Home Blog Page 229

Ban vs Zim 1st t20; முதல் டி20 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி

0

Ban vs Zim 1st t20; முதல் டி20 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி

வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுளள ஜிம்பாப்வே அணி மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்களில் விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

முதலில் நடந்த ஒரு நாள் தொடரில் வங்கதேசத்திடம் ஒயிட்வாஷ் ஆனது.  டாக்காவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே மறுபடியும் ஒருநாள் போட்டியில் செய்த தவறை டி20 முதல் போட்டியிலும் செய்தது.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி இருக்கலாம்.

தமிம், தாஸ் மீண்டும் அதிரடி

வங்கதேசம் அணி தொடக்க ஆட்டகாரர்களாக தமிம் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினார்கள்.
இருவரும் இணைந்து நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் நான்கு சதங்கள் அடித்தார்கள்.

அதே நிலைமை தான் இந்த போட்டியிலும் நடந்தது. முதல் விக்கெட்டை பிரிக்கவே ஜிம்பாப்வே அணிக்கு மிகவும் சிரமமாகவே உள்ளது.

10.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி.

200 ரன்கள் வங்கதேசம்

வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சௌமிய சர்கார் 62, தாஸ் 59, தமிம் 49, ரஹிம் 17, முகமதுல்லா 14 ரன்கள் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் ராசா மற்றும் மஞவேறே தலா ஒரு வஇக்கெட்டும் வீழ்த்தினர்.

ஜிம்பாப்வே தோல்வி

இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி  19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தது.

ஜிம்பாப்வே அதிகபட்சமாக கமுங்கூகம்வே 28 , மும்பா 25, திரிபானோ,  வில்லியம்ஸ் மற்றும் முடுபம்பி தலா 20 ரன்கள் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் முஸ்தாபிகுர் மற்றும் இஸ்லாம் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் விருதை 62 ரன்கள் எடுத்த சௌமிய சர்கார் வாங்கினார்.

ஜிம்பாப்வே பலவீனம்

ஜிம்பாப்வே அணி பலம் வாய்ந்த அணி தான் கேப்டன் எடுக்கும் சில தவறாலே வங்கதேசதிடம் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்கிறது.  பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் கூடுதல் கவனம் தேவை.

இர்ணடாவது மற்றும் கடைசி டி20 போட்டி இதே மைதானத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

3

காவல்துறை உங்கள் நண்பன்: ராணி தேனி பாடல் வெளியீடு!

0
காவல்துறை உங்கள் நண்பன்

காவல்துறை உங்கள் நண்பன்: ராணி தேனி பாடல் வெளியீடு!

Kavalthurai Ungal Nanban Songs; காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் ராணி தேனி பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

ராணி தேனி பாடல் (Rani Theni Lyric) லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

சும்மா பேருக்கு நாம் எல்லோரும் சொல்வது காவல்துறை உங்கள் நண்பனென்று. ஆனால், உண்மையில் அப்படியா என்று கேட்டால் 100க்கு 99 சதவிகிதம் பேர் இல்லை என்று தான் சொல்வார்கள்.

மாறாக, காவல்துறை உங்கள் எதிரி என்று வேண்டுமென்றால் கூறிக்கொள்வோம். இந்த நிலையில், காவல்துறை உங்கள் நண்பன் என்று புதிய படம் உருவாகி வருகிறது.

இயக்குநர் ஆர்டிஎம் (RDM) இயக்கத்தில் விஜே சுரேஷ் ரவி, டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர்.

வழக்கம் போல், சாதாரண ஒரு நடுத்தர இளைஞருக்கும், மோசமான போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் போராட்டமே இப்படம். (Kavalthurai Ungal Nanban Song).

போலீஸ் அதிகாரியாக மைம் கோபி நடித்துள்ளார். இப்படத்தை பிஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் மற்றும் ஒயிட்மூன் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்களின் மூலம் பாஸ்கரன், ராஜபாண்டியன், சுரேஷ் ரவி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ராணி தேனி பாடல் (Rani Theni Lyric)

இப்படத்திற்கு ஆதித்யா – சூர்யா இசையமைத்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ராணி தேனி பாடல் லிரிக் (Kavalthurai Ungal Nanban First Single) வீடியோ வெளியாகியுள்ளது.

இதனை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், படக்குழுவினருக்கு வாழத்து தெரிவித்துள்ளார். ஹரிசரன் இந்தப் பாடலை பாடியுள்ளார். ஞானவேல்ராஜா பாடல் வரிகள் அமைத்துள்ளார்.

வரும் 20 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கே‌ஜி‌எஃப் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு; மே ஐ கம் இன்

0
கே‌ஜி‌எஃப் 2 ரிலீஸ் தேதி
கே‌ஜி‌எஃப் 2 ரிலீஸ் தேதி

கே‌ஜி‌எஃப் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு; மே ஐ கம் இன்

பாகுபலி இரண்டுக்கு பிறகு இந்தியா முழுவதும் பிரபலமாகி இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களால் காத்திருக்கும் படம் பிரசாந்த் நீலின் கே‌ஜி‌எஃப் ஆகும்.

கே‌ஜி‌எஃப் படத்தில் நடித்து மிக பிரபலமான நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். இது அவருக்கு கன்னடா மொழியில் முதல் திரைப்படமாகும்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் முடிந்த அளவிற்கு படத்தை வேகமாக எடுத்துகொண்டிருக்கிறது படக்குழு.

ஐதராபாத்தில் முக்கியமான ஆக்சன் காட்சிகள் எடுத்து முடித்து விட்டனராம். இனிமே இறுதிகட்ட படப்பிடிப்புகள் சில மட்டுமே மீதம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கேஜிஎப் 2: சோன்பத்ரா தங்கச்சுரங்கம் மர்மமான கதை

இதை வைத்து பார்க்கையில் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது. என்பது உறுதியாகியுள்ளது. படக்குழுவிடம் இருந்து உறுதியான தேதி கூறப்படவில்லை.

இருந்தாலும் அக்டோபர் 23ஆம்  தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் துர்கா, ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை வருகிறது வசூலுக்கு நல்லதாக அமையும்.

மேலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை மிகவும் தீவிரமாகவும் நடந்து வருகிறது. இந்த நிலையில் எக்ஸ்கூட்டிவ் ப்ரொடியூசர் கார்த்திக் கௌடா செய்த ட்வீடில் இந்த மாதம் இறுதியில் நல்ல அப்டேட் காத்துக்கொண்டு இருக்கிறது என கூறியுள்ளார்.

3

முகுல் வாஸ்னிக்; 60ஆம் கல்யாணம் இல்லை 60வயதில் தான் கல்யாணமே

0
முகுல் வாஸ்னிக்
முகுல் வாஸ்னிக்; 60ஆம் கல்யாணம் இல்லை 60வயதில் தான் கல்யாணமே காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் மூத்த தலைவரான முகுல் வாஸ்னிக் தன்னுடைய 60ஆம் வயதில் திருமணம்

முகுல் வாஸ்னிக்; 60ஆம் கல்யாணம் இல்லை 60வயதில் தான் கல்யாணமே

காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் மூத்த தலைவரான முகுல் வாஸ்னிக் தன்னுடைய 60ஆம் வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தார்.

தன்னுடைய நீண்ட கால பெண் நண்பரான ரவீனா குரானவை திருமணம் செய்து கொண்டார். ரவீனா குரானா ஒரு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கல்யாணத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் தரப்பில் இருந்து வாழ்த்துகள் பெற்றார் முகுல் வாஸ்னிக்.

மேலும் ராகுல் காந்தி கட்சியில் இருந்து விலக நினைக்கும் பொழுது இவருக்கு தான் தலைமை பொறுப்பு வழங்கலாம் என பேச்சு அடிபட்டது. அந்த அளவுக்கு முக்கியமான தலைவர் ஆவார்.

3

மகள், மகன், மனைவியோடு இருக்கும் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம்!

0
Ajith Family Photo

Ajith Family Photo; அஜித் தனது மகள், மகன், மனைவி என்று குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகள், மகன், மனைவி என்று அஜித் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

எப்போதும் அஜித்தை பொது நிகழ்ச்சிகளில் காணமுடியாது. அவரே வெளியில் சென்றால் தான் அவரை காணமுடியும். இது தல ரசிகர்களுக்கு எப்போதும் வருத்தம் தரக்கூடிய ஒரு விஷயம்தான்.

மீடியாக்களுக்கும், பட புரோமோஷன்களுக்கும் சுத்தமா இல்லவே இல்லை. இந்த நிலையில்தான் மகள், மகன், மனைவி என்று அஜித் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அது வேறு எந்த புகைப்படமும் இல்லை. அண்மையில், ஆத்விக் தனது 6ஆவது (Aadvik Birthday) பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து தனியார் ஹோட்டல் ஒன்றில் கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில், மகள் அனோஷ்கா, மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் ஆகியோருடன் அஜித் கலந்து கொண்டார். இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில், அஜித்தின் நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது கேக்ட் வெட்டும் வீடியோ, புகைப்படம் வைரலானது. இந்த நிலையில்தான் அங்கு அஜித் தனது மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக், மனைவி ஷாலினி (Ajith Family Photo) ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அந்தப் புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் – தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் வலிமை (Valimai) படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் சென்னை படப்பிடிப்பு புகைப்படங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. அதில், அஜித் பைக் ரேஸ் செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து, வலிமை படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்பெயின் நாட்டில் எடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடு படப்பிடிப்பை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்கிறார் என்றும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வரயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

எரிந்து சாம்பலாகிய 50,000 வாக்கு இயந்திரங்கள் என்ன இப்படி ஆகிபோச்சு

0
50,000 வாக்கு இயந்திரங்கள்

எரிந்து சாம்பலாகிய 50,000 வாக்கு இயந்திரங்கள் என்ன இப்படி ஆகிபோச்சு

வெனிசுலா தலைநகரான கராகசில் தனியாக கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 50000 வாக்கு இயந்திரங்கள் தீப்பிடித்து எரிந்தன என அந்நாட்டு தேர்தல் ஆணையும் தெரிவித்துள்ளது.

வாக்கு இயந்திரங்களுடன் சேர்ந்து தேர்தலுக்காகப் பயன்படுத்த வைத்திருந்த 582 கணினிகளும் தீக்கிரையாகி போனதாம். இதனால் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் தேர்தல் தள்ளிபோக வாய்ப்பு இருக்கிறது.

இதனால் தேர்தல் நடப்பதை பற்றி எந்த விட தகவலும் அவர்கள் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தீ விபத்திற்கான காரணம் எண்ணவென்று தெரியவில்லை.

 

3

10/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

10/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

உங்களின் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். சில தடைகள் ஏற்பட்டாலும் முயற்சிகள் இருந்தால் வெற்றி கிடைக்கும்.

பணியில் திட்டமிடல் அவசியம். துணையிடம் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். வரவு செலவுகள் சமமாக இருக்கும். சற்று சோர்வுடன் இருப்பீர்கள்.

முருகனுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் வந்து சேரும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று மிகப்பெரிய மாற்றங்கள் வர வாய்ப்புண்டு. சில கவலைகள் வந்து சேர வாய்ப்புண்டு. பணியிடத்தில் சக ஊழியர்களால் தொல்லைகள் வரும்.

குடும்பத்தில் தான் என்ற அகந்தையை கைவிடல் வேண்டும். பணவரவு திருப்தியாக இருக்காது. தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

அங்காரக பகவானிற்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டு.

மிதுன ராசிபலன்

இன்று உங்கள் லட்சியம் நிறைவேறும். வெற்றிபெறக்கூடய நாளாக அமையும். பணியாளர்கள் நட்புறவு மேம்படும்.

பாராட்டுகள் வந்து சேரும். கணவன் மனைவியிடையே காதல் மேம்படும். பங்கு வர்த்தகத்தில் லாபம் அதிகம் உண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

காளியம்மனை வழிபட கூடுதல் பலன்களை அடைவீர்கள்.

கடக ராசிபலன்

இன்று உங்களின் குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக காணப்படும். வேலை தொடர்பான பயணம் ஏற்படும்.

துணையிடம் பேசும் பொழுது கவனம் தேவை. தன வரவில் சிக்கல் ஏற்படும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

முருகனை விளக்கேற்றி வழிபட நன்மைகள் வந்து சேரும்.

சிம்மம் ராசிபலன்

இன்று பதட்டமான நாளாக அமையும். பணிகளை கையாளும் போது கவனமுடன் இருக்கவும். எதிர்மறை எண்ணங்களை கைவிடவும்.

கணவன் மனைவிடையே உணர்வுகளை வெளிபடுத்த சிக்கல்கள் இருக்கும். பணவரவு சுமாரக இருக்கும். சளி, இருமல் தொல்லைகள் ஏற்படலாம்.

நாக தேவதையை விளக்கேற்றி வழிபட நன்மைகள் கிடைக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று நேர்மறையான எண்ணங்கள் அவசியம் தேவை. பணிகளில் வெற்றி பெற முயற்சி அவசியம். துணையிடம் சூடான வாக்குவாதம் ஏற்படலாம்.

வரவும் செலவும் சமமாக இருக்கும். உணவு உண்ணும் பழக்கம் சரியான நேரத்தில் இருக்க வேண்டும்.

கேது பகவானிற்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டு.

துலாம் ராசிபலன்

இன்று உங்களுக்கு தன்னம்பிக்கையான நாளாக இருக்கும். செய்யும் காரியங்கள் திருப்திகரமாக முடியும்.

பணிகளில் பாராட்டு கிடைக்கும். துணையுடன் அன்பாக இருப்பீர்கள். புரிதலுடன் காணப்படுவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். சிறந்த ஆற்றலுடன் இருப்பீர்கள்.

துர்கையை வழிபட கூடுதல் பலன்களை பெறுவீர்கள்.

விருச்சிக ராசிபலன்

உங்களின் திட்டமிடல் உங்களை நல்ல நிலையை அடைய செய்யும். பெரிதான வளர்ச்சி காண்பீர்கள். பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.

குடும்பத்தில் நட்புறவு மேம்படும். தன லாபம் அதிகமாக இருக்கும். சுகமான சௌகரியங்கள் நிறைந்த நாளாக இருக்கும்.

முருகன் கோயில் சென்று வர நன்மைகள் கூடும்.

தனுசு ராசிபலன்

இன்று ஆன்மீகத்தில் கவனம் செலுத்தவும். நட்பினால் நன்மை கிடைக்கும். பணிசுமை அதிகமாக இருக்கும். கடுமையான உழைப்பு தேவை.

குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வரலாம். உணர்ச்சிவசத்தை தவிர்க்கவும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். உழைப்பின் காரணமாக சோர்வு ஏற்படும்.

சிவபெருமானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் கைகூடும்.

மகரம் ராசிபலன் 

இன்று தடைகளை சந்திக்க நேரிடும். திட்டத்தை சரியான முறையில் தீட்ட  வேண்டும்.

பணியில் தேவையற்ற பிழைகள் வர வாய்ப்புண்டு. கணவன் மனைவியிடையே சண்டை வர வாய்ப்புண்டு. பேச்சில் நிதானமாக இருக்கவும். செலவுகளை கட்டுபடுத்தவும். செரிமான கோளாறுகள் வரலாம் உணவில் கவனம் தேவை .

அம்பிகையை வழிபட நற்பலன்கள் கிடைக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று சுகமான நாளாக இருக்கும். சுப காரியங்கள் சென்று புதிய நட்புறவு கிடைக்கும். பணிகளில் சிறந்த முடிவுகள் கிடைக்கும். தொழில் சிறப்பாக இருக்கும்.

வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பண வரவு அதிகரிக்கும். உடல் நலத்தில் குறையேதும் இருக்காது.

அங்காரக பகவானை வழிபட கூடுதலாக பலன்களை பெறுவீர்கள்.

மீனம் ராசிபலன் 

இன்று வெற்றிகரமான நாளாக அமையும். வேகமாக பணிகளை முடிப்பீர்கள். நன்மதிப்பை பெறுவீர்கள்.

கணவன் மனைவியிடையே காதல் மேம்படும். மங்களங்கள் பொங்கும் நாளாக அமையும். தன லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் குறையிருக்காது.

கேது பகவானிற்கு விளக்கேற்றி வழிபட கூடுதல் பலன்களை பெறுவீர்கள்.

10/03/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

நெத்திக் காசு ஒத்த ரூபா கூட வரும் சொத்து: மண்ணுருண்ட பாடல் வரிகள் இதோ!

0
Mannurunda Song

சூரரைப் போற்று படத்தின் முதல் சிங்கிள் டிராக் மண்ணுருண்ட பாடல் லிரிக் (Mannurunda Lyric Video) வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Mannurunda Song; மண்ணுருண்ட பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் பலரும் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று (Soorarai Pottru). ஏர் டெக்கான் நிறுவனத்தின் துணை நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டும், தொழிலாளர் தினத்தை முன்னிட்டும் சூரரைப் போற்று படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தின் முதன் சிங்கிள் டிராக் மண்ணுருண்ட பாடல் லிரிக் (Soorarai Pottru Song Mannurunda Lyric) வீடியோ வெளியாகியுள்ளது.

கிராமத்தில் நிகழ்ந்த ஒரு இறப்பு நிகழ்ச்சியை மையப்படுத்தி இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

பாடலில் சூர்யா இறந்த ஒரு வயதான ஒரு பெரியவரை தனது கையால் தூக்கிச் செல்கிறார்.

அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது. இதையடுத்து, பாடும் பாடலாக மண்ணுருண்ட பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் அவருக்கே உரிய பாணியில் பாடி ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளார்.

சாவு வீட்டில், குத்தாட்டம் போடுவது வழக்கம். அதனை மையப்படுத்தி இந்தப் பாடல் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ளது.

மண்ணுருண்ட பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இதோ அந்தப் பாடல் வரிகள்;

மண்ணுருண்ட மேல இங்க

மனுசபய ஆட்டம் பாரு

கண்ணு ரெண்ட மூடிப்புட்டா

வீதியிலே போகும் தேரு

அண்டாவுல கொண்டு வந்து

சாராயத்த ஊத்து

அய்யாவோட ஊர்வலத்துல

ஆடுங்கடா கூத்து

ஏழை பணக்காரன் இங்கு எல்லாம் ஒன்னு பங்கு

கடைசில மனுசனுக்கு ஊதுவாய்ங்க சங்கு

நெத்திக் காசு ஒத்த ரூபா கூட வரும் சொத்து தானே

செத்தவரும் சேர்ந்து ஆட வாங்கி போட்டு குத்துவோமே

சாராயம் குடிச்சவங்க வேட்டி அவிழ்ந்து விழுமே

கொடம் உடைக்கும் இடம் வரைக்கும் பொம்பளைங்க அழுமே

ஆயிரம் பேரு இருந்தாலும் கூட யாரும் வல்லடா

அடுக்குமாடி வீடு இருந்தும் ஆறடி தான் மெய்யடா

கீழ் சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா?

அய்யா ஓடுறது சாக்கடையா

அந்த மேல் சாதிக்காரனுக்கு

அந்த மேல் சாதிக்காரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா

உழைக்கிற கூட்டம் எல்லாம் கீழ் சாதி மனுசங்களாம்

உக்காந்து திங்கிறவெல்லாம் மேல் சாதி வம்சங்களாம்

என்னங்கடா நாடு அட சாதிய தூக்கிப்போடு

என்னங்கடா நாடு அட சாதிய புதைச்சு மூடு

என்று அந்த பாடல் வரிகள் முடிகிறது.

 

மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ தெலுங்கிலும் சித்ரமைனா பூமி என்ற டைட்டிலில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் சூரரைப் போற்று படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, சம்பத் ராஜ், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து சுதா கொங்கரா, சூரரைப் போற்று, செந்தில் கணேஷ் ஆகியோரது டுவிட்டர் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இந்த பாடல் வெளியானதிலிருந்து செந்தில் கணேஷிற்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

3

Vaathi: மாணவர்கள் குத்தாட்டம் போடும் வாத்தி ரெடி!

0
Vaathi Master Second Song Lyric

மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் (Master Second Single) வாத்தி (Vaathi Lyric Video) குறித்து முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

வாத்தி (Vaathi Second Single) பாடல் லிரிக் வீடியோ எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாஸ்டர் (Master) படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் குட்டி ஸ்டோரி லிரிக் (Kutty Story Lyric) வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் வெளியானது.

இதே போன்று மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வாத்தி பாடலும் (Vaathi Single Track) தயாராகியுள்ளது.

ஆம், முழுக்க முழுக்க குத்து பாடலுக்கு பேர் போன வாத்தி பாடல் (Vaathi Lyric Video) நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாத்தி பாடல் கல்லூரியில் கொண்டாடப்படும் ஒரு பாடல் போன்று தெரிகிறது. வாத்தி பாடலின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், விஜய்யை மாணவர்கள் தூக்கிபோடும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக கமல் ஹாசன் நடிப்பில் வந்த நமம்வர் படத்தில் இடம்பெற்றுள்ள எதிலேயும் வல்லவன் என்ற பாடலின் உல்டா போன்று இந்தப் பாடல் இருக்கும் என்று இப்போதே தெரிகிறது.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போதே இப்படம் கமல் ஹாசன் நடித்த நம்மவர் படத்தின் ரீமேக் என்று தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் குறித்து அப்டேட் வருவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வெளியான பிறகு மாஸ்டர் டிரைலர் குறித்து அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மாஸ்டர் இசை வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்க இருக்கிறது என்றும், சன் டிவி நிறுவனம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை நேரலை செய்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுவதை காண்பதற்கும், கேட்பதற்கும் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர்.

தற்போது விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். இன்னும், 6 நாட்கள் உள்ள நிலையில், அவர் அதற்குள்ளாக சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, விஜய், தளபதி65 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

3

Holi Celebration with Google; ஹோலி பண்டிகையை கூகிளோடு எப்படி கொண்டாடுவது

0
Holi Celebration with Google

Holi Celebration with Google; கொண்டாடு ஹோலி பண்டிகையை கூகிலோடு

வித்தியாசமான ஐடியாக்களை கொண்டு வருவது கூகிளுக்கு ஒண்ணும் புதிது இல்லை. ஹோலி பண்டிகையை கூகிளோடு கொண்டாட ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.

ஒவ்வொரு முறையும் நீங்கள் கூகிள் சர்ச்சில் ‘ஹோலி’ என டைப் செய்யும் பொழுது வலது பக்கத்தில் வண்ண தண்ணிகுண்டு வந்து தொங்கும் அதை நீங்கள் கிளிக் செய்தல் அது வெடித்து சிதறி உங்கள் ஸ்கிரீன் ஃபுல்லாக கலர் ஆகிவிடும்.

மீண்டும் ஸ்கிரீனை கிளீன் செய்தால் மேல தண்ணீர் பந்து தொங்கும் அதை ஒரு தட்டு தட்டினால் ஸ்கிரீன் கிளீன் ஆகிவிடும். இவ்வாறு தனிமையில் இருப்போர் ஹோலி கொண்டாடலாம்.

இந்த டிரிக் மூலம் உங்கள் மொபைல் மற்றும் கம்ப்யூட்டரில் நீங்கள் ஹோலி கொண்டாடலாம்.

3