Manjima Mohan; நடிகை மஞ்சிமா மோகன் இன்று தனது 27ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன் (Manjima Mohan).
மலையாளத்தில் கிட்டத்தட்ட 8 படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார்.
தமிழில் சிம்பு நடிப்பில் வந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
இப்படத்தைத் தொடர்ந்து, சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
களத்தில் சந்திப்போம், எஃப்.ஐ.ஆர்., துக்ளக் தர்பார் ஆகிய தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மஞ்சிமா மோகன் (Manjima Mohan Birthday) இன்று தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் ஒவ்வொருவருக்கும் மஞ்சிமா மோகன் நன்றி தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Neet Anitha; அனிதாவைப் பற்றிய சென்டிமென்ட் காட்சிகள் மாஸ்டர் படத்தில் இருக்கிறது என்று தகவல் வெளியாகி வருகிறது.
Master Anitha Sentiment Scene; மாஸ்டர் படத்தில் அனிதாவைப் பற்றிய சென்டிமென்ட் காட்சி இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master). கல்வித்துறையில் நடக்கும் ஊழலை மையப்படுத்தி மாஸ்டர் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
நேற்று மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வாத்தி கம்மிங் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆனால், பாடலில் அப்படி ஒன்றும் பாடல் வரிகள் இல்லை. சும்மா தீம் மியூசிக்கை வைத்தே பாடலாக்கப்பட்டுள்ளது என்று பலரும் விமர்சித்தனர்.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் அனிதாவைப் பற்றிய சென்டிமென்ட் காட்சிகள் இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவம் படிக்க வேண்டும் என்பதை ஆசையாகக் கொண்டிருந்தார்.
ஆனால், மத்திய அரசோ நீட் தேர்வில் (NEET Exam) அடிப்படையில் மருத்துவர் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துவிட்டது. எனினும், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் முடிவும் மத்திய அரசுக்கு சாதகமாகிவிட்டது. இதன் காரணமாக அனிதா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்போது தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
தற்போது அனிதாவை மையப்படுத்திய சென்டிமென்ட் காட்சிகள் மாஸ்டர் (Anitha Sentiment Scene) படத்தில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
பெரும்பாலும் விஜய் நடிக்கும் படங்களில் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.
அந்த வகையில், அனிதாவோ மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று தோல்வியுற்றார்.
ஆதலால், கண்டிப்பாக மாஸ்டர் படத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், அனிதாவைப் பற்றிய சென்டிமென் ட் காட்சிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அனிதாவைத் தொடர்ந்து பிரதீபா, ரிதுஸ்ரீ, வைஷியா மற்றும் மோனிஷா ஆகிய மாணவிகளும் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் லிரிக் வீடியோ (Vaathi Coming Lyric Video) வெளியானதைத் தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch) நடக்க இருக்கிறது.
இதனை சன் தொலைக்காட்சி (Sun TV Live Master Audio Launch) நேரலை செய்கிறது. ஆனால், தற்போது வரை மாஸ்டர் இசை வெளியீடு எங்கு நடக்கிறது என்பது குறித்து அறிவிப்பு வரவில்லை.
தற்போது விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அவர் சென்னை திரும்பிய பிறகு மாஸ்டர் இசை வெளியீடு எங்கு நடக்கிறது என்பது குறித்து அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் ஹசாரே பிறந்த தினம் இன்று; வரலாற்றில் இன்று மார்ச் 11 today what special day in world – india – tamil. ஜாம்பவானான ஹசாரே, முதல் இந்திய வெற்றி கேப்டன், கிரிக்கெட் குறிப்புகள் பிராட்மேனை 3 முறை விக்கெட் எடுத்த ஹசாரே சாதனைகள்
ஜாம்பவானான விஜய்
இந்திய கிரிக்கெட்டில் பல ஜாம்பவான்கள் இருந்து வந்து உள்ளனர் அதில் மறைந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான விஜய் ஹசாரே பிறந்த நாள் இன்று.
பிரிட்டிஷ் இந்தியாவின் பாம்பே நகரின் சங்கிலி எனும் ஊரில் 1915 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பிறந்தவர் தான் இவர்.
1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 1953 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு பெற்றார்.
1934 – 1958 ஆண்டு முதல்தர போட்டியில் விளையாடி பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.
முதல் இந்திய வெற்றி கேப்டன்
இந்திய அணி டெஸ்ட் போட்டி விளையாடி 20 வருடங்கள் கழித்தே முதல் வெற்றியை ரசித்தது. 1951 – 1953 ஆம் ஆண்டு இவர் கேப்டனாக இந்திய அணிக்கு 14 டெஸ்ட் போட்டிகளில் இருந்து வந்துள்ளார்.
இந்திய அணி முதல் டெஸ்ட் வெற்றி இவரது தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது. இவரது தலைமையில் இந்தியா வென்ற ஒரே போட்டியும் அந்த போட்டி மட்டுமே.
1952: Indian cricketer Vijay Hazare (V S Hazare) batting during the England versus India Test Match in Manchester.
1952 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்களில் இந்திய அணி வெற்றி பெற்றது.
வலது கை பேட்டிங் மற்றும் வலது கை பந்து வீச்சாளரான விஜய் ஹசாரே தான் விளையாடிய சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டு உள்ளார்.
இவரின் கிரிக்கெட் குறிப்புகள்
இவர் 30 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 2192 ரன்களும், சராசரி 48.00, 7 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 164 ரன்கள் எடுத்துள்ளார்.
பந்துவீச்சில் மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி, 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து ஒரு இன்னிங்சில் சிறப்பான பந்துவீச்சை வைத்துள்ளார்
238 முதல்தர போட்டிகளில் விளையாடி 18000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். சராசரியாக 58.38,
60 சதங்களும், 73அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 316 ரன்கள் எடுத்துள்ளார்.
பந்துவீச்சில் 595 விக்கெட்டுகளை வீழ்த்தி, 27 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.
இவர் கிரிக்கெட் ஜாம்பவானான ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனை மூன்று முறை விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
விஜய் ஹசாரே சாதனைகள்
முதல் இந்திய பேட்ஸ்மேனாக முதல் தர போட்டியில் ஒரு இன்னிங்சில் 300 ரன்களை எடுத்துள்ளார்.
*இவர்தான் இந்தியாவின் முதல் தர போட்டியில் முதல் இரண்டு முச்சதம் அடித்த வீரர் ஆவார்.
இவரின் முதல் முச்சதம் 1939-40 ஆண்டுகளில் மகாராஷ்டிர அணியில் விளையாடி புனே அணிக்கு எதிராக 314 ரன்கள் எடுத்தார்.
இரண்டாவது முச்சதம் தி டெஸ்ட் அணியில் விளையாடி தி ஹிந்துஸ் அணிக்கு எதிராக 309 ரன்கள் எடுத்தார். தனது சகோதரர் விஜய் உடன் கூட்டணி அமைத்து 300 ரன்கள் 300 ரன்கள் எடுத்தனர்.
அதில் விஜய் ஹசாரே 266 ரன்கள் எடுத்து அதாவது இவர்களது கூட்டணியில் 88.86 ரன்கள் இவர் மட்டுமே எடுத்தார். அந்த அணியில் இவரது ரன்கள் மட்டும் 79.84 அடுத்து முதல் தர போட்டியில் உலக சாதனையாக இன்றுவரை இருந்து வருகிறது.
1947-48 அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து சர்வதேச போட்டிகளில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆவார்.
கான்பூரில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆன முதல் இந்திய வீரரும் இவரே.
இந்தியா மூன்று தொடர் வெற்றி கண்ட டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆவார்.
முதல் தர போட்டியில் 50 சதம் அடித்த முதல் இந்திய வீரர் ஆவார்.
சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் ஆயிரம் ரன்களை கடந்து இந்திய வீரர் ஆவார்.
விஜய் ஹசாரே டிராபி
இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கௌரவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் சங்கம் இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக விஜய் ஹசாரே டிராபி என்ற போட்டி வருட வருடம் நடத்தி வருகின்றது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நிலை குறைவால் காலமானார்.
இவர் குடும்பத்தினர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இன்று இவரது 89வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
அமைச்சரவை பரிந்துரையை ஏற்று தன்னை விடுதலை செய்யக்கோரிய நளினி மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் தன்னை சட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த நாளே விடுதலை செய்து இருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை தன்னை விடுதலை செய்யவில்லை என நளினி உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை அளித்தார்.
இந்த மனு மீதான விசாரணை சுப்பையா, பொங்கியன் கொண்ட நீதிபதி அமர்வு பல கட்டமாக விசாரணை செய்து வந்தது.
இந்நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
KGF Yash: யாஸ் தாடியை எடுக்க காரணம் என்ன? அப்போ கேஜிஎப் பார்ட் என்ன ஆச்சு? 2 பாகத்துடன் முடிஞ்சு போச்சா? பாகுபலி போல எங்கும் ரசிகர்கள்
கேஜிஎஃப் (KGF) மற்றும் கேஜிஎஃப் 2 (KGF 2) ஆகிய படங்களுக்காக கிட்டத்தட்ட 3 வருடங்களாக தாடி வளர்த்து வந்த நடிகர் யாஷ் (Yash Trim His Beard) தற்போது தனது தாடியை எடுத்துள்ளார்.
கேஜிஎஃப் (KGF) படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் யாஷ் (Yash). இயக்குநர் பிரசாந்த் நீல் தயாரிப்பில் கன்னடத்தில் வெற்றிநடை போட்ட படம் கேஜிஎஃப்.
பிறக்கும் போது ஏழையாக பிறந்து, சாகும் போது பணக்காரனாகத்தான் சாகணும் என்று அம்மா சத்தியம் வாங்குகிறார்.
தன் அம்மாவின் சத்தியத்திற்காக பணக்காரனாக துடிக்கும் சிறுவன் ராக்கி கேங்க்ஸ்டராக மாறுகிறார். தங்கச்சுரங்கத்தை ஆட்டிப்படைக்கும் வில்லனை கொல்வதற்காக துணிச்சலோடு அவரது இடத்திற்கே செல்கிறார்.
அங்கிருக்கும் ஏழை கொத்தடிமை மக்களைக் கண்டு உணர்ச்சிவசப்படுகிறார். இறுதியில், வில்லனை கொன்று குவிக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் படி இயக்கியிருந்தார் இயக்குநர்.
அந்தளவிற்கு படத்தின் காட்சிகள் கட்சிதமாக இருந்தது. ரொமான்ஸ், ஆக்ஷன், சென்டிமெண்ட் என்று எந்த இடத்திலும் குறையில்லாத படமாக கேஜிஎஃப் உருவாக்கப்பட்டிருந்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2 ஆம் பாகமும் உருவாகியுள்ளது.
அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 படத்திற்காக கிட்டத்தட்ட 3 வருடங்களாக தனது தாடியை வளர்த்து வந்துள்ளார் யாஷ்.
கேஜிஎஃப் 2 படத்தோடு ராக்கி கதாபாத்திரம் முடியும் என்று தெரிகிறது. ஏனென்றால், 3 வருடங்களாக ராக்கி கதாபாத்திரத்திற்காக வளர்த்து வந்த தனது தாடியை யாஷ் ட்ரிம் செய்துள்ளார்.
தாடியை ட்ரிம் செய்து புதிய தோற்றத்தில் இருக்கும் யாஷின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேஜிஎஃப் 2 படத்தில் யாஷிற்கு வில்லனாக சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும், யாஷிற்கு ஜோடியாக ரவீனா டாண்டன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎஃப் 2 படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. படம் இப்போது வெளியானாலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
பாகுபலி இரண்டாம் பாகம் வெளிவரும்போது இருந்த எதிர்பார்ப்பைவிட இதன் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது.
அந்த படம் வெளிவந்தவுடன் மூன்றாம் பாகம் எடுக்கவேண்டும் என ரசிகர்கள், ராஜமவுலியை வலியுறுத்தினர். ஆனால் ராஜமவுலி மறுத்துவிட்டார்.
அதேபோல் கேஜிஎப் 3 பாகம் வேண்டும் என ரசிகர்கள் நினைத்தாலும் இனி அதற்கு வாய்ப்பில்லை என யாஷ் தனது தாடியை எடுத்துவிட்டார்.
2000ம் ஆண்டுகளில் இருந்து 2007 ஆம் ஆண்டுகள் வரை இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெறும் தருவாயில் தோல்வியை தழுவியுள்ளது.
அந்த காலகட்டத்தில் ஆட்டத்தை முடிப்பவர் அதாவது பெஸ்ட் பினிஷேர் யார் என்று கேட்டால் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன் அவர்களை மட்டுமே தான் கூறுவார்கள்.
தோனி இரண்டு உலககோப்பை
2007 ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று கொடுத்து தோனி என்ற ஒருவர் உலகத்திற்கே பிரபலமானார்.
இந்தியாவில் விக்கெட் கீப்பிங் மட்டுமில்லாமல் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி ஆட்டத்தை முடித்துக் கொடுக்க பெஸ்ட் பினிஷேராகவும் வலம் வருவார் தோனி.
2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை இறுதி போட்டியில் பினிஷராக தோனி அடித்த கடைசி சிக்ஸில் இந்திய அணி வெற்றி பெறும்.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் கேப்டன் இன்னிங்ஸ் ஆடி வேர்ல்டு பெஸ்ட் பினிஷாராக இருந்து வருகிறார்.
நடந்து முடிந்த 2019 ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு தோனி இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவருகிறார்.
ஆனால் இன்று வரை உலகின் சிறந்த பினிஷராக இருந்து வருகிறார். இடையில் ஏபி டி வில்லியர்ஸ் வந்தாலும், தோனி அடுத்து கொள்ள ஆளே இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
நடுவரிசை ராக்ஸ்
வருகிற மார்ச் 29ம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது ஐபிஎல் இவருக்கென்று உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது இவர் இல்லாமல் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் மற்றும் நடுவரிசையில் ரன் எடுக்காமல் சொதப்பி வருகிறார்கள். இந்திய அணி கடந்த நியூசிலாந்து அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்டின் லாங்கர் பேட்டி
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஐசிசி இணையதளத்திற்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :
“மைக் ஹஸ்ஸி, மைக்கேல் பவன் போன்ற முன்னாள் பினிஷர்கள் போல இன்று எங்கள் அணியில் இல்லை, இதுவே எங்களுக்கு மிகப்பெரிய துரதிர்ஷ்டம். இதனால் பல சோதனை முயற்சிகளை செய்ய வேண்டியது உள்ளது.
இந்தியாவின் தோனியை போல் எங்களுக்கும் ஒரு பிரஷர் தேவை, ஆனால் இங்கிலாந்திற்கு ஜோஸ் பட்லர் இருந்து வருகிறார். இது போன்ற சிறந்த பினிஷர்களை நாங்கள் தேடி வருகிறோம்.
குறிப்பாக தோனி பல போட்டிகளில் தோல்வி விளிம்புகளில் இருந்தபோதும் நம்பிக்கை அற்ற சூழலில் இருந்த போதிலும் தன்னுடைய சூப்பர் பினிஷிங் மூலம் போட்டியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆதலால் இது போன்ற சிறந்த பினிஷர்களை எங்கள் அணிக்கு தேடிக்கொண்டிருக்கிறோம். அடுத்த நடக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் சிறந்த பினிஷர்களைத் தேடி பல சோதனைகள் செயல்படுத்த உள்ளோம்.
இப்போது இருக்கும் அணியில் யாருக்கும் நிரந்தர இடம் என்பது இல்லை, அதனால் வரக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் அந்த இடத்தை நிரப்புவார்கள்,” இவ்வாறு ஜஸ்டின் லாங்கர் கூறினார்.
Suriya Vikatan Award 2020; நடிகர் சூர்யாவுக்கு சிறந்த மனிதருக்கான விகடன் விருது வழங்கப்பட்டுள்ளது.
சூர்யாவுக்கு சிறந்த மனிதருக்கான விருது வழங்கி விகடன் (Vikatan) குழுமத்தினர் அவரை கௌரவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. நடிப்பு மட்டுமின்றி சமூக சேவையிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்.
ஆம், அகரம் ஃபவுண்டேசன் (Agaram Foundation) மூலம் தரமான கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு இந்நிறுவனத்தை இயக்கி வருகிறார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு அகரம் ஃபவுண்டேசன் தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் பின்தங்கியிருக்கும் பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி அளிப்பதை நோக்கமாக கொண்டு அகரம் ஃபவுண்டேசன் செயல்பட்டு வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல், தரமான கல்வி நிறுவனங்களையும் அடையாளம் கண்டு தேவையான வசதிகள், கல்வி தரத்தை உயர்த்த முயற்சிப்பது, கிராமப்புற மக்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கிராமப்புறங்களில் கல்வி நிலையங்களை உருவாக்குவது என்று சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
சூர்யா மட்டுமல்லாமல், நடிகர் சிவக்குமார், தனது சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மூலம், ஒவ்வொரு மாநிலத்திலும் மேல்நிலைத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிரார்.
1979 ஆம் ஆண்டு முதல் இந்த சேவையை நடிகர் சிவக்குமார் செய்து வருகிறார். தற்போது அவருடன் இணைந்து அவரது இளைய மகன் நடிகர் கார்த்திக்கும் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகரம் ஃபவுண்டேசன் மூலம் கல்வி உதவி அளிப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கும் உதவி செய்து வருகின்றனர்.
கார்த்தி தனது உழவன் அறக்கட்டளை மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 5 விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கியுள்ளார்.
கஜா புயல் பாதிப்பு, கேரளா வெள்ளப்பாதிப்பு ஆகியவற்றிற்கும் நிதியுதவி அளித்துள்ளனர்.
இப்படி குடும்பத்தோடு சமூக சேவையில் சூர்யா, சிவக்குமார், கார்த்தி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில், இதுவரை விமானத்தில் செல்லாத 100 குழந்தைகளை சூரரைப் போற்று படத்தின் மூலமாக விமானத்தில் ஏற்றி சென்றிருக்கிறார்.
அப்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தின் வெய்யோன் சில்லி எனும் பாடல் வெளியிடப்பட்டது.
இப்படி, தன்னலம் கருதாமல், ஏழை குழந்தைகளுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் உதவி வரும் சூர்யாவின் சேவையைப் பாராட்டி விகடன் குழுமத்தினர் சூர்யாவிற்கு சிறந்த மனிதர் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.
இந்த விருதிற்கு சூர்யாவைத் தவிர வேறு யாரும் தகுதியானவர்களாக இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
விகடன் விருது (Vikatan Award) பெற்ற பிறகு சூர்யா கூறியிருப்பதாவது: 94 ஆண்டுகளாக சாமானியர்களின் குரலாக ஒலிக்கிறது விகடன்.
முதல் தலைமுறையினராக கல்வி வாய்ப்பு வேண்டி காத்திருக்கும் சாமானியர்களின் வீட்டுக் குழந்தைகள் கல்வி பெற அகரம் ஃபவுண்டேஷன் செய்துவரும் பணிகளுக்கு உறுதுணையாய், விகடன் விருது அளித்திருப்பது உற்சாகம் தருகிறது.
சமூக மாற்றத்திற்காக அகரமுடன் கைகோர்த்திருக்கும் ஒவ்வொரு கரங்களின் சார்பாக இந்த விருதைப் பெற்று மகிழ்கிறேன்.
விகடனுக்கும், தமிழ் மக்களின் அன்பிற்கும் நன்றிகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு என்ஜிகே. படத்திற்காக சிறந்த நடிகருக்கான விகடன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
ஆனால், அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விகடன் விருது தனுஷிற்கு வழங்கப்பட்டது.
கோரோனாவால் யுட்யூப் தளத்தை களை எடுக்க ஆரம்பித்த கூகிள், யுட்யூப் தளத்தில் இருக்கும் கொரோனா பற்றிய தவறான தகவல்களை நீக்க முடிவு.
உலகத்தில் ஒரு லட்சத்தி இருபதாயிரம் மேலான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 4000க்கும் மேற்பட்ட உயிர் பழி ஆகியுள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் எவ்வளவு பாதிப்பு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனாவை கட்டுபடுத்த இயலவில்லை.
சமூக வலைதளங்களில் இது பற்றி இருக்கும் தவறான பதிவுகளை நீக்க முடிவு செய்துள்ளது கூகிள் நிறுவனம்.
முதலில் அதற்கு சொந்தமான யுட்யூப் தளத்தில் இருக்கும் கொரோனா பற்றிய தகவல்களை அலசி ஆராய முடிவு செய்துள்ளது.
கொரோனா பற்றிய எந்த வித பதிவிக்கும் விளம்பர வருமானம் கிடையது என அறிவித்தது. இதனால் வீடியோ வைரல் செய்வதற்காக பதிவிடுவோர் குறைவார்கள் என கூகிள் நம்புகிறது.
மேலும் தவறான பதிவுகளை ஒவ்வொன்றாக மனுயல் ஆக நீக்குவதால் அதிக நேரம் ஆகும் எனவும் கூறியுள்ளது. யுட்யூப் பாலிசி படி இது போன்ற சென்சுவல் பதிவுகளுக்கு விளம்பர வருமானம் கிடையாதம்.
நானும் ஆல்ரவுண்டர் தான்டா அடித்துக்காட்டிய அந்த வீரர். அதிரடி அரைசதம் அடித்து இந்தியா லெஜெண்ட்ஸ் அணிக்கு வெற்றி தேடி தந்தார் இர்ஃபான் பதான்.
ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் (ROAD SAFETY WORLD SERIES) போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.
இதில் 5 அணிகள், இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது.
நேற்று இந்தியா லெஜண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி சாலை பாதுகாப்பு டி20 தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இலங்கை லெஜெண்ட்ஸ் அணி பேட்டிங்
டாஸ் வென்ற சச்சின் பௌலிங் தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு தில்ஷன் – கலுவிதரானா முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தனர்.
20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. முனாப் படேல் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.
இந்தியா லெஜெண்ட்ஸ் அணி பேட்டிங்
சமிந்தா வாஸ் சிறப்பான பந்து வீச்சால் சச்சின், சேவாக் மற்றும் யுவராஜ் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இதன் மத்தியில் கைஃப் நிதான ஆட்டம் ஆடி கை கொடுத்தார்.
பின்னர் கீழ் வரிசையில் களம் இறங்கிய இர்ஃபான் பதான் மரண காட்டு காட்டினார். கடைசி இரண்டு ஓவர்களில் ஆட்டத்தை மாத்தினார்.
கடைசி மூன்று ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரே ஓவரில் 26 ரன்கள் அடித்து போட்டியை எளிதாக்கினார். இந்திய அணி கடைசி ஓவரின் நான்காம் பந்தில் வெற்றியடைந்தது.
கடந்த மார்ச் 7ம் தேதி தொடங்கிய ‘ரோடு சேப்டி வேர்ல்டு தொடர்’ போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா என ஐந்து அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகிறது.
முதல் ஆட்டம்
முதல் போட்டியில் இந்திய லிஜெண்ட் அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லிஜெண்ட் அணிகளும் மோதின.
சேவக் அதிரடியால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
மார்ச் 8 ஆம் தேதி நடந்த மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா இலங்கை அணியும் மோதின. இதில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
நேற்று மும்பையில் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய லிஜெண்ட் அணியும் இலங்கை அணியும் மோதின.
டாஸ் வென்ற டெண்டுல்கர்
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் அபார பந்துவீச்சால் இலங்கை அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினர்.
இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கையில் அதிகபட்சமாக தில்ஷன் 23, கழுவிதர்னா 21, துஷாரா 10, கப்புகெதர 23, சனாயகா 19, மகரூப் 10 ரன்கள் எடுத்தனர்.
இந்திய தரப்பில் முனாப் பட்டேல் 4 விக்கெட்டும், இர்பான் பதான், ஜாகிர் கான், சஞ்சய் பங்கார், கோனி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
139 ரன்கள் இலக்கு
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரரான ஷேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இறங்கினார்கள்.
இந்திய ரசிகர்கள் முதல் போட்டியை போல இந்தப் போட்டியிலும் தொடக்க ஜோடி ஆட்டத்தை பார்க்க ஆவலாக இருந்தனர்.
சமந்தா பாஸ் வீசிய முதல் பந்தை சேவாக் தூக்கி அடிக்க அந்த கேட்சை அட்டபட்டு தவறவிட்டார். ஆனால் டெண்டுல்கரை முதல் ஓவரின் 3-வது பந்தில் சமந்தா வீழ்த்தினார்.
சேவாக் 3, யுவராஜ் சிங் 1, மற்றும் சஞ்சய் பங்கர் 18 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
முகமது கைப் மற்றும் இர்பான் பதான் இருவரும் கூட்டணி அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 45 ரன்கள் எடுத்த நிலையில் முகமது கைப் தனது விக்கெட்டை இழந்தார்.
இந்தியா வெற்றி
இறுதியில் இந்திய அணிக்கு 18 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது 18-வது ஓவரை மகரூப் பந்து வீசினார்.
அந்த ஓவரில் 3 சிக்சர்கள் நோ பாலுடன் ஒரு பவுண்டரி என சேர்த்து மொத்தம் 26 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார்கள் இர்பான் பதான் மற்றும் கோனி.
18.4 ஓவர்களில் இந்தியா 139 ரன்கள் எடுத்து இலங்கை அணி 65 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியாவில் அதிகபட்சமாக 29 பந்துகளில் 50 ரன்னை கடந்த இர்பான் பதான் 31 பந்துகளில் 57 ரன்னும், முகமது கைப் 45 ரன்களும் , கோனி 11 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் சமந்தா வாஸ் 2 விக்கெட்டும், ஹெராத் மற்றும் சனாயாக தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஏமாற்றம்
இந்தியா ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்க்கப்பட்ட சச்சின் மற்றும் சேவாக் ஏமாற்றம் தந்தனர்.
16 வது ஓவர்கள் வரைஆட்டம் இலங்கை அணி கையில் இருந்தது. மகருப் வீசிய 18 வது ஓவர்தான் திருப்பு முனையாக அமைந்தது.
ஆட்டநாயகன்
ஆட்டநாயகன் விருதை அதிரடியாக ஆடி இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்ற இர்பான் பதான் வாங்கினார்.