Home Blog Page 217

இதெல்லாம் இன்று நடக்கும்: விஜய் மீது அதிக எதிர்பார்ப்பு!

0
Vijay Speech at Master Audio Launch

Vijay Seech; இதெல்லாம் இன்று நடக்கும்: விஜய் மீது அதிக எதிர்பார்ப்பு! தனது வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை லீலா பேலஸில் நடக்க இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட மாபெரும் படம் மாஸ்டர்.

முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்கும் கல்விமுறை ஊழல், நீட் மாணவி அனிதா ஆகியவற்றை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் நெய்வேலி படப்பிடிப்பின் போது விஜய்யை அழைத்து வந்து வருமான வரித்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

வீட்டில் ஒன்றுமில்லை என்று தெரிந்து பின்னர் வருமான வரித்துறையினர் சிம்பிளாக சாரி என்று சொல்லிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு படப்பிடிப்புக்கு சென்ற விஜய்யைப் பார்க்க லட்சக்கணக்கான ரசிகர்கள் திரட்டனர்.

படப்பிடிப்பும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, விஜய்யும் சுற்றுலாவிற்காக வெளிநாடு சென்றார். மறுபடியும் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை என்று தகவல் வந்தது.

அதற்கு, இல்லை இல்லை, கடந்த முறை நடந்த சோதனையின் போது சில அறைகள், லாக்கர்கள் ஆகியவற்றிற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. அதனை நீக்குவதற்காகத்தான் சென்றோம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 5 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 7 ஆம் தேதி பாஜக ஆதரவாளர்கள் நெய்வேலி படப்பிடிப்பின் போது போராட்டம் நடத்தினர்.

பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியானது. இதில், வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போகும்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விஜய் அந்த குட்டி ஸ்டோரி பாடலை பாடியிருப்பார்.

நேற்று முன் தினம் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் என்று தகவல். இதையடுத்து, வாத்தி ரெய்டு பாடல் வெளியானது.

வெளியான ஒவ்வொரு பாடலுக்கும், விஜய்க்கு நடந்த பிரச்சனையை மையப்படுத்தி, தொடர்புபடுத்தி வந்தது போன்று தெரிகிறது.

ஆதலால், இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் இது குறித்து ஏதேனும் கருத்து தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது.

என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகள் எல்லோருக்கும் வணக்கம்… இந்த டயலாக் கண்டிப்பாக இருக்கும்

தயாரிப்பாளர், அனிருத், மாளவிகா மோகனன், சாந்தனு, பாடலாசிரியர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்று படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தோ அல்லது தாக்கியோ சில கருத்துக்கள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், வசனமும் அரசியல் பிரபலங்களிடையே விமர்சனத்தை முன் வைக்கும் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் நக்கல், நய்யாண்டி பேச்சு…

கொரோனா வைரஸ் குறித்து விஜய் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…..விஜய்யின் ஒவ்வொரு பேச்சையும் கேட்பதற்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அரசியல் தலைவர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பாகவும், கொஞ்சம் மெர்சலாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ கொஞ்சம் சேம்பிள் வீடியோ….இதற்கு முன்னதாக விஜய் சர்கார், பிகில் இசை வெளியீட்டில் பேசிய வீடியோக்கள் உங்களுக்காக…..

3

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு இவங்கலாம் வர்றாங்கலா?

0
Master Audio Launch

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு இவங்கலாம் வர்றாங்கலா? யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், அனிருத் ஆகியோருடன் படக்குழுவினர் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா இன்று நடக்க இருக்கிறது. சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்கும் இந்நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி நிறுவனம் தங்களது சேனலில் நேரலை செய்கிறது.

மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பிரிகிதா, கௌரி கிஷான், சாந்தணு ஆகியோர் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், அனிருத், கானா பாலசந்தர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என்பதால் அதற்கு முன்னதாக 9 ஆம் தேதி மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இன்று நடக்கும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் இவர்கள் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற புதிய தகவல் வெளியாகி வருகிறது.

அதன்படி, மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, அவரது குடும்பத்தினர், விஜய், விஜய் குடும்பத்தினர், விஜய் சேதுபதி, அனிருத், யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், மாளவிகா மோகனன், சாந்தணு, ஆண்ட்ரியா, சஞ்சீவ், ரம்யா சுப்பிரமணியம், நாசர்,லோகேஷ் கனகராஜ், ஸ்ரீமன், பிரேம், அழகம் பெருமாள் ஆகியோருடன் பத்திரிக்கையாளர்கள், சன் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை நடிகர் சிவா மற்றும் ரம்யா சுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்து வழங்க வாய்ப்பிருக்கிறது. அப்படியில்லை என்றால், டிடி, மாகாபா ஆனந்த், பிரியங்கா, அர்ச்சனா, தியா, நக்‌ஷத்ரா, விக்னேஷ்காந்த் ஆகியோரில் யாரேனும் இருவர் தொகுத்து வழங்க வாய்ப்பிருக்கிறது.

இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள டிராக் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தருதல கதறுனா, அந்த கண்ண பாத்தாக்கா, ஆகிய பாடல்கள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

அந்த கண்ண பாத்தாக்கா பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது குரலில் பாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இந்தப் பாடலுக்கு பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

#Yuvan, #ThalapathyVijay, #MasterTrackList, #MasterAudioLaunch, #TharudhalaKadharuna ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

3

17 வருடத்திற்குப் பிறகு யுவன் விஜய் காம்போவில் அந்த கண்ண பாத்தாக்க பாடல்!

0
Andha Kanna Paathaakaa

Yuvan Shankar Raja; 17 வருடத்திற்குப் பிறகு யுவன் – விஜய் காம்பினேஷனில் வரும் பாடல்! மாஸ்டர் படத்தில் யுவன் சங்கர் ராஜா அந்த கண்ண பாத்தாக்க (Andha Kanna Paathaakaa) என்ற பாடலை பாடியுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் Master படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு முன்னதாக மாஸ்டர் இசை வெளியீட்டு விழா (Master Audio Launch) சென்னை லீலா பேலஸ் (The Leela Palace Chennai) ஹோட்டலில் மிகவும் எளிமையாக நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், மாஸ்டர் டிராக் லிஸ்ட் Master Track List தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

அதில் ஒன்று யுவன் சங்கர் ராஜா Yuvan Shankar Raja குரலில் வரும் அந்த கண்ண பாத்தாக்க Andha Kanna Paathaakaa….என்ற பாடல்தான். இந்தப் பாடலுக்கு விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

தற்போது டுவிட்டரில், யுவன் சங்கர் ராஜாவிற்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு யுவன் விஜய் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

இதற்கு முன்னதாக புதிய கீதை (Pudhiya Geethai) படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார்.

அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அண்ணாமலை தம்பி இங்கு ஆடவந்தேன் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

அந்தப் பாடலை டுவிட்டரில் பதிவிட்டு, புதிய கீதை படத்திற்குப் பிறகு யுவன் சங்கர் மாஸ்டர் படத்தில் இணைந்துள்ளார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக #Yuvan, #ThalapathyVijay, #MasterTrackList, #MasterAudioLaunch, #TharudhalaKadharuna ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள தருதல கதறுனா என்ற பாடலை ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி மீம்ஸும் உருவாக்கியுள்ளனர்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், அனிருத், கானா பாலசந்தர் ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

Master Track List; மாஸ்டர் டிராக் லிஸ்ட் வெளியீடு: மொத்தம் 8 பாடல்!

0
Master Track List

Master Track List; மாஸ்டர் டிராக் லிஸ்ட் வெளியீடு! மாஸ்டர் படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா (Master Audio Lauch) இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் எளிமையாக நடக்க இருக்கிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக மாஸ்டர் டிராக் லிஸ்ட் (Master Track List) வெளியாகியுள்ளது. அதில், மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் மாஸ்டர். கல்விமுறை, நீட் தேர்வு உள்ளிட்ட சில அம்சங்களை மையப்படுத்தி மாஸ்டர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. Master Track List

மாஸ்டர் படத்தில் நீட் மாணவி அனிதாவின் காட்சியும் இடம்பெற்றுள்ளது என்கிறது தகவல்.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடக்க இருக்கும் நிலையில், மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

முன்னதாக மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி லிரிக், வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிராக் லிஸ்ட்டில் Master Track List மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

மாஸ்டர் டிராக் லிஸ்ட் (Master Track List)

Master Track List 1: வாத்தி கம்மிங்

விஜய் கல்லூரிக்கு வரும் பாடல்தான் வாத்தி கம்மிங் பாடல். இதுதான் டிராக் லிஸ்ட்டில் முதல் பாடலாக அமைந்துள்ளது. கானா பாலசந்தர் இந்தப் பாடலை எழுதியுள்ளார். அனிருத், கானா பாலா இருவரும் பாடியுள்ளனர்.

Master Track List 2: அந்த கண்ண பாத்தாக்க..

விஜய் – மாளவிகா மோகனனின் ரொமான்ஸ் காட்சி பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவனுக்கு இந்தப் பாடலுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

Master Track List 3: குட்டி ஸ்டோரி

வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை மையப்படுத்தி விஜய் பாடும் பாடல். அருண்ராஜா காமராஜ் பாடலுக்கு பாடல் வரிகள் எழுத, தளபதி விஜய் தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார்.

Master Track List 4: கொயட் பண்ணுடா

வகுப்பில் மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது விஜய் பாடும் பாடலாக இருக்கலாம். விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுத, அனிருத் பாடியுள்ளார்.

Master Track List 5: மாஸ்டர் பீட்

இன்ஸ்ட்ரூமெண்டை பயன்படுத்தி பாடப்படும் மாஸ்டர் பீட் பாடல்

Master Track List 6: பொலக்கட்டும் பற பற

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் சண்டைக்காட்சியின் போது பாடப்படும் பாடலாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷ்ணு பாடல் வரிகள் எழுத, சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

Master Track List 7: தருதல கதறுனா

மாணவர்களை திட்டும் போது பாடப்படும் பாடலாக இருக்குமென்று கூறப்படுகிறது. விஷ்ணு பாடல் வரிகள் எழுத, சிபி வினீத் பாடியுள்ளார்.

Master Track List 8: வாத்தி ரெய்டு

கோபத்தோடு விஜய் சண்டை போடும் சண்டைக் காட்சி பாடல். இந்தப் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அறிவு பாடல் வரிகள் எழுத, அனிருத் பாடியுள்ளார். ரேப் வரிகளை அறிவு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ள நிலையில், #MasterTrackList என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

3

இசை வெளியீட்டு விழா அழைப்பிதழில் மாஸ்டர் டீசர்ட்!

0
Master Audio Launch Invitation

Master Audio Launch Invitation; இசை வெளியீட்டு விழா அழைப்பிதழில் மாஸ்டர் டிசர்ட்! இன்று மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் இசை வெளியீடு நடக்க இருக்கிறது.

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் மாஸ்டர் இசை வெளியீடு நடக்க இருக்கிறது.

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். உலகம் முழுவதும் ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து, விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தணு, சஞ்சீவ், ஆண்ட்ரியா, நாசர், அருண் தாஸ், ஸ்ரீமன், பிரேம், ரமேஷ் திலக், ரம்யா சுப்பிரமணியன், லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார், கௌரி கிஷான், பிரிகிதா ஆகியோர் என்று நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

அண்மையில், மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் ஆகிய படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 34 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாஸ்டர் மூன்றாவது சிங்கிள் டிராக் வாத்தி ரெய்டு பாடல் வெளியாகி வைரலானது.

இதையடுத்து, தற்போது உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பது மாஸ்டர் இசை வெளியீட்டிற்காக மட்டுமே.

ஆம், மாஸ்டர் இசை வெளியீட்டில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள், என்னென்ன பேசுவார்கள் குறிப்பாக நம்ம மாஸ்டர் விஜய் என்ன பேசுவார் என்பதை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விஜய் அரசியல் பற்றி பேசுவார் என்றும், தனது வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றியும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்கும் மாஸ்டர் இசை வெளியீட்டிற்கு குறுகிய நபர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் மீடியாவிற்கு அழைப்பிதழ் இல்லை என்றும், வெறும் பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்கிறது தகவல்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழில் மாஸ்டர் டீசர்ட், ஸ்மார்ட் கார்டு, மாஸ்டர் இசை வெளியிட்டு பாடல்கள் டிராக் ஆகியவை அடங்கிய ஒரு பெட்டகம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் டீசர்ட் ஆரஞ்சு கலரில் மாஸ்டர் என்று அச்சிடப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மாஸ்டர் டீசர்ட் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

மாஸ்டர் இசை வெளியீடு நடக்கும் லீலா பேலஸ் ஒரு பார்வை!

0
Master Auido Lauch Leela Palace

Master Audio Launch Leela Palace; மாஸ்டர் இசை வெளியீடு நடக்கும் லீலா பேலஸ் ஒரு பார்வை! மாஸ்டர் இசை வெளியீடு லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்க இருக்கிறது.

சென்னையில் உள்ள லீலா பேலஸ் (The Leela Palace) ஹோட்டலில் தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா எங்கு எப்போது நடக்கும் என்று கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதற்கான நேரம் வந்துவிட்டது.

இன்று மாலை 6.30 மணிக்கு அதுவும் சென்னையில் உள்ள புகழ்பெற்ற பிரமாண்டமான லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்க இருக்கிறது என்ற செய்தி கேட்டால் சும்மாவா இருப்பாங்க…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். கல்வி முறை, நீட் தேர்வு உள்ளிட்ட பல அம்சங்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார் என்கிறது தகவல். விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

மாஸ்டர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டிற்கு முன்னதாக வெளியாகி வசூல் வேட்டை நடத்த தயாராகியுள்ளார்.

இந்த நிலையில், இன்று மாஸ்டர் இசை வெளியீடு நடக்க இருக்கிறது. சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதனை சன் டிவி தங்களது சேனலில் நேரலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னதாக லீலா பேலஸ் எங்கிருக்கிறது? அதில் உள்ள சிறப்பம்சம் என்ன? என்று பார்ப்போம்…

சென்னை மெரினா கடற்கரை தெற்குப் பகுதி முடிவான எம்.ஆர்.சி நகரில் (ஆர்.ஏ.புரம்) அமைந்துள்ளது. கடலை முகப்பாக கொண்டு அமைக்கப்பட்ட முதல் ஹோட்டல் லீலா பேலஸ்.

கடந்த 2013ன் ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்ட இந்த ஹோட்டலுக்கு செலவு மட்டும் 8000 மில்லியனுக்கும் அதிகமாம்.

16 அடுக்குமாடி கொண்ட இந்த ஹோட்டலில் மொத்தம் 338 அறைகள் இருக்கிறது. அதோடு, கிட்டத்தட்ட 2200 ச.மீ பரப்பில் விருந்து, கூட்டம் நடைபெறக்கூடிய அரங்க வசதியும் இருக்கிறது.

இந்தப் பகுதியில் தான் மாஸ்டர் இசை வெளியீடு நடக்க இருக்கிறது என்று கூறப்படுகிறது.

பஸ் ரூட்

கோயம்பேட்டிலிருந்து 114 CUT, 15B, 521H, 15F, PP21

செனாய்நகரிலிருந்து 15B, 109,

அண்ணா நகர் டவர் பகுதியிலிருந்து 15L, PP21,

சென்னை பார்க்கிலிருந்து 17D, 15B, 521H,

மயிலாப்பூர் திருவல்லிக்கேணியிலிந்து 102, 109, 151, 587,6A, B21, 109C, 21K, L21, PP21

தாம்பரத்திலிருந்து 12C, 21D,

தியாகராயா நகரிலிருந்து 5B ஆகிய பகுதிகளிலிருந்து லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வரலாம்.

மாஸ்டர் இசை வெளியீடு நடக்க இருப்பதால், அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி என்று கூறப்படுகிறது.

நேற்று மாஸ்டர் படத்தின் மூன்றாவது சிங்கிள் டிராக் வாத்தி ரெய்டு பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

3

கடத்தலா? அது எப்போ நடந்தது – ட்விஸ்ட் கொடுத்த இளமதி | Tamil News

0
ட்விஸ்ட் கொடுத்த இளமதி

இளமதி கடத்தப்பட்டார் எனக் கூறப்பட்ட நிலையில் தன்னை யாரும் கடத்தவில்லை தானகவே காரில் ஏறிச்சென்றதாக நீதிமன்றத்தில் ட்விஸ்ட் கொடுத்த இளமதி.

இளமதி – செல்வன் திருமணம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தர்மாபுரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்வன் (26). அதே கிராமத்தை சேர்ந்த இளமதி (23) என்ற பெண்ணை காதலித்துள்ளார்.

திராவிட விடுதலைக் கழகத்தின் உறுப்பினர் செல்வன் என்பதால் இவர்களுடைய திருமணம் சேலம், கவலாண்டியூரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்று உள்ளது.

கவலாண்டியூர் தலைமை உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இளமதி கடத்தல்

பாமக மற்றும் கொங்கு அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனை தாக்கி, காரில் கடத்தி செல்வன்-இளமதி இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லக் கூறியுள்ளனர்.

செல்வன்-இளமதி தம்பதியினர் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் செல்வனை ஒரு காரிலும், இளமதியை ஒரு காரிலும் ஏற்றிச்சென்றுள்ளனர்.

இந்த காட்சி அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இருப்பினும் போலீசார் நான்கு நாட்களாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமூக வலைதளப்போர்

திராவிடர் விடுதலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இளமதி திருமணத்தின் போது,  உரசிக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இது திரௌபதி படத்தில் வரும் நாடகக்காதல்.

இன்னொருவர் மனைவியுடன் இப்படிதான் உரசிக்கொண்டு இருப்பீர்களா? இந்த நாடகக் காதலில் இருந்து இளமதியை காப்பற்றி உள்ளோம்.

அவரை யாரும் கடத்தவில்லை என ஒரு தரப்பினர் வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்ற தளங்களில் சேர் செய்து வந்தனர்.

மற்றொரு தரப்பினர் அவர் இளமைதிக்கு தந்தை போன்றவர். இப்படி தரம் தாழ்த்தி அபாண்டமாக பேசவேண்டும். உங்கள் ஜாதி வெறியை கட்ட இது தான் நேரமா? என மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டனர்.

ட்விஸ்ட் கொடுத்த இளமதி

இந்நிலையில் மேட்டூர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜரானார். அங்கிருந்து நிதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டார்.

நிதிமன்றத்தில் தன்னை யாரும் கடத்தவில்லை. தானே விருப்பப்பட்டு காரில் ஏறிச் சென்றேன் எனத் தெரிவித்துள்ளார். அதேபோன்று செல்வனை விருப்பப்பட்டே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இளமதியை ஈரோடு அரசுக் காப்பகத்தில் வைக்குமாறு நிதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இன்று மீண்டும் இளமதி பெற்றோருடன் செல்வதில் உறுதியாக இருந்தால் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

இந்நிலையில் திராவிடர் கழகத்தினர் இளமதியை நேரில் சந்தித்து பேச முயற்சி செய்தனர். ஆனால் இளமதி யாருடனும் பேச மறுத்துவிட்டார்.

இளவரசன் போன்று, செல்வனும் உயிரிழப்பார் என இளமதி மிரட்டப்பட்டாரா? அல்லது உண்மையில் அங்கு நடந்த நாடக்காதலை இளமதி புரிந்துகொண்டாரா? என பல கேள்விகள் எழுந்துள்ளது.

நாடகக்காதல் என்றால் ஏன் செல்வனை பற்றி நிதிமன்றத்தில் இளமதி கூறவில்லை. தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்யப்பட்டது எனக் கூறினார்.

திராவிடர் கழகத்தினர் மீது வழக்கு பதிவு

சாதி மறுப்பு திருமணம் என்ற பெயரில் இளமதியை கடத்தியதாக கொளத்தூர் மணி மற்றும் செல்வன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

3

JFW Awards 2020: நேர்கொண்ட பார்வை ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு விருது!

0
JFW Awards 2020

JFW Awards 2020; ஸ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு (Shraddha Srinath) சிறந்த நடிகை விமர்சகருக்கான JFW Awards 2020 விருது வழங்கப்பட்டுள்ளது.

Nerkonda Paarvai; நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு சிறந்த நடிகை விமர்சகருக்கான JFW Awards 2020 வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் நேர்கொண்ட பார்வை.

முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி உருவான இப்படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே அமோக வரவேற்புப் பெற்றார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிக் பாஸ் அபிராமி, ஆண்ட்ரியா தைராங், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வலிமை படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு சிறந்த நடிகை விமர்சகருக்கான (Best Actress Critics) JFW Awards 2020 வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை விமர்சகருக்கான விருது பெற்ற ஸ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதே போன்று விஸ்வாசம் (Viswasam) படத்தில் அஜித் – நயன்தாராவின் மகளாக நடித்த நடிகை அனிகாவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான JFW Awards 2020 வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

3

குறித்த நேரத்தில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்

0
ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்

குறித்த நேரத்தில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும். கொரோனா வைரசால் போட்டிகள் தடைபடாது என ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி உறுதி செய்த நாளில் நிச்சயம் நடக்கும். இதில் மாற்றம் செய்ய வாய்ப்பேதும் இருக்காது எனக் கூறியுள்ளார்.

மேலும், பிரதமர் ஷின்சோ அபே அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறிய விவரங்கள் பின்வருமாறு:-

“கொரனோ வைரஸைக் கண்டு உலக நாடுகளும், அந்நாடுகளில் உள்ள துறைகள் எல்லாம் அச்சம் கொள்கின்றன. இதில் விளையாட்டுத் துறையும் விதி விலக்கல்ல.

ஆனாலும், இந்த கொரோனோ வைரஸைக் கண்டு பீதி கொள்ள வேண்டாம் என்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒத்திப்போட்டு நடத்தவோ அல்லது ரத்து செய்யும் எண்ணமோ கிடையாது என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை குறைந்தது 1 வருடத்திற்காவது ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

3

Ispade rajavum idhaya raaniyum: ‘இஸ்பேட் ராஜாவும் இதய இராணியும்’ படத்தின் ஒரு பார்வை!

0
Ispade rajavum idhaya raaniyum

Ispade rajavum idhaya raaniyum: ‘இஸ்பேட் ராஜாவும் இதய இராணியும்’ படத்தின் ஒரு பார்வை! இப்படம் வெளிவந்து ஒரு வருடமாகிறது.

Ispade rajavum idhaya raaniyum

ஒரு காதலை  அதிதமாக மிகைப்படுத்தியே நம் பெறும்பாலான சினிமாக்கள் உருவாகும் சூழல் இங்கு அதிகம்.

அப்படியொரு சினிமா சூழலில் காதலை பெரிதும் மிகைப்படுத்தாமல் ஒரு காதலை தற்காலத்திற்கேற்ப சொல்லியது, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

விஜய்சேதுபதி அவர்கள் நடித்த புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடிதான் இஸ்பேட் இராஜாவும் இதய இராணியும் படத்தையும் இயக்கினார்.

ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், ஷில்பா அவர்கள் கதாநாயகியாகவும் இப்படத்தில்  நடித்துள்ளனர்.

படத்திற்கு சாம் C.S இசையமைக்க கவின் ராஜ் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். மா.கா.பா ஆனந்த், பாலசரவணண், பொன்வன்னன் மற்றும் இன்னும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நிகழ்பவை:

கதைசொல்லிய முறையிலேயே திரைக்கதை ஆரம்பிக்க மக்களும் கதை கேட்க ஆர்வமாகிறார்கள். அக்கதைக்குள்தான் கெளதம் மற்றும் தாராவின் காதல் கதை நிகழ்கிறது.

வெறுமனே அது காதலாக நிகழவில்லை.நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் கெளதம். பணக்கார வீட்டு பெண் தாரா.

இவர்களுக்குள் நடக்கும் மோதலில் இருந்துதான் காதல் நிகழ்கிறது. சொல்வதற்கு பல சினிமா கதையில் நிகழ்வதுபோல தோன்றலாம். ஆனால், அங்குதான் தன் திரைக்கதையைப் பயன்படுத்தி மாறுபடுகிறார் இயக்குனர்.

மோதலில் இருந்து ஆரம்பித்த காதல் தேன்சுவையாக நிகழ்கிறது. உரையாடல்கள், சந்திப்புகள், காமம், காதல் என காதலுக்குண்டான அத்தனை நல்பரிணாமங்கள் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் கெளதமின் கடந்தகாலம் நிகழ்காலத்தையும் பாதித்து கொண்டிருப்பதை தாரா அறிகிறாள். அந்த கடந்தகாலத்தின் இழப்பையும் தன் காதலால் சரிக்கட்ட முயல்கிறாள்.

கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றாள். அந்த இழ்ப்பு என்பது கெளதமின் அம்மா. அம்மா இறக்கவில்லை, ஆனாலும் இவனுடன் இருக்கவில்லை. கெளதமை தாரா முழுவதுமாக தன் காதலால் ஆட்கொள்கிறாள்.

மாற்றம்:

நாம் காதலிக்கும் நபர் நம்மை தவிர்த்து மற்றவர்களிடம் சற்றே நெருங்கி பழகுதல் போல தோற்றமளித்தாலே நமக்கு போதுமானது. நமக்குள் இருக்கும் சந்தேக உணர்வையும் பயத்தையும் ஒருசேர உசுப்பிவிட.

குறிப்பாக ஆண்களுக்கு இவைகள் அதிதம் நிகழ்வதை நம்மால் காணமுடிகிறது. ஆண்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று நான் ஆண் என்ற கர்வத்தை தன் காதலிக்கும் பெண்ணின் மீது காட்ட பார்ப்பார்கள்.

இப்படியான ஒரு நிகழ்வு கெளதம் தாரா வாழ்விலும் நடக்கிறது. தாரா அப்படியெலல்லாம் எதுவும் நிகழவில்லை என்று முடிந்தவரை சமாதனப்படுத்த, கெளதமால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தாராவுக்கு கெளதம் மேலிருக்கும் நம்பிக்கை கெளதமிற்கு தாராவின் மேல் இல்லை அதே சமயம் தாராவும் தன் அம்மா போல் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவாளோ என்ற பயமும் கெளதமிடத்தில் இருந்தது.

மேலும், தாரா தன்னை ஒதுக்குவதாகவும் விட்டு விலகுவதாகவும் நினைத்த கெளதம் அவளை கொல்லச்சென்று பிறகு மனம்மாறி நிற்பதும் அழுவதும் படத்தின் உச்சம்.

“உயிருக்கு உயிரா நேசிச்ச ஒருத்தவங்கள எப்படி வெறுக்க முடியுது?””அன்பு எந்த புள்ளியில் வெறுப்பா மாறுகிறது”.

போன்ற கேள்விகளை நம்மிடத்தில் திரைப்படம் விட்டுச்செல்கிறது. நம்மை நாமே கேள்வி கேட்கும்படியாகத்தான் படம் நிறைவடைகிறது.

இம்மாதிரியான திரைப்படங்கள் இன்னும் நிறைய நம் தமிழ் சினிமாவிற்கு தேவைப்படுகிறது. இப்படியான திரைப்படத்திற்காக இயக்குனர் இரஞ்சித் ஜெயக்கொடி அவர்களுக்கு நன்றி!

இஸ்பேட் இராஜாவும் இதய இராணியும் திரைக்கு வந்து ஒரு வருடமாகிறது. படத்தை பார்க்க தவறியவர்கள், ஹாட்ஸ்டாரில் படத்தை இலவசமாக கண்டுகளிக்கலாம்.

3