Home Blog Page 232

09/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

09/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்று அவநம்பிக்கை எண்ணங்கள் தோன்றும். உங்கள் தன்னம்பிக்கையினால் அனைத்தும் சாதகமாக மாற்றுவது தங்கள் கையில் தான் உள்ளது.

பணியில் தடைகளை உடைத்து வெற்றி காண்பீர்கள். தங்களின் துணையை சமாதனமாக வைப்பது கடினம். பணவரவு சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சந்திர சேகரரை வணங்க தடைகள் விலகும்.

ரிஷபம் ராசிபலன்

இன்றைய நாள் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்யாது. பணிகளை கவனமாக கையாள வேண்டி இருக்கும். வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.

வீட்டில் சிறு பிரச்சனைகளையும் பெரிதாகக்க வேண்டாம். பண வரவில் சிக்கல் ஏற்படும். மகிழ்ச்சி ஒன்று உங்களின் மனநிலையை சீராக வைக்கும்.

சந்திர பகவானை வெள்ளை நிற மலர் சாற்றி வழிபட குழப்பம் தீரும்.

மிதுன ராசிபலன்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். நீங்கள் உங்களின் திறமையை அறிந்து செயலாற்றுவீர்கள். பணியில் பாராட்டுகள் குவியும்.

நண்பர்கள் இல்லம் சென்று வருவீர்கள். நட்புறவு மேம்படும். எதிர்பாராத பணவரவு வர வாய்ப்புண்டு. உடல்நிலை உற்சாக இருக்கும்.

அம்பிகையை வழிபட கூடுதல் பலன் உண்டு.

கடக ராசிபலன்

உங்களின் பிராத்தனை மற்றும் வழிபாடு ஒன்றே உங்களின் நாளை சிறப்பாக இருக்கும். பதட்டத்தை குறைத்து பணியாற்றவும்.

தங்களின் துணையிடம் சுமுகமான மனநிலை இருக்காது. தன லாபம் குறைவாக இருக்கும்.

விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்ற நன்மைகள் கிடைக்கும்.

சிம்மம் ராசிபலன்

உங்களின் வாழ்வில் திருப்பங்கள் வரலாம். நெருங்கிய நண்பர்களின் ஆலோசனைகள் உங்கள் நாளை வளமாக்கும்.

துணையிடம் மகிழ்ச்சியின்மை காணப்படும். வரவும் செலவும் சமமாக இருக்கும். மன சோர்வு இருக்கும்.

சந்திரனை வழிபட கவலைகள் குறையும்.

கன்னி ராசிபலன் 

இன்று கடினமான சவாலான நாளாக இருக்கும். இறை பக்தி அவசியம். பணிசுமை அதிகமாக காணப்படும்.

வீட்டில் சூடான விவாதங்கள் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படும். தலை வலி காணப்படும் சோர்வாக இருப்பீர்கள்.

பெருமாளை வழிபட துன்பங்கள் அகலும்.

துலாம் ராசிபலன்

இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். பணியில் வெற்றி காண்பீர்கள். பொன்னான நாளாக அமையும்.

கணவன் மனைவியிடையே காதல் அதிகரிக்கும். லாபம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் குறையில்லை.

மகாலட்சுமியை வழிபட பலன்கள் கூடும்.

விருச்சிக ராசிபலன்

இன்று அனைத்து காரியங்களிலும் வளர்ச்சி கிடைக்கும். தடைப்பட்டு நின்ற காரியங்கள் முடிவுகளை எட்டும்.

பணியில் பாராட்டுகள் குவியும். லாபம் அதிகரிக்கும். துணையிடம் அன்பான நல்லிணக்க நிலை உண்டாகும். கடன் பணம் திரும்பி வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விநாயகரை வழிபட பலன்கள் கூடும்.

தனுசு ராசிபலன்

இன்று விரைவான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். மகிழ்ச்சிக்கான வழியை தேடுவீர்கள். அன்றாட பணிகளை செய்வதில் கவனம் தேவை.

துணையுடன் மனம் திறந்து பேசவும். பணவரவ சிறப்பாக இருக்காது. கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

அம்பிகையை வேண்ட நல்ல பலன்கள் வரும்.

மகரம் ராசிபலன் 

இன்று பதட்டமான நாளாக இருக்கும். ஆன்மீக பயணம் மற்றும் குருமார்கள் சொற்பொழிவுகள் கேட்க மனம் ஆறுதல் அடையும். பணியில் திட்டமிடல் அவசியம்.

கணவன் மனைவியிடையே அனுசரணை தேவை. நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. முதுகு பிரச்சனைகள் வரலாம்.

சிவபெருமானை வழிபட நல்ல பலன்கள் கிடைக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி நிச்சயம். பணியில் ஊக்கத்துடன் இருப்பீர்கள்.

கணவன் மனைவி இடையே அர்பணிப்பு உணர்வு காணப்படும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். உங்களின் நேர்மைக்கு பாராட்டுகள் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும்.

மகாலட்சுமியை விளக்கேற்றி வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

மீனம் ராசிபலன் 

இன்று இனிமையான நாளாக அமையும். மெல்லிசை கேட்டு மகிழ மனம் சீராக இயங்கும். பணியில் சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும்.

துணையுடன் மகிழ்ச்சியாக பேசி மகிழ்வீர்கள். போதுமான பணம் கிடைக்கும். பணத்தை சேமியுங்கள். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிவ பெருமானை வழிபட பலன்கள் கூடும்.

09/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

சாவித்திரிபாய் புலே; இந்திய பெண்ணியத்தின் தயார்

0

சாவித்திரிபாய் புலே; இந்திய பெண்ணியத்தின் தயார்

இந்தியாவில் முதலில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்காக போராடிய பெண்மணி சாவித்திரிபாய் புலே ஆவார். பாலின மற்றும் ஜாதிய அடிப்படையில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை எதிர்த்து போராடினார்.

சாவித்திரிபாய் ஒரு சமூக ஆர்வலர் மற்றும் பெண் கவிஞர் ஆவார். இந்தியாவின் முதல் ஆசிரியை என்று அழைக்கப்படுகிறார். மேலும் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்ததால் இந்திய பெண்ணியத்தின் தயார் என்று அழைக்கப்படுகிறார்.

சாவித்திரிபாய் புலே வாழக்கை வரலாறு

1831ஆம் ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நைகன் என்னும் கிராமத்தில் பிறந்தார். தன்னுடைய 9 வயதில் ஜோதிராவ் புலேவை 1840இல் மணந்தார். இவர்கள் இருவரும் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடினர்.

1848ஆம் ஆண்டு ஜாதி மற்றும் பாலின ரீதியா ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு கல்வி பெற்று கொடுக்க முயற்சிகள் பல செய்து பெண்களுக்கென தனி பள்ளி அமைத்தார்.

இவர்களின் போராட்டம் பார்ப்பனர்களுக்கு எதிராக அமைந்தது. குறிப்பாக தலித் மக்களுக்கு எதுவும் கிடைக்க விடாமல் தடுத்ததே இந்த பார்ப்பனர்கள் தான்.

தலித் மக்களை படிக்க வைப்பதற்காக மேல் ஜாதி மக்களிடமிருந்து அதிக எதிர்ப்புகளும் தொந்தரவுகளும் சந்திக்க வேண்டியதாக அமைந்தது.

இத்தனை தடைகளையும் மீறி கணவன் மனைவி இருவரும் வாழ்நாளில் 18 பள்ளிகளுக்கு மேல் கட்டி தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி அளித்து வந்தார்.

விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார்.

1870ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.

இதனால் தான் இந்தியாவின் முதல் ஆசிரியை என்றும் பெண்ணியத்தின் தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்.

3

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – திரைவிமர்சனம்

1

தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கிய திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

துல்கர் சல்மான், ரக்ஷன், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன், கௌதம் மேனன் நடித்துள்ளனர்.

அண்டோ ஜோசப் பிலிம் கம்பனி மற்றும் வைகோம் 18 மோஷன் கம்பெனி இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு கே.எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் ஆரம்பமாகும் போது முதல் பத்து நிமிடங்களில் பொறுமையை சோதித்து ஏன் இந்த படத்திற்கு வந்தோம் என்று நினைக்க தோன்றும்.

பிறகு படத்தின் கதைகள் நகர நகர நாம் சீட்டின் நுனிக்கே வந்து விடும் அளவிற்கு சஸ்பென்ஸாக செல்கிறது.

எதிர்பாராத திருப்பங்களுடன் அடுத்து நாம் நினைப்பது போல் இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்துள்ளது இந்த படம்.

வழக்கம்போல துல்கர் சல்மான் நடிப்பில் எதார்த்தத்தை புகுத்தி நம்மை ரசிக்க வைக்கிறார்.

நடிகருடன் கூடவே வரும் ரக்ஷன் சிறுசிறு காமெடி வசனங்கள் மற்றும் பாடல் போட்டு பதில் சொல்லும் நம் சிரிப்பை மட்டுமில்ல கைதட்டல்களை அள்ளுகிறார்.

இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமே நடிகையும் அவரது தோழியும் மிகவும் அருமையாகவும், திறமையாகவும், அழகாகவும் நடித்துள்ளார்.

ரிது வர்மா மற்றும் அவருக்குத் தோழியாக வரும் இயக்குனர் அகத்தியன் மகளான நிரஞ்சனி அகத்தியன் நேர்த்தியாக நடித்துள்ளார்.

போலீசாக வரும் கௌதம் மேனன் சில காட்சிகளில் அவரது படத்தில் வரும் நடிகர்களை அவர் நடிப்பில் நாம் காணலாம்.

இவர் வரும் காட்சிகள் அனைத்தும் மாஸ் ஆகவும் உள்ளது, இறுதியில் இவர்தான் படத்தின் பைனல் டச் என்று கூட சொல்லலாம்.

படத்தின் விறுவிறுப்பு முதல் பாதியில் ஆரம்பித்து இரண்டாம் பாதி இறுதிவரைக்கும் நம்மளை கொண்டுவந்தது இயக்குனரின் திறமை என்று கூட சொல்லலாம். இவர் அறிமுக இயக்குனர் என்று சொன்னால் நம்பமுடியாத அளவிற்கு இயக்கியுள்ளார்.

படத்தை அழகாகவும், வண்ணமயமாகவும் ஒளிப்பதிவு செய்த கே எம் பாஸ்கரனை நாம் கொண்டாடிய ஆக வேண்டும்.

படத்தில் பல லாஜிக் இல்லாவிட்டாலும் அதை நாம் யோசிக்க கூட முடியாத அளவிற்கு அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்தது பாராட்டத்தக்கது.

ரக்ஷன் அறிமுகம் படம் என்றாலும், தனியார் தொலைக்காட்சியில் பரிச்சயமான முகம் என்பதாலே இவர் சிவரஞ்சினி உடன் செய்யும் காமெடி அனைத்தும் நன்றாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் முக்கியமான ஒன்று பின்னணி இசை தான், ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இந்த படத்துக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

தேவையான இடத்தில் மட்டும் இசையை அதிகப்படுத்தி, கதைக் களத்துக்கு ஏற்றது போல் தன் வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார்.

படத்தின் முதல் பாடல் நம்மளை சோதித்தாலும், அடுத்தடுத்து வரும் பாடல்கள் அனைத்தும் கதையோடு ரசிக்கும்படி உள்ளது.

இந்த படத்திற்கு முக்கியமான மூன்று பேர் துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் இந்த கதாபாத்திரத்தை மூவரும் தேர்ந்தெடுத்து நடித்தது இவர்களின் சிறப்பு.

இந்த படம் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஒரு முறையாவது திரையரங்கு சென்று பார்க்கும் அளவிற்கு உள்ளது.

குறிப்பு : கதை கேட்காமல் சென்றால் படம் சுவாரசியமாக இருக்கும்.

Kannum kannum kollaiyadithal movie review

3

மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் அப்டேட் இதோ!

1
Master Second Single Update

Master Second Single; மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் குறித்து அறிவிப்பு வந்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் பட வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், மாஸ்டர் படம் குறித்து தொடர்ந்து அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மாஸ்டர் (Master)

பிகில் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய், தளபதி64 படமான மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அதுவும், கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

குட்டி ஸ்டோரி (Master First Single)

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் டிராக் குட்டி ஸ்டோரி பாடல் லிரிக் வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் வைரலானது.

இதையடுத்து, மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் (Master Second Single) எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் (Master Second Single)

அதில், மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், எங்கு என்று அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், விஜய் குறுகிய கால சுற்றுலாவாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் புறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

மாஸ்டர் இரண்டாவது சிங்கிள், மாஸ்டர் இசை வெளியீடு ஆகியவற்றைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி65 (Thalapathy65)

மாஸ்டர் படம் வெளியான பிறகு விஜய், தனது 65 ஆவது படமான தளபதி65 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தளபதி65 குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

தற்போது உலகமே மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஆம், அதில், விஜய்யின் பேச்சைக் கேட்க சினிமா பிரபலங்கள் முதல் கோடான கோடி ரசிகர்கள் வரை பலரும் ஆவலுடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சூரரைப் போற்று சிங்கிள் டிராக் எப்போது?

1
Soorarai Pottru First Single

மண்ணுருண்ட லிரிக் வீடியோ (Mannurunda Lyrical Video) நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Soorarai Pottru; சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. வரும் மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் தினத்தை சூரரைப் போற்று படம் வெளியாகிறது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, சம்பத் ராஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என்பது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மண்ணுருண்ட லிரிக் வீடியோ (Mannurunda Lyrical Video)

அதன்படி நாளை மாலை 6 மணிக்கு மண்ணுருண்ட (Mannurunda) லிரிக் வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தை இயக்கியது ஒரு பெண் இயக்குநர் என்பதால், மகளிர் தினத்தில் சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக SudhaKongara மற்றும் SooraraiPottru ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இதற்கு முன்னதாக இன்று காலையில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் துணை நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

3

இந்திய அணியில் மீண்டும் ஹர்திக் பான்டியா

0

தென் ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் போட்டி இந்திய அணி அறிவிப்பு

தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

வருகிற மார்ச் 12ம் தேதி தொடங்க உள்ள இந்த போட்டி முதல் கொடி தர்மசாலாவில், இரண்டாவது போட்டி லக்னோவில், மூன்றாவது போட்டி கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது.

நேற்று ஏற்கனவே டீ காக் தலைமையில் 16 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியை அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது..

இன்று பிசிசிஐ இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. காயம் காரணமாக ரோகித் சர்மா விலகி உள்ளார்.

விராத் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவரே இந்த தொடரில் கேப்டனாக தொடர்கிறார்.

தவான், பான்டியா ரிட்டன்ஸ்

காயம் காரணமாக விலகியிருந்த ஷிகர் தவான் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளது இந்திய அணிக்கு கூடுதல் பலம் .

அதிரடி ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா அணியில் மீண்டும் திரும்பியுள்ளார் இதனால் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வரிசை பலம் வாய்ந்ததாக உள்ளது.

நியூசிலாந்துக்கு ஒரு நாள் தொடரில் மயங்க் அகர்வால் ஷிவம் டுபே கேதர் ஜாதவ் சரியாக விளையாடாவிட்டால் அவர்களை அணியில் இருந்து நீக்கியுள்ளது.

அவர்களுக்கு பதிலாக ஷிகர் தவான் ஹர்திக் பாண்டியா, இளம் வீரர் ஷப்னம் கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விபரம்

வீராத் கோலி, கேஎல் ராகுல், ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், பிரித்வி ஷா, குல்திப் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, சஹால், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷப்னம் கில், நவ்தீப் சைனி.

3

இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்

0

மார்ச். 8: 7வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. 

பத்து அணிகள்

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும்,

பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் லீக் போட்டியில் விளையாடியது

பிரிவு ‘ஏ’ வில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், பிரிவு ‘பி’யில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

அரையிறுதி ஆட்டங்கள்

மழைக்காரணமாக முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து போட்டி கைவிடப்பட்டது. புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்ததால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றோரு அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி மோதின. டிஎல் முறைப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மெல்போர்னில் இறுதி போட்டி தொடங்கியது.

ஹீலி மற்றும் மூனி அதிரடி

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டகாரர்களாக அலெக்ஸா ஹீலி மற்று மூனி முதல் நான்கு ஓவர்களில் 38ரன்கள் எடுத்தனர்.

முதல் ஓவரில் தீப்தி பந்து வீச ஹீலி தூக்கி அடித்த பந்தை ஷாபாலி வர்மா கேட்சை தவறவிட்டார்.ராஜேவஸ்வரி யிம் ஹீலிக்கு மீண்டும் ஒரு கேட்சை தவறவிட்டார்.

இதை பயன்படுத்திக் கொண்ட ஹீலி அதிரடியாக ஆடி  39 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். மூனி தன் பங்குக்கு 54 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்.

இந்திய பவுலர்கள் கணிசமாக ரன்களை வாரி வழங்கினார்கள் சிகா பான்டே 4 ஓவர்கள் பந்துவீசி 52 ரன்கள் கொடுத்தார். தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர். இவர்களை பிரிக்க இந்தியா 11 ஓவர்கள் எடுத்துக் கொண்டது.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா வெற்றி

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முதல் ஓவரிலே ஷாபாலி வர்மா விக்கெட் இழந்தது, மூன்றாவது ஓவரில் ரோட்ரீக்ஸ் விக்கெட்டையும் இழந்தது. இரண்டாவது ஓவரில் பாட்டியா ரிடய்ரடு கட் செய்து வெளியேறினார்.

கவுர் மற்றும் மந்தனா

இந்த உலககோப்பை முழுவதும் இந்தியா கேப்டன் கவுர் மற்றும் மந்தனா பெரிதாக சோபிக்கவில்லை இதுவே இந்திமாவிற்கு பெரும் பின்னடைவு.

ஆஸ்திரேலியா அணியிடம் 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக உலககோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

இந்தியா அணியில் ஷாபாலி 2, மந்தனா 11, கவுர் 4, ரோட்ரிக்ஸ் 0, தீப்தி சர்மா 33, கிருஷ்ணமூர்த்தி 19, கோஷ் 18 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்கள்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஷுட் 4 விக்கெட்டும் ஜோனேஸன் 3 விக்கெட்டும், மோலினெக்ஸ், கிம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

போராட்டமில்லாத இந்தியா

தோல்வியே சந்திக்காமல், அரையுறுதியில் ஃப்ரி பாஸில் வந்த இந்திய அணி,  பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ப்ஃல்டிங்கில் என எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் இந்தியா தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் பீல்டிங்கில் அற்புதமாக செயல்பட்டது வெளிப்படையாகவே தெரிந்தது அவர்கள் பந்தை தடுப்பதில் மிகவும் துள்ளியமாக செயல்பட்டனர்.

விருதுகள்

ஆட்டநாயகன் விருதை  39 பந்தில் 75 ரன்கள் எடுத்த அலிக்ஸா ஹீலி வென்றார். இவருக்காக இவருடைய கணவரும் ஆஸ்திரேலியா வீரரான மிட்சல் ஸ்டார்க் வருகை தந்து உற்சாகமூட்டினார்.

தொடர் நாயகன் விருதை பெத் மூனி வென்றார். ஆறு போட்டிகளில் 259 ரன்கள் குவித்து, 3 அரைசதங்களுடன் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார்.

இவர் கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் லீக் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வென்றவுடன் இந்தியாவின் 16 வயதே ஆன ஷாபாலி வர்மா கண்ணீர் விட்டு அழுதது பார்க்க கடினமாக இருந்தது.

இறுது போட்டிக்கு இதுவரை செல்லாத இந்திய அணி தற்போது முதல் முறை சென்றது மிகப்பெரிய வெற்றியே. தோல்வி ஒன்றும் பெரிது இல்லை, அடுத்த முறை நாம் வெல்வோம் என்று கடந்து செல்வோம்.

பிளிந்தா கிளார்க் கையில் இருந்து உலககோப்பையை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் லானிங் வாங்கினார்.

சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் சேர்த்து மொத்தம் 87000 மக்கள் மத்தியில் உலககோப்பை வாங்கி மகளிர் தினத்தை வெற்றியோடுக் கொண்டாடி வருகிறது ஆஸ்திரேலியா அணி.

3

மகளிர் தின கொண்டாட்டத்தில் நயன்தாரா!

0
Nayanthara At Womens Day Celebration

Nayanthara, Womens Day Celebration; மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த பெண்கள் பாதுகாப்பு பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நயன்தாரா பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா (Nayanthara). இவர், விஜய், அஜித், ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான படம் தர்பார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் அம்மனாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலானது.

உலகம் முழுவதும் மகளிர் தினம் (International Womens Day 2020) இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெண்கள் அனைவருக்கும் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து சென்னையில் பெண்கள் பாதுகாப்பு பேரணியை நடத்தினர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நயன்தாரா, பெண்கள் பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கப்பட்ட இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கப்பட்ட இந்த பேரணி நுங்கம்பாக்கம் பகுதியில் நிறைவடைந்தது.

3

Indw vs Ausw: ஹீலி-மூனி அதிரடியில் 184 ரன்கள் இலக்கு

0
Indw vs Ausw

Indw vs Ausw: T20 Final Update; ஹீலி-மூனி அதிரடியில் இந்தியாவிற்கு 184 ரன்கள் இலக்கு என நிர்ணயித்தது ஆஸ்திரேலிய மகளிர் அணி.

இந்திய மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் அணி உலகக்கோப்பை டி 20 இறுதிப்போட்டியில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா ஆடவர் அணியின் வேகபந்து வீச்சாளர் ஸ்டார்க் மனைவி அலிஷா ஹீலி இந்த மகளிர் பவுலர்கள் தொம்சம் செய்து வருகிறார்.

முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலியா 14 ரன்கள் எடுத்தது. ஹீலி கொடுத்த சற்று கடினமான கேட்சை ஷபாலி விட்டுவிட்டார். ராஜேவஸ்வரி யிம் ஹீலிக்கு மீண்டும் ஒரு கேட்சை தவறவிட்டார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திய அலிஷா ஹீலி 75 (39 பந்து) ரன்கள் குவித்தார். 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

அவருடன் களம் இறங்கிய மூனி இறுதி வரை பொறுமையாக ஆடி 78 (54 பந்து) ரன்கள் எடுத்தார்.

இந்திய பவுலர்கள் கணிசமாக ரன்களை வாரி வழங்கினார்கள் சிகா பான்டே 4 ஓவர்கள் பந்துவீசி 52 ரன்கள் கொடுத்தார். தீப்தி சர்மா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர். இவர்களை பிரிக்க இந்தியா 11 ஓவர்கள் எடுத்துக் கொண்டது.

20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் இந்தியாவிற்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.

3

பொன்மகள் வந்தாள் செகண்ட் லுக் போஸ்டர்!

0
Ponmagal Vandhal Second Look Poster

Ponmagal Vandhal Second Look; பொன்மகள் வந்தாள் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார்.

பொன்மகள் வந்தாள் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு மகளிர் தினத்தில் சிறப்பு செய்துள்ளது ஜோதிகாவின் பொன்மகள் படக்குழு.

ஜோதிகா

ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார்.

இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

பொன்மகள் வந்தாள் (Ponmagal Vandhal)

தற்போது ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

அண்மையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில், ஜோதிகா வழக்கறிஞர் தோற்றத்தில் இடம் பெற்றிருந்தார்.

ஆதலால், இந்தப் படம் முழுக்க முழுக்க பெண்களை பற்றிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பொன்மகள் வந்தாள் செகண்ட் லுக் போஸ்டர் 

த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் (Ponmagal Vandhal Second Look) வெளியாகியுள்ளது.

இதில், ஜோதிகா கையில் ஒரு ஃபைல் வைத்திருக்கிறார். மேலும், அவரது பின்புறம் தாமதமான நீதி அநீதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, கையில் துப்பாக்கி மற்றும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் சுத்தில்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானதற்கு பலரும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தில், ஜோதிகாவுடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார்.

இதற்கு முன்னதாக நடிகை அம்பிகா, லட்சுமி, அனுஷ்கா, நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், அஜித், விஜய், கமல் ஹாசன் ஆகியோர் பலர் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகை ஜோதிகாவும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 27 ஆம் தேதி பொன்மகள் வந்தாள் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

3