Home Blog Page 224

சிவசேனா; டெல்லியைப் போல் மகாராஷ்ட்ராவிலும் கலவரம் செய்ய விரும்பும் பி‌ஜேபி

0
சிவசேனா
சிவசேனா

சிவசேனா; டெல்லியைப் போல் மகாராஷ்ட்ராவிலும் கலவரம் செய்ய விரும்பும் பி‌ஜேபி, மராட்டிய மாநிலத்திலும் வன்முறை நிகழ்த்த விரும்பும் பாஜகவினர் என குற்றம் சாட்டியுள்ள சிவசேனா.

மாரட்டிய மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தன்னுடைய 100 நாள் ஆட்சிக்கு பிறகு அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வந்தார்.

இதைப் பொறுக்காத பாஜகவினர் அவரை போலியாக நடிப்பதாக விமர்சனம் செய்தனர். இது பற்றி சாம்னா பத்திரிக்கையில் உத்தவ் தாக்கரே கூறியது பின்வருமாறு.

சாம்னா பத்திரிக்கை கூறியிருப்பது

போலியாக வேஷம் போட்டு நடிப்பது முதலமைச்சர் இல்லை. பாஜகவினர் தான் போலியாக நடிக்கின்றனர். வெறுப்புணர்வை பரப்புகின்றனர்.

மற்றவர்களின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள இயலாத குணம் கொண்டவர்கள். டெல்லியைப் போல மராட்டியத்திலும் வன்முறை நிகழ வேண்டும் பா.ஜனதா கட்சி விரும்பியது.

முதலமைச்சரின் முன் எச்சரிக்கையில் அது போன்ற எந்த விட அசம்பாவிதங்களும் நடக்காமல் பார்த்துக்கொண்டார்.

3

வங்கிகள் இணைப்பு: நிர்மலா சீதாராமன் ஆலோசனை

0

வங்கிகள் இணைப்பு: பொதுத்துறை வங்கிகளை நான்காக குறைத்து நடவடிக்கை எடுக்க இன்று வங்கி அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துகிறார்.

மார்ச் முதல் வாரம், மத்திய அரசு, 10 பொதுத்துறை வங்கிகளை 4 எனக் குறைப்பதற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து ஏப்ரல் மாதம் வங்கிகள் இணைப்பு நடைபெற உள்ளது.

இந்த வங்கிகள் இணைப்பு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா இந்த இரண்டு வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைய உள்ளது.

சிண்டிகேட் பேங்க், கனரா வங்கியுடன் இணைக்கப்பட உள்ளது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா பேங்க் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைய உள்ளது.

இந்தியன் பேங்க், அலகாபாத் வங்கியுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

3

Ban vs Zim 2nd t20i ; ஜிம்பாப்வேக்கு வெள்ளை அடித்து வீட்டிக்கு அனுப்பிய வங்கதேசம்

0

மார்ச் 12 : வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுளள ஜிம்பாப்வே அணி, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்களில் விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற வங்கதேசம்

முதலில் நடந்த ஒரு நாள் தொடரில் வங்கதேசத்திடம் ஜிம்பாப்வே ஒயிட்வாஷ் ஆனது.  டாக்காவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 48 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது

இதே மைதானத்தில் இரண்டாவது போட்டி நேற்று நடந்தது டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தச் சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக ஜிம்பாப்வே அணி இந்த போட்டியில் தான் முதலில் பேட்டிங் செய்தது

ஜிம்பாப்வே 119 ரன்கள்

ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக பிரன்டன் டெய்லர் 59, கிரைய்க் எர்வின் 29, ராசா 12, கமுன்கமுவே 10, கேப்டன் சீன் வில்லியம்ஸ் 3 ரன்களும் எடுத்தனர்.

வங்கதேசம் தரப்பில் முஸ்தாபிகுர் மற்றும் அல் அமின் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழத்தினர்.

வங்கதேசம் வெற்றி

120ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய வங்கதேசம் 15.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வென்று, 2-0 கணக்கில் தொடரை ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து வீட்டிக்கு அனுப்பியது.

வங்கதேசம் தரப்பில் லித்தன் தாஸ் முதல் போட்டியை போல இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார், இந்த போட்டியில் 60 ரன்னும், நைம் 33 ரன்னும், சௌமிய சர்கார் 20 ரன்னும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே அணியில் பெரிதாக பந்துவீச்சில் எந்த தாக்கமும் இல்லை, மேஃபு மட்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன் விருது

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை லித்தன் தாஸ் தட்டி சென்றார். இவர் நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் இரண்டு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வெனறது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் முழுவதும் லித்தன் தாஸ் தன் முழு திறமையையும் நிருபித்துள்ளார். ஒருநாள் போட்டியில்
126,176 ரன்களும், டி20 யில் 60, 59 ரன்களும் எடுத்துள்ளார்.

வங்கதேசம் வந்த ஜிம்பாபவே அணிக்கு ஒரு போட்டியில் கூட வெற்றி கையில் சிக்கவில்லை. ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் ஜிம்பாப்வேக்கு வெள்ளை அடித்து வீட்டுக்கு அனுப்பியது.

3

கொரோனா பாதிப்பு லீவ் கேட்டு கடிதம் எழுதிய பள்ளி மாணவன்

0
கொரோனா பாதிப்பு லீவ் கேட்டு கடிதம்
கொரோனா பாதிப்பு லீவ் கேட்டு கடிதம்

கொரோனா பாதிப்பு லீவ் கேட்டு கடிதம் எழுதிய பள்ளி மாணவன், 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் நீண்ட நாள் விடுமுறை தருமாறு கடிதம் எழுதியுள்ளான்.

இவன் எழுதிய இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அக்கடிதத்தில் அவன் கூறியது பின்வருமாறு.

எனக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி உள்ளது. இது கொரோனா பாதிப்பாக இருக்கலாம். கொரொனா மிக வேகமாக பரவும் தன்மை உடையது.

அதனால் மற்ற மாணவர்களின் நலன் கருதி எனக்கு நீண்ட கால விடுமுறை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எழுதியுள்ளான்.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தும் நிலையில் பரவி வருவதால் இது போன்று சில வேடிக்கையானா நிகழ்வுகளும் நடந்து வருகின்றது.

தலைமை ஆசிரியர் ஃப்லோரா கூறியது

இந்த கடிதம் எங்கள் கைக்கு வரவில்லை. அவனும் பிற மானவர்களும் சேர்ந்து எழுதி இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அவனின் சீனியர் மாணவர்கள் இவனை இவ்வாறு எழுத சொல்லியிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதும் அவர்களாக இருக்க கூடும்.

மேலும் அவர்கள் பெற்றோரிடம் இது பற்றி பேசி அவன் உடல்நிலை செக் செய்து மருத்துவ சான்றிதல் வாங்கி வார சொல்லியுள்ளேன். இது போன்ற தவறுகள் இனிமே நடக்க கூடாது என கண்டித்துள்ளேன் என கூறினார்.

3

எல்.முருகன் நியமனம்; ரஜினி கட்சியின் பெயர் என்ன? தமிழக அரசியல் நிலவரம்

1
ரஜினி கட்சியின் பெயர்

எல்.முருகன் நியமனம்; ரஜினி கட்சியின் பெயர் என்ன? தமிழக அரசியல் நிலவரம் பரபரப்புடன் காணப்படுகிறது. தேர்தல் காய்ச்சல் தற்பொழுதே துவங்கிவிட்டது.

நீண்ட நாட்களாக, அல்ல.. நீண்ட வருடமாக அரசியலுக்கு வருவேன் எனக் கூறி வரும் ரஜினி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக கூறியுள்ளார்.

தனிகட்சியா? தனிக்கட்சி என்றால் யாருடன் கூட்டணி? கட்சியின் கொள்கை என்ன இதுபோன்ற விவரங்கள் இன்று தெரிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் கட்சியின் பெயரைத் தெரிவிப்பாரா என்பது சந்தேகமே? ஒருவேளை முழுவதுமாக அறிவிக்க வாய்ப்பும் உள்ளது.

தனி கட்சி என்பது உறுதி

பாஜகவின் தலைவர் பதவி ரஜினிக்கு தான் என நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. ரஜினியின் முடிவுக்காக பாஜக காத்திருந்தது.

ரஜினி ஆரம்பம் முதலே தனிக்கட்சியில் பயணிக்க முடிவு செய்ய முடிவு செய்ததால் தான் பாஜக நேற்று எல்.முருகனை தமிழக பாஜக தலைவராக நியமித்தது.

எனவே, ரஜினி நிச்சயம் தனிக்கட்சி துவங்குவார். கட்சியின் பெயரை இன்று அறிவிப்பாரா என 10 மணி அளவில் தெரிந்துவிடும்.

3

நாசா விண்வெளி மாநாடு; திருச்சி மாணவிக்கு கிடைத்த அறிய வாய்ப்பு

0
நாசா விண்வெளி மாநாடு
மாணவி காயத்ரி திருச்சி உறையுரை சேர்ந்தவர்

நாசா விண்வெளி மாநாடு; திருச்சி மாணவிக்கு கிடைத்த அறிய வாய்ப்பு, மாணவி காயத்ரி திருச்சி உறையுரை சேர்ந்தவர்.

வருகிற ஜூன் மாதம் அமெரிக்காவில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க திருச்சியை சேர்த்த மாணவி காயத்ரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாசாவால் இணையத்தில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி அடைந்ததால் இந்த வாய்ப்பு கிடைத்ததாம்.

மேலும் அங்கு நடக்க விருக்கும் மாநாட்டில் நடக்கும் போட்டிகளில் தேர்ச்சி அடைந்தால் இலவசமாக அங்கையே கல்வி கற்கலாமாம்.

நாசா செல்ல நிதி நெருக்கடி

ஆனால் அங்கு செல்ல நிதி நெருக்கடி இருப்பதால் திருச்சி மாவட்ட ஆட்சியர் நிதி திரட்டி 75000 வரை கொடுத்துள்ளார். மேலும் முதலமைச்சர் அவர்களுக்கு இது பற்றி நிதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாணவி காயத்ரி திருச்சி உறையுரை சேர்ந்தவர், திருச்சியில் இருக்கும் கே. ராமகிரிஷ்ணா கல்லூரியில் இ‌சி‌இ படித்து வருகிறார். இவருடைய தந்தை அதே ஊரில் மருந்து வியாபாரம் செய்து வருகிறார்.

3

12/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

12/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று உங்களின் புத்திசாலித்தனமான காரியங்களால் அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றி பாராட்டுகளை பெறுவீர்கள்.

துணையிடம் இனிமையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். மன உறுதியுடன் இருப்பீர்கள்.

தட்சிணாமூர்த்தியை வழிபட கல்வியறிவு மேம்படும்.

ரிஷப ராசிபலன்

இன்று எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்கவும். பணிகளில் புத்திசாலித்தனம் தேவை. துணையிடம் நட்புறவு அவசியம். அனைவரிடமும் அன்பாக பேசவும்.

பணவரவு அதிகமாக இருக்காது. தைரியம் குறைவாக இருக்கும் அதனால் மன உளைச்சல் இருக்கும்.

குரு பகவானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் கூடும்.

மிதுன ராசிபலன்

இன்று சவாலான நாளாக இருக்கும். சிறப்பான நாளாக இருக்காது. பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது.

குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும். வரவும் செலவும் இணைந்து இருக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிவபெருமானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

கடக ராசிபலன்

இன்று இனிமையான நாளாக இருக்கும். நல்ல திறனுடன் இருப்பீர்கள். உங்கள் செயல்திறன் காரணமாக நல்ல நிலையை அடைவீர்கள்.

கணவன் மனைவி இடையேயான புரிதல் நல்ல நிலையில் இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும் நாளாக இருக்கும்.

குரு பகவானை வழிபட கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்று பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். அனைத்து விஷயத்தையும் பெரிதாக எண்ணி குழம்ப வேண்டாம். பணியில் முக்கியமான பொறுப்புகள் வரும்.

துணையிடம் தன்மையாக நடந்து கொள்ளவும். தன வரவு போதுமான அளவு இருக்காது. தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு.

பிரம்ம தேவரை வழிபட நன்மைகள் வந்து சேரும்.

கன்னி ராசிபலன் 

இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்காது. அதிக முயற்சிகள் தேவையாகும். நல்ல மனநிலை இருக்காது.

பணிசுமையால் சோர்வுடன் இருப்பீர்கள். வீட்டில் கோபமாக பேசுவீர்கள். பண வரவில் ஏற்றம் இருக்காது. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை உயரழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு.

குரு பகவானிற்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

துலா ராசிபலன்

இன்று சகஜமான நாளாக இருக்கும். நகைச்சுவை உணர்வுகளை வெளிபடுத்தி அனைவரையும் மகிழ்ச்சிகரமாக வைத்திருக்கும் நாளாக அமையும்.

தொழில் மேம்படும். கணவன் மனைவி இடையே வீண் விவாதங்கள் வேண்டாம். அஜாக்கிரதையை தவிர்க்கவும். பல்வலி ஏற்பட வாய்ப்புண்டு.

தட்சிணாமூர்த்தியை வழிபட மங்களம் பொங்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று குறைந்த முயற்சிகள் இருப்பினும் அமோக வெற்றி காண்பீர்கள். நம்பிக்கை நிறைவேறும். பணி சம்மந்தமான பயணம் இருக்கும்.

கணவன் மனைவி இடையே காதல் மேம்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடல் ஆற்றலுடன் இருக்கும்.

சரஸ்வதிக்கு விளக்கேற்றி வழிபட மேலும் வெற்றி கிடைக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று புதிய முயற்சிகள் வெற்றியை தேடித்தரும். தொட்டவை அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். மனதில் உற்சாகமாக இருப்பீர்கள்.

வீட்டில் நட்புறவு மேம்படும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த குறையுமில்லை.

ராகவேந்திரரை வழிபட கூடுதல் நன்மைகள் உண்டு.

மகர ராசிபலன் 

இன்று முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்கள் ஓட்டுவதில் கவனம் தேவை. பணியில் வெற்றி காண இயலாது.

துணையிடம் கருத்து வேறுபாடு வரலாம். சேமிக்க பணம் இருக்காது. பதட்டமான சூழலை தவிர்க்க தியானம் செய்யவும்.

நந்தி தேவரை விளக்கேற்றி வழிபட நன்மை உண்டு.

கும்ப ராசிபலன்

இன்று கடினமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் கவனமாக இருக்கவும்.

குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். பயணத்தில் கவனமாக இருக்கவும். பணம் பெரிதாக வர வாய்ப்பில்லை. செரிமான கோளாறுகள் வரலாம்.

மேதா தட்சிணாமூர்த்தியை வழிபட குழப்பங்கள் குறையும்.

மீன ராசிபலன் 

இன்று உங்களின் வெற்றி வாய்ப்புகள் தேடிவரும் நாளாக அமையும். அனைத்து காரியங்களிலும் சிறப்பாக முடியும். பாராட்டுகள் தேடி வரும்.

மங்களகரமான நாளாக இருக்கும். உங்களின் காதல் வசப்படும். பணவரவு அபரிமிதமாக இருக்கும். சேமிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் எந்த குறையுமில்லை.

12/03/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

டுவிட்டரில் டிரெண்டாகும் அஜித்BDayIn50D ஹேஷ்டேக்!

0
Ajith Birthday

Ajith Birthday; அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில், അജിത്අජිත්அஜித்BDayIn50D என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அஜித் (Ajith Birthday) வரும் மே 1 ஆம் தேதி தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் தல அஜித். இவரை படங்களில் பார்ப்பதோடு சரி, பொது நிகழ்ச்சியில் எங்கும் காண முடியாது.

அப்படியே பொது நிகழ்ச்சிக்கு வந்தால் அன்றைய தினம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அண்மையில் கூட ஆத்விக்கின் 6ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அஜித் குடும்பத்தோடு இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதோடு, வலிமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படமும் வைரலானது. ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரயிருக்கிறது.

இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவரது பிறந்தநாளுக்கு (Ajith Birthday) இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில், അജിത്අජිත්அஜித்BDayIn50D என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

எப்போதுதான் அஜித் பிறந்தநாள் வரும் என்று அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பிறந்தநாளின் போது நலத்திட்ட உதவிகள், அன்னதானம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல், ஏழை, எளியவர்களுக்கு உதவுதல் போன்ற பல சேவைகளை செய்ய தயாராகி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக ஆத்விக் பிறந்தநாளுக்கு அன்னதானம், மரக்கன்றுகள் நடுதல், மனிதாபிமானத்தோடு பலருக்கும் உதவி செய்தல் போன்ற பல சேவைகளை செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள அஜித்துக்கு கேரளா ரசிகர்கள் இந்த டுவிட்டர் ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

40 ஆண்டுகால வரலாறு: தலித் தலைவர்; பாஜகவின் புதிய புரட்சி – சிஎம் நாற்காலி தயார்

1
40 ஆண்டுகால வரலாறு எல்.முருகன்

40 ஆண்டுகால வரலாறு: தலித் தலைவர்; பாஜகவின் புதிய புரட்சி – சிஎம் நாற்காலி தயார். தமிழக சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராதா திருப்பம் எல்.முருகன் நியமனம்.

எல்.முருகன் தலைவரானது எப்படி?

பாஜக தேசியத் தலைவர் பதவியில் இருந்த அமித்ஷா ஜனவரி மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார். அவருக்குப்பின் அந்த அந்த பதவியில் அமர்ந்தவர் ஜெ.பி.நட்டா.

நட்டா பொறுப்பேற்றவுடன் காலியாக இருந்த பாஜக மாநிலத் தலைவர்களை நியமிக்கும் பணியை மேற்கொண்டார்.

எல்.முருகன் ஏற்கனவே நட்டாவிற்கு நன்கு பரிட்சியம் ஆனவர். இதனால் எளிதில் நட்டாவின் பட்டியலில் எல்.முருகன் இடம்பெற்றார்.

வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் இப்படி நன்கு தெரிந்த முகங்களை ஓரம்கட்டி விட்டு எல்.முருகன் தலைவராகி  உள்ளார்.

எல்.முருகன் தெரிந்த முகம் என்பதால் மட்டும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யவில்லை. மிகப்பெரிய திட்டத்துடன் பாஜக வரும் தேர்தலை சந்திக்க உள்ளது.

40 ஆண்டுகால வரலாறு தலித் தலைவர்

தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக கட்சிகள் தலித்களுக்கு இடஒதுக்கீடு செய்வார்கள். ஆனால் தலைவர் பதவி மட்டும் வழங்க மாட்டார்கள்.

இந்த நான்கு கட்சியில் தமிழக தலித் தலைவர் லிஸ்ட் எடுத்தால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் எல்.இளையபெருமாள் மட்டுமே.

அவர் பதவி வகித்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன்பிறகு இந்தக் கட்சிகளில் தலித் தலைவர்கள் நியமிக்கப்பட்டது இல்லை.

திருமாவளவன் போன்றவர்கள் தங்கள் சமூகத்திற்கு என தனிக்கட்சி துவங்கியே தலைவராக மாறினர். முன்னணி கட்சியில் கூட்டணியில் மட்டுமே இடம் வகிக்க முடியும்.

அதிகம் பட்சம்போனால் அமைச்சர் பதவி, எம்.பி பதவி கிடைக்கும். அதுவும் ஏதாவது ஒரு டம்மி துறை மட்டுமே பெயரளவில் ஒதுக்கப்படும்.

இதை நன்கு கவனித்த பாஜக தலித் மக்களின் கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடிவு செய்ததுள்ளது.

குறிப்பாக பாஜகவில் பிராமணர் பாகுபாடு உள்ளது என சில மாதங்களுக்கு முன்பு நிர்மலா சீதாராமன் முன்னிலையில் தமிழிசை கீழே அமர்ந்து சாப்பிட்டார் என சர்ச்சை வெடித்தது. இதைக் களையவே இந்த முக்கிய முடிவு என கூறப்படுகிறது.

மேல் ஜாதி மக்கள் ஓட்டு?

தலித் தலைவர் என்றால் மேல் ஜாதியினர் ஓட்டு பறிபோகுமே எனக் கேள்வி எழலாம். அதற்கு தான் அதிமுக, பாமக கைவசம் உள்ளது.

இந்த கட்சிகளில் பெரும்பான்மையான வாக்கு வங்கிகள் மேல் சமூகத்தை சேர்ந்தவர்களிடமே உள்ளது.

பாமக கூட்டணிக்குள் இருந்தால், விசிக அந்தக் கூட்டணிக்குள் வராது. இருகட்சிகளும் எலியும், பூனையுமாக உள்ளனர். இதுதான் இதுவரை நடந்து வரும் தமிழக அரசியல்.

எல்.முருகனை கொண்டு வி.சி.க.வை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி நடக்கும். இந்த கணக்கு சரியாக வருமா என திருமாவளவன் எடுக்கும் முடிவில் தான் உள்ளது.

பாஜகவை வழுவாக எதிர்ப்பவர்கள்

இஸ்லாமிய மக்கள் ஆரம்பம் முதலே பாஜகவை வழுவாக எதிர்த்து வருகின்றார். அவர்களுடன் ரஜினி சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.

இதில் எந்த மாதிரியான பேச்சுவார்த்தைகள் நடந்தன என்பது உண்மையான விவரம் வெளிவரவில்லை. அதன்பிறகே எல்.முருகன் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இஸ்லாமிய ஓட்டுகளை தவிர்த்து மற்ற அனைத்து சமூக குட்டிக்கட்சிகளை ஒன்றிணைத்து தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றி சாதனை படைத்து சரித்திரத்தை மாற்றி எழுத பாஜக முடிவு செய்துள்ளது.

பாஜகவின் வியூகம் எந்த அளவு ஒர்கவுட் ஆகும் என்பது போகப் போகத்தான் தெரியும். எல்.முருகன் தலைவராகியது சற்று பாஜகவின் மீது இருந்த பார்வையை மாற்றி உள்ளது என்பது மட்டும் உறுதி.

3

மருத்துவமனைக்கு சென்று லோகேஷ் பாப்-ஐ சந்தித்த விஜய் சேதுபதி!

0
Lokesh Pop Addy

Lokesh Pop Addy; லோகேஷ் பாப்-ஐ சந்தித்த விஜய் சேதுபதி அவருக்கான மருத்துவ செலவையும் வழங்கியுள்ளார்.

ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் லோகேஷ் பாப் (Lokesh Pop Addy).

இவர், விஜய் சேதுபதி நடிப்பில் வந்த நானும் ரௌடி தான் படத்தில் காமெடியனாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டு கை, கால் செயலிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சைக்காக நண்பர்கள் போதுமான நிதியுதவியை திரட்டியுள்ளனர். மேலும், சன் நெட்வொர்க் மூலமாக சிகிச்சைக்கான முழு தொகையையும் அளித்துள்ளது என்று அவரது நண்பர் குட்டி கோபி தெரிவித்தார்.

மேலும், சிகிச்சை முடிந்து தற்போது லோகேஷ் பாப் நலமாக இருப்பதாகவும், விரைவில் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட இருப்பதாகவும் அண்மையில் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, (Vijay Sethupathi) லோகேஷ் பாப்-வை மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து நலம் விசாரித்துள்ளார். மேலும், மருத்து செலவிற்காக ஆகும் தொகையை வழங்கியுள்ளார்.

தற்போது விஜய் சேதுபதி, லோகேஷ் பாப்-வை மருத்துவமனையில் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://platform.twitter.com/widgets.js

3