Home Blog Page 254

28/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
28/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

28/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

உங்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது வலுவாக உள்ளது. இந்த நாள் மிகவும் மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். அலுவலக நண்பர்களோடு கொண்டாட்டங்களில் நட்பு பாராட்டுவீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவை என்ன என கூர்ந்து கவனிப்பது லாபத்தை அதிகப்படுத்தும். பெண்களுக்கு நகை, பொன், பொருள் சேரும் நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: காக்கி வண்ணம்

ரிஷபம் ராசிபலன்

ராசிநாதன் சுக்கிரன் உச்சத்தில் உள்ளதால் எந்தக்காரியம் ஆனாலும் வெற்றி குவியும். ஆடம்பர வாழ்க்கை மேல் மோகம் உண்டாகும்.

நீங்கள் ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறும் நாள். மிகவும் சுபிட்சமான நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: ரோஜா வண்ணம், அதிர்ஷ்ட எண்: 7

மிதுன ராசிபலன்

சந்திரன் மூன்றில் சஞ்சரிகின்றார். எனவே தைரியம், மன உறுதி ஆற்றல், அதிகரிக்கும். எந்த விதமான பயணங்களிலும் வெற்றி உண்டு.

காவல் துறையினரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். உடல்நலத்தில் சிறிது அக்கறை தேவை.

அதிர்ஷ்ட எண்: 3, அதிர்ஷ்ட நிறம்: தேன் வண்ணம்.

கடக ராசிபலன்

உங்களுக்குள் உள்ள உங்களுக்கே தெரியாத திறமைகள் வெளிப்படும் நாள். அந்த திறமைகள் மூலம் வெற்றிக்கனி ஈட்டுவீர்கள்.

உடல் நலத்தில் சிறது அக்கறை தேவை. போதை வஸ்த்துகளுக்கு ஆளாக நேரிடலாம். எனவே உடல் நலத்தை பேணி பாதுக்க முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர்சிகப்பு வண்ணம், அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் ராசிபலன்

சந்தோஷம் இருக்கும் அதே நேரம் ஏதோ சந்தேகம் நெஞ்சை உருத்திக் கொண்டே இருக்கும் நாள். வீண் சந்தேகங்கள் மனதில் வந்து ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கும்.

நடுநிலையான மனநிலை நிம்மதி தரும். வேலைப்பளு இருக்கும். திருமணப் பேச்சுக்கள் சுபமானதாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: பால்வெள்ளை, அதிர்ஷ்ட எண்: 6

கன்னி ராசிபலன் 

நல்ல நாளாகக் காணப்படுகிறது. வேண்டிய இடமாற்றம் கிட்டும் நாள். ப்ரொமோஷனுக்காக காத்திருத்தவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.

என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். வைரல் தொற்று ஏற்படலாம் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5

துலாம் ராசிபலன்

முழுக்க முழுக்க நல்ல நாளாகக் காணப்படுகிறது. உங்கள் பேச்சு சிலருக்கு கோபத்தையும், பொறாமையும் ஏற்படுத்தலாம். எதிலும் லாப முன்னேற்றம் உண்டு.

சிறு சிறு பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும் நாள். ஆன்லைன் தொழிலில் உங்களுக்கு சிறப்பானதாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம். அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிக ராசிபலன்

உங்களுடைய புகழுக்கு கலங்கம் நினைப்பவர்களை விட்டு தூரச்செல்லுங்கள். அவர்களைத் ஒதுக்கி வைப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகும். தகாத தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிக்கல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண்: 1

தனுசு ராசிபலன்

இது உங்களுக்கு மிகவும் பாக்யமான நாள். அயல் தேசத்திலிருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்து சேரும்.

சந்தோஷம் நிறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. பணியிடங்களில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5

மகரம் ராசிபலன் 

எதிலும் பொறுமையும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது. வார்த்தையைப் பயன்படுத்தும்போது மிக கவனம் தேவை.

கூடுதல் குறையாக தவறாகப் பேசி விடக் கூடும். பயணத்தை தவிர்ப்பது நல்லது. மின்சார உபகரணங்களைக் கையாள்கையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை வண்ணம், எண் : 6

கும்ப ராசிபலன்

வெளி வட்டாரத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கூடும் நாள். குடும்ப ரகசியங்களைப் பாதுகாக்க வேண்டிய நாள். யவரை நம்பியும் ரகசியங்களைப் பகிரக் கூடாது. வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : பவள வண்ணம், அதிர்ஷ்ட எண்: 9

மீனம் ராசிபலன் 

உங்கள் சிந்தனைகளை, ஐடியாக்களை சக பணியாளர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்கள் ஐடியாக்களை அவர்கள் பயன்படுத்தி வளர்ச்சியடைய வாய்ப்பு உண்டு.

அதிஷ்ட நிறம்: சிவப்பு, அதிஷ்ட என்ன: 5

28/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

இறைவனுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை ஏன் படைக்கிறோம்?

0
இறைவனுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை ஏன் படைக்கிறோம்?

இறைவனுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை ஏன் படைக்கிறோம்? அதில் மறைந்துள்ள உண்மை என்ன? ஆன்மீக செய்திகள். spiritual news in tamil.

இறைவனுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை ஏன் படைக்கிறோம்?

இறைவனுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை ஏன் படைக்கிறோம்?

நாம் இறைவனை காண கோயில்களுக்கு செல்லும் போதும், வீட்டில் பூஜைகள் செய்யும் போதும் இறைவனுக்கு நைவேத்தியம், இனிப்பு பதார்தங்கள், பழவகைகள் படைக்கிறோம்.

எத்தனை பொருட்களை சமர்பித்தாலும் அதில் தேங்காய் வாழைப்பழம், வெற்றிலை மற்றும் பாக்கு இல்லாது நாம் செய்யும் பூஜை நிறைவுறாது.

அது ஏன் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு கட்டாயம் வைக்க வேண்டும்?

அதில் என்ன தாத்பர்யம் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். அனைவரும் வைக்கின்றனர் நாமும் வைக்கிறோம் என்று செய்ய கூடாது.

தேங்காய் ஏன் உடைக்கிறோம்?

மனிதனின் மும்மலங்களை அகற்றினாலே போதும் வீடுபேறு அடைந்து விடலாம்.

அணவம், கன்மம், மாயை என்கின்ற மும்மலங்களே மனிதர்களை ஆட்டிபடைக்கின்றது. பலரும் அதில் சிக்கி தவிக்கின்றனர்.

இந்த மூன்றையும் அகற்றினால் இறைவனை உணரலாம் என்ற தாத்பர்யத்தை உணர்த்தவே தேங்காய் உடைக்கப்படுகிறது.

ஆணவம் என்ற மட்டையை உறித்து, கன்மம் என்கிற நாரை அகற்றி, மாயை என்கிற ஓட்டை நீக்கினால் கிடைக்கும் பரிசுத்தமான வெண்மையான தேங்காயே இறைநிலை ஆகும். இதை உணர்த்தவே தேங்காய் உடைத்து சமர்பிக்கிறோம்.

மேலும், தேங்காயும் முழுமையாக மட்டையுடன் இருந்தால் தான் நடவு செய்ய இயலும். உடைத்து விட்டு சிரட்டையை மண்ணில் இட்டால் வளராது.

அதுப்போல ஆவணம், கன்மம், மாயை அகற்றினால் மறுபிறவி இல்லாமல் வீடுபேறு அடையலாம் என்பதை உணர்த்துகிறது.

வாழைப்பழம் ஏன் படைக்க வேண்டும்?

இறைவனுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை ஏன் படைக்கிறோம்?

எண்ணிலடங்கா பழவகைகள் இருப்பினும், விலை உயர்ந்த பழங்கள் இருப்பினும் இறைவனுக்கு வாழைப்பழம் தான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மா, பலா, வாழை என்கிற முக்கனி வகைகளில் வாழைக்கு தனி சிறப்பு உண்டு.

அனைத்து பழங்களும் விதைகளைக் கொண்டே இருக்கும். அந்த விதையை மண்ணில் போட்டால் மீண்டும் செடியாக அல்லது கொடியாக வளரும்.

ஆனால் வாழைப்பழத்தில் கருப்பு புள்ளி போல் விதைகள் இருக்கும் அதை பூமியில் இட்டால் அல்லது பழத்தை முழுமையாக புதைத்தாலும் மீண்டும் செடியாக வளராது.

அதுபோல மீண்டும் பிறவாத நிலை வேண்டும் என்கிற தாத்பர்யத்தை உணர்த்தவே வாழைப்பழத்தை படைக்கிறோம். தேங்காய் அழுகினால் அபசகுணமா?

தாம்பூலத்தின் சிறப்புகள்

இறைவனுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை ஏன் படைக்கிறோம்?

தாம்பூலம் எனப்படுகின்ற வெற்றிலையும் பாக்கும் எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் இருக்கும்.

வெற்றி+இலை = வெற்றிலை பெயரிலேயே உள்ளது போல் காரியங்கள் அனைத்தும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காவே வெற்றிலை படைக்கிறோம்.

இராமயணத்தில் இராமனின் இராவணனை கொன்ற வெற்றியைக் கூறிய அனுமனுக்கு சீதை அருகில் இருந்த வெற்றிலையைப் பறித்து ஆசீர்வாதம் செய்தார்.

எனவே தான் அனுமனுக்கு இன்றும் வெற்றிலை மாலை அணிவித்து வணங்குகிறோம்.

மேலும் வெற்றிலை துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஸ்வரூபமாகவும் கருதப்படுகிறது. நுனியில் லட்சுமியும், நடுவில் வாணியும், காம்பில் துர்கையும் உள்ளனர் என்பர்.

பாக்கு செல்வ வளத்தை தரும். இவை பலவிதமான நோய்களை அகற்றும். எனவே தான் தாம்பூலம் படைக்கிறோம்.

நம் முன்னோர்கள் பின்பற்றிய ஒவ்வோரு செயல்களுக்கு பின்னும் பல காரணங்கள் இருக்கும்.

அதை நாம் உணர்ந்தால் பல நன்மைகள் கிடைக்கும். இனியாவது இறை வழிபாட்டில் உள்ள தாத்பர்யங்களை உணர்ந்து செயலாற்றுவோம்.

3

IND vs NZ 2nd Test: நியூசிலாந்தை வீழ்த்த கோலி செய்ய வேண்டியது என்ன?

0
IND vs NZ 2nd Test நியூசிலாந்து vs இந்தியா கோலி செய்ய வேண்டியது என்ன?

IND vs NZ 2nd Test: நியூசிலாந்து vs இந்தியா இரண்டாவது டெஸ்ட். நியூசிலாந்தை வீழ்த்த கோலி செய்ய வேண்டியது என்ன? விளையாட்டுச்செய்திகள். sports news in tamil.

IND vs NZ 2nd Test (நியூசிலாந்து vs இந்தியா இரண்டாவது டெஸ்ட்)

பிப்.27 : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒய்ட்வாஷ் செய்தது.

இதற்கு பழித்தீர்க்கும் விதமாக ஒருநாள் தொடரில் இந்தியாவை 0-3  என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்தது நியூசிலாந்து.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிப்ரவரி 21-ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கி நான்கு நாளில் முடிவுக்கு வந்தது. இந்தியா படுதோல்வி அடைந்தது.

தொடர் வெற்றிகளைச் சந்தித்து வந்த இந்திய அணி நியூசிலாந்துக்கு சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போராட்டமில்லாமல் தோல்வி அடைந்தது.

கோலி பேட்டிங் சோகம்

கோலி நியூசிலாந்தில் தொடர்ந்து பேட்டிங் சொதப்பி வருகிறார். ஒருநாள் போட்டியிலும் இதே நிலைமை தான்.

முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சில் சேர்த்து வெறும் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதே நிலைமை இரண்டாவது டெஸ்டில் தொடர்ந்தால் தோல்வி தவிர வேறு ஒன்றுமில்லை.

பொறுப்பில்லாத ப்ர்த்வி ஷா

காயங்களில் இருந்து மீண்ட ப்ரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு பிறகு நியூசிலாந்து தொடரில் இடம் பிடித்தார்.

ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதில் ப்ர்த்வி ஷா வாய்ப்பு கிடைத்தது தொடக்க ஆட்டகாரராக களம் இறங்கினார்.

மூன்று ஆட்டங்களில் சொல்லிக் கொள்ளும்படி விளையாடாத ப்ர்த்வி ஷா வாய்ப்பு கிடைத்தும் வீணாக்கி கொண்டார்.

முதல் டெஸ்டில் மீண்டும் அவருக்குத் தொடக்க ஆட்டகாரர் வாய்ப்பு கிடைத்து களமிறங்கி 16 & 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

புஜாரா, ஹனுமன் விஹாரி, பந்த் போன்ற வீரர்கள் முதல் போட்டியில் என்ன பணி செய்தார்கள் என்பது சந்தேகமே.

அதுவும் புஜாரா 80 பந்தில் 11 ரன் எடுத்து டெஸ்ட் ரசிகர்களை கடுப்பாக்கினார். பந்த் வழக்கம் போல வந்த வழியில் நடையைக் கட்டினார்

மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் அருமையாக ஆடியதால் அணியில் இடம் பிடித்தார் ஹனுமன் விஹாரி.

ஆனால் பயிற்சி ஆட்டம் வேறு சர்வதேச ஆட்டம் வேறு என்று புரிந்து இருப்பார். முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து 22 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

திணறும் பும்ரா

மூன்று ஒரு நாள் போட்டியிலும் பும்ராவால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ரன்களையும் வாரி வழங்கினார்.

காயம் காரணமாக சில மாதங்கள் விளையாடாமல் இருந்து வந்தார். மீண்டும் நியூசிலாந்து தொடரில் இடம் பிடித்தார் பும்ரா.

முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 88 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

இந்திய பந்து வீச்சாளர்கள் சமியும் இதே நிலைமை தான். இந்திய பிட்ச்சில் அருமையாக பந்து வீசியவர்கள் நியூசிலாந்து மண்ணில் தடுமாறி வருகிறார்கள்.

ஆனால், இருபது ஒவர் கொண்ட ஐந்து ஆட்டத்திலும் அருமையாக பந்து வீசினார்கள் குறிப்பிடத்தக்கது.

இஷாந்த் ஷர்மா மற்றும் அஸ்வின் மட்டுமே அருமையாக வீசினார்கள். அதுவும் இஷாந்த் ஐந்து விக்கெட் வீழ்த்தியது இந்திய ரசிகர்கள் மனதில் சிறு சந்தோஷமாக அமைந்தது.
கோலி முதல் போட்டியில் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிறக்க வேண்டும், ஹனுமன் விஹாரிக்கு பதில் ஜடேஜாவை அணியில் சேர்ந்திருக்க வேண்டும்.

அஸ்வின் கூட்டணியில்லாமல் பந்துவீசியது கொஞ்சம் சிரமமாகவே இருப்பது அவரது பந்துவீச்சில் தெரிந்தது.

கோலி செய்ய வேண்டியது என்ன?

அடுத்த போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கலாம். கே.எல்.ராகுல் இந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கியிருக்கலாம். கடந்த வருடமாகவே நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார்.

ரோகித் இல்லாதது அணிக்கு பின்னடைவு என்பது ஒருநாள் தொடர் மற்றும் முதல் டெஸ்டில் தெரிந்தது. இந்தியா தோல்வியும் அடைந்தது.

நியூசிலாந்து அணியை 225 ரன்களுக்கு 8 விக்கெட் வீழ்த்திய இந்திய அணி டைல் எண்டர்களில் ரன்கள் சேர்க்க விட்டனர்.

நியூசிலாந்தும் 348 ரன்கள் குவித்தது. அதுவே இந்தியத் தோல்விக்கு காரணம் என்று கூட சொல்லலாம். ரிவ்யூவை கோலி கேட்கும் போது பொறுமை கொள்ளலாம்.

ஆக்ரோஷமான கோலியை நியூசிலாந்தில் காண முடியவில்லை. தோனியிடம் இருந்து மாறுபட்ட கேப்டன்சியை கொண்ட கோலி நியூசிலாந்தில் தோல்வி அடைவது ரசிகர்களிடம் வருத்தமாகவே உள்ளது.

இரண்டாவது டெஸ்டில் மாற்றம் தந்தால் மட்டுமே வெற்றியை நியூசிலாந்திடம் பறிக்க முடியும்.

3

ரஜினி அஜித் விஜய்: தேசிய விருது எப்போது கிடைக்கும்.

0
ரஜினி அஜித் விஜய் ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை cinema news in tamil சினிமா செய்திகள்

ரஜினி அஜித் விஜய்: தேசிய விருது எப்போது கிடைக்கும். ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? சினிமா செய்திகள். cinema news in tamil.

தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள்

ரஜினி, அஜித், விஜய் மூவருக்கும் எப்போது தேசிய விருது கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் 40 வருடமாக நடித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 25 வருடத்திற்கு மேலாக நடித்து வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் அவர்கள்.

தமிழில் முதன்மையாகவும் சிறந்த நடிகராகவும் மூவரும் இருந்து வருகிறார்கள். ஆனால், இவர்களின் நடிப்புக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?

ரசிகர்களுக்கான நடிப்பு

நீங்கள் என்னை பார்த்து சொல்லலாம், விருதுக்காக எங்கள் தலைவர், தல, தளபதி நடிக்கவில்லை ரசிகர்களுக்கு மட்டுமே நடித்து வருகிறார்கள் என்று.

நீங்க சற்று கவனித்துப் பார்த்தால் மாஸான படங்களைத் தேர்வு செய்து ஒரு வட்டத்திற்குள் சுற்றி வருகிறார்கள்.

ஓப்பனிங் பாடல், கதைக்கு தேவையில்லாத முன்னனி நடிகை, காமெடியன், இறுதியில் நடிகரிடம் சாகும்  வில்லன்கள் இது மட்டுமே மூவரின் படத்தில் இடம் பெறுகிறது.

படம் சலிப்பில்லாமல் மாஸாகவும் செல்கிறது. இன்னும் சில காலங்களில் நமக்கு அது வெறுப்பு ஆகிவிடும்.

உண்மையான ரசிகன் என்றும் வெறுக்க மாட்டான் என்று நீங்கள் செல்லலாம் ஆனால் நான் செல்வது கதைகளை மட்டும்.

சிறந்த படங்கள்

ரஜினி சிறந்த நடிப்பிற்கு ஆறிலிருந்து அறுபதுவரை, முள்ளும் மலரும், ராகவேந்திரா, கபாலி, தளபதி, தம்பிக்கு எந்த ஊர் போன்ற படங்களே பேசும்.

அஜித் அவருக்கு முகவரி, கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், காதல் கோட்டை, கிரீடம், வாலி, ஆனந்த பூங்காற்றே படங்கள் சிறந்த படங்களாக அமைந்தது.

விஜய்க்கு கத்தி, துப்பாக்கி, நண்பன், குஷி, என்றென்றும், காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இவரின் நடிப்பை பேசும்.

ஆனால் சமீப காலமாகவே இவர்கள் கதைத் தேர்வில் சொதப்புகிறார்கள் போன்று தோன்றுகிறது. அவர்கள் கதை அம்சம் கொண்ட எதார்த்த படத்தில் நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மாஸாகவே நடித்து வருகிறார்கள்.

குறைந்த பட்ஜெட் படத்தில் நடிக்கவும் யோசிக்கிறார்கள். காரணம் இவர்களைச் சுற்றி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வியாபாரம் நடக்கிறது.

ஆனால் மூவரும் இளம் மற்றும் புதுமுக இயக்குனர்களுடன் பணியாற்ற முன்வந்து இருக்கிறார்கள் என்பது பெருமை கொள்ளும் விஷயமே.

நடிப்பிற்கு முக்கியத்துவம்

தனுஷ், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் கமர்ஷியல் படத்தில் இருந்து என்றோ வெளிவந்து நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்து வருகிறார்கள்.

ஆனால் அவர்களும் பெரிய நடிகரைப் பார்த்து இடை இடையில் கமர்ஷியல் படம் கொடுத்து வாங்கியும் கட்டிக் கொள்கிறார்கள்.

வியாபாரம் முக்கியம் தான். ஆனால், கதைகளமும் முக்கியம். நடிகருக்கு மாஸ் இல்லாத எதார்த்த நடிகராகவும் தன்னை மக்கள் மத்தியில் உருவாக்கி கொள்ளவும் வேண்டும்.

இவர்கள் மூவரும் சமீபகாலமாக படத்தில் பார்த்தால் சராசரி மற்றும் மிடில் கிளஸ் குடும்ப நடிகராக நடிக்கவே இல்லை.

அதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே இவர்களுக்கு மட்டுமில்லை இவர்கள் படத்துக்கும் அதில் பணியாற்றிய யாருக்காவது ஒருவருக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கும்.

அதிக பட்ஜெட் படமாக இருந்தாலும் அமீர்கான் படங்கள் டங்கல், பி.கே போன்ற படங்களைப் போல் தேர்வு செய்து நடிக்கலாம்.

ஆனால் மூவருமே மிகவும் அருமையான நடிகர்கள் மற்றுமில்லை நல்ல மனிதர்களும் கூட. தன்னை தவறாக பேசுபவர்களை கூட பெருமையாக பேசும் மனம் கொண்டவர்கள்.

இவரது ரசிகர்கள் மாறி மாறி பெருமையாக பேசாமல் கேலி செய்து ட்விட்டரில் ட்ரண்ட் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அது அவர்களுக்கு மட்டுமில்லை அந்த நடிகருக்கும் தலைகுனிவு ஏற்படும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

இவர்களைக் குறை கூறுவதற்கு இந்த பதிவு இல்லை, இவர்களும் வாங்கலாமே என்ற நல்லெண்ணத்தில் தான் இந்த பதிவு.

3

WWCT20I NZw vs INDw: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

0
WWCT20I NZw vs INDw அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

WWCT20I NZw vs INDw: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா. மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை வீழ்த்தியது. விளையாட்டுச்செய்திகள்.

WWCT20I NZw vs INDw

பிப்.27: 7-வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது.

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும், பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது

இன்று பிரிவு ‘ஏ’ வில் நடைபெற்ற 9 வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு

இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாஃபாலி மற்றும் மந்தனா களமிறங்கினர். கடந்த இரு ஆட்டங்களில் அதிரடியாக ஆடிய ஷாஃபாலி ஷர்மா இந்த ஆட்த்திலும் அதிரடி காட்டினார்.

மகளிர் அணியின் சேவாக் என்று கூட சொல்லும் அளவுக்கு ஆடினார். 34 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார்.

மந்தனா 11, பாட்டியா 23, ராதா யாதவ் 14, ரோட்ரிக்ஸ் மற்றும் ஷிகா பாண்டே தலா 10 ரன்களும் சேர்த்தனர். இந்தியா இருபது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது.

நியூசிலாந்து தரப்பில் கேர் மற்றும் ரோஸ்மேரி தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர், இந்திய அணி கூட்டணி அமைக்க தவறியது.

களத்தில் நீண்ட நேரம் வீராங்கனைகள் விளையாட தவறியது அணியில் ஸ்கோர் அதிகரிக்காமல் போனதுக்கு காரணமாக அமைந்தது.

தொடரும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஃபார்ம் அவுட் ஆட்டங்கள்

134 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ளவும் ரன் சேர்க்கவும் திணறினார்கள்.

கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் தேவை ஆட்டம் இந்தியா கையில் இருந்தது 19-வது ஓவரை பூனம் யாதவ் வீசி 18 ரன்கள் வாரிவழங்கினார்.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது, ஷிகா சர்மா வீசிய முதல் பந்திலும் ஐந்தாவது பந்திலும் பவுண்டரி அடிக்க கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவை என்ற போது நியூசிலாந்தின் அமிலிய கேர் அடித்த பந்தில் காலில் பட்டு ஜேன்ஸன் ரன் அவுட் ஆனார்.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து ஆறு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக கேர் 34, மார்டின் 25, கீரின் 24 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய தரப்பில் தீப்தி, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி, பூனம் யாதவ், ராதா யாதவ் அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்று இந்த உலககோப்பையில் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்த மூன்று வெற்றிகளும் பந்துவீச்சாளர்களுக்கே சேரும். மிகவும் அருமையாக இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து வீசினார்கள்.

மூன்று ஆட்டங்களிலும் இந்திய முதலில் பேட் செய்து குறைந்த ரன்கள் எடுத்து வெற்றியை பெற்று வருகிறது.

ஆட்டநாயகன் விருது தொடர்ந்து இரண்டவது முறையாக ஷாஃபாலி ஷர்மா வென்றார். அடுத்த ஆட்டத்தில் வருகிற 29-ஆம் தேதி மெல்போர்னில் இலங்கையை எதிர்கொள்கிறது.

மகளிர் உலககோப்பை 2020 புள்ளி பட்டியல்

பிரிவு ஏ

TEAM  P    W    L    P
IND   :   3     3     0   6
NZ    :   2     1     1   2
AUS  :   2     1     1   2
SL     :   2     0     2   0
BAN  :   1     0     1   0

பிரிவு  பி

TEAM   P    W     L    P
ENG   :   2     1     1    4
PAK    :   1     1     0    2
RSA    :   1     1     1    2
WI       :   2     1     1    0
THAI   :   2     0     2    0

3

SLvsWI 2nd ODI; தொடரை வென்றது இலங்கை அணி

0
SLvsWI 2nd ODI
Sri Lankan cricketer Wanindu Hasaranga celebrates after scoring the winning runs as West Indies cricket captain Kieron Pollard reacts during the 1st One Day International cricket match between Sri Lanka and West Indies at SSC international cricket ground, Colombo, Sri Lanka. Saturday 22 February 2020 (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

SLvsWI 2nd ODI; தொடரை வென்றது இலங்கை அணி. SLvsWI 2nd ODI ஸ்ரீ லங்கா சிறப்பான பேட்டிங், மேற்கு இந்திய தீவுகள் அணி சொதப்பல்

பிப்.26 : இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கு இந்திய தீவுகள் அணி மூன்று ஒருநாள் மறறும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.  அதன்படி முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

SLvsWI 2nd ODI ஸ்ரீ லங்கா சிறப்பான பேட்டிங் 

இரண்டாவது போட்டி இன்று ஹம்பாந்தோட்டாவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 345ரன்கள் குவித்தது, இலங்கை அணியில் அவிஷ்கா பெர்னாண்டோ 127ரன்களும், குசால் மென்டிஸ் 119 ரன்களும் குவித்தனர். மேற்கு இந்திய அணி தரப்பில் காட்ரேல் 4விக்கெட்டும் அல்சரி ஜோசப் 3விக்கெட்டும் வீழ்த்தினர்.

மேற்கு இந்திய தீவுகள் அணி சொதப்பல் 

346ரன்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மேற்கு இந்திய தீவுகள் அணி நல்ல தொடக்கத்துடன் முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர்.

முதல் விக்கெட் விழுந்தவுடன் மேற்கு இந்திய தீவுகள் அணி விக்கெட்டுகள் சரிய தொடங்கின. 39.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டும் விழுந்து 181ரன்கள் மட்டுமே எடுத்து 161 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது.

மேற்கு இந்திய தீவு அணியில் விக்கெட் கீப்பர் சாய் ஹோப் மட்டுமே சமீப காலமாக நன்றாக ஆடி வருகிறார். வேறு யாரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடுவதே இல்லை.

கடந்த சில வருடங்களாகவே மேற்கு இந்திய தீவு அணி ஒருநாள் போட்டியில் வெற்றி பெரும் அளவுக்கு விளையாட தவறி வருகிறது.

இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இரண்டு போட்டியில் தோற்று தொடரை இழந்தது.

ஆட்டநாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோ பெற்றார்.
மேற்கு இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி பெரும் மிகப்பெரிய வெற்றியாகும்.

இதற்கு முன்பு 2007 ஆம் ஆண்டு புரேவிடன்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் 113ரன்களுக்கு வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஒருநாள் போட்டி பல்லிக்கல்லே வில் இந்திய நேரப்படி மதியம் 2.30மணிக்கு தொடங்கிறது.

3

வடகிழக்கு டெல்லி கலவரம் – துணை ராணுவம் குவிப்பு

0
வடகிழக்கு டெல்லி கலவரம் - துணை ராணுவம் குவிப்பு

வடகிழக்கு டெல்லி கலவரம் – துணை ராணுவம் குவிப்பு. குடியுரிமை சட்டத்திற்கு அதரவு, எதிர்ப்பு தெரிவித்து இரு மதங்களுக்கு இடையே சண்டை மூண்டுள்ளது.

இரு மதங்களுக்கு இடையே சண்டை

இரு மதங்களுக்கு இடையே சண்டைகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் சட்டதிருத்தை ஆதரிப்பவர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் பெரும் வன்முறை ஏற்பட்டு கலவரமாக மாறியது.

வடகிழக்கு டெல்லி கலவரம் மூலம் இதுவரை 18  பேர் பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை:

இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய வன்முறை தற்போதுவரை தொடர்ந்து வருவதாக தெரிகிறது.  இந்த வன்முறை சம்பவத்தில் பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வன்முறை தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை முடிவில், கூடுதல் காவல்துறையினரை குவிக்க முடிவெடுத்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருந்தாலும் வன்முறைகள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் அப்பாவி மக்களிடையே பதற்றமும் அச்சமும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த CBSE தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடிய தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் தொடர்வதற்கு காரணம் நேற்று முன்தினம் நடைபெற்ற வன்முறை நிகழ்வுகள் குறித்த விடியோக்கள் இணையதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டது.

மேலும், சில விஷமிகளால் வதந்திகள் பரப்பப்பட்டு வருவதும் ஒரு காரணமாகும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை ராணுவம் குவிப்பு

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் வன்முறையை கட்டுப்படுத்த 35 துணை ராணுவப்படைகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சிறப்பு படை, குற்றப்பிரிவு மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

முன்னதாக டெல்லி முதல்வர் டெல்லி சட்ட ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய அரசு களமிறங்கியுள்ளது .

நேற்று அதிகாலை மீண்டும் வன்முறை மவுஜ்புர் மற்றும் பிரம்மபுரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக்கு டெல்லி சட்டமன்றம் நேற்று கூடி வன்முறையைக் கண்டித்துள்ளது.

எனினும் பிரச்சினை முடியாத வகையில் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டம்:

அண்மையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம், குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு எதிராக இருப்பதாக கூறி சட்டம் நிறைவேறிய நாள் முதல் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றனர்.

குறிப்பாக டெல்லி தமிழகம் மேற்கு வங்காளம் கேரளா போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஷாகீன் பா பகுதியில் போராட்டக்காரர்கள் ஒன்றாக குழுமி தொடர்ந்து போராட்டங்களை செய்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தினை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

என்னதான் பிரச்சினை

குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தில் அண்டை நாடுகளான பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மத ரீதியாக பாதிக்கப்பட்டு அகதிகளாக இந்தியாவுக்கு வருகை புரிபவர்களில், இஸ்லாமியர்களை தவிர மற்ற மதத்தினருக்கு இந்தியக் குடியுரிமை நிபந்தனைகளுடன் வழங்கப்படும் என்பதாகும்.

இதனாலேயே இதுகுறித்த சட்டம் இன்று வரை சர்ச்சையாகி வருகிறது என்பது நினைவு கூறத்தக்கது.

பிரதமர் மோடி  அழைப்பு

டெல்லியில் நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி  அனைத்து தரப்பு மக்களும் அமைதிக்காக்க முன் வர வேண்டும் என ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே டெல்லி வன்முறையைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

வரலாற்றில் இன்று பிப்ரவரி 27; லாங்க்லி கப்பல்

0
வரலாற்றில் இன்று பிப்ரவரி 27 லாங்க்லி கப்பல் (aircraft carrier Langley) கடலில் மூழ்கிய தினம்
லாங்க்லி கப்பல் கடலில் மூழ்கிய தினம்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 27; அமெரிக்க விமான தாங்கி கப்பல் மூழ்கிய தினம், லாங்க்லி கப்பல் (aircraft carrier Langley), லாங்க்லி கப்பல் கடலில் மூழ்கிய தினம் . today what special day in world – india – tamil.

அமெரிக்காவின் விமான தாங்கி கப்பல் லாங்க்லி (aircraft carrier Langley) 32 விமானங்களுடன் ஜப்பானியர்களாலும் அமெரிக்க எதிரிகளாலும் தாக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்ட தினம்.

லாங்க்லி கப்பல் (aircraft carrier Langley)

1912-ஆம் ஆண்டு லாங்க்லி கப்பல் முதலில் கடலில் நிலக்கரி ஏற்றுமதிக்காக உருவாக்கப்பட்டது. முதலாம் உலகப்போருக்கு பிறகு இது விமான தாங்கி ஆக மாற்றப்பட்டது.

அந்த காலங்களில் கடலில் மின்சாரத்தால் இயக்கப்பட்ட முதல் கப்பல் இதுவாகும். 1922-ஆம் ஆண்டு இதில் முதல் விமானம் தரை இறக்கப்பட்டது.

1941-ஆம் ஆண்டு பிலிப்பைன் கடற்பகுதிக்கு அருகில் இருந்து ஜப்பானை தாக்கி வந்தது. பிறகு 1942-இன் புத்தாண்டிற்கு ஆஸ்திரேலியா சென்று விட்டது.

பிப்ரவரி 22-ஆம் ஆண்டு டச் கிழக்கு விண்டீஸ் பகுதியில் 32 விமானங்களுடன் சென்று ஜப்பானிய கடற்படையைத் தாக்க ஆரம்பித்தனர்.

லாங்க்லி கப்பல் கடலில் மூழ்கிய தினம் 

பின் அங்கிருந்து புறப்பட்ட லாங்க்லி கப்பல் பிப்ரவரி 27-ஆம் தேதி ஜாவா பகுதியில் இருந்து தெற்கு பக்கத்தில் 74 மைல் தொலைவில் சென்ற பொழுது ஜப்பானியர்களால் தாக்கப்பட்டது.

இரண்டு அமெரிக்க நாட்டு துரோகிகளும் ஒன்பது ஜப்பானியர்களும் சேர்ந்து இரட்டை குண்டு அட்டாக் செய்தனர். தாக்குதலின் பொழுது முதல் இரண்டு முறை குண்டு தவறியது.

மூன்றாம் முறை விழுந்த குண்டில் லாங்க்லி கப்பல் தான் செயல்பாட்டை இழந்தது. கப்பலில் இருந்த 300 வீரர்கள் கப்பலை கைவிட்டு கிளம்பியதால் வெறும் 16 உயிர்கள் மட்டும் போனது.

பின் லாங்க்லி கப்பல் சிறிது சிறிதாக 32 விமானங்களுடன் கடலில் மூழ்கியது இது நடந்த தினம் பிப்ரவரி 27 ஆகும்.

வரலாற்றில் இன்று பிப்ரவரி 27. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஓய்வு

0
டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஓய்வு

டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஓய்வு. ரசிகர்கள் அதிர்ச்சி. sports news tamil. விளையாட்டுச் செய்திகள். டென்னிஸ் செய்திகள்.

மரியா ஷரபோவா ஓய்வு

பிப்.27: உலகளவில் டென்னிஸ் விளையாட்டில் பிரபலமான டென்னிஸ் வீராங்கனை ஷரபோவா, 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார்.

மரியா ஷரபோவா கடந்த 1994-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைப் பெற்றார். 17வயதிலே கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்குபெற்று விளையாடிவர் ஆவார்.

டென்னிஸ் போட்டியில் திறமையான வீராங்கனை மட்டுமில்லை அழகான வீராங்கனையும் ஆவார். மாடலிங்கிலும் வலம் வந்தார்.

ஊக்க மருந்து சர்ச்சை

ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர். ஆனால் ஒரு தடவை 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபனில் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாதம் தடையும் வாங்கினார்.

தடை நீங்கி மீண்டும் விளையாட வந்த ஷரபோவா பெரிதாக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினா யார் அது?

சச்சின் தெண்டுல்கர் பற்றி கேள்வி இவரிடம் கேட்கப்பட்ட போது சச்சின் யார் என்றே தெரியாது என்று சொல்லி சர்ச்சையில் சிக்கி நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.

(இந்தியா வந்த அமெரிக்க அதிபரே சச்சின் தெண்டுல்கர் பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது).

ஷரபோவா ரசிகர் படை

2006 ஆண்டு யு.எஸ் ஓபன், 2008 ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன், 2012 மற்றும் 2014 ஆண்டு ப்ரெஞ்சு வென்றவர் மரியா ஷரபோவா.

தனது 18 வயதில் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பெற்றார். இவருக்கு என்று உலகில் ரசிகர் பட்டாளமே உண்டு.

இவருக்காகவே டென்னிஸ் பார்த்தவர்களும் நிறைய உண்டு என்றும் கூட சொல்லலாம். பிப்ரவரி 2007 முதல் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்ட நல்லெண்ண தூதராகவும் இருந்து வருகிறார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியல்

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும் அதிக சம்பளம் வாங்கும் 100 பேர் கொண்ட பட்டியலில் தடகள வீரராக தொடர்ந்து 11 ஆண்டுகள் இவர் பெயர் இடம் பெற்றது.

மகளிர் டென்னிஸ் சங்கம் சார்பில் தரப்படும் விருதில் ஏழு விருது பெற்றுள்ளார். நேற்று பிப்ரவரி 26 தனது ஒய்வை அறிவித்தார்.

3

RSAvsAUS T20: டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா

0
RSAvsAUS T20 டி20 தொடரை வென்றது

RSAvsAUS T20: தென் ஆப்பிரிக்காவிக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா. SOUTH AFRICA VS AUSTRALIA T20 SERIES. Sports News in Tamil. விளையாட்டுச்செய்திகள்.

பிப்.27: கேப் டவுனில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா மூன்றாவது டி20 போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியா வென்றது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டகாரர்கள் பின்ச் மற்றும் வார்னர் முதல் விக்கெட்டுக்கு 11.3 ஓவர்களில் 120 ரன்கள் சேர்த்தனர்.

இருவரும் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சிக்ஸரும் பவுண்டரியுமாய் பறக்க விட்டனர். பின்ச் 37 பந்துகளில் 55 ரன்னும், வார்னர் 37 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தனர். ஸ்டீவ் ஸ்மித் தனது பங்குக்கு 15 பந்துகளில் 30 ரன்கள் சேரத்தார்.

ஆஸ்திரேலியா இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்ததது. தென் ஆப்ரிக்கா தர்ப்பில் நாரட்ஜே 4 ஓவரில் 46 ரன்களும், ரபாடா மற்றும் ப்ரிட்டுரீஸ் நான்கு ஓவருக்கு தலா 42 ரன்களும் வாரி வழங்கினர்.

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.3 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாது.

ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை கடைசி மற்றும் இறுதி போட்டியில் வென்றது. 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

தென் ஆப்பிரிக்காவின் வான் டர் துஷன் 24 ரன்னும், கிளாஸன் 22 ரன்னும், மில்லர் 15 ரன்களும் எடுத்தனர் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினார்கள்.

ஆஸ்திரேலியா தர்பபில் ஸ்டார்க் மற்றும் ஆஸ்டன் அகர் தலா 3 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஆட்டநாயகன் விருதை மிட்சல் ஸ்டார்க் வென்றார், தொடர் நாயகன் விருதை ஆரோன் பின்ச் வென்றார்.

RSAvsAUS T20 மோசமான சாதனை 

96 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்காவுக்கு இது இரண்டாவது குறைந்த ஸ்கோர் ஆகும். இதே தொடரில் 89 ரன்கள் எடுத்ததே தென் ஆப்பிரிக்காவின் குறைந்தபட்ச அணி ஸ்கோராகும்.

போட்டி நடந்த மைதானத்திலும் குறைந்த பட்ச ஸ்கோர் 96 ரன்களே. இதற்கு முன் ஆஸ்திரேலியாக்கு எதிராக 2007-ஆம் ஆண்டு இலங்கை எடுத்த 101 ரனை இப்போட்டி பின்னுக்குத் தள்ளி உள்ளது.

2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை தன் சொந்த மண்ணில் வென்றதில்லை.

தென் ஆப்பிரிக்கா இந்த தொடரில் பெறும் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாகும். முதல் டி20-யில் 107 ரன்களில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர் தோல்வியால் துவழும் தென்னாப்ரிக்கா

இந்த இரண்டு மிகப்பெரிய தோல்வியும் தென் ஆப்பிரிக்கா டி20 வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாகும். தென் ஆப்பிரிக்கா கடந்த சில மாதங்களாகவே தோல்வியை சந்தித்து வருகிறது.

தொடர் தோல்வியால் டு பிளஸ்ஸிஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தலைவராக ஸ்மித் இருந்துவருகிறார். மார்க் பவுச்சர் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார்,

ஆனாலும் சிறந்த அணியை உருவாக்க சிரமப்பட்டு வருகிறார்கள்.  ஆப்பிரிக்காவின் 360 டிகிரி டிவில்லியர்ஸ் என்று ஓய்வு அறிவித்தாரோ அன்று ஆரம்பமானது தென் ஆப்பிரிக்காவின் தொடர் தோல்வி.

அனுபவ வீரர்கள் இல்லாததே அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அடுத்து ஒருநாள் தொடர் வருகிற 29-ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பார்ல் நகரில் உள்ள போலாந்த் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.

3