Home Blog Page 221

விஷால் ஒரு பொறிக்கி; தர்மம் இருந்தா குருஷேத்திர போருக்கு வாடா: மிஷ்கின் ஆவேசம்!

0
Mysskin Thupparivaalan 2

Thupparivaalan 2; துப்பறிவாளன் 2 படத்தின் போது விஷாலுக்கும், தனக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து இயக்குநர் மிஷ்கின் கண்ணாமூச்சி வெப் சீரிஸ் திரையிட்ட நிகழ்ச்சியின் போது தெளிவாக விளக்கியுள்ளார்.

Mysskin; கடந்த ஓராண்டு காலமாக ஒரு கதை யோசித்து எழுதினேன். ஒவ்வொரு கதையுன் கிளைமேக்ஸ் காட்சி எழுதும் போது கஷ்டம், சோதனை மேல் சோதனை என்று பல இன்னல்கள் இருந்தது.

அப்படித்தான் நான் உண்மையாகவே எனது சகோதரன் என்று நம்பிய விஷாலுக்கு (Vishal) துப்பறிவாளன் 2 (Thupparivaalan 2)கதை எழுதினேன்.

ஒட்டுமொத்த தமிழ் சமூகமும், அந்த சகோதரனை மோசமாக பேசும் பொழுதும், பார்க்கும் பொழுதும், என் தோளில் சுமந்து கொண்டு அவனை நான் எனது சகோதரனாக பாவித்தேன்.

எனது உடன் பிறப்புக்குக் கூட அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அவன் மீது அவ்வளவு அன்பு காட்டி துப்பறிவாளன் 2 கதை தயார் செய்தேன். 2018 ஆம் ஆண்டு துப்பறிவாளன் வெளியாகிறது.

துப்பறிவாளன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது ஸ்டிரைக் நடந்தது. அப்போது 3 உதவி இயக்குநர்களை வைத்து 6,7 நாட்கள் நான் மட்டுமே தனியாக படப்பிடிப்பு நடத்தினேன்.

கடைசி நாளின் போது கையில் பட்ஜெட் இல்லை. 4 நாட்கள் எடுக்க வேண்டிய சண்டைக் காட்சியை வெறும் 6 மணிநேரத்தில் எடுத்துக் கொண்டு அந்தப் படம் ரிலீஸ் ஆனது.

மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது. அதற்கு முன்னதாக வந்த விஷாலின் 3 படங்களுமே தோல்விகண்டது. துப்பறிவாளன் படத்திற்காக எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.3 கோடி.

ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு என்னிடம் வந்து கதை எழுத சொன்னான் விஷால். இல்லைடா, உனக்கு நிறைய கடன் இருக்கிறது. ஆதலால், அந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல், பேன் இந்தியன் (Pan Indian) படமாக இருக்கணும்.

அப்படி ஒரு கதை எழுதலாம் என்று நினைத்து கோகினூர் வைரம் பற்றி ஒரு கதை எழுதுகிறேன். அது ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா ஆகிய இடங்களில் வரவேற்பு கொடுக்கும்.

அப்படியிருந்தால், கோகினூர் வைரத்திற்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. ஆகையால், அந்த கதை உனக்கு பொருத்தமாக இருக்கும்.

உன்னால், கிட்டத்தட்ட 15 இடங்களில் நல்ல வரவேற்பு கொடுக்க முடியும். வேறு வேறு மாநிலங்களில் கூட நீ டப்பிங் செய்யலாம் என்றேன்.

கதை எழுதி முடித்த பிறகு பாப்பி என்ற ஒரு தயாரிப்பாளர் கதை பிடித்துப் போக இதனை நாங்களே தயாரிக்கிறோம் என்று சொல்லி எனக்கு ஒரு அட்வான்ஸ் தொகையும் கொடுத்தாங்க.

அந்த கதையை விஷாலிடம் சொன்னேன். அதனை கேட்டப்பிறகு கட்டிப்பிடித்து அழுதான். அதன் பிறகு இந்தக் கதை எனக்குப் போதும். இதனை வைத்து எனக்குரிய எல்லா கடன்களையும் நான் அடைத்துவிடுவேன் என்றான்.

மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த பாப்பி என்ற தயாரிப்பாளர் வேண்டாம் நானே தயாரிக்கிறேன் என்றான். அப்போதுதான் எனக்கு உண்மையான தலைவலி ஆரம்பித்தது.

இந்தப் படத்திற்கு ரூ.19 முதல் ரூ.20 கோடி வரையில் செலவாகும். இதை உன்னால் பண்ண முடியாது. இன்னும் 2 மாதத்தில் ஆக்‌ஷன் படம் வெளியாகிறது.

ஒருவேலை அந்தப் படம் சரிவர ஓடவில்லை என்றால், இன்னும் அதிக பாரம் உன்மீது வரும் என்றேன். இல்லை, சார் இந்தப் படத்தை நானே பண்ணுறேன் என்றேன்.

அதற்கு ஒரு யோசனையும் சொன்னேன். இதை வேண்டுமென்றால், துப்பறிவாளன் 3ம் பாகமாக வைத்துக் கொள்வோம்.

துப்பறிவாளன் 2 படத்திற்கு சென்னையில் நடப்பது போன்று ரூ.10 கோடியில் கதை எழுதுகிறேன் என்று நான் சொன்னேன்.

இல்லை இந்தப் படத்தைத் தான் நீங்க பண்ணனும் என்றான். இந்த கதை எழுதி, இங்கிலாந்துக்கு சென்று லோகேஷன் பார்த்து எழுது வேண்டும் என்று அங்கே சென்றேன்.

அப்போது ஸ்கிரிப்ட் எழுதுவதற்காக நான் கேட்ட பணம் ரூ.7.50 லட்சம் மட்டுமே. அதில் நான் செலவு செய்தது ரூ.7 லட்சம்.

ஆனால், திரைக்கதை எழுதுவதற்கு மட்டும் ரூ.35 லட்சம் நான் செலவு செய்ததாக  ஊடகங்களில் செய்தி வெளியாகிறது. நான் இயக்குநர் மட்டுமல்ல, ஒரு தயாரிப்பாளரும் கூட.

அப்படியிருக்கும் போது ஒரு தயாரிப்பாளராக கதை எழுதுவதற்கு மட்டும் ஒருவன் ரூ.35 லட்சம் செலவு செய்தால், அவன் படம் இயக்குவதற்கு தகுதி இல்லாதவன் என்று நான் சொல்வேன்.

எனக்கு போரெக்ஸ் கார்டு கொடுத்தான். அந்த கார்டில்தான் அவன் காசு போட்டான். நான் செலவு செய்ததாக கூறப்படுவது ரூ.35 லட்சம் என்று அவன் நிரூபிக்க வேண்டும்.

பத்திரிக்கையாளர்கள் நீங்கள் அதை கேட்க வேண்டும். அதன் பிறகு ரூ.13 கோடி வரையில் இதுவரை நான் செலவு செய்ததாக அவன் கூறுகிறான்.

நான் 32 நாட்கள் படப்பிடிப்பு செய்துள்ளேன். ஒரு நாளை நான் 15 லட்சம் செலவிட்டதாகவும் அவன் குறிப்பிட்டான்.

அப்படியிருந்தால், (32*15) ரூ.4.50 கோடி. அதில் இன்னமும் ரூ.1.5 கோடி சேர்த்தால் ரூ.6 கோடி, இன்னமும் ரூ.2 கோடி என்றால் ரூ.8 கோடி இல்லையென்றால் மொத்தமாக ரூ.4 கோடி என்று பார்த்தால் ரூ.10 கோடிதான் மொத்தமே.

ஆனால், ரூ.13 கோடி என்கிறான். அதையும் அவன் நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு சென்று படம் எடுக்க வேண்டுமென்றால், உங்களது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக எடுக்க முடியாது.

ஆதலால், வேறொரு தயாரிப்பு நிறுவனம் வேண்டும். அதற்காக புதிய கம்பெனி வேண்டும். அப்படி தொடங்கப்பட்டதுதான் புட்லூர் அம்மன் என்ற கம்பெனி.

புட்லூர் அம்மன் கம்பெனி ஒயிட்டில் மட்டுமே அந்தப் பணத்தை கையாள முடியும். புட்லூர் அம்மன் கம்பெனிக்கு விஷால் பிலிம் பேக்டரியிலிருந்து எவ்வளவு பணம் சென்றது என்று நீங்கள் கேட்டு அதனை மக்களிடம் நீங்களே சொல்லுங்கள்.

ஒவ்வொரு இடத்திலும் நான் அவமதிக்கப்பட்டேன். எனது தாயை வேசி என்று திட்டினான். எனது சகோதரனை அடித்தான்.

எந்த தயாரிப்பாளரும் எனக்கு படம் கொடுக்கக் கூடாது என்று அவன் சொல்கிறான். இவன் ஒரு தயாரிப்பாளரின் மகன். ஆனால், நான் ஒரு ஏழை டெய்லர் வீட்டில் பிறந்தேன்.

எனது அப்பா ஒரு டெய்லர். கையில் ஒரு பேப்பரும், பென்சிலும் எடுத்துக்கொண்டு இதே ஜி5 நிறுவனத்திடம் சென்று கேட்டால் எனக்கு ஒரு கதை கொடுப்பார்கள்.

இல்லையா, ஏதோ ஒரு இன்ஸ்டியூட்டிற்கு சென்று பாடம் எடுத்த வேண்டுமானாலும் என்னால் முடியும். இல்லையென்றால் ஹோட்டலிலும் வேலை பார்க்க முடியும்.

அதுவும் இல்லையா, ரோட்டில் நின்று பாடி, கதை சொல்லி ரூ.10 சம்பாதிக்க முடியும். யாரிடமும் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எனது படங்கள் நான் யார் என்று சொல்லும்.

சாசு படத்தில் வ்ஒரு பேயை தேவதையாக காட்டியவன் நான். சைக்கோவில் 14 கொலைகள் செய்தவனையும் மன்னிக்கலாம் என்று சொன்னவன் நான்.

என்னுடைய படங்களில் என்னைப் பற்றிய அறம் இருக்கும். நீ என்னைப் பற்றி கெட்டவன் என்று சொல்லத்தேவையில்லை. சமூகத்திற்கு தெரியும்.

இன்னும், 25 வருடங்களுக்கு எனது படங்களில் இருக்கும் அறம் என்னைப் பற்றி சொல்லும். 32 நாட்கள் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு எடுத்திருக்கிறேன். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன் தினம் தான் வந்தது. யாராவது கேட்டீர்களா?

கிட்டத்தட்ட 10 நாட்கள் எனது அலுவலகத்திற்கு வந்து அந்த ஸ்க்ரிப்டை திருப்பிக்கொடு என்ஓசி கொடு என்று கெஞ்சினார்கள்.

அறத்தோடு வாழும் எனது தம்பி சொன்னான் எடுத்துக்கொடுத்துவிடுங்கள் என்று, நான் கொடுக்காமல் நேராக தயாரிப்பாளர்கள் கவுன்சில், இயக்குநர்கள் கவுன்சிலுக்கு சென்றிருந்தால் இன்று போஸ்டர் வந்திருக்குமா?

ஒரு வருடம் யோசித்து 8 மாதம் எழுதி ஒரு மாதம் பின்னாடி இருந்து ரத்தம் வரும் அளவிற்கு உட்கார்ந்து எழுதிய அந்த கதையை 32 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி அவனுக்கு என்ஓசியும் கொடுத்த பிறகு என்னைப் பற்றி தவறாக பேசுகிறான்.

உன்னால் ஒரு கதை எழுத முடியுமா? சக்ரா படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநரை அழைத்து வந்து என்னிடம் கதை சொல்லச் சொன்னான்.

இல்லை சார் அவனது கதை சரியில்லை. ஆதலால் நீங்கள் சொல்லுங்கள் என்று என்னிடம் கூறுகிறான். ஆனால், அந்த இயக்குநர் வந்து என்னிடம் கதை சொல்கிறான்.

தந்தைக்கு கிடைத்த பரம் வீர் சக்ரா விருதை தேடிப்போகும் ஒரு மகனின் கதை. அதிலிருந்து அவனுக்கு நான் கதை மாத்தி சொல்லி, சக்ரா என்று டைட்டில் வைக்கப்பட்டது.

டேவிட் மாமெட், ஜோசெஃப் கேம்பிள் ஆகியோரைப் பற்றி அவனுக்கு தெரியுமா? அவன் ஒரு பொறிக்கி. அவனைப் பற்றி சமூகத்திற்கு தெரியும். 9 மணிக்கு தேர்தலில் நாமினேசன் செய்கிறான். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இவன் செய்தது தெரியாதா?

என்னை அழைத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிற்க வைத்து தாணுவை தவறாக பேசச் சொன்னான். என்னை அண்ணன் என்று அழைத்ததால் நான் அவனுடன் சென்றேன்.

உன் அப்பா, அம்மா, சகோதரி ஆகியோர் சொல்வார்கள். நான் எப்படி உன்னிடம் பழகியிருக்கிறேன் என்று. ரமணாவும், நந்தாவும் உன்னை ரோட்டில் கொண்டு வந்து இறக்கிவிடுவார்கள் என்று அவனிடம் சொன்னேன்.

அதே சத்தியவாக்காகவும் மாறியது. ஒன்றரை வருடத்திற்கு அதே சம்பளத்தை கேட்குறாயாடா…? எனக்கு வந்து துப்பறிவாளன் ஓடவில்லை.

கதை பிடித்ததால் தான் துப்பறிவாளன் 2 எடுப்பதாகவும் என்னிடம் சொன்னான். சரி, சைக்கோ ஓடிய பிறகு எனக்கு ரூ.5 கோடி கொடு என்றேன்.

அதற்கு அவன் சொல்கிறான் சைக்கோ ஓடவில்லை. நீங்கள் தான் ஓடியதாக கூறுகிறீர்கள் என்றான். இனிமேலும், உன்னிடம் பேச முடியாது என்று எண்ணி நான் வெளியில் வந்துவிட்டேன்.

ஆனால், அவன் எனது அம்மாவை தவறான வார்த்தையால் திட்டினான். இதைவிட சொல்லக்கூடாத வார்த்தையால் எனது அம்மாவை திட்டினான்.

இதை நான் பத்திரிக்கையில் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், 3 வருடம் என்னை அண்ணா என்று கூப்பிட்டதற்காக மட்டும். தமிழகத்தில் நான் ஒருத்தன் தான் அவனை பத்திரமாக பார்த்துக்கொண்டேன்.

இனி, நான் ஒருத்தன் தான் அவனிடமிருந்து தமிழ்நாட்டை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இது தமிழனோட கோபம்.

இதுவரை ஏன் நான் பொறுத்துக்கொண்டேன் தெரியுமா?

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்

என்று எனது தாத்தன் சொல்லியிருக்கிறான். அதனால்,தான் நான் பொறுமையாக இருந்தேன். இனி அப்படியில்லை.

டே, தம்பி விஷால், இனிமேல் நீ தூங்கவே மாட்ட. உன்னிடம் தர்மம் இருந்தால் வாடா குருசேத்திர போருக்கு என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஐபிஎல்லுக்கு சங்கு ஊதியது கொரோனா; அப்போ தோனி உலகக்கோப்பை கனவு?

0
ஐபிஎல்லுக்கு சங்கு

ஐபிஎல்லுக்கு சங்கு ஊதியது கொரோனா; அப்போ தோனி உலகக்கோப்பை கனவு? ஒருவேளை ஐபிஎல் போட்டி முற்றிலும் ரத்தானால் தோனி எப்படி இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்?

மீண்டும் இந்திய அணியில் தோனி?

ஐபிஎல் 2020 போட்டியில் தோனி சிறப்பாக விளையாடினால் மட்டுமே டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தோனிக்கு இடம் கிடைக்கும் என இந்திய அணியின் பயிற்சியாளர் தெரிவித்து இருந்தார்.

இதற்காக கடந்த சில மாதங்களாகவே தோனி கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பயிற்சியின் போது தொடர்ந்து 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டு மாஸ் காட்டினார்.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

இது தொர்பான முடிவை ஐபிஎல் கமிட்டியே எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் போட்டியை 15 நாட்கள் தள்ளி வைப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா பரவுவது அதிகமானால் ஐபிஎல் போட்டி நடைபெறுவது சந்தேகமே.

தோனியின் வயது முதிர்வு

தோனி கடந்த உலகக்கோப்பையில் இந்தியா வென்றால் கெத்தாக ரிட்டைர் ஆகலாம் என்ற கனவில் இருந்தார்.

ஆனால் துரதிஷ்ட வசமாக இந்திய அணி தோல்வியைத் தழுவி வெளியேறியது. இருப்பினும் தோனிக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்து வழியனுப்பி வைக்கவே ஜூனியர் வீரர்கள் ஆசைப்படுகின்றனர்.

கொரொனா பாதிப்பு இந்தியாவில் ருத்ரதாண்டவம் ஆடினால் நிச்சயம் ஐபிஎல் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் தோனி சற்று வருத்தத்திலேயே இருப்பார். நீண்ட நாட்களாக தோனி விளையாடுவதைக் காண முடியாமல் தவித்த அவருடைய ரசிகர்களுக்கும் இது ஏமாற்றமே.

ஐபிஎல் போட்டி 15 நாட்கள் கழித்து நிச்சயம் நடைபெறும் என நம்புவோமாக! தோனி ரசிகர்களின் பிரார்த்தனை வீண் போகாது.

3

ஐபிஎல் போட்டி ‘மார்ச் 29’ நடைபெறாது; பிசிசிஐ அறிவிப்பு

0
ஐபிஎல் போட்டி நடைபெறாது

ஐபிஎல் போட்டி நடைபெறாது. ஐபில் 2020 போட்டி வரும் மார்ச் 29-ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தள்ளி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டி தள்ளிவைப்பு

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டாம் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

இது தொர்பான முடிவை ஐபிஎல் கமிட்டியே எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் போட்டியை 15 நாட்கள் தள்ளி வைப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இருப்பினும் கொரோனா பரவுவது அதிகமானால் ஐபிஎல் போட்டி நடைபெறுவது சந்தேகமே.

3

விஷால் நீ இனிமே நிம்மதியா தூங்கிடுவியா – கொந்தளித்த மிஷ்கின்

0
விஷால் மிஷ்கின்

விஷால் நீ இனிமே நிம்மதியா தூங்கிடுவியா என ZEE5 வெப் சீரியஸ் துவக்க விழாவில் கொந்தளித்த மிஷ்கின். துப்பறிவாளன் 2 விஷாலுக்கும் மிஸ்கினுக்கும் என்ன பிரச்சனை?

துப்பறிவாளன் 2

துப்பறிவாளான் படத்தின் இரண்டாம் பாகம் விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகி வந்தது. படம் பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மிஷ்கின் அதிக சம்பளம் கேட்டதாகவும், மற்ற மொழி ரீமேக் ரைட்ஸ் விற்பனை செய்யும் பணம் எனக்கே என மிஷ்கின் கூறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் துப்பறிவாளன் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்து வந்தது. உடனே விஷால் துப்பறிவாளன் படத்தை தானே இயக்கப்போவதாக கூறினார்.

மிஷ்கின் வைத்த கட்டளைகள்

சில தினங்களுக்கு முன்பு விஷாலுக்கு மிஷ்கின் எழுதிய 15 நிபந்தனைகள் கொண்ட கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இதன்பிறகு மிஷ்கின், விஷால் மீது உச்சகட்ட கோபத்திற்கு சென்றுவிட்டார். விஷால் மீது நடவடிக்கை எடுக்க முயல்வதாக செய்திகள் வெளியாகின.

காண்ணாமூச்சி வெப்சீரிஸ்

ZEE5-ல் வெளியாக உள்ள கண்ணாமூச்சி வெப்சீரிஸ் துவக்கவிழாவில் கலந்துகொண்ட மிஷ்கின் ஆக்ரோசமாகப் பேசினார்.

விஷால் ஒரு பச்சை துரோகி. படத்திற்கான NOC-யை என்னிடம் இருந்து பெற்றுவிட்டு இப்போது என்னைத் தவறாகப் பேசுகிறான்.

அவனால் ஒரு கதை எழுத முடியுமா? என்னைப்போன்று படித்திருக்கிறானா? கடனில் தவிப்பதாகச் சொன்னான்.

வேறு ஒரு தயாரிப்பாளரிடம் ஓகே சொன்ன கதையை அவன் கேட்டான் என தயாரிக்க ஒப்புக்கொண்டேன். பிடிவாதம் பிடித்து என்னை ஒப்புக்கொள்ள வைத்தான்.

கடைசியாக என் மீது அவதூறாகப் பேசி செய்திகளை வெளியிடுகிறான். இனிமேல் அவனால் நிம்மதியாக தூங்கமுடியாது. நான் யாரென்று கட்டுகிறேன் என கொந்தளிப்புடன் பேசினார்.

3

கொரோனா வைரஸ்: உச்சகட்ட அலர்ட்டில் அமெரிக்கா

0

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

நேற்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹவ் லிஜி யான் அமெரிக்கா இராணுவம் தான் சீனாவில் வைரஸ் பரப்பி இருக்க வேண்டும்.

இதற்காக அவர்கள் சீனாவுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என காட்டமாக சீன ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

கொரோனாவை அமெரிக்கா எப்படி எதிர்கொள்கிறது?

கொரோனா வைரஸ் அமெரிக்காவின் இயல்பு நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை தடுக்க அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் இதுவரை 1500 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இதுவரை அங்கு எந்த ஒரு மரணமும் நிகழவில்லை.

வீட்டில் இருந்து வேலை

அமெரிக்க அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே வேலை செய்து வருகின்றனர். வெள்ளை மாளிகை ஊழியர்கள் கூட வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவிற்கு வரும் சுற்றுலா பயணிக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உலகின் அனைத்து நாடுகளின் விசாக்களையும் அமெரிக்கா முடக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து பள்ளிகளையும் அமெரிக்க அரசு மூடச்சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐடி ஊழியர்களுக்கு சலுகை

பெருநிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. கூகுள், பேஸ்புக், அமேசான் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய அந்தந்த நிறுவனங்கள் அனுமதி வழங்கி உள்ளது.

இதுபோன்ற கடினமான நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் அச்சமடைவது தவிர்க்கப்படும் என அமெரிக்க அரசு நம்புகிறது.

3

இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய கொல்கத்தா ஈடன் கார்டன்

0
1996 உலககோப்பை

1996 உலககோப்பை: கிரிக்கெட்டை மற்ற நாடுகள் ஒரு விளையாட்டாக பார்கிறார்கள், ஆனால் இந்தியாவில் மட்டுமே அதை உணர்வாக பார்க்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் ஆட்டத்தை பார்க்கும் போது தானே விளையாடுகிறோம் என்ற எண்ணத்தில் பார்க்கிறார்கள்.

இந்தியா தோல்வி அடைந்தால் வீரர்கள் திட்டி தீர்த்து விடுவார்கள். வெற்றி பெற்றால் தலையில் வைத்து கொண்டாடுவார்கள்.

ஒவ்வோரு இந்தியனும் கிரிக்கெட் என்ற வார்த்தை கேட்காமல் இருக்க மாட்டான். இந்திய இளைஞர்கள் ஒருமுறையாவது வாழ்க்கையில் மட்டையை தொடமால் இருந்திருக்க மாட்டார்கள்.

கிரிக்கெட் வீரர்காக உயிரை விடும் அளவிற்கு ரசிகர்கள் இங்குதான் இருக்கிறார்கள்.

1996 உலககோப்பை

1996-ஆம் ஆண்டு உலககோப்பை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தியது.

இந்தியா நல்ல வலுவான அணியாக அசாருதின் தலைமை , சச்சின் டெண்டுல்கர் துணை தலைமையிலும் களம் கண்டது.

இந்தியாவின் லீக் போட்டிகள்

இந்த முறை உலககோப்பையில் 12 அணிகள் பங்குபெற்றது.  முதல் போட்டியில் இந்தியா, சச்சின் சதத்துடன் கென்யா அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இரண்டவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்த முறை இந்தியா, சச்சினின் அரைசதத்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மூன்றாவது போட்டி அன்றைய அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் சச்சின் 90 ரன்கள் அடித்தாலும் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

அசுர பலமான சச்சின்

நான்காவது போட்டி இலங்கை அணியிடம் மோதியது. சச்சின் மீண்டும் சதம் அடித்து 137 ரன்கள் குவித்தும்  6 விக்கெட் வித்தியாசத்தில் உலககோப்பையில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.

இந்த உலககோப்பையில் சச்சின் டெண்டுல்கர் தன் முழு திறமையையும் காட்டி உலகத்துக்கே நான் தான் கிரிக்கெட்டுக்கு மாஸ்டர் பிளாஸ்டர் என்று நிரூப்பித்தார்.

கடைசி லீக் போட்டி இதில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணி  உலககோப்பை அரையிறுதிக்கு செல்ல முடியும் என்கிற கட்டாயம். ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் வெளியேற்றம்

இந்த போட்டியில் சச்சின் 3 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். ஆனால் அவரது நீண்ட கால நண்பர் வினோத் காம்ளி சதம் அடித்து, ஜிம்பாப்வே அணியை 40 ரன் வித்தியாசத்தில் வென்றது.

கால்யிறுதி போட்டியில் போட்டியை நடத்துகின்ற பாகிஸ்தான் மற்றும இந்தியா பெங்களூர்வில் மோதின. 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இன்று வரை பாகிஸ்தான் உலககோப்பையில் இந்தியாவை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடன் கார்டன்

அரையிறுதி போட்டி மார்ச் 13-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் முழுவதும ரசிகர்கள் கூட்டம். இலங்கையை இந்திய அணி வீழ்த்திவிடும் என நம்பிக்கையில் ஆரவாரம் செய்கிறார்கள்.

இந்தியாவில் ஆட்டத்தை மணி அடித்து துவங்கி வைக்கும் நடைமுறை இந்த மைதானத்தில் மட்டுமே உள்ளது.

1864-ஆம் ஆண்டு துவங்கிய இந்த மைதானம் 156 ஆண்டு பழமை வாய்ந்தது. 66000 ரசிகர்கள் அமர கூடியது.

இதுவரை நடக்காத சம்பவம்

இதுவரை சர்வேதச கிரிக்கெட்டில் நடக்காத ஒரு சம்பவம் கொல்கத்தா மைதானத்தில் அரங்கேறியது. ரசிகர்கள் கூட்டம் செய்த அராஜகத்தால் ஒரு அணி வெற்றி பெற்றது.

ஏற்கனவே இந்தியா இந்த உலககோப்பையில் இலங்கையிடம் லீக் போட்டியில் தோற்று இருந்தது. ஆனால் உலககோப்பையில் ஒரு அணியிடம் இரண்டு முறை இந்திய அணி தோற்றது இல்லை

இலங்கை பேட்டிங்

அசாருதின் டாஸ் வென்று இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தார். 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது.

சில்வா 66, மகனமா 58, ரனதுங்கா 32, திலகரத்தனே 32, வாஸ் 23 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஶ்ரீநாத் 3 விக்கெட்டும், சச்சின் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

252 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி, கொல்கத்தா பிச்சு ஒன்றும் கடினமானது கிடையாது. சேஸிங் செய்ய கூடியது தான். இந்தியாவிற்கு நன்றாக ஒத்துழைக்க கூடிய மைதானம்.

இந்தியா நல்ல தொடக்கம்

சச்சினும் சித்துவும் களமிறங்கினார்கள். இந்தியா 8 ரன்கள் இருந்தபோது முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த மஞ்சரேக்கருடன் ஜோடி சேர்ந்த சச்சின் 98 ரன்கள் இருந்த போது பிரிந்தது.

இந்திய வெற்றி நம்பிக்கை இதுவரை ரசிகர்கள் மத்தியில் ஆணிதனமாக ஓடியது. இன்னும் 160 ரன்கள் தான் கைவசம் 8 விக்கெட் இருக்கின்றது என்று.

நடுவரிசையை காலி செய்த சூர்யா

ஆனால் இலங்கை நம்பிக்கை தளரவில்லை,  சச்சின் விக்கெட்டை எடுத்த தெம்பில் பந்து வீசுகிறார் ஜெயசூர்யா. இந்திய விக்கெட்டுகள் அருவி போல கொட்டத் தொடங்கியது
.
அடுத்த 22 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்தது. இந்திய நடுவரிசையை ஜெயசூர்யா கலங்கடித்தார். வினோத் காம்ளி மற்றும் ஶ்ரீநாத் களத்தில் உள்ளார்

கடுப்பான ரசிகர்கள்

இந்தியா ஒவ்வொரு விக்கெட்டை இழக்க இழக்க ரசிகர்கள் பொறுமையை இழக்க தொடங்கினார்கள்.

பாட்டில்கள், கேன்கள், பிளாஸ்டிக் பைகள்  என கையில் கிடைக்கும் அனைத்தையும் மைதானத்தின் உள்ள தூக்கி எறிய ஆரம்பித்தார்கள்.

இதை கண்ட ரனதுங்கா நடுவரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மீண்டும் ஆட்டத்தை விளையாட மறுக்கிறார். அன்றைய போட்டி நடுவராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிளைவ் லையோட்  இருந்தார்.

இலங்கை வெற்றி

எல்ல விதத்திலும் இலங்கை அணியை விட இந்திய ரன் ரேட் குறைவாக இருந்தது. இதனால் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற வெற்றி கிரிக்கெட் வரலாற்றில் நடந்தது இல்லை.

வினோத் காம்ளி கண்ணில் தாரை தாரையாக நீர் வடிகிறது, அழுதபடிய மைதானத்தை விட்டு அறைக்கு நடையைக்கட்டுகிறார்.

இந்நியாவில் சச்சின் 65 ரன்களும், மஞ்சரேக்கர்  25 ரனக்ள் எடுத்து, இந்திய அணியில் சொல்லும்படி ரன்கள் அடித்தார்கள். இலங்கை தரப்பில் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், டி செல்வா 1 விக்கெட்டும் விழ்த்தினார்கள்.

கட்டுபடுத்திய காவலர்கள்

மீண்டும் ரசிகர்கள் நெருப்பை பற்ற வைத்து விடுகிறார்கள். சிறிது நேரம் பரபரப்பு காணப்படுகிறது. காவலர்கள் அங்கு சென்று ரசிகர்களை கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.

ஆனால் இலங்கை அணிக்கு அசம்பாவிதம் எதுவும நடக்கவில்லை. அதில் ரசிகர் ஒருவர் “இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் நாங்கள் வருந்துகிறோம்” என்றார்.

மேற்கொண்டு இதுபோல நடக்காமல் இருக்க பாதுகாப்பை இந்தியா கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் இந்தியா அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்தது. அன்று இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.

மீண்டும் 2007 உலககோப்பையில் இந்திய அணி லீக் போட்டியில் வெளியேறியதற்கு யுவராஜ் மற்றும் தோனியின் வீடுகள் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3

சிக்கியதா அமெரிக்கா? கொரோனா வைரஸ் பரப்பிய நாடு பற்றி சீன அமைச்சர் தகவல்

0
அமெரிக்கா கொரோனா வைரஸ் பரப்பிய நாடு

அமெரிக்கா இராணுவம் தான் சீனாவின் வுஹான் நகரத்திற்கு கொரோனா வைரஸ் கிருமியை பரப்பி விட்டிருக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரப்பிய நாடு

நேற்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹவ் லிஜி யான் அமெரிக்கா இராணுவம் தான் கட்டாயம் இதை செய்திருக்க வேண்டும்.

இதற்காக அவர்கள் சீனாவுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். என காட்டமாக சீன ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

மேலும் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி சீன விஞ்ஞானி சொங் நாசன் கூறுகையில் கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது சீனாவில் தோன்றவில்லை.

அதாவது சீன விலங்குகளிடம் இருந்து இது பரவவில்லை என சீன அரசு நம்புகிறது. கொரோனா வைரஸ் பரவிய முதல் நபரிடம் இருந்து விசாரணை மேற்கொண்டதில் எந்த ஒரு விலங்கிடம் இருந்தும் இது பரவில்லை என தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்காவின் சதி மூலமே நிகழ்ந்துள்ளதாக அந்த நாட்டின் அரசு வட்டாரங்களில் புகைச்சல் கிளம்பு ஆரம்பித்துள்ளன.

எனினும் சீனாவிடம், இதை செய்தது அமெரிக்கா தான் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பது பற்றி தெரியவில்லை.

3

பிரதமரின் மனைவி-க்கு கொரோனா! திட்டமிடப்பட்ட சதியா?

0
பிரதமரின் மனைவி-க்கு கொரோனா

கனடா பிரதமரின் மனைவி-யை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. உச்சகட்டத்தை அடைந்தது கொரோனா வைரஸ் தாக்குதல். கனடா நாடே சற்று அதிர்ச்சியில் தான் உள்ளது.

சமீபத்தில் பிரிட்டன் நாட்டிற்கு சென்று வந்தார் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூட்டோவின் மனைவி சோபி கிரேகோயர்.

சில நாட்களுக்கு முன்பு அவருடைய ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதை பிரதமர் ஜஸ்டின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமரின் மனைவிக்கே கொரோனா பதிப்பு வந்துள்ளது.

இது தற்செயலாக நடந்ததா? அல்லது வைரஸ் திட்டமிட்டு பரப்பப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் உள்ள நபர் ஒரு பிரபலத்தை எப்படி எளிதாக அணுகினார். அந்த அளவிற்கு பிரிட்டனில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதா என கனடா ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன?

3

வெட்டுக்கிளி-யிடம் இருந்து விவசாயத்தை காக்க 1000 கோடி தேவையாம்

0
வெட்டுக்கிளி

ஒரு சிறிய வெட்டுக்கிளியை சமாளிக்க 1000 கோடியா என திகைக்க வேண்டாம். வெட்டுக்கிளி தாக்கத்தால், ஒரு நாடே பட்டினியால் வாடிய கதையும் உண்டென்றால் நம்புவீர்களா.

ரஷ்யாவை பாதித்த வெட்டுக்கிளி

ஆம். ரஸ்யாவின் 1008-ம் ஆண்டில், இந்தவகை வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து ஒரு வருடமாக பட்டினிகிடந்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் இந்த கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களை சூறையாடியுள்ளது.

அங்குள்ள விவசாய மக்கள் இந்த வெட்டுக்கிளி தாக்கத்தால் வருவாய் இழப்பு அடைத்துள்ளனர். இந்தியாவில் குஜராத் மாநிலத்திலும் இந்த வெட்டுக்கிளிகளின் பாதிப்பு இருப்பதை உணரமுடிந்தது.

இந்த வகையான வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் என்று கூறப்படுகிறது. இவை அடர்ந்த கரும் மழை மேகமாய் வந்து தாக்கும் என அவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.

வெட்டுக்கிளி அச்சுறுத்தல்

இந்தவகையன வெட்டுக்கிளிகளின் தாக்குதல், ஏமன், கிழக்கு ஆப்பிரிக்கா, ஈரான், வளைகுடா நாடுகளில் இந்த வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த பூச்சிகளின் தாக்கம் பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லையோரப் பகுதிகளில் வெகுவா காணப்பட்டதையொட்டி, சீனா பாகிஸ்தானுக்கு உதவ தன் நாட்டு நிபுணர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி ஆய்வு செய்தது.

அதில் வாத்துகள் வெட்டுக்கிளிகளுக்கு எதிரானவை என ஆராய்ந்து, 1 லட்சம் வாத்துகளை அனுப்பிவைத்தது. வாத்துகள் கோழியைக் காட்டிலும் 3 மடங்கு பூச்சிகளை உண்ணும், இருப்பினும் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.

இந்நிலையில், கிழக்கு ஆப்பிரிக்காவின் பாலைவன வெட்டுக்கிளி தடுப்பு மையத்தின் தலைவர், ஸ்டீபன் ஜோகா கூறியுள்ளதாவது, ‘இந்த வெட்டுக்கிளிகளை அழிக்க வானிலிருந்து, தரையிலிருந்தும் ஒரு சேர பூச்சி மருந்து தெளிக்கப்படவேண்டும்.  அதற்கு போதிய விமானங்கள் தங்களிடம் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

எத்தோப்பியா மற்றும் கென்யா தரப்பில் இருந்து மொத்தம் 10 விமானிகள் இந்த பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். இன்னும் 20 விமானங்கள் தேவை என அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான், இந்தியா, ஈரான், ஆப்கான் ஆகிய நாடுகளின் வேளாண் அமைச்சக காணொளி ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த வெட்டுக்கிளிகளின் பாதிப்பை தடுக்க கடந்த ஜனவரி மாத கணக்குப்படி 76 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த செலவு தற்போது 138 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அதாவது இந்திய ரூபாய் மதிப்புப்படி 1024 கோடி தேவைப்படும். இது குறித்து ஐ. நா. கவலை தெரிவித்துள்ளது.

3

Ind vs SA : டாஸ் கூட போட முடியாத நிலைமை-தர்மசாலாவில் தர்மசங்கடம்

0

மார்ச்.12: இந்தியா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

அதன்படி நேற்று இமாசல பிரதேச சர்வதேச மைதானத்தில் முதல் போட்டி நடைபெற இருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக அங்கு மழை பெய்து வந்தது, ஆட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகம் இருந்தது.

நேற்று காலை சிறிது நேரம் மழை விட்டது. ஆட்டம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் போட்டி ஆரம்பம் ஆகும் முன்பு மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை தடுத்தது.

தொடர்ந்து மழை பெயத்ததால் நடுவர்கள் காத்திருந்து காத்திருந்து பார்த்து விட்டு டாஸ் கூட முடியாத நிலைமை எனபதால் ஆட்டத்தை கைவிடப்பட்டது என்று அறிவித்தார்கள்.

நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது, ஆகையால் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா இருந்தது.

மழை குறுக்கிட்டதால் இந்தியா வீரர்கள் மட்டும் இல்லை ரசிகர்களும் வேதனை அடைந்தார்கள்.
தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவை வெள்ளை அடித்து வீட்டுக்கு அனுப்பிய சந்தோசத்தில் இந்தியா வந்தார்கள், இந்தியாவை ஒரு கை பார்த்துவிடலாம் என்று.

ஆனால் மழை வந்தது இரண்டு கனவுகளையும் கலைத்து விட்டது.

அடுத்த போட்டி வருகிற மார்ச் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் நடைபெறகிறது.

கொரனோ தெற்று பரவி வருவதால் இரண்டாவது போட்டியில் தீவிர கண்காணிப்பில் இந்தியா கிரிக்கெட் சங்கம் நடத்தவுள்ளது.

வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு வெளியில் வீரர்களை அனுப்ப இருதரப்பு நிர்வாகமும் மறுத்து வருகிறது.

3