Home Blog Page 225

லண்டனில் வேட்டையை தொடங்கும் விஷால்: துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

0
Thupparivaalan 2 First Look

Thupparivaalan 2 First Look; துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (Thupparivaalan 2 First Look) போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

விஷால் (Vishal) நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் 2 (Thupparivaalan 2 First Look) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஷால் இயக்கி நடிக்கும் புதிய படம் துப்பறிவாளன் 2. இப்படத்தின் முதல் பாகத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார்.

துப்பறிவாளன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே துப்பறிவாளன் 2 உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது துப்பறிவாளன் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. லண்டனில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மிஷ்கின் அதிரடியாக நீக்கப்பட்டர். இதையடுத்து, விஷாலே இப்படத்தை இயக்குவதாக அறிவித்தார்.

துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கும் தனது புதிய முயற்சிக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியிருந்தார்.

விஷால் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக ஆக்‌ஷன் கிங் அர்ஜூனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். அர்ஜூன் இயக்கத்தில் வந்த வேதம் படத்தில் விஷால் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://platform.twitter.com/widgets.js

துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் கையில் குடையுடன், ரெயின்கோட் அணிந்தவாறு, தலையில் தொப்பியை பிடித்தவாறு இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது; கணியன் பூங்குன்றன் மற்றும் மனோ மறுபடியும் ஆக்‌ஷனில் இறங்கிவிட்டார்கள். ஆனால், இந்த முறை லண்டனில் வேட்டை என்று பதிவிட்டுள்ளார்.

துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் விஷால் இயக்குநர் அவதாரம் எடுக்கும் நிலையில், VishalDirection1 மற்றும் Thupparivaalan2 ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

துப்பறிவாளன் 2 படத்திற்காக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள விஷாலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இயக்குநர் மிஷ்கின், விஷாலுக்கு எழுதிய 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

3

தமிழக பாஜக தலைவர்: யாருப்பா இந்த முருகன்? திடீரென விஸ்வரூபம் எடுத்துள்ளார்

1

தமிழக பாஜக தலைவர் பதவி தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டது முதல் காலியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்படலாம் என சில மாதங்கள் முன்பு தகவல்கள் வெளியாகின.

அதேபோல் பாஜக தலைவர் போட்டிக்கு எச்.ராஜா, பொன்னார், வானதி சீனிவாசன், கேடி ராகவன், கருப்பு முருகானந்தம் பெயர்கள் அடிபட்டு வந்தது.

இப்படி ஒரு நிலையில் இன்று புதிய பாஜக தலைவராக எல்.முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இதைத் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகால வரலாறு: தலித் தலைவர்; பாஜகவின் புதிய புரட்சி – சிஎம் நாற்காலி தயார்

யார் இந்த எல்.முருகன் 

தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத்தலைவராக இருந்தவர். எஸ்.சி கமிஷனின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.

சங்கரன்கோவில், பரமக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளராக நின்று தோல்வியைத் தழுவினார்.

பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலருடன் எல்.முருகன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். இதன் காரணமாக சீனியர் தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு எல்.முருகன் பதவியை தட்டிச்சென்று உள்ளார்.

பாஜகவில் பெரிய ஆரவாரம் செய்யாத, மக்களிடம் பெரிதும் பரிட்சியம் இல்லாத, எந்த சர்ச்சையிலும் சிக்காத ஒரு புதிய முகத்தை பாஜக தேர்வு செய்துள்ளது.

வரும் தேர்தலில் நிச்சயம் பாஜக வழுவாக கால் ஊன்ற முறையான வியூகங்களை வகுத்து வருகிறது என்பது இதன் மூலம் புலப்படுகிறது.

3

இப்படியெல்லாமா கண்டிஷன் போடுவாங்க? துப்பறிவாளன் 2 மிஷ்கினின் 15 நிபந்தனை!

1
Mysskin Thupparivaalan 2

துப்பறிவாளன் 2 படம் தொடர்பாக நடிகர் விஷாலுக்கு, இயக்குநர் மிஷ்கின் எழுதிய 15 நிபந்தனைகளை கொண்ட கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துப்பறிவாளன் 2 படத்தின் போது விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் இடையில் மனஷ்தாபம் ஏற்பட்டுள்ளது.

அப்போது மிஷ்கின் 15 நிபந்தனைகள் அடங்கிய கடிதம் ஒன்றை விஷாலுக்கு எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல் ஆகியோரது நடிப்பில் வந்த சூப்பர் ஹிட் படம் துப்பறிவாளன்.

துப்பறிவாளன் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 தயாராகி வருகிறது.

துப்பறிவாளன் 2 படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.

லண்டனில் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பும் முடிந்தது.

2ம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் விஷால் – மிஷ்கின் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் அதிரடியாக நீக்கப்பட்டார். தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், விஷாலுக்கு இயக்குநர் மிஷ்கின் 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அந்த நிபந்தனைகளுக்கு விஷால் ஒத்துவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது மிஷ்கினின் 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  1. ஜிஎஸ்டி உள்பட சம்பளம் ரூ.5 கோடி.
  2. ஹிந்தி ரீமேக் உரிமை மட்டுமே இயக்குநரிடம் இருக்கிறது. ஆதலால், அவர் ரீமேக் உரிமையை யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம். தயாரிப்பாளருக்கு இதில், எந்த உரிமையும் இல்லை. ஆட்சேபனையும் இருக்கக் கூடாது.
  3. விஷால் நடிகராகவும், விஷால் பிலிம் பேக்டரியை தயாரிப்பு நிறுவனமாக கொண்டுள்ள இந்தப் படம் கடைசி படம் என்பதால், படத்தின் தொடர்ச்சி பாகங்கள் (Sequels and Prequels), துப்பறிவாளன் 1, துப்பறிவாளன் 2 படத்தில் இருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களின் பெயர்கள் அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் இயக்குநருக்குச் சொந்தம்.

விஷால் பிலிம் பேக்டரியிலிருந்து படத்தின் தலைப்பு உரிமையை இயக்குநருக்கு மாற்றியதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கு ஆட்சேபனை இல்லை என்று என்ஓசி சான்றிதழை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்கும்.

  1. 2ம் கட்ட படப்பிடிப்பின் போது ஆரம்பம் முதல் கிட்டத்தட்ட 90 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றால், இயக்குநர் மற்ற படங்களில் இணைந்து பணியாற்றலாம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு 90 நாட்களுக்குள் முடியவில்லை என்றால், இயக்குநருக்கு நேரம் கிடைக்கும் வரை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் காத்திருக்க ஒப்புக்கொள்ள வேண்டும்.
  2. தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதியாக இருப்பவருக்கு இயக்குநருடன் நேரடி தொடர்பு இருக்காது. இயக்குநரின் மேலாளர் எல்.வி.ஸ்ரீகாந்த் லக்‌ஷ்மண் மட்டுமே இயக்குநரை தொடர்பு கொள்ளும் ஒருவர். விஷால் பிலிம் பேக்டரியால் நியமிக்கப்பட்ட தயாரிப்பாளர் சர்மாட் மட்டுமே தயாரிப்பாளரை தொடர்புகொள்ள அவரது பிரதிநிதியாக செயல்படுவார்.
  3. மேற்குறிப்பிட நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டவுடன் இயக்குநருக்கு கொடுக்கப்பட வேண்டிய பணம் இயக்குநரால் முடிவு செய்யப்படும்.
  4. இயக்குநரின் ஊழியர்களின் நிலுவைத் தொகை (இங்கிலாந்து கார் வாடகை உள்பட) அனைத்தும் முன்பாகவே தீர்க்கப்பட வேண்டும்.
  5. படப்பிடிப்பிற்கான அனைத்து இடங்களையும் தேர்வு செய்யும் உரிமை இயக்குநரையே சேரும். இதில், தயாரிப்பாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ தலையிடக்கூடாது.
  6. படத்தின் பட்ஜெட்டில் இயக்குநருக்கு எந்த தொடர்பும், சம்பந்தமும் இல்லை. ஆனால், படத்தின் செலவை குறைக்க இயக்குநர் தன்னால் முடிந்த முயற்சியை மேற்கொள்வார். இருப்பினும், படத்தின் மொத்த செலவுக்கு இயக்குநர் பொறுப்பேற்கவே மாட்டார்.
  7. உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் ஆகியோருக்கு வழங்கப்படும் சம்பளம் தணிக்கை விண்ணப்பிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் இயக்குநரால் நிர்ணயிக்கப்படும். அந்த சம்பளத்தை மட்டுமே கொடுக்கவேண்டும்.
  8. இயக்குநர் மற்றும் அவரது உதவியாளருக்கு தனியாக தங்குமிடம் இருக்க வேண்டும். மற்ற படக்குழுவினருடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
  9. ரூ.66,000 அலுவலக வாடகை மற்றும் ரூ.5000 பராமரிப்புத் தொகை தயாரிப்பாளர்களால் செலுத்தப்படும். டிடிஎஸ் சான்றிதழ் கழிப்பட்டால் தணிக்கைக்கு முன் வழங்கப்படும். அலுவலக வாடகைக்கு மேல் கூடுதலாக வரும் உணவு, மின்சார, பிற செலவுகள் வரை படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளிலிருந்து படத்தின் இறுதி வடிவம் கொடுக்கும் வரை தயாரிப்பாளரால் ஏற்கப்படும்.
  10. படம் பற்றி அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலமாகவே இருக்கும்.
  11. இயக்குநருக்கான சுதந்திரம், முடிவெடுக்கும் முறை ஆகியவற்றிற்கு இடையூறு ஏற்படும் வகையிலோ அல்லது இயக்குநரையோ அல்லது அவரது உதவியாளரையோ அவமதித்தல், துஷ்பிரயோகம் செய்யப்படுதல், மோசமாக நடத்தப்படுதல், இயக்குநரின் மனநிலையை பாதிக்கும் வகையில், ஏதேனும் சம்பவம் நடந்தால், இயக்குநர் மற்றும் அவரது குழுவினரும் தாராளமாக இப்படத்திலிருந்து வெளியேற உரிமை உண்டு.
  12. மேலே குறிப்பிடப்பட்ட விவரங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டவுடன் அவற்றிற்குரிய சாராம்சம் முறையான ஒப்பந்தத்தில் சுருக்கமாக எழுதப்பட்டு இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் கையெழுத்திடப்படும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

3

காங்கிரஸ் எம்‌எல்‌ஏ; கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வராது

0
காங்கிரஸ் எம்‌எல்‌ஏ

காங்கிரஸ் எம்‌எல்‌ஏ; கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனா வராது என புதுச்சேரி காங்கிரஸ் எம்‌எல்‌ஏ ஜான்குமார் கூறியது மிகுந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உலகம் முழுவதும் காட்டுதீ வேகத்தில் பரவி வரும் கொரோனாவால் இது வரை 120000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 4000க்கும் மேல் உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்க்கு அதிகாரப்பூர்வ மருந்து எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை. பல்வேறு மருத்துவக்குழுக்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் முடிந்த வரை பாதுகாப்பான சூழலில் நம்மை நாமே சுத்தமாக வைத்துக்கொள்ள பரிந்துரைத்துள்ளது.

மேலும் இட்லி தோசைக்கு பதிலாக பழைய சோறு சாப்பிட்டால் கொரோனா நம்மை கண்டு பயந்து ஓடி விடும் என கூறும் பொழுது மேடையில் இருந்து மற்ற அமைச்சர்கள் ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக்கொண்டனராம்.

இது குறித்து அவரிடம் கேட்கையில் வாட்ஸ்ஆஃப் வலைதளத்தில் வந்த ஃபார்வார்டு செய்தியை படித்ததாக கூறினார்.

3

சண்டை, சச்சரவுக்கு மத்தியில் ரெடியான துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்!

1
Vishal Thupparivaalan 2 First Look

Thupparivaalan 2 First Look; துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அப்டேட் வெளிவந்துள்ளது.

விஷால் நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Thupparivaalan 2 First Look) நாளை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல் ஆகியோரது நடிப்பில் வந்த சூப்பர் ஹிட் படம் துப்பறிவாளன் (Thupparivaalan).

துப்பறிவாளன் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 (Thupparivaalan 2) தயாராகி வருகிறது.

இந்த நிலையில், துப்பறிவாளன் 2 குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, நாளை துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பறிவாளன் 2 படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.

லண்டனில் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பும் முடிந்தது.

2ம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்குள் விஷால் – மிஷ்கின் இடையிக் மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் அதிரடியாக நீக்கப்பட்டார். தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், விஷாலுக்கு இயக்குநர் மிஷ்கின் 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அந்த நிபந்தனைகளுக்கு விஷால் ஒத்துவரவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது மிஷ்கினின் 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

3

காலாவதியாகும் காங்கிரஸ்; கவலையில் தொண்டர்கள்

0
காலாவதியாகும் காங்கிரஸ்

காலாவதியாகும் காங்கிரஸ் – அதிருப்தியில் தொண்டர்கள் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் நேற்று வீச தொடங்கிய அரசியல் புயல் இன்றும் தொடர்கிறது .

ஜோதிராதித்ய சிந்தியா:

ஒரு பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் விலகினார் .

இன்று  மதியம் அவர் மத்தியில் ஆளும் பாஜகவில் இணைவார் என்று கூறப்படுகிறது .தற்பொழுது வரை மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் இருந்து 22  எம் எல் எ க்கள்  பதவியை ராஜினாமா செய்துள்ளனர் .

மேலும் பலர் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன .

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் பிரபலமான இளம் தலைவரான சிந்தியா குவாலியர் அரச குடும்பத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

காங்கிரஸ் கட்சி வெற்றி:

சிறு வயது முதலே காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்  கடந்த சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அரசமைத்ததில் இருந்தே முதல்வர் கமல்நாத்துக்கும் சிந்தியாவுக்கும் பனிப்போர் தொடர்ந்து வந்தது.

இந்நிலையில்தான் நேற்று காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியாகாந்திக்கு தனது ராஜினாமா கடிதம் நேற்று அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு:

இருப்பினும் சிந்தியாவுடன் மேலும் பல இளம் தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகிய வண்ணம் உள்ளதால் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவு பட்டுள்ளது .

அதன்படி  ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ரஃபின் சிங்க், மிலிந் தேவரா ,ஜிதின் பிரசாத ,ஹரியானா குல்தீப் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா போன்றோர் .

பாஜகவில் இணைய முடிவு:

மார்ச் 12 இல் சிந்தியா முறைப்படி பாஜகவில் இணைய உள்ளார் என்றும் 13 தேதி மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

சிந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் அவரை விரோதி என்று காங்கிரஸ் தொண்டர்கள் வசை பாடி வருகின்றனர்.

நாடாளுமன்றம் முடக்கம்  :

குவாலியர் இளவரசர் சிந்தியாவின் நடவடிக்கையால் நாடாளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

காங்கிரஸ் குற்றசாட்டு:

முன்னதாக கமல்நாத் தலைமையிலான  மாநில அரசை கலைக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

230  இடங்கள் கொண்ட மத்திய பிரதேச சட்ட பேரவையில் இரு உறுப்பினர்கள் ஏற்கனவே இறந்துவிட்டனர்  அதனை அடுத்து 228 உறுப்பினர்கள் தற்பொழுது உள்ளனர்.

எனவே அறுதிபெருமபான்மை எண்ணிக்கையான 114 இல் பாஜக தன்வசம் 107 உறுப்பினர்களையும் காங்கிரஸ் 114 உறுப்பினர்களையும் வைத்திருந்தது.

சிந்தியாவின் புரட்சியால் தற்பொழுது வரை 22 உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டதால் அதனை சபாநாயகர்   ஏற்கும் பட்சத்தில் காங்கிரஸ் எண்ணிக்கை 92 ஆக குறைய கூடும்  என்பதால் மத்திய பிரதேச அரசு எந்நேரமும் கவிழும் என்பதால் தேசிய அளவில் பரபரப்பு காணப்படுகிறது.

ஷ்பாங்கினி ராஜே:

இதனிடையே சிந்தியாவின் இந்த புரட்சிக்கு பின்னணியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வதேதர தொகுதியில் போட்டியிட்ட போது முன்மொழிந்த ஷ்பாங்கினி ராஜேதான் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது.

அண்மைய காலமாக காலாவதியாகும் காங்கிரஸ் தனது செயல் பாடுகளால் மிகுந்த இடர்பாடுகளில் சிக்கி தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொள்ளை என்று வந்துட்டா மதம் பிடிச்ச யானை: அசுரகுரு டிரைலர்!

0
AsuraGuru Trailer 2

Asuraguru Trailer 2; அசுரகுரு படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது.

கொள்ளையடிக்கனும் என்ற எண்ணம் வந்துவிட்டால் அவர் ஒரு மதம் பிடித்த யானை மாதிரி என்ற டயலாக் இடம்பெற்ற அசுரகுரு படத்தின் இரண்டாவது டிரைலர் (Asuraguru Trailer 2) வெளியாகியுள்ளது.

விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள அசுரகுரு படத்தின் 2ஆவது டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மகீமா நம்பியார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரகுரு.

ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் கதையை மையப்படுத்தி அசுரகுரு வரும் 13 ஆம் தேதி (Asuraguru Release Date) உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், அசுரகுரு படத்தின் 2ஆவது டிரைலர் (Asuraguru Trailer 2) வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் சென்னை – சேலம் இடையில் நடந்த ரயில் கொள்ளையை மையப்படுத்தி (Salem Chennai Train Robbery) அசுரகுரு படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

அசுரகுரு டிரைலரில், பணம் ஒரு ராணி மாதிரி…

டெக்னிக்கல் ரீதியாக வலிமையான ஒருவரால் தான் நுட்பமான முறையில் கொள்ளையடிக்க முடியும்…

3 கொள்ளையிலும் ஒரே ஒருவர் தான் சம்பந்தப்பட்டுள்ளார்.

கொள்ளையடிக்கனும் என்ற எண்ணம் உண்டாகும் போது அவர் ஒரு மதம் பிடித்த யானை…

குறைவான வசனங்களோடு அதிக ஆக்‌ஷன் காட்சிகளை கொண்டு அசுரகுரு டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதலால், படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டிரைலரில் அசுரகுரு படத்தில் நடித்துள்ள் அனைவரது காட்சியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதில், வங்கிக்குள் நுழையும் விக்ரம் பிரபு, முதலில் கேமராவை சேமர் மூலமாக செயலிழக்கச் செய்கிறார்.

அதன் பிறகு வங்கியில் பணம் எடுப்பது போன்று அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்.

இறுதியில், ஒரு அறையில் துளையிட்டு நூதன முறையில் வங்கி பணத்தை கொள்ளையடிக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க, மகிமா நம்பியார், திருட்டுச்சாவி மூலம் விக்ரம் பிரபு வீட்டிற்குள் நுழைகிறார்.

விக்ரம் பிரபு வங்கியில் கொள்ளையடிப்பதற்கு போட்டுவைத்த திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்கிறார்.

இதற்கிடையில், வங்கி ஊழியர் பாதுகாப்பு அறைக்குள் நுழைந்து பணத்தை எடுக்க முயற்சிகிறார். ஆனால், அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அப்படியே அசுரகுரு ஸ்னீக் பீக் முடிகிறது. ஆனால், விக்ரம் பிரபு பணம் முழுவதையும் கொள்ளையடித்தாரா இல்லையா? ஏன் வங்கிக்கு வந்தார்? என்பது போன்ற கேள்விகளுடன் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணேஷ் ராகவேந்திரா படத்திற்கு இசையமைத்துள்ளார். அசுரகுரு படத்தில் விக்ரம் பிரபு உடன் இணைந்து யோகி பாபு, சுப்பாராஜூ ஆகிஹ்யோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

4 பேரு, ரெட்டு காரு, அடல்ஸ் ஒன்லி ஸ்டோரியோ? P3 டிரைலர் வெளியீடு!

0
Plan Panni Pannanum Trailer

Plan Panni Pannanum Trailer; பிளான் பண்ணி பண்ணனும் (Plan Panni Pannanum (P3)) படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்களின் பட்டியலில் நடிகர் ரியோ ராஜ் ஒருவர். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தற்போது பிளான் பண்ணி பண்ணனும் (P3) படத்தில் முன்னணி ரோலில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

இந்த நிலையில், பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடந்துள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இன்று வெளியாகியுள்ள டிரைலரில் படத்தில் இடம்பெற்றுள்ள மொத்த அம்சங்களும் காட்டப்பட்டுள்ளது.

 

அதில், 4 பேரு ரெட்டு காரு, ரெட்ரோ ஊரு – அடல்ஸ் ஒன்லியோ… பப்ளியான பொண்ணு, டெட்லியான பையன் ஜெட்லி மாதிரி ஃபாஸ்ட் – லவ் ஸ்டோர்கியோ…

டெர்ரரான அம்மா, முட்ட முழி அப்பா, முத்திப்போன மாமா – த்ரில்லர் ஸ்டோரியோ…. இது எல்லாத்துக்கு வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை ராஜா என்று கூற என்னதான் கதை என்று கேட்கும் அளவிற்கு டிரைலர் காட்டப்பட்டுள்ளது.

இந்த டிரைலரில் கங்கை அமரனின் பின்னணி குரல் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளான் பண்ணி பண்ணனும் படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ரியோவிற்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் ரோபோ சங்கர், தங்கதுரை, விஜி சந்திரசேகர், பால சரவணன், முனிஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிளான் பண்ணி பாடலில் தொடங்கி நீங்கும் போதில் வரை மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ரியோ – ஸ்ருதி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஜய் பட நாயகி சிவகார்த்திகேயனுடன் இணைகிறார்

0
இஷா கோபிகர்

விஜய் பட நாயகி சிவகார்த்திகேயனுடன் இணைகிறார். இஷா கோபிகர் விஜய் நடித்த நெஞ்சினிலே,என் சுவாச காற்றே, மீண்டும் பிரசாந்துடன் ஜோடி, விஜயகாந்துடன் நரசிம்மா போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

விஜய் நடித்த நெஞ்சினிலே படத்தில் நாயகியாக நடித்தவர் தான் இஷா கோபிகர் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

பிலிம்பேர் விருது

தமிழில் அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த காதல் கவிதை படத்தின் மூலம் அறிமுகமான இவர், அந்த படத்திற்கு ஃபிலிம்ஃபேர் விருதில் சிறந்த அறிமுக நாயகி விருதை வாங்கினார்.

பிறகு இவர் விஜய் நடித்த நெஞ்சினிலே,என் சுவாச காற்றே, மீண்டும் பிரசாந்துடன் ஜோடி, விஜயகாந்துடன் நரசிம்மா போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

2001-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து இவர். ஹிந்தி, மராத்தி போன்ற படங்களில் நடித்து வந்தார்

அரசியலில் இஷா கோபிகர்

கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிஜேபியில் இணைந்த இவர், அந்த கட்சியின் பிஜேபி பெண்கள் போக்குவரத்து பிரிவு செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

19 ஆண்டுகள் பிறகு

19 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இவர், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் மீண்டும் நடித்து வருகிறார்.

அயலான் திரைப்படம்

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கி வரும் படம் தான் அயலான்.

ஆர் டி ராஜா தயாரிப்பில், ஏ ஆர் ரகுமான் இசையில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் ரூபன் எடிட்டிங்கில், சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் பிரீத் சிங் நடித்து வரும் இந்த படத்தில் இஷா கோபிகரும் இணைந்துள்ளது அந்த படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் நடித்த என் சுவாச காற்றே, நெஞ்சினிலே போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது

3

வாணி போஜனின் மாமாவா? தொழிலதிபரை தூங்கவிடாமல் கொன்ற ஒற்றை வார்த்தை

0
வாணி போஜனின் மாமாவா? ஓ மை கடவுளே ராஜா ராணி

நீ என்ன வாணி போஜனின் மாமாவா? தொழிலதிபரை தூங்கவிடாமல் கொன்ற ஒற்றை வார்த்தை. செல்போன் எண் மூலம் வந்த அவமானம்.

ஒன்றும் அறியா சினிமா ரசிகர்களுக்காகவே இந்த பதிவு. முதலில் சினிமா எது? நிஜ வாழ்க்கை எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ராஜா ராணி

ராஜா ராணி படத்தில் நயன்தாரா ஏர்வாய்ஸ் நிறுவனத்திற்கு பேன் செய்யும் காட்சியில் தன்னுடைய செல்போன் எண் என்று ஒரு எண்ணை கூறி இருப்பார்.

உண்மையில் அந்த எண்ணுக்கு சொந்தகாரர் ஒரு பள்ளி ஆசிரியர். இதை படக்குழு சரியாக கவனிக்காமல் படமும் வெளியானது.

படம் வெளியான உடன் அந்த எண்ணை அறியா விடலை பருவ ரசிகர்கள் உண்மையில் அது நயன்தாரா எண் தான் போலும் என நினைத்து கால் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இதனால் அந்த ஆசிரியர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுபற்றி அட்லியோ, நயன்தாராவோ கண்டுகொள்ளவில்லை.

ஓ மை கடவுளே

2020-ஆம் ஆண்டு வெளிவந்த அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய படம் ஓ மை கடவுளே.

இந்த படத்தில் வாணி போஜன் என்னுடைய செல்போன் எண் என்று ஒரு நம்பரை இரண்டு முறை  கூறுவது போன்ற காட்சிகள் உண்டு.

அந்த செல்போன் எண் உரிமையாளர் கோவையை பூர்விகமாக கொண்ட பூபாலன் என்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார்.

படம் வெளியான நாள் முதல் அவருக்கு வாணி போஜனிடம் பேச வேண்டும் என போன் கால் வந்துள்ளது.

ஆரம்பத்தில் விளையாட்டாக நினைக்க நாள் செல்ல செல்ல எதிரில் போன் பேசுபவர்கள் கடினமான வார்த்தைகளை உபயோகிக்க துவங்கிவிட்டனர்.

நீ என்ன வாணி போஜனின் மாமாவா, ஓபனாவே கேட்கிறேன் எவ்ளோ ரேட். எவ்ளோ நாலும் கொடுக்க ரெடி. இப்படி ஆபாச அர்ச்சனைகளுடன் போன் கால்கள் வரத்துவங்கியது.

இதனால் பலநாள் துக்கத்தை தொலைத்த பூபாலன் 19 வருடங்களாக பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை அணைத்து வைத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஓ மை கடவுளே படத்தில் தனது செல்போன் எண் வரும் கட்சியை நீக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

ஒன்று அறியா மடந்தை ரசிகர்கள்

சினிமா எது? நிஜம் எது? என இன்றைய நவீன காலத்திலும் கண்மூடித்தனமான போக்கு கொண்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அவர்கள் உண்மையில் அறிவதில்லை சினிமாவில் வரும் காட்சிகளுக்கும் நடிகர்களின் நிஜ வாழ்க்கைக்கு துளி கூட தொடர்பு இல்லை என்று.

அப்படி தெரிந்தவர்கள் கூட நப்பாசையில் இந்த நடிகையுடன் பேசிவிட மாட்டோமா என ஏங்கித்தவிப்பார்கள்.

உண்மையில் எந்த நடிகையும் பப்ளிக்காக தன்னுடைய நம்பரை கூற மாட்டார். அப்படி பப்ளிக்காக நம்பர் வெளியாகி விட்டால் அடுத்த நொடியே மாற்றிவிடுவார்கள்.

சினிமா வட்டாரங்களில் கூட நடிகையின் நம்பரை நேரடியாக பெற முடியாது. மேனேஜர் நம்பர் தான் முதலில் கிடைக்கும்.

விஷயம் இப்படி இருக்க, ஒன்று அறியா ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் ஒரு அப்பாவி தொழிலதிபரை ஒற்றைச் சொல்லால் அவரின் தூக்கத்தை கொன்றுவிட்டனர்.

3