Home விளையாட்டு மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு  முன்னேறியது இந்தியா

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு  முன்னேறியது இந்தியா

217
0
மகளிர் உலகக் கோப்பை

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு  முன்னேறியது இந்தியா

7வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும்,

பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் லீக் போட்டியில் விளையாடியது

பிரிவு ‘ஏ’ வில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பிரிவு ‘பி’யில் இங்கிலாந்து மற்றும் தென் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அதன்படி இன்று இந்தியாவும் இங்கிலாந்தும் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.

நடுவர்கள் காத்திருந்து காத்திருந்து மழை நின்றால் ஆட்டம் ஆரம்பிக்கலாம், 10 ஓவர் வரை குறைத்து விளையாடலாம் என்று காத்திருந்தனர், ஆனால் மழை நின்றபாடில்லை.

நடுவர்கள், இங்கிலாந்து தலைவரிடமும் இந்திய அணி தலைவரிடம் பேசி ஆட்டத்தை கைவிடலாம் என்று முடிவெடுத்தனர்.

அதன்படி ஆட்டம் கைவிடப்பட்டது பிரிவு ‘ஏ’ புள்ளி பட்டியலில் இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்து போட்டியிலும் வென்றதால் முதலிடத்தில் இருந்தது.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது உலக கோப்பை விதி.

அதன்படி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தது .

இதே மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது.

ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இந்த போட்டியிம் மழை காரணத்தால் கைவிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அப்படி கை விடும் பட்சத்தில் தென்ஆப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள காரணத்தினால் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறும்.

சொந்த மண்ணில் உலக கோப்பை போட்டியில் வெளியேறுவது ஆஸ்திரேலியா உள்ளூர் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இரண்டாவது போட்டியில் மழை பெறும் பட்சத்தில் இறுதிப்போட்டியில், இறுதிப்போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை சந்திக்கும், இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளது.

Previous articleTwitter Fleets Enable; ட்விட்டரில் எப்படி ஸ்டோரி வைப்பது?
Next articleசச்சின் பன்சால்; வரதட்சணை வழக்கு தொடுத்த பிலிப்கார்ட் நிறுவனர் மனைவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here