Home Blog Page 151

13/04/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

13/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று நீங்கள் தேவையை அறிந்து செயலாற்றவும். தகுந்த பலன்களை நாளிறுதியில் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் நாளாக இருக்கும். உடலாற்றல் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். உங்கள் துணையிடம் அன்பாக இருப்பீர்கள். தனலாபம் சிறப்பாக இருக்கும் நாளாகும். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.

மிதுன ராசிபலன்

இன்று நீங்கள் பதட்டமான சூழ்நிலையில் இருப்பீர்கள். குழப்பங்கள் தீர தியான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புண்டு. கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

கடக ராசிபலன்

இன்றைய செயல்களை பொறுமையாக செய்தல் அவசியம் ஆகும். அவசர புத்தியை அமைதிப்படுத்தி கொள்ளவும். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். எனவே வேலைக்கு விடுப்பு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளவும். குடும்பத்துடன் இருப்பதே உங்களுக்கு இன்று நல்லது.

சிம்மம் ராசிபலன்

இன்று செழிப்பான நாளாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் சிறப்பாக முடிவடையும். வேண்டிய அனைத்தும் தானாக வந்து சேரும் நாளாகும். வியாபாரத்தில் லாபம் அதிகமாக காணப்படும்.

கன்னி ராசிபலன் 

இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் வெற்றிகரமான நாளாக இருக்கும். கூடுதலான பலன்கள் வந்து சேரும். பணவரவு சிறப்பாக இருக்க போகும் நாளாகும்.

துலாம் ராசிபலன்

இன்று ஏதாவது சிந்தனைகள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். எனவே மனதை அமைதியாக வைத்து கொள்ளவும். உறவுகளில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. பேச்சில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

விருச்சிக ராசிபலன்

இன்று எதிர்பார்த்த பலன்கள் எதுவும் கிடைக்காது. மிதமான பலன்களை மட்டுமே பெறுவீர்கள். பணியில் கவனத்தை செலுத்தவும். தேவையற்ற செயல்களை செய்து பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள வேண்டாம். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.

தனுசு ராசிபலன்

இன்று உங்களின் லட்சியங்கள் நிறைவேற முறையான திட்டமிடல் அவசியமாகும். பணவரவு போதுமான அளவு கிடைக்க உழைப்பு அவசியமாகும். கணவன் மனைவியிடையே புரிதல் அவசியம் தேவையாகும்.

மகரம் ராசிபலன் 

இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயலாற்றும் நாளாகும். திருமணம் போன்ற நற்காரிய பேச்சு துவங்க ஏதுவான நாளாகும். பணியிடத்தில் நற்பெயரை பெறுவீர்கள். கூடுதல் பணவரவு கண்டிப்பாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று உங்களிடம் புரிந்துணர்வு அவசியம் தேவையாகும். கோபத்தை குறைத்து கொள்வது அவசியம் தேவை. தங்களின் குடும்ப வாழ்வில் சில கசப்பான சம்பவங்கள் இன்று நடக்க வாய்ப்புகள் உண்டு. கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

மீனம் ராசிபலன் 

இன்று பக்தியால் நற்பலன்கள் எளிதில் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பணியாளர்களிடம் அனுசரணை மிக முக்கியமாக தேவையாகும். வீட்டில் நட்பான பேச்சுகளை பேசவும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

13/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

இருப்பா நான் கைய கழுவிட்டு வந்துடுறேன்: பாக்யராஜ் புதுவித கொரோனா வீடியோ!

0
Bhagyaraj Corona Video

Bhagyaraj Corona Video; இருப்பா நான் கைய கழுவிட்டு வந்துடுறேன்: பாக்யராஜ் கொரோனா வீடியோ! கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோவும் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் பாக்யராஜ் கொரோனா விழிப்புணர்வு குறித்து புதுவிதமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் மட்டும் 273 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

எனினும், கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு மேலும், 2 வாரங்குகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சினிமா பிரபலங்கள் முதல் அப்பாவி ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா குறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கொரோனா குறித்து புதுவிதமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் முதலில் யோகி பாபுவிற்கு போன் பண்ணுகிறார். அப்போது, அவர் கை கழுவிக் கொண்டிருப்பதாக அவரது உதவியாளர் கூறுகிறார்.

தொடர்ந்து மனோபாலாவிற்கு போன் பண்ணுகிறார். அவரும் கை கழுக் கொண்டிருப்பதாக அவரது உதவியாளர் கூறுகிறார்.

இதையடுத்து, மீனாவிற்கு போன் பண்ணுகிறார். அப்போது, அவரது வீட்டு வேலைக்காரி போன் எடுக்கிறார். அதற்கு மீனாவின் பொண்ணு நைனிகாவிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்கிறார்.

சார், பாப்பா இப்போதான் கை கழுவிக் கொண்டிருக்கிறார்கள். வந்தவுடன் உங்களுக்கு கூப்பிட சொல்கிறேன் என்கிறார் வேலைக்காரி…

இதற்கு ஓகே தாங்கஸ் என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே போன் வைக்கிறார்.

கடைசியாக பாக்யராஜூக்கு போன் வருகிறது. ஆமாம், நான் பாக்யராஜ் தான் பேசுகிறேன். நான் கை கழுவிட்டு அப்புறமாக பேசுகிறேன் என்று கூறி செல்போனை வைக்கிறார்.

இறுதியாக, கொரோனா ரொம்ப கொடிய நோய். அந்த நோயை நாம் கை கழுவவேண்டும் என்றால், நம்ம அடிக்கடி கையை சுத்தமாக கழுவ வேண்டும். அது ரொம்ப முக்கியம். மறந்துவிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.

3

அட்லீ – அர்ஜூன் தாஸ் கூட்டணியில் முதல் பட டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

0
Andhaghaaram First Look

Atlee Next Production Movie Title; அட்லீ – அர்ஜூன் தாஸ் கூட்டணியில் முதல் பட டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! அட்லீ தயாரிப்பில் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அட்லீ தயாரிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அட்லீ தயாரிப்பில் வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் ஷங்கர் இயக்கத்தில் வந்த எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லீ.

இவர், ஆர்யா, நயன்தாரா, ஜெய் ஆகியோரது நடிப்பில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே குறிப்பாக காதலர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து மெர்சல், பிகில் என்று அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கினார். இதன் காரணமாக ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தயாரித்தார்.

இந்த நிலையில், அடுத்ததாக அட்லீ தயாரிக்கும் படம் குறித்து முக்கிய அப்டேட் வந்துள்ளது.

அதன்படி, அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் 2ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது என்று அறிக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு வெளியிட்ட போது போஸ்டரில் ஒரு மங்கலான முகம் தெரிந்தது. அந்த முகம் யார் என்று உற்றுப் பார்த்தால் கைதி படத்தில் வில்லனாக வந்த அர்ஜூன் தாஸ். இவர், மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது அட்லீ தயாரிக்கும் புதிய படத்தில் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதன்படி படத்திற்கு அந்தகாரம் Andhaghaaram First Look Poster என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் விக்னராஜன் இயக்குகிறார்.

அந்தகாரம் படத்தின் டிரைலர் Andhaghaaaram Trailer வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தகாரம் போஸ்டர் தூரத்தில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பது போன்றும் புத்தகம் அருகில் வைக்கப்பட்டிருப்பது போன்றும், பழைய வீடு போன்றும் தெரிகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்!

0
Ragahva Lawrence Daughter

Raghava Lawrence Daughter; ராகவா லாரன்ஸுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்! ராகவா லாரன்ஸூக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று பலரும் வியப்புடன் பார்க்கும் அளவிற்கு அவரது மகள் வளர்ந்து நிற்கிறார்.

ராகவா லாரன்ஸின் மகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ஒரு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டனவர். ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை Lawrence Charitable Trust  சார்பில் ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

குழந்தைகளின் மருத்துச் செலவு, உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்தல், திருநங்கைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பது என்று எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார்.

தற்போது கூட கொரோனா பாதித்தவர்களுக்கு உதவும் வகையில் ரூ.3 கோடி கொடுத்துள்ளார். மேலும், உதவுவதற்கு ரெடியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக வரும் 14 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட இருக்கிறார்.

இந்த நிலையில், அவரது மகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு தெரிந்த அவரது மகளின் புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கும், உலகிற்கும் தெரிந்துள்ளது.

அதுவும் இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று அனைவருமே வியப்புடன் பார்க்கின்றனர். ராகவா லாரன்ஸின் மகளது பெயர் ராகவி என்பது குறிப்பிடத்தக்கது.

3

முதல் முறையாக அட்லீயுடன் கூட்டணி சேர்ந்த அர்ஜூன் தாஸ்!

0
Arjun Das

Atlee Next Production; முதல் முறையாக அட்லீயுடன் கூட்டணி சேர்ந்த அர்ஜூன் தாஸ்! இயக்குநர் அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ் Arjun Das ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் ஷங்கர் இயக்கத்தில் வந்த எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லீ.

இவர், ஆர்யா, நயன்தாரா, ஜெய் ஆகியோரது நடிப்பில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே குறிப்பாக காதலர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து மெர்சல், பிகில் என்று அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கினார். இதன் காரணமாக ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தயாரித்தார்.

இந்த நிலையில், அடுத்ததாக அட்லீ தயாரிக்கும் படம் குறித்து முக்கிய அப்டேட் வந்துள்ளது.

அதன்படி, அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் 2ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது என்று அறிக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு வெளியிட்ட போது போஸ்டரில் ஒரு மங்கலான முகம் தெரிந்தது. அந்த முகம் யார் என்று உற்றுப் பார்த்தால் கைதி படத்தில் வில்லனாக வந்த அர்ஜூன் தாஸ். இவர், மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது அட்லீ தயாரிக்கும் புதிய படத்தில் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் ஆர்யா, ஜெய், விஜய் ஆகியோரைத் தொடர்ந்து அட்லீயின் அடுத்த ஹீரோவாக அர்ஜூன் தாஸ் திகழ்கிறார்.

3

பின்னழகை ரசிக்கும் நடிகை ஷிவானி: வைரலாகும் புகைப்படம்!

0
TV Actress Shivani

TV Actress Shivani; தனது பின்னழகை ரசிக்கும் நடிகை ஷிவானி:வைரலாகும் புகைப்படம்! சின்னத்திரை சீரியல் நடிகை ஷிவானி தனது பின்னழகை ரசிக்குமடியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ஷிவானி தனது முதுகை ரசிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சன் டிவி, ஜெயா டிவி ஆகிய சேனல்களை விட விஜய் டிவி சேனல்களுக்கு அதிக மவுசு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதிலும், சின்னத்தம்பி, பாண்டியன் ஸ்டோர்ஸ், சுந்தரி நீயும், சுந்தரன் நானும், நாம் இருவர் நமக்கு இருவர், பாரதி கண்ணம்மா, பகல் நிலவு, என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகல் நிலவு சீரியல் முடிவு பெற்றது. இந்த சீரியலில் நடித்த நடிகை ஷிவானி அனைத்து குடும்ப பெண்களையும் வெகுவாக கவர்ந்தவர்.

பகல் நிலவு சீரியலுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கடைக்குட்டி சிங்கம் தொடரில் முக்கிய ரோலில் நடித்தார்.

ஆனால், இந்த தொடரில் பாதியிலேயே அவர் வெளியேறினார். காரணமும் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரெட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்தால் தெரியும். அவர்கள் குடும்ப குத்துவிளக்கா? இல்லை கிளாமர் வெள்ளிவிளக்கா?.

அந்த வகையில், நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதுகை காட்டியவாறு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், எனது பின்னழகை பார்க்கிறேன் என்பது போன்று அவர் பதிவிட்டுள்ளார். அதாவது எனது படங்களை நானே திரும்பி பார்க்கிறேன் என்ற அர்த்தத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது காலணிகளை ஒரு ரேக்கில் அடுக்கி வைப்பது போன்ற வீடியோவை பதிவிட்டிருந்தார்.

TV Actress Shivani Hot Picture Goes Viral in Social Media

3

சந்திரமுகியாக நடிக்கப் போவது இவரா? ஜோதிகா இல்லையா? வைரலாகும் வீடியோ!

0
Chandramukhi 2

Chandramukhi 2; சந்திரமுகியாக நடிக்கப் போவது இவரா? ஜோதிகா இல்லையா? வைரலாகும் வீடியோ! சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாகவும், ஜோதிகா நடிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகத்தில் பிரபல் பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளதாக ராகவா லாரனஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு ஆகியோர் பலர் நடித்த படம் சந்திரமுகி. இந்தப் படத்தை சிவாஜி புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் ராம்குமார் கணேஷ் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை அனைவருமே கொண்டாடினர். சந்திரமுகி 800 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, சந்திரமுகி 2 படத்தை இயக்குநர் பி வாசு இயக்குகிறார்.

ரஜினிகாந்தின் ஆசியுடனும், அனுமதியுடனும் பேய் படங்களை கொடுத்து வரும் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார் என்றும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சந்திரமுகி படத்தில் ஜோதிகா பேய் கதாபாத்திரத்தில் நடித்த தோரணையில், ஒரு நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்திரமுகியாக நடித்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Urvashi Rautela

இதனைப் பார்த்த பலரும் இவர் தான் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இருக்கிறார் என்று யூகிக்கத் தொடங்கினர். இவர் வேறு யாருமில்லை. பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டலா.

இவர் ஹிந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். ஊர்வசி ரௌட்டலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள் வந்ததை கொண்டாடும் வகையில், சந்திரமுகி போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

உண்மையில், சந்திரமுகி 2 படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனினும் அதுவரை வெளியாகும் செய்திகள் எல்லாமே தகவலாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திலும் ஜோதிகாவே ஹீரோயினாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

அப்படியில்லை என்றால், இதுவரை ராகவா லாரன்ஸ் யாரெல்லாம் பேயாக வந்தார்களோ அவர்களில் யாரேனும் ஒருவருக்கு சந்திரமுகி 2 படத்தில் பேயாக வரும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

Bollywood actress Urvashi Rautela’s Chandramukhi video goes viral in social media

3

ஹிப் ஹாப் ஆதியின் குவாரண்டைன் அண்ட் சில் லிரிக் வீடியோ: யூடியூப்பில் நம்பர் 1 டிரெண்டிங்!

0
HHT Quarantine Song

Quarantine Chill Song; ஹிப் ஹாப் ஆதியின் குவாரண்டைன் அண்ட் சில் லிரிக் வீடியோ: யூடியூப்பில் நம்பர் 1 டிரெண்டிங்! கொரோனாவால் அனைவருமே தனிமையில் இருக்கும் நிலையில், ஹிப் ஹாப் ஆதி அதனை மையப்படுத்தி குவாரண்டைன் அண்ட் சில் என்ற பாடலை பாடியுள்ளார்.

ஹிப் ஹாப் ஆதி குவாரண்டைன் அண்ட் சில் Quarantine Chill Song என்ற கொரோனா  பாடலை பாடியுள்ளார்.

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி குவாரண்டைன் அண்ட் சில் Quarantine Chill Song என்ற பாடலை ஆதி பாடியுள்ளார்.

ராப் இசை பாடல்கள் என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்றாலும் தமிழிற்கு புதிதலல். யோகி பி போன்ற தமிழ் ராப் கலைஞர்கள் பலர் வலம் வரும் இந்த நேரத்தில் தனக்கென்று ஒரு இடம் பிடித்துக் கொண்டவர் ஆதி.

தமிழ் மீது பற்று கொண்ட துடிப்போடு இருக்கும் இளைஞனான ஹிப் ஹாப் தமிழா ஆதி திகழ்கிறார். இவர் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.

விஷால் நடிப்பில் வந்த ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக தன்னை அறிமுகம் செய்து கொண்டார். இப்படத்தைத் தொடர்ந்து, இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2, கவண், மீசைய முறுக்கு, வந்தா ராஜாவாத்தான் வருவேன், நடிபே துணை, மிஸ்டர் லோக்கல், கோமாளி, ஆக்‌ஷன் என்று ஏராளமான படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இவரது இசையில் வந்த ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை துள்ளலான குத்தாட்டம் போட வைக்கும். பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. படங்களைத் தவிர சீரியலுக்கு டைட்டில் மியூசிக் கொடுத்துள்ளார்.

அதோடு, படங்களில் ஏகப்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார். இந்த நிலையில் உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு ஒரு பாடல் பாடியுள்ளார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 10 ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் #QurantineAndChill என்ற லிரிக் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

சமூக வலைதளத்தில் வைரலான இந்தப் பாடல் யூடியூப்பில் நம்பர் 1 டிரெண்டிங் ஆனது. இதுவரை இந்தப் பாடலை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Enthan Kavithaiyin Muthalvari
No Hurry Burry Avasaram Vendam
Unnakeppo Pudichuruko
Appo Sonna Podhum
#QurantineAndChill #No1Trending Qurantine & chill

Hiphop Tamizha Adhi’s Corona Qurantine And Chill song trending in youtube…

3

Ambedkar Jayanti 2020: அம்பேத்கார் ஜெயந்தி 2020 வாழ்த்துகள், கவிதைகள், பொன்மொழிகள்

0
Ambedkar Jayanti 2020 அம்பேத்கார் ஜெயந்தி 2020

Ambedkar Jayanti 2020: அம்பேத்கார் ஜெயந்தி 2020 வாழ்த்துகள், கவிதைகள், பொன்மொழிகள். Ambedkar Jayanti Wishes, Quotes, Messages, Celebration and History.

அண்ணல் அம்பேத்காரை சிறப்பிக்கும் விதமாக நாடு முழுவதும் அம்பேத்கார் ஜெயந்தி  2020 (Ambedkar Jayanti 2020) அவரது பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கார் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காகவும் அவர்களின் வாழ்வை மேம்படுத்தவும் போராடியவர்.

டாக்டர் பாபா சாகேப் என அழைக்கப்படும்  பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்த நாளன்று நாட்டின் மூத்த தலைவர்கள் புது டெல்லியில் இருக்கும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.

அம்பேத்கார் பொன்மொழிகள் 

தன்னை உயர்ந்த ஜாதியாகவும் மற்றொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மன நோயாளி. 

பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லை எனில் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்.

சாதிதான் சமூகம் என்றால் காற்றில் விஷம் பரவட்டும்.

உங்களின் வறுமை உடன் பிறந்தது, தவிர்க்க முடியாதது தீர்க்க முடியாதது என்று எண்ணுவது மடமை ஆகும்.

ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதை விட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்வதே சாலச் சிறந்தது.

என்னை கடவுள் ஆக்காதே நீ தோற்று விடுவாய் என்னை ஆயுதமாக மாற்றி போராடு.

இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வை தராத வரை, சட்டம் எத்தகைய விடுதலையை அளித்தாலும் பயனில்லை.

அண்ணல் அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறும் ஒடுக்கப்பட்டோருக்காக அவரின் போராட்டமும்

ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும் சக மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருதுமாயின் அது மதமல்ல ஒரு கேலிக்கூத்து.

மனிதனுக்கு மனிதன் சரியான உறவுகள் கொள்வதை தடுக்கின்ற எந்த ஒரு மாதமும் மதமல்ல, அது ஒரு அடக்கு முறையின் அடையாளம்.

வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிப்பான். 

பலி பீடத்தில் வெட்ட பாடுபவை ஆடுகள் தான் சிங்கங்கள் அல்ல, நீங்கள் சிங்கங்களாக இருங்கள். 

கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது.

ஒரு அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்ந்து, பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.

மற்றவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் உனக்கு அந்த பெயர் தேவை இல்லை.

3

பிருத்விராஜின் தங்கையை அஜித் டார்ச்சர் செய்தாரா? அய்யோ இப்படி பழி போடாதீங்க?

0
Ajith Prithviraj Sister

Thala Ajith; பிருத்விராஜின் தங்கையை அஜித் டார்ச்சர் செய்தாரா? அய்யோ இப்படி பழி போடாதீங்க? நடிகர் பிருத்விராஜின் தங்கையை அஜித் டார்ச்சர் செய்ததாக ஒரு வீடியோ வெளியாகி வருகிறது.

அஜித், நடிகர் பிருத்விராஜின் சகோதரியை டார்ச்சர் செய்ததாக ஒரு வீடியோ வெளியாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் தல அஜித். தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே வைத்து தனது சொந்த முயற்சியில் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார். அஜித்திற்கு மட்டுமலல், அவரது மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா மற்றும் ஷாலினி ஆகியோருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அஜித் அவர் உண்டு, அவரது வேலை உண்டு என்று இருப்பவர். யாருடைய விஷயத்திலும் தேவையில்லாமல் தலையிடவும் மாட்டார். படத்தில் நடிப்பதோடு சரி.

பட புரோமோஷன் நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா என்று எதிலும் கலந்து கொள்ளவும் மாட்டார்.

ஆனால், எப்போதும் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பவர். தான் நடித்த பெண்களை மையப்படுத்திய நேர்கொண்ட பார்வை படத்தில் கூட பெண்கள் நோ சொன்னால் நோ தான்.

அதன் பிறகு அவர்களை எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்ற ஆழமான கருத்தை முன் வைத்தார்.

இப்படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வரவேற்பும், விமர்சனமும் வந்தது. அதோடு, பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், அஜித் பள்ளியில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் பிருத்விராஜின் தங்கையை டார்ச்சர் செய்ததாகவும் அதனால், தான் அவர் பள்ளிப்படிப்பை நிறுத்தியதாகவும் ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

உண்மையில், நடிகர் பிருத்விராஜின் தங்கையை டார்ச்சர் செய்தது அஜித் அல்ல. அது அஜித் மேனன். பிருத்விராஜின் தங்கைக்கு அஜித் எப்போதுமே பாதுகாப்பாகவே இருந்துள்ளாராம்.

அவர் இப்படி சொன்னதை கட் செய்து தவறான கோணத்தில் பார்க்கும் படியான வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3