Home Blog Page 220

14/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

14/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று முக்கிய முடிவுகளை எடுக்க நல்ல நாளாகும். மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். பணிகளில் வெற்றி நிச்சயம்.

கணவன் மனைவியிடையே புரிந்துணர்வு மேம்படும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

காக்கைக்கு எள் கலந்த அன்னம் வையுங்கள் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

ரிஷப ராசிபலன்

இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். உங்களின் பேச்சு திறமையால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். பணியில் நல்ல மதிப்பு கிடைக்கும். மிகுந்த பிரகாசமாக விளங்குவீர்கள்.

துணையிடம் காதல் மேம்படும். தன வரவு அதிகமாக இருக்கும். நேர்மையான எண்ணங்கள் தேவையாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விநாயகரை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

மிதுன ராசிபலன்

இன்று சரியான திட்டமிடல் அவசியம். கவன குறைவாக இருக்க வேண்டாம். அதிகமாக உழைப்பு தேவை. நாளின் முடிவில் வெற்றி கிடைக்கும்.

கணவன் மனைவி இடையே பொறுமையாக அணுகுமுறை தேவை. நிதிநிலை சிறப்பாக இருக்கும். குளிர்ந்த பொருட்களை உண்ண வேண்டாம்.

கேது பகவானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் கிடைக்கும்.

கடக ராசிபலன்

இன்று சவாலான நாளாக இருக்கும். உணர்ச்சி வசப்படுதலை கட்டுப்படுத்த வேண்டும். மன அமைதியின்றி இருக்கும்.

பணியில் முயற்சி அவசியம். துணையிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம். பணத்தை கவனமாக கையாள வேண்டும். உடல்நிலை சுமாராக இருக்கும்.

சனி பகவானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் கிடைக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்று தங்களின் முயற்சிகளால் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சிகரமாக இருக்கும் நாளாகும். அனைத்து செயல்களையும் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.

துணையிடம் பேச்சில் கவனமாக இருக்கவும். தேவையான பணம் கைகளில் கிடைக்கும். ஆற்றல் சிறப்பாக இருக்கும்.

சிவபெருமானை வழிபட மேலும் நன்மைகள் கிடைக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று விட்டுக் கொடுக்கும் மனபான்மை அவசியம் தேவை. சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். பணியில் வெற்றி பெற இயலாது.

கணவன் மனைவியிடையே மோதல்கள் ஏற்படும். பணம் ஈட்ட வாய்ப்புகள் குறைவு. வீட்டில் செலவு அதிகரிக்கும். தாயின் உடல் நிலையில் கவனமாக இருக்கவும்.

அனுமனை விளக்கேற்றி வழிபட துன்பம் நீங்கும்.

துலா ராசிபலன்

இன்று உங்களின் எதிர்மறையான எண்ணங்களை தடுக்க வேண்டிய நாளாகும். கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். கவன குறைவால் பணியில் தவறுகள் ஏற்படலாம்.

துணையிடம் சற்று அன்பான வார்த்தைகள் உபயோகிக்க வேண்டும். நிதி நிலை சுமாராக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு.

அம்பிகையை தீபமேற்றி வழிபட நன்மைகள் உண்டு.

விருச்சிக ராசிபலன்

இன்று பதட்டமான நாளாக இருக்கும். இனிய இசை கேளுங்கள். யோகா செய்ய வேண்டும். சக பணியாளர்கள் மூலம் பிரச்சனைகள் வரலாம். பெண்களிடம் கவனமாக இருக்கவும்.

துணையிடம் சற்று கவனமான அணுகுமுறை தேவை. பண வரவு குறைவாக இருக்கும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. உணவில் கவனம் தேவை.

கேதுவிற்கு விளக்கேற்றி வழிபட தொல்லைகள் தீரும்.

தனுசு ராசிபலன்

இன்று நன்மையான நாளாக அமையும். இன்பம் பொங்கும். தொழிலில் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

குடும்பத்தில் சுப காரியங்களுக்கான பேச்சு துவங்கும். தனலாபம் அதிகரிக்கும். சேமித்து வைக்க வேண்டும். ஆற்றலுடன் இருப்பீர்கள்.

விநாயகரை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

மகர ராசிபலன் 

இன்று லாபகரமான நாளாக இருக்கும். உங்களின் முயற்சியால் சாதிக்கலாம். பணிகளில் பாராட்டுகள் கிடைக்கும். நன்மதிப்பு பெறுவீர்கள்.

துணையிடம் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். தங்கம், வெள்ளி போன்றவை வாங்க வாய்ப்புண்டு. தைரியம் மன உறுதியால் ஆரோக்கியம் மேம்படும்.

கும்ப ராசிபலன்

இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உணர்வுகளை கட்டுபாட்டில் வைக்க வேண்டும்.

பணியில் கஷ்டங்களை சந்திப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். நிதி வளர்ச்சி நன்றாக இருக்காது. தூக்கம் அவசியம் தேவை.

மீனம் ராசிபலன் 

இன்று எதிர்பார்த்த விஷயங்கள் நடக்காது. மின் பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. பணிசுமை அதிகமான அளவில் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக சூழல் இருக்காது. கட்டுமான செலவுகள் வரும். ஆனால் பணம் கையில் இருக்காது. உடல் ஆரோக்கியத்திற்கு செலவுகள் ஏற்படும்.

சனி பகவானை விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.

14/03/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

இன்னும் 100 நாட்கள்: விஜய் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்!

0
Master Vijay Birthday

Master Vijay Birthday 100 Days to Go; விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில், டுவிட்டரில் #100DForMasterVIJAYBday என்ற ஹேஷ்டேக் மூலம் இப்போவே அவரது பிறந்தநாளை டிரெண்டாக்கி வருகின்றனர்.

வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Vijay). கடந்த மாதம் முழுவதும் கோலிவுட் வட்டாரத்தில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் அதிகளவில் பேசப்பட்டவர் நடிகர் விஜய்.

மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டு குறுகிய கால சுற்றுலாவாக வெளிநாடு சென்றுவிட்டார்.

மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் (Vijay IT Raid) சோதனை மேற்கொண்டனர்.

எனினும், அவரது வீட்டில் இருந்து ரொக்கமாகவும், ஆவணங்கள் மூலமாகவும் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இதையடுத்து, விஜய் மீண்டும் தனது மாஸ்டர் (Master Shooting) படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விஜய் வீட்டில் ஏன் ரெய்டு நடத்தினோம் என்று அப்போது தெரிந்திருக்கும். சும்மா இருந்தவனை சீண்டிப்பார்த்த கதையாகிவிட்டது.

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது விஜய்யைப் பார்ப்பதற்கு குடும்பத்தோடு லட்சக்கணக்கான ரசிகர்கள் வருகை தந்தனர்.

ஒரு நடிகரை படப்பிடிப்பு தளத்தில் பார்ப்பதற்கு ரசிகர்கள் குடும்பத்தோடு வருவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

அவர்களைப் பார்த்து விஜய் கையசைத்து, செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கும் தயாராகிவிட்டது. கடந்த வாரம் விஜய் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றார்.

இதற்கிடையில் மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வாத்தி கம்மிங் (Vaathi Coming) பாடல் வெளியாகி வைரலானது.

மாஸ்டர் இசை வெளியீட்டிற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மாஸ்டர் இசை வெளியீடு அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

டுவிட்டரில் #2DaystogoForMasterAudioLaunch என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, ஹலோ ஆப்பில் மாஸ்டர் ஆடியோ 2நாட்களில் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அப்போது நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், ரத்ததானம் செய்தல், மாண மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகம் வழங்குதல் என்று பல்வேறு உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்வார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்தநாளுக்கு இதனை செய்து வருகின்றனர்.

விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில், இப்போதே அவரது ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை கொண்டாட துவங்கிவிட்டனர்.

அதற்காக #100DForMasterVIJAYBday என்ற ஹேஷ்டேக்கை தற்போதே உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். இனி ஒவ்வொரு நாளும் விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.

இன்னும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா வேற இருக்கு. அவர் எப்போது பேசுவார் என்றுதான் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் பேச ஆரம்பித்துவிட்டால் போதும் ரசிகர்களுக்கு எங்கும் இல்லாத சந்தோஷம்தான்.

விஜய் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், வி ஆர் வெயிட்டிங்….. We Are Waiting…

3

டுவிட்டரில் டிரெண்டாகும் #2DaystogoForMasterAudioLaunch

0
2DaystogoForMasterAudioLaunch

Master Audio Launch From March 15; மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், #2DaystogoForMasterAudioLaunch என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு முன்னதாக வரும் 15 ஆம் தேதி மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch From March 15) நடக்க இருக்கிறது.

மாஸ்டர் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ, மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் வாத்தி கம்மிங் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். வாத்தி கம்மிங் பாடல் சேலஞ்ச் புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறது.

ஆம், வாத்திஸ்டெப்பு சேலஞ்ச் என்ற ஹேஷ்டேக்கில் வைரலாகி வருகிறது. சி

னிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் #VaathiStepu Challenge ஹேஷ்டேக் மூலம் டான்ஸ் வீடியோவை பதிவிட்டு பலரும் மாஸ்டர் படத்தின் மீது தங்களுக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் இசை வெளியீடு நடக்க இருக்கிறது. சன் டிவி நிறுவனம் இதனை தங்களது சேனலில் நேரலை செய்கிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால், மாஸ்டர் இசை வெளியீடு எங்கு நடக்கிறது என்பது குறித்து அறிவிப்பு வரவில்லை.

இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் மாஸ்டர் அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஒன்றில் மாஸ்டர் இசை வெளியீடு (Master Invitation) நடக்க இருப்பது போன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதுதான் அதிகாரப்பூர்வ அழைப்பிதழா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.

மேலும், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ஏற்பட்ட டிக்கெட் கலர் ஜெராக்ஸ் பிரச்சனையை தவிர்ப்பதற்காக ஸ்மார்ட் கார்டு மூலமாக அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், டுவிட்டரில் #2DaystogoForMasterAudioLaunch என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அதோடு, ஹலோ ஆப்பில் மாஸ்டர் ஆடியோ 2நாட்களில் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

3

வேட்டையாடு விளையாடு 2வில் கமல் – கவுதம் மேனன் கூட்டணி!

0
Kamal Haasan Vettaiyaadu Vilaiyaadu

Kamal Haasan; கமல் ஹாசன் இயக்குநர் கவுதம் மேனன் கூட்டணியில் வேட்டையாடு விளையாடு 2 உருவாக இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Vettaiyaadu Vilaiyaadu 2; வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல் ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான படம் வேட்டையாடு விளையாடு (Vettaiyaadu Vilaiyaadu 2). இப்படத்தில் கமல் ஹாசன், ஜோதிகா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்திருந்தனர்.

இவர்களுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, கமாலினி ஆகியோரும் நடித்திருந்தனர்.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த பார்த்த முதல் நாளே பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு வந்தது.

வேட்டையாடு விளையாடு படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தற்போது தகவல் வந்துள்ளாது.

அண்மையில், ஜீவா நடிப்பில் வந்த ஜிப்ஸி படத்தைப் பார்த்த கமல் ஹாசன் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

அப்போது கவுதம் மேனனும் (Gautham Menon), கமல ஹாசனும் (Kamal Haasan) சந்தித்து பேசியுள்ளனர். அதில், வேட்டையாடு விளையாடு 2 படம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. எனினும், கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தேவர் மகன் 2 படமும் உருவாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு தலைவர் இருக்கின்றான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர்169 படத்தை கமல் ஹாசன் தயாரிக்க இருக்கிறார்.

கமலின் சபாஷ் நாயுடு படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதே போன்று கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான எனை நோக்கி பாயும் தோட்ட பல தடைகளைத் தாண்டி திரைக்கு வந்தது.

துருவ நட்சத்திரம் படமும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், மீண்டும் இணைந்துள்ள கமல் – கவுதம் மேனன் கூட்டணியில் வேட்டையாடு விளையாடு 2 படம் எப்போது உருவாகும் என்பது கேள்விக்குறி. எனினும் இது குறித்து அறிவிப்பு வந்தது சந்தோஷமான விஷயம்.

3

மாஸ்டர் இசை வெளியீடு இங்குதான் நடக்கிறது: இதோ அழைப்பிதழ்!

0
Master Audio Launch Invitation

Master Audio Launch Invitation; மாஸ்டர் இசை வெளியீடு சென்னையில் நடக்க இருக்கிறது. அதற்கான அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch) சென்னையில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் நடக்க இருக்கிறது. இசை வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர் (Master). உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு நாடே தயாராகி வருகிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா வரும் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்க இருக்கிறது. இதனை சன் தொலைக்காட்சி தங்களது சேனலில் நேரலை செய்கிறது என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

ஆனால், எங்கு நடக்கிறது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், மாஸ்டர் இசை வெளியீடு மார்ச் 15, 2020 பிற்பகல் 3 மணிக்கு தி லீலா பேலஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் கார்டில் இசை வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதுதான் நுழைவு வாயில் அனுமதி சீட்டு என்று கூறப்படுகிறது.

கடந்தாண்டு பிகில் படத்தின் இசை வெளியீட்டு (Master Audio Launch Invitation) விழாவில் டிக்கெட் கொடுக்கப்பட்டது. ஆனால், அதனை பலரும் கலர் ஜெராக்ஸ் எடுத்து மிஸ் யூஸ் செய்தனர்.

அதனை தவிர்க்கும் வகையில், ஸ்மார்ட் கார்டு வாயிலாக அனுமதிக்கான அழைப்பிதழ் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆக்சிஸ் பேங்க் உட்பட 10 வங்கிகள் அடுத்தடுத்து திவாலாக உள்ளது

0
ஆக்சிஸ் பேங்க்

ஆக்சிஸ் பேங்க் உட்பட பத்திற்கும் மேற்பட்ட வங்கிகள் திவாலாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

நேற்று நிர்மலா சிதாராமன் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைப்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார்..

இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை சுப்ரமணியன் சுவாமி வெட்ட வெளிச்சமாக கூறியுள்ளார்.

எஸ் வங்கி போன்றே அடுத்தடுத்து வங்கிகள் திவாலாக உள்ளது. ஆக்சிஸ் பேங்க் உட்பட 10 வங்கிகள் திவாலாக உள்ளதாக கூறியுள்ளார்.

தனியார் வங்கிகளை இணைப்பதால் நாட்டின் பொருளாதாரம் வளரப்போவதில்லை. பொதுமக்கள் தங்கள் பணத்தை இப்போதே எடுத்துக்கொள்வது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மதமே நிதியமைச்சர் பதவி எனக்கு கொடுக்கப்படவில்லை. நிர்மலா சிதாராமனுக்கு ஒன்றும் தெரியாது.

நாட்டின் பொருளாதாரம் இப்படியே சென்றால் வங்கிகள் இழுத்து மூடப்படும் எனக் கூறினார். அதுபோலவே எஸ் வங்கி மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆக்சஸ் பேங்க் கர்ப்பிணி பெண்ணை வைத்து விளம்பரம் வெளியிட்டு வருகிறது. உங்களுக்காக எப்பொழுதும் வங்கி திறந்திருக்கும் என்று.

சு.சாமி சொல்வதைப் பார்த்தால் வங்கிகள் திவாலாவதை மறைக்க இப்படி விளம்பரம் செய்யப்படுவதாக நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

3

டிக்டாக் பெண் போலீஸ் சஸ்பெண்ட்; அடித்தது சினிமா யோகம்

0
டிக்டாக் பெண் போலீஸ்

டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் ஆனவுடன் சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அர்பிதா சவுத்தரி மகிழ்ச்சி.

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்த லங்நாஜ் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் அர்பிதா சவுத்தரி.

இவர் ஒரு டிக்டாக் பிரியை. அடிக்கடி டிக்டாக் செய்து வடமாநில அளவில் புகழ் பெற்றுள்ளார். ஆர்வக்கோளாரில் காவல்நிலையத்திற்குள்ளேயே டிக்டாக் வீடியோ வெளியிட்டார்.

இந்த சம்பவம் ஜீலை 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. சஸ்பெண்ட் ஆனாலும் அதைப்பற்றி அர்பிதா கவலைப்படவில்லை.

முழுநேரமும் டிக்டாக் வீடியோ வெளியிடத் துவங்கினார். இதன் பிறகு சினிமா ஆல்பம் ஒன்றில் அர்பிதா நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து நான்கு ஆல்பம் பாடல்களில் நடித்து முடித்துவிட்டார்.

தன் தந்தையின் விருபத்திற்காகவே போலீஸ் வேலையில் சேர்ந்ததாகவும், தனக்கு மாடலிங் துறையிலேயே விருப்பம் உள்ளது. அந்த ஆசை தற்பொழுது நிறைவேறி உள்ளது எனக் கூறியுள்ளார்.

3

வாத்தி கம்மிங் ஒத்து பாடல் ஸ்டெப் காப்பியப்பா: வைரலாகும் சேலஞ்ச் வீடியோ!

0

Master Vaathi Coming; மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் #VaathiStepu என்ற ஹேஷ்டேக்குடன் வாத்தி கம்மிங் ஒத்து பாடலுக்கு தான் போடும் மோசமான ஸ்டெப்பை போட்டு சேலஞ்ச் ஒன்றை தொடங்கி வைத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master Release Date). வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா (Master Audio Launch) வரும் 15 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு நடக்க இருக்கிறது. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை சன் டிவி தங்களது தொலைக்காட்சியில் நேரலை செய்கிறது.

சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் (Master Second Single) வாத்தி கம்மிங் ஒத்து (VaathiComing) பாடல் டிராக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

அனிருத் இசையில், கானா பாலசந்தர் அந்த பாடலை பாடியுள்ளார். மேலும், இருவரும் இணைந்து வாத்தி கம்மிங் ஒத்து பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளனர்.

இந்த நிலையில், அனிருத் தனது டுவிட்டரில், 3 மோசமான டான்ஸர்ஸ் வாத்திஸ்டெப் சேலஞ்ச் (Vaathi Stepu challenge) என்று கூறி பாடலில் தாங்கள் ஆடிய அந்த டான்ஸ் வீடியோவை போட்டு நடனம் ஆடியுள்ளார்.

அதே போன்று நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் இணைந்து வாத்திஸ்டெப்பு சேலஞ்ச் டான்ஸ் ஆடிய வீடியோவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சினிமா பிரபலங்கள் பலரும் வாத்திஸ்டெப்பு சேலஞ்ச் செய்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர். #VaathiStepuchallenge என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

மேலும், டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவிட்டு பலரும் மாஸ்டர் படத்தின் மீது தங்களுக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இந்த டான்ஸ் ஸ்டெப் ஜெய் மற்றும் அஞ்சலி ஆகியோரது நடிப்பில் வந்த மாசமா என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது.

பாடலின் காப்பி என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், அந்தப் பாடலுக்கு ஸ்லோவாக நடனம் ஆடப்பட்டிருக்கும்.

மாஸ்டர் பாடலுக்கு வேகமாக நடனம் வரும் அவ்வளவு தான் வித்தியாசம். இதுக்கு அப்புறம் சொல்லுதற்கு ஒன்னும் இல்ல….

அதே போன்று வாத்தி பாடலின் மியூசிக் அனிருத் இசையில் அஜித் நடிப்பில் வெளிவந்த ஆலுமா டோலுமா பாடலை போன்று இருக்கிறது என்று சர்ச்சை எழுந்து உள்ளது.

3

டெல்லி போன்று கலவர பூமியாக மாற்றப்பார்க்கிறார் ஸ்டாலின் – இபிஎஸ்

0
கலவர பூமியாக

அமைதிப்பூங்காவான தமிழகத்தை டெல்லி போன்று கலவர பூமியாக மாற்றப்பார்க்கிறார் ஸ்டாலின் என இபிஎஸ் குற்றம் சுமத்தி உள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் என்.பி.ஆர் குறித்து பேசியிருந்தார்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) தொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. இன்னும் மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்கவில்லை.

இதன் காரணமாகவே தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.

உடனே, இது தொடர்பாக ஸ்டாலின் என்பிஆர் நிறுத்தப்பட்டது தொடர்பாக சட்டசபையில் அறிவிக்க வேண்டும். தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, என்.பி.ஆர். விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் ஸ்டாலின் அச்சத்தை உண்டு செய்ய நினைக்கிறார்.

அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகத்தை டெல்லி போன்று கலவர பூமியாக மாற்றப்பார்க்கிறார் ஸ்டாலின் எனத் தெரிவித்தார்.

3

நான் தான் சிஎம் வடிவேலு நக்கல் பேச்சு: வைரலாகும் வீடியோ!

0
Vadivelu Chief Minister

Vadivelu Chief Minister; நான் தான் சிஎம் என்று காமெடி நடிகர் வடிவேலு நக்கலாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றிருந்த நடிகர் வடிவேலுவிடம் ரஜினியின் அரசியல் கருத்து கேள்வி எழுப்பியதற்கு நான் எங்கிருந்தாலும் ஓட்டு போடுவீங்கள, அப்போ நான் தான் சிஎம் என்று நகைச்சுவையுடன் பேசிவிட்டு சென்றுள்ளார்.

சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது என்பது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. எம்ஜிஆர், கருணாநிதி, மு.க. ஸ்டாலின், ஜெயலலிதா என்று பலரும் சினிமாவில் இருந்து வந்துள்ளனர்.

அந்த வரிசையில், கமல் ஹாசனும் கட்சி தொடங்கி தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். கமல் ஹாசனுக்கு முன்னதாக அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வந்தபாடில்லை.

சும்மா பேச்சு மட்டும்தான் வந்து கொண்டே இருக்கிறது. ஏதோ அவரது படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் பேசிவிட்டு செல்கிறார் என்று விவரம் அறிந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று தனது அரசியல் பயணம் குறித்து ரஜினிகாந்த் (Rajinikanth Press Meet) ஏதேனும் அறிவிப்பார் என்ற ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்றிருந்தனர்.

அங்கு ரஜினிகாந்த் தான் (Rajini Political Entry) கட்சிக்கு மட்டுமே தலைவர் என்றும், முதல்வர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும் கூறியுள்ளார்.

அதோடு, தனது முக்கியமான 3 திட்டங்கள் குறித்தும் தெரிவித்துள்ளார். (Rajini 3 Plan)

திட்டம் 1: தேவையான அளவில் மட்டுமே கட்சி நிர்வாகிகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

திட்டம் 2: இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் வங்கப்பட வேண்டும். 60 முதல் 65 சதவிகிதம் வரை இளைஞர்களுக்கும், 30 – 35 சதவிகிதம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதி ஆகியோருக்கு வழங்கப்படும்.

திட்டம் 3: கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர். தான் கட்சி தலைவராகவே இருக்க விரும்புவதாகவும், முதல்வர் பதவி மீது ஆசை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

இதற்கு பலரும் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்தனர். எனினும் கோலிவுட் சினிமாவில் பிரபலங்கள் தற்போது ரஜினிகாந்தை பலரும் காமெடியனாக பார்த்து வருகின்றனர்.

ஆம், ரோபோ சங்கர் நடிக்கும் புதிய படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. இந்தப் படத்தின் போஸ்டர் வெளியானது.

இந்த போஸ்டரில், வருவது உறுதி, வந்துட்டே இருக்கேன், வந்துட்டேன் ஆனா நான் இல்லை என்று ரஜினியை கிண்டலடிக்கும் விதமாக வசனங்கள் இடம்பெற்றிருந்தது.

ரோபோ சங்கரைத் தொடர்ந்து, தற்போது வடிவேலுவும் தனக்கே உரிய பாணியில் கிண்டலும் கேளியும் செய்துள்ளார்.

முதல்வர் வடிவேலு:

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்த வடிவேலுவிடம் பத்திரிக்கையாளர்கள் ரஜினியின் அரசியல் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு வடிவேலு கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா என்பது உங்களுக்கும், தெரியாது, எனக்கும் தெரியாது. இவ்வளவு ஏன், அவருக்கே தெரியாது. அவர் வரும் போது பார்த்துக்கொள்வோமே,

2001ல் நான் சிஎம் ஆகலாம்னு பிளான்… 2021 ல் நான் சிஎம் ஆகலாம் என்று பிளான் பண்ணியிருக்கிறேன். அதை நிறைய பேர் கெடுக்கிறார்கள். அநேகமாக நான் சிஎம் ஆகலாம் என்று திட்டம் போட்டிருக்கிறேன்.

நான் எங்க நின்னாலும் ஓட்டு போடுவீங்கள? அப்போ நான் தான் சிஎம்மு என்று கம்பீரத்தோடு நக்கலாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

தற்போது நான் தான் சிஎம் என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடிவேலுவைப் போன்று இன்னும் பலரும் இதே போன்று நான் தான் சிஎம் என்று சொல்லிக்கொண்டிருப்பதாக தகவல் வருகிறது.

பிக் பாஸ் ஜூலி கூடதான் அரசியலுக்கு வருவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3