Home Blog Page 234

Ross Taylor Birthday : ராஸ் டெய்லர் பிறந்தநாள் இன்று

0

90’கிட்ஸ் நினைவு தெரிந்து கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை நியூஸிலாந்து அணியில் விளையாடி கொண்டிருப்பவர் தான் ராஸ் டெய்லர்.

மூன்று சதம் கண்ட டெய்லர்

ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நான்காவதாக களமிறங்க கூடியவர்தான் ராஸ் டெய்லர். மூன்று வகையான போட்டிகளிலும் 100 போட்டியில் விளையாடிய பெருமை ராஸ் டெய்லரே சேரும் .

பிறந்த இடம்

இவருடைய முழு பெயர் லுடேரு ரோஸ் பூட்டோவா லோட் டெய்லர். மார்ச் 8 ஆம் தேதி 1984 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்டன் மாநிலத்தில் லோயர் கட் என்ற இடத்தில் பிறந்தவர் தான் ராஸ் டைலர் ராஸ் டெய்லர்.

அறிமுக போட்டி

2006 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், 2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில், 2006 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவுக்கு எதிராக டி20 போட்டியிலும் அறிமுகமானவர்தான் ராஸ் டெய்லர்.

இவர் டெஸ்ட் போட்டியில் 101  டெஸ்டுகள் விளையாடி 7328 ரன்கள் குவித்து, சராசரி 46 வைத்துள்ளார்.
இதில் 19 சதங்களும் 33 அரை சதங்களும் அடங்கும்.

  தனிநபர் அதிகபட்சமாக 290 ரன்கள் எடுத்துள்ளார் இது நியூசிலாந்தில் மூன்றாவது அதிகபட்ச ரன் ஆகும்.

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த பட்டியலில் ராஸ் டைலர் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய தொடரில் முதலிடத்தை பிடித்தார்.

டெய்லர் கிரிக்கெட் குறிப்புகள்

231 ஒருநாள் போட்டியில் விளையாடிய இவர் 8520 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 48 வைத்துள்ள இவர், அதிகபட்சமாக 181 ரன்கள் குவித்துள்ளார். இதில் 21 சதங்களும் 56 அரை சதங்களும் அடங்கும்.

100 டி20 போட்டியில் விளையாடிய இவர் 1909 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 63 எடுத்து, சராசரி 26 வைத்துள்ளார்.

கேப்டனாக டெய்லர்

இவர் 20 ஒருநாள் போட்டி, 14 டெஸ்ட் போட்டி, 13 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து வந்துள்ளார்.

ஐபிஎலில் இவர்

ஐபிஎல் 2008- 2010  ஆம் ஆண்டு வரைக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு விளையாடி உள்ளார். ஒரு போட்டியில் அதிரடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 33 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்களை கவர்ந்தார்.

2011 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 4.6 கோடி அதிக தொகைக்கு விலை போனார். 2012 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தாவினார்.

2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு மாறி, மீண்டும் 2014 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு திரும்பினார்.

டெய்லரின் சாதனைகள்

  * டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த நியூசிலாந்து வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

  * நான்காவது வீரராக களமிறங்கி அதிக ரன் குவித்த பட்டியலில் நியூசிலாந்து வீரர்களில் முதலிடத்தில். சர்வதேச அளவில் ஆறாவது இடத்திலும் உள்ளார்.

  • நியூசிலாந்து அணியில் ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரி வைத்துள்ள வீரர் ராஸ் டெய்லர் 48.69.

  * ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் மற்றும் அதிக அரைசதம் அடித்த நியூசிலாந்து வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

இவர் இன்று தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

3

அப்பாவான சரவணன் மீனாட்சி புகழ் ரியோ!

0
Rio Raj Blessed With Baby Girl

Rio Raj, விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் ரியோ அப்பாவான சந்தோஷத்தில் என் உலகத்தை ஆள்வதற்கு இளவரசி பிறந்திருக்கிறாள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரியோ ராஜ்.

அதன் பிறகு கல்லூரி காலம், சுட சுட சென்னை, யுவர் அட்டென்ஷன் பிளீஸ் (Your Attention Please), காஃபி டீ ஏரியா ஆகிய சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

சரவணன் மீனாட்சி

விஜய் டிவியில் வந்த சரவணன் மீனாட்சி தொடரின் 3ஆவது சீசனில் சரவணனாக முன்னணில் ரோலில் அறிமுகமானார்.

இதன் மூலம் பிரபலமான ரியோ விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தார். தற்போது டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா

சின்னத்திரையைத் தொடர்ந்து ரியோ, வெள்ளித்திரையிலும் கால் பதித்தார். ஆம், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

அதற்கு முன்னதாக சத்ரியன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ரியோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமாக இருந்த ஸ்ருதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ரியோ ராஜ் (Rio Raj)

இதை ரியோ மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், என் உலகை ஆள இளவரசி வந்துவிட்டாள்.

ஆம், எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலம் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, பிரபலங்கள் பலரும் ரியோ – ஸ்ருதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜா ராணி சீரியல் பிரபலம் சஞ்சீவ் கார்த்திக் , ரியோ மற்றும் ஸ்ருதிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

அதில், ஒரே நேரத்தில் அப்பாவாகப் போகிறோம். ஒரே மருத்துவமனையில் தான் பரிசோதனை செய்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.

ஆம், சஞ்சீவ் கார்த்திக்கின் மனைவி ஆல்யா மானசாவும் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கும் குழந்தை பிறக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனா பயமில்லை: வெளிநாட்டுக்கு சென்ற விஜய் – வைரல் வீடியோ!

0
கொரோனா பயமில்லை Vijay Going to abroad Master Audio Launch

கொரோனா பயமில்லை: விஜய் வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Vijay Master Audio Launch

மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch) வரும் 15 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அவர் வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் செல்லும் வீடியோ, புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் விஜய் (Master Vijay)

பிகில் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மாஸ்டர் குறித்து ஒவ்வொரு நாளும் அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது.

மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch)

அந்த வகையில், மாஸ்டர் இசை வெளியீடு வரும் 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, சன் டிவி நிறுவனம் மாஸ்டர் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தங்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு கோடான கோடி ரசிகர்கள் இப்போதிலிருந்தே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டிற்கு முன்பாக விஜய் குறுகிய கால சுற்றுலாவாக வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் (Vijay Abroad)

சென்னை விமான நிலையத்தில் டிக்கெட்டுடன் வந்த விஜய்யின் புகைப்படம், வீடியோ வைரலாகிறது.

விஜய் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பிறகு மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

ஒவ்வொரு நடிகரும் படப்பிடிப்பு முடிந்த பிறகு வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி65 (Thalapathy65)

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தளபதி65 படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் திரைக்கு வந்த பிறகு தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

தமிழகத்தில் கொரோனா; முதல் உறுதிபடுத்தப்பட்ட கேஸ்

1
தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா; முதல் உறுதிபடுத்தப்பட்ட கேஸ். இரண்டாவது கன்ஃபார்ம் கேஸ். தமிழகத்தில் கொரோனா நுழைந்து விட்டது. corona virus tamilnadu

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது.  இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்னதான் எடுத்தாலும் இதுவரை 34 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் ஓமனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து ராஜாஜி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கரோனா அறிகுறி இருப்பதாக தெரியவர சென்னை ராஜாஜி மருத்துவமனையில் பொதுப்பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

3

பாரத் பெட்ரோலிய நிறுவனம் விற்க காரணம் என்ன?

0

பாரத் பெட்ரோலிய நிறுவனம் விற்க காரணம் என்ன?

பாரத் பெட்ரோல் பங்க் இந்தியா முழுவதும் மெட்ரோ சிட்டிகளில் இருந்து சிறிய கிராமங்கள் வரை இயங்கி லாபம் ஈட்டி வருகிறது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,051.43 கோடி ஈட்டியது. சென்ற ஆண்டுடன் இதை ஒப்புடுகையில் இது மூன்று மடங்கு அதிகம்.

பாரத் பெட்ரோல் நிறுவனத்தின் பங்குகளில் 52.98% பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதை வாங்குவோருக்கு குறைந்தது 73ஆயிரம் கோடி சொத்து மதிப்பு இருக்க வேண்டும்.

3

மாஸ்டர் இசை வெளியீடு தேதி அறிவிப்பு!

1
Master Audio Launch

Master Audio Launch; மாஸ்டர் இசை வெளியீடு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் Vijay நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் Master படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய் (Vijay)

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. மாஸ்டர் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியாகி உலக முழுவதும் வைரலானது.

இதையடுத்து, கோடிக்கணக்கான ரசிகர்கள் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆம், மாஸ்டர் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழாவில் விஜய் என்ன பேசுவார் என்பதை காண்பதற்கு ஆர்வமுடன் இருக்கின்றனர்.

நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பின் போது விஜய்யைப் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்தனர். அது அந்தப் பகுதியில் மட்டுமே உள்ள ரசிகர்கள்.

அவர்களை பார்த்து விஜய் கையெடுத்து கும்பிடுவதும், செல்ஃபி எடுத்துக் கொள்வதும் என்று அவரது புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

மாஸ்டர் இசை வெளியீட்டு (Master Audio Launch)

இந்த நிலையில், தற்போது மாஸ்டர் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் இசை வெளியீடு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டுவிட்டரில் #MasterAudioLaunch என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டை சன் டிவி நிறுவனம் தங்களது சன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்நிறுவனம் மாஸ்டர் படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Master USA Premiere Show

இதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அமெரிக்காவில் மாஸ்டர் பிரிமியர் ஷோ (Master USA Premiere Show) நடக்க இருப்பதாக திங்க் பிக் பிக்சர்ஸ்வ் நிறுவனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து திங்க் பிக் பிக்சரஸ் நிறுவனம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து மாஸ்டர் படத்தை அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளது.

இந்திய திரைப்படங்களை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள திங்க் பிக் நிறுவனம் ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து மாஸ்டர் படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது.

இதனால் படம் எப்படி இருக்கிறது என்ற தகவல் டுவிட்டரில் ஒரு நாள் முன்னதாக வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் அப்டேட் (Master Update)

தற்போது மாஸ்டர் டிரைலர், மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக், மாஸ்டர் இசை வெளியீடு என்று மாஸ்டர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது.

இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 65 ஆவது படத்தில் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் வெளியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

SA vs AUS Updates; ஆஸ்திரேலியாவை வெள்ளை அடித்த தென் ஆப்பிரிக்கா அணி

0
SA vs AUS Updates

SA vs AUS Updates; ஆஸ்திரேலியாவை வெள்ளை அடித்த தென் ஆப்பிரிக்கா அணி.

ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

முதலில் நடந்த டி20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணிவை ஆஸ்திரேலியா வீழ்த்தி தொடரை வெற்றிபெற்றது.

அடுத்து நடந்த ஒருநாள் போட்டியில் முதல் 2 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வென்று ஏற்கனவே தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

இன்று மூன்றாவது போட்டி சில்கட் மைதானத்தில் நடைபெற்றது.

தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் லபுசானே சதத்துடன் 7 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக லபுசானே 108 ரன்கள், வார்னர் 4 ரன்கள், பின்ச் 22 ரன்கள், ஸ்மித் 70 ரன்கள், ஷார்ட் 36 ரன்கள், மார்சஸ் 32 ரன்கள் அலெக்ஸ் கேரி ரன் ஏதும் எடுக்காமலும் , ரிச்சர்ட்ச்சன் 24 ரன்களும் எடுத்தனர்.

தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் நாட்ஜே மற்றும் ஸமட்ஸ் தலா 2 விக்கெட்டும் துபவிலோன் மற்றும் புலுக்குவாயோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது.

தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

தென்ஆப்பிரிக்காவின் அதிகபட்சமாக ஸ்மட்ஸ் 84 ரன்கள், கிலாசன் 68 ரன்கள், வெரினே 50 ரன்கள், டிகாக் 26 ரன்கள், மலன் 23 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாசல்வுட் 2 விக்கெட்டும், ரிச்சர்ட்ச்சன் மற்றும் ஜாம்பா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்க அணி டி20 தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்ததற்கு, ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை வெள்ளை அடித்து வீட்டுக்கு அனுப்பி பழிதீர்த்துக் கொண்டது.

84 ரன்கள் மற்றும் 2 விக்கெட் வீழ்த்திய ஸ்மட்ஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருதை கிலாசன் வென்றார்.

3

சேவாக் அதிரடியால் இந்திய லிஜெண்ட் அணி வெற்றி

0
இந்திய லிஜெண்ட் அணி ROAD SAFETY WORLD SERIES சேவாக்

சேவாக் அதிரடியால் இந்திய லிஜெண்ட் அணி வெற்றி. ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் (ROAD SAFETY WORLD SERIES) போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.

ஐந்து அணிகள்

இதில் 5 அணிகள், இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்க அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது.

ரோட் சேஃப்டி வேர்ல்ட் சீரிஸ் (ROAD SAFETY WORLD SERIES) முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸ் லிஜெண்ட் அணிக்கும் இந்திய லிஜெண்ட் அணிக்கும் நடைபெற்றது.

சச்சின் கேப்டன்

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் கேப்டனாக சச்சின் தெண்டுல்கர் செயல்பட்டார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர், சேவாக் போன்றவர்கள் இந்தியாவில் களம் இறங்குகிறார்கள். வீரர்களைஆவலாக எதிர்பார்த்து மைதானம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர்.

அணி வீரர்கள் விபரம்

இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், முகமது கைப், கோனி, இர்பான் பதான், ஜாகிர் கான், டிகி, பகத்துலே, முனாப் பட்டேல், பிரக்யன் ஓஜா போன்ற வீரர்கள் களம் இறங்கினார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் லிஜெண்ட் அணி தரப்பில் லாரா, கங்கா, சந்தர்பால், கூப்பர், ஹயத், பவல், ஜாக்கப், பெஸ்ட், சுலைமான் பென், கூலிங்ஸ், ராம் நாரயன் போன்ற வீரர்கள் களம் இறங்கினார்கள்.

சந்தர்பால் அரைசதம்

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.

வெஸ்ட் இண்டீஸ் லிஜெண்ட் அணியின் அதிகபட்சமாக சந்தர்பால் 67 ரன்கள், கங்கா 31 ரன்கள், 31 லாரா 17 ரன்கள், ஹயத் 12 எண்கள், பெஸ்ட் 11 ரன்கள் எடுத்தனர்.

இந்திய லிஜெண்ட் அணி தரப்பில் முனாஃப் படேல், ஜாகிர் கான், பிரக்யன் ஓஜா தலா 2 விக்கெட்டுகளும் இர்பான் பதான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

இந்தியாவின் லெஜன்ட் தொடக்கம்

இந்தியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் களம் இறங்கினார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

வழக்கம்போல சேவாக் முதல் இரண்டு பந்துகளிலும் பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்தியா வெற்றி

இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியாவின் தொடக்க ஜோடி சேவாக் மற்றும் சச்சின் இருவரும் சேர்ந்து 10.2 ஓவர்களில் 83 ரன்கள் சேர்த்தது.

இந்தியாவின் அதிகபட்சமாக சேவாக் அரைசதம் அடித்து 57 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

சச்சின் டெண்டுல்கர் தன் பங்கிற்கு 36 ரன்களும், கைப் 14 ரன்களும், யுவராஜ் சிங் 10 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணிக்கு 4 ரன்கள் தேவை இருந்தது அப்போது சேவாக் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

ரசிகர்கள் ஆரவாரம்

ரசிகர்கள் அனைவரும் சிக்ஸ், சிக்ஸ் என்று ஆரவாம் செய்ய, அடுத்த பந்தில் சேவாக் பவுண்டரி ஆக ஆட்டத்தை முடித்து வைத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கூப்பர் 2 விக்கெட்டும், பென் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். அதிரடியாக ஆடிய வீரேந்திர சேவாக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அடுத்த போட்டி

இந்திய லெஜெண்ட் அணி அடுத்த போட்டியில் இலங்கை லெஜெண்ட் அணி வருகிற மார்ச் 8 தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு இதே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

3

8/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
8/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

8/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம்செலவு

முக்கியமான விஷயத்தில் முடிவுகளை எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து செல்லுதல் அவசியம்.

பணியில் கடினமான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்சனைகள் வரலாம். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். தாயின் உடல் நலத்தில் கவனம் வேண்டும்.

சூரிய பகவானிற்கு விளக்கேற்றி வழிபடுங்கள்

ரிஷபம் – மகிழ்ச்சி

உங்களுக்கு மகிழ்சிகரமான நாள். உற்சாகமாக இருப்பீர்கள். பணியில் வளர்ச்சி காணப்படும்.

அனைவரிடமும் இனியமாக பேசுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் குறையில்லை.

அனுமனை தரிசித்து கூடுதல் நற்பலன் கிடைக்கும்

மிதுனம் பயணம்

ஆன்மீகம் தொடர்பான பயணம் செய்ய உகந்த நாள். கவலைகளை எண்ணுதலை கைவிடவும். துணையிடம் பேசுவதில் கவனம் தேவை.

பணவரவு சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்திற்கான செலவுகள் அதிகரிக்கும்.

சிவ பெருமானை தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் வரும்

கடகம் குழப்பம்

இன்று உணர்ச்சி வசம் அதிகமாக இருக்கும். கட்டுபாட்டில் வைத்து கொள்ளவும். மனம் குழப்பம் வேண்டாம்.

பணிகளை பொறுமையாக கையாளவும். துணையிடம் தங்கள் கவலைகளை திணிக்க வேண்டாம். பணவரவு சுமாராக இருக்கும். தலை வழி ஏற்பட வாய்ப்புண்டு.

தன்வந்திரிக்கு விளக்கேற்றி வழிபட நற்பலன்கள் உண்டு.

சிம்மம்உழைப்பு

இன்று உங்களின் கடினமான உழைப்பு மட்டுமே பலன்களை தரும். பணியில் நல்ல நிலைப்பாடு இருக்காது.

துணையிடம் தகவல் பரிமாற்றம் நன்றாக இருக்காது. தன லாபம் குறைவு. பணம் இழக்க வாய்ப்புண்டு. கால்களில் வலி ஏற்படலாம்.

சரபேஸ்வரரை விளக்கேற்றி வழிபடத் தொல்லைகள் குறையும்.

கன்னி பாராட்டு

திட்டமிடல் நன்றாக இருக்கும். பணியில் பாராட்டுகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

பணவரவு அதிமாக இருக்கும். அவசியம் சேமிக்க வேண்டும் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

நாராயணனை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

துலாம் ஆரோக்கியம்

இன்று பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு. இனிமையான இசையைக் கேட்டு ரசிக்கவும். பணியினால் திருப்தியான பலன் இருக்காது.

கணவன் மனைவி இடையே விவாதங்கள் வரும். பணவரவு சற்று குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இருக்காது.

சூரியன் தரிசனம் செய்ய ஆரோக்கியம் மேலும் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் பணிச்சுமை

இன்று உங்களின் உணர்வுகளை கட்டுபாட்டில் வைக்க வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

உணர்வுகளை எவரிடமும் திணிக்க வேண்டாம். பணத்தில் கவனம் தேவை. நல்ல உரக்கமே ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

பைரவரை வழிபட நற்பலன்கள் உண்டு.

தனுசு சவால்

இன்று சவாலான நாளாக அமையும்.  உழைபிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. வேலையில் சாமர்தியம் அவசியம். துணையிடம் புரிதல் அவசியம். பணவரவில் சிக்கல் இருக்கும்.

குளிர்ந்த உணவுகளை தவிர்க்கவும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

ராம நாமம் சொல்ல தொல்லைகள் தீரும்.

மகரம் அன்பு

இன்று உங்கள் தன்னம்பிக்கை உங்களின் வெற்றிக்கு காரணமாகும். அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

குடும்பத்தில் அன்பு மிகுந்து இருக்கும். காதலுக்கு வெற்றி கிடைக்கும். பணம் தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அம்பிகையை வழிபட்டு வர அதிக நன்மைகள் உண்டு.

கும்பம் வளர்ச்சி

இன்று உங்களின் வளர்ச்சிக்கு உகந்த நாளாகும். உங்களின் நேர்மைக்கு பாராட்டுகள் குவியும்.

துணையுடன் காதல் பெருகும். ஆனந்தம் பொங்கும். சுப செலவுகள் வரும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை.

பைரவரை விளக்கேற்றி வழிபட ஆரோக்கியத்தில் குறை வராது.

மீனம் சோர்வு

அமைதியும் தன்னம்பிக்கையும் வேண்டும். பணியில் போதுமான லாபம் இல்லை. மன சோர்வுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் சகஜமான பேச்சு அவசியம் தேவை. அன்பை வெளிபடுத்த கவலைகள் தீரும்.

விரைய செலவுகள் வர வாய்ப்புண்டு. ஜீரண கோளாறுகள் வரலாம் உணவு கட்டுப்பாடு அவசியம் தேவை.

அனுமனுக்கு நெய் விளக்கேற்றி வர நற்பலன்கள் கிடைக்கும்.

8/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

மாசி மகம் எப்படி தோன்றியது? சிறப்புகள் என்ன?

0
மாசி மகம் எப்படி தோன்றியது எவ்வாறு கொண்டாடப்படுகிறது? பெருமாள் வழிபாடு கும்பகோணம் தீர்த்தவாரி

மாசி மகம் எப்படி தோன்றியது? எவ்வாறு கொண்டாடப்படுகிறது? மாகா மகத்தின் சிறப்புகள் என்ன? எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்? கும்பகோணம் தீர்த்தவாரி.

மகா மகம் எப்படி தோன்றியது

கும்ப மாதம் என்று கூறப்படும் மாசி மாதத்தில் தெய்வங்களுக்கான பல்வேறு விரத தினங்களும், விழாக்களும் உள்ளன.

அதில் குறிப்பாக சிவ பெருமானிற்கான விழாக்கள் பல. மகா சிவராத்திரி விழாவும் இந்த மாசி மாதத்தில் தான் வருகின்றது.
அதேபோல் மாசி மகம் இன்னும் ஒரு சிறப்பான நாளாகும்.

மாசி மகம் எப்படி தோன்றியது? சிறப்புகள் என்ன?

மகா மகம் எப்படி தோன்றியது

கும்ப மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிப்பார். சந்திரன் சிம்ம ராசி, மகம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாளே மாசி மகம் ஆகும். மகம் கேதுவிற்குறிய நட்சத்திரம் ஆகும்.

கும்ப ராசியில் இருக்கும் சூரியனும் சிம்ம ராசியில் இருக்கும் சந்திரனும் நேருக்கு நேராக மாசி மகத்தில் பார்கின்றனர்.

வருடத்திற்கு ஒரு முறை வருவது மாசி மகம் என்றும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது மகா மகம் ஆகும். இதனை வடநாட்டில் கும்ப மேளா என்று அழைக்கின்றனர்.

மாசி மகத்தின் வரலாறு

கும்பகோணம் தீர்த்தவாரி

வருண பகவானை பிரம்மஹத்தி தோஷம் பீடித்து கடலில் ஒளித்து வைத்தது. இதனால் உயிரினங்கள் மழை இன்றியும் நீரின்றியும் வாடியது.

வருணன் தன் பாவம் போக்க வேண்டி சிவனை வேண்டித் தவம் புரிந்தார்.

சிவனும் மனம் குளிர்ந்து வருணனின் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கினார். வருணனின் பாவம் போக்கிய நாளே மாசி மகமாகும்.

இந்நாளில் நதி மற்றும் கடலில் நீராடினால் அனைத்து பாவங்களும் தொலையும்.

மேலும் தட்சனின் மகளாக தாட்சாயிணியாக அம்பிகை பிறந்ததும் இந்த மாசி மக நன்னாளில் தான்.

மாசி மக நன்னாளில் இறைவனை வேண்டி ஆறு மற்றும் கடலில் நீராடினால் பாவங்கள் தொலையும்.

மாசி மகம் கடலாட்டு விழா

மாசி மகத்தில் கடலாட்டு விழாவானது கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கடலாட்டு விழா பல கோயில்களில் நடைபெறும்.

இந்த விழா மிகவும் தொன்மையானது. திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பிக்க பாடிய பதிகங்களில் மாசி கடலாட்டு உற்சவம் பற்றி கூறி உள்ளார்.

“மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரம் அமர்ந்தான் அடல் ஆனேறு ஊரும் அடிகளடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்!!”

என்று பாடியுள்ளார். இதிலிருந்து மாசி மக விழாவானது தமிழர்கள் வாழ்வில் ஒன்றியது என்பதை தெளிவாக உணரலாம்

கும்பகோணம் தீர்த்தவாரி

மாசி மகத்தின் சிறப்புகள் என்ன? பெருமாள் வழிபாடு கும்பகோணம் தீர்த்தவாரி

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் உள்ள மகா மக குலத்தில் இந்த நாளிலே தீர்த்தவாரி நடக்கும்.

அங்கு சென்று நீராடினால் கங்கை, யமுனை, காவிரி, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, துங்கபத்ரை, சிந்து, தாமிரபரணி, கிருஷ்ணா, வைகை, பிரம்மபுத்ரா என பன்னிரண்டு தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைத்து பாவங்கள் தீரும்.

மாசி மகம் பெருமாள் வழிபாடு

மாசி மகத்தின் சிறப்புகள் என்ன? பெருமாள் வழிபாடு

மாசி மகமானது சிவன், திருமால் ஆகிய இருவருக்கும் உகந்த நாளாகும்.

சூரிய நாராயணராக விளங்க கூடிய பெருமாளிற்கு பூசனைகள் செய்து. திருமால் கோயில்களில் திருகல்யாணம் மற்றும் சத்திய நாராயண பூசைகள் செய்வர்.

இந்த பௌர்ணமி தினத்தினை “கதிரி பௌர்ணமி” என்று வைணவத்தில் கூறுவர்.

ஆயிரம் கோடி கதிர்களை கொண்ட சூரிய நாராயண பெருமாளிற்கு உகந்த பௌர்ணமி என்று அர்த்தம்.

மாசி மகம் குல தெய்வ வழிபாடு

மேலும் இந்த மாசி மக பௌர்ணமியானது குல தெய்வங்களை வழிபட உகந்த நன்னாள் ஆகும்.

குடும்பத்தில் மூத்த முன்னோர்கள், மாவீரர்கள், தியாகம் செய்தவர்களை தான் பெரும்பாலும் குல தெய்வமாக வழிபடுவர்.

கேதுவின் நட்சத்திரமான மகத்தில் குல தெய்வ வழிபாடு செய்வது பன்மடங்கு பலன் தரும்.

2020 இல் மாசி மகம்

இந்த ஆண்டு மாசி மகமானது நாளை மார்ச் 8 ஞாயிறன்று வருகிறது. இயன்றவர்கள் கும்பகோணம் சென்று மகாமக குளத்தில் நீராடியும் மற்றவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடி புண்ணியம் பெறுவோம்.

சிவன் மற்றும் திருமால் ஆலயங்கள் சென்று இறைவனை தரிசித்து பாவங்கள் நீங்கப் பெற்று சந்ததிகள் மென்மேலும் வளர பிராத்திப்போம்.

3