Home Blog Page 233

T20 Final Update; இந்தியா பவுலர்களை துவம்சம் செய்யும் ஸ்டார்க் மனைவி அலிசா ஹீலி

0
T20 Final Update;

T20 Final Update; இந்தியா பவுலர்களை துவம்சம் செய்யும் ஸ்டார்க் மனைவி ஹூலி

இந்திய மகளிர் vs ஆஸ்திரேலியா மகளிர் அணி உலகக்கோப்பை டி 20 இறுதிப்போட்டியில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியா ஆடவர் அணியின் வேகபந்து வீச்சாளர் ஸ்டார்க் மனைவி அலிஷா ஹீலி இந்த மகளிர் பவுலர்கள் தொம்சம் செய்து வருகிறார்.

முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலியா 14 ரன்கள் சேர்த்தது.

ஹீலி கொடுத்த சற்று கடினமான கேட்சை ஷாபாலி விட்டுவிட்டார்.

ஆஸ்திரேலியா அணி 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்துள்ளது. ஹீலி 57 ரன்கள் அடித்து அதிரடியாக விளையாடி வருகிறார்.

இப்போட்டியை நேரில் காண்பதற்காக ஸ்டார்க் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகி ஆஸ்திரேலியா சென்றது குறிப்பிடத்தக்கது.

3

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தா.முத்து காலமானார்

0
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தா.முத்து
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தா.முத்து

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தா.முத்து காலமானார்

90 வயதான முன்னாள் திமுக சட்டமன்ற மேலவை உறுப்பினர் ப.தா.முத்து இன்று காலை உடல்நல குறைவால் காலமானார். மறைந்த ப.தா.முத்து 1968 முதல் 1974 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தவர்.

இவர் சேலம் மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகனின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இவரது இறப்பிற்கு திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

நேற்று தி.மு.க மூத்த தலைவரான பேராசிரியர் க. அன்பழகன் இயற்கை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

0

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென்ஆப்பிரிக்கா அணி மார்ச் 7ஆம் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா எதிரான 3 ஒருநாள் போட்டி மார்ச் 12 ஆம் தேதியிலிருந்து தென்னாபிரிக்க அணி விளையாடவுள்ளது.

நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியும் தென் ஆப்பிரிக்கா  அணி வென்று ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்தது.

இதே உற்சாகத்துடன் இந்தியா வருகை தரவுள்ள தென்னாபிரிக்க வலுவான அணியாக வர உள்ளது

மலன் மற்றும் ஸமட்ஸ்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ஜெனமேன் மலன் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிக்கு எதிராக கடைசி போட்டியில் 84 ரன்கள் மட்டும் இரண்டு விக்கெட் வீழ்த்திய ஆல்ரவுண்டரான ஜெ.ஜெ. ஸமட்ஸ் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.

டீகாக் கேப்டன்

கடந்த மாதம் பாப் டு பிளெஸிஸ் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். புதிய கேப்டனாக குயின்டன் டீ காக் நியமிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 போட்டி தொடரை இழந்தாலும், ஒரு நாள் தொடரை ஒயிட்வாஷ் செய்து வென்றார் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் விளையாட டீகாக் தலைமையில் 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா அணி விபரம்
SOUTH AFRICA SQUAD

பவுமா, வான்டர் டுஸன், டு பிளெஸிஸ், புளுகுவாயோ, டீ காக், மில்லர், ஜானமென் மலன், ஸமட்ஸ்,  ஜார்ஜ் லின்டி,  வேறினே, கிளாஸன், லுங்கி நெகிடி, சிப்பம்லா, ஹேன்ரீக்ஸ், நார்ஜே, மகாராஜ்

போட்டிகள்

முதல் போட்டி தர்மசாலா, இரண்டாவது போட்டி லக்னோ மற்றும் முன்றாவது கடைசி போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.
அனைத்து போட்டியும் பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

3

Walter: வால்டர் ஸ்னீக் பீக் வெளியீடு!

0
Walter Sneak Peek

Walter Sneak Peek; வால்டர் ஸ்னீக் பீக் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் வால்டர் (Walter). தற்போது வால்டர் ஸ்னீக் பீக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் சத்யராஜ். ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தனது மகன் சிபிராஜையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

சிபிராஜ், ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு ஜோர், மண்ணின் மைந்தன், கோவை பிரதர்ஸ், நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் க்ரைம் த்ரில்லர் படமான வால்டர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

வால்டர் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருடன் இணைந்து சார்லி, சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி, ஷிரின் காஞ்ச்வாலா, நடராஜன் சுப்பிரமணியம், ரித்விகா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதையடுத்து, தற்போது வால்டர் படத்தின் ஸ்னீக் பீக் (Walter Sneak Peek) வீடியோ வெளியாகியுள்ளது.

வால்டர் ஸ்னீக் பீக் (Walter Sneak Peek)

இதில், சிபிராஜ் மற்றும் சார்லி இருவரும் பேசிக்கொள்கின்றனர். அதில் காணாமல் போகும் குழந்தை திரும்ப கிடைக்கிறது. ஆனால், மறுநாளே அந்த குழந்தை இறக்கிறது,

இது குறித்து எஸ்பியிடம் கூறினாலும், அவரிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. அப்படியே விரக்தியோடு அங்கிருந்து சிபிராஜ் புறப்பட்டுச் செல்கிறார்.

இறந்த குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற சிபிராஜ், ஒவ்வொரு குழந்தையும், ஒரு தலைமுறையோடு கனவு என்று டயலாக் பேசுகிறார்.

ஏன் குழந்தை காணாமல் போகிறது? காணாமல் போன உடனேயே குழந்தை கிடைக்கிறது. ஆனால், உடனே இறக்கிறது. இப்படி பல புரியாத புதிர்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனினும் க்ரைம் கதை என்பதால், ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 13 ஆம் தேதி வால்டர் படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனா அப்டேட்; கேரளாவில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு பாதிப்பு

0
கொரோனா அப்டேட்

கொரோனா அப்டேட்; கேரளாவில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு பாதிப்பு

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது.  இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்னதான் எடுத்தாலும் இதுவரை 34 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இன்று கேரளாவில் ஒரே குடும்பத்தில் 5 நபருக்கு கொரோனா பதிப்பு உறுதியாகிறுக்கிறது. இதனால் இந்தியாவில் 39 உறுதிபடுத்தப்பட்ட கொரோனா கேஸ் ஆகிவிட்டது.

தமிழகத்தில் கொரோனா; முதல் உறுதிபடுத்தப்பட்ட கேஸ்

அவர்கள் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் 29ஆம் தேதி இந்தியா வந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

3

ஃப்ரெண்ட்ஷிப் படப்பிடிப்பில் ஹர்பஜன் சிங்!

0
Friendship Shooting Spot

Harbhajan Singh; ஹர்பஜன் சிங், அர்ஜூன் ஆகியோர் இருக்கும் ஃப்ரெண்ட்ஷிப் (Friendship) புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரருமான ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) தொடர்ந்து தமிழில் டுவீட் பதிவிட்டு வருகிறார்.

இவ்வளவு ஏன், இதுவரை ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங்கும் (Harbhajan Singh) நடிக்கிறார்.

இதையடுத்து, வெப் சீரிஸ் ஒன்றில் ஹர்பஜன் சிங் நடிக்க இருப்பதாகவும், அதில், திருவள்ளுவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு திருவள்ளுவர் கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh). ஆம், ஜான் பால்ராஜ் மற்றும் சூர்யா இயக்கித் தயாரிக்கும் புதிய படம் ஃப்ரெண்ட்ஷிப்.

ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலம் லோஸ்லியா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானவர் லோஸ்லியா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் கவின் லோஸ்லியா இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது.

ஆனால், நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு அப்படியெல்லாம் எதுவும் இல்லாத மாதிரி இருவரும் காட்டிக்கொண்டனர்.

எனினும், தற்போது ஹர்பஜனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில், ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் நடித்து வருகிறார். ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இதில், அர்ஜூன், ஹர்பஜன் சிங் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

Malaysia airlines MH 370 விமானம் மறக்க முடியுமா? வரலாற்றில் இன்று

0
MALAYSIA AIRLINES MH 370

Malaysia Airlines MH 370 மலேசியா விமானம் எம்.எச்370 227 பயணிகளுடன் காணமல் போனது. வரலாற்றில் இன்று. விமானத்திற்கு என்ன ஆனது என இன்று வரை தெரியவில்லை.

Malaysia airlines MH 370

2014 ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி 227 பயணிகளும் 12 விமான ஊழியர்களும் மொத்தம் 239 பேர்களுடன் புறப்பட்ட எம்எச்370 விமானம் காணாமல் போன நாள் இன்று.

மலேசியா ஏர்லைன்ஸால் இயக்கப்படும் போயிங் 777-200ER எனும் விமானம் மலேசிய நேரப்படி கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து அதிகாலை 1.19 மணிக்கு போயிங் கேப்பிட்டல் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்கு கிளம்பியது.

தென்சீனக் கடல் பகுதிக்கு மேல் புறப்பட்டுச் செல்லும் போது, விமானம் 38 நிமிடங்கள் வரை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை தொடர்பில் இருந்தது.

பின்பு கட்டுபாட்டை இழந்து அடுத்த ஒரு மணிநேரம் வரை ராணுவ விமான ரோடர் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

370 கிலோ மீட்டரில் உள்ள மலாய் பெனின்சுலா மற்றும் அந்தமான் தீவை தாண்டி செல்லும்போது ராணுவ ரேடாரின் கட்டுப்பாட்டை அடுத்த ஒரு மணி நேரத்தில் இழந்தது.

விமானம் காணமல் போனது

அடுத்த சில நொடிகளில் இந்த விமானம் அதன் பாதையில் இருந்து விலகி காணமல் போனது. இந்த விமானத்தில் இறந்தவர்களில் அதிகபட்சமாக சீனர்கள் 153 பேர்களும், மலேசியர்கள் 50, பேரும் இந்தியர்கள் 5 பேர் உட்பட மொத்தம் 239 பேர்கள் ஆவார்கள்.

மேற்கு இந்திய பெருங்கடலுக்கு மேல் சென்றதால் அங்குதான் விமானம் விபத்துக்குள்ளானது என்று 2015-ல் இருந்து 2016-ஆம் ஆண்டு வரை அதிக பணச் செலவில் 120000 சதுர கிலோ மீட்டர் தூரத்தில் தேடப்பட்டது.

2017-ஆம் ஆண்டு ‘ஜாயிண்ட் ஏஜென்சி கோ ஆர்டினேஷன் சென்டர்’ மூலம் தேடுதல் நிறுத்தப்பட்டது.

இரண்டாவது முறையாக ஓசன் இன்ஃபினிட்டி என்ற தனியார் நிறுவனம் இந்த விமானத்தை தேடும் முயற்சியில் இறங்கியது. அடுத்த ஆறு மாதத்தில் தேடுதலில் பலன் இல்லாததால் தோல்வியுடன் திரும்பியது.

விமான விபத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக மலேசிய mh370 விமானம் விபத்து சிறிதும் கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது.

மலேசியா அரசாங்கத்தால் விமானத்தில் பயணம் செய்த பயணிகளும் ஊழியர்களும் இறந்து விட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்து நடைபெற்ற சில மாதங்களிலேயே இதே ரக விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் இந்த விமான நிறுவனத்தை அரசாங்கம் தனியாருக்கு ஒப்படைத்தது.

மீண்டும் இதுபோல் விபத்து நடந்தால் கூட இதை தொடர்பு கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு இந்த விமானம் இயக்கப்பட்டு வருகிறது .

இந்த விபத்தில் எவரும் இறக்காமல், எங்கோ உயிர் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று கடவுளிடம் மனம் வேண்டுகிறது.

மலேசியாவின் மிகப்பெரிய கருப்பு நாள் இன்று. உலகிலேயே விமான விபத்திகளில் சிறிய அளவு கூட கண்டுபிடிக்க முடியாத மர்மமாகவே உள்ளது.

இந்த விமானம் பற்றி பல வதந்திகள் கிளம்பின, அதில் ஒன்று விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது என்று.

இன்று இந்த விபத்து நடந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த விமானம் மற்றும் அதில் பயணம் செய்தவர்களுக்கு நினைவு நாளாக எண்ணி பிராத்திப்போம்.

3

நகை திருடும் பெண் கும்பல்; கோவில் திருவிழா கூட்டங்களே இலக்கு

0
நகை திருடும் பெண் கும்பல்
நகை திருடும் பெண் கும்பல்

நகை திருடும் பெண் கும்பல்; கோவில் திருவிழா கூட்டங்களே இலக்கு

கோவில் திருவிழா கூட்டங்களில் அடிக்கடி பெண்களின் நகை திருட்டு போவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் கோயம்பேத்தூரில் கோனியம்மன் கோவில் தேரோட்டம், கடந்த, 4ம் தேதி நடந்தது.

இதில் கூட்ட நெரிசலில் 35 நபரிடம் 10 சவரன் நகை கொள்ளை போனது. இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் சி‌சி‌டி‌வி கேமராவில் சந்தேகத்திற்குரிய 3 நபர்களை பிடித்தனர்.

இணையத்தில் தகவல் சேகரிக்கும் நகை திருடும் பெண் கும்பல்

சென்னை திருவான்மியூரை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி, 36, ரஞ்சித்குமார் மனைவி பராசக்தி, 36, பாண்டியராஜன் மனைவி இந்துமதி, 27, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இணையத்தின் மூலமும் உறவினர்களான மூவரும், இந்தியா முழுவதும் நடக்கும் கோவில் விழாக்கள் குறித்து இணையதளங்கள் மூலம் தகவல் திரட்டுகின்றனர்.

கூட்ட நெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நகை திருட்டை செயல்படுத்துகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் நடந்த விழாவிலும் நகை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

3

பெண்கள் தின சிறப்பு பதிவு: சில்லுக்கருப்பட்டி ஹலிதா ஷமிம்

0
பெண்கள் தின சிறப்பு பதிவு சாதனை மங்கைகள்
பெண்கள் தின சிறப்பு பதிவு: சில்லுக்கருப்பட்டி ஹலிதா ஷமிம் பெண் இயக்குனர். சாதனை மங்கைகள், பெண்களாலும் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்.
பெண்கள் தினச்சிறப்பு பதிவு : சில்லுக்கருப்பட்டியில் நம்மை கரைய வைத்த “ஹலிதா ஷமிம்” பற்றிய பதிவு!
சாதனை மங்கைகள்
அனைத்து பெண்களுக்கும்
இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் .

உலகெங்கும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலுமே தங்களது இருப்பையும் தங்களது பங்களிப்பையும் உறுதி செய்துகொண்டிருக்கின்றனர் பெண்கள்.

நம் தமிழ் சினிமாத்துறையிலும் பல பெண்கள் தனது பங்களிப்புகளை சிறப்பாக கொடுத்துள்ளார்கள், கொடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

திரைப்பட இயக்குனர்களாகவும் தங்களை நிலைநிறுத்தி கொண்டுள்ளனர். தற்போதும் நிலைநிறுத்தி கொண்டிருக்கிறார்கள்.

கடந்த வருடம் (2019) டிசம்பர் மாதத்தில் வெளிவந்து கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. அப்படத்தை இயக்கியவர் ஒரு பெண். அவரின் பெயர் ஹலிதா ஷமீம்.

ஹலிதா ஷமிம் அவர்களின் பூவரசம் பீப்பீ

சமுத்திரக்கனி, மிஷ்கின் மற்றும் விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி போன்றோர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பல வருட போரட்டத்திற்கு பிறகு “பூவரசம் பீப்பீ” என்ற படத்தை அவர் இயக்கினார்.

அவர் இயக்கிய முதல் திரைப்படம் அதுதான். படத்திற்கு விமர்சன ரீதியாக ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்த போதும், படம் வெளிவந்த புதிதில்  பெரும்பாண்மையான மக்களிடம் சென்று சேரவில்லை.

பிறகு கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சியின் வாயிலாக பூவரசம் பீப்பீயை நிறைய மக்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

பூவரசம் பீப்பீ திரைப்படத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு அறங்கேறிய கொடுமைகளுக்கு  காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிறுவர்கள் மூலம் பாடம் புகட்டுவது போன்ற நிகழ்வை சிறப்பாக கையாண்டிருப்பார், ஹலிதா அவர்கள்.

நாம் கரைந்த சில்லுக்கருப்பட்டி

கடந்த வருடங்களில் தமிழில் எக்கச்சக்க படங்கள் வெளியாகிருந்தாலும் மிகச்சில படங்களே வெற்றி பெற்றன.

அவற்றில் சில்லுக்கருப்பட்டி திரைப்படம் தவிர்க்க முடியாதது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை

சில்லுக்கருப்பட்டி படம் முழுவதும் அன்பையும் காதலையும் அழகியலுடன் கலந்திருப்பார், இயக்குனர் ஹலிதா அவர்கள்.

ஒரு ஆண் பார்வையில் திரைப்படம் இருப்பதற்கும் பெண் பார்வையில் திரைப்படம் இருப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

அவைகளைப் பார்த்தவுடன் தெரிந்துவிடும் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் நிச்சயமாக இருக்கும். அப்படியொரு பார்வை படம் முழுக்க நிறைந்திருக்கும்.

‘Hey அம்மு’வில் வரும் சுனைனாவின் மேனரிசம்களும் சமுத்திரக்கனியின் மேனரிசம்களுமே அதற்கு சாட்சி.

அந்தாலஜி

நமது கோலிவுட்டில் “அந்தாலஜி” முறையில் வெளிவந்து வசூல் விமர்சனம் என அனைத்து ரீதியாகவும் வெற்றி பெற்ற முதல் படம் இதுதான்.

இதற்கு முன்னமே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் வெளியீட்ட “அவியல்” மற்றும் துல்கர் சல்மான் நடித்த “சோலோ” போன்ற திரைப்படங்கள் அந்தாலஜி முறையில் வந்திருக்கிறது.

அப்படி அவைகள் வந்திருந்தாலும் சில்லுக்கருப்பட்டிக்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் அவற்றிற்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

சில்லுக்கருப்பட்டி அந்தாலஜி முறையில் வரும் திரைப்படங்களை மக்கள் இரசிப்பார்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது.

தன்னை ஒரு பெண் இயக்குனர் என்று தனித்து பிரகடனப்படுத்துவதை பெறும்பாலும் விரும்பாதவர்தான் ஹலிதா அவர்கள்.

ஏனெனில் Gender discrimination எதிலும் இருக்க கூடாது என எண்ணுபவர் அவர். தெரிந்தோ தெரியாமலோ அவர் மற்ற பெண்களுக்கான வாசலையும் திறந்து வைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை.

திரைப்படத்திலும் சுனைனாவின் கதாப்பாத்திரம் மூலம் அவர் செய்தது பல குடும்பங்களுக்குள் ஆனந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது நிதர்சனம்.

பூவரசம் பீப்பீ திரைப்படமாகட்டும், சில்லுக்கருப்பட்டி திரைப்படமாகட்டும் இரு படங்களிலுமே வசனங்கள் சிறப்பாக அமைந்திருக்கும்.

ஹலிதா அவர்களின் மிகப்பெரிய பலமாக இருப்பது வசனங்களும் கதையை எளிமையாக சொல்லும் திரைக்கதையும்தான்.

அடுத்து ஹலிதா ஷமிம் அவர்களின் இயக்கத்தில் இருந்து வரவிருக்கும் ‘மின்மினி’ திரைப்படமும், ‘ஏலே’ திரைப்படமும் வெற்றிபெற வேண்டுமென்ற வாழ்த்துகளோடு,

பெண்கள் தின சிறப்பு பதிவு. இனிய பெண்கள் தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைத்து பெண்களுக்கும் 

பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!

சிறப்பாக வாழுங்கள்! வழிநடத்துங்கள்!

அனைவருக்கும் ஆனந்தம் நிறையட்டும் !

3

எஸ் பேங்க் ரானாகபூர் கைது; அமலாக்கத் துறை அதிரடி முடிவு

0
எஸ் பேங்க் ரானாகபூர்
Yes Bank சேவையை கையில் எடுத்த RBI

எஸ் பேங்க் ரானாகபூர் கைது; அமலாக்கத் துறை அதிரடி முடிவு

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எஸ் பேங்க் சேவையை கையில் எடுத்த ஆர்‌பி‌ஐ சில வரைமுறைகளையும் கொண்டு வந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

வங்கி நிறுவனர் ரானாகபூர் கைது யெஸ் வங்கி நிறுவனர் ரானாகபூர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை அதிகாரிகள் விடிய விடிய ரனாகபூரை விசாரணை செய்ததாகவும் பலமணி நேர விசாரணைக்கு பிறகே அவரை கைது செய்ததாக தகவல்க வெளிவந்துள்ளன.

மேலும் ரனாகபூர் மீது பண மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வருவதாகவும் அவர் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய குற்றச்சாட்டு அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

Yes Bank சேவையை கையில் எடுத்த RBI ஒரே நாளில் 50% மேல் பங்குகள் விலை குறைவு

3