Home விளையாட்டு ODI மேட்ச் நாங்க தான்; பல்பு வாங்கியது இந்தியா

ODI மேட்ச் நாங்க தான்; பல்பு வாங்கியது இந்தியா

321
0
ODI மேட்ச்

ODI மேட்ச் நாங்க தான்; பல்பு வாங்கியது இந்தியா. NZ vs IND 2nd Match. இந்திய vs நியூசிலாந்து. ஒரு நாள் தொடரை இழந்தது.

NZ vs IND 2nd ODI மேட்ச்

இந்திய vs நியூசிலாந்து ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 273 ரன்கள் குவித்தது. மார்டின் குப்தில் 79, ராஸ் டெய்லர் 73 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர்.

தாகூர் 2, சாஹல் 3, ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நியூசிலாந்தை குறைவான ரன்களில் சுருட்டியதால், இந்தியா நிச்சயம் வெற்றி பெரும் எனக் கணிக்கப்பட்டது.

இந்திய அணி மோசமான பேட்டிங்

ஒப்பனர்கள் பிரித்வ் மற்றும் மயங்க் சரியாக விளையாடவில்லை. அவர்களுக்கு அடுத்து வந்த விராட் கோலியும் 15 ரன்களில் நடையைக்கட்டினார்.

கே.எல்.ராகுல் 4, ஜாதவ் 9 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.  இந்தியாவின் நம்பிக்கை வீரர்களை கட்டம் கட்டி தூக்கினர் நியூசிலாந்து பவுலர்கள்.

ஷ்ரேயாஸ் அய்யரும், ஜடேஜாவும் சற்று இந்திய அணியை தாங்கிப்பிடித்து அழைத்துச் சென்றனர். ஷ்ரேயாஸ் அய்யர்  52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார்.

இதோடு மேட்ச் முடிந்தது என்று நினைத்தால் ஷைனி சிறப்பாக பேட்டிங் செய்தார். நியூசிலாந்து பவுலர்களின் பந்துகளை நொறுக்கினார்.

49 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 45 ரன்கள் அடித்தார். இந்தியாவின் வெற்றிக்கு 44 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில் ஷைனி அவுட் ஆகினார்.

பின்னர் வந்த சாஹல் சற்று கை கொடுக்க, ஜடேஜா அடித்து ஆடினார். சாஹல் தேவையில்லாத ரன் அவுட். இந்தியாவின் வெற்றிக்கு 22 தேவைப்பட்டது.

ஜடேஜா முயற்சி வீண். அவர் அடித்த ஷாட் கேட்ச் ஆனது. உலகக்கோப்பை போன்றே இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்று தோல்வியைத் தழுவினார்.

48.3 ஓவரில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்ற போட்டியில் பவுலிங் சொதப்பல், இப்போட்டியில் பேட்டிங் சொதப்பல் காரணமாக இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது.

Previous articleஇராமகிருஷ்ண தீர்த்த வரலாறு; இப்படி ஒரு அதிசய இடமா?
Next articleகொரோனா வைரஸ்: ரியல் ஹீரோ டாக்டர் லீ
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here