Home Blog Page 228

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரித்து வர்மாவிற்கு இன்று பிறந்தநாள்!

0
Ritu Varma Birthday

Ritu Varma; ரித்து வர்மா இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தனுஷ் நடிப்பில் வந்த வேலையில்லா பட்டதாரி 2 (VIP 2) படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரித்து வர்மா.

அனிதா கன்ஸ்ட்ரக்‌ஷன் உரிமையாளர் ராம்குமார் (எம்ஜேஸ்ரீராம்). அனிதாவின் தந்தை.

இவரது கன்ஸ்ட்ரக்‌ஷனில் தான் ரகுவரன் (தனுஷ்) இன்ஜினியராக வேலை பார்ப்பார். இவரை விலைக்கு வாங்க வசுந்தரா (கஜோல்) முயற்சி செய்வார். ஆனால், அது முடியாமல் போய்விடும்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்து வர்மா.

இப்படத்தைத் தொடர்ந்து அண்மையில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் மீரா/மதுமிதா/இஸிதா ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (Kannum Kannum Kollaiyadithaal) படத்தை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் துல்கர் சல்மான், ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன், கௌதம் மேனன், அனிஷ் குருவில்லா ஆகியோர் நடித்துள்ளனர்.

துல்கர், ரக்‌ஷன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆன்லைனில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கி அதில் திருட்டுத்தனம் செய்து பணம் சம்பாதித்து வந்தனர்.

ரித்தி வர்மா, வீடு வீடாக சென்று பியூட்டிசியன் வேலை செய்பவர். இவரை துல்கர் காதலிக்க, ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர்.

ரித்து வர்மாவின் தோழி நிரஞ்சனியை ரக்‌ஷன் காதலிக்கிறார். ஆனால், இருவருமே தாங்கள் செய்யும் திருட்டுத்தனம் குறித்து காதலிகளிடம் தெரிவிக்கவில்லை.

ஒருகட்டத்தில் திருட்டுத்தனத்தை விட்டுவிட்டு, கோவா சென்று ஹோட்டல், பியூட்டி பார்லர் வைத்து செட்டிலாகலாம் என்று முடிவு செய்து கோவா செல்கின்றனர்.

அவர்களுடன் ரித்து வர்மா, நிரஞ்சனி ஆகியோருடம் செல்கின்றனர்.

இதற்கிடையில், டிஜிபியான கௌதம் மேனன் அவர்களை தேடி கோவா வருகிறார்.

ஆனால், அவர் வருவதற்கு முன்னரே  துல்கர், ரக்‌ஷன் வைத்திருக்கும் பணத்தை எடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர்.

அதன் பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து ரக்‌ஷன், துல்கர் என்ன செய்கிறார்கள்? நிரஞ்சனி, ரித்துவை கவுதம் மேனன் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் 2 ஆம் பாகமும் உருவாக இருப்பதாக இயக்குநர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இப்படத்திற்கு ரித்து வர்மாவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே கூறலாம்.

தமிழைத் தவிர தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ரித்து வர்மா இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படக்குழுவினரும் ரித்து வர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனவர்.

அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாங்களும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.

3

உயிரை பதம் பார்க்கும் பாக்கெட் உணவுகள்

0
பாக்கெட் உணவுகள்

உயிரை பதம் பார்க்கும் பாக்கெட் உணவுகள்

அதிகம் பதப்படுத்தபட்ட  உணவுகளால் உயிர் அபாயம் நேரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்

இன்றைய நவீன உலகத்தில் அனைத்து உணவுகளும் பதப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே .

கோழியிறைச்சி  ,ஐஸ் க்ரீம் ,காலை உணவுக்கான தானியங்கள் ,போன்ற அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மனிதனின் சராசரி ஆயுள் குறைவதற்கு காரணமாகின்றன .

தொழிற்சாலைகளில் எந்த அளவுக்கு உணவு பதப்படுத்த படுகிறது என்பதை பொறுத்து  உணவுகள்  வகைப்படுத்த படுகின்றன

குறைந்த கலோரி உணவு:

குறைந்த கலோரி உணவு என்பது பதப்படுத்த அல்லது குறைந்தபட்ச அளவு பதப்படுத்திய உணவுகள் ஆகும்.

அவற்றில் பழங்கள் ,காய்கறிகள் ,பால் ,இறைச்சி ,அவரை வகை காய்கறிகள் ,அரிசி ,முட்டை  போன்ற உணவு தானியங்கள் அடங்குகின்றன .

பதப்படுத்திய உணவுகள்:

பதப்படுத்திய உணவுகள் என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க  அல்லது அதிக சுவை தருவதற்காக  கூடுதல் வேதியல் சார்ந்த கலவைகள் கலக்கப்பட்ட உணவுகள் ஆகும்.

பொதுவாக எண்ணெய் , சர்க்கரை ,உப்பு போன்றவைகளை பயன்படுத்தி நொதித்தல் முறையில் பதப்படுத்துவது ஆகும்.

இந்த வகையில்  பாலாடைக்கட்டி, உலர்ந்த இறைச்சி, ரொட்டி துண்டுகள் ,டின்களில் அடைக்கப்பட்ட குடிநீர் பானங்கள் ,உலர்ந்த பழங்கள், காய்கறிகள்,  மீன்கள் போன்றவை அடங்கும் .

அதிகம் பதப்படுத்திய உணவு:

மேற்சொன்ன இரண்டு வகைகளை விட அதிகம் பதப்படுத்திய உணவு வகைகளும் மக்களிடம் உபயோகத்தில் உள்ளன.

அதாவது சுவைக்காகவும் கேட்டு போகாமல் இருக்கவும் கூடுதலாக இனிப்பூட்டிகள் அல்லது  நிறமேற்றிகள் போன்றவை அடங்கும்

உணவு வகைகளில் ஐந்திற்கும் மேற்பட்ட கூடுதல் பொருட்கள் கலந்திருந்தால் அவை அதிகம் பதப்படுத்திய உணவு வகைகளில் அடங்கும் என்று ஸ்பெயின் நவ்வுரா பல்கலைக்கழக பேராசிரியர் மைரா பேஸ் ரெஸ்பியின்ஸ்டரோலா கூறுகிறார் .

இந்த ஆய்வில் சுமார் 19  ஆயிரத்து 899 பேர் பத்தாண்டு காலம் கவனிக்கப்பட்டு ஒவ்வோராண்டும் சோதனை முடிவுகள் பெற பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன .

சாப்பிடாதோர் இறப்பு:

ஆய்வு முடிவுகளின் படி அதிகம் பதப்படுத்திய உணவு வகைகளை சாப்பிட்டோருடன் ஒப்பிடுகையில் அதிகம் பதப்படுத்தியதை சாப்பிடாதோர் இறப்பு  சுமார் 4  மடங்கு குறைவாக  உள்ளது .

பாரிஸ் பல்கலை கழகம் நடத்திய ஆய்வில் சுமார் ஒருலட்சத்து 5 ஆயிரம்  பேர்  பங்கேற்றனர்.

 இதய நோய்:

அதன்படி பெற பட்ட சோதனை முடிவுகளில் அதிகம் பதப்படுத்திய உணவு வகைகளை உட்கொண்டோரில் சுமார் 277  பேருக்கு இதய நோய் இருப்பது கண்டறிய பட்டுள்ளது  என்று பாரிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர்  மதில்டே டவியர்  கூறுகிறார் .

பதப்படுத்த பட்ட உணவு குறித்த ஆய்வுகள்  நடைபெற்று  கொண்டிருக்கின்றன , இயற்கை உணவுகளை உண்பதை நாமும் நம்முடைய தலைமுறையினரும் வழக்கமாக்கி கொள்வோம்.

3

ஆர்யா சிறந்த கணவர்: சாயிஷா மகிழ்ச்சி டுவீட்!

0
Arya Sayyeshaa Wedding Anniversary

Arya Sayyeshaa Wedding Anniversary; ஆர்யா – சாயிஷா தம்பதியினர் இன்று தங்களது முதல் திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

ஆர்யா – சாயிஷாவின் முதல் திருமண நாளை முன்னிட்டு அவர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில், இருவரது நடிப்பில் உருவாகியுள்ள டெடி டீசர் (Teddy Teaser) வெளியாகியுள்ளது.

நான் கடவுள், ராஜா ராணி, ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகர் ஆர்யா.

இவர், வனமகன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயிஷா சைகலை கஜினிகாந்த் படத்தின் வாயிலாக காதலித்து வந்துள்ளார்.

Arya Sayyeshaa Wedding

ஆர்யா – சாயிஷா காதலுக்கு இரு வீட்டாரும் ஓகே சொல்ல, கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 9, 10 ஆம் தேதிகளில் ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் (Arya Sayyeshaa Wedding) சிறப்பாக நடந்தது.

ஆர்யா – சாயிஷா திருமண நிகழ்ச்சியில், விஷால், சூர்யா, கார்த்தி ராணா டகுபதி, அல்லு அர்ஜூன், சஞ்சய் தத், ஆதித்யா பஞ்ஜோலி, குஷி கபூர் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Arya Sayyeshaa Wedding Reception

இதையடுத்து, சென்னையில் மார்ச் 14 ஆம் தேதி ஆர்யா – சாயிஷா திருமண வரவேற்பு (Arya Sayyeshaa Wedding Reception) நிகழ்ச்சி நடந்தது. இதில், கோல்வுட் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிலையில், ஆர்யா – சாயிஷா தம்பதியினர் திருமணம் செய்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, ஆர்யா – சாயிஷா ஜோடி இன்று தங்களது முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

சாயிஷா டுவிட்

தங்களது முதல் திருமண நாளை முன்னிட்டு சாயிஷா, திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: முடிந்தவரை எல்லா வழிகளிலும் என்னுடன் ஓராண்டை நிறைவு செய்தவருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனைகூட செய்ய முடியாது ஜான்.

https://platform.twitter.com/widgets.js

அன்பு, உற்சாகம், நிலைப்புத்தன்மை மற்றும் தோழமை எல்லாமே ஒரே நேரத்தில் கிடைத்தது.

இப்போது மட்டுமல்ல எப்போதும் உன்னை நேசிக்கிறேன். ஐ லவ் யூ. சிறந்த கணவர் என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்யா – சாயிஷாவின் திருமண நாளை முன்னிட்டு அவர்களது நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தின் டீசர் (Teddy Teaser) வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

பேஸ்புக்கின் முதல் பயனாளர் மார்க் ஜுகர்பெர்க் இல்லையா ?

0

முதல் பேஸ்புக் பயனாளர் யார் தெரியுமா? Facebook

5 மில்லியன் டவுன்லோட்

2014-ம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி அதாவது 16 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய தான் ஃபேஸ்புக்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2.50 பில்லியன் பயனாளர்கள் செயலில் உள்ளனர்.

கூகுள் பிளே ஸ்டோரில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பேஸ்புக்கை டவுன்லோட் செய்துள்ளனர்

நிறுவனர்

பேஸ் புக் மார்க் சுக்கர்பெர்க் என்பவரால் நிறுவப்பட்டது முதன்முதலில் அமெரிக்காவின் ஆன்லைன் சமூக ஊடகமாக இருந்து வந்தது, பின்பு உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வந்து மிகப்பெரிய சமூக வலைத்தளமானது.

தற்போது இணையதளம் உள்ள அனைத்து கைபேசியிலும் கண்டிப்பாக பேஸ்புக் செயலி இருக்கும்.

பேஸ்புக்கின் நன்மைகள்

இன்றைய இளைஞர்கள் மத்தியில் தன் கருத்தை சுதந்திரமாகவும், தன்னுரிமைகளை சுதந்திரமாகவும் நாட்டு நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளவும்,

அரசியல், விளையாட்டு, சினிமா, உலகத்தில் நடக்கும் பல சுவாரசியமான விஷயங்கள் அறிந்து கொள்ளவும், இது போன்றவற்றை விமர்சனம் செய்யவும், பெருமை போற்றுவோம் உதவுகிறது.

இந்தியா நம்பர் 1

2008 ஆம் ஆண்டு 100 மில்லியன் பயனாளர்களின் கடந்து, 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 500 மில்லியன் பயனாளர்களை தொட்டது.

2017 ஆம் ஆண்டு 2 மில்லியன் பயனாளர்களை தாண்டியது. அக்டோபர் மாதம் 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஃபேஸ்புக் அதிக பயனாளர்களை கொண்ட நாடு இந்தியா.

ஆசியா மற்றும் பசிபிக் 947 மில்லியன், ஐரோப்பா 381 மில்லியன்,  அமெரிக்கா மற்றும் கனடா 647 மில்லியன்  மற்றும் அதனை நாடுகளில் பயனாளர்கள் 750 மில்லியன் ஆகும்.

பேஸ்புக்கில் சந்தோசங்கள்

நாம் பள்ளி நண்பர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள், நம் கடந்த கால நண்பர்களை தொடர்பில் வைத்துக்கொள்ள பேஸ்புக் பெரிதாக பயன்படுகிறது.

நாம் என்றோ தவறவிட்ட முக்கிய நண்பர்களை தேடவும் நமக்குப் புதிதாக நண்பர்களே தேடவும் ஃபேஸ்புக் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஃபேஸ்புக் இன்று மக்கள் சுலபமாக தொடர்பு கொள்ளவும், தன் சந்தோசம் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்ளவும் மட்டுமில்லாமல் தற்போது மக்கள் வணிகம் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

இவர்தான் முதல் பயனாளர்

ஃபேஸ்புக் தொடங்கும்போது முதல் பயனாளர் யார் என்றால்? எம்டி (empty), எம்டி, எம்டி 3 பெயர் கொண்ட பயனாளர்கள்,  பேஸ்புக்கில் சோதனை செய்வதற்காக இந்த பெயரில் பயனாளர்கள் உருவாக்கி சோதனை செய்துள்ளனர்.

நான்காவதாக தான் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்,  ஐந்தாவதாக துணை நிறுவனர் கிரீஸ் ஹீயுக்ஸ் ஆவார்.

ஆறாவது பயனாளராக டஸ்டின் மோஸ்கோவிட்ஸ், இவரும் ஃபேஸ்புக்கில் மற்றும் ஒரு துணை நிறுவனர் ஆவார்

கிரிஸ் ஹுயுக்ஸ்  மற்றும் டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் இருவரும் மார்க் சுக்கர்பெர்க் க்கு அறை நண்பர்கள் அவர்கள்.

3

திருமண நாளுக்கு ட்ரீட் கொடுத்த டெடி டீசர்!

0
Arya Teddy Teaser

Teddy Teaser; ஆர்யா, சாயிஷா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ஆர்யா – சாயிஷாவின் முதலாவது திருமண (Arya Sayyeshaa First Wedding Anniversary) நாளுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில், டெடி டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் டெடி.

திருமணத்திற்குப் பிறகு ஆர்யா – சாயிஷா (Arya Sayyeshaa) இருவரும் முதல் முறையாக இந்தப் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

ஏற்கனவே டெடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (Teddy First Look) போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது டெடி டீசர் வெளியாகியுள்ளது.

 

ஆர்யா – சாயிஷா தம்பதியினர் இன்று தங்களது முதலாவது திருமண நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு திருமண நாள் ட்ரீட் கொடுக்கும் வகையில், டெடி டீசர் (Teddy Teaser) வெளியிடப்பட்டுள்ளது.

டெடி டீசர் (Teddy Teaser)

இந்த டீசரில் ஆர்யா ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார். முதலில் சுவிட்சர்லாந்து வாட்ச் மற்றும் லோக்கல் வாட்ச் ஒப்பீடு நடக்கிறது. அதன் பிறகு ஆர்யா வீட்டிற்கு டெடி பியர் வருகிறது. இதைப் பார்த்து கருணாகரன் அதிர்ச்சியடைகிறார்.

ஆனால், அது சாயிஷாவாக இருக்குமோ என்று நமக்கு கேள்வி எழுகிறது. ஏனென்றால், டெடி பியர் ஆர்யாவிடம் பேசும் விதம் அப்படித்தான் தோன்றுகிறது.

இந்தியாவில் இருந்து கடத்தப்படும் பெண்களை மீட்கும் பணியில் ஆர்யா ஈடுபட்டு வருகிறார்.

இடையில் ஒரு காட்சியில் ஆர்யா – சாயிஷா ரொமான்ஸ் காட்சி. இறுதியில், டெடி பியர் உயரத்தில் இருந்து குதிக்கிறது. அப்படியே டெடி டீசர் முடிகிறது.

இப்படம் குறித்து சக்தி சௌந்தர்ராஜன் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தில் டெடி பியர் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரம். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாகவே டெடி பியர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

டெடி பியர் சண்டையிடும் ஒரு கதாபாத்திரமாக நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆதால், இந்தப் படத்தின் மூலம் டெடி பியர் அதிகளவில் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள என் இனிய தனிமையே பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

திருமண நாள் கொண்டாட்டத்தில் ஆர்யா – சாயிஷா ஜோடி!

0
Arya Sayyeshaa First Wedding Anniversary

Arya Sayyeshaa First Wedding Anniversary; ஆர்யா – சாயிஷா தம்பதியினர் இன்று தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

அவர்களுக்கு மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்யா – சாயிஷா திருமணம் (Arya Sayyeshaa Wedding Anniversary) செய்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதனை இருவரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா (Arya).

உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, நான் கடவுள், மதராசபட்டினம், ராஜா ராணி, ஆரம்பம் என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

இதே போன்று வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா சைகல் (Sayyeshaa Saigal).

வனமகன் படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

இதையடுத்து, கஜினிகாந்த் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஆர்யா முன்னணி ரோலில் நடித்திருந்தார்.

ரொமாண்டிக் காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஆர்யாவின் அப்பா ரஜினியின் தீவிர ரசிகர்.

ஆதலால், ஆர்யாவிற்கு ரஜினி என்ற கஜினிகாந்த் என பெயர் வைத்திருப்பார்.

ஆனால், ஆர்யாவின் டைவர்ஷன் மறதியால் அவருக்கு பெண் கொடுக்க பலரும் மறுக்கிறார்கள்.

இந்த நிலையில், சாயிஷாவின் அப்பா சம்பத் ராஜ் ஆர்யாவை பார்க்க வருகிறார்.

தனது ஞாபக மறதியால், சாயிஷாவின் அப்பாவை நீண்ட நேரமாக காக்க வைக்க, அவரோ ஆத்திரமடைந்து அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்.

அதன் பிறகு ஆர்யா, சாயிஷாவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சம்பத் ராஜின் மகள் தான் சாயிஷா என்பது ஆர்யாவிற்கு தெரியவருகிறது.

இறுதியில் என்ன நடந்தது என்பதே மீதிக் கதை. இப்படத்தின் மூலமாக இருவரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் நிஜத்திலும் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

சாயிஷா மும்பையைச் சேர்ந்தவர் என்பதால், ஹைதராபாத்தில் 9 மற்றும் 10 ஆகிய தேதிகள் ஆர்யா – சாயிஷா (Arya Sayyeshaa Wedding) திருமணம் நடந்தது.

இவர்களது திருமண நிகழ்ச்சியில் சஞ்சய் தத், ஆதித்யா பஞ்ஜோலி, குஷி கபூர், அல்லு அர்ஜூன், விஷால், ராணா டகுபதி, சூர்யா, கார்த்தி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 14 ஆம் தேதி சென்னையில் ஆர்யா – சாயிஷா திருமண வரவேற்பு (Arya Sayyeshaa Wedding Reception) நிகழ்ச்சி நடந்தது.

கோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது ஆர்யா – சாயிஷா (Arya Sayyeshaa First Wedding Anniversary) திருமணம் செய்து கொண்டு ஓராண்டு ஆன நிலையில், இன்று தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

அவர்களுக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் ஆர்யா – சாயிஷா தம்பதியினருக்கு நாங்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருமணத்திற்குப் பிறகு ஆர்யா – சாயிஷா இருவரும் சூர்யா நடிப்பில் வந்த காப்பான் படத்தில் நடித்திருந்தனர்.

ஆனால், அந்தப் படத்தில் சாயிஷா, சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து ஆர்யா, சாயிஷா நடிப்பில் டெடி படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், இருவரும் இணைந்து ஜோடியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் டீசர் ஆர்யா – சாயிஷாவின் முதலாவது திருமண நாளை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

எனக்கு பிடித்த இந்திய கிளாஸ் பேட்ஸ்மேன் இவர்தான் – பிரைன் லாரா

0
பிரைன் லாரா

எனக்கு பிடித்த இந்திய கிளாஸ் பேட்ஸ்மேன் இவர்தான் – பிரைன் லாரா

இந்திய அணியில் கடந்த சில காலங்களாகவே சிறப்பாக விளையாடி வரும் வீரர் கே.எல். ராகுல்.

நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில் அற்புதமாக விளையாடிய ராகுல், டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை.

இவர் மட்டுமே நிலையான ஆட்டத்தை நியூசிலாந்தில் விளையாடி வந்தார். வீக்கெட் கீப்பிங் வேலையையும் திறம்பட செய்தார்.

லிஜென்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் லாரா நேற்று நிருபர்களுக்கு போட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியது ”

தனி கிளாஸ் ரகமாக பேட்டிங் செய்யும் கே.எல். ராகுல் தான் எனக்கு பிடித்த இந்திய பேட்ஸ்மேன்.

அவருடைய பேட்டிங்கை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த பொழுதுபோக்கு வீரர்.

தற்போது விராட் கோலி உலகின் சிறந்த வீரர் என்றாலும் எனக்கு கே.எல்.ராகுல் தான் எனக்கு பிடித்த வீரர். இவர் டெஸ்ட் அணியில் இடம் பெறாதது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.

அவர் உத்தியாக பேட்டிங் செய்யும் விதம் நிச்சியமாக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருக்க வேண்டும் என்பதே நான் பார்க்கிறேன்.

அனைத்து வடிவங்களிலும் விளையாடும் திறமை ராகுலுக்கு உள்ளது. எந்த ஒரு இந்திய அணியாக இருந்தாலும் விராட் கோலிக்கு அடுத்த பெயராக ராகுல் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்” என்று கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த இந்திய லிஜென்ட் அணியிடம் வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் அணி தோல்வி அடைந்தது குறிப்பிடதக்கது.

3

ஷாபாலி வர்மாக்கு பிரெட் லீ ஆறுதல்

0
ஷாபாலி வர்மாக்கு பிரெட் லீ

ஷாபாலி வர்மாக்கு பிரெட் லீ ஆறுதல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த ஏழாவது உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

லீக் போட்டிகளில் தோற்காத இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் மழை காரணமாக பள்ளி போட்டியில் முதலிடம் பிடித்ததால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியாவில் டிஎல் முறைப்படி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி சுலபமாக வென்றது. இந்திய அணி பந்து வீச்சு அந்தப் போட்டியில் பலமாகவே இருந்தது.

இறுதிப் போட்டியில் இந்திய அணி இந்த விதத்திலும் வலுவாகவே விளையாடவில்லை. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் கோட்டை விட்டது.

முதல் ஓவரின் 3-வது பந்தில் அலிசா ஹீலி தூக்கி அடித்த பந்தை ஷாபாலி வர்மா கேட்சை தவறவிட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அலிசா ஹீலி 39 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார்.

லீக் போட்டிகளில் அற்புதமாக விளையாடிய ஷாபாலி வர்மா இறுதிப் போட்டியில் முதல் ஓவரில் மூன்றாவது வயதிலேயே தனது விக்கெட்டை இழந்தார்.

இந்திய அணி தோல்வி அடையும்போது ஷாபாலி வர்மா கண்ணீர் விட்டு அழுதது, பார்க்கும் அனைவரின் கண்ணில் நீர் வர வைத்தது.

அவருக்கு ஆறுதலாக நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரெட் லீ “இறுதிப்போட்டியில் ஷாபாலியை நான் உணர்ந்தேன், அவரைப் பார்க்கவே கடினமாக இருந்தது.

அவர் ஆஸ்திரேலியாவில் விளையாண்ட விதம் குறித்து அவர் பெருமை படவேண்டும், அவர் இங்குள்ள மைதானங்களில் எதிர் அணியை எதிர்கொண்டது திறமை மற்றும் மன வலிமைக்கு சான்றாகும்.

இவர் இங்கிருந்து சிறப்பாக முன்னேற போகிறார் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவே குறிப்பிட்டுள்ளது. இந்த அனுபவத்தில் இருந்து மீண்டும் ஷாபாலி வர்மா வலுவாக வருவார்.

இது போன்ற தருணங்களில் அவரை நேர்மையானவராக வரையருக்கக்கூடும், மீண்டும் ஷாபாலி ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது அதிக ரன்களைக் குவித்தால் ஆச்சரியப்பட வேண்டாம்” என்று பேசியுள்ளார்.

3

தமிழனை சீண்டிய ஹர்பஜன் சிங்

0

தமிழனை சீண்டிய ஹர்பஜன் சிங்

வருகிற மார்ச் 29ம் தேதி தொடங்க உள்ள 13வது ஐபிஎல் போட்டிக்கு பல அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்

சென்னையில் தோனி, ரெய்னா, அம்பதி ராயுடு, பியூஸ் சாவ்லா, ஹர்பஜன்சிங் போன்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

தல தோனி பதிவு செய்ய பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் மைதானத்திற்கு தினமும் குவிந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் தென்னாபிரிக்கா உடன் மோத உள்ள இந்திய அணி 15 பேர் கொண்ட வீரர்களை அறிவித்தது. அதில் 20 வயது இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்திருந்தார்.

ஹர்பஜன் சிங் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியது ‘ அடையாளம் காண இந்திய அணி மறுப்பது ஏன்? சலஜ் சக்சேனா, அக்ஷய் வகாரே போன்ற வீரர்களை புறக்கணித்து ஏன்?

பந்தை சுழற்ற கூட தெரியாதா வாஷிங்டன் சுந்தரை மீண்டும் மீண்டும் அணியில் சேர்ப்பது தவறான ஒன்று, சல்ஜ் சக்சேனா சுந்தரை விஞ பேட்டிங் மற்றம் பந்துவீச்சில் சிறப்பாகவே செயல்படுகிறார்’ என கூறியுள்ளார்.

வாசிங்டன் சுந்தர் தமிழகத்தைச் சேர்ந்தவர், 17 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்து 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகி விளையாடி வருகிறார்.

வாஷிங்டன் சுந்தர் தான் முடிந்தளவு சிறப்பாகவே விளையாடி வருகிறார் அவரை ஹர்பஜன் தற்போது சீண்டி உள்ளார்.

3

கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி; கொரோனா பாதிக்காது என நினைத்து

0
கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி
கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் காலி

கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி; கொரோனா பாதிக்காது என நினைத்து

உலகத்தில் ஒரு லட்சத்திற்கு பத்தாயிரத்திற்கும் மேலான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 4000க்கும் மேற்பட்ட உயிர் பழி ஆகியுள்ளது.

இந்நிலையில் ஈரானில் பாதுகாப்பிற்காக சிறைக்கைதிகளை விடுவிக்கலாம் என முடிவு செய்துள்ளது ஈரான் நாடு. இந்த நேரத்தில் ஆல்ககால் அருந்தினால் கொரொனா பரவாது என வதந்தி பரவியதாம்.

காலாச்சாரயம் அருந்திய குசெஸ்தான் மற்றும் அல்பார்ஸ் பகுதிகளில் மதுஅருந்திய 27 பேர் உயிரிழந்தனர். 218 பேர் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்த சாராயம் குடித்ததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

3