Home ஆன்மிகம் சுவாமி விவேகானந்தர் பார்வையில் எதிர்கால இந்தியா

சுவாமி விவேகானந்தர் பார்வையில் எதிர்கால இந்தியா

0
793
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்

சுவாமி விவேகானந்தர் பார்வையில் எதிர்கால இந்தியா கட்டுரை? சுதந்திர தினம், விவேகானந்தர் பிறந்த தினம் கொண்டாடும் நாம் உண்மையில் சுதந்திரமாக உள்ளோமா?

சுதந்திர இந்தியாவில் மக்கள் அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் தமது காலத்தை பெரும்பாலும் இணையம், இணைய விளையாட்டு, கைபேசியில் தேவையற்ற உரையாடல்களில் தான் நேரத்தை செலவிடுகிறார்கள்.

எவரும் தங்களின் எதிர்காலம் குறித்த எண்ணங்களை முறைப்படுத்துவதும் இல்லை, எண்ணுவதும் இல்லை.

இந்த நிலையில் இளைய தலைமுறை ஒன்றே எதிர்கால இந்தியாவை வளமாகவும், வலிமையாகவும் மாற்றும் என்று கூறிய பெருமகனார் சுவாமி விவேகானந்தர்.

இவரின் எண்ணத்தில் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி நிலை குறித்த சிந்தனைகள் மேலோங்கி இருந்தன.

குடிசைகளில் மறைந்துள்ள இந்தியா

விவேகானந்தர் பிறந்த தினம் சுதந்திர தினம்ஆன்மீக பூமி என்று சொல்லப்படுகின்ற இந்தியாவில் மதமும், சாதியும் மக்களின் மனதிலும், உதிரத்திலும் கலந்துவிட்டது. மதம் என்பது மக்களை நெறிப்படுத்த மட்டுமே தவிர வேற்றுமைகளை தூண்ட இல்லை என்பதை மக்களிடம் ஆழமாக கொண்டுச் செல்ல வேண்டும்.

ஆன்மீகம், யுத்தம், கவிதை போன்ற அனைத்து துறைகளிலும் உலகை வென்ற தீரர்களே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றனர்.

உலகிலுள்ள அனைத்து முன்னேற்றத்திலும் தங்களுடைய உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் பாமர மக்களைப் பற்றி புகழவோ, எழுதவோ செய்கின்றனரா? முற்றிலும் இல்லை!

உயர் வர்க்கத்தினர் உயர்வதற்காக, பாமர மக்களின் உழைப்பை உறிஞ்சி வயிற்றை வளர்த்து வருகின்றனர். கவனிப்பாரற்று ஒருவேளை சாப்பாட்டிற்காக, மொத்த இந்தியாவும் குடிசைகளில் மறைந்து கிடக்கின்றன.

இத்தகைய நிலை மாற வேண்டும். இந்தியாவில் இரண்டு பெரும் தீமைகள் மேலோங்கி உள்ளன “பெண்களை காலின் கீழ் மிதித்து நசுக்குதல், சாதிக்கட்டுப்பாடுகள் மூலம் ஏழைகளை கசக்கிப் பிழிதல்”.

இந்து-இஸ்லாம் ஒற்றுமை

பெரும்பாலும் விவேகானந்தரை இந்துத்துவ ஆன்மீகவாதி என்ற வரையறைக்குள் வைத்துள்ளனர். ஆனால், அவர் மதங்களை கடந்தவர்.

மதம் என்பது அனைவரும் கடவுளை அடைவதற்கான பாதைகளை வகுத்தli அழிப்பது மட்டுமே. ஆனால் அனைவரும் சென்று சேர்கின்ற இடம் ஒன்று தான்.

“இந்தியா இந்து மற்றும் இஸ்லாம் இரண்டறக் கலந்த தேசம். இரு மதங்களின் ஒற்றுமையே இந்தியாவை சக்திமிக்க நாடாக மாற்றும்”

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்

  • நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை.
  • பொறாமையும் சந்தேகமும் இல்லாமலிருத்தல்
  • நல்லவர்களாக இருக்கவும், நன்மை செய்ய முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல்.

எதிர்கால இந்தியா கட்டுரை இந்தியாவின் எதிர்காலம்

கல்வி எப்படி இருக்க வேண்டும்?

கல்வி என்பது, உன் மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டு திணித்து வைப்பதாக இருக்கக்கூடாது.

மாறாக வாழ்கையை உருவாக்கக் கூடிய, மனிதனை மனிதனாக மாற்றக் கூடிய, நல்ல ஒழுக்கங்களை வளர்க்கக்கூடிய ஐந்து கருத்துக்களை கிரகித்து அவற்றை நாம் பின்பற்றி நிற்க வேண்டும்.

அப்படிச் செய்தால் பெரிய நூல் நிலையம் முழுவதும் மனப்பாடம் செய்திருப்பவனைவிட, நீயே அதிகம் கற்றவன் ஆவாய்.

இந்தியாவின் எதிர்காலம் (எதிர்கால இந்தியா கட்டுரை)

இந்தியாவின் எதிர்காலமானது இளைய சமுதாயத்தின் கையில் தான் உள்ளது. துறவும், தொண்டுமே இந்தியாவின் தேசிய இலட்சியங்களாகும். இந்த இரண்டையும் பேணி வளர்த்தால் தானாக முன்னேற்றம் வந்து சேரும்.

நீ கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தாலும் சரி; நாத்திகவாதியாக இருந்தாலும் சரி. உன் சுக துக்கங்களை மறந்து வேலை செய். இதுதான் நீ கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.

இந்தியாவின் எதிர்காலம் அழிந்து விட்டா,ல் எல்லா ஞானமும் அழிந்து போய்விடும் நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும்.

கல்வி, மதம், பெண் சுதந்திரம், தனிமனித சுதந்திரம், உழைப்பு, சகோதரத்துவம் இவை மட்டுமே நாட்டை வளப்படுத்தும், என்பதனை மனதில் நிலை நிறுத்தி இளைஞர்கள் வீணாக நேரத்தை வீணாக்காமல் தம் வாழ்கையையும் நமது பாரத தாயையும் வளமாக்க ஏக மனதோடு பாடுபடுங்கள். இந்தியாவின் எதிர்காலம் வளமாக இருக்கும்.

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் ஜனவரி 12. அவரின் எதிர்கால கனவை நோக்கிப் பயணம் செய்து அவரவர் இலக்கை அடைய அயராது உழைப்போம்.

இந்திய சுதந்திர தினம் கொண்டாடும் நாம் எதிர்கால இந்தியா பற்றி சிந்தனை செய்வோம் என சுதந்திர தின நாளில் உறுதியெடுப்போம்.

விவேகானந்தர் பொன்மொழிகள் படங்கள்

இந்தியக் குடியரசு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here