Home Blog Page 148

கேரளாவின் ராஜா தந்திரம் புதிய கொரோனா பாதிப்பு ஒன்று கூட இல்லை

0
கேரளாவின் ராஜா தந்திரம்

கேரளாவின் ராஜா தந்திரம் கொரோனா பாதிப்பு ஒன்று கூட இல்லை, கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று ஒன்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட முதல் மாநிலமான கேரளா சமீபத்தில் கொரோனா பதிப்பு அதிகமாகி கொண்டே இருந்தது.

ஆனால் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் மாறியுள்ளது. மேலும் கடந்த இரண்டு நாளில் 55 பேர் குணமாகியுள்ளனர்.

கேரளாவில் இன்னும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் 178 பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களையும் குணப்படுத்திவிட்டால் கொரொனா இல்லாத மாநிலமாக கேரளா மாறிவிடும்.

இதற்கு சுகாதார துறையின் அதிரடி முடிவுகளும் இடைவிடாத உழைப்பும் மக்களின் ஒத்துழைப்பும் மட்டுமே காரணம் வேற ஒன்றும் இல்லை.

ஊரடங்கையும் சமூக விலகலையும் கடைபிடித்த மக்களும் சரியான நேரத்தில் முடிவு எடுத்த அரசாங்கமும் தான் இதற்கு காரணம்.

3

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி

0

தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தமிழில் பதிவிட்டுள்ளார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்தது. குறிப்பாக அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிக இழப்புகளை சந்தித்து வருகின்றன.

இந்தியாவிலும் கொரோனா தொற்று விட்டுவைக்கவில்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நம் இந்திய பிரதமர் மோடி அவர்கள் 21நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். இதனால் மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் மக்களின் தமிழ் புத்தாண்டு. இதை தமிழ் மக்கள் வருடாவருடம் மிகவும் சிறப்பாகவும் ஒரு திருவிழா கொண்டாடி வருவார்கள்.

தற்போது ஊரடங்கு உத்தரவு இருப்பதால் மக்களால் இந்த புத்தாண்டை கொண்டாட முடியவில்லை.

ஆனால் தொலைபேசி மூலம், சமூகவலைதளங்கள் மூலம் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.

தற்போது நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்விட் செய்துள்ளார்.

அதில் அவர் “அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திட பிரார்த்திக்கிறேன். எதிர்வரும் ஆண்டில் உங்கள் விளைவுகள் யாவும் நிறைவேறடட்டும்.” இன்று பதிவிட்டுள்ளார்.

https://platform.twitter.com/widgets.js

3

சிங்கப்பூரில் கொரோனா விஸ்வரூபம் எடுத்தது ஒரே நாளில் 386 பேர் பாதிப்பு

0
சிங்கப்பூரில் கொரோனா

சிங்கப்பூரில் கொரோனா விஸ்வரூபம் எடுத்தது ஒரே நாளில் 386 பேர் பாதிப்பு, கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 386 பேர் கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் சிங்கப்பூரில் 2918 பேருக்கு கொரோனா பாதிப்பாகியுள்ளது.

அத்துடன் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் பலியானார். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிகை 9 ஆனது.

இந்தியர்கள் உட்பட பிற நாட்டவர்கள் 50 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சிங்கப்பூரில் வெளிநாட்டிவர் அதிகம் தங்கும் இடங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கிறது.

3

தமிழக அரசு அதிரடி; அடுத்த மாசமும் ரேஷன் பொருட்கள் இலவசம்

0

தமிழக அரசு அதிரடி; அடுத்த மாசமும் ரேஷன் பொருட்கள் இலவசம், தமிழக அரசு மக்கள் ஊரடங்கில் இருப்பதால் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்குகிறது.

21 நாள் ஊரடங்கு முடிந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதால் அரசு மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு அதிகரித்துள்ளது.

வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வரை மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இதற்காக அன்றாடம் உழைக்கும் ஏழை மக்களுக்காக ரேஷன் பொருட்கள் இலவசமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிற மாநில தொழிலாளர்களுக்கும் 15கிலோ அரிசி மற்றும் எண்ணெய் முதலியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

3

This Day in History April 14; வரலாற்றில் இன்று ஏப்ரல் 14

0

This Day in History April 14; வரலாற்றில் இன்று ஏப்ரல் 14 லைக்கா என்னும் நாய் இறந்த தினம், Today Birthdays in History, Today Deaths in History.

1294- குப்லாய் கானின் பேரன் தேமுர் மங்கோலியாரின் பேரரசராகவும், யுவான் பேரரசராகவும் நியமிக்கப்பட்டார்.

1958- லைக்கா என்ற நாய் விண்ணுக்கு கொன்று சென்ற சோவியத்தின் இசுப்புட்னிக் 2 என்ற செய்மதி 162 நாட்கள் பூமியைச் சுற்றிய பின்னர் சுற்றுப்பாதையில் இருந்து வீழ்ந்தது.

1988- சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற்ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திரும்பப் பெரும் உடன்பாட்டில் கையெழுத்திட்டது.

Today Birthdays in History

1126- எசுப்பானிய எழுத்தாளர் மற்றும் மெய்யியலாளர் இப்னு ருஸ்து பிறந்த தினம் இன்று.

1629- டச்சு கணிதவியலாளர், வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் கிறித்தியான் ஐகான்சு பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1889- ஆங்கிலேய வரலாற்றாளர் அர்னாலட் ஜோசப் டாயின்சு பிறந்த தினம் இன்று.

Today Deaths in History

1759- சேருமானிய ஆங்கிலேய இசையமைப்பாளர் ஜார்ஜ் பிரிடெரிக் ஹாண்டெல் இறந்த தினம் இன்று.

1905- உருசிய வானியலாளர் ஆட்டோ வில்கெல்ம் வான் சுத்ருவ் இறந்த தினம் இன்று.

1962- இந்தியா பொறியியலாளர் மோக்சகுண்டம் விசுவேசுவரையா இறந்த தினம் இன்று.

3

14/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

14/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்றைய தினம் தங்களின் நிதானத்தை சோதிக்கும் தினமாக இருக்கும். பணியிடத்தில் பல சவால்களையும் சிக்கலையும் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் அனுசரணை அவசியம் தேவையாகும். பயணங்களை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

ரிஷப ராசிபலன்

இன்று சமநிலையான சூழல் நிலவும். உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நற்பலன்கள் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் நன்மதிப்பு கிடைக்கும் நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று சமூக சேவைகள் செய்வதினால் நன்மைகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் கவனத்தை கொண்டு செல்லவும். இதனால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

கடக ராசிபலன்

இன்றைய செயல்களை உங்களின் சுய புத்தியால் ஆற்ற வேண்டும். மற்றவர்கள் பேச்சில் மயங்கி விட வேண்டாம். கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு. பண கஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு.

சிம்ம ராசிபலன்

இன்று உங்களிடம் விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை வேண்டும். நண்பர்களின் ஆலோசனைகள் இன்று பயனளிக்கும். குடும்பத்தில் சிறு பூசல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிக வேலையால் சோர்வுடன் இருப்பீர்கள்.

கன்னி ராசிபலன் 

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி வந்து சேரும். தொழில் நல்ல லாபகரமாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமித்து வைக்க வேண்டிய நாளாகும்.

துலா ராசிபலன்

இன்று ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நல்ல நாளாக அமையும். மனதை அமைதியாக வைக்க தியானம் செய்ய வேண்டும். மேலதிகாரிகளிடம் நல்லுறவு பராமரிக்க இயலாது. சில பிரச்சனைகள் வந்து சேரலாம். அதிக செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

விருச்சிக ராசிபலன்

இன்று அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டிய நாளாகும். பல்வேறு விதத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பணியிடத்தில் ஊழியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். புதிய வியாபாரத்தில் இறங்க வேண்டாம்.

தனுசு ராசிபலன்

இன்று பயணங்கள் மேற்க்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். பணியிடத்தில் சில சவாலான பணிகள் உங்களுக்கு ஒதுக்கப்படும். வீட்டில் பெரியோர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். தனலாபம் குறைவாக இருக்கும்.

மகர ராசிபலன் 

இன்று உங்களுக்கு அற்புதமான நாளாக இருக்கும். செழிப்பான பலன்களை வாரி வழங்கும். தொட்டது எல்லாம் பொன்னாகும் நாளாக இருக்கும். தானிய சேர்க்கை ஏற்படும். தனவரவு அபரிமிதமாக இருக்கும் நாளாகும்.

கும்ப ராசிபலன்

இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். அனைவரிடமும் அன்பாக இருக்க கூடிய நாள். பெற்றோர்களிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். துணையிடம் காதல் மேம்பட்டு இருக்கும். உங்களின் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

மீன ராசிபலன் 

இன்று அதிகமாக கஷ்டப்பட்டு பலன்களை பெற வேண்டிய நாளாகும். உழைப்பால் மட்டுமே உயர முடியும். வீணான பேச்சுகளை தவிர்க்க வேண்டும். வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டிய நாளாகும். இன்று சிறப்பாக எதுவும் அமையாது.

14/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மிஸ்டர் புயல் இணையம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

3

தோனிக்கு நோ சான்ஸ் – கம்பீருக்கு தூக்கமில்லை

0

இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறவில்லை என்றால் எம்எஸ் தோனி இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினமானது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு பின்பு தோனி கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார்.

பிசிசிஐ அணி தேர்வில் தோனியை அடுத்த போட்டிகளில் கழட்டி விட்டது. வருடாந்திர ஊதியப்பட்டியல் டோனியை இந்திய நிர்வாகம் நீக்கியது.

தற்போது தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி நாட்களுக்கு நெருங்கி விட்டார். இவர் அணியில் இடம்பெறுவது மிகவும் கடினமான ஒன்றுதான்.

ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 28ஆம் தேதி ஆரம்பமாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது.

இதனால் உலகெங்கும் எந்த ஒரு விளையாட்டுப் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட்டும் விதிவிலக்கல்ல.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்று அறிவித்தார்.

ஆனால் தற்போதுள்ள நிலைமை மிகவும் மோசமடைந்ததுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் வைரஸ் தாக்கம் அதிகரித்து இருப்பதால், மற்ற வீரர்களை இந்திய நாட்டுக்கு அழைத்து மிகவும் கடினமான ஒன்று. விமான சேவையும் கிடையாது.

இதனால் ஐபிஎல்யை மறந்து விடுங்கள் என்று தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார் சவுரவ் கங்குலி.

இதனால் தோனியின் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடுமோ என்றும் தோன்றுகிறது.

கௌதம் கம்பீர் இருக்கும், எம்எஸ் தோனி க்கும் சில காலங்களாகவே ஆகாத ஒன்றாக இருந்து வருகிறது.

கவுதம் கம்பீர் தோனியை எப்போதும் குறை சொல்லிக்கொண்டு வருகிறார். தற்போது அதுபோல இன்று தோனி குறித்து அவர் கூறியதாவது :

இந்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெறவில்லை என்றால் தோனி இந்திய அணிக்கு திரும்புவதில் மிகவும் கடினமானதாகிவிடும்.

கடந்த ஒன்றரை வருடமாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் எம்எஸ் தோனி, எதன் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கேஎல் ராகுல், தோனி அளவிற்கு கீப்பிங் செய்யவில்லை தான்.

ஆனால் டீ20 என்று வரும் போது ராகுலை கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐபிஎல் போட்டி இல்லை என்றால் தோனிக்கு வாய்ப்புகள் குறைவுதான்.

இறுதியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யும் போது யாராக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்க முடியும் என்றால் மட்டுமே இந்தியாவுக்காக விளையாட வேண்டும்.

“அவரின் ஓய்வு என்பது அவரின் தனிப்பட்ட விஷயம்” என்று கூறியிருந்தார்.

கௌதம் கம்பீர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடும்போதும் தோனியை பற்றி குறிப்பிடாமல் பதிவிட மாட்டார். ஏனென்றால் தோனியை பற்றி பேசவில்லை என்று அவருக்கு தூக்கம் வராது போல.

3

தமிழ் புத்தாண்டு 2020: Tamil New Year 2020 எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

1
தமிழ் புத்தாண்டு 2020: தமிழ் வருடப்பிறப்பு ஏப்ரல் 13, 7:20 மணிக்கு பிறக்கிறது Tamil New Year 2020

தமிழ் புத்தாண்டு 2020: Tamil New Year 2020 எவ்வாறு கணக்கிடப்படுகிறது? சித்திரை திருநாள் எப்படி வந்தது? விஷூ புண்ணிய காலம் என்றால் என்ன?

தமிழ் புத்தாண்டு 2020: Tamil New Year 2020

தமிழ் ஆண்டுக் கணக்கானது வானியல் மற்றும் அறிவியல் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே ஒரு ஆண்டை தமிழர்கள் கணக்கிடுகின்றனர்.

பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர 365 நாட்கள், 6 மணி நேரம், 11 நிமிடங்கள், 48 நொடிகள் ஆகும். இதுவே ஒரு வருடமாக கூறப்படுகிறது.

சூரியனின் ராசி சஞ்சாரத்தை வைத்தே மாதங்கள் துவங்குகின்றது. அதன் அடிப்படையில் தான் தமிழ் வருட பிறப்பும் வருகின்றது.

மேலும் சூரியன் ஒவ்வொரு இராசியிலும் தங்கி இருக்கும் காலத்தை வைத்தே ஒவ்வொரு மாதத்தின் தினங்களின் எண்ணிக்கை கணக்கிடப்படுகின்றது.

தமிழ் வருட பிறப்பு கணக்கீடு

ராசி மண்டலத்தில் மொத்தம் பன்னிரண்டு ராசிகள் உள்ளன. இந்த பன்னிரண்டு இராசியிலும் சூரியன் ஓராண்டில் சஞ்சரிக்கிறார்.

இராசிகளில் முதல் இராசியான மேஷ ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்யும் நாளே வருட பிறப்பாகும். இதனை சமஸ்கிருதத்தில் மேஷ சங்கராந்தி என்று கூறுகின்றனர்.

தமிழர் கணக்கில் இது இளவேனிற்கால துவக்கமாகும். தமிழ் மாதங்களில் சித்திரை மாத பிறப்பாகும். சூரிய நாட்காட்டியின் அடிப்படையில் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

மேலும் தமிழ் நாட்காட்டியானது சீரானதாகவே இருக்கும் ஆங்கில நாட்காட்டி நாட்களை போன்று வருடத்திற்கு வருடம் எண்ணிக்கை மாறி அமையாது.

உதாரணத்திற்கு லீப் வருடம் போன்ற ஒன்று தமிழ் வருட கணக்கில் இல்லை. தமிழ் நாட்கள் சூரியனின் குறிப்பிட்ட இராசியில் தங்கும் காலத்தை மையமாக வைத்து கணிக்கப்படுகிறது.

சமஸ்கிருதத்தில் மொத்தமாக அறுபது வருடங்களுக்கு பெயர்கள் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு பெயரில் பிறக்கின்றது.

ஆங்கில மாதத்தில் ஏப்ரல் 13, 14 அல்லது 15-ஆம் தேதிகளில் மாறி மாறி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. ஏனெனில் ஆங்கில நாள்காட்டி சீரானதாக இருக்காது.

ஆங்கில நாட்காட்டியில் லீப் நாள் கணக்கிடப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்காட்டி அப்படி இல்லை துல்லியமாக கணக்கிடப்படுகிறது.

தமிழ் மாத பிறப்புக் கணக்கீடு

முற்காலத்தில் இரண்டு வகையான மாத கணிப்புகள் இருந்துள்ளன. ஒன்று சூரியனின் இயக்கத்தை வைத்தும். மற்றொன்று சந்திரனின் இயக்கத்தை வைத்தும் கணக்கிடப்படுள்ளன.

பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் என்பதை பார்த்தோம். மேலும் சூரியனின் சுற்று பாதையானது பூமியை மையமாக கொண்டு 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த 12 பகுதிகளும் 30 பாகை அளவுள்ளது. இதுவே 12 ராசிகள் கொண்ட ராசி மண்டலம் ஆகும். குறிப்பிட்ட காலங்கள் ஒவ்வொரு இராசியிலும் சூரியன் தங்குவதே சூரிய மாதங்கள் ஆகும்.

சூரிய மாதத்தில் சந்திரன் பூர்ணத்துவம் (பௌர்ணமி) அடையும் நாளை வைத்தே சந்திர மாதம் கணக்கிடப்படுகிறது.

சந்திரன் மேஷ மாதத்தில் சித்தரை நட்சத்திரத்தில் பூர்ணத்துவம் அடைகிறான். எனவே சந்திர மாதம் சித்திரை என குறிப்படுகிறது. தமிழகத்தில் இந்த சந்திர மாத பெயர்களையே தமிழ் மாத பெயர்களாக உள்ளன.

விஷூ புண்ணிய காலம்

விஷூ புண்ணிய காலம் என்பது பகல் பொழுதும் இரவு பொழுதும் சமமான அளவு நேரத்தை பெற்றிருப்பது விஷூ புண்ணிய காலம் எனப்படுகிறது.

இது மேஷ மாதமான சித்திரை மாதத்திலும் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் முதல் நாள் வருகின்றது. இதுவே விஷூ புண்ணிய காலமாகும். எனவே சித்திரை முதல் நாள் விஷூ கனி பூஜைகள் கோவில்களில் நடத்தப்படுகின்றது.

தமிழ் மாதப் பெயர்கள்

(சூரியன் அடிப்படையில்)

நடைமுறை தமிழ் மாத பெயர்கள்

(சந்திரன் அடிப்படையில்)

இராசி நாள் நாடி விநாடி தற்பரை
மேழம் சித்திரை மேஷம் 30 55 32 00
விடை வைகாசி ரிஷபம் 31 24 12 00
ஆடவை ஆனி மிதுனம் 31 36 38 00
கடகம் ஆடி கடகம் 31 28 12 00
மடங்கல் ஆவணி சிம்மம் 31 02 10 00
கன்னி புரட்டாசி கன்னி 30 27 22 00
துலை ஐப்பசி துலாம் 29 54 07 00
நளி கார்த்திகை விருச்சிகம் 29 30 24 00
சிலை மார்கழி தனுசு 29 20 53 00
சுறவம் தை மகரம் 29 27 16 00
கும்பம் மாசி கும்பம் 29 48 24 00
மீனம் பங்குனி மீனம் 30 20 21 15
மொத்தம் 365 15 31 15

தமிழகத்தில் தமிழ் வருடப்பிறப்பு

தமிழகத்தில் பண்டைய காலத்தில் கார்காலத்தின் துவக்கமான ஆவணி மாதமே தமிழ் வருடப்பிறப்பு என இருந்தாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ் புத்தாண்டு ஆவணியில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடையாது. மேலும் இவ்வழக்கம் மறைந்தும் போனது.

சங்க இலக்கியங்களான அகத்தியர் பன்னீராயிரம், நெடுநல்வாடை, கமலை ஞானபிரகாசரின் புட்ப விதி போன்ற நூல்கள் மேழ (மேஷம்) மாதமே முதல் மாதம் என கூறியுள்ளன.

திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்  

 – நெடுநல்வாடை

இதன் பொருள் வலிமை பொருந்திய கொம்பினை உடைய ஆட்டினை (மேஷம்) முதன்மையாகக் கொண்டு சூரியன் இயங்கும் வான் மண்டலம் என்பதாகும். எனவே தமிழர்கள் இன்றளவும் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டு 2020 சார்வாரி வருடப்பிறப்பு

இந்த வருடம் தமிழ் புத்தாண்டானது 36-வது வருடமான சார்வாரி என்ற பெயரிலே ஏப்ரல் 13-ஆம் தேதி இரவு 07:20 PM கிருஷ்ண பட்ச சஷ்டி திதியில் மூல நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் தனுசு ராசியில் பிறக்கிறது.

இந்த சார்வாரி வருடத்தில் சென்ற ஆண்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மக்கள் அனைவரும் இன்புற்று வாழ இறைவனை பிராத்தனை செய்வோம்.

3

Thank you Coronavirus Helpers: Google Doodle – கூகிள் டூடுல்

0
Thank you Coronavirus Helpers: Google Doodle - கூகிள் டூடுல்

Thank you Coronavirus Helpers: Google Doodle –  கூகிள் டூடுல் கொரோனா வைரஸ் எதிர்த்து உழைக்கும் மருத்துவ பணியாளர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டியுள்ளது.

Thank you Coronavirus Helpers

வழக்கமாக கூகிள் டூடுல் ஏதாவது ஒரு நிகழ்வையோ, மாமனிதர்களையோ தன்னுடைய கூகில் முகப்பில் வைத்து சிறப்பிப்பது வழக்கம்.

இந்த முறை உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி சில தகவல்களை பகிர்ந்தது. இதற்கு முன்பு எவ்வாறு கை கழுவ வேண்டும் என ஒரு டெமோ வீடியோ பதிவிட்டது.

கொரோனா வைரஸ் உதவுவோர்

தற்போது கரோனா வைரஸ் பரவும் இந்த நிலையில் உயிரையும் பணையம் வைத்து உழைக்கும் அனைத்து நெஞ்சங்களையும் பாராட்டி ஒரு கார்ட்டூன் கிராஃபிக்ஸ் வைத்துள்ளது.

அவ்வபோது கூகிள் டூடுள் இப்படி தன்னுடைய லோகோவை மாற்றுவதும் ஒரு பொழுதுபோக்க உள்ளது. சில நேரத்தில் விளையாட்டு கூட இதில் இடம் பெரும்.

3

“தாராளமாக செய்யுங்கள் தம்பி”- எடப்பாடி பழனிச்சாமி

0

கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் நம் மாநில முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் ஸ்தம்பித்து உள்ளது.

குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகள் அதிக இழப்புகளை சந்தித்து உள்ளது.

உலகெங்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்த கொரோனா வைரஸ்க்கு பாதித்துள்ளனர்.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடி அறிவித்த படி 21 நாள் ஊரடங்கு உத்தரவில் மக்கள் இருந்து வருகிறார்கள்.

தேவைக்காக மட்டுமே வெளியில் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நம்முடைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தமிழ்நாட்டின் சுகாதார துறை அமைச்சகமும் சிறப்பாகவே செயல்பட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மக்கள் சிலர் ஊரடங்கு உத்தரவால் வேலை செய்யும் இடங்களில் தங்கியிருக்கிறார்கள். சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த ஊரடங்கு உத்தரவால் சிறு மற்றும் குறு தொழில் பாதித்து வருகிறது.

டிவிட்டரில் நம் மாநில முதல்வரை டாக் செய்து நிர்மல் குமார் என்பவர் “நாங்கள் எங்கள் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் உள்ள தேங்காய் வெட்டி, வேறு இடத்திற்கு கொண்டு செல்லலாமா?” என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதில் தரும் வகையில் நம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் “தாராளமாக செய்யுங்கள் தம்பி” என்று அவருக்கு பதில் அளித்துள்ளார்.

இது அவரை டுவிட்டரில் பின் தொடர்பவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இது போன்ற சாமானிய மக்கள் அவரிடம் ட்விட்டரில் கோரிக்கை வைக்கும் போது அவர் அதற்கு பதில் தருவது, நம் தமிழக முதல்வரை சுலபமாக தொடர்பு கொள்ளலாம் என ஒரு நம்பிக்கை வருகிறது.

ஒரு ஏழை மக்களின் முதல்வர் என்றும், ஒரு விவசாய முதல்வர் என்றும் தன்னை மீண்டும் மீண்டும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நிரூபித்து வருகிறார்.

https://platform.twitter.com/widgets.js

3