Home Blog Page 149

ராகவா லாரன்ஸ் திட்டத்தில் மண்ணு அள்ளிப்போட்ட அரசுக்கு கோரிக்கை!

0

Raghava Lawrence; உலகத்தையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடே முடங்கியுள்ளது. இந்தியாவில் மட்டும் 200க்கும் அதிகாமானோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு உத்தரவு நாளை உடன் முடிவடையும் நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தினந்தோறும் அன்றாட சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் ஏழை ஜனங்கள் முதல் கோடி கோடியாய் சம்பாதிக்கும் கோடீஸ்வரர் வரை அனைவருமே வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர்களுக்கு உதவும் வகையில் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், அரசு அதிகாரிகள் என்று பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.

ஆனால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாமாக எந்த உதவியும் செய்யக் கூடாது என்று அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கினால் சரிவர உணவுப் பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இனி தன்னார்வலர்களோ தனி நபர்களோ உணவுப் பொருட்கள் வழங்கக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடை உத்தரவை அரசு தயவு செய்து மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில், அரசாங்கமே கடைநிலை பகுதி வரை அனைவருக்கும் விரைவாக உணவுப் பொருட்களை தந்திட இயலாது என்பதே எதார்த்தம்.

அந்த வகையில்,

ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் நான் கடந்த வாரம் கொரோனா தடுப்பு நிதியை அளித்த கையோடு அடுத்த கட்டமாக வரும் 14 ஆம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் நானும் எனது நண்பர்களும் தமிழக அரசுடன் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் சில சேவை திட்டங்களை செயல்படுத்த தயாராகி வருகிறோம்.

இந்த நிலையில்தான் தமிழக அரசு தன்னார்வலர்களுக்கு தடை விதித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

தன்னார்வலர்கள் நேரடியாக உதவக் கூடாது என்ற உத்தரவை மட்டும் மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக முதல்வர் அவர்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் ராகவா லாரன்ஸ் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Raghava Lawrence Latter

3

பிரபலங்களின் லாக்டவுன் சேலஞ்ச்: வைரலாகும் வீடியோ!

0
Lockdown Challenges

Lockdown Challenges; பிரபலங்களின் லாக்டவுன் சேலஞ்ச்: வைரலாகும் வீடியோ! லாக்டவுன் நேரத்தில் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் சினிமா பிரபலங்கள் பலரும் சேலஞ்ச் என்ற பெயரில் புது புது வீடியோ வெளியிட்டுள்ளனர்.

பிரபலங்களின் லாக்டவுன் சேலஞ்ச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடே கொரோனா பீதியில் இருக்கிறது. ஆனால், இவங்களுக்கு மட்டும் ஜாலி. ஆமாங்க, எப்போதுமே பிஸியாக இருந்து வந்த சினிமா பிரபலங்கள் தற்போது ஜாலியாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு நாளும் வீட்டில் என்ன செய்கிறோம், எப்படியெல்லாம் அன்றைய பொழுதை கழிக்கிறோம் என்று வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

வீட்டு வேலைகள், தோட்ட வேலை, உடற்பயிற்சி, யோகா, சமையல், துணி துவைப்பது, விளையாடுவது என்று பிஸியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், பிரபலங்கள் பலரும் லாக்டவுன் சேலஞ்ச் என்ற பெயரில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

அவர்கள்கில் சஞ்சனா சிங், மகத், நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் இந்த சேலஞ்ச்சில் ஈடுபட்டுள்ளனர்.

சஞ்சனா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தலைகீழா இருந்து டீ சர்ட்டை அணிய வேண்டும். இதுதான் அந்த சேலஞ்ச்.

இதே போன்று, Hand Gesture Challenge க்கு த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர். வாட்ஸ் அப்பில் நிறைய ஸ்மைலி இருக்கும்.

அதுக்கு கீழாக நிறைய ஹேண்ட் ஹெஸ்ட்சர் இருக்கும். வீடியோ தொடங்கியதும், ஹேண்ட் ஹெஸ்ட்சர் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். அதைப் பார்த்து நாமும் சரியான ஹேண்ட் ஹெஸ்ட்சர் காண்பிக்க வேண்டும். இதுதான் அந்த சேலஞ்ச்.

அதன் பிறகு Dalgona Coffee Challenge. வீட்டில் இருந்தபடியே காஃபி தயாரிக்கும் சேலஞ்ச் இது. இதனை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்துள்ளார்.

இறுதியாக Flip the Switch Challenge வீடியோ. ரெண்டு பேரு வீடியோவில் இருக்கலாம். ஒருவர் போனை பிடித்துக்கொண்டு பண்ணிக்கிட்டு வீடியோ எடுக்க வேண்டும். மற்றொருவர் அவருக்கு அருகிலோ அல்லது தலையிலோ உட்கார்ந்து ஏதாவது டான்ஸ் ஸ்டெப் போடுவது போன்றோ அல்லது தலையை நோண்டுவது போன்றும் செய்ய வேண்டும்.

சிறிது நேரத்திற்கு பிறகு ஸ்விட்ச் ஆப் செய்து விட வேண்டும். அதன் பிறகு ஸ்விட்ச் ஆன் செய்து பார்த்த போது அந்த கேரக்டர் அப்படியே ஸ்வேப் ஆகியிருக்கும்.

அருகில் இருந்தவர் வீடியோ எடுக்க வேண்டும். வீடியோ எடுத்தவர் அருகிலோ அல்லது மடியிலோ அல்லது தலை மீதோ அமர்ந்து சில்மிஷம் செய்ய வேண்டும். இந்த சேலஞ்சை மகத் செய்துள்ளார்.

இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

சாணியில அந்தர் பல்டி அடித்த விஜே மணிமேகலை!

0
VJ Manimegalai

சாணியில அந்தர் பல்டி அடித்த விஜே மணிமேகலை! இது கூட தெரியாமல் விஜே மணிமேகலை சாணியில் அந்தர் பல்டி அடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜே மணிமேகலை சாணியில் உருண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சன் மியூசிக் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட்ஸ் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக புகழ் பெற்றவர் விஜே மணிமேகலை.

தொடர்ந்து 7 ஆண்டுகள் சன் மியூசிக் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவே வலம் வந்தார்.

அதன் பிறகு சன் டிவி, சன் நியூஸ் சேனல்களிலும் நட்சத்திர தொகுப்பாளினியாக வலம் வந்தார். அண்மையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

அதைவிட வீட்டில் குக்கரை வெடிக்கச் செய்து பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியவர் என்ற பெருமையையும் பெற்றவர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் இவருக்கு சமையல் சுட்டுப்போட்டாலும் வரவில்லை.

இந்த நிலையில் ஒருவாரம் கிராமத்திற்கு சென்று வரலாம் என்று திட்டம் போட்டு திருப்பூர் அருகிலுள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார் மணிமேகலை.

அங்கு சென்ற பிறகுதான் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமத்திலேயே தங்க வேண்டிய சூழலில் மணிமேகலையும், அவரது கணவர் ஹூசையும் மாட்டிக்கொண்டனர்.

என்னதான் கிராமத்தில் மாட்டிக்கொண்டாலும் அவர்களுக்கு பொழுது போவதற்கு ஏகப்பட்ட விளையாட்டுகளை கிராமத்தினர் சொல்லிக் கொடுக்கின்றனர்.

அந்த வகையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாடம் கிராமத்தில் நடக்கும் விளையாட்டுகள், அலப்பறைகள் என்று ஒவ்வொனறையும் வீடியோவாக பகிர்ந்து வருகிறார்.

அப்படி பகிர்ந்த் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிமேகலை, தனது தோழியுடன் ஒரு க்யூட் கேம் விளையாடியுள்ளார். அந்த கேமில், விளையாடிக்கொண்டிருந்த போது மணிமேகலை எதிர்பாராத விதமாக சாணியில் விழுந்துள்ளார்.

இதைக் கண்ட கிராமத்தினரும், மணிமேகலையின் நண்பர்களும் சிரிப்பாய் சிரிக்கின்றனர்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மணிமேகலை கூறியிருப்பதாவது: என்னவொரு வில்லத்தனம், இவ்ளோ நாள் நல்ல பிள்ளைங்கள மாதிரி இருந்துட்டு… இப்போது என்னையே ஏமாத்துறாங்க இந்த சிறுவண்டு பசங்க. சாணியில தள்ளிவிட்டதுக்கு அடுத்த விளையாட்டுல பழி வாங்கனும்.

இதுதான் என்னோட சின்னவயசு ஃபேவரேட் கேம். கோபி பைஸ் கோகனா பைஸ்… ஆனால், நான் கீழ விழுந்தது பத்திகூட கவலைப்படாம சாணிக்கு குளோஸப் வச்சப் பாத்தியா டேய்! ஹுசைன் உனக்கு இருக்குடா என்று பதிவிட்டுள்ளார்.

மணிமேகலையின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

Cup முக்கியம் பிகிலு: விஜய்யை கிண்டலடித்த ப்ரியா பவானி சங்கர்!

0
Priya Bhavani Shankar Bigil Cup

Priya Bhavani Shankar; Cup முக்கியம் பிகிலு: விஜய்யை கிண்டலடித்த ப்ரியா பவானி சங்கர்! லாக்டவுன் நேரத்தில் வீட்டில் சும்மா இருக்கும் ப்ரியா பவானி சங்கர் டிவியில் கால்பந்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்.

Cup முக்கியம் பிகிலு என்று விஜய்யை நக்கல் செய்யும் விதமாக ப்ரியா பவானி சங்கர் பேசியுள்ள வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோரது நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில்.

பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படம் உலகம் முழவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலும் குவித்து சர்ச்சையில் சிக்கியது. இதன் காரணமாக பிகில் படத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக, விஜய், ஏஜிஎஸ் நிறுவன, பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடம் மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

அன்புச்செழியன் வீட்டில் மட்டும் ரூ.300 கோடி மதிப்பிலான பணம், ஆவணங்கள் என்று கைப்பற்றப்பட்டது. ஆனால், விஜய் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

பிகில் படத்தில், ராயப்பன் விஜய் பேசும் வசனம் Cup முக்கியம் பிகிலு. இது டயலாக் தான் படம் முழுவதும் பயணிக்கும். இறுதியிலும் வரும். இந்த டயலாக்கை பயன்படுத்தி நடிகை ப்ரியா பவானி சங்கர் வீட்டில் வீடியோ கேமில் கால்பந்து விளையாடியுள்ளார்.

அப்போது, அவருக்கு இடையூறாக அவரது அம்மா வரும் போது கூட தொந்தரவு செய்யாத அம்மா என்று கூறிவிட்டு மும்முரமாக விளையாடிக் கொண்டிருப்பார்.

இறுதியில் ஒரு கோல் அடித்ததும், Cup முக்கியம் பிகிலு என்று கூறி சிரிப்பார். தற்போது இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

3

குயில புடிச்சி கூண்டிலடச்சி பாடச்சொல்லுகிற உலகம்: சின்னத்தம்பி வந்து 29 வருசம் ஆச்சு!

0
29YrsOfChinnaThambi

Prabhu Chinna Thambi Movie; குயில புடிச்சி கூண்டிலடச்சி பாடச்சொல்லுகிற உலகம்: சின்னத்தம்பி வந்து 29 வருசம் ஆச்சு! பிரபு, குஷ்பு நடிப்பில் வந்த சின்னதம்பி படம் வெளியாகி 29 வருடங்கள் கடந்துள்ளது.

சின்னத்தம்பி படம் திரைக்கு வந்து 29 ஆண்டுகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பி வாசு – பிரபு கூட்டணியில் வந்த 3 ஆவது படம் சின்னத்தம்பி. இதற்கு முன்னதாக இவர்கள் கூட்டணியில் என் தங்கச்சி படிச்சவ, பிள்ளைக்காக ஆகிய படங்கள் திரைக்கு வந்து வெற்றி கண்டுள்ளன.

அந்த வகையில், 3ஆவதாக வந்த சின்னத்தம்பி படமும் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தில் சிறு வயது பிரபுவாக பி வாசுவின் மகன் சக்தி நடித்திருந்தார்.

மூன்று சகோதரர்களுக்கு தங்கையாக குஷ்பு வளர்கிறார். ஆனால், தனது சகோதரர்களின் விருப்பத்திற்கு மாறாக தன விருப்பத்திற்குரிய ஒருவனை திருமணம் செய்து கொள்வாள் என்று ஜோதிடர் கணித்துக் கூறுகிறார்.

இதை தடுப்பதற்காகவே குஷ்புவை வீட்டுக்காவலில் வைத்து வளர்க்கப்படுகிறார். அவருக்கு பாதுகாப்பாக பிரபு வருகிறார்.

அவர் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்கிறார். பிரபு ஒரு வெகுளி. அவருக்கு திருமணம் என்றால் என்ன என்றே தெரியாது.

அப்படியிருக்கும் போது அவர் கட்டிய தாலியை பிரபுவை கொன்றுவிட முடிவு செய்கிறார்கள் பிரதர்ஸ்கள்.

அதற்காக பிரபுவின் அம்மாவை சித்ரவதை செய்து அவமானப்படுத்துகிறார்கள். அவர்களை அடித்து உதைக்க, பிறகு ஊரைவிட்டு செல்ல முடிவு செய்கிறார் பிரபு.

இறுதியில், அண்ணன்கள் பிரபுவின் அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டு, பிரபுவை, குஷ்புவிடம் சேர்த்து வைக்கிறார்கள். இதுவே கதை.

இந்தப் படத்தில் பிரபு பாட்டுப்பாடும் ஒரு நடிகராகவே வலம் வந்திருப்பார். அவரது பாட்டில் மயங்கி குஷ்பு அவரை காதலிப்பார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் 29 வருடங்களை கடந்துள்ளது. இதன் காரணமாக, 29YrsOfChinnaThambi என்ற ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் மட்டுமல்ல இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் இன்றும் ரசிக்கும்படியாகவே அமைந்துள்ளது.

அதோடு காலத்தால் அழியாத பாடல்களாகவும் இருக்கிறது. 365 நாட்களுக்கும் மேலாக இந்தப் படம் திரையரங்குகள் வெற்றிகண்டுள்ளது.

இது பிரபுவின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய படம். தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடி வரையில் வசூல் கொடுத்த படமாக சின்னத்தம்பி திகழ்கிறது.

3

அந்தகாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

0
Andhaghaaram First Look

Andhaghaaram First Look; அந்தகாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! அட்லீ தயாரிக்கும் அந்தகாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தகாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அட்லீ தயாரிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அட்லீ தயாரிப்பில் வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் ஷங்கர் இயக்கத்தில் வந்த எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லீ.

இவர், ஆர்யா, நயன்தாரா, ஜெய் ஆகியோரது நடிப்பில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே குறிப்பாக காதலர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து மெர்சல், பிகில் என்று அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கினார். இதன் காரணமாக ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தயாரித்தார்.

இந்த நிலையில், அடுத்ததாக அட்லீ தயாரிக்கும் படம் குறித்து முக்கிய அப்டேட் வந்துள்ளது. அதன்படி, அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் 2ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது என்று அறிக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு வெளியிட்ட போது போஸ்டரில் ஒரு மங்கலான முகம் தெரிந்தது. அந்த முகம் யார் என்று உற்றுப் பார்த்தால் கைதி படத்தில் வில்லனாக வந்த அர்ஜூன் தாஸ். இவர், மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது அட்லீ தயாரிக்கும் புதிய படத்தில் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதன்படி படத்திற்கு அந்தகாரம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் விக்னராஜன் இயக்குகிறார். அந்தகாரம் படத்தின் டிரைலர் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தகாரம் போஸ்டர் தூரத்தில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பது போன்றும் புத்தகம் அருகில் வைக்கப்பட்டிருப்பது போன்றும், பழைய வீடு போன்றும் தெரிகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

Vaisakhi Festival: சீக்கியர்களின் வைசாகி திருவிழா இன்று

0
Vaisakhi Festival வைசாகி திருவிழா தினம்

Vaisakhi Festival: வைசாகி தினம் என்றால் என்ன? எவ்வாறு வைசாகி திருவிழா கொண்டாடப்படுகிறது? அமிர்தசரஸ் பொற்கோயிலில் இன்றைய வழிபாடுகள் என்ன?

நமது இந்திய நாட்டில் கலாச்சார அடிப்படையில் எண்ணற்ற திருவிழாக்கள் நாடு முழுதும் பல மாதங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய மற்றும் இந்துக்களால் கொண்டாடப்படும் திருவிழாவில் ஒன்றான வைசாகி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

வைசாகி திருவிழா (Vaisakhi Festival)

வைசாகி அல்லது பைசாகி திருவிழாவானது பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் வருடப் பிறப்பாகவும் (Panjabi new year) மற்றும் இளவேனிற்கால அறுவடை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

மேலும் 1699-ஆம் ஆண்டு குரு கோவிந்த் சிங் கால்சா படையினை உருவாக்கியதும் இந்த நாளில் தான் என்பதால் சீக்கிய மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுகின்றனர்.

இந்த திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 13 அல்லது 14 தேதியில் எப்பொழுதும் கொண்டாடப்படுகிறது.

இந்த புதுவருட பிறப்பு திருவிழானது இந்தியா மட்டுமின்றி பாக்கிஸ்தான், கனடா, அமெரிக்கா, லண்டன் மற்றும் மலேசியாவில் வாழும் சீக்கியர்களாலும் அந்நாட்டு அரசும் சேர்ந்து கொண்டாடுகின்றனர்.

புதுவருட அறுவடை திருநாள்

வைசாகி தினமானது அறுவடை திருவிழாவாகவும் கொண்டாடுகின்றனர். இளவேனிற்கால அறுவடையை துவங்கும் நாளாகும்.

இத்தினத்தில் உழவர்கள் தாங்கள் விளைவித்த கோதுமை தானியங்களை அறுவடை செய்ய துவங்குகின்றனர். அறுவடை செய்த புதிய பொருட்களை வைத்து உணவு சமைத்து பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்துகளின் வைசாகி தினம்

வைசாகித்திருவிழாவானது இந்துகளாலும் கொண்டாடப்படுகிறது. பஞ்சாபில் வாழும் இந்துகளால் வானியல் அடிப்படையில் இத்தினமானது புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

இத்தினத்தில் புண்ணிய நதிகளில் புனித நீராடி தங்களின் நிலத்தில் விளைந்த பயிர்களை அறுவடை செய்து விற்கவும் துவங்குகின்றனர்.

இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக புதிய தானியங்களை வைத்து பூஜைகளை செய்கின்றனர்.

அமிர்தசரஸில் வைசாகி திருவிழா

சீக்கியர்களின் புனித தலமாக கூறப்படும் அமிர்தசரஸ் பொற்கோவிலில் இந்த தினத்தை விமர்சியாக கொண்டாடுகின்றனர்.

அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் நிரம்ப துவங்கிவிடுகிறது. அனைவரும் கங்கையில் புனித நீராடி பொற்கோவில் சென்று குருமார்களின் ஆசியினை பெற்று செல்கின்றனர்.

அவரவர் இல்லத்தில் பூஜைகள் செய்கின்றனர். உணவு மற்றும் இனிப்பு பதார்த்தங்களை செய்து உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

பொற்கோவிலில் நாள் முழுவதும் பஜனைகள், சங்கீர்தனங்கள், சிறப்பு பூஜைகள், சீக்கியர்களின் அணிவகுப்பு ஊர்வலம், புதிதாக சேரும் கால்சா படையினருக்கு ஞான ஸ்நானம் மற்றும்  குழந்தைகளுக்கான கண்காட்சிகள் நடத்தப்படுகின்றது.

2020-இல் வைசாகி திருவிழா

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதியான இன்று வைசாகித்திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு ஊரடங்கு பிரச்சனையால் வெளியே கோவில் சென்றோ, புனித நீராடியோ கொண்டாட இயலாது. எனவே அனைவரும் இன்று வீட்டில் இருந்தபடியே இந்த தினத்தில் இன்னல்கள் தீர பிராத்தனை செய்வோம்.

3

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்கவிடாமல் தடுக்கும் இஸ்லாமியர்கள்

0

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்கவிடாமல் தடுக்கும் இஸ்லாமியர்கள், கொரோனோவால் உயிரழந்தவர்களை புதைக்க வேண்டும் இலங்கை முஸ்லீம்கள்.

கொரோனா வைரசால் பாதிப்படைந்து இறந்தவர்களை நவீன முறையில் அவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் சேர்த்து.

நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை 800க்கும், 1200ற்கும் இடைப்பட்ட பாகை செல்சியஸ் வெப்ப நிலையில் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரொனா வைரசால் பாதிப்படைந்து இறந்த இஸ்லாமியர்கள் அவர்களின் மதச் சடங்கின் பேரில் புதைக்க வேண்டுமென இலங்கை இஸ்லாமியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதை மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்த அந்நாட்டு அரசு நாட்டு மக்களின் சுகாதாரம் மட்டும் நோய் பரவுவதை குறைக்க உடல் தகனம் செய்வதே சிறந்தது என முடிவு செய்தது.

இதனால் இஸ்லாமியர்களின் கோரிக்கை நிராகரிக்கபட்டது. இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.203 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

3

ஓ போடு ஓ போடு: ஜெமினி ரிலீசாகி 18 வருடம் ஆச்சுப்பு!

0
18 Years Of Gemini

ஓ போடு ஓ போடு: ஜெமினி ரிலீசாகி 18 வருடம் ஆச்சுப்பு! சியான் விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்த ஜெமினி படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகியுள்ளது.

விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்த ஜெமினி படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இயக்குநர் சரண் இயக்கத்தில் சியான் விக்ரம், கிரண், கலாபவன் மணி, விணு சக்ரவர்த்தி ஆகியோர் பலர் நடிப்பில் உருவான படம் ஜெமினி.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வந்தது. ரௌடி வேலை செய்து வரும் சியான் விக்ரம், காதலில் விழுவதும், அதன் பிறகு தனது ரௌடி தொழிலை விடுவதும் தான் படத்தின் கதை. ரௌடி தொழிலை விடும் போது அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்தப் படம்.

இந்தப் படத்தை ஏவிஎம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் அவரது இசையில் வந்த ஒவ்வொரு பாடலும் ரசிக்கும்படி அமைந்தது.

அதில் குறிப்பாக ஓ போடு ஓ போடு பாடல் அமைந்தது. இன்றும் இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடையே மௌசு இருக்கிறது.

விக்ரம் வாழ்க்கையில் சிறந்த படமாக ஜெமினி அமைந்தது. இந்த நிலையில், ஜெமினி படம் திரைக்கு வந்து இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இதன் காரணமாக ஹலோவில் 18YearsOfGemini என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

வரும் 17 ஆம் தேதி விக்ரம் தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் காரணமாக அவரது படங்கள், We Love Chiyaan Vikram, Vikram Getups ஆகிய ஹேஷ்டேக்குகள் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

பெட்ரோல் உற்பத்தி குறைப்பு கொரோனா வைரஸ் பாதிப்பால்

0

பெட்ரோல் உற்பத்தி குறைப்பு கொரோனா வைரஸ் பாதிப்பால், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே ஊரடங்கில் இருப்பதால் நுகர்வோர்களின் தேவை குறைந்துள்ளது.

எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் (ஒபெக்) எண்ணெய் எடுக்கும் அனைத்து நாடுகளும் தங்கள் உற்பத்தியை 10% குறைக்க முடிவு செய்துள்ளது.

இந்த கூட்டமும் நடுத்த இயலாமல் மற்ற துறைகளைப் போல் அனைவரும் வீடியோ கான்பரன்ஸில் பேசி முடிவெடுத்தனர்.

ஆனால் இதற்கு மெக்சிகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம். இதன் காரணமாக 9.7 மில்லியன் எண்ணெய் உற்பத்தி குறையுமாம்.

ஒபெக் இதை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லையாம். இது தொடர்பாக டிரம்ப் மற்றும் குவைத் அமைச்சர் ட்வீட் பகிர்ந்துள்ளனர்.

3