இந்தியாவின் முன்னாள் ஹாக்கி ஜாம்பவானான தன்ராஜ் பிள்ளை கரோனா வைரஸ் தடுப்பு பணிக்கான பிரதமர் நிதிக்காக 5 லட்சம் வழங்கியுள்ளார்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 204 நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து பல லட்சம் மக்களை பாதித்து வருகிறது.
தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதுவரை இந்தியாவில் 4700 மக்கள் பாதித்து உள்ளார்கள்
இந்தியாவின் பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார் அதனால் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது
பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக உங்களால் முடிந்த உதவியை தாருங்கள் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பல தொழிலதிபர்கள் , கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் போன்றவர்கள் நிதி வழங்கி வருகிறார்கள்.
தற்போது தன்ராஜ் பிள்ளை பிரதமர் நிதிக்காக 5 லட்ச ரூபாய் நிதியை வழங்கி உள்ளார்.
தன்ராஜ் பிள்ளை இந்தியாவின் ஹாக்கி ஜாம்பவான் என்று கூட சொல்லலாம் இது வரை இந்திய அணிக்காக 339 போட்டிகள் விளையாடி உள்ள தன்ராஜ் பிள்ளை 170 கோல்களை அடித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் இவருக்கு 2000 ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கியது நான்கு ஒலிம்பிக் போட்டிகள், நான்கு உலகக் கோப்பைகள், நான்கு சாம்பியன் கோப்பைகள், நான்கு ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.