்தின் மீது உள்ள நம்பிக்கையை இறைவனிடம் வைத்தல் வேண்டும். அவரால் செய்ய இயலாதது என்ற ஒன்று கிடையாது.

செவிவழி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். தெளிந்த நல்மனதோடு இறை பக்தியோடு நல்லதை நினைத்தால் நல்லவையே நடக்கும்.

இயன்ற வரை, நல்ல தேங்காய்களை வாங்க தெரிந்தவர்களிடம், எப்படி சிறந்த தேங்காய் வாங்க வேண்டும்? என்று கற்பதே சிறந்தது ஆகும்.

மேலும் நாம் தேங்காய் உடைத்து பூஜை செய்தாலும் செய்யாவிட்டாலும் இறைவன் நமக்கு விதிக்கப்பட்டதை தராமல் இருக்கமாட்டார் என்பதை உணர வேண்டும்.

தேங்காய் அழுகினால் அஞ்சாமல் உண்மைத் தன்மையை உணர்ந்து இனியாவது மடமையில் குழம்பாமல் இறைவனை பக்தியோடு பூஜித்து நன்மைகளை பெறுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here