Home நிகழ்வுகள் உலகம் கொரோனா வைரஸ்: ரியல் ஹீரோ டாக்டர் லீ

கொரோனா வைரஸ்: ரியல் ஹீரோ டாக்டர் லீ

1054
0
கொரோனா வைரஸ் லீ வென்லியாங் li wenliang wikipedia tamil

கொரோனா வைரஸ்: ரியல் ஹீரோ டாக்டர் லீ. சீனா மக்களின் கதாநாயகனாக மாறிய கண் மருத்துவர் லீ வென்லியாங். li wenliang wikipedia tamil.

சீனாவின் ஹீபெய் மாகாணத்தின் தலைநகர் வுஹானில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க 24 நாடுகளில் பரவியுள்ளது.

மொத்தம் 28,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 650 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனால் இதை முன்பே அதாவது 8 பேருக்கு இருக்கும் போதே கண்டுபிடித்தவர் தான் கண் மருத்துவர் லீ வென்லியாங் (li wenliang).

முன்கூட்டியே கண்டுபிடித்து எச்சரித்த அவரும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இருப்பினும் மக்கள் அவரை புகழின் உச்சியில் வைத்து பார்க்கின்றனர்.

 li wenliang wikipedia tamil

வுஹான் சென்ட்ரல் மருத்துவமனையில் கண் மருத்துவரான லீ (34) தன்னிடம் வந்த நோயாளிகளை பரிசோதித்ததில் 10-ல் 8 பேருக்கு ஒரே மாதிரியான நோய் தொற்று இருப்பது கண்டு சக மருத்துவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்.

முதலில் லீ வென்லியாங் சார்ஸ் வைரஸ் திரும்ப பரவுவதாக சந்தேகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அனைவரும் பாதுகாப்பா இருங்க இது மனிதர்கள் மூலம் பரவும் என்பதையும் வெளியிட்டுள்ளார்.

அரசின் மிரட்டல்

லீ தனது நண்பர்கள் மற்றும் சக மருத்துவர்களை எச்சரிக்கை செய்துள்ளார். அனைவரையும் முகக்கவசம் அணியும் படி வீசாட்டில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொது சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும்; சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இவ்வாறான பொய் தகவல்களை பகிர்வதை நிறுத்தும் படியும் கடிதம் பெற்று சென்றுள்ளனர்.

கொடூர கரோனா லீ இறப்பு

இந்நிலையில் லீ ஜனவரி 10-ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தன்னை பரிசோதித்து பார்த்த லீ தனக்கும் அந்த வைரஸ் தொற்று இருப்பதை உணர்ந்தார்.

ஜனவரி 12-ம் தேதி மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையிலும் அவர் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டார். லீ அதில் கூறியதாவது, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் இது பரவக்கூடிய தொற்று வைரஸ் எனக் கூறினார். நேற்று அவர் உயிரிழந்தார்.

மக்களின் ஹீரோ

தற்போது சீன அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தங்கள் மன்னிப்பைக் கோரியுள்ளனர்.

தன் உயிர் போவதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் மக்களுக்காக இந்த தகவலை வெளியிட்ட லீயின் செயல் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

மேலும் இதை மறைத்த சீன அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். லீ தான் தங்கள் கதாநாயகன் என்றும் அவர் போன்ற மருத்துவர்கள் தான் நாட்டுக்குத் தேவை என்பது போன்ற கருத்துக்களை அவர் பதிவுக்கு கீழே தெரிவித்து வருகின்றனர்.

Previous articleODI மேட்ச் நாங்க தான்; பல்பு வாங்கியது இந்தியா
Next articleஆஸ்கார் 2020: வெல்லப்போகும் படங்கள் ஒரு பார்வை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here