Home Blog Page 222

World Sleep Day 2020 Theme; உலக தூக்க தினம் 2020 தீம்

0
World Sleep Day 2020 Theme
World Sleep Day 2020 Theme

World Sleep Day 2020 Theme; உலக தூக்க தினம் 2020 தீம், தூக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதைப்பற்றி விழிப்புணர்வையும் எடுத்துக் கூறுவதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும்.

இன்றைய காலக் கட்டத்தில் நாம் யாருமே ஆழ்ந்த உறக்கம் என்பதை அடைந்ததே இல்லை. மன அழுத்தம், நேரமின்மை ஆகிய காரணங்களினால் நாம் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

பெற்றோர்கள் குழந்தைகளை சரியான நேரத்தில் தூங்க வைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அவர்களின் ஒவ்வொரு செயலும் படிப்பாகட்டும் விளையாட்டாகட்டும் அது அவர்கள் எடுக்கும் ஓய்வை பொறுத்தது.

ஆரோக்கியமான உறக்கம் இல்லையென்றால் ஹார்ட் ஸ்ட்ரோக், இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு கூட ஏற்படலாம்.

தூக்கமின்மை பசியை தூண்டும், அதாவது பசியை தூண்டும் கிரேலின், லெப்டின் ஆகிய ஹார்மோன்களை தூண்டுகிறது.

World Sleep Day 2020 Theme

தூக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதைப்பற்றி விழிப்புணர்வையும் எடுத்துக் கூறுவதே இந்த நாளின் குறிக்கோள் ஆகும். சரியான தூக்கம் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.

தூங்குவதற்கு  முன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலரும் டிவி அல்லது திரைப்படம், மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரையாவது தினமும் தூங்க வேண்டும். பெற்றோர்கள் தூங்கும் நேரத்தில் கண்டிப்பாக செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்.

today what special day in world – india – tamilவரலாற்றில் இன்று  இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

மார்ச் 13ல் வெளியாகும் படங்களின் பட்டியல்!

0
March 13 Tamil Movie Release

Tamil Movie Release; இந்த வாரம் வால்டர், தாராள பிரபு, அசுரகுரு ஆகிய படங்கள் உள்பட 7 படங்கள் வெளியாகிறது.

March 13 Tamil Movie Release; மார்ச் 13 ஆம் தேதி தாராள பிரபு, அசுரகுரு, வால்டர், கயிறு, எனக்கு ஒன்னு தெரிஞ்சு ஆகணும், தஞ்சமடா நீ எனக்கு, ரகசிய போலீஸ் ஆகிய படங்கள் வெளியாகிறது.

ஒவ்வொரு வாரமும் தமிழ் சினிமாவில் குறைந்தது 5 படங்கள் திரைக்கு வருவது வழக்கம். இதில், சிறிய பட்ஜெட் படங்கள், மாஸ் ஹீரோவின் படங்கள் ஆகியவை அடங்கும்.

ஆனால், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், கார்த்தி ஆகியோரது படங்கள் முக்கிய தினங்களில் வெளியாவது வழக்கம். ஆதலால், இந்தப் படங்கள் அதிக வசூல் குவித்துவிடும்.

ஒரே நாளில் 5க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாவதால், அந்தப் படங்களின் வசூல் பாதிக்கப்படும். அப்படியில்லை என்றால், படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

இப்படி, பல பிரச்சனைகளை தாண்டி நாளை மார்ச் 13 ஆம் தேதி அசுரகுரு, தாராள பிரபு, எனக்கு ஒன்னு தெரிஞ்சு ஆகணும், கயிறு, தஞ்சமடா நீ எனக்கு, வால்டர், ரகசிய போலீஸ் (ரீ – ரிலீஸ்) ஆகிய படங்கள் திரைக்கு வருகிறது.

அசுரகுரு

தமிழகத்தில் நிகழ்ந்த ரயில் கொள்ளை சம்பவத்தை மையப்படுத்தி அசுரகுரு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், விக்ரம் பிரபு, யோகி பாபு, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். ராஜதீப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கணேஷ் ராகவேந்திரா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரயில் கொள்ளையை மையப்படுத்திய படம் என்பதால், இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வால்டர்

குழந்தைகள் கடத்தப்படும் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சிபி சத்யராஜ், ஷிரின் காஞ்வாலா, சமுத்திரக்கனி, நட்டி என்ற நடராஜ், சனம் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

அன்பரசன் வால்டர் படத்தை இயக்கியுள்ளார். சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.

தாராள பிரபு

விந்து தானம் செய்யபடுவதையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக், தன்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ளனர். கிருஷ்ண மாரிமுத்து தாராள பிரபு படத்தை இயக்கியுள்ளார்.

விக்ரம் பிரபி, சிபிராஜ், ஹரிஷ் கல்யாண் ஆகியோருக்கு மட்டும் இன்றைய நாளில் போட்டி ஏற்பட்டுள்ளது.

மற்ற படங்கள் அப்படி ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் இல்லை என்பதால், ரசிகர்கள் இந்தப் படங்களுக்கு மட்டும் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கயிறு, எனக்கு ஒன்னு தெரிஞ்சு ஆகணும், ரகசிய போலீஸ், தஞ்சமடா நீ எனக்கு ஆகிய படங்களின் கதை நன்றாக இருந்தால் இந்தப் படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://platform.twitter.com/widgets.js

தொடர்ந்து வரும் 20 ஆம் தேதி அல்டி, காக்டைல், கேர் ஆப் காதல், கன்னி ராசி, காவல் துறை உங்கள் நண்பன், மரிஜூனா, பல்லு படாம பாத்துக்க, புறநகர் ஆகிய 8 தமிழ் படங்கள் திரைக்கு வருகிறது.

https://platform.twitter.com/widgets.js

3

13/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
13/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

13/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

உங்களின் நேர்மறையான எண்ணம் இன்றைய நாளுக்கு சாதகமாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பயன்தரும்.

துணையுடன் புரிதல் ஏற்படும். அதிக வருவாய் கிடைக்கும். உங்கள் வருவாயை கொண்டு பயனுள்ள காரியங்களுக்கு செலவு செய்வீர்கள்.

ரிஷபம் ராசிபலன்

சுறுசுறுப்புடன் செயல்படுவது அவசியம். பணியிடத்தில் ஏமாற்றம், தடைகள் ஏற்படலாம். சக பணியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

வீட்டில் மனைவியுடன் சண்டை சச்சரவுகள் உண்டாக நேரிடலாம். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிக்கனமாக இருப்பது சிறந்தது.

மிதுன ராசிபலன்

கவனமாக செயல்படவேண்டும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். சக பணியாளர்கள் மூலம் வம்பு வந்து சேரலாம்.

பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் தேவைகளை சமாளிக்க மிகவும் சிரமப்படுவீர்கள். ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

கடக ராசிபலன்

குழப்பம், அமைதியின்மை உங்களை தொந்தரவு செய்யும். பிராத்தனை இசை கேட்பது மன நிம்மதியை தரும்.

பணியிடம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பதவி உயர்வுபெற சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும்.

சிம்மம் ராசிபலன்

இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான நாள். எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் எளிதில் வெற்றி கிட்டும். கடின உழைப்பு வெற்றியைத் தரும்.

உங்கள் மனைவியுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். பண வரவுகள் அதிகரிக்கும். வர்த்தகம் உங்களுக்கு லாபகரமாக அமையும்.

கன்னி ராசிபலன் 

பணிச்சுமை அதிகமாகும். இந்த நாள் உங்களுக்கு எரிச்சலை கொடுக்கும். சக பணியாளருடன் மனக்கசப்பு ஏற்படும்.

மனைவியிடம் அகந்தை கொள்ளவேண்டாம். குடும்ப பொறுப்புகள் அதிகம் உள்ள நாள். வருவாயை அதிகப்படுத்த சரியான தீர்வை காண்பது சிறந்தது.

துலாம் ராசிபலன்

எந்த முயற்சி எடுத்தாலும் கடினமாக பாடுபட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும். பணியை பொருத்தமட்டில் இறங்கு முகம் காணப்படும்.

பாதுகாப்பு இல்லாதது போல் உணர்வீர்கள். உங்கள் மனைவி உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். ஆன்மீகம் சார்ந்த செலவுகள் ஏற்படும்.

விருச்சிக ராசிபலன்

இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனமாக செயல்படுவது நல்லது. ஆன்மீக ஈடுபாடு மனக்கவலையைப் போக்கும்.

பணி நேரம் அதிகரிக்கும். மேலதிகாரியிடம் வசவு வாங்க நேரிடலாம். பண இழப்பு நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

தனுசு ராசிபலன்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். எந்த ஒரு செயலையும் குறித்த நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

மனைவியுடன் உறவு நெருக்கமாக அமையும். வீட்டில் சுபகாரியம் நிகழ்த்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம். பண சேமிப்பு அதிகமாகும்.

மகரம் ராசிபலன் 

உங்களின் திறமைக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். கடின உழைப்பு, விடாமுயற்சி உங்களை உயர்த்தும். கடினமான பணிகளும் எளிதாகும்.

வேலை நிமித்தமாக பயணங்கள் செய்ய நேரிடலாம். வாழ்க்கைக்கு தேவையான கையிருப்பு காணப்படும் நாள். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

கும்ப ராசிபலன்

இன்று உங்களுக்கு சவலான நாள். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் கையாள வேண்டும். பணியிடம் போராட்டம் நிறைந்து காணப்படும்.

மனைவியிடம் கோபத்தை வெளிப்படுத்தி அவரை பதற்றமடையச் செய்ய வேண்டாம். நிதி நெருக்கடி, தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.

மீனம் ராசிபலன் 

நீங்கள் இறங்கிய காரியங்கள் அனைத்தும் வெற்றி கூடும். பணியில் திருப்திகரமான உணர்வு ஏற்படும். புதிய தொடர்புகள், நண்பர்கள் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

பணியிடத்தில் உங்கள் திறமைகளை மற்றவர்கள் உணரும் நாள். மனைவியிடம் அன்பு வயப்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். நிதி சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

13/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

மாப்பிள்ளை அவருதான்…. டிரெஸ் என்னோடது: ரஜினியின் பேச்சு!

0
Rajinikanth Politics

Rajinikanth; ரஜினியை வச்சு அரசியல் செய்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான சம்பவமாக இருந்திருக்கும் என்பதை இலவு காத்த கிளி ரஜினி, பயந்துட்டியா கொமாரு டுவிட்டர் ஹேஷ்டேக் மூலமாக தெரிந்திருக்கும்.

சார், நீங்க எப்போ சார் அரசியலுக்கு வருவீங்க? அரசியலுக்கு வந்தா சொல்லி அனுப்புங்க? உங்க கட்சில சேரணும் சார் என்று எல்லாம் தற்போது மீம்ஸ் வந்து கொண்டே இருக்கிறது.

ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி தனது ஆன்மீக அரசியல் (Rajini Politic Entry) குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் பிறகு பொதுவெளியில், செய்தியாளர்களை சந்தித்து அவ்வப்போது தமிழக அரசியல் குறித்து விமர்சித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களை சந்தித்து பேசியுள்ளார். ஆனால், அதில், தனக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை (Rajini Press Meet) சந்தித்து பேசினார்.

அதில், தனக்கு முதல்வர் பதவி ஆசை இல்லை என்று குறிப்பிட்ட ரஜினி, இனிமேல் வருங்கால முதல்வர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அதோடு, கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. தான், கட்சிக்கு தலைமையாக இருக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

இது ரஜினி ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் பலரும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு அளித்தனர்.

எனினும், இப்போதும் ரஜினி கட்சி பற்றி அறிவிக்கவே இல்லை. எழுச்சி, புரட்சி வரட்டும். அதன் பிறகு அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு அவரது வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

நாம் தான் இன்னும், அவர் என்ன பேசுவாரு? எப்போது அரசியலுக்கு வருவார் என்று விழி மீது விழி வைத்து பார்த்தும் காத்தும் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில், இலவு காத்த கிளி ரஜினி, பயந்துட்டியா கொமாரு ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இலவு காத்த கிளி ரஜினி டுவிட்டர் ஹேஷ்டேக்கில் மீம்ஸ்களை உருவாக்கி விதவிதமான டயலாக்குகளை பதிவிட்டு வைரலாக்கியுள்ளனர்.

இந்த இரு ஹேஷ்டேக்குகள் இன்னனும் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. Rajinikanth Press Meet என்ற ஷேஷ்டேக்கும், சர்கார் கிளைமேக்ஸ் காட்சியும் டிரெண்டாகி வருகிறது.

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

https://platform.twitter.com/widgets.js

3

ரஜினியைப் போன்று அரசியலுக்கு வரும் ரோபோ சங்கர்: அப்படியே சொல்லு!

0
Robo Shankar Movie Poster

Rajinikanth Politics Speech; அரசியல் அறிவிப்பு குறித்து ரஜினிகாந்த் பேசி வரும் வசனத்தை ரோபோ சங்கர் தனது படத்திற்கும் பயன்படுத்திய போஸ்டர் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் குறித்து வெளியிட்டார் (Rajini Political Entry).

அதன் பிறகு கட்சி பெயரையும் அறிவிக்கவில்லை. தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து வந்தார்.

அவர் எப்போதுதான் அரசியலுக்கு வருவார் (Rajinikanth Politics) என்று பலரும் அதை வைத்தே அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்றும், அது போலவே நடந்துவிட்டது. ஆம், சென்னை லீலா பேலஸில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் (Rajini Press Meet).

அப்போது, தான் முதல்வர் வேட்பாளர் இல்லை. தனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை. கட்சிக்கு மட்டுமே தலைவராக இருக்க விரும்புகிறேன்.

இனிமே, ரசிகர்கள் யாரும் வருங்கால முதல்வர் என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

ரஜினி பேசியதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள், விமர்சனங்கள் வந்தன.

இந்த நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் (Robo Shankar) ரஜினிகாந்த் பாணியில் அரசியலுக்கு வருவதாக தனது போஸ்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

அந்தப் போஸ்டரில், “வருவது உறுதி, வந்துட்டே இருக்கேன், வந்துட்டேன் ஆனா நான் இல்லை” என்று ரஜினிகாந்த் இதுவரைய பேசிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

ஆம், அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் ரோபோ சங்கர் நடிக்கும் புதிய படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா (Arasiyalla Idhellam Sadharnamappa).

இது கவுண்டமனி பேசிய டயலாக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ரோபோ சங்கர் உடன் இணைந்து வீரா, மாளவிகா நாயர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதற்கு முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ரஜினிகாந்தை நேரடியாக விமர்சிக்கும் வகையில், இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதற்கு இதுவரை ரஜினி ரசிகர்கள் எந்த விமர்சனமும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக ஜெயம் ரவி நடிப்பில் வந்த கோமாளி படத்தின் டீசரில் ரஜினியின் அரசியல் அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது.

இது சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த டீசரில் இருந்து ரஜினி இடம்பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3

சர்கார் கிளைமேக்ஸ் vs ரஜினியின் அரசியல் முடிவு ஒரு பார்வை!

0
Rajinikanth Press Meet at Leela Palace

Rajinikanth Press Meet; அரசியல் அறிவிப்பு குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் தான் கட்சிக்கும் மட்டுமே தலைவர் முதல்வராக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த சூப்பர்ஹிட் படம் சர்கார் (Sarkar). முழுக்க முழுக்க அரசியல் கருத்துக்களையும், வாக்குரிமையையும் மையப்படுத்தி இப்படம் வெளியாகியிருந்தது.

தனது வாக்கை மட்டுமே செலுத்துவதற்கு வெளிநாட்டில் இருந்து வரும் சுந்தர் ராமசாயின் வாக்கு கள்ள ஓட்டாக போடப்படுகிறது.

இதை எதிர்த்து, நீதிமன்றம் வரை சென்று தனது வாக்கை திரும்பப் பெறுகிறார்.

ஒரு கட்டத்தில் தனது வேலையையும் தூக்கி எறிந்து தேர்தலில் போட்டியிடுகிறார். 234 தொகுதியிலும் நின்று வெற்றியும் பெருகிறார்.

தனக்கு பிடித்த ஒருவரை முன்னாள் மாவட்ட கலெக்டர் சற்குணம் என்பவரை முதல்வர் வேட்பாளாரக முன்மொழிகிறார் (Sarkar CM Candidate).

தான் எதிர்க்கட்சியில் நின்று கேள்வி கேட்க வேண்டும் என்பதை விரும்புகிறார். இதுதான் சர்கார் கிளைமேக்ஸ் (Sarkar Climax Scene).

இதே பாணியில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ரஜினிகாந்த் (Rajinikanth) பேசியுள்ளார்.

தமிழகத்தில் பணபலம், அரசியல் பலத்துக்கு எதிராக இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலு வருவதாகவும், ஆனால், தனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் கூறியுள்ளார்.

இனிமேல், ரசிகர்கள் யாரும் வருங்கால முதல்வர் என்று தன்னை அழைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதோடு, தனது 3 முக்கியமான திட்டங்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் போது கிட்டத்தட்ட 50,000 பதவிகள் இருக்கும். ஆனால், தேர்தல் முடிந்த பிறகும் கூட, அந்த பதவிகளில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் தாங்கள் ஆளும் கட்சி என்பதை சுட்டிக்காட்டி நிறைய ஊழல் செய்வார்கள்.

Rajinikanth 3 Plan in Politics:

திட்டம் 1: தேவையான அளவில் மட்டுமே கட்சி நிர்வாகிகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

திட்டம் 2: இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் வங்கப்பட வேண்டும். 60 முதல் 65 சதவிகிதம் வரை இளைஞர்களுக்கும், 30 – 35 சதவிகிதம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதி ஆகியோருக்கு வழங்கப்படும்.

திட்டம் 3: கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர். தான் கட்சி தலைவராகவே இருக்க விரும்புவதாகவும், முதல்வர் பதவி மீது ஆசை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

ஆக மொத்தத்தில் சர்கார் கிளைமேக்ஸ் காட்சியும், ரஜினி பேசிய வசனமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இன்றும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. எப்போதுதான் தனது கட்சி பெயரை அறிவிப்பார் என்று இலவுகாத்தகிளி போல ரஜினி ரசிகர்கள் இன்னமும் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

யார் அந்த கமலி? எங்கிருந்து வருகிறார்? டுவிட்டரில் டிரெண்டிங்!

0
Kamali From Nadukkaveri

Kayal Anandhi; கயல் ஆனந்தி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கயல் ஆனந்தி. கயல் படத்தின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றார்.

கயல் படத்தைத் தொடர்ந்து, சண்டிவீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ரூபாய், பண்டிகை, என் ஆளோட செருப்ப காணோம், பரியேறும் பெருமாள் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.

தற்போது இவரது நடிப்பில் டைட்டானிக், எங்கே அந்த வான், அலாவுதீன் அற்புத கேமரா, ஏஞ்சல், ராவண காண்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜசேகர் துரைச்சாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று 4 மணி வரை யார் அந்த கமலி என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது அதற்கு பதில் கிடைக்கும் வகையில் கயல் ஆனந்தி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வந்துள்ளது.

ராஜசேகர் துரைச்சாமி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடிக்கும் புதிய படத்திற்கு கமலி from நடுக்காவேரி (KamaliFromNadukkaveri) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தீனதயாளன் இசையமைக்கிறார். சாய் சம்பத் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தில் கமலி என்ற கதாபாத்திரத்தில் கயல் ஆனந்தி நடித்து வருவதாக கூறப்படுகிறது. கமலி from நடுக்காவேரி என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (KamaliFromNadukkaveri) வெளியாகியுள்ளது. அதில், ஆனந்தி கையில் நோட்டுடனும், தோள்பட்டையில் பேக்கும் வைத்துக்கொண்டு கல்லூரிக்கு நடந்து வருவது போன்று காட்டப்பட்டுள்ளது.

மேலும், உன்மீது நம்பிக்கை கொள் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் 14 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வரும் என்றும், ஏப்ரல் 17 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது என்றும் அந்த போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கயல் ஆனந்தியின் கதாபாத்திரம் தான் கமலி என்றும், அவரது ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு தாலுகா பகுதியின் நடுக்காவேரி. இந்த கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு படிக்க வருகிறார்.

கல்லூரியில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்திய படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தினகரனை எழவிடாமல் அடிப்பதற்கே ரஜினி மேடை ஏறினார் – பரபரப்பு ரிப்போர்ட்

0
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அலுவலகத்தை திறந்து வைத்தார். தினகரனை எழவிடாமல் அடிப்பதற்கே ரஜினி இன்று மேடை ஏறினார் என பரபரப்பு ரிப்போர்ட் மிஸ்டர் புயல் இணையதளத்திற்கு கிடைத்துள்ளது.

ரஜினி மக்கள் மன்றக் கூட்டத்தில் ரஜினி பேசியபோது, நான் முதல்வர் இல்லை, 50 வயதுக்குள் இருப்பவர்களுக்கு பதவி மற்றும் பொறுப்பு வழங்குவேன் எனக் கூறினார்.

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என ஒரு புதிய உத்தியை அறிமுகம் செய்தார். அதேபோல் தேர்தல் நேரத்தில் பயன்படுத்துபவர்கள் பணி முடிந்தவுடன் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன் எனக் கூறினார்.

கட்சி எப்போது உதயம் ஆகும் என்ற கேள்விக்கு வழக்கம்போல் தமிழகத்தில் எழுச்சி வரட்டும் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். ஆக, ரஜினி தேர்தலில் போட்டியிடுவாரா என மீண்டும் குழப்பிவிட்டே சென்றுள்ளார்.

ரஜினிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்

டிடிவி தினகரன் இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போட்டியாக அதே ராயப்பேட்டையில் அமமுக அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார்.

இது பலநாட்கள் முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று. இன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் டிடிவி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்.

மீடியாக்களில் இன்று பரபரப்பு செய்தி டிடிவி தினகரன் செய்தியாகத்தான் இருந்திருக்க வேண்டும். சோசியல் மீடியாக்களில் விவாதங்கள் நடத்திருக்க வேண்டும்.

ஆனால், அதை தவிடுபொடியாக்கி உள்ளது ரஜினியின் பேச்சு. அவர் பேசிய பேச்சில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் இது அமமுக கட்சியை வெளியில் தெரியவிடாமல் செய்வதற்கு என்று.

டிடிவி காத்திருப்பு

பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்றால் அதற்கு அதிமுக என்ற ஒரு துருப்புச்சீட்டு வேண்டும். அதன் வாக்குவங்கி உடையாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால், டிடிவி இருக்கும் வரை எந்நேரமும் பதற்றம் தான்.

அதிமுக ஆட்சி எப்போது கவிழும். கட்சியை எப்படி உடைக்கலாம் என டிடிவி பொறிவைத்து காத்துக்கொண்டு உள்ளார்.

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை

ரஜினி கூறிய கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை ஒன்றும் புதியது அல்ல. அதிமுகவில் ஏற்கனவே அரங்கேறியுள்ளது.

ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். இபிஎஸ் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர். ஆட்சியில் இபிஎஸ் முதல்வர், ஓபிஎஸ் துணை முதல்வர்.

இதை சற்று ரஜினி மாற்றி கூறியுள்ளார். கட்சியில் தான் தலைவர். ஆட்சியில் வேறு ஒருவர் தலைவர் என்று.

ரஜினி இன்று திடீரென ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து பேசக்காரணம் என்ன? அவர் கட்சி பற்றி முக்கிய அறிவிப்பு எனக்கூறிவிட்டு கட்சியில் யார் தலைவர், ஆட்சியில் யார் தலைவர் எனக்கூறியுள்ளார்.

இல்லாத ஒரு கட்சிக்குத் தலைவர் யார் எனச் சொல்வது கூடப் பரவாயில்லை. அந்த கட்சி ஜெயித்து ஆட்சியை பிடித்துவிட்டது! அதற்கு முதல்வர் யார்? என ரஜினி இப்போதே தேடத்துவங்கியுள்ளார்.

கவுண்டமணியின் கொட்டாம்பட்டி மில் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. ரஜினி இத்தனை வருடமாக தன்னுடைய ரசிகர்களை புதுப்புது பாணியில் குழப்பிக்கொண்டு உள்ளார் என்பது மட்டும் தெளிவு படுகிறது.

ரஜினி மட்டும் இல்லாமல், விஜய் வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு என மீடியாக்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு தினகரன் கட்சி அலுவலகம் திறப்பு முடிந்தவுடன், விஜய் வீட்டு அலமாரிக்கு வைத்த சீலை அகற்ற வந்தோம் என அதிகாரிகள் கூலாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

டிடிவி கட்சி திறப்பு அலுவலகம் அனைத்து மீடியாக்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்து பரபரப்பு விவாதமாக நடக்காமல் செய்வதே ரஜினிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட். அது சிறப்பாக சக்சஸாக முடிந்துவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள போஸ்புக் பக்கத்தை லைக் செய்யுவும். Facebook Like  |  Twitter Follow

3

விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனையா? திடுக்கிடும் தகவல்!

0
Vijay IT Raid

Vijay IT Raid; மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்து விஜய் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில், விஜய் வீட்டிற்கு மீண்டும் வருமான வரித்துறையினர் சென்றுள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட படம் பிகில் (Bigil).

இப்படத்தின் சம்பளத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக, விஜய் வீடு, இப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாதம் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் முடிவில் அன்புச்செழியன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.77 கோடி ரூபாய் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நெய்வேலியில் நடந்து வந்த மாஸ்டர் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் தங்களது காரில் அழைத்து வந்து கிட்டத்தட்ட 2 நாட்கள் விஜய் மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், ரொக்கமாக எந்தப் பணமும் இல்லை என்றும் ஆவணங்கள் எதுவும் இல்லைஎ ன்று கூறி வந்தவழியில் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

இதையடுத்து விஜய் மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்ட நிலையில், வரும் 15 ஆம் தேதி மாஸ்டர் இசை வெளியீடு நடக்க இருக்கிறது.

இதற்கு முன்னதாக விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில், விஜய்யின் பண்ணை வீட்டிற்கு திடீரென்று வருமான வரித்துறையினர் சென்றுள்ளனர்.

ஆனால், சோதனை மேற்கொள்ள செல்லவில்லை என்றும், மாறாக கடந்த ஆண்டு நடந்த சோதனையின் போது சில அறை, டிராயர்கள், லாக்கர்கள் அடைத்து ஆகியவற்றிற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது.

சீல் அகற்றும் பணிக்காக விஜய் வீட்டிற்கு சென்றுள்ளோம்.  தற்போது சீல் அகற்றும் பணி நடந்து வருகிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://platform.twitter.com/widgets.js

3

மருமகனை மடியில் வைத்து மொட்டையடித்து காது குத்திய தனுஷ்!

0
Dhanush Tirupati

Dhanush; மருமகனை தனது மடியில் அமரவைத்து நடிகர் தனுஷ் மொட்டையடித்து காது குத்தி தனது கடமையை நிறைவேற்றியுள்ளார்.

குடும்பத்தோடு திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ள தனுஷ் தனது சகோதரி (Karthika Devi) மகனை மடியில் வைத்து மொட்டை அடித்து காது குத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து கர்ணன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

கடந்த வாரம் அத்ராகி ரே என்ற ஹிந்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில், தற்போது ஷூட்டில் இடைவெளியில் இருக்கும் தனுஷ், தனது குடும்பம், சகோதரனும், இயக்குநருமான செல்வராகவன், சகோதரியும் மருத்துவருமான கார்த்திகா ஆகியோருடன் குடும்பத்தோடு திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார்.

அங்கு, தனது சகோதரியின் மகனுக்கு தனது மடியில் வைத்து மொட்டை அடித்து காது குத்தி தனது தாய்மாமன் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கார்த்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது சகோதரர்களைப் பற்றி கூறி பெருமைப்பட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது குழந்தைகளின் மாமாக்களின் அன்புக்கு முன்பு அவர்கள் எப்போதும் அதிர்ஷ்டாலிகள்தான்.

இதற்காக கிட்டத்தட்ட 2,3 வருடங்கள் காத்திருந்தேன். எனது மகனின் தலைமுடி என்னை விட அதிகளவில் வளர்ந்துவிட்டது.

ஆனால், எல்லாமே நல்லது தான். திருமலையில் குடும்பத்தோடு அழகான திவ்ய தர்ஷனம் இருந்தது.

சாமி வெங்கடேஸ்வரா கொடுத்த அதிர்வலைகள் மற்றும் கண்ணீர் ஆகியவற்றிற்கு முன்பு எதுவும் பெரிதாக ஒன்றுமில்லை. என்னவொரு பொன்னான நாள்.

எனது சகோதர்கள் அவர்களது கடமையைச் செய்ய தவறவில்லை. சகோதரர்களின் கடமை முற்றிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சத்ரியன் அதிர்ஷ்டசாலி. ஓம் நமோ நாராயணா என்று பதிவிட்டுள்ளார்.

//www.instagram.com/embed.js

3