Home Blog Page 231

தர்மயுத்தம் அணிக்கு சபாநாயகர் நோட்டீஸ்; பதவி பறிபோகுமா?

0
சபாநாயகர் நோட்டீஸ் தர்மயுத்தம் அணி ஓபிஎஸ்

தர்மயுத்தம் அணிக்கு சபாநாயகர் நோட்டீஸ்; பதவி பறிபோகுமா? ஓபிஎஸ் தலைமையிலான 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் மீண்டும் தூசி தட்டப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் தர்மயுத்தத்தில் ஈடுபட்டார். எடப்பாடி அரசுக்கு எதிராக அவர் அணியில் இருந்த 11 பேர் வாக்களித்தனர்.

பின்னர் சிறிது நாட்களிலேயே எடப்பாடியும், பழனிச்சாமியும் இணைந்து அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கினர்.

அப்போது டிடிதினகரன் தலைமையில் ஒரு அணி அதிமுகவில் இருந்து பிரிந்தது. அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனால் திமுக ஓ.பி.எஸ். உடபட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தபோது ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அங்கு தீர்ப்பு சாதகமாக வரவில்லை எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுகுறித்து சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக உச்சநீதிமன்ற கூறியது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ளது. இந்நிலையில் சபாநாயகர் தனபால், ஓபிஎஸ் உட்பட 11 பேருக்கு நோட்டிஸ் வழங்கி உள்ளார்.

எனவே மீண்டும் அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு உள்ளதா? ஓபிஎஸ் பதவி பறிபோகுமா? எனச் சந்தேகம் எழுந்து உள்ளது.

3

ஹோலி பண்டிகை வரலாறு; இதுதான் கலர் பூச காரணமா?

2
ஹோலி பண்டிகை வரலாறு 

ஹோலி பண்டிகை வரலாறு; இதுதான் கலர் பூச காரணமா? ஹோலி கொண்டாட்டங்கள் இந்தியாவில் எப்படி பிரபலம் அடைந்தன. முதலில் யார் ஹோலி கொண்டாடியது.

ஹோலி பண்டிகை என்பது வண்ணங்களின் பண்டிகை. வட இந்தியாவில் இந்த பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. இந்த பண்டிகை பால்குனி மாதத்தில் பௌர்னமி அன்று கொண்டாடப்படுகிறது.

ஹோலி என்று மனதில் நினைத்தாலே வண்ணம், கேளீக்கை, பாட்டு, பொழுது போக்கு மற்றும் மேளம் போன்றவை நம் நினைவுக்கு வரும்.

இந்த பண்டிகை கொண்டுவதற்கான நோக்கம் தீமையை களைந்து ஏறிவது ஆகும். இந்த பண்டிகையை பற்றி புராணங்களில் பல கதைகள் மூலம் அரிய படுகிறது.

வசந்த காலத்தில் வரும் முழுநிலவில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளிலும் ஹிந்துகள் வாழும் ஒருசில மேற்கத்திய நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர்மீது ஒருவர் வண்ணப்பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ பூசி அல்லது எறிந்து கொண்டாடுகின்றனர்.

ஹோலி பண்டிகை வரலாறு 

ஹோலி பண்டிகை வரலாறு 

அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) எனவும் அழைக்கப்படும்.

இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்றபோது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்தார்.

ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது தெய்வ பக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். இதன்  நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன.

அண்டத்தில் ஒளியின் திருவிழாவாக ஹோலி எண்ணப்படுகிறது. இப்பண்டிகையின்போது, வேறுபட்ட அலைகளைக் கொண்ட ஒளிக்கதிர்கள் அண்டமெங்கும் பரவுகின்றன.

இதனால் பல்வேறு வண்ணங்கள் தோன்றி சூழ்நிலையில் உள்ள தனிமப் பொருட்களின் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன.

இதன் மூலம் நன்மை, தீமையை வென்றதாக கருதப்படுகிறது. இதன் மூலம் மனதில் உள்ள காமம்,க்ரோதம்,பேரசை போன்றவற்றை களைந்து,ஆசை மற்றும் தேவை போன்றவைகளை சமச்சீராக எடுத்துக் கொள்ள வழி வகுக்கிறது.

3

16 வயது வீராங்கணை கண்ணீர்; உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் என்ன?

0
16 வயது வீராங்கணை கதறல் உலகக்கோப்பை தோல்விக்கு காரணம்

16 வயது வீரங்கணை கண்ணீர்; இந்தியா உலகக்கோப்பை தோல்விக்கு காரணம் என்ன? லீக்சுற்றில் அனைத்துப்போட்டிகளும் வெற்றி. இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி எப்படி நடந்தது?

இந்தியா குவித்த வெற்றிகள்

மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டி நடைபெற்று முடிந்துவிட்டது. ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை 5-வது முறையாக தட்டிச் சென்றுவிட்டது.

லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், ஸ்ரீலங்கா என அனைத்து அணிகளையும் அடித்தது நொறுக்கி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.

அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் மோதாமலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா இறுதி போட்டிக்கு செல்வது இதுவே முதல்முறை.

ஆஸ்திரேலியா குவித்த வெற்றிகள்

இதுவரை 7 முறை நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், சொந்த ஊரில் 5-வது உலகக்கோப்பையை வென்றுள்ளது.

இந்த வருட போட்டியில் லீக் சுற்றில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது ஆஸ்திரேலியா. வங்கதேசம், நியூசிலாந்து, ஸ்ரீலாங்கா என மற்ற மூன்று அணிகளுடன் மோதி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதியில் மழை குறுக்கிட்டு சவால்கள் ஏற்படுத்தினாலும், தென்னாப்ரிக்கா அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதி போட்டி என்ன மேஜிக் நிகழ்ந்தது

இறுதி போட்டி நெற்றியில் வீரத் திலகம் எல்லாம் இட்டு பக்காவாக பந்து வீச சென்றது இந்திய மகளிர் அணி.

2003 கங்குலி தலைமையில் ஆடவர் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோதியதை போன்று. அன்று இந்தியா முழுவதும் சிறப்பு பூஜைகள் யாகங்கள் நடந்தது.

நீண்ட வருடங்களாக இந்தியா உலகக்கோப்பை கனவில் மிதந்த தருணம் அது. முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 4 ரன்களில் அவுட். மொக்கையாக தோற்றது இந்திய அணி.

அதே போன்றே மகளிர் ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கியது. குறிப்பாக ஹீலி ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கினார்.

ஹாட்ரிக் சிக்சர்கள் பறக்க விட்டு மைதானத்தில் இருந்த 80 ஆயிரம் ரசிகர்களை குஷிப்படுத்தினர். குறிப்பாக அவரது கணவர் ஸ்டார்க்-யை களிப்படைய வைத்தார்.

சொந்த ஊர், ஏற்கனவே 4 முறை சாம்பியன். பிறகு ஆஸ்திரேலியா சும்மா இருக்குமா? ஸ்கெட்ச் போட்டி இந்திய பவுலர்களை தாக்கியது.

முதல் முறை உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நுழைந்த இந்திய அணி நிச்சயம் சற்று பதற்றத்தில் இருந்திருக்கலாம்.

சிலர் ஏற்கனவே வெற்றி பெற்ற அணி தானே என சற்று அஜாக்ரதையாகக் கூட இருந்திருக்கலாம்.

அதுவரை நன்கு விளையாடி வந்த ஷபாலி இறுதிப்போட்டியில் என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை பீல்டிங், பேட்டிங் என அனைத்திலும் சொதப்பினார்.

ஹீலி 15 ரன்கள் பக்கம் இருந்த நிலையில் அடித்த கேட்ச் ஒன்று கையில் கிடைத்தும் பிடிக்காமல் கோட்டை விட்டார் ஷபாலி.

போட்டிங் முரட்டு சொதப்பல், 2 ரன்களில் நடையைக்கட்டினார். இந்திய அணி ஹிமாலயா இலக்கு ரன் சேசிங் என்ற நினைத்த அந்த தருணமே தோற்றுவிட்டனர்.

பந்துவீச்சு சரியாக தேர்வு செய்யாமல் விட்டதே இதற்கு காரணம். ஆஸ்திரேலியாவை 120 முதல் 130  ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்திருந்தால் ஸ்கோரைக் கண்டு மலைக்கத் தேவையில்லை.

கண்மூடி திறப்பதற்குள் ஹீலி 39 பந்துகள் 75 ரன்களை கடந்ததார். இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி.

அதே நேரம் ஹீலி அவுட் ஆகிய உடன் விக்கெட் சீரான இடைவெளியில் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா அணி.

ஷபாலி அந்த ஒரு கேட்ச்-யை பிடித்து இருந்தால் இந்த மேட்ச் தலைகீழாக மாறி இருக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு.

16 வயதே ஆனா ஷபாலி, சச்சின் டெண்டுல்கர் போன்று இளம் வயதில் இந்திய அணிக்காக விளையாட வந்துள்ளார்.

1989 முதல் இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் உலகக்கோப்பை கனவு  2011-ஆம் ஆண்டு தான் நிறைவேறியது.

உலகக்கோப்பை தொடரில் எத்தனை போட்டிகள் வென்றாலும், எத்தனை போட்டிகள் சிறப்பாக விளையாடினாலும், இறுதி போட்டியில் நாம் என்ன செய்தோம் என்பதைத்தான் இந்த உலகம் நினைவில் கொள்ளும்.

எனவே, இந்தப் போட்டி இந்தியர்கள் மறக்க வேண்டிய நாள். மகளிர் தினத்தை ஆஸ்திரேலியா அமோகமாக கொண்டாடிவிட்டது. இந்தியாவிற்கும் ஒரு நாள் வரும் காத்திருப்போம்..!

3

தேதிய சொல்லிட்டீங்க! எங்கேனு சொல்லலேயே!

1
Master Audio Launch Date

மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch) தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், எங்கே நடைபெறுகிறது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீடு வரும் 15 ஆம் தேதி நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், அது எங்கே நடைபெறுகிறது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. இதனால், ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர் (Master). வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி (Master Release Date) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இதற்காக படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

ஏற்கனவே மாஸ்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் குட்டி ஸ்டோரி லிரிக் (Kutty Story Lyric Video) வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து, மாஸ்டர் டிரைலர், மாஸ்டர் இசை வெளியீடு, மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் குறித்து அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

மாஸ்டர் இசை வெளியீடு

அதற்கு பதில் கொடுக்கும் வகையில், தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது (Master Audio Launch).

அதன்படி, வரும் 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது என்பதை மட்டும் வெளியிட்டுள்ளது. ஆனால், எங்கே நடைபெறுகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

ஆனால், சன் தொலைக்காட்சி நிறுவனம் மட்டும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை நேரலை செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.

சென்னையா? கோவையா?என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், கோயம்புத்தூரில் நடக்கவில்லையாம்.

5 நட்சத்திர ஹோட்டல்

மாறாக சென்னையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் வைத்து மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறதாம்.

கொரோனோ வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிகளவில் கூட்டம் கூடாமலிருக்க 5 நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே பிகில் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் ரசிகர்கள் டிக்கெட் வைத்திருந்த நிலையிலும், அரங்கத்திற்குள் வரமுடியவில்லை.

எனினும், கூட்ட நெரிசல்களால் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். இதனால், விஜய்க்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வந்ததது என்று நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆதலால், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்துவதற்குப் பதிலாக மிகவும் எளிமையான முறையில் நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது.

விஜய் வெளிநாடு பயணம்

மாஸ்டர் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளிவந்தவுடன் விஜய் குறுகிய கால சுற்றுலாவாக வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

எனினும், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறுகிறது என்பது குறித்து முறையான அறிவிப்பு வரும் வரையில் எல்லாமே தகவலாகத்தான் இருக்கும்.

விஜய் ஒருநாள் இயக்குநர்

இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குநர் ரத்னகுமார் ஆகியோருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து விஜய் ஒரு இயக்குநராக இருந்து அவர்களை மாஸ்டர் படத்தில் நடிக்க வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

3

Barbie doll அறிமுகமான தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 09

0
Barbie doll அறிமுகமான தினம்

Barbie doll அறிமுகமான தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 09 today what special day in world – india – tamil.

1959ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி நியூயார்க் மாகாணத்தில் அமெரிக்கன் டாய் ஃபேர் காட்சியின் பொழுது பார்பி டால் பொம்மை முதலில் அறிமுகத்திற்கு வந்தது.

11இன்ச் உயரத்தில் பெண்களை போன்று நீண்ட முடியுடன் அதிக அளவில் மனித உருவத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொம்மை தான் பார்பி டால்.

பார்பி டால் உருவாக காரணம் ஒரு சுட்டி குழந்தை தானம். எந்த வகையான பொம்மைகளுடன் விளையாடாமல் இளம்பருவ பெண்களின் புகைப்படங்களுடன் மட்டுமே விளையாடி வந்தார்.

சிறு குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தை பற்றி யோசிப்பார்களோ என்று பெண்கள் வடிவிலான பார்பி டால் உருவாக்கினார் ரூத் ஹண்ட்லர்.

மேட்டல் என்னும் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆவார். மேலும் பார்பி பொம்மையின் காப்புரிமை மட்டும் மார்கெட்டிங் அனைத்தையும் இவரே பார்த்துக்கொண்டார்.

உலகம் முழுவதும் பார்பி பொம்மை நல்ல வரவேற்பையும் சில விமர்சனங்களையும் பெற்றது. இதன் பிறகு பார்பி பொம்மைக்கு காதலன் பொம்மையும் வெளியிட்டார்.

வரலாற்றில் இன்று  இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

ஆக்‌ஷன் சொல்லி ஒரு நாள் இயக்குநரான விஜய்!

0
Vijay Become Director

Master Audio Launch; மாஸ்டர் படத்தில் விஜய் ஒரு சில காட்சிகளில் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

விஜய் இயக்குநர் இடத்தில் இருந்து கொண்டு லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்ததாக கூறப்படுகிறது.

அவியல், மாநகரம், கைதி ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 4ஆவது படம் மாஸ்டர் (Master).

மாஸ்டர் படத்தில் விஜய், மாளவிகா மோகனன் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார்.

அனிருத் இசையமைத்துள்ளார். எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch)

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் மாஸ்டர் படத்தின் இசை (Master Audio Launch) வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்க இருக்கிறது.

ஆனால், சென்னையா? கோயம்புத்தூரா? என்பது குறித்து அறிவிப்பு வரவில்லை. எனினும், சன் தொலைக்காட்சி நிறுவனம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை நேரலை செய்கிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் (Master Second Single) விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தில், விஜய் இயக்குநராக ஒரு சில காட்சிகளில் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்திற்கு அமலா பாலின் ஆடை படத்தை இயக்கிய ரத்னகுமார் திரைக்கதை எழுதியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோரும் ஒரு காட்சியில் நடித்துள்ளனர்.

ஒருநாள் இயக்குநர் விஜய் (Vijay Become Director)

அவர்கள் இருவரும் நடித்த காட்சியை விஜய், கேமரா, ரோலிங், ஆக்‌ஷன் சொல்லி ஒருநாள் மட்டும் இயக்குநராக இருந்திருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இடத்தில் இருந்து கொண்டு ஒரு நாள் முழுவதும் அவர்கள் இருவரும் நடித்த காட்சியை விஜய் இயக்கியுள்ளார் என்கிறது தகவல்.

அவர்கள் இருவருக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்து, அந்த காட்சிக்கு மட்டும் ஒருநாள் இயக்குநராக (Vijay Become Director) இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய் இயக்குநராக இருந்ததை மெய்சிலிர்த்துப் பார்த்த படக்குழுவினர் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக விஜய் வெளிநாடு சென்றுள்ளார். குறுகிய கால சுற்றுலாவாக அவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடிகர், பின்னணிப் பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், நண்பர்கள், இன்னிசை மழை ஆகிய படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

தற்போது மாஸ்டர் படத்தின் மூலம் ஒருநாள் இயக்குநராகவும் (Vijay Become Director) அவதாரம் எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

3

கொரோனா வெயிலுக்கு பரவுமா? உலக சுகாதார மையம் கூறுவது என்ன?

0
கொரோனா லேடஸ்ட் நியூஸ்

கொரோனா வெயிலுக்கு பரவுமா? உலக சுகாதார மையம் கூறுவது என்ன? வெப்பமான சூழ்நிலையில் கொரோனா பரவாதா? கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அதிக வெப்பநிலையில் கொரோனா வைரஸ் பரவாது என சிலர் தெரிவித்து வருகின்றனர். அது குறித்து உலக சுகாதார மையம் என்ன கூறியது என இப்பதிவில் காண்போம்.

உலகத்தில் ஒரு லட்சத்திற்கு மேலான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 3500க்கும் மேற்பட்ட உயிர் பழி ஆகியுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் எவ்வளவு பாதிப்பு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனாவை கட்டுபடுத்த இயலவில்லை.

இந்தியாவிலும் ஒரே வாரத்தில் 39 உறுதிபடுத்தப்பட்ட கொரோனா பாதிப்பாளர்கள் உள்ளனர். அனைவரையும் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வெப்பமான சூழ்நிலையில் கொரோனா பரவாதா?

உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி டெட்ராஸ், வெப்பமான சூழ்நிலையில் இந்த வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை.

ஆகையால் இந்தச் சூழலில் பயம் கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதே முக்கியம்’ என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி டெட்ராஸ் இதுகுறித்துப் பேசும்போது, “உலகம் முழுக்க எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி நோய் இப்போது பரவி வருகிறது.

ஆகவே மக்கள் அனைவரும், நோயின் தீவிரத்தன்மையை புரிந்துகொண்டு, புத்திசாலித்தனமாக நோயை எதிர்த்து நிற்பது மட்டுமே இப்போது அவசியமாக இருக்கிறது.

கரோனா வைரஸ் என்றால் என்ன? – Coronavirus Tamil

வெப்பமான சூழ்நிலையில் கொரோனா பரவாதா?

பருவநிலை வெப்பமான சூழ்நிலையில் இந்த வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை அதனால் அலட்சியத்தோடு செயல்பட்டு நோய்ப் பரவுதலுக்கு வழிவகுத்துவிட வேண்டாம்.

சென்னையைச் சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் ராமசுப்ரமணியத்திடம் இது குறித்து கூறுகையில், கொரோனா மட்டுமில்ல எந்த ஒரு வைரஸும் வெப்பம், குளிர், மிதமான சூழல் என எதைப் பொறுத்தும் வைரஸின் தீவிரம் அதிகரிக்கவோ குறையவோ செய்வதில்லை.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 

ஹேண்ட் வாஷ், சோப் போன்றவற்றில் ஏதேனுமொன்றின் மூலம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கைகழுவிக் கொண்டே இருங்கள்.

அடுத்ததாக, சுயசுத்தம் மிக முக்கியம், இருமல், தும்மலின்போது மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளுங்கள்.

Corona Virus – கரோனா வைரஸ் – ஆபத்தானதா?

3

சூப்பர் வோர்ம் மூன் (Super Worm Moon) வரப்போகிறது பார்க்க ரெடியா?

0
சூப்பர் வோர்ம் மூண் (Super Worm Moon)
சூப்பர் வோர்ம் மூண் (Super Worm Moon)

சூப்பர் வோர்ம் மூண் (Super Worm Moon) வரப்போகிறது பார்க்க ரெடியா? சூப்பர் வோர்ம் மூண் என பெயர் எப்படி வந்தது? சூப்பர் வோர்ம் மூன் எப்பொழுது தெரியும்.

சூப்பர் வோர்ம் மூன் மார்ச் 9-ஆம் தேதி ஆரம்பித்து புதன் கிழமை வரை தெரியும். இந்த வருடத்தின் இரண்டாவது சூப்பர் மூன் இதுவாகும். ஏற்கனவே பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் சூப்பர் மூன் வந்து போனது.

இன்று இரவு வரும் சூப்பர் வோர்ம் மூன் மாலை 6.30 மணியில் இருந்து தெரிய ஆரம்பிக்கிறது. பிற நாட்களில் தெரியும் நிலாவை விட சற்று பெரிதாகவும் வெளிச்சமாகவும் தெரியும்.

நிலா பூமியை மற்ற கோள்களைப் போல் நீள்வட்டத்தில் சுற்றி வருவதால் பூமியும் நிலவும் மிக அருகில் வந்தால் பெரியதாக வெளிச்ச்மாக தெரியும் அதுவே சூப்பர் வோர்ம் மூண்.

1979-ஆம் ஆண்டில் முதன் முதலில் இதற்கு சூப்பர் மூன் என பெயரிடப்பட்டது. அதன் பிறகு நாள் செல்ல இது பிரபலமானது.

சூப்பர் வோர்ம் மூண் என பெயர் எப்படி வந்தது?

மார்ச் மாதத்தில் அதாவது வசந்தா காலங்களில் மண் புழுக்கள் அதிகம் உற்பத்தி ஆகிற காலங்கள் இதனால் பறவைகளுக்கும் விவசாய உற்பத்திக்கும் நல்வழி வகுக்கும். இது வோர்ம் மூண் என அழைக்க காரணம்.

மேலும் இந்த வரும் ஸ்பிரிங் ஈக்குவனிக்ஸ் மார்ச் 19ஆம் தேதி வருகிறது. கடந்த 100 வருடங்களுடன் ஒப்பிடுகையில் மிக சீக்கிரமாக வரப்போகிறது.

சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன்: சந்திர கிரகணம்

இந்த சூப்பர் மூனை நாடு மக்களின்  காலாச்சாரத்திற்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.

அவை பின்வருமாறு க்ரோ மூன், கிரஸ்ட் மூன், ஷாப் மூன், சுகர் மூன், லேண்டான் மூன் (the crow moon, the crust moon, the sap moon, the sugar moon and the Lenten moon).

சூப்பர் வோர்ம் மூன் எப்பொழுது தெரியும்

மார்ச் 9-ல் ஆரம்பித்து மூன்று நாட்களுக்கு தெரியும். திங்கட்கிழமை இரவு மிகவும் வெளிச்சமாகவும் பெரிதாகவும் தெரியும்.

அடுத்த சூப்பர் மூண் ஏப்ரல் 8-ஆம் தேதி 2020 இல் வரும் இதற்கு சூப்பர் பிங்க் மூன் என பெயர் இடப்பட்டு உள்ளது.

பொதுவாக வருடத்திற்கு மாதத்திற்கு ஒன்று என 12 பவுர்ணமி வரும் இந்த வருடம் அக்டோபர் மாதம் இரண்டு பவுர்ணமி 1-ஆம் மற்றும் 31ஆம் தேதிகளில் வருகிறது. இதற்கு புளு மூண் என பெயர்.

3

மிஸ் இந்தியா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
Miss India Release Date

Miss India Release Date; கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் மிஸ் இந்தியா படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், விக்ரம் என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில், மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் (மகாநடி) என்ற படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்றார்.

இந்த நிலையில், நேற்று உலகம் முழுவதும் பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக படங்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வந்தது.

இதில், ஜோதிகா, நந்திதா ஆகியோரது படங்களின் அப்டேட் வந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

மகளிர் தின வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் மிஸ் இந்தியா (Miss India Release Date) படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார்.

மிஸ் இந்தியா ரிலீஸ் தேதி (Miss India Release Date)

அதன் படி, வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி மிஸ் இந்தியா திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, எப்போதும், நாங்க இருக்கிற இடத்தில் மேஜிக் இருக்கும் என்று பதிவிட்டு மகளிர் தின சிறப்பு வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார்.

நரேந்திரநாத் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் புதிய படம் மிஸ் இந்தியா.

முழுக்க முழுக்க ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னணி ரோலில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்காக அவரது உடல் எடையை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

3

கறாரான காக்கி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு!

0
Karaarana Khakki Song Lyrical

Karaarana Khakki Song கறாரான காக்கி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

ஐபிசி 376 படத்தின் கறாரான காக்கி பாடலின் லிரிக் (Karaarana Khakki Song) வீடியோ வெளியாகியுள்ளது.

ஐபிசி 376 (IPC 376) இயக்குநர் ராம்குமார் சுப்பராமன் இயக்கத்தில் நந்திதா நடிப்பில் உருவாகி வரும் அதிரடி த்ரில்லர் படம். எஸ் பிரபாகர் இப்படத்தை தயாரிக்கிறார்.

அட்டகத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்திதா. அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, தேவி 2, 7 என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ஐபிசி 376 என்ற போலீஸ் கதையில் நடித்து வருகிறார். இதில் முதல் முறையாக போலீஸ் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தின் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமலே நடித்துள்ளதாக நந்திதாவே தெரிவித்துள்ளார்.

ஐபிசி 376ம் படத்தில் மதுசூதன் ராவ், மகாநதி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். யாதவ் ராமலிங்கம் படத்திற்கு இசையமைக்கிறார்.

கறாரான காக்கி (Karaarana Khakki Song Lyrical)

இந்த நிலையில், ஐபிசி 376 படத்தில் இடம்பெற்றுள்ள போலீஸ் பாடலான கறாரான காக்கி பாடலின் லிரிக் (Karaarana Khakki Song Lyrical) வீடியோ வெளியாகியுள்ளது.

கறாரான காக்கி (Karaarana Khakki Song Lyrical) பாடலின் போது நந்திதா சண்டைக் காட்சியில் ஈடுபட்டுள்ளது போன்று காட்டப்பட்டுள்ளது.

கறாரான காக்கி பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

இந்தப் பாடலை மெட்ரான் மாறன் எழுதியுள்ளார். கானா பாலசந்தர் கறாரான காக்கி பாடலை பாடியுள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு கறாரான காக்கி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்ட நிலையில், விரைவில் திரைக்கு வரயிருக்கிறது.

3