Home Blog Page 150

ஒரு சாதாரண படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? பிரேக்கப் சாங் 10 மில்லியன் வியூஸ் ரீச்!

0
Break Up Song

Naan Sirithal Break Up Song; ஒரு சாதாரண படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? பிரேக்கப் சாங் 10 மில்லியன் வியூஸ் ரீச்! ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வந்த நான் சிரித்தால் படத்தில் உள்ள பிரேக்கப் சாங் யூடியூப்பில் 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

பிரேக்கப் சாங் யூடியூப்பில் 10 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

இயக்குநர் ராணா இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே எஸ் ரவிக்குமார், ரவி மரியா, ஷா ரா ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வந்த படம் நான் சிரித்தால்.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதிதான் இசையமைத்திருந்தார். இன்ஜினியரிங் படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்தாலும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஐஸ்வர்யா மேனனை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் பாஸிடம் கேள்வி கேட்ட மாட்டிக்கொண்ட ஆதியை அரியர்ஸ் கிளியர் செய்துவிட்டால் வேலை என்ற கட்டாயத்திற்கு வருகிறார்.

அதன் பிறகு தேர்வு எழுத செல்கிறார். அங்கு அவருக்கு சிரிக்கும் பழக்கும் ஏற்படுகிறது. குழப்பத்தில் இருக்கும் கே எஸ் ரவிக்குமார் ஆதி தான் தன்னை கொல்ல வருவதாக நினைக்க சிறைக்கும் செல்கிறார்.

சிறையிலிருந்து தப்பித்து வரும் கே எஸ் ரவிக்குமார் ஆதியை கொலை செய்ய திட்டம் போடுகிறார். அவரிடமிருந்து ஆதி தப்பித்தாரா? இல்லை வேலை நீக்கத்திலிருந்து தப்பித்து காதலியை கரம் பிடித்தாரா என்பது தான் படத்தின் மீதிக் கதை.

தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த ஆதிக்கு இந்தப் படம் கை கொடுக்கும் என்று நினைத்துள்ளார். ஆனால், அப்படி ஒன்றும் வரவேற்பு பெறவில்லை.

ஆனால், படம் ஹிட் இல்லையென்றாலும் படத்தில் இடம்பெற்ற பிரேக்கப் சாங் யூடியூப்பில் 10 மில்லியன் வியூஸ் பெற்று சாதித்துள்ளது.

அதுவும் குறைவான நாட்களில் இப்படியொரு மைல்கல்லை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக BreakUpSong10MViews என்ற ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது.

Hiphop Tamizha Aadhi Break Up Song Hits 10 Million Views in Youtube From Naan Sirithal Movie

3

சீரியல் நடிகையின் காதை கிழித்த ரசிகர்!

0
TV Actress Rani

TV Actress Rani; சீரியல் நடிகையின் காதை கிழித்த ரசிகர்! சீரியல் நடிகைகளில் வில்லியாக வலம் வந்த நடிகை ராணியின் காதை கிழித்து அவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வைத்த அவல நிலை ஏற்பட்டது.

சீரியல் நடிகை ராணியின் காதை கிழித்து அவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வைத்த நிலை ஏற்பட்டது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அலைகள் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை ராணி. இந்த தொடரைத் தொடர்ந்து, குல தெய்வம், வள்ளி, முன் ஜென்மம், ரங்கா விலாஸ், அத்திப்பூக்கள் என்று பல தொடர்களில் நடித்துள்ளார்.

இவ்வளவு ஏன், பக்கிரி என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஃப்ராங்க் ஷோக்களுக்கு நீதிமன்றம் தடை விதித்தது வரவேற்பதாகவும், அப்படி ஒரு ஷோவால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், சீரியல் படப்பிடிப்பின் போது மதிய உணவு முடிந்த பிறகு நான் மீண்டும் ஸ்பாட்டுக்கு வந்தேன்.

அப்போது ஒருவர் என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்க வேண்டும் என்றார். நானும் போட்டேன்.

பிறகு போட்டோ எடுக்க வேண்டும் என்றார். நானும் ஒப்புக் கொண்டேன். அந்த நேரத்தில் என் பக்கத்தில் வந்து கொஞ்சம் உரசிக் கொண்டே புகைப்படம் எடுத்தார்.

அதன் பிறகு அவர் போகவில்லை. என்னதான் வேண்டும் என்றேன். நீதான் வேண்டும் என்றார். நான் அப்படியே பயந்துவிட்டேன். உடனே காதுக்கு பக்கத்தில் வந்து சத்தமாக கத்தினார்.

அவர் கத்திய கத்தில் எனது காதே கிழிந்து விட்டது போன்ற உணர்வு. அதோடு, காதும் சரியாக கேட்கவில்லை. பயத்தில் எனக்கு பேச்சே வரவில்லை. மருத்துவமனையில் 1 வாரம் சிகிச்சை பெற்றேன்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு தான் எனக்கு தெரியவந்தது. அது ஃபிராங்க் ஷோ. அதனால், தான் இது போன்று யாரும் செய்யக்கூடாது என்று நோக்கத்தில் நீதிமன்றம் ஃபிராங்க் ஷோவிற்கு தடை விதித்தது.

அது சந்தோஷமாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

TV actress rani take medical treatment for her ear by prank Show

3

வீட்டு முன்பு 8 திருநங்கைகள் போராட்டம்: ரஜினிகாந்த் ரூ.5000 நிதியுதவி!

0
Rajinikanth Donation

Rajinikanth; ரஜினிகாந்த் வீட்டு முன்பு திருநங்கைகள் கொரோனா நிவாரண நிதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா நிவாரண நிதி கேட்டு ரஜினிகாந்த் வீட்டு முன்பு திருநங்கைகள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கொளுந்துவிட்டது எரிகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டும் 273 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, அஜித், யோகி பாபு, சூரி, சூர்யா, ராகவா லாரன்ஸ் என்று பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 8 திருநங்கைகள் தங்களுக்கு கொரோனா நிதியுதவி அளிக்க வேண்டும் என்று போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்த ரஜினிகாந்த் வெளிவராததால், அவர் வரும் வரை இங்கிருந்து நகரமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, லதா ரஜினிகாந்த் தனது வீட்டு காவலாளி மூலம் திருநங்கைகளுக்கு தலா ரூ.5000 கொடுத்து உதவியுள்ளார்.

பணம் பெற்றுக் கொண்ட பிறகு திருநங்கைகள், நோய் நொடியின்றி வாழ வேண்டும், மென் மேலும் வளர வேண்டும் என்று கூறியதோடு ரஜினிகாந்த் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதற்கு முன்னதாக சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஃபெப்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth Gave rs 5000 each to transgenders for corona relief fund

3

கொரோனா பாடல், எஸ்பிபி – வைரமுத்து கூட்டணி

0

கொரோனா வைரஸ் தமிழ் மக்களின் விழிப்புணர்வுக்காக வைரமுத்து வரிகள் எழுத அதை எஸ்பிபி பாடலாக பாடி உள்ளார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் ஸ்தம்பித்துள்ளது.

உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதித்து உள்ளார்கள். பல்லாயிரம் மக்கள் பலியாகி உள்ளார்கள்.

இந்தியாவில் 9000 மேற்பட்ட மக்கள் இதுவரை பதித்துள்ளார்கள். இதனால் இந்திய பிரதமர் மோடி இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வீட்டில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், பாடகர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

மக்கள் வீட்டிலேயே இருப்பதால் அவர்களின் பொழுதைப் போக்க பல பாடகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் தாங்கள் பாடிய பாடல்களை பாடி வருகிறார்கள்.

இதனால் மக்கள் அவர்கள் விரும்பிய பாடலை கேட்டு வருகிறார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தான் பாடிய ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை வரிகள் மாற்றி பாடியுள்ளார்.

முத்து படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை வைரமுத்து வரிகள் எழுத ரகுமான் இசையில் எஸ்பிபி பாடியிருந்தார்.

தற்போது அதே இசையில் வைரமுத்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக வரிகள் எழுத, இந்த பாடலை எஸ்பிபி மீண்டும் பாடி வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த பாடல் வைரலாக பரவி வருகிறது. மிகவும் அருமையாக உள்ளது. பாடல் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

3

வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

0

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்(Boris Johnson).

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகெங்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதித்து பல்லாயிரம் மக்களை பழி தீர்த்து வருகிறது.

இந்த வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி உள்ளனர்.

பலி எண்ணிக்கை யில் இந்த நாடுகள் அதிக இழப்புகளை சந்தித்து வருகிறது.

இந்த வைரஸ் கன்னட பிரதமரின் மனைவி, பிரிட்டன் இளவரசர், ஸ்பெயின் இளவரசி, பிரிட்டன் பிரதமர், பிரிட்டனின் சுகாதாரத்துறை அமைச்சர் போன்றவர்களை கூட விட்டு வைக்கவில்லை.

கடந்த மாதம் பிரிட்டன் பிரதமருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டு. தன்னைத்தானே தன் சொந்த வீட்டில் தனிமை படித்துக் கொண்டிருந்தார்.

ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு முன்பு இந்த வைரஸ் தாக்கம் அதிகமானதால் இங்கிலாந்து பிரதமரை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த அடுத்த மூன்று நாளில் அவரது உடல்நிலையில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது என்று ரைட்டர்ஸ் செய்திகளில் வெளியானது.

சிறந்த அனுபவம் மிக்க மருத்துவ குழுவால் போரிஸ் ஜான்சனை கண்காணித்து வந்தார்கள்.

போரிஸ் ஜான்சன் அன்று சுய நினைவுடன் இருக்கிறார் என்றும் ஒருவேளை மயக்கம் அடைந்தால் அவருக்கு பதிலாக வெளியுறவுதுறை செயலர் டோமினிக் ராப் பிரதமரின் அலுவலக பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று டோமினிக் ராப் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரவை கூட்டம் நடந்தது.

தற்போது பிரிட்டன் மக்களுக்கு மட்டும் இல்லாமல் உலக மக்களுக்கும் சந்தோஷப்படும் அளவிற்கு பிரிட்டன் பிரதமர் வைரஸில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.

அவர் வீடு திரும்பியதும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதற்கு நன்றி தெரிவித்து அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

ஆனால் அவர் முற்றிலும் குணமடைந்து என்பது இன்னும் தெரியவில்லை. அவர் இருந்தாலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்

3

This Day in History April 13; வரலாற்றில் இன்று ஏப்ரல் 13

0

This Day in History April 13; வரலாற்றில் இன்று ஏப்ரல் 13 ஜாலியன்வாலா பாக் படுகொலை. Today Birthdays in History, Today Deaths in History.

ஜாலியன்வாலா பாக் படுகொலை (Jallianwala Bagh Massacre)

1919ஆம் ஆண்டு வட இந்தியாவின் அம்ரிஸ்தர் நகரின் ஜாலியன் என்ற இடத்தில் நடந்த படுகொகொலைகளே ஆகும். இதில் தோராயமாக 379பேர் உயிரழந்துள்ளனர்.

ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் உத்தரவின் பேரில் நடந்த பீரங்கி சூட்டில் 10 நிமிடம் நடந்த சூட்டில் எத்தனை பேர் இறந்தார்கள் என என்ன முடியாத அளவிற்கு மக்கள் கொல்லப்பட்டனர்.

பின்னர் காந்தியடிகளின் பேரில் எடுக்கப்பட்ட கணக்கெடுக்கில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

1919ஆம் ஆண்டு மார்ச் 1 முதலே பல்வேறு எழுச்சி போராட்டங்கள் ஆங்கிலேயர்களால் நடதப்பட்டன. அன்னி பெசன்ட், பாலா கங்காதள திலகர் சுதேசி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

காந்தி அவர்களால் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. மக்கள் யாரும் ரௌலத் சட்டத்தை மதிக்கவோ கடைபிடிக்கவோ இல்லை.

இந்த நிலையில் மக்கள் பெருங்கூட்டம் ஒன்று ஜாலியன் என்ற இடத்தில் கூடியது. இது ஜாலியன்வாலா பாக் படுகொலை நடக்க காரணமாக அமைந்தது.

1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாகிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.

1948ஆம் ஆண்டு எருசலேமில் அதசா மருத்துவமனையில் நடைபெற்ற படுகொலைகளில் யூத மருத்துவர்கள், தாதிகள், மாணவர்கள் ஆகையா 78பேர் கொல்லபட்டனர்.

1954ஆம் ஆண்டு காமராஜர் சென்னை மாநிலத்தின்(தற்போதைய தமிழ்நாடு) முதல்வரானார்.

Today Birthdays in History

1570ஆம் ஆண்டு வெடிமருந்து சதி திட்டத்தை தீட்டிய ஆங்கிலேய போர்வீரர் பிறந்த தினம் இன்று.

1817ஆம் ஆண்டு பிரித்தானிய மதசார்பின்மைக் கொள்கையாளர், ஊடகவியலாளர் ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியக் பிறந்த தினம் இன்று.

1901ஆம் ஆண்டு இலங்கை இடதுசாரி அரசியல்வாதி எஸ்.ஏ விக்கிரமசிங்க பிறந்த தினம் இன்று.

1930ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த நாள் இன்று.

Today Deaths in History

1973ஆம் ஆண்டு இந்தியா திரைப்பட நடிகர் பால்ராஜ் சாகணி இறந்த தினம் இன்று.

1900 ஆம் ஆண்டு தமிழக வீணை கலைஞர், திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் எஸ். பாலசந்தர் இறந்த தினம் இன்று.

1973ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல்வாதி மற்றும் பிரதமரான டட்லி சேனாநாயக்க இறந்த தினம் வரலாற்றில் இன்று.

3

சர்வதேச பொருளாதாரத்தில் மீண்டும் ரகுராம் ராஜன்

0

கரோனா வைரஸ் காரணமாக உலகப் பொருளாதாரம் சரிந்து உள்ள நிலையில் அதை மீட்டெடுக்க ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதி மையம் அமைத்துள்ள குழுவில் இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் இடம் பெற்றுள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா தற்போது உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

அமெரிக்கா இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும் இந்த வைரஸால் அதிக பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்து வருகிறது.

இதனால் இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளது.

உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

இதை மீட்டெடுக்கும் பொறுப்பில் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியம் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆலோசனை வழங்க 11 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

அதில் சிறந்த பொருளாதார நிபுணர்களை நியமித்துள்ளது. அதன்படி இந்தியாவில் 2016ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கி தலைவராக இருந்த ரகுராம் ராஜனும் இந்த குழுவில் நியமித்துள்ளது.

இவரின் காலகட்டத்தின் போது இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது.

பிரதமர் மோடி 1000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த போது அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் இந்த ரகுராம்ராஜன்.

தற்போது சிகாகோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரைத் தவிர சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.

இதற்கிடையே ரகுராம் ராஜன், ஆலோசனை தேவைப்பட்டால், இந்தியாவுக்கு வந்து பொருளாதாரத்தில் ஆலோசனை வழங்க தயாராக உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

3

தமிழக முதல்வரை சாடிய கமல்ஹாசன்

0

கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பிரதமர் அறிவித்தபடி 21 நாள் மக்கள்  ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அன்றாட பிழைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் சிலர் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில மக்கள் ஒன்றாய் சமைத்து அவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.

இன்று நம் மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனியார் நிறுவனங்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும், மக்களோ யாரும் ஏழை மக்களுக்கு நேரடியாக உணவு அளிக்கக் கூடாது என்றும், அப்படி உணவளிக்க விரும்புவர்கள் மாநகராட்சி போன்ற அரசாங்க ஊழியர்களை தொடர்பு கொள்ளவும் பணம் நிதியாக அளிப்பவர்கள் நேரடியாக முதல்வர் நிதி அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.

இதை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் கண்டித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு சில பதிவுகளில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது :

“அவர்கள் அண்டை மாநிலங்கள் சில COVID19 உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர்.

என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது.

வேலை தெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள்.

This is no time for commission or omission.People are watching.”

https://platform.twitter.com/widgets.js

என்று பதிவிட்டுள்ளார்.

3

இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுமா – சவுரவ் கங்குலி

0

இந்த வருடத்தில் ஐபிஎல் பற்றி நாங்கள் சொல்ல என்ன இருக்கிறது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் ஊரடங்கு  உத்தரவில் மக்கள் இருந்து வருகிறார்கள்.

இந்த வைரஸ் காரணமாக அமெரிக்கா ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகள் ஸ்தம்பித்துள்ளது.

பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளும் கணிசமான இழப்புகளை சந்தித்து வருகிறது.

உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பாதிப்பு உள்ளார்கள். இந்தியாவிலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு 300க்கும் மேற்பட்ட இழப்புகள் இதுவரை நிகழ்ந்துள்ளன.

பிரதமர் மோடி அறிவித்த படி இந்திய மக்கள் 21 நாள் ஊரடங்கு உத்தரவில் இருந்து வருகிறார்கள்.

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது

உலகெங்கிலும் எந்த ஒரு விளையாட்டும் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கூட அடுத்த வருடம் நடத்த திட்டமிட்டுள்ளது.

மார்ச் 28ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டன. பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மேல் ஒத்தி வைத்திருந்தார்.

தற்போது ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்ற நாளிதழுக்கு பேசியுள்ள சவுரவ் கங்குலி, ஐபிஎல் குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது :

“நாங்கள் நாட்டின் முன்னேற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இப்போது ஏதும் சொல்ல முடியாது. சொல்ல என்ன இருக்கிறது?

விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே சிக்கி தவிக்கிறார்கள். அலுவலகம் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

யாரும் எங்குமே போக முடியாதவர்களுக்கு நாட்டின் சூழ்நிலை இருக்கின்றது. மே மாதம் நடுப்பகுதி வரை இப்படித்தான் நடுப்பகுதி வரை இப்படித்தான் இருக்கும் என்றும் தோன்றுகிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் எங்கிருந்து வீரர்கள் வர வைப்பீர்கள். எப்படி வீரர்கள் பயணம் செய்வார்கள். இந்த நேரம் உலகத்திலுள்ள எந்த ஒரு நாட்டுக்கும் சாதகமாக இல்லை.

அதனால் ஐபிஎல்லில் மறந்து விடுங்கள். நாளை மற்ற பிசிசிஐ பொறுப்பாளர்களுடன் ஆலோசித்த பிறகு நான் இதைப் பற்றி கூறமுடியும்.” என்று கூறியுள்ளார்

இவர் கூறியதை வைத்து பார்த்தால் இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுவது என்பது சந்தேகமே.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் கட்டு கொள்ளுவது இன்னும் சில மாதங்கள் ஆகும்.

இந்நிலையில் ஐபிஎல் இந்த வருடம் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன

3

விஜய் டிவி ஜாக்குலினை தாக்க முயன்றார் பக்கத்து வீட்டுக்காரர்

0

விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர்தான் ஜாக்லின்.

இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து நடிப்பில் அசத்தியிருந்தார்.

விஜய் டிவியில் தற்போது அவர் தேன்மொழி பி ஏ பி எல் என்ற தொடர்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடர் மக்களிடையே மிகவும் பிரபலமானது.

தற்போது இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் ஜாக்லின் இருந்து வருகிறார்.

தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு அளிக்கும் போது, பக்கத்து வீட்டில் சென்று உணவு வைத்துள்ளார். இதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து விட்டார்.

இவரும் ஜாக்கிலினும் சண்டைபோட்டு ஜாக்கிலினின் மதத்தை பற்றியும் கூறி வம்பு இழுத்துள்ளார்.

இந்நிலையில் ஜாக்குலின் தனக்கு நேர்ந்த கொடுமையான சம்பவத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

“இன்று எனக்கும் எனது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே சண்டை நடந்தது. நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். எனது பக்கத்து வீட்டு வாசலில் தெரு நாய்களுக்கு சாப்பாடு வைத்துவிட்டேன்.

எனது வீட்டிலும் நாய் இருப்பதால், தெரு நாய்கள் வரும் போது அது சத்தம் போடுகிறது (அது மிகப்பெரிய தவறு).

நான் செய்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன். ஆனால் சண்டையின் போது அவர் என்னை திட்ட பயன்படுத்திய ஒரு வார்த்தை என்னை மிகவும் தொந்தரவு செய்துவிட்டது.

வீடு புகுந்து சாத்திருவேன்.. கிறிஸ்துவ பொண்ணு என்பதால் விடுறேன்’ என என் பக்கத்து வீட்டுக்காரர் கூறினார்.”

இந்த பிரச்சினைக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம் என எனக்கு தெரியவில்லை. இந்த கடினமான சூழ்நிலையிலாவது குறைந்தபட்சம் மனிதர்களாக இருப்போம்,” என அவர் பதிவிட்டுள்ளார்.

3