சீனாவைச் சேர்ந்த 100 வயது தாத்தா ஒருவர் COVID-19 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று அவர் பூரண குணம் அடைந்து உள்ளார்.
கடந்த பிப்ரவரி மதம் தான் இந்த பெரியவர் 100-வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். பிப்ரவரி 24-ம் தேதி கொரோனா தோற்று உள்ளதாக உகானில் உள்ள ஹூபேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சால், சுவாச நோய், அல்சைமர் நோய், ரத்த அழுத்தம் மேலும் இதயப்பிரச்சனையும் இருந்துள்ளது.
இப்படி ஒரு கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்ட இந்த முதியவர் உடலில் இருந்த கொரோனா வைரஸ் முற்றிலும் அழிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
ஹூபேஸ் மருத்துவமனை ஊழியர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் காண்பித்த அறிக்கை சீன மொழியில் உள்ளதால் முதியவரின் பெயரை அறியமுடியவில்லை.
மன தைரியத்துடன் இருந்தால் எமனே வந்தாலும் எதிர்த்து நிற்கலாம் என்பதற்கு இந்த முதியவரே சான்று.
Mannurunda Lyric Video; மண்ணுருண்ட பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சூரரைப் போற்று (Soorarai Pottru) படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் மண்ணுருண்ட பாடல் லிரிக் (Mannurunda Lyric Video) வீடியோ வெளியாகியுள்ளது.
சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி ரோலில் நடித்து வரும் படம் சூரரைப் போற்று.
ஏர் டெக்கான் நிறுவனத்தின் துணை நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார். வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரைப் போற்று படம் திரைக்கு வருகிறது.
மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ (Mannurunda First Single Lyric Video)
இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கிராமத்தில் நிகழ்ந்த ஒரு இறப்பு நிகழ்ச்சியை மையப்படுத்தி இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது என்று பாடல் வீடியோவைப் பார்த்தால் தெரிய வருகிறது.
இந்தப் பாடலை சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் (Senthil Ganesh) தனது குரலில் பாடி அனைவரையும் துள்ளிக் குதிக்க வைத்துள்ளார்.
மண்ணுருண்ட பாடலுக்கு ஏகாதேசி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.
தமிழில் வெளியான மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ தெலுங்கில் சித்ரமைனா பூமி என்ற டைட்டிலில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் சூரரைப் போற்று படத்தை தயாரித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, சம்பத் ராஜ், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
மண்ணுருண்ட பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து சுதா கொங்கரா (#SudhaKongara), சூரரைப் போற்று (#SooraraiPottru), செந்தில் கணேஷ்(#SenthilGanesh) ஆகியோரது டுவிட்டர் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
Bhoomi Teaser; பூமி டீசர் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி படத்தின் டீசர் (Bhoomi Teaser) வெளியாகியுள்ளது.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்தி அகர்வால் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் பூமி (Bhoomi).
ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக (Jayam Ravi) உருவாகி வரும் பூமி முழுக்க முழுக்க விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளின் அவல நிலையை சித்தரிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவியின் 25 ஆவது படம் என்பதால், நல்ல கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் மே மாதம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டும், தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டும் பூமி படம் திரைக்கு வருகிறது.
பூமி டீசர் (Bhoomi Teaser)
இந்த நிலையில், பூமி படத்தின் டீசர் வெளியாகி சமூக ஊடகங்களில் விவசாயிகளின் குரல் எதிரொளித்து வருகிறது.
ஆம், இந்த டீசரில் விவசாயிகளையும், விவசாயத்தையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வட்டிக்கு காசு வாங்கி விவசாயம் செய்தும், ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் இருக்கிறோம்.
நாட்டோட எல்லா வளத்தையும் நாசம் பண்ணிட்டு, நீங்க எல்லாம் என்ன பண்ணப்போறீங்க?
அடிமையாக இருக்கிறோம் என்பது தெரியும் வரை உன்ன மாதிரி ஆளுங்கள் இங்கே இருக்க முடியும் ஆகிய வசனங்கள் பூமி டீசரில் இடம்பெற்றுள்ளது.
ஆனால், வசனங்களை விட டீசரில் காட்டப்பட்ட காட்சிகளால் கண்களில் கண்ணீர் வருவதை உணர முடிகிறது.
விவசாயிகளின் போராட்டம், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் நிலை, வறண்ட நிலம் போன்ற காட்சிகள்தான் கண்களில் தெரிகிறது.
சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் உருவான பூமி படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
பூமி படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து சதீஷ், ரோனித் ராய், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜெயம் ரவி நடிப்பில், பேராண்மை, நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், டிக் டிக் டிக், மிருதன், அடங்க மறு, கோமாளி ஆகிய மாஸ் படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணனுக்குத் தெரியாத சுள்ளான் கொரோனா வைரஸ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது பங்குச்சந்தை-யில் 5 லட்சம் கோடி அவுட்.
இன்று காலை வர்த்தக நேரத் துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1515.01 புள்ளிகள் சரிந்தது. 36,061.61 என்ற நிலவரத்தில் சந்தை ஆரம்பம் ஆனது.
நிப்டி 417.05 புள்ளிகள் சரிந்தது 10,572.40 என வர்த்தம் ஆரம்பம் ஆனது. மதியம் 1 மணி அளவில், சென்செக்ஸ் 2200 புள்ளிகளும், நிப்டி 620 புள்ளிகளும் அதிரடியாக சரிவை சந்தித்தன.
கொரோனா வைரசால் கச்சா எண்ணை விலையும் கடும் வீழ்ச்சி கண்டு உள்ளது. மேலும் எஸ் வங்கி சரிவை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் பங்குசந்தையில் எதிரொலித்தது.
இந்த சரிவால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.
பிளான் பண்ணி பண்ணனும் (Plan Panni Pannanum) படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் இசை வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவான ரியோ ராஜ், நடிகை ரம்யா நம்பீசன் உடன் இணைந்து நடித்துள்ள அடுத்த படம் பிளான் பண்ணி பண்ணனும்.
கனா காணும் காலங்கள் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகர் ரியோ ராஜ்.
கல்லூரி காலம், சுட சுட சென்னை, காஃபி டீ ஏரியா, யுவர் அட்டென்ஷன் பிளீஸ் (Your Attention Please) ஆகிய சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
சரவணன் மீனாட்சி சீரியலின் 3 ஆவது சீசன் மூலம் அதிகளவில் பிரபலமானார்.
அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளரானார். தற்போது டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
சின்னத்திரையைத் தொடர்ந்து ரியோ, வெள்ளித்திரையிலும் கால் பதித்தார். ஆம், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
அதற்கு முன்னதாக சத்ரியன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ரியோவிற்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இப்படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் இசை மற்றும் டிரைலர் (Plan Panni Pannanum Audio and Trailer) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சத்யம் சினிமாவில் நடக்கும் இந்நிகழ்ச்சியிக்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் ரோபோ சங்கர், தங்கதுரை, விஜி சந்திரசேகர், பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை வெளியீட்டிற்கு முன்னதாக இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் டிராக் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.
பிளான் பண்ணி பாடலில் தொடங்கி நீங்கும் போதில் வரை மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ரியோ – ஸ்ருதி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ரியோ மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், என் உலகை ஆள இளவரசி வந்துவிட்டாள்.
ஆம், எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலம் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Teddy Teaser; ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்து முக்கியமான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் இளம் காதல் ஜோடிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் ஆர்யா. கஜினிகாந்த் படத்தின் மூலம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு காப்பான் படத்தில் இருவரும் நடித்திருந்தனர். ஆனால், ஜோடியாக நடிக்கவில்லை. இந்த நிலையில், டெடி படத்தின் மூலம் ஆர்யா – சாயிஷா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.
சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் டெடி (Teddy). ஞானவேல் ராஜா தயாரித்த இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
டெடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Teddy First Look) வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றநிலையில், டீசர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு டெடி டீசர் (Teddy Teaser) வெளிவரும் என்று அறிவித்துள்ளார். அதோடு, இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இப்படம் குறித்து சக்தி சௌந்தர்ராஜன் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தில் டெடி (Teddy) பியர் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரம். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாகவே டெடி பியர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
டெடி பியர் சண்டையிடும் ஒரு கதாபாத்திரமாக நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆதால், இந்தப் படத்தின் மூலம் டெடி பியர் அதிகளவில் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள என் இனிய தனிமையே பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
கொரோனா லேட்டஸ்ட் நியூஸ்; 43பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேலாக பதிக்கப்பட்டுள்ளனர். 3500 க்கும் மேல உயிரழப்புகளும் ஆகின.
நேற்று ஒரே குடும்பத்தில் 5 நபருக்கு கொரோனா பதிப்பு உறுதியாகிறுக்கிறது. இதனால் இந்தியாவில் 39 உறுதிபடுத்தப்பட்ட கொரோனா கேஸ் ஆகிவிட்டது.
இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்னதான் எடுத்தாலும் இதுவரை 39 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று காலை மேலும் நான்கு கொரோனா பாதிப்படைந்தோர் கண்டறியப்பட்டனர்.
உத்திரப்பிரதேசம், கேரளா, டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு இடங்களிலும் புதிதாக ஒரு நபர்கள் கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். இதோடு மொத்தம் 43பேர் கொரோனா பதிப்பு அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தீ போன்று பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் முடிந்த வார தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு தெளிவாக இருக்க வேண்டும் என கூறியிருக்கிறது.
ஹோலி பண்டிகை கவிதைகள், ஸ்டேட்டஸ், மெசேஜ். ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். holi celebration wishes tamil qoutes status massages.
ஹோலி பண்டிகை என்பது வண்ணங்களின் பண்டிகை. வட இந்தியாவில் இந்த பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை பால்குனி மாதத்தில் பௌர்னமி அன்று கொண்டாடப்படுகிறது.
ஹோலி என்று மனதில் நினைத்தாலே வண்ணம், கேளீக்கை, பாட்டு, பொழுது போக்கு மற்றும் மேளம் போன்றவை நம் நினைவுக்கு வரும்.
“Colors of Holi symbolize the colors of love, trust, and understanding between one another. So play with the colors and may the air be filled with love. Happy Holi”
ஹோலி பண்டிகை கவிதைகள்
நம் அழகான உறவுகளின் அர்த்ததையும் ஆழத்தையும் வண்ணமளிப்போம் இந்த ஹோலி பண்டிகையில். ஹேப்பி ஹோலி !
வண்ணங்களை வானத்தில் எரிந்து நம் எண்ணங்களை அதில் கலந்து கொண்டாடும் ஹோலி பண்டிகை
2020ன் ஒவ்வொரு நாளும் வண்ணமயமாக இருக்க ஹோலியை கொண்டாடுவோம் வண்ணங்களோடு. ஹோலி நல்வாழ்த்துகள்
ஹோலியா? கொரோனாவா? உசுருதான் முக்கியம்! பதுங்கிய பாஜக தலைவர்கள். கொரோனா வைரசால் இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். இந்த வருடம் இந்தியாவில் கொரோனா பரவியதால் பிரதமர் மோடி ஹோலி கொண்டாட்டங்களை தவிர்ப்பதாக கூறினார்.
அவரை பின்தொடர்ந்து எந்த ஒரு பாஜக தலைவர்களும் பொதுஇடங்களில் கூடி ஹோலி பண்டிகைகளை கொண்டாட விரும்பவில்லை.
கொரோனா அச்சுறுத்தலால் ஹோலி தண்ணீர் துப்பாக்கி போன்ற பொருட்கள் விற்பனை கடந்த வருடத்தை விட இந்த வருடம் சரிந்துள்ளது.
நட்ச்சத்திர விடுதிகளும் கலையிழந்து காணப்படுகிறது. வருமானம் பெரிதாக பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர்.