Home Blog Page 218

15/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

15/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று நீங்கள் பொழுதினை மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியில் கலிப்பதின் மூலம் இன்றைய நாளில் பிரச்சனைகள் குறையும்.

பணிகளில் இன்று முன்னேற்றம் இருக்காது. துணையை இன்று புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும். பணவரவு பெரிதாக இருக்காது. பதட்டமான நிலையால் இன்று ஆரோக்கியம் குறையும்.

சூரிய பகவானை கோதுமை தானியம் வைத்து பூஜிக்க நன்மைகள் வந்து சேரும்.

ரிஷப ராசிபலன்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். அனைத்து காரியங்களும் கைகூடும். இன்று அறிவு பூர்வமாக திட்டமிடுவீர்கள்.

கடினமான பணிகளும் எளிதாக முடியும். குடும்பத்தில் இன்ப சூழல் பெருகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் பெருகும். ஆரோக்கியம் மேம்படும்.

அனுமனை வழிபட நன்மைகள் வந்து சேரும்.

மிதுன ராசிபலன்

இன்று அமைதியான சூழல் நிலவும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பணிகள் அனைத்தும் சுமூகமாக முடியும்.

துணையிடம் அன்பான சூழல் நிலவும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

சிவபெருமானை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

கடக ராசிபலன்

இன்று தடைகள் நிறைந்த நாளாக இருக்கும். பணியில் பதட்டமான சூழல் நிலவும். அசௌகரியமான நிலை உருவாகும்.

குடும்பத்தில் ஈகோ பிரச்சனைகள் வரும்.  பணவரவு சாதகமாக இருக்காது. தோள்களில் வலி, பல் வலி ஏற்படலாம்.

பிரம்ம தேவரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் கூடும்.

சிம்ம ராசிபலன்

இன்று இலக்குகளை அடைவதில் தடைகள் வந்து சேரும். வார்த்தைகளை கவனமாக பேசவும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது.

துணையிடம் மோதல்கள் ஏற்படும். வருமானம் போதுமான அளவு இருக்காது. முதுகு வலி ஏற்பட வாய்ப்புண்டு.

ராமரை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

கன்னி ராசிபலன் 

இன்று  உங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும். மன நிம்மதி கிடைக்கும். பணிகளை நம்பிக்கையுடன் செய்வீர்கள்.

துணையுடன் இன்பமாக இருப்பீர்கள். சேமிக்க பணம் நிறைய கிடைக்கும். உடல்நிலை நல்ல ஆற்றலுடன் இருக்கும்.

சூரியனுக்கு விளக்கேற்றி வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

துலா ராசிபலன்

இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாளாகும். பிராத்தனைகள் ஒன்றே பலன்கள் அளிக்கும். பணிகளில் சவால்கள் நிறைந்திருக்கும்.

கணவன் மனைவியிடையே அன்பை பகிர வேண்டிய நாளாகும். பொருளாதாரத்தில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இருக்காது.

விருச்சிக ராசிபலன்

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. மகிழ்ச்சிகரமாக எதுவும் நடைபெறாது. தொழில் மந்தமாக இருக்கும்.

குடும்பத்தில் நல்ல நிலை இருக்காது. சுமுகமான சூழல் இருக்காது. தன லாபம் குறைவாக இருக்கும். உணர்ச்சி வசத்தை குறைக்கவும்.

அனுமனை விளக்கேற்றி வழிபட நன்மைகள் கிடைக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று சுமாரான நாளாக இருக்கும். பொறுப்புகளை முடிப்பதில் சிரமம் இருக்கும். பணிகளை துரிதமாக முடிக்க இயலாது.

துணையுடன் மன கசப்புகள் ஏற்படும். வருமானம் குறைவாக இருக்கும். கண்களில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

நந்தி தேவருக்கு ஐந்து விளக்குகள் ஏற்றி வழிபட நற்பலன்கள் பெறலாம்.

மகர ராசிபலன் 

இன்று உங்களுக்கு செழிப்பான நாளாக இருக்கும். பணிகளை சுலபமாக முடிப்பீர்கள். அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.

கணவன் மனைவியிடையே காதல் மேம்படும். தொழில் விருத்தி ஏற்படும். அனுகூலமான நாளாக அமையும். உடல்நிலையில் எந்த குறையும் வராது.

பைரவரை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

கும்ப ராசிபலன்

இன்று காரியங்கள் அனைத்தும் துரிதமாக முடிப்பீர்கள. விரைவாக பலன்கள் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும்.

துணையுடன் இன்ப சுற்றுலா செல்வீர்கள். இன்பமான நாளாக அமையும். பண தட்டுப்பாடு இருக்காது. நல்ல ஆற்றலுடன் மன அமைதி கிடைக்கும்.

அம்பிகையை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

மீன ராசிபலன் 

இன்று மந்தமான நாளாக இருக்கும். பணிகளில் வெற்றிக்கு முயற்சிகள் அவசியம். மிகுதியாக உழைக்க வேண்டும்.

கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு இருக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை. கண்டிப்பாக கோயில் சென்று வாருங்கள். தனலாபம் அதிகமாக இருக்காது. கண் பிரச்சனைகள் வரலாம்.

சரபேஸ்வரரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் வந்து நேரும்.

15/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

ஆசிரியரை அசிங்கப்படுத்த ஆட்டோம்பாம் வருது: கமலி from நடுக்காவேரி டீசர்!

0
Kamali from Nadukkaveri Teaser

Kamali from Nadukkaveri Teaser; கமலி from நடுக்காவேரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் கமலி from நடுக்காவேரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கயல் ஆனந்தி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். கயல் படத்தின் மூலம் பிரபலமானார்.

சண்டிவீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, ரூபாய், பண்டிகை, பரியேறும் பெருமாள் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு.

தற்போது டைட்டானிக், எங்கே அந்த வான், அலாவுதீன் அற்புத கேமரா, ஏஞ்சல், ராவண காண்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜசேகர் துரைச்சாமி இயக்கத்தில் உருவாகி வரும் கமலி From நடுக்காவேரி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் கயல் ஆனந்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்திற்கு தீனதயாளன் இசையமைக்கிறார். சாய் சம்பத் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் கமலி என்ற கதாபாத்திரத்தில் கயல் ஆனந்தி நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கமலி from நடுக்காவேரி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், கயல் ஆனந்தி ஒன்றுமே தெரியாத ஒரு வெள்ளந்தியாக நடித்துள்ளார். பள்ளி முதல் கல்லூரி வரை ஆனந்தி செய்யும் சேட்டைகள் அப்படி.

பள்ளியில் ஆசிரியர்களை அசிங்கப்படுத்த வேண்டும் என்று பட்டாசுகளை வெடிக்கச் செய்கிறார். அதன் பிறகு பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்கிறார். அங்கு தேர்வு எழுதுகிறார்.

ஒன்றுமே தெரியவில்லை. இப்படியெல்லாம், கிராமத்திலிருந்து செல்லும் பெண்கள் பள்ளி, கல்லூரியில் சந்திக்கும் இன்னல்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கயல் ஆனந்தியின் கதாபாத்திரம் தான் கமலி என்றும், அவரது ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு தாலுகா பகுதியின் நடுக்காவேரி. இந்த கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு படிக்க வருகிறார்.

கல்லூரியில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்திய படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆனா ஆவனா வாத்தி ரெய்டுனா லிரிக் வெளியீடு!

0
Master Vaathi Raid Lyric

Master Vaathi Raid Lyric; மாஸ்டர் மூன்றாவது சிங்கிள் டிராக் வாத்தி ரெய்டு ஒத்து பாடல் வெளியாகியுள்ளது.

வாத்தி ரெய்டு (Vaathi Raid Lyric) பாடல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master). விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள இந்தப் படம் கல்விமுறையில் நடக்கும் ஊழலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நீட் தேர்வை எதிர்த்து போராடி தற்கொலை செய்து கொண்ட அனிதாவின்வின் காட்சியும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி (Kytty Story Lyric) மற்றும் வாத்தி கம்மிங் (Vaathi Coming Lyric) பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் மூன்றாவது சிங்கிள் டிராக் வாத்தி ரெய்டு (Vaathi Raid Lyric) பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆனா ஆவனா

அப்னா டைம்னா

வாங்கன்னா வணக்கம்னா

வாத்தி ரெய்டு னா

என்று தொடங்கும் வாத்தி ரெய்டு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு, பாடலுக்கும் ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

வாத்தி ரெய்டு பாடலுக்கு அறிவு பாடல் வரிகள் எழுதி பாடியுள்ளார். அவருடன் இணைந்து அனிருத்தும் பாடியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து நாளை மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் இசை வெளியீடு நடக்க இருக்கிறது. சன் தொலைக்காட்சி தங்களது சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

3

நான் பிழைப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை; கொரோனா நபரின் கண்ணீர் கதை

0
கொரோனா நபரின் கண்ணீர் கதை

நான் பிழைப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை; கொரோனா நபரின் கண்ணீர் கதை. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்.

கொரோனா நபரின் கண்ணீர் கதை

முதல் ஆப்ரிக்க மனிதர்

சீனாவில் வேலைக்குச் சென்ற ஆப்ரிக்காவைச் சேர்ந்த கெம் சென்யு என்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தற்பொழுது பூரண குணமடைந்துவிட்டார். அவர் கொரானா நோய் தாக்கியபோது நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

என்ன ஆனாலும் பரவயில்லை. நான் ஆப்ரிக்கா சென்று இதை பரப்பிவிடக்கூடாது என நினைத்தேன். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குள் நுழையும் போதே இறந்து விடுவேன் என்று தான் நினைத்தேன்.

கனவிலும் நான் பிழைப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இவருக்கு எச்.ஐ.வி. கிருமியை கொள்ளும் மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்ட முதல் ஆப்ரிக்க நபர் இவரே.

சிங்கப்பூர் ஜூலி

சிங்கப்பூரைச் சேர்ந்த ஜூலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளார். கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி காய்ச்சல் என நினைத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளார்.

ஆனால் நாள் முழுவதும் சோர்வுடன் காணப்பட்டு உள்ளார். அப்போது தும்மல் போன்ற அறிகுறிகள் இல்லை. 4-ம் தேதி எழுந்தவுடன் அறையே சுற்றுவது போல் இருந்ததாம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்று இருப்பது இவருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் இது குறித்து கூறியது என்ன?

நான்கு சுவர் மட்டுமே என்னைச் சுற்றி இருக்கும். போன் கொடுத்தனர். யாரிடம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் எனக் கூறினர்.

ஆனால் நேரில் யாரையும் சந்திக்க முடியவில்லை. சுவரை உடைத்துக்கொண்டு அருகில் உள்ளவரிடம் பேசலாமா என்று கூட நினைத்தேன்.

அருகில் இருக்கும் கழிவறைக்குக்கூட என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. அந்த அளவிற்கு தீவிரமாக கொரோனா என்னை பாதித்தது எனக் கூறியுள்ளார்.

3

மிரட்ட வருகிறார் வாத்தி: ரெய்டுக்கு தயாரா?

0

Master Vaathi Raid Third Single; மாஸ்டர் 3 ஆவது சிங்கிள் டிராக் வாத்தி ரெய்டு குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் 3 ஆவது சிங்கிள் டிராக் (Master Third Single Track) வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி (Master Release Date) தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதற்கு முன்னதாக வெளியாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் மாஸ்டர் குறித்து அறிவிப்பு வந்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர்ப் இரண்டாவது சிங்கிள் டிராக் வாத்தி கம்மிங் பாடல் வெளியானது.

இதையடுத்து, மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 34 ஆது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இரவு 8.30 மணிக்கு மாஸ்டர் 3ஆவது சிங்கிள் டிராக் வாத்தி ரெய்டு ஒத்து பாடல் வெளியாக இருக்கிறது என்று அறிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் விஜய் கோபத்துடன் இருப்பது போன்றும் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நாளை மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

சன் தொலைக்காட்சி நிறுவனம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை நேரலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

மனைவிக்கு கொரோனா; பிரதமர் எடுத்த உருக்கமான முடிவு

0
மனைவிக்கு கொரோனா

மனைவிக்கு கொரோனா தொற்று காரணமாக கனடா பிரதமர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் பிரிட்டன் நாட்டிற்கு சென்று வந்தார் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூட்டோவின் மனைவி சோபி கிரேகோயர்.

அவருடைய ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஜஸ்டீன், மனைவியுடன் நெருங்கி இருந்ததால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

3

ஆஸ்திரேலியா தொடர் வெற்றி: செக் வைத்த லக்ஷ்மன் – டிராவிட் | Cricket Rewind

0
லக்ஷமன் - டிராவிட்

ஆஸ்திரேலியா தொடர் வெற்றிகளாய் குவித்து வந்தது. உலக சாதனை படைக்கும் நேரத்தில் முற்றுப்புள்ளி வைத்தனர் லக்ஷ்மன் – டிராவிட் கூட்டணி.

தொடர் வெற்றி

1999-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியை பொழுதுபோக்காக வென்று, பாகிஸ்தானை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச்சென்று 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது ஆஸ்திரேலியா.

பாகிஸ்தானின் பக்கத்து நாடு இந்தியாவை கூப்பிட்டு 3-0 வெற்றி பெற்று இந்தியாவை வெறும் கையோடு வீட்டுக்கு அனுப்பியது ஆஸ்திரேலியா.

பக்கத்து நாடு நியூசிலாந்துக்கு சென்று அதன் சொந்த மண்ணில்  வெள்ளை அடிச்சு 3-0 என வெற்றிபெற்று நாடு திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆஸ்திரேலியாக்கு வரவைத்து 5-0 என்று டாட்டா காட்டியது ஆஸ்திரேலியா.

தொடர்ந்து 15 வெற்றி அசுர பலம் அசைக்க முடியாத அணி என பெயர் பெற்றது ஆஸ்திரேலியா அணி.

அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு சொல்ற மாறி ‘சின்ன டூர் போய்ட்டு வந்து லைஃப் ஸ்டாட் பன்னலாம்னு இருக்கேன்’,

இந்தியா வந்த ஆஸ்திரேலியா

இதுபோல 2001-ஆம் ஆண்டு இந்தியா சென்று அங்கேயும் வெற்றிபெற்று திரும்ப ஆஸ்திரேலியாவில் மற்ற அணிகளை வேட்டையாடலாம் என நினைத்தது.

முதல் போட்டி மும்பையில் நடக்க இந்தியா தோல்வி ஆஸ்திரேலியா பெறும் 16 வது தொடர் வெற்றி. இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனைகள்.  17 வது வெற்றி பெற  ஈடன் கார்டன் மைதானத்திற்கு புறப்பட்டது ஆஸ்திரேலியா.

2 வது போட்டி

மார்ச் 11-ஆம் தேதி தொடங்குகிறது. டாஸ் வென்ற ஸ்டீவ் வாஹ் பேட்டிங்கை தேர்வு செய்கிறார். பேட்ஸ்மேன்கள் இந்தியா பந்துவீச்சாளர்களை வச்சு செய்கிறார்கள்.

கேப்டன் ஸ்டீவ் வாஹ் சதம் அடித்து 110 ரன்கள், ஹைடன் 97 ரன்னிலும், லாங்கர் 58 ரன்னும், ஸ்லாட்ர் 42 ரன்னும், இறுதியாக வந்த பவுலர் கில்லப்பஸி 147 பந்து பேட்டிங் செய்து 46 ரன்னும் எடுத்து சோதித்தார்.

ஹர்பஜன் 7 விக்கெட்

ஒருவழியாக 132 ஓவர்களில் அனைத்து விக்கெட்டும் இழந்து 445 ரன்கள் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஹர்பஜன் ஏழு விக்கெட்டும், ஜாகீர்கான் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு சோதனையே காத்திருந்தது விவிஎஸ் லக்ஷ்மன் அரைசதம் அடிக்க 59 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே  எடுத்தது.

274 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி எப்படியும் இந்த போட்டியில் தோல்வியடைந்து விடும் என ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர் ஆஸ்திரேலிய அணி 17-வது தொடர் வெற்றிக்குத் தயாரானது.

லக்ஷ்மன் – டிராவிட் கூட்டணி 

174 பின் தங்கியிருந்ததால் இந்திய அணிக்கு பாலோ ஆன் கொடுத்தார் ஸ்டீவ் வாஹ். இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த முறை நம்பிக்கை இழக்கவில்லை.

தாஸ் 30, ரமேஷ் 39, டெண்டுல்கர் 10, கங்குலி 48 ரன்கள் எடுத்து  மூன்றாவது நாள் முடிவில் 252 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது.

விவிஎஸ் லக்ஷ்மன் இரண்டாவது இன்னிங்சில் 109 ரன்கள் எடுத்தும் ராகுல் டிராவிட் 7 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் களத்தில் நின்றனர்

நான்காவது நாள் அதாவது மார்ச் 14-ஆம் தேதி ஆட்டம் தொடங்கியது. எப்படியும் இன்றைய நாளில் மதிய உணவிற்கு முன்பே இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் எடுத்துவிடலாம் என்று ஆஸ்திரேலியா எண்ணியது.

பாவம் ஆஸி. பவுலர்கள்

ராகுல் டிராவிட்டும்  லக்ஷ்மணனும் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை நோகடித்து, சோதனை செய்து விளையாடினார்கள். கொல்கத்தா மைதானம் முழு ரசிகர்களால் நிறைந்திருந்தது

நான்காவது நாள் முழுவதும் இருவரும் சேர்ந்து விக்கெட்டை இழக்காமல் 337 ரன்கள் சேர்த்தார்கள். இதனால் இந்திய அணி 189 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை விட 315 ரன்கள் முன்னிலை பெற்றது.

9 பந்துவீச்சாளர்கள்

ஆஸ்திரேலிய அணி 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. கில்கிறிஸ்ட் மற்றும் ஸ்டீவ் வாக் தவிர மற்ற அனைவரும் வந்து வீசினார்கள்.

ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன், ஜஸ்டின் லாங்கர், மார்க் வாக், ஸ்லேட்டர் போன்ற வீரர்களும் பந்தை தொட்டு வீசி பார்த்தனர், ஆனால் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை என்பதுதான் மிச்சம்.

கைதட்டி ஆரவாரம்

அன்றைய நாள் முடிவில் ராகுல் ட்ராவிட் மற்றும் விவிஎஸ் லட்சுமணனும் இருவரும் ஆட்டம் முடிந்து மைதானத்தை விட்டு வெளியேறும்போது ரசிகர்கள் எழுந்து நின்று நீண்டநேரம் கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களை வழி அனுப்பினார்கள்.

விவிஎஸ் லக்ஷ்மன் 452 பந்துகள் பிடித்து 281 ரன்கள் எடுத்தார். ராகுல் டிராவிட் 353 பந்துகள் பிடித்து 180 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 805 பந்துகள் பிடித்து அதாவது 135 ஓவர்கள் பேட்டிங் செய்தனர்.

ஸ்டீவ் வாஹ் செய்வது அறியாது திகைத்து திணறிபோனார். ஆஸ்திரேலியா வீரர்கள் வெற்றியின் நம்பிக்கை இழந்தனர்.

வெற்றி பெற முடியாது இனி ஆட்டத்தை சமன் செய்தால் போதுமென்று ஐந்தாவது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா தொடர்ந்தது

இந்தியா வெற்றி

ஐந்தாவது நாள் ஆரம்பத்தில் சிறிது நேரத்தில் இந்தியா 178 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 657 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவை விட 383 ரன்கள் முன்னிலை பெற்று 384 ரன்கள் இலக்காக வைத்தது.

இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 166 ரன்களுக்கு 3 விக்கெட்டை மட்டும் இழந்து இருந்தது.

சச்சின் மற்றும் ஹர்பஜன் இருவரும் ஆஸ்திரேலியாவை கலங்கடித்தார்கள். ஹர்பஜன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

ஆஸ்திரேலியா தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய அணி உலக அளவில் கவனம் பெற்றது. ஹர்பஜன் இந்த போட்டியில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியா வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

ஆஸி. எதிரி லக்ஷ்மன்

281 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார் லக்ஷ்மன். ஆஸ்திரேலியாவின் சிம்ம சொப்பனமாக, தான் ஓய்வு பெறும் வரை இருந்து வந்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு  எதிராக விவிஎஸ் லக்ஷ்மன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 10 சதங்கள் அடித்துள்ளார். கவாஸ்கர் பார்டர் திராப்பி தொடரை 1-1 கணக்கில் சமன் செய்தது.

3

மிரட்ட வரும் யாஷ்: கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
KGF 2 Release Date

KGF 2 Release Date: யாஷ் நடிக்கும் கேஜிஎஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தங்க சுரங்கம் என்ன ஆனது என்பற்கு விடை கிடைக்கும் நாள்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎஃப் (KGF) படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் யாஷ். கன்னடத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிறக்கும் போது ஏழையாக பிறந்து, சாகும் போது பணக்காரனாகத்தான் சாகணும் என்று அம்மா சத்தியம் வாங்குகிறார்.

தன் அம்மாவின் சத்தியத்திற்காக பணக்காரனாக துடிக்கும் சிறுவன் ராக்கி கேங்க்ஸ்டராக மாறுகிறார். தங்கச்சுரங்கத்தை ஆட்டிப்படைக்கும் வில்லனை கொல்வதற்காக துணிச்சலோடு அவரது இடத்திற்கே செல்கிறார்.

அங்கிருக்கும் ஏழை கொத்தடிமை மக்களைக் கண்டு உணர்ச்சிவசப்படுகிறார். இறுதியில், வில்லனை கொன்று குவிக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் படி இயக்கியிருந்தார் இயக்குநர்.

அந்தளவிற்கு படத்தின் காட்சிகள் கட்சிதமாக இருந்தது. ரொமான்ஸ், ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என்று எந்த இடத்திலும் குறையில்லாத படமாக கேஜிஎஃப் உருவாக்கப்பட்டிருந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2-ஆம் (KGF 2 Release Date) பாகமும் உருவாகியுள்ளது.

அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் 2 (KGF 2 Release Date) படத்தில் யாஷிற்கு வில்லனாக சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும், யாஷிற்கு ஜோடியாக ரவீனா டாண்டன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஜிஎஃப் 2 படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. படம் இப்போது வெளியானாலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

3

புகைப்படத்தை பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகிவிட்டேன்!

0
Nayanthara Marriage

Nayanthara Marriage; நயன்தாராவிற்கு திருமணம் ஆகிவிட்டது போன்றும், அவர் நகைகளை அணிந்தபடி மணக்கோலத்தில் இருப்பது போன்றும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. 35 வயதாகிவிட்ட நிலையிலும் இன்னும் படங்களில் முன்னணி நடிகையாக, நம்பர் ஒன் நடிகையாகவே நடித்துக் கொண்டிருக்கிறார். சம்பளமோ பல கோடி.

முதலில் நடிகர் சிம்புவை காதலித்து வந்ததாகவும், அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாகவும் தகவல் வந்தது.

தொடர்ந்து டான்ஸ் மாஸ்டரும், நடிகரும், இயக்குநருமான பிரபு தேவாவுடன் நெருக்கமாக இருந்தார்.

இருவருமே விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதகாவும் தகவல் வந்தது. இவ்வளவு ஏன், பிரபு தேவாவின் பெயரைக் கூட பச்சைக்குத்திக் கொண்டார் என்று கூறப்பட்டது.

அந்த உறவிலும் விரிசல் ஏற்படவே, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வாழ்க்கையில் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறார்.

இருவருமே பொது இடங்களில் அதிகளவில் தென்படுகின்றனர்.  புத்தாண்டு, பிறந்தநாள் கொண்டாட்டம், கோயில் விழா என்று எங்கு சென்றாலும் இருவருமே ஒன்றாகத்தான் சென்று வருகின்றனர்.

கடந்த ஆண்டே விக்னேஷ் சிவன், நயன்தாரா (Nayanthara Vignesh Shivan) இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

இதற்கிடையில், நயன்தாராவிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டிற்குள் திருமணம் நடந்துவிடும் என்று பிரபல ஜோதிடர் கருத்தும் தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது கருத்து உண்மையாகிவிட்டதோ என்று தோன்றும் அளவிற்கு நயன்தாராவிற்கு ரகசியமாகத் திருணம் நடந்துவிட்டது என்றும், நயன்தாரா சிகப்பு நிற சேலையில் நகைகள் அணிந்தவாறு மணக்கோலத்தில் இருப்பது போன்றும், கழுத்தில் தாலி இருப்பது போன்ற ஒரு புகைப்படம் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதை வைத்துப் பார்க்கும் பொழுது நயன்தாராவிற்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது என்று தகவல் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தை பார்த்தவுடன் அதிர்ச்சியாகிவிட்டது.

அதன் பிறகு அந்த புகைப்படத்தை ஆராய்ந்து பார்க்கும் பொழுது அது நிவின் பாலி மற்றும் நயன்தாரா நடிப்பில் வந்த ‘லவ் ஆக்‌ஷன் டிராமா’ என்ற படத்தின் படப்பிடிப்பு காட்சி என்று தெரியவந்துள்ளது.

ஆம், தயான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, நயன்தாரா ஆகியோரது நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த படம் லவ் ஆக்‌ஷன் டிராமா.

ரொமாண்டிக் காமெடி கதையை மையப்படுத்தி லவ் ஆக்‌ஷன் டிராமா படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு வந்தது. நிவின் பாலி, நயன்தாராவின் நடிப்பிற்கும் பாராட்டு குவிந்தது.

லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தின் இறுதியில் நிவின் பாலி, நயன்தாரா இருவருமே காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். அதற்காக எடுத்த புகைப்படம் பல மாதங்களுக்குப் பிறகும் வைரலாகி வருகிறது.

Nayanthara Marriage

தற்போது நயன்தாராவை மணக்கோலத்தில் கண்டுள்ள ரசிகர்கள் அவருக்கு எப்போதுதான் திருமணம் நடக்கும் என்றும், அவரை விக்னேஷ் சிவனுடன் திருமண கோலத்தில் பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

அப்பாவுக்கு முருங்கைங்காய், மகனுக்கு முதல் இரவு! பலே பலே!

0
Shanthanu Athulya Ravi

Shanthanu Bhagyaraj; சாந்தனு மற்றும் அதுல்யா நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.

சக்கரக்கட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சாந்தனு (Shanthanu). தொடர்ந்து சித்து+2, ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம் என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார்.

என்னதான் அப்பா பாக்யராஜ் பெரிய மாஸ் நடிகராக வலம் வந்திருந்தாலும், மகனால், அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி வரமுடியவில்லை. தொடர்ந்து நடித்த படங்கள் விறுவிறுப்பாக அமையவில்லை.

தனசேகரன் இயக்கத்தில் வந்த வானம் கொட்டட்டும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் துணை நடிகராக் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தியுள்ளார்.

இதன் மூலம் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ஆம், ஸ்ரீஜர் (Srijar) இயக்கத்தில் உருவாகும் ரொமாண்டிக் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் சாந்தணுவிற்கு ஜோடியாக அதுல்யா ரவி (Athulya Ravi) நடிக்கிறார்.

இதற்கு முன்னதாக இயக்குநர் ஸ்ரீஜர் எடால் (Edaal) என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால், அந்தப் படம் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனினும், தற்போது சாந்தணுவை வைத்து புதிய ரொமாண்டிக் படம் ஒன்றை இயக்குகிறார்.

இதில், பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, பிராங்க் ராகுல், ராஜு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை சிவசுப்பிரமணியன் மற்றும் சரவணபிரியனுடன் இணைந்து ரவிந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார். தரன் படத்திற்கு இசையமைக்கிறார்.

முதல் இரவைப் பற்றியும், அதில் நடக்கும் சடங்கு முறைகளைப் பற்றியும் விவரிக்கும் வகையில் இந்தப் படம் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இப்படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக பாக்யராஜ் நடிப்பில் வந்த முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைங்காய் காமெடி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

அப்பா பாக்யராஜுக்கு முருங்கைங்காய் என்றால் மகன் சாந்தணுவிற்கு முதல் இரவு சீன் ரொம்பவே ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3