சூரியாவின் படத்தலைப்பு திடீர் மாற்றம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே மாதிரியான தலைப்புகள் உள்ளதால் குளறுபடி.
சூரரைப்போற்று
சூரியா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் சூரரைப்போற்று. இந்த படம் பாடல்கள் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வரும் படம் சூரரைப்போற்று. இந்நிலையில் சூரியாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.
அருவா?
ஹரி-சூரியா படங்களில் எல்லாம் செண்டிமென்ட் கட்சியாக அருவா சண்டை இடம்பெறும். இம்முறை படத்தலைப்பே அருவா எனப்பெயரிடப்பட்டு உள்ளது. தற்பொழுது இந்த தலைப்பு மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அருவா சண்டை, அருவா வேலு என படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இயக்குநர் ஏகாதசி அவர்களின் படம் ‘அருவா’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.
எனவே சூர்யாவின் அருவா படத்தலைப்பு மாற்றப்படலாம் அல்லது ஏகாதசியுடன் சுமூக பேச்சுவார்த்தை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமக்கு எதிரி வெளிய இல்ல கூடவே இருக்கான்; ஐபிஎல் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு, கொரோனா பயத்தால் பொதுநலன் கருதி வழக்கு.
மார்ச் 29ஆம் தேதி தொடங்கி மே 24ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியை நிறுத்தக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார் வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகர்.
அவர் அளித்த மனுவில் உலக சுகாதார மையத்தின் வலைதளத்தில் கொரோனா வைரஸுக்கு இது வரை எந்த வித கண்டுபிடிக்கவில்லை. பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள இயலும்.
குணப்படுத்த இயலாது என குறிப்பிட்டிருக்கிறார். இதனால் பொது நலன் கருதி ஐபிஎல் போட்டிகளை இப்போதைக்கு நடத்த வேண்டாம் என கேட்டுள்ளார்.
மக்கள் நலனையும் பாதுகாப்பையும் யோசிக்கும் பொழுது இது பாதுகாப்பானா முடிவாக தோன்றுகிறது. இந்த வருடம் ஐபிஎல் நடந்தால் ரசிகர்கள் இல்லாமல் மூடிய மைதானங்களில் மட்டுமே நடக்க வாய்ப்பு உள்ளது.
VPN App உபயோகிப்பவரா நீங்கள் கட்டாயம் இதைப் படிக்கவும், விபிஎன் ஆஃப் உபயோகிக்கலாமா?
உலகம் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தவுடன் தனிமனிதனின் பெர்சனல் தகவல்கள் திருடு போவது சாதாரண ஒன்றாகிவிட்டது.
நாளுக்கு நாள் தனி மனிதரின் பெர்சனல் தகவல்கள், அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாவதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
இது ஒரு பக்கம் இருக்க ஆன்லைன் பேங்கிங் தகவல்களும் திருட்டு போகி லட்சக்கணக்காக பணம் இழந்தோர் பற்றியும் செய்திகள் கேட்டிருக்கிறோம்.
எந்த ஆப்கள் சிறந்தது? என மக்கள் விழிப்புணர்வு இல்லாமலே உள்ளனர். ப்ளேஸ்டோரில் இருக்கும் அனைத்து வகை செயலிகளும் நல்லவை அல்ல.
விபிஎன் ஆஃப் உப்யோகிக்கலாமா?
20 VPN App வரை ஆண்ட்ராய்டு மட்டும் ஐஓஎஸ் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் மொபைல் ஆட் பிளாக்கர் அதைச்சார்ந்த செயலிகளும் நீக்கப்பட்டுள்ளன.
இது போன்ற விபிஎன் செயலிகள் மூன்றாம் பார்ட்டி செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூறி பயனாளர்களை தொந்தரவு செய்கின்றனர். அப்போதுதான் உங்கள் ஃபோனில் எந்த வித விளம்பரங்கள் வராது என்றும் கூறுகிறதாம்.
குறிப்பாக பிரபலமான சமூக வலைதளங்கலான பேஸ்புக், யுட்யூப் போன்ற செயலிகளும் விளம்பரம் இல்லாமல் செய்யலாம் எனவும் கூறி பயனாளர்களை ஏமாற்றம் செய்கின்றனராம்.
இவ்வாறு நீங்கள் அவர்கள் கூறுகிற செயலிகளை பதிவிறக்கம் செய்ததும் உங்கள் சுய தகவல்கள் உடனே திருடு போகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
Adblock Focus, Adblock WiFi, Adblock Mobile, Mobile Data, Hotspot VPN, Free and Unlimited VPN, Wi-Fi Booster, Luna, and Ad Terminator இந்த பெயர்களில் இருக்கும் செயலிகளை இன்ஸ்டால் செய்வதை தவிருங்கள்.
முடிந்த வரை விபிஎன் மற்றும் ஆட் பிளாக்கர் உபயோகிப்பதை தவிருங்கள். தேவைப்பட்டால் மிகவும் சிறப்பாக நேர்மையாக செயல்படும் செயலிகள் சில உள்ளன.
எந்த விபிஎன் ஆப் ஓரளவு நம்பிக்கை தரும் என்பதை அடுத்த பதிவில் காண்போம். அதுவரை எங்களை சமூகவலைதளங்களில் பாலோ செய்து இணைந்திருங்கள்.
வடக்கூரானே வெளியேறு; அசுரன் பட பாணியில் மிரள வைத்த கட்சி. தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் மார்வாடிகளை அதிர வைத்த சம்பவம் ஈரோடு பகுதியில் நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொங்கலமங்கலம் வீதியில் சில வட மாநிலத்தவர்கள் வணிக வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் கடைகளில் நிறைய தமிழர்கள் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
அதே வீதியில் செயல்பட்டு வரும் பவன் ஸ்டேஷனரீஸ் என்ற கடையிலும், ஜின்னா வீதியில் உள்ள கிருஷ்ணா மெட்டல் கடைகள் உட்பட மூன்று கடைகளின் முன்பும் பிளக்ஸ் பேனர் தொங்க விடப்பட்டு இருந்தது.
அதைக் கண்ட உரிமையாளர்கள் தமிழில் எழுதப்பட்டு இருந்ததால் என்ன என்று புரியாமல் அவற்றை அப்புறப்படுத்தி விட்டு, கடையை திறக்க முயன்றனர்.
ஆனால், கடையில் புதிதாக பூட்டுபோடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் வந்த பிறகு என்ன நடந்து என்று பார்த்து விட்டு மார்வாடியிடம் தகவல் கூறினர். பின்பு இதற்கு காரணம் யார் என விசாரித்து வருகின்றனர்.
வடக்கூரானே வெளியேறு
”தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வெளிமாநில மார்வாடிகளின் வணிக நிறுவனங்களை பூட்டுவோம்.
மார்வாடியே வெளியேறு, வடநாட்டவனே வெளியேறு, வடக்கூரானே வெளியேறு. வெளியேற மறுத்தால் புரட்சி வெடிக்கும்”
போன்ற வாசகத்துடன் அந்த பேனரில் தமிழ் தேசிய கட்சி-தமிழர் நாடு என்று அச்சடிக்கப்பட்டு இருந்தது.
இன்று மிகவும் பொன்னான நாளாகும். மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். பணியிடத்தில் வெற்றிகள் குவியும்.
குடும்பத்தில் ஆனந்தம் பெருகும். பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு. வாய்ப்புகளை தவற விடாமல் இருக்கவும். பண பலம் பன்மடங்கு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகாலட்சுமியை வழிபட நன்மைகள் பெருகும்.
11/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
Rashmika Mandanna, is an Indian film actress and model who works predominantly in Telugu and Kannada films. She is popularly dubbed by the media and Kannada film industry as the ‘Karnataka Crush’.
Jagame Thandhiram; ஜகமே தந்திரம் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) படம் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தனுஷ், காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுக்கோட்டை, யாரடி நீ மோகினி, மாரி, மாரி 2 ஆகிய படங்களில் வரிசையாக நடித்துள்ளார்.
அண்மையில், அசுரன், பட்டாஸ் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், தற்போது ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சுருளி He is coming soon என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அது டீசரா? இல்லை டிரைலரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் அது தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் என்றும், அவரது அடுத்த போஸ்டர் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.
எனினும், ஜகமே தந்திரம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டும், தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அன்றைய தேதியில், ஜெயம் ரவியின் பூமி, சூர்யாவின் சூரரைப் போற்று, விஷாலின் சக்ரா ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.
கோவையில் குண்டு வீச்சு கலாச்சாரம் அரங்கேறி வருகிறது. இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. கோவை வடகிழக்கு டெல்லியாக மாறிவிட்டதா?
கோவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் போராடுவோர்கள் மாறிமாறி சண்டை போட்டு சேதங்களை உண்டாக்கி வருகின்றனர்.
மதுக்கரை ஒன்றியச்செயலாளர் ஆனந்தன் மீது கடந்த வாரம் மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தினர்.
அதே தினத்தின் ஆட்டோவில் பயணித்த இஸ்லாமியர்கள் மீது அடிதடி நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் கணபதி அருகிலுள்ள பள்ளி வாசல் மீதும் பெட்ரோல் குண்டு வீசினர். ஆனந்தன் மீதான தாக்குதலுக்கு கடந்த 7-ஆம் தேதி கோவையில் சில இடங்களில் கடை அடைப்பை நடத்தினர்.
அதே தினத்தில் இஸ்லாமியர்களும் கடை அடைப்பை நடத்தினர். இவ்வாறு இரு தரப்பினர் இடையே பிரச்சனை வலுத்துக்கொண்டு இருந்தது.
கடந்த 8-ஆம் தேதி வி.ஹெச்.பி பிரமுகர், 9-ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர், பி.ஜே.பி அமைப்பு சாரா தொழிற்சங்கத் தலைவர் கார்த்தியின் ஆட்டோ அடுத்தடுத்து மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர்.
மேலும் இந்து முன்னணி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் ஓய்வதற்குள் எஸ்.டி.பி.ஐ கட்சி கோவை மாவட்டச் செயலாளர் இக்பால் மீது மர்மநபர்கள் இன்று மதியம் தாக்கியுள்ளனர்.
இந்த தொடர் தாக்குதலால் இந்து முஸ்லிம் தரப்பினரிடம் போராட்டங்கள் வலுத்தன. இதனால் கோவையில் பதற்றம் அதிகரித்தது.
போலீஸ் துணை ஆணையர் பாலாஜி சரவணன் கூறியதாவது
தனிமனிதர்கள் யாரும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்கள் எந்த அச்சமும் இல்லாமல், தங்களது பணிகளைத் தொடரலாம்.
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு காவல்துறை மூலம் தீர்வு காண்பதே சரியான வழி. மத ரீதியாகப் பதற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
இதனிடையே கோவையில் பாதுகாப்பு பணியில் 1000க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வாத்தி லிரிக் வீடியோ (Vaathi Lyric Video) வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாத்தி லிரிக் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master). கல்வித்துறையில் நடக்கும் ஊழல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இவரது இசையில், சமீபத்தில் மாஸ்டர் முதல் சிங்கிள் டிராக் குட்டி ஸ்டோரி பாடல் லிரிக் வீடியோ வெளியானது.
உலகம் முழுவதும் குட்டி ஸ்டோரி பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
வாழ்க்கையில், நடக்கும் உண்மையை மையப்படுத்தி இப்பாடல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
குட்டி ஸ்டோரி பாடலைத் தொடர்ந்து மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வாத்தி லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
வாத்தி லிரிக் வீடியோ (Vaathi Lyric Video)
வாத்தி கம்மிங் ஒத்து என்று இந்தப் பாடல் தொடங்குகிறது. அண்ணன் வந்தா ஆட்டம் பாம் டும்மு… பிளு பிளு பிளு பிளாம்மி….என்று வாத்தி பாடல் வரிகள் அமைந்துள்ளது.
இந்தப் பாடலின் போது விஜய், மாணவர்கள் ஆகியோர் நடனம் ஆடுகின்றனர். இவர்களுடன் இணைந்து கானா பாலசந்தர் மற்றும் அனிருத் ஆகியோரும் டான்ஸ் ஆடுகின்றனர்.
மாணவர்களுக்கும், வாத்திக்கும் இடையில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
வாத்தி பாடலுக்கு கானா பாலசந்தர் பாடல் வரிகள் அமைத்துள்ளார். கானா பாலசந்தர் மற்றும் அனிருத் ஆகியோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர்.
இதற்கு முன்னதாக கமல் ஹாசன் நடிப்பில் வந்த நமம்வர் படத்தில் இடம்பெற்றுள்ள எதிலேயும் வல்லவன் டா என்ற பாடலின் உல்டா போன்று இந்தப் பாடல் இருக்கும் என்று தோன்றுகிறது.
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போதே இப்படம் கமல் ஹாசன் நடித்த நம்மவர் படத்தின் ரீமேக் என்று தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் குறித்து அப்டேட் வருவது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.
மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியான பிறகு மாஸ்டர் டிரைலர் குறித்து அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மாஸ்டர் இசை வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்க இருக்கிறது என்றும், சன் டிவி நிறுவனம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை நேரலை செய்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுவதை காண்பதற்கும், கேட்பதற்கும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர்.
தற்போது விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இன்னும், 5 நாட்கள் உள்ள நிலையில், அவர் அதற்குள்ளாக சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, விஜய், தளபதி65 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக கூறப்பட்டது.
எனினும் இது குறித்து அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Asuraguru Sneak Peek; அசுரகுரு ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள அசுரகுரு படத்தின் ஸ்னீக் பீக் (Asuraguru Sneak Peek) வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மகீமா நம்பியார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரகுரு (Asuraguru).
ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் வரும் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இதனை முன்னிட்டு தற்போது அசுரகுரு ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், வங்கிக்குள் நுழையும் விக்ரம் பிரபு, முதலில் கேமராவை சேமர் மூலமாக செயலிழக்கச் செய்கிறார்.
அதன் பிறகு வங்கியில் பணம் எடுப்பது போன்று அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்.
இறுதியில், ஒரு அறையில் துளையிட்டு நூதன முறையில் வங்கி பணத்தை கொள்ளையடிக்கிறார்.
இது ஒரு புறம் இருக்க, மகிமா நம்பியார், திருட்டுச்சாவி மூலம் விக்ரம் பிரபு வீட்டிற்குள் நுழைகிறார்.
விக்ரம் பிரபு வங்கியில் கொள்ளையடிப்பதற்கு போட்டுவைத்த திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்கிறார்.
இதற்கிடையில், வங்கி ஊழியர் பாதுகாப்பு அறைக்குள் நுழைந்து பணத்தை எடுக்க முயற்சிகிறார். ஆனால், அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
அப்படியே அசுரகுரு ஸ்னீக் பீக் முடிகிறது. ஆனால், விக்ரம் பிரபு பணம் முழுவதையும் கொள்ளையடித்தாரா இல்லையா? ஏன் வங்கிக்கு வந்தார்? என்பது போன்ற கேள்விகளுடன் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணேஷ் ராகவேந்திரா படத்திற்கு இசையமைத்துள்ளார். அசுரகுரு படத்தில் விக்ரம் பிரபு உடன் இணைந்து யோகி பாபு, சுப்பாராஜூ ஆகிஹ்யோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.