Home Blog Page 219

இரத்த கறைக்கு நடுவில் கவின் – அம்ரிதா ஐயர்: லிப்ட் ஃபர்ஸ்ட் லுக்!

0
Lift First Look

Lift First Look; லிப்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கவின் மற்றும் அம்ரிதா ஐயர் இணைந்து நடிக்கும் லிப்ட் (Lift First Look) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் வேட்டையனாக வந்தவர் நடிகர் கவின் (Kavin). தொடர்ந்து சத்ரியன் படத்தில் துணை நடிகராக நடித்தார்.

இதையடுத்து, நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எனினும், அப்படி ஒன்றும் வரவேற்பு இல்லை.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று, தனக்கென்று ஆர்மி உருவாகும் அளவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கவின் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Lift First Look) வந்துள்ளது.

புதுமுக இயக்குநர் வினீத் இயக்கத்தில் ஏகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் லிப்ட் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக விஜய்யின் பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்த அம்ரிதா ஐயர் (Amritha Aiyer) ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த நிலையில் லிப்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் இருவரும் லிப்ட்டிற்குள் அமர்ந்து இருப்பது போன்றும், இருவருக்கும் இடையில் ரத்தக்கறை இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

லிப்ட் படத்தின் கவின், அமரிதா ஐயர் இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களாக நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க ஹாரர் த்ரில்ல கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

3

வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையா?

0

கடந்த புதன்கிழமை அன்று வங்கதேசத்தின் பிரபல கிரிக்கெட் வீரரான சவுமியா சர்கார் தன்னுடைய நீண்ட நாள் காதலியான பிரியோந்தி தேப்நாத் பூஜா அவர்களை திருமணம் செய்துகொண்டார்.

திருமண சடங்கிற்காக மான்தோல் ஒன்றை பயன்படுத்தியுள்ளார். இது மிகவும் சர்ச்சை ஆனாது, காவல் துறை கவனத்திற்கு சென்றது.

வங்கதேச வன பாதுகாப்பு சட்டப்படி அவரும் அவரது குடும்பத்தினரும் 3 ஆண்டுகள் சிறை செல்ல வாய்ப்புள்ளது.

இதைப்பற்றி சவுமியா சர்க்கார் தந்தை கூறுகையில்,

இது அவர்களுடைய குடும்ப வழக்கமாக நீண்ட நாட்களாக செய்து வருவதாகவும் இது தன்னுடைய மூதாதையர்கள் பயன்படுத்திய மான்தோல் எனவும் இதை தனது தந்தை தனக்கு பரிசு அளித்ததாகவும்,

இது தேவையில்லாத பிரச்சனைகளை ஊடகம் பரப்பிக் கொண்டிருக்கிறது இதை எப்போதோ என் மூதாதையர்கள் வழிவழியாக கொண்டு வரும் ஒரு பழக்கம் முறைதான்‘ என்றார்.

இருந்தாலும் காவல்துறையினர் இதை பற்றி அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை வங்கத்தைச் அதற்காக 55 ஒருநாள் போட்டி அதில் 1728 ரன்கள் எடுத்துள்ளார், 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 818 ரன்களும், 42 t20 களில் 772 ரன்கள் எடுத்துள்ளார்.

3

எல்லோருக்குமே நேரம் இருக்கு: டைம் இல்ல டிரைலர் வெளியீடு!

0
Time Illa Trailer

Time Illa Trailer; டைம் இல்ல படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மனு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் டைல் இல்ல (Time Illa). இப்படத்தில் இவருடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன், மோனிகா சின்னகோட்லா, ஆதித்யா கதிர், மனோகர் சுப்பிரமணியன், அபிஷேக் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒருவேலையை செய்யவில்லை என்றால் நாம் எல்லோரும் சொல்வது டைல் இல்ல. ஆனால், எல்லோருக்குமே நேரம் இருக்கு. நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த வகையில், டைம் இருக்கு என்பதை என்பதை டைம் இல்ல படத்தின் மூலம் எப்படியெல்லாம் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள் என்று டைல் இல்ல டிரைலர் (Time Illa Trailer) மூலம் அறிந்து கொள்ளலாம்.

டைம் இல்ல டிரைலரில் கூறியிருப்பதாவது; என்னுடைய நேரம் என்ன என்று எனக்கு தெரியும். இன்னும் 30 நாள் தான் இருக்கு.

3 கண்டிஷன்படி 30 நாளும் நடக்க வேண்டும். 31ஆவது நாள் எனக்கு கோயில் கட்ட வேண்டும். இல்ல உனக்கு சமாதி கட்டிவிடுவேன்.

அவனா, இவனா, அதுவா, இதுவா என்றெல்லாம் டயலாக் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

எல்ஜி பாலா இசையமைத்துள்ள இந்தப் படத்தை கலைசெல்வன் தயாரித்துள்ளார். வரும் 20 ஆம் தேதி டைம் இல்ல படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஜெர்மன் நாட்டில் உதிர்ந்த முத்து இயற்பியல் உலகில் இவர் தான் கெத்து – ஐன்ஸ்டீன்

0
ஐன்ஸ்டீன் பிறந்த தினம்

ஐன்ஸ்டீன் பிறந்த தினம். இயற்பியல் உலகில் இவர் தான் கெத்து. உலகத்திலேயே பிரபலமான சமன்பாடு எது என்றால் அனைவரும் யோசிக்காமல் சொல்வர் e=mc2 என்று.

அறிவியல் மேதை

அறிவியலை அறியாதோறும் இவரை அறிவர். 1915-ஆம் ஆண்டு அறிவியல் பேரறிஞர்கள் பலபேர் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. அந்த நேரத்தில் தனது பொது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார்.

அது அறிவியல் உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஒரு புரட்சியையும் ஏற்படுத்தியது. குவாண்டம் தியரிக்கு முன்னோடியாக இருந்தது இவர் செயல்படுத்திய போட்டோ எலக்ட்ரிக் மெத்தட்.

1879-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் அவருக்கு கற்றல் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர்.

ஐன்ஸ்டீன் பள்ளியில்  ஒரு சராசரி மாணவனாகவே தான் இருந்தார். நான்கு வயதில் அவருக்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஒருமுறை அவர் தந்தை கேம்பஸ் திசைகாட்டி அவருக்கு பரிசாக தந்தார்.

இவருக்கு அறிவியல் மேல் ஈர்ப்பு வந்து தன் பள்ளியில் சொந்தமாகவே கால்குலஸ் என்னும் கணித கூற்றை கற்றுக்கொண்டார். பின்னர் சந்தேகங்களை கேட்க தொடங்கினார்.

இவர் சந்தேகங்களுக்கு பதிலளிக்க பள்ளி ஆசிரியர்கள், அடுத்து என்ன கேட்கப் போகிறார் என்று அஞ்சினார்கள்.  ஐன்ஸ்டைன் சிறுவயதிலேயே சொற்களாலும் வார்த்தைகளாலும் சிந்திப்பதை காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார்.

ஐன்ஸ்டீன்க்கு  வயலின் வாசிப்பதில் அதிக ஆர்வம்  இருந்தது. கற்றுக்கொண்டு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.

அவரின் 15-ஆவது வயதில்  இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவர் குடும்பம் கஷ்டப்பட அங்கிருந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றார்.

ஐன்ஸ்டீன்  அங்குள்ள கல்லூரியில் சேர்ந்தார். அதிலிருந்து அந்த நாட்டு குடியுரிமை பெற்றார். படித்தவுடன் அங்கு அவருக்கு கிடைத்த வேலை விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பதை ஆராய்வது.

அதில் அவருக்கு நிறைய ஓய்வு கிடைத்தது அந்த ஓய்வு நேரத்தில் சொந்தமாக ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.

1905-ஆம் ஆண்டு சுரோஜ் பல்கலைக்கழகத்தில் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. கண்ணுக்குத் தெரியாத அணுக்களைப் பற்றியும் ஆகாயத்தையும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் “தியரி ஆப் ரிலேட்டிவிட்டி” கோட்பாட்டை வெளியிட்டார்.

அதுதான் சார்பியல் கோட்பாடு. அந்த கோட்பாடு மூலம் உலகிற்கு தந்த கணித இயற்பியல் வாய்ப்பாடு தான் e=mc2.

அதை கண்டுபிடிக்கும் போது அவருக்கு வயது 26 தான் 1921-ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், சார்பியல் கோட்பாட்டில் விஞ்ஞானிகளுக்கு கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்கு கொடுக்காமல் “ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட்” என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.

முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்து கொண்டதனால் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன்.

ஜெர்மனி ஆட்சியில் ஹிட்லர் வந்தபோது யூதர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனால் ஐன்ஸ்டீன் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார்.

அணு குண்டு அறிமுகம்

1939-ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் இணைந்து அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் இருக்கு கடிதம் எழுதினார்.

ஹிட்லர் ஆட்சியில் இருக்கும் ஜெர்மனி அணுகுண்டு தயாரிக்கும் வல்லமையில் இருக்கிறது. அதை விரைவில் தயாரித்து விடுவார்கள் என்று ஐன்ஸ்டீன் கடிதத்தில் கூறினார்.

அமெரிக்கா,  ஜெர்மனி கண்டுபிடிக்கும் பணியை தடுத்து நிறுத்தும் என்று நினைத்தார். ஆனால், அதாபர் ரூஸ்வெல்ட் ஆதரவில் அமெரிக்கா நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு கண்டுபிடிக்கத் தொடங்கியது.

அதன் விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஹிரோஷிமா நாகசாகியில் நடந்த சம்பவம். e=mc2  தான் அணுகுண்டு கண்டுபிடிப்புக்கு அடிப்படையாக அமைந்தது.

இது ஐன்ஸ்டீன் இறக்கும்வரை உறுத்தலாகவே இருந்தது. ஆனால் ஐன்ஸ்டீன் கோட்பாட்டால் பல நன்மைகளை இந்த உலகம் பார்த்திருக்கிறது.

தங்கள் இனத்தவர் என்ற பெருமையுடன் இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும் படி அழைப்பு விடுத்தது ஐன்ஸ்டீனுக்கு.

நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார் ஐன்ஸ்டீன். இவரின் மூளைக்கே தனி வரலாறு ஒன்று உண்டு.

ஐன்ஸ்டீன் பிறந்த தினம்

இன்று ஐன்ஸ்டீன் பிறந்து 141 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இவரது கண்டுபபிடிப்புகள் உலகம் பயணிக்கும் வரை இவரின் கண்டுபிடிப்புகளும் பயணிக்கும் என்பது துளியும் சந்தேகம் இல்லாத ஒன்று.

இவர் இறந்து 66 வருடங்கள் கடந்துவிட்டது. இன்னும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் இவரை பற்றி இன்றளவும்  பெருமை பேசி வருகிறார்கள்.

3

Happy Birthday Lokesh: டிரெண்டாகும் #கைதி ஹேஷ்டேக்!

0
Kaithi Director Lokesh Kanagaraj

Kaithi Lokesh Kanagaraj; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கைதி படம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குந லோகேஷ் கனகராஜ் இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை (Lokesh Kanagaraj Birthday) சிறப்பாக கொண்டாடி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் (Happy Birthday Lokesh) இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் கைதி (Kaithi).

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படம் முழுவதும் இரவிலே படமாக்கப்பட்டுள்ளது.

அதோடு, படத்திற்கு ஹீரோயினும் இல்லை டூயட்டும் இல்லை. ஆனால், கைதிக்கும், போலீஸுக்கும், போதைப்பொருள் கும்பலுக்கும்  இடையில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது.

கைதி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. கிட்டத்தட்ட ரூ.105 கோடி வரையில் வசூல் குவித்ததாக விக்கிப்பீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து கைதி படத்தின் 2 பாகமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், எப்போது என்று தகவல் இல்லை.

தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் (Master Lokesh Kanagaraj) படத்தை இயக்கி முடித்துள்ளார். மாஸ்டர் போஸ்டர் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6.30 மணிக்கு நடக்க இருக்கிறது.

சன் தொலைக்காட்சி மாஸ்டர் இசை வெளியீட்டை நேரலை செய்கிறது. சென்னையில் உள்ள லீலா பேலஸில் மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch) நடப்பதாக அழைப்பிதழ் வந்துள்ளது.

தொடர்ந்து பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் விஜய்யைத் தொடர்ந்து ரஜினியை வைத்து ஒரு படம் இருக்க இருக்கிறார். ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர்169 படத்தை இயக்க இருக்கிறார்.

ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் பிஸியாக இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தலைவர்169 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மாஸ்டர் குழுவினர் கேக் வெட்டி லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை சிறப்பித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்து தெரிவிப்போம்…ஹேப்பி பர்த்டே லோகேஷ் கனகராஜ்…

3

மாஸ்டர் லோகேஷ் கனகராஜூக்கு இன்று பிறந்தநாள்!

0
Happy Birthday Lokesh

Master Lokesh Kanagaraj; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு மாஸ்டர் படக்குழுவினர் கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார் (Lokesh Kanagarah Birthday).

லோகேஷ் கனகராஜ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு என்ற கிராமத்தில் கடந்த 1986 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி பிறந்தார்.

அவியல் (Aviyal) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால், அவியல் படத்தில், அல்போன்ஸ் புத்திரன், ஷமீர் சுல்தான், மோகித் மெஹ்ரா, குரு சமரன் ஆகியோர் இயக்குநர்களாக இருந்துள்ளனர்.

அவியல் படத்தைத் தொடர்ந்து மாநகரம் (Maanagaram) படத்தை தனியாக இயக்கி சினிமாவில் தன்னை ஒரு இயக்குநராக அறிமுகப்படுத்திக்கொண்டார்.

இப்படத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து, கார்த்தியின் கைதி படத்தை இயக்கினார்.

கைதி (Kaithi) படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கைதி 2 படமும் உருவாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.

கைதி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது விஜய்யின் மாஸ்டர் (Master) படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

மாஸ்டர் படத்திற்கு எந்த புரோமோஷனும் தேவையேயில்லை. அந்தளவிற்கு தானாகவே புரோமோஷனும் வந்துள்ளது. ரசிகர்கள் மாஸ்டர் படம் மற்றும் விஜய் மீது காதல் வைத்துள்ளனர்.

அண்மையில், மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வாத்தி கம்மிங் (Vaathi Comming) பாடல் வெளியாகி சமூக வலைதங்களில் வாத்தி ஸ்டெப்பு சேலஞ்ச் (Vaathi Stepu Challenge) உருவாக காரணமாக அமைந்தது.

அந்தளவிற்கு பாடலும், பாடலின் டான்ஸும் அமைந்துள்ளது. நாளை மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. சென்னை லீலா பேலஸில் மாஸ்டர் இசை வெளியீட்டு (Master Audio Launch Invitation) விழா நடக்க இருப்பதாக அழைப்பிதழ் ஒன்று வைரலாகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 34 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை மாஸ்டர் குழுவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

ஆம், சாந்தனு, லோகேஷ் கனகராஜுக்கு கேக் ஊட்டிவிடும் வீடியோ ஒன்று டுவிட்டரில் வைரலாகிறது. அதோடும் ஹேப்பி பர்த்டே மாஸ்டர் லோகேஷ் என்று எழுதப்பட்ட கேக் ஒன்றும் வைரலாகிறது.

மாஸ்டர் படக்குழுவினரைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்….ஹேப்பி பர்த்டே லோகேஷ் கனகராஜ் சார்….

மாஸ்டர் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது நெய்வேலியில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தனது நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். விஜய்யும் மரக்கன்றுகள் நட்டு வைத்துள்ளார்.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர்169 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

இளமதி எங்கே? கடத்தலில் தொடர்புடைய அதிமுக அமைச்சர் யார்?

1
ஆணவக்கொலை

இளமதி எங்கே? கடத்தலில் தொடர்புடைய அதிமுக அமைச்சர் யார்? இளமதியை கடத்திய பாமகவினர் யார்? திருமாவளவன் ஏன் மறைமுகமாக கூறவேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தர்மாபுரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்வன் (26). அதே கிராமத்தை சேர்ந்த இளமதி (23) என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

திராவிட விடுதலைக் கழகத்தின் உறுப்பினர் செல்வன் என்பதால் இவர்களுடைய திருமணம் சேலம், கவலாண்டியூரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திருமணம் நடைபெற்று உள்ளது.

கவலாண்டியூர் தலைமை உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுடைய திருமண புகைப்படங்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக் என ட்ரெண்டிங் ஆகியது. சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.

காரில் கடத்தல்

இளமதியின் தந்தை பாமக-வைச் சேர்ந்தவராம். இதனால் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடியை பிரிக்க முடிவு செய்துள்ளனர்.

பாமக மற்றும் கொங்கு அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனை தாக்கி, காரில் கடத்தி செல்வன்-இளமதி இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லகூறியுள்ளனர்.

செல்வன்-இளமதி தம்பதியினர் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் செல்வனை ஒரு காரிலும், இளமதியை ஒரு காரிலும் ஏற்றிச்சென்றுள்ளனர்.

திவிக போராட்டம்

இந்த விஷயம் திராவிடர் விடுதலை கழகத்தினருக்கு தெரிந்தவுடன் சேலம் கொளத்தூர் பகுதியில் போராட்டத்தில் குதித்தனர். விடிய விடிய இந்த போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து திருமாவளவன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில் இளமதியை கடத்தியது பாமகவினர் தான்.

இதில் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு நேரடி தொடர்பு உள்ளது. இதன் காரணமாகவே போலீசார் இந்த விஷயத்தில் துரிதமாக செயல்படாமல் உள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயத்தில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் திருமாவளன் அமைச்சர் பெயரை குறிப்பிடவில்லை.

இன்னும் காணவில்லை

இந்த சம்பவம் நடந்து நான்கு தினங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் இளமதி எங்கே உள்ளார் என்ற கேள்விக்கு விடையில்லை.

உயிருடன் உள்ளாரா? அல்லது ஆணவக்கொலை செய்யப்பட்டு விட்டாரா என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் where is ilamathi என்ற ஹாஸ்டாக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

3

கிரிக்கெட்டுக்கு பரவிய கொரோனா வைரஸ்

0

கிரிக்கெட்டுக்கு பரவிய கொரோனா வைரஸ்

ஐபிஎல் போட்டி தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடர் லிஜெண்ட் கிரிக்கெட் போட்டி ஐபிஎல் போட்டி என அனைத்தையும் இந்திய நிர்வாகம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது

இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவி வருகிறது, அதனால் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்தியா வந்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் மழை காரணமாக கைவிடப்பட்டது.

மேலும் இரண்டு போட்டிகள் மீதம் இருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியுடன் ஒருநாள் தொடரை இந்தியா தற்போது நிறுத்தி வைத்து தென்ஆப்பிரிக்கா வீரர்களை பாதுகாப்பு காரணமாக திருப்பி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரோடு சேப்டி வேர்ல்டு சீரியஸ் தொடர் கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கியது. ஏற்கனவே நான்கு போட்டிகள் முடிந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்திற்காக மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதத்திற்குள் வீரர்கள் நேர வசதிக்கேற்ப போட்டிகள் நடத்தப்படலாம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்படும் என இந்த தொடரை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது.

ஏற்கனவே ரங்கனா ஹெராத், அட்டப்பட்டு, முத்தையா முரளிதரன் போன்ற வீரர்கள் நாடு திரும்பிய நிலையில், மீதம் உள்ள வீரர்கள் இன்று அவரவர் நாட்டுக்கு திரும்பிச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் வருகிற மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி அட்டவணையை இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 5000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நூற்றுக்கும் மேலான நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், தற்போது இந்தியாவிலும் பரவி 82 பேர்களிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் மேலும் பரவக் கூடும் என்பதால் கிரிக்கெட் போட்டியில் ஏராளமான ரசிகர்கள் கூடுவதால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் நலனை கருத்தில் கொண்டு பாதிப்பு ஏற்படாமலிருக்க போட்டியை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதலில் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டி நடத்தலாம் என நிர்வாகம் ஆலோசித்து வந்த நிலையில் போட்டியை தற்போது தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது

மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக போட்டிகளை ரத்து செய்துள்ளது.

3

73 ஆண்டுகால வரலாற்றை உடைத்தது சௌராஷ்டிரா

0

ரஞ்சி போட்டி

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கிய 2019 – 2020ம் ஆண்டுக்கான ரஞ்சிப் போட்டியில் சௌராஷ்டிரா கோப்பையை வென்றது.

இந்த வருடம் 38 அணிகள் பங்கு பெற்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதி போட்டிகள் பெங்கால் மற்றும் கர்நாடகாவும், இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் சௌராஷ்டிரா மற்றும் குஜராத் அணிகள் மோதின.

முதல் போட்டியில் பெங்கால் அணியும் இரண்டாவது போட்டியில் சௌராஷ்டிரா அணியும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறின.

பெங்கால் மற்றும் சௌராஷ்டிரா

ராஜ்கோட் மைதானத்தில் மார்ச் 9 தேதி தொடங்கிய இறுதி போட்டியில் சௌராஷ்டிரா கேப்டன் உனன்கட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் ஆடிய சௌராஷ்டிரா அணி 172 ஓவர்கள் பேட்டிங் செய்து 425 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

முதல் இன்னிங்சில் சௌராஷ்டிரா அணியில் வாசுவாட 106, புஜாரா 66, ஜடேஜா 33, பரோட் 54, விஸ்வராஜ் ஜடேஜா 54, ஹர்வீக் 38, உனன்கட் 20 ரன்களும் எடுத்தனர்.

பெங்கால் தரப்பில் அக்ஷ் டீப் 4 விக்கெட்டும், அஹமது 3 விக்கெட்டும், முகேஷ் குமார் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

44 ரன்கள் முன்னிலை

426 ரனக்ள் முதல் இன்னிங்சில் எடுத்தாலே பெங்கால் அணி வெற்றி பெறலாம் என இருந்தது, ஆனால் 161 ஓவர்கள் பேட்டிங் செய்து 385 ரன்கள் மட்டுமே எடுத்தது, சேட்டர்ஜி 81, மனோஜ் 35, திவாரி 64, முஜும்தார் 63, சஹா 64, நந்தி 40 ரன்கள் எடுத்தனர்.

சௌராஷ்டிரா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட், உனன்கட் மற்றும் மான்கட் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

44 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சை ஆடிய சௌராஷ்டிரா அணி இறுதி நாளில் 31 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பரோட் 39, தேசாய் 21, விஸ்வராஜ் ஜடேஜா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜாக்சன் 12 ரன்களுடன் களத்தில் நின்றார். பெங்கால் தரப்பில் அஹமது இரண்டு விக்கெட் வீழத்தினார்.

செளராஷ்டிரா வெற்றி

ரஞ்சி கோப்பை பொறுத்தவரை இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுக்கும் அணியே வெற்றி பெறும், அதன்படி பெங்கால் அணியை விட சௌராஷ்டிரா அணி 44 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

இதன் மூலம் 73 ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக சௌராஷ்டிரா அணி கோப்பையை வரலாற்று வெற்றியுடன் வென்று  சாதனை படைத்தது.

கடந்த முறை தோல்வி

கடந்த ஆண்டு இறுதி போட்டியில் சௌராஷ்டிரா அணி விதர்பா அணியிடம் கோப்பையை பறிக்கொடுத்தது.
அப்போது பேசிய உனன்கட் அடுத்த ஆண்டு கோப்பையை வெல்வோம் என்றார்.

தான் சொல்லிய படியே கோப்பையை வென்று அணிக்கு பெருமையை தேடி தந்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் நான்கு முறை இறுதிப்போட்டிக்கு நுழைந்த சௌராஷ்டிரா அணியால் தற்போது தான்  கோப்பை கிடைத்திருக்கிறது.

ஆனால் இதற்கு முன்னால் நவநகர் மற்றும் வெஸ்டர்ன் இந்தியா என்ற அணியில் தான் சௌராஷ்டிரா 2 முறை கோப்பை வென்று இருந்தது.

அர்பிட் வாசுவட ஆட்டநாயகன் விருதை  வென்றார்.

ரஞ்சி போட்டி துளிகள்

  • ராகுல் தலால் இந்த ரஞ்சி பேட்டியில் 1340 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தார்.

  • இந்த ரஞ்சி போட்டியில் மூன்று முச்சதம் அடிக்கப்பட்டது. டி. கோலி, சர்பரஸ் கான், மனோஜ் திவாரி எடுத்தனர்.

  • சௌராஷ்டிரா கேப்டன் உனன்கட் 67 விக்கெட் எடுத்து இந்த ரஞ்சி போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆனார். 7 முறை 5 விக்கெட்க்கு மேல் எடுத்துள்ளார்.

3

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி

0

நியூசிலாந்தை ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

சிட்னி மைதானத்தில் நேற்ற நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

வார்னர் மற்றும் பின்ச் முதல் ஜோடியை நியூசிலாந்தால் வீழ்த்த கடினமாகவே உள்ளது.ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. இருவரின் ஆட்டத்தில் நிதானம் தெரிந்தது.
ஆஸ்திரேலியா அணி 300 ரன்களை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சான்டனர் மற்றும் போல்ட் அருமையாக பந்து வீசினர்.

50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக வார்னர் 67, பின்ச் 60, லபுஸ்சனே 56, மிட்சல் மார்ஷ் 22, ஸ்மித் மற்றும் கம்மின்ஸ் தலா 12 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் இஷ் ஜோதி 3 விக்கெட்டும், சான்டனர் மற்றும் பெர்குஸன் தலா 2 விக்கெட்டும வீழ்த்தினர்.

259 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் ரன் சேர்க்க திணறியது விக்கெட்டுகளை மளமளவென சரிய தொடங்கியது.

41 ஓவர்கள் மட்டுமே தாக்கு பிடித்து 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டும் இழந்து 71 ரன்கள் வித்தியாத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது.

நியூசிலாந்தில் குப்தில் 40, லதாம் 48, கிராண்ட்கோம் 25, வில்லியம்சன் 19, சான்டனர் மற்றும் இஷ் ஜோதி தலா 14 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் மற்றும் மிட்சல் மார்ஷ் 3 விக்கெட்டும், ஹாசில்வுட் மற்றும் ஜாம்பா தலா இரண்டு விக்கெட்டும் விழ்த்தினார்கள்.

ஆட்டநாயகன் விருதை 3 விக்கெட் மற்றும் 27 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா எடுத்த மிட்சல் மார்ஷ் பெற்றார்.
அடுத்த போட்டி இதே மைதானத்தில் வருகிற மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

3