Home Blog Page 223

நான் பிறந்த ஊருக்கு போறேன் – ஆமை செய்த பயணம்

0

மனிதர்கள் என்னதான் வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் மனசுல ஒரு ஓரமாக சொந்த ஊருக்கு போக மாட்டோமா? என்று ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

என்றாவது ஒரு நாள் பிறந்த இடத்தை பார்க்க வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கும். இதைபோல தான் மற்ற உயிரினங்களுக்கும் மனதிலும் இருக்கும் போல.

ஆமை செய்த பயணம்

ஆம்  ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு ஒரு ஆமை பயணித்து ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் நகரில் 1997 ஆம் ஆண்டு ஜப்பானியர் மீன்பிடி படகு ஒன்றில் குட்டி கடல் ஆமை  ஒன்று காயத்துடன் சிக்கியுள்ளது.

இதை பார்த்த அந்த ஜப்பானியர் ஆமை காயம் பட்டதை கண்டு, அதற்கு முதலுதவி செய்து கடல்வாழ் உயிரினங்கள் பராமரிப்பு மையத்திடம் உதவி கேட்டுள்ளார்.

அவர்கள் வந்து காயம்பட்ட ஆமைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். தினமும் அதற்கு பயிற்சி, நீந்தும் திறமை, மருந்துகள் கொடுத்து வந்துள்ளனர்.

இப்படி அவர்களின் பராமரிப்பில் இருபது வருடங்கள் வளர்ந்த இந்த ஆமை. ஜோசி என்று பெயர் சூட்டப்பட்டு,  2 கிலோவில் இருந்து 180 கிலோ அளவிற்கு வளர்ந்துள்ளது.

அந்த ஆமை நன்றாக நீந்தி வந்ததால் அதை கடலிலே விடும் முடிவிற்கு வந்தனர் பராமரிப்பு மையத்தினர்.

ஆதலால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி ஆப்பிரிக்கா கடலில் வழி அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்களிடம் விடை பெற்ற ஆமை 26 மாதங்கள் பயணம் செய்து தன்னுடைய பிறந்த இடத்திற்கு சென்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடல் ஆமைக்கு இயற்கையாகவே பிறந்த இடத்தை உணரும் தன்மை உள்ளது என விஞ்ஞானிகள் கூறுவதை இந்த ஆமை நிருப்பித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 47 கிலோமீட்டர் பயணித்த இந்த ஆமை, தான் பிறந்த இடமான மேற்கு ஆஸ்திரேலியா கடல் பகுதிக்கு 26 மாதமாக பயணித்து சுமார் 37000 கி.மீ பயணித்துள்ளது.

சாட்டிலைட் மூலமாக ஆய்வாளர்களும், பராமரிப்பு மையத்தினரும் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.

இந்த ஆமை சென்ற இடம்  அதாவது ஆமை பிறந்த இடம் ஆஸ்திரேலியாவில் வசதியனாவர்கள் தேன் நிலவுக்கு செல்லும் இடமாகும்.

தனக்கு பிடித்த மான இணையை யோசி இந்நேரம் தேடி கண்டுபிடித்து இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கண்காணிக்கப்பட்ட உயிரினத்திலே அதிக பயணம் சென்றது நம்ம யோசி ஆமை தான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

3

பிகில் நடிகையுடன் ஜோடி சேர்ந்த பிக் பாஸ் கவின்!

0
Kavin Next Movie

Kavin; பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின், பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை அம்ரிதா ஐயருடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.

கவின், அம்ரிதா ஐயர் நடிப்பில் புதிய படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் வேட்டையனாக வந்தவர் நடிகர் கவின் (Bigg Boss Kavin). தொடர்ந்து சத்ரியன் படத்தில் துணை நடிகராக நடித்தார்.

இதையடுத்து, நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எனினும், அப்படி ஒன்றும் வரவேற்பு இல்லை.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 (Bigg Boss 3 Kavin) நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று, தனக்கென்று ஆர்மி உருவாகும் அளவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான், புதுமுக இயக்குநர் வினீத் இயக்கத்தில் ஏகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு லிஃப்ட் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் விஜய்யின் பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்த அம்ரிதா ஐயர் (Bigil Actress Amritha Aiyer) ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (Kavin – Amritha Aiyer) போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க ஹாரர் த்ரில்ல கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இதில், கவின், அம்ரிதா இருவரும் ஐடி கம்பெனியில் வேலைபார்ப்பவர்களாக நடிக்கின்றனர்.

3

அருணாசலம் ருத்ராட்சம், பாபா முத்திரை; வேறு ஒருவர் முதல்வர் – ரஜினி இறுதி முடிவு

0
அருணாசலம் ருத்ராட்சம்

அருணாசலம் ருத்ராட்சம், பாபா முத்திரை; வேறு ஒருவர் முதல்வர் – ரஜினி இறுதி முடிவு இதுதான். ரீல் வாழ்க்கையை நிஜ வாழ்க்கையாக மற்ற ரஜினி முடிவு

அருணாசலம் ருத்ராட்சம்

ரஜினி இன்று ரஜினி மக்கள் மன்றம் உறுப்பினர்களை சந்தித்துள்ளார். அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அவர் கூறியது நான் கட்சிக்கு மட்டுமே தலைவர், ஆட்சிக்கு வேறு ஒருவர் தலைவர். இதை அனைவரும் ஆதரித்தே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அருணாச்சலம் படத்தில் ரஜினி கட்சி துவங்கி ருத்ராட்ச சின்னத்தில் ஜனகராஜை முதல்வர் வேட்பாளராக நிற்க வைப்பார்.

இதேபோன்றே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் முதல்வராக முக்கிய பங்காற்றியது ரஜினி கொடுத்த வாய்ஸ்.

இதே பாணியை தொடரவே ரஜினி விரும்புகிறார். அதை தெளிவாக மேடையில் பேசியும் உள்ளார்.

அரசியல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள போஸ்புக் பக்கத்தை லைக் செய்யுவும். Facebook Like  |  Twitter Follow

3

நான் கட்சிக்கு மட்டுமே தலைவர்; முதல்வர் இவர் தான் – ரஜினி உருக்கமான பேச்சு

2
நான் கட்சிக்கு மட்டுமே தலைவர்; முதல்வர் இவர் தான் - ரஜினி உருக்கமான பேச்சு

நான் கட்சிக்கு மட்டுமே தலைவர்; முதல்வர் இவர் தான் – ரஜினி உருக்கமான பேச்சு

ரஜினி மக்கள் மன்ற கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் ரஜினி உருக்கமான குரலில் உரையாற்றி வருகிறார்.

நான் ஒருபோதும் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை எனக்கூறியுள்ளார். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அரசியலில் மாற்றம் தேவை நல்ல அரசியல் தலைவர் தேவை என ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் இவர் தான் முதல்வர் வேட்பாளர் என ரஜினி யாரையும் சுட்டிக்காட்டவில்லை.

30-50 வயதுடைய இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாக ரஜினி தெரிவித்துள்ளார். அவருடைய சி.எம். வேட்பாளர் இந்த வயதுடையவராகவே இருப்பார் என தகவல் தெரிவிகின்றன.

ரஜினி கண்ணீர் மல்க தொடர்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

அரசியல் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள போஸ்புக் பக்கத்தை லைக் செய்யுவும். Facebook Like  |  Twitter Follow

3

ஆஸ்திரேலியா அணிக்கு நடந்த வேதனை- உலக சாதனை மறக்க முடியுமா இன்று?

0

ஆஸ்திரேலியா அணிக்கு நடந்த வேதனை – மறக்க முடியுமா இன்று? கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் முறியடிக்கப்பட்ட உலக சாதனை.

ஆஸ்திரேலியா செய்த மிகப்பெரிய உலக சாதனையை அதே நாளில் நான்கு மணி நேரத்தில் முறியடித்து உலக சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்கா அணி.

ஆஸ்திரேலியா vs தென்ஆப்ரிக்கா

14 வருடத்திற்கு முன்பு 2006-ஆம் ஆண்டு இதே நாளில் ஜோகனஸ்பார்க் நகரில் நியூ வன்டர்ஸ் மைதானத்தில், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியின் ஐந்தாவது மற்றும் இறுதி போட்டி நடைபெற்றது.

ஏற்கனவே நடந்த நான்கு போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளை வென்றது. இறுதி போட்டிக்காக ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்தனர்.

டாஸ் வென்ற பான்டிங்

டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். கில்கிறிஸ்ட் மற்றும் கேட்டிச் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள்.

இருவரும் சேர்நது 97 ரன்கள் எடுத்தனர். முதல் விக்கெட்டை வீழ்த்த தென் ஆப்பிரிக்கா அணி 16 ஓவர்கள் எடுத்துக் கொண்டது.

அடுத்து களமிறங்கிய ரிக்கி பான்டிங் விஸ்வரூபம் எடுத்தார். பேய் இன்னிங்ஸ் ஆடினார். நாலாபுறமும் பந்துகளை சிதறவிட்டார். 105 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தார், 13 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும்.

இதுவே இவரது ஒரு நாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச ரன்னாகும்.

7 வருட உலக சாதனை

ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 434 ரன்கள் எடுத்து 7 வருட உலக சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தது.

இதற்கு முன்னாள் ஒருநாள் போட்டியில் 1999-ஆம் ஆண்டு இலங்கை அணி கென்யா அணிக்கு எதிராக 399 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்து வந்தது.

ஆஸ்திரேலியா அதிகபட்சமாக பான்டிங் 165 ரன், ஹஸ்ஸி 81 ரன், காட்டிச் 79 ரன், கில்கிறிஸ்ட் 5 ரன், சைமன்ட்ஸ் 27 ரன்களும் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் சோர்வு அடைந்து பந்து வீசினர். டேலிமெக்ஸ் இரண்டு விக்கெட்டும், ஹால் மற்றும் நிட்னி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இமாலய இலக்கு, பந்து வீச்சில் சோர்வு, சொந்த ஊர் ரசிகர்கள் எதிர்பார்ப்பு தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என பலரும் கருதினார்கள்.

ஸ்மித், கிப்ஸ் ருத்ரதாண்டவம்

தென் ஆப்பிரிக்கா அணி இமாலய இலக்கை துரத்த தயாரானார்கள். 3 ரன் இருந்த போது தென் ஆப்பிர்க்கா அணி முதல் விக்கெட்டான டிப்பனரை இரண்டாவது ஓவரில் இழந்து அதிர்ச்சியளித்தது.

ஆஸ்திரேலியா சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என எண்ணியது. இங்கு தான் மூன்றாவதாக களமிறங்கிய கிப்ஸ், ஆஸ்திரேலியாவை வைத்து செய்ய போகிறார் என்று யாருக்கும் தெரியாது.

ஸ்மித் மற்றும் கிப்ஸ் கூட்டணி அமைத்து அணியை வெற்றி பாதைக்கு மாற்றினார்கள். 190 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா தனது இர்ணடாவது விக்கெட்டான ஸ்மித்தை இழந்தது, அடுத்து வந்த ஏபிடி வில்லியர்ஸ் அவுட் ஆகினார்.

கிப்ஸ் அடுத்து ஆட பவுச்சர் அவருக்கு துணை நின்றார். கிப்ஸ்  111 பந்துகளில் 21 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 175 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆட்டத்தை மாற்றிய வான்டர்வத்

வான்டர் வாத் இடையில் களமிறங்கி 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட 35 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் கையில் இருந்த ஆட்டத்தை மார்க் பவுச்சரிடம் கொடுத்தார்.

தென் ஆப்பிர்க்கா அணியின் விக்கெட்டும் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தது. இறுதி ஓவரில் 6 பந்துகளில் 7 ரன்கள் தேவை, கைவசம் இரண்டு விக்கெட்கள் உள்ளது.

லீ வீசிய முதல் பந்து பவுச்சர் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினர் ஆன்ட்ரு ஹால், மூன்றாவது பந்து தனது விக்கெட்டை பறிக்கொடுத்து வெளியேறினார் ஹால்.

ரசிகர்கள் பதற்றம், ஆப்பிரிக்கா வெற்றி

இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது. தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மைதானத்தின் வெளியே மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் பதற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.

நிட்னி களமிறங்கி நான்காவது பந்தில் ஒரு ரன் எடுக்க அடுத்த பந்தில் பவுச்சர் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தென் ஆப்பிர்க்காவுக்கு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்து கொடுத்தார், ஆவலுடன் காத்து இருந்த உள்ளுர் ரசிகர்கள் வயிற்றில் பாலைவார்த்தார்.

வீரர்கள் மைதானத்திற்கு ஓடி வந்து குதித்து ஆட்டம் போட்டார்கள், ஆஸ்திரேலியா அணி படைத்த உலக சாதனையை நான்கு மணி நேரத்தில் உடைத்து புதிய சாதனை படைத்தது தென்ஆப்ரிக்கா.

தென் ஆப்பிரிக்கா அணியில் கிப்ஸ் 175 ரன்கள் எடுத்தது அவருடைய அதிகபட்ச ரன்னாக உள்ளது. ஸ்மித் 90 ரன்கள், பவுச்சர் 50 ரன்கள்,  வான்டர் வத் 35 ரன்கள் , காலிஸ் 20 ரன்கள், டிவில்லியர்ஸ் 14 ரன்கள், கெம்ப் 13 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் பிராக்கன் 5 விக்கெட்டும்,  சைமன்ட்ஸ் 2 விக்கெட்டும், லீ மற்றும் கிளார்க் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது, கிப்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகமே கொண்டடியது

கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வந்த ஆஸ்திரேலியாவை யாராவது வெற்றி பெற மாட்டார்களா என்று உலகமே எண்ணிய போது தென் ஆப்பிரிக்கா வென்றது.

ஆஸ்திரேலியாவை தவிர உலகமே கொண்டாடியது, தென் ஆப்பிரிக்கா மட்டுமில்லை, இந்தியாவிலும்  பேசும் பொருளாக மாறியது இந்த போட்டி.

438 போட்டி

இந்த போட்டியை 438 போட்டி என்று பெயர் சூட்டினர் பத்திரிகை மற்றும் ஊடகங்கள். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சில் சேர்த்து 872 ரன்கள் எடுக்கப்பட்டு உலக சாதனையாக இன்றுவரை இருந்து வருகிறது.

இது தான் இன்று வரை மிகப்பெரிய சேஸிங் சாதனை ரன்னாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுக்கு அன்று மோசமான நாளாக அமைந்தது.

3

அடப்பாவிங்களா இருந்த ஒன்றையும் கொன்னுட்டீங்களே?

0

உலகிலேயே மிக உயரமான விலங்கினம் ஒட்டகச்சிவிங்கி. வெள்ளைநிற ஒட்டகச்சிவிங்கி மிகவும் அரிய வகையான உயிரினம்.

உலகிலேயே மிக உயரமான விலங்கினம்

வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி (white giraffe) கென்யா நாட்டில்  2017-ஆம் ஆண்டு தான் வன அலுவலகர்களால் கண்டறியப்பட்டுது. பிறகு அந்த ஒட்டகச்சிவிங்கி இரண்டு குட்டிகளை ஈன்றெடுத்தது.

உலகிலேயே மிக அதிசயமான ஒன்றான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கியை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் கென்யாவிற்கு படையெடுத்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கென்யா வனக் காப்பாளர்கள் வெள்ளை நிற ஒட்டகச் சிவிங்கியைத் தேடி வந்தனர்.

ஆனால் மிஞ்சியது இரண்டு வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கியின் எலும்புக்கூடுகள் மட்டுமே. நான்கு மாதத்திற்கு முன்பே இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leucism மரபணு மாற்றத்தால் இந்த ஒட்டகச்சிவிங்கிகள் வெள்ளை நிறத் தோலுக்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கென்யா வனவிலங்கு சரணாலயத்தின் மேலாளரான மெகமத் அகமது கூறுகையில், இன்று கென்யாவுக்கு மிகவும் சோகமான நாள், அரிய வகை விலங்குகளை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பதில் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

உலகில் உள்ள அனைத்து வனவிலங்கு பாதுகாவலருக்கு  இது ஒரு அச்சுறுத்தலாக அமையும். இந்த ஒட்டகச்சிவிங்கி இழப்பால் நாங்கள் நடத்திய மரபணு சோதனை மற்றும் ஆராய்ச்சிகளும் வீண் போய்விட்டன.

கடந்த 30 ஆண்டுகளில் 40 சதவீத ஒட்டகச் சிவிங்கிகள் வேட்டைக்காரர்கள் வேட்டையாடப்பட்டு உள்ளது. இந்த பூமியை அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ உரிமை உள்ள இடம்.

இந்த சுற்றுச்சூழல் எல்லா உயிரினங்களும் பங்கு வகிக்கிறது. இப்படி ஒவ்வொரு அரியவகை உயிரினமும் அழிவைச் சந்திப்பது மிகப் பெரிய ஆபத்தில் போய் முடிந்து விடும் என்கிறார்கள் சில சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள்.

கென்யா மற்றும் தான்சானியா பகுதி காடுகளில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான்சானியாவில் யானைகள் அதிகரிப்பால், 10 ஆயிரம் யானைகளை கொள்ள திட்டமிட்டனர். அதன்படி கென்ய அரசு, 1000 யானைகளை கடந்த மாதம் கொன்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களை. கொல்ல ஆஸ்திரேலியா அரசு முடிவு எடுத்தது குறிப்பிடத்தக்கது

3

ரஜினிக்காக காத்திருக்கும் அரசியல்: வருவாரா? வரமாட்டாரா?

0
Rajinikanth Political Entry

Rajinikanth Political Entry; ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் (Rajinikanth) தனது ஆன்மீக அரசியல் குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.

அதோடு சரி, அதன் பிறகு இதோ வருகிறார்? அதோ வருகிறார் என்று தான் பேச்சு அடிபட்டது. ஆனால், அவர் அரசியல் பற்றி அதன் பிறகு எந்த அறிவிப்பும் வரவில்லை.

இந்த நிலையில், கடந்த சில திங்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்ற (Rajini Makkal Mandram) மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை, ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டதாகவும், அதற்கு மாவட்ட செயலாளர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வந்தது.

அதோடு, ரஜினிகாந்தான் முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் வைத்ததாகவும் தகவல் வந்தது.

இதையடுத்து, தற்போது மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசுகிறார். அதில், தான் முதல்வர் வேட்பாளராக வரப்போவதில்லை என்று அறிவிக்க இருப்பதாக தகவல் வருகிறது.

தொடர்ந்து வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி தொடங்கயிருப்பது குறித்து அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் முக்கியகட்டமாக இன்று தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார். இதையடுத்து, 10.30 மணிக்கு லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்.

இதன் காரணமாக, அங்கு ஏராளமான ரசிகர்கள் ரஜினியின் உருவம் கொண்ட கட்சி கொடியுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

எனினும், இன்றைய அறிவிப்பு ரஜினி மக்கள் மன்றம் குறித்த மாநாடு பற்றியதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினியின் முடிவுக்காக தற்போது தமிழகமே காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் (#RajiniMakkalMandram),

ரஜினிகாந்த அரசியல் வருகை (#Rajinikanthpoliticalentry), ரஜினியே எங்கள் முதல்வர் (#ரஜினியே_எங்கள்_முதல்வர்) ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

3

மகளிர் உலககோப்பை 2021 ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு

0

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (women world cup 2021) போட்டி  50 ஓவர்கள் போட்டி 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அந்த போட்டியின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்தில் வருகிற 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கும் உலககோப்பை மார்ச் 7 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறுகிறது.

முதல் அரையிறுதி மார்ச் 3 ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதி 4 ஆம் தேதியும் நடைபெறுகிறது, அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதி போட்டி மழை காரணமாக தடைப்பட்டால், ‘ரிஸியும் டே என்று அழைக்கப்படும்’ அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

எட்டு அணிகள் கலந்து கொள்ளும் மகளிர் உலககோப்பை போட்டியில், எட்டு அணிகளும் மற்ற ஏழு அணிகளுடன் மோத வேண்டும்.

புள்ளிபட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். முதல் அரையிறுதியில் புள்ளிபட்டியலில் தகுதி பெறும் (1 மற்றும் 4) இடங்களை அணிகள் மோதும்.

இரண்டாவது அரையிறுதியில் தகுதி பெறும் (2 மற்றும் 3) அணிகள் மோதும்.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி தகுதிபெற்றது.
மீதமுள்ள நான்கு அணிகள் தகுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றது.

கடந்த வாரம் நடைபெற்ற டி20 மகளிர் உலககோப்பை போட்டி இறுதியில்  இந்தியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா அணி.

நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து, ஹமில்டன், வெல்லிங்டன், கிரிஸ்ட் சர்ச், டோவ்ரங்க மற்றும் டுனேடின் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

இறுதிப்போட்டி கிரிஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெறுகிறது.

3

World Kidney Day 2020 Theme; உலக சிறுநீரக தினம் 2020 தீம்

0
World Kidney Day 2020 Theme

World Kidney Day 2020 Theme; உலக சிறுநீரக தின தீம் உலகத்தில் 850 மில்லியன் மக்கள் சிறுநீரக பாதிப்பை அடைகின்றனர். பத்தில் ஒரு பருவ வயதினர் நீண்ட கால சிறுநீரக பாதிப்பை கொண்டிருக்கின்றனர்.

உலகத்தில் ஏற்படும் உயிரழப்பில் 5வது மிகப்பெரிய நோயாக சிறுநீரக பாதிப்பு காணப்படுகிறது. வளர்ச்சியற்ற நாடுகளில் கிட்னி உறுப்பு மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லாமல் நிறைய உயிர்கள் போகின்றன.

World Kidney Day 2020 Theme

சிறுநீரக பாதிப்பு பற்றிய விழிப்புணர்வையும் அது ஏற்பட்டால் எப்படி சரி செய்வது என்ற கருத்தையும் இதற்கு எவ்வாறு மருத்துவ உதவிகள் பெறலாம் என்ற அறிவிப்புமே உலக சிறுநீரக தினம் 2020 தீம் ஆகும்.

today what special day in world – india – tamil. வரலாற்றில் இன்று  இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

CSK முன்னாள் வீரரால் தென் ஆப்பிரிக்கா லிஜெண்ட் அணி வெற்றி.

0

கடந்த மார்ச் 7ம் தேதி தொடங்கிய ‘ரோடு சேப்டி வேர்ல்டு தொடர்’ போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை,  தென்னாப்பிரிக்கா என ஐந்து அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகிறது.

நேற்று நான்காவது லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது

வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக டேரன் கங்கா 31, சந்தர்பால் 21, பவள் 30, ஹயத் 14, கூப்பர் 23, பெஸ்ட் 10 ரன்களும் எடுத்தனர்.

தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் பால் ஹாரிஸ் 3, அல்பி மோர்கல் 2 விக்கெட்டும், வாண்டர்வாத் மற்றும் மெக்லரென் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்கா வெற்றி

144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஜான்டி ரோட்ஸ் 53, அல்பி மோர்கல் 54 ரன்களும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பெஸ்ட் 2 விக்கெட்டும், சுலைமான் பென் மற்றும் சன் போடு ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்

ஆட்டநாயகன் விருதை 2 விக்கெட் மற்றும் 54 ரன்கள் எடுத்த சிஎஸ்கே(CSK) வின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அல்பி மோர்க்கல் வென்றார்.

38 வயதான அல்பி மோர்க்கல் 2008 – 2013 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டி

ஏற்கனவே வெஸ்ட்இண்டீஸ் லிஜெண்ட் அணி முதல் லீக் போட்டியில் இந்திய லிஜெண்ட் அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்த போட்டி நாளை மார்ச்சு 13ஆம் தேதி ஸ்ரீலங்கா லெஜெண்ட் அணியுடன் மும்பையில் மோதுகிறது.

3