Home Blog Page 253

2021 சட்டமன்ற தேர்தல் ஓர் அலசல்; வெற்றி யாருக்கு?

0
2021 சட்டமன்ற தேர்தல் ஓர் அலசல்; வெற்றி யாருக்கு?

2021 சட்டமன்ற தேர்தல் ஓர் அலசல்; வெற்றி யாருக்கு? தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதைபற்றிய ஒரு பறவைப் பார்வை.

2021 சட்டமன்ற தேர்தல்

2021-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் நம் மாநில கட்சிகள் மற்றும் புதுக் கட்சிகளின் நிலை என்ன என்பதை அலசுகிறது இந்த செய்தி.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 125 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சர் ஆனார்.

நமக்கு நாமே

2011 தேர்தலில் பெரும் தோல்வி அடைந்த திமுக கூட்டணி இந்த தேர்தலில் 108 இடங்களைப் பிடித்தது. இதற்கு முக்கிய காரணமே ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் நமக்கு நாமே என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டதே.

மாற்றம் முன்னேற்றம்

இதுபோக மாற்றம் முன்னேற்றம் மேற்கொண்ட பாமக, அன்புமணி ராமதாஸ் அவர்களால் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியவில்லை.

ஆகையால் 2019 ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தது.

ஆனால் அதில் அதிமுக கூட்டணி தேனியில் மட்டுமே வெற்றி அடைந்தது. 40 தொகுதியில் 39 இடங்களில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி தோல்வி அடைந்தது.

ஜெயலலிதா மறைவு, எடப்பாடியார் உதயம்

2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

அப்போது தற்காலிகமாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். சசிகலா தரப்பில் அழுத்தம் வர 2017 பிப்ரவரி 15-ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.

பிறகு மெரினா கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்தது தனிக்கதை (சிலிர்த்து சில்லரை தூக்கி எறிந்த தருணம்).

பன்னீர்செல்வத்தின் அதிமுக

சசிகலா முதல்வர் ஆகிறார் என்று அறிவிப்பு வந்தது. கூடவே ஜெயில் தண்டனையும் வந்தது. அவசர அவசரமாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கினார் சசிகலா.

பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தார் தன்னுடன் கூடவே பதினெட்டு எம்எல்ஏகளையும் அழைத்தும் வந்தார்.

மீண்டும் இணைந்த ஓபிஎஸ் – இபிஎஸ்

சசிகலாவை வெளியில் எடுக்க எடப்பாடி அரசு முயற்சி செய்யவில்லை, அதற்கு பதில் அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கனார்கள். காரணம் ஓபிஎஸ் ஆவார்.

துணை முதல்வர் பதவி கோரிக்கையும் வைத்தார். எடப்பாடியும் சம்மதம் தெரிவித்து ஓபிஎஸ் அவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டார்.

அதிர்ச்சி தந்த டிடிவி

ஆர்கே நகர் இடைத்தேர்தல் வந்தது அதிமுகவா? திமுகவா? என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போது இடையில் புகுந்து சிக்ஸர் அடித்தார் டிடிவி தினகரன்.

ஆர்கே நகரில் வெற்றி பெற்று அதிமுக, திமுகவை மட்டுமில்லாமல் தமிழக மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தார் டிடிவி.

அரசியலில் உலகநாயகன்

உலகநாயகன் கட்சி தொடங்கி 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். அனைத்து தொகுதியிலும் திறமையான படித்த வேட்பாளர்களை நிறுத்தினார்.

சில இடங்களில் இரண்டாவது இடமும் பல இடங்களில் மூன்றாவது இடங்களை பிடித்தார். மக்கள் அவரை அங்கீகரித்து தேர்தலில் அப்பட்டமாக தெரிந்தது.

ஆதலால் 2021 சட்டமன்றத் தேர்தலில் புதுயுகத்தோடு களமிறங்குவார் என்பதில் சந்தேகமேயில்லை.

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி

2017 ஆண்டு டிசம்பர் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “அரசியலுக்கு வருவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

பாராளுமன்றம் நம் இலக்கு இல்லை தமிழக முதலமைச்சர் பதவி தான் நம் இலக்கு என்று 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற களத்தில் இறங்கிவில்லை.

ஆனால் கண்டிப்பாக சட்டமன்றத்தில் களமிறங்கி விடுவார். காரணம் சமீப காலமாகவே அவரின் அரசியல் பேச்சுக்கள் தான்.

இவரால் பெரிய மாற்றாம் ஆகாது என்று நகர்ந்து செல்ல முடியாது. காரணம் ரஜினி என்னும் வார்த்தைக்கு இன்னும் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஓட்டு போடுவார்களா என்பது 2021-ஆம் ஆண்டு தான் தெரியவரும். ஆனால் ஆட்சி மாற்றத்தில் வாக்குகளைப் பிரிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்.

திமுகவின் கூட்டணி பலம்

திமுக செயல் தலைவராக ஸ்டாலின் பதவியேற்றத்தில் இருந்து நல்ல முன்னேற்றம் கொண்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் 39 இடங்களை வென்றது.

ஊராட்சி மன்ற தேர்தலில் அதிமுகவை விட அதிக இடங்களை கைப்பற்றியது. திமுகவிற்கு கூட்டணியும் கூடுதல் பலம். காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியுடன் இடையில் சிறிய மோதல் ஏற்பட்டாலும் பிறகு சுமூகமானது. விசிக பலமான கூட்டணியாக இருந்துவருகிறது.

பிரஷாந்த் கிஷோர் எண்ட்ரி

திமுக வெற்றிக்கு வியூகம் அமைக்க கார்ப்பரேட் எனும் ஐ-பேக் நிறுவனத்துடன் கைக்கோர்த்தது. அதன் தலைவர் பிரஷாந்த் கிஷோர் ஆவார்.

பிரதமர் மோடி, பீகார் நிதிஷ்குமார், ஆந்திரா மாநிலம் ஜெகன்மோகன் ரெட்டி போன்றவர்கள் வெற்றி பெற காரணமாக இருந்தவர்.

ஆனால் இவர் வெற்றி பெரும் அணி எது என தெரிந்து தான் கட்சிகளுடன் கைகோர்க்கிறார். தமிழகத்தில் இவரின் வியூகம் எடுப்படுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எதற்கும் அஞ்சாத இபிஎஸ்

அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா 2011-ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் என்ற ஒற்றைச் சொல்லை வைத்து வெற்றிபெற்று வந்தார்.

2016-ஆம் ஆண்டு தனக்கென மக்கள் மனதில் இடம்பிடித்து அம்மா என்கிற வாரத்தையை அதிமுக தொண்டர்கள் மத்தியில் பதிய வைத்தார். வெற்றியும் பெற்றார்.

ஆனால் எடப்பாடி சில இடங்களில் தவறுகள் செய்தாலும் பெரும்பாலான இடங்களில் மக்கள் மனதில் கவனம் ஈர்த்துக் கொண்டே வருகிறார்.

பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியை விட்டு விலகாமல் இருந்தால் அதிமுகவிற்கு கூடுதல் பலம்.

பிரிந்து கட்சி ஆரம்பித்து ஆரம்ப கட்டத்தில் வளர்ந்து வந்த டிடிவி அவர்களுக்கு முன்பு போல இப்போது பலம் இல்லாவிட்டாலும் அதிமுகவின் பல தொண்டர்கள் அங்கு இருக்கிறார்கள்.

அவரும் அதிமுகவுடன் இனைந்தால் திமுகவை சமாளிப்பது கடினமாக இருக்காது. சசிகலா வெளியில் வந்தால் அதிமுகவிற்கு செல்வாரா? இல்லை அமமுகவிற்கு செல்வாரா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

ஆனால் இதற்கெல்லாம் ஆஞ்சாதவராக மாறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

கதை சொல்லும் சீமான்

இடையில் நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் போட்டியாக வரும் என சிலர் எண்ணினார்கள்.

ஆனால் அதன் தலைவர் சீமான் மக்களை மேடையில் கதை சொல்லி சிரிக்க வைப்பதிலும், தான் செல்லும் அனைத்து இடங்களில் செய்தியாளர் சந்திக்கும் போது ரஜினியை வைத்து அரசியல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தேமுதிக, பாமக, பாஜக போன்ற கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருப்பதால் அதன் நிலைப்பாடு அறிய சில மாதங்கள் ஆகும். கூட்டணி தொடருமா இல்லை தனியாக தேர்தலை சந்திக்குமா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

மொத்தத்தில் கண்டிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலைக் கணிப்பது கடினமே.

3

மகளிர் உலகக்கோப்பை: கபாலியாக மாறிய ஷாபாலி

0
மகளிர் உலகக்கோப்பை ஷாபாலி வர்மா வீரேந்திர சேவாக்

மகளிர் உலகக்கோப்பை: கபாலியாக மாறிய ஷாபாலி. இந்திய வீரர் வீரேந்திர சேவாக் போன்று அதிரடியாக விளையாடி வருகிறார் ஷாபாலி வர்மா.

இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்தியா தனது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்தை தொடர்ச்சியாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்த மூன்று ஆட்டங்களில் முதலில் பேட் செய்த இந்திய வீராங்கனைகள் ரன்கள் சேர்க்கத் திணறினார்கள். ஆனால் மூன்று ஆட்டத்திலும் அதிரடியாக ஆடியவர் 16 வயதே ஆன ஷாபாலி வர்மா.

கடந்த வருடம் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஷாபாலி, மொத்தம் 17 ஆட்டங்களில் ஆடியுள்ளார். 438 ரன்கள் குவித்து, அதிகபட்சமாக 73 ரன்கள் சேர்த்துள்ளார்.

இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 147 ஆகும். இவரே மகளிர் இருபது ஓவர் போட்டியில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீராங்கனை ஆவார். இதுவரை 20 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

சேவாக்கை பார்ப்பது போல் இருந்தது இவரது ஆட்டம். இந்திய வீரர் வீரேந்திர சேவாக் தனது முதல் பந்திலேயே பவுண்டரி விரட்டி ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்.

மகளிர் அணி சேவாக் என்று கூட சொல்லலாம் இந்த ஷாபாலியை. இந்த உலகக்கோப்பையில் கபாலியாக மாறி இந்திய அணியை அரையிறுதிக்கு அழைத்து சென்று இருக்கிறார்.

முதல் ஆட்டத்தில் 29 (15), இர்ணடாவது ஆட்டத்தில் 39 (17), மூன்றாவது ஆட்டத்தில் 46 (34), மித்தாலி ராஜ் ஒருநாள் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டிலிருந்து டி20 போட்டியில் விளையாடமல் இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக அணியில் இடம் பிடித்த ஷாபாலி தன் இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

மகளிர் கிரிக்கெட் போட்டி மந்தமாக ரன் சேர்ப்பார்கள், சுவாரஸ்யமாக இருக்காது என்று ரசிகர்கள் மனதில் எண்ணம் உண்டு. அதைத் தகர்த்து வருகிறார் நம்ம கபாலி ஷாபாலி.

உலககோப்பையில் மூன்று ஆட்டங்களில் இரண்டு போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தேசிய அறிவியல் தினம்; சி‌வி ராமன் இயற்பியலாளர்

0

தேசிய அறிவியல் தினம்; சி‌வி ராமன் இயற்பியலாளர், today what special day in world – india – tamil.

சந்திரசேகர வெங்கட்ராமன் இந்தியாவின் தலைசிறந்த விஞஞானிகளில் ஒருவர். சந்திரசேகர வேங்கட ராமன், தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 7, 1888 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஆசியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் விஞஞானி இந்தியாவில் நோபல் மற்றும் பாரத ரத்னா விருது பெற்ற ஒரே விஞஞானி ஆவார்.

1930ல், தனது இயற்பியலுக்கான ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக சர் சி.வி. ராமன் அவர்களுக்கு  ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது.

1987 முதல் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

3

திரௌபதி படம் யாருக்கு லாபம்? – விமர்சனம்

1
விமர்சனம் திரௌபதி படம்

திரௌபதி படம் யாருக்கு லாபம்? விமர்சனம் திரௌபதி ஒரு மேல் ஜாதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி பேசக்கூடிய படம்.

இது சற்று புதிது. இது படத்தை பற்றிய விமர்சனம் அல்ல. படம் எடுக்கும் இயக்குனர்கள் பற்றிய விமர்சனம். அரசியல் செய்யும் கட்சிகளைப் பற்றியது.

Draupathi Movie Review படிக்க கிளிக் செய்யவும்

இதுவரை கீழ் ஜாதியினருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை நாங்கள் உலகுக்கு கூறுவோம் என சில இயக்குனர்கள் மார்தட்டிக்கொண்டு படம் எடுத்தனர்.

தற்பொழுதும் எடுத்துக்கொண்டு உள்ளனர். அதேபோன்று மேல் ஜாதி வம்சம் பற்றி தேவர் மகன் படம் தொட்டே வெளிவந்து கொண்டு தான் உள்ளது.

திரௌபதி படத்தில் என்ன சிறப்பு என்றால் கீழ் ஜாதியில் உள்ளவர்கள் எப்படி திட்டமிட்டு மேல் ஜாதி பெண்களை வலையில் சிக்கவைத்து சீர் குலைகின்றனர் என்பதை பற்றிய கதை.

ஜாதி சண்டையில் குளிர் காயும் இயக்குனர்கள்

இதுவரை ஜாதி அரசியலாக்கப்பட்டு மட்டுமே வந்தது. தற்பொழுது ஜாதியை வைத்து சினிமா எடுத்து காசு பார்க்க ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது.

சுற்றி வளைத்து எல்லாம் நான் கூறவில்லை முத்தையா, மோகன் ஜி, பா.ரஞ்சித் இவர்களைப் போன்றவர்கள் சமூகத்தை சீர் திருத்த மட்டும் படம் எடுக்கவில்லை.

இவர்களைப் போன்று, பல இயக்குனர்களை ஜாதி பற்றி பேசச்சொல்லி தூண்டும் வகையில் படம் எடுக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. ஒரு படம் ஓடி விட்டால் அதே போன்று பல நூறு குப்பை படங்கள் வெளிவரும்.

திரௌபதி படம் தற்பொழுது இரு தரப்பு ஜாதியினருக்கு இடையே சமூக வலைதளப்போரை உண்டு செய்துள்ளது.

தியேட்டரில் நிச்சயம் கூட்டம் நிரப்பி வழியும். இதனால் யாருக்கு லாபம்? தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கே. மக்களுக்கு? ஜாதி சண்டையில் வெட்டுக்குத்து படுவதே.

நல்லவேளை சமூக வலைத்தளம் என்று ஒன்று உள்ளது. இதில் வெறும் வாய்ப்பேச்சுடன் முடிந்துவிடும்.

இதுவே தெருவில், டீக்கடைகளில் இப்படி ஒரு விவாதம் நடந்தால் என்ன ஆகிருக்கும்? திருமா, ராமதாஸ் போன்றவர்களுக்கு கொண்டமாகியிருக்கும்.

இந்தப் பதிவு ஜாதிக்கு எதிரானது அல்ல. ஜாதியை வைத்து குளிர் காய்பவர்களுக்கு எதிரானது. ஜாதிய கொடுமைகளை நிச்சயம் பேசலாம்?

அதை அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு அரசியலாக்குவதும், மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி காசாக்குவதும் கண்டிக்கத்தக்க ஒன்றே.

முதலியார், செட்டியார், நாயக்கர், நாடார், பிள்ளைமார் இப்படி ஜாதிக்கென தனிக்கட்சிகள் உள்ளது போல், தனித்தனி இயக்குனர்கள் விரைவில் உருவெடுப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

3

மெக்கா பயணிகள் விசா ரத்து – சவுதி அதிரடி

0
மெக்கா பயணிகள்

மெக்கா பயணிகள் விசா தற்காலிகமாக ரத்து செய்வதாக சவுதி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மெக்கா உலக செய்திகள்.

இஸ்லாமியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சவுதியின் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான இந்திய முஸ்லீம்கள் மெக்காவிற்கு வருடம் தோறும் புயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரானா வைரஸ் பீதியால் மெக்காவிற்கு வருகை தரும் பல்வேறு நாட்டு பயணிகளின் விசாவை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக அனைத்து நாடுகளிடமும் வலியுறித்தி உள்ளது.

இதனால் மத்திய அரசு அனைத்து விமான நிலையங்களிலும் சவுதி மெக்கா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டு உள்ளது.

சென்னை விமான நிலையத்தில், சவுதி அரேபியா செல்லவிருந்த 170 பயணிகளை, பயணம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறி வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

3

டெல்லி கலவரம்: அமித்ஷா பதவி விலக வேண்டும்- சோனியா

0
டெல்லி கலவரம்: அமித்ஷா பதவி விலக வேண்டும்- சோனியா

டெல்லி கலவரம்: அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் உள்ளிட்டோர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

டெல்லியில் நடந்த வன்முறைக்கு அமித்ஷவே காரணம். கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என நாட்டின் பல்வேறு தலைவர்கள் குற்றம் சுமத்தினர்.

குடியரசு தலைவர் சந்திப்பு

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ன்மோகன் சிங், குலாம் நபி ஆஸாத், ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோனி, ஆனந்த் சா்மா, மல்லிகாா்ஜுன காா்கே, குமாரி செல்ஜா, ரண்தீப் சுா்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் ஆகியோர் குடியரசு தலைவரைச் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் டெல்லி வன்முறையில் இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். 200 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை நான்கு தினங்களாக நடந்து வருகிறது.

இது ஆளும் அரசின் தோல்வியை பிரதிபலிக்கிறது. மாநில அரசும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தவறவிட்டது.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் முதல் குடிமகனாகிய நீங்கள் (குடியரசுத் தலைவா்) குடிமக்களின் வாழ்க்கை, சுதந்திரம், சொத்துகள் ஆகியவையை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி அரசும், மத்திய பாஜக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கு பொறுப்பேற்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை பதவி விலகச் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

3

அண்டார்டிக்காவிற்குள் கொரானா வைரஸ் நுழையை முடியவில்லை

0
கொரானா வைரஸ்

அண்டார்டிக்காவிற்குள் கொரானா வைரஸ் நுழையை முடியவில்லை என உலக சுகாதார அமைப்பு (who) தெரிவித்து உள்ளது.

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவில் கடந்த 24 நான்கு மணி நேரத்தில் 435 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

இதுவரை கோரனாவால் 2,744 பேர் உயிர் துறந்துள்ளனர். 78,500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அண்டார்டிக்கா கண்டத்தை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் கொரானா வைரஸ் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அண்டார்டிக்கா கண்டம் என்பது பனிப் பாறைகள் நிறைந்த இருண்ட கண்டம். இங்கு ஆறு மாதம் சூரிய வெளிச்சம் இருக்கும். ஆறு மாதம் இருண்டு காணப்படும்.

இங்கு பல்வேறு நாடுகளின் ஆய்வுக்கூடங்கள் உள்ளது. மனித போக்குவரத்து அதிகம் கிடையாது என்பாதால் இங்கு இன்னும் கொரோனா செல்லவில்லை.

3

வரலாற்றில் இன்று பிப்ரவரி 28; சர் ஜான் டென்னியல்ஸ் பிறந்த தினம்

0
Google Doodle Today (கூகிள் டூடுல் இன்று) வரலாற்றில் இன்று பிப்ரவரி 28 சர் ஜான் டென்னியல்ஸ் பிறந்த தினம்

வரலாற்றில் இன்று பிப்ரவரி 28; சர் ஜான் டென்னியல்ஸ் பிறந்த தினம், Google Doodle Today (கூகிள் டூடுல் இன்று), சர் ஜான் டென்னியல்ஸ் கலை வளர்ச்சி. today what special day in world – india – tamil.

1800-களின் நடுவில் பன்ச் இதழில் சர் ஜான் டென்னியல்ஸ் இங்கிலாந்து அரசியல் நிகழ்வுகளுக்கு கார்ட்டூன் ஸிபேசிலிஸ்ட் ஆகவும் இல்லுஸ்ற்றெட்டார் ஆகவும் செயலாற்றி வந்தார்.

அவர் 1820-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி லண்டனில் பிறந்தார். தன்னுடைய 20 வயதிலையே வலது கண் பார்வையை இழந்தார்.

Google Doodle Today (கூகிள் டூடுல் இன்று)

கூகிள் டூடுல் சர் ஜான் டென்னியல் 200-வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக டூடுல் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.

1836-ஆம் ஆண்டு ராயல் அகாடெமியில் படித்து வரும் பொழுது தன் முதல் ஓவியத்தை பிரிட்டிஷ் கலைஞர்கள் சமூகத்தில் நடந்த கண்காட்சியில் வைத்தார்.

பின் மூரல் டெக்கரேசன் போட்டி வெஸ்ட் மினிஸ்டர் மாளிகையில் நடந்ததில் 16 அடி உயர கார்ட்டூன் போட்டியில் பங்கேற்று அதிலும் வெற்றிபெற்று 100 யூரோ பரிசை வென்றார்.

சர் ஜான் டென்னியல்ஸ் கலை வளர்ச்சி

பன்ச் இதழில் கார்ட்டூன் ஆர்டிஸ்ட் ஆகவும் 1865-இல் அலெக்ஸ் அட்வெஞ்சர் வொண்டெர்லாண்டில் இல்லுஸ்ற்றெட்டார் ஆகவும் செயலாற்றி வந்தார்.

1872-இல் த்ரூ தி லுக்கிங் கிளாஸ் என்னும் சிறப்பு தொகுப்பு தான் இவருக்கும் நாடு முழுவதும் பெயர்கிட்டி பிரபலமானர். மிகவும் நுணுக்கமாகவும் தெளிவாகவும் செயல்படக்கூடியவர்.

வரலாற்றில் இவர் பிறந்து இன்றுடன் 200 வருடங்கள் ஆகியது. இதை கூகிள் டூடுல் சிறப்பிக்கவும் செய்துள்ளது.

வரலாற்றில் இன்று பிப்ரவரி 28. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

வெற்றி… வெற்றி… ட்ரம்ப் ட்விட்டர் பதிவு

0
வெற்றி... வெற்றி... ட்ரம்ப் ட்விட்டர் பதிவு

வெற்றி… வெற்றி… ட்ரம்ப் ட்விட்டர் பதிவு. இந்தியாவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் முடித்த கையோடு அமெரிக்கா சென்ற ட்ரம்ப், ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்தியா வருகை அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையான நல்லுறவை மேம்படுத்தும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவிடம் இருந்து ராணுவ உபகரணங்கள் வாங்க பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது.

இந்த சுற்றுப்பயணம் முடிந்து அமெரிக்க திரும்பிய ட்ரம்ப், இந்திய சுற்றுபயணம் சிறப்பாக இருந்தது. வெற்றிகரமான பயணமாக மாறியுள்ளது என ட்விட் செய்துள்ளார்.

ட்ரம்ப் மகள் இவாங்கா, அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக உறவு மற்றும் பொருளாதார உறவு வலுபெறும் என ட்விட் செய்துள்ளார்.

3

Tumbbad Unknown Facts; தும்பாட் உண்மைக்கதையா?

0
Tumbbad Unknown Facts
Is Tumbbad Real Village? 

Tumbbad Unknown Facts; தும்பாட் உண்மைக்கதையா?, Is Tumbbad Real Story? Who is Hastar? Is Tumbbad Real Village?

உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்கள் ஒவ்வொரு வருடமும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. அதில் நாம் இன்று பார்க்கப்போகும் தும்பாட் திரைப்படமும் ஒன்று.

2018ஆம் ஆண்டு ராகி அனில் பர்வே இயக்கத்தில் ஹிந்தி மொழியில் வெளியான பீரியாடிக் ஹாரர் திரைப்படம் தான் தும்பாட் ஆகும்.

இப்படத்தின் கதையை ஒரே வரியில் கூற வேண்டும் என்றால் பேராசை பெறு நஷ்டம் என்பது தான். என்னடா அதரப்பழைய கதைனு நினைக்காதீங்க படம் அப்பிடி இருக்காது.

Tumbbad Unknown Facts

இப்படத்தில் தும்பாட் கிராமத்தில் அடிக்கடி மழை வரும். இதில் வரும் அனைத்து மாழைகளுமே உண்மையான மழை. நான்கு வருட பருவ மழைகளில் கொஞ்சம் கொஞ்சமாக படம் பிடிக்கபட்டது.

மழையில் அதிக காட்சிகள் அமைத்ததால் வாய்ஸ் ரெகார்டின் 7 முறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.

இதில் வரும் சில முக்கியமான தேவியின் கரு, கோட்டையின் உட்புறம் மற்றும் பிற ஹாரர் காட்சிகள் அனைத்துமே செட் செய்து எடுக்கப்பட்டதாம். CGI அதிகமா பயன்படுத்தப்படவில்லையாம்.

Is Tumbbad Real Village? 

தும்பாட் என்னும் கிராமம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கொங்கன் பகுதியில் இருக்கும் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ளது. படத்தில் காட்டுவது போல் இல்லை. படத்தில் காட்டப்படும் கோட்டை தும்பாட் பகுதியில் அமைந்துள்ளது.

அங்கு வசிக்கும் மக்களும் படத்தில் காட்டுவது போல அந்த ஊரில் ஒரு புதையல் இருப்பதாக நம்புகின்றனராம்.

Is Tumbbad Real Village? 

Who is Hastar?

இந்திய வரலாற்றில் ஹஸ்தர் என்னும் பெயரில் எந்தக் கடவுளும் இருந்ததாக சான்று இல்லை. ஹஸ்தர் என்னும் கடவுள் மிகப்பெரிய பேராசை கொண்டவர்.

கிரேக்க எல்டர் காட்ஸ் ஆஃப் டைட்டன் என்னும் கடவுள் இதே குணத்தை கொண்டிருக்கிறார். மம்மூன் என்னும் இன்னொரு கடவுளும் இதே குணாதிசியம் கொண்டுள்ளனர்.

Is Tumbbad Real Story?

தும்பாட் உண்மைக்கதை என்று படக்குழுவினர் பக்கம் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் வரலாற்றிலும் இதைப்பற்றி எதுவும் இல்லை.

கற்பனை கதையை ஒரு கிராமத்துடன் இணைத்து சிறந்த உலகத்தரமான சினிமாவாக ராகில் அனில் பர்வே கொடுத்துள்ளார். நேரமிருந்தால் கட்டாயம் இப்படத்தை பார்க்கவும்.

3