Home Blog Page 256

IPL 2020: தோனியின் ஐபிஎல் பிளே ஆஃப் ரகசியம் என்ன?

0
IPL 2020 ஐபிஎல் பிளே ஆஃப் ரகசியம் தோனி

IPL 2020: தோனியின் ஐபிஎல் பிளே ஆஃப் ரகசியம் என்ன? இறுதிப்போட்டிகளில் எப்படி வெற்றி பெறுவது என்ற ரகசியத்தை தோனி கண்டுபிடித்தாரா?

IPL 2020 – ஐபிஎல் 2020

2008-ஆம் ஆண்டு இந்தியாவில் மிகவும் கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா. இன்று வரை ஐபில் என்று சொன்னால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

ஐபிஎல் தொடரில் சென்னை அணி பல சூதாட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் தன் ரசிகர்கள் வேறு அணி பக்கம் மாறாமல் வைத்திருக்கிறது.

காரணம் ஒருவர் மட்டுமே. தல என்று செல்லமாக அழைக்கப்படும் மகிந்திர சிங் தோனி இதற்கு காரணம்.

ஐபிஎல் போட்டியில் சென்னை அணி நிர்வாகம் செய்த முதல் நல்ல விசயம் தோனியை நம் பக்கம் வாங்கியதே.

ப்ளே ஆஃப் கிங்க்ஸ்

சூதாட்ட புகார் காரணமாக சென்னை அணி விளையாடாத 2016 மட்டும் 2017 ஆண்டு தவிர்த்து விளையாடிய அனைத்து ஐபில் போட்டியிலும் பிளே ஆஃப் சென்று விடும்.

இதில் 8 தடவை இறுதி வரை சென்றுள்ளது. மூன்று தடவை கோப்பையை வென்றுள்ளது. ஐசிசி இருபது ஓவர் உலககோப்பையை 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறது.

தோனி முதல் முறையாக கேப்டன் பதவியில் சென்று கோப்பையுடன் நாடு திரும்பினார். அடுத்த ஆண்டே தொடங்கப்பட்டது ஐபிஎல் போட்டி.

அன்று இளமையான தோனி சென்னையை வழி நடத்துகிறார். எதிர் அணிகள் தலைவர்கள் அனைவரும் ஜாம்பவான்கள்.

முதல் ஐபிஎல் போட்டியில் இறுதிவரை சென்று ராஜஸ்தானிடம் கடைசி பந்தில் நான்கு விக்கெட்டில் தோல்வியைத் தழுவியது.

2009-ஆம் ஆண்டு பிளே ஆஃப் வரை சென்று பெங்களூர் அணியிடம் 6 விக்கெட்டில் தோல்வி. 2010 ஆம் ஆண்டு 22 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியும், 2011 ஆம் ஆண்டு பெங்களூரை 58 ரன்களில் வீழ்த்தியும் தொடர்ந்து இருமுறை கோப்பையை கைப்பற்றியது.

ஆனால் 2012-ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 5 விக்கெட்டிலும், 2013-ஆம் ஆண்டு மும்பையுடம் 23 ரன்களிலும் தோல்வி அடைந்தது.

ஆனால் தொடர்ந்து நான்கு முறை இறுதி ஆட்டத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. 2014-ஆம் ஆண்டு மிகப் பெரிய ரன்களை துரத்தும் போது 24 ரன்களில் பஞ்சாப் அணியுடன் தோல்வியைத் தழுவியது.

2015-ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் மும்பை அணியுடன் 41 ரன்களில் தோல்வியடைந்தது. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் விளையாட தடை வாங்கியது.

வயதான வீரர்கள்

இரண்டு வருட கோப்பை பசியில் இருந்த வந்த சென்னை அணி சீனியர் வீரர்களை வாங்கியது. மற்ற அணி ரசிகர்கள் வயதான அணி என்று கூட கிண்டல் செய்தார்கள்.

2018-ஆம் ஆண்டு ஐதராபாத் அணி வாட்சன் சதத்துடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வெற்றியின் அருகில் வந்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.

100 போட்டிகளில் வெற்றி

165 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய சென்னை அணி 100 போட்களில் வென்றுள்ளது. சென்னை அணிக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளமே உள்ளது காரணம் தோனி என்கிற ஒரு சொல் மட்டுமே.

தோனியின் கூல் கேப்டனாக வெற்றியை தலையில் ஏற்றிக் கொள்ளவும் மாட்டார், தோல்வியால் துவண்டு விடவும் மாட்டார்.

அணியினரிடம் எப்போதும் பார்வையிலே பேசுவார். என்றும் உறுதுணையாக வீரர்களிடம் இருப்பார்.

தோல்விக்கு பொறுப்பு ஏற்பார். இது முடிவு அல்ல பயணம் இன்னும் இருக்கின்றது என்று அணியை வழி நடத்துவார். எது எப்படி இருந்தாலும் 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இறுதி சுற்று ரகசியம் என்ன?

தல தோனி மேல் உள்ள நம்பிக்கையில் இந்த தடவையும் சென்னை ரசிகர்களுக்கு சென்னை அணிக்கு ப்ளே ஆஃப் போட்டியில் தான் போட்டி ஆரம்பம் ஆகிறது என்று லீக் போட்டிகளை எந்த ஒரு தோல்வி பதட்டமில்லாமல் பார்க்க காத்திருக்கிறார்கள்.

இதில் சோகம் என்னவென்றால் 8 தடவை இறுதிக்கு சென்று 5 தடவை தோல்வியும் ஆகியுள்ளது. ஐபிஎல் பிளே ஆஃப் ரகசியம் தெரிந்த தோனிக்கு இறுதி ஆட்டத்தின் ரகசியத்தை கண்டுபிடிப்பது சிரமமாகவே உள்ளது.

3

26/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
26/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

26/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

நல்ல நாளாகக் காணப்படுகிறது. நண்பர்களால் அனுகூலம் உண்டு. வம்பு வழக்குகளில் ஒதுங்கியே இருப்பது நல்லது. மற்றபடி அனைத்து காரியங்களும் கைகூடும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: தேன் வண்ணம்

ரிஷபம் ராசிபலன்

உங்களுடைய அதீத தைரியத்தால் எதனையும் வெல்லும் திறன் வாய்க்கும். உடல் நலக் கோளாறுகள் இருந்தால் இன்று ராகு கேதுகளை வழிபட நிவர்த்தியாகும். சகோதர உறவினர்களின் உடல்நலத்தைப் பேணுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண்: 4

மிதுன ராசிபலன்

குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இருந்தாலும் சிறு சிறு மனக்குழப்பம் அவ்வப்போது வந்து போகும். யாரிடமும் அதிக எதிர்பார்ப்பு கூடாது. ஏமாந்து போவீர்கள். நடுநிலையான மனதுடன் இருப்பது சிறந்தது.

அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம்.

கடக ராசிபலன்

மனக்குழப்பங்கள் வரலாம். எதிலும் நிதானம் தேவை. வயதானோர்களுக்கு வாந்தி, பித்தம், மயக்கம் வரலாம். தெய்வ நாம சங்கீர்த்தனம் செய்வது அவசியம். வேலைப்பளு மற்றும் பொறுப்புகள் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண் : 3

சிம்மம் ராசிபலன்

விரையங்கள் தலைதூக்கும் நாள். சிறுவர்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வீண்பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள நேரலாம். கம்யூனிகேஷன், வக்கில், ஆசிரியர் தொழிலுடையோர் சிறப்புறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: அடர்சிகப்பு; அதிர்ஷ்ட எண்: 9

கன்னி ராசிபலன் 

சொத்தைப் பல் ஏற்பட வாய்ப்புண்டு. முன்னோர்களுக்கான காரியங்களை சரியாகச் செய்யத் தூண்டும் நாள். வேலைப்பளு ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பால் வெள்ளை அதிர்ஷ்ட எண்: 6

துலாம் ராசிபலன்

நல்ல வேலை கிடைக்கும் நாள். முயற்சித்தால் முன்னுதாரணமான வேலையைப் பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் தன லாபம் உண்டு. நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மரகத வண்ணம். அதிர்ஷ்ட எண் : 5

விருச்சிக ராசிபலன்

மிகவும் பாக்யமான நாளாகக் காணப்படுகிறது. தந்தை வழி உறவுகளால் சந்தோஷம் கூடும். தூர தேசத்திலிருந்து நல்ல செய்தி வரும். நரம்பு எலும்பு சம்மந்தப்பட்ட் நோய்கள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம் : முத்து வண்ணம், அதிர்ஷ்ட எண் : 2

தனுசு ராசிபலன்

சந்திரன் ராசியிலேயே உலவுவதால் வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கும் நாளாகக் காணப்படுகிறது. எவரிடமும் கருத்துச் சொல்லாமல் இருப்பது நலம். பொறுமை காப்பது கூடுதல் நலம். திருமணப் பேச்சுகள் சுபமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண் : 1

மகரம் ராசிபலன் 

ராசியிலேயே சூரியன் இருப்பதால் எதிலும் விவாதம் கூடாது. தந்தை வழி உறவுகளிடம் பகை கூடாது. திருமணம், வீடு கட்டுதல் போன்ற சுப முடிவுகள் கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம், எண் : 5

கும்ப ராசிபலன்

உடல் நலத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றலும். வாழ்க்கை நிலைமை மேம்படும். உடனுக்குடனான கடனுதவி கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு. எதிலும் லாபங்கள் பெருகி வரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

மீனம் ராசிபலன் 

பொருளாதார நிலை உயரும். கண் தொடர்பான பிரச்சனை வரலாம். கண்களை நன்கு பாதுகாத்தல் அவசியம். தாராளமான பணவரவு உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பவள வண்ணம், அதிர்ஷ்ட எண் : 9

26/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

90 கிட்ஸ் பேவரைட் இயக்குனர் கௌதம் மேனன் பிறந்த தினம்

0
90 கிட்ஸ் பேவரைட் இயக்குனர்

90 கிட்ஸ் பேவரைட் இயக்குனர் கௌதம் மேனன் பிறந்த தினம். tamil cinema director gowtham vasudev menon birthday. 47 வது பிறந்த நாள்.

90 கிட்ஸ் பேவரைட் இயக்குனர்

நடிகர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்று படத்தில் இடம் பெற்றால் அது கௌதம் மேனன் படம் என்று இன்றைய இளைஞர்கள் மட்டுமில்லை 80களில் பிறந்தவர்கள் கூட சொல்லுவார்கள்.

அப்படிப்பட்ட 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் பிடித்தமான இயக்குனர் கௌதம் மேனன். அலைபாயுதே மாதவனை ஒருபடி மேல உயர்த்தியது.

மின்னலே படம், காதலர்கள் உதடுகளில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் பாடல் வசீகரா, காதலின் அடையாளமாக மாறிய பாடல் என்று கூட சொல்லாம்.

சூர்யாவை காவல் அதிகாரியாக மாற்றி தமிழ் மக்களை ரசிக்க வைத்தவர் கௌதம் மேனன். அதன் பிறகு போலிஸாக சூர்யா சிங்கம் 1,2,3 போன்ற வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனுக்கு வேட்டையாடு விளையாடு படம், பார்த்த இரண்டு நிமிடத்தில் காதலை சொல்லும் காவல் அதிகாரியாகவும் அமெரிக்காவில் சென்று கொலைகளை கண்டு பிடிக்கும் அதிகாரியாகவும் வாழ்ந்து இருப்பார் உலகநாயகன்.

மீண்டும் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படம் தேசிய விருதும் பெற்றது. சிம்புக்கு படம் பெரிதாக சொல்லும்படி அமையாத நேரத்தில் கௌதம் கைகோர்த்தார்.

அந்த படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா, இதுதான் சிம்பு, அவர் தமிழ் நடிகர் இல்லை இந்திய நடிகர் என்ற அந்தஸ்தை வழங்கியது.

அன்று முதல் பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகராவும் ஆனார். தமிழில் வெளியான சில காதல் காவிய படங்களில் ஒன்று விண்ணைதாண்டி வருவாயா என்று கூட சொல்லாம்.

ஜீவாவுடன் நீதானே என் பொன்வசந்தம், தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்ட, முன்னாள் தமிழக முதல்வர் வாழ்க்கை வரலாறு குயின் வெப் சீரீஸ் போன்ற இவரது இயக்கங்கள் இவரது திறமையை பேசும்.

முதல் படத்தில் கௌதமாக வந்தவர், அடுத்த படத்தில் கௌதம் மேனன் ஆனார், இன்று அவர் கௌதம் வாசுதேவ் மேனன் என வெற்றிநடை போட்டுக்கொண்டுயிருக்கிறார்.

இவருக்கு இன்று 47 வயது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

3

கருப்பி போன்று கர்ணன் குதிரை; சம்பவம் நிச்சயம் உண்டு

0
பரியேறும் பெருமாள் கருப்பி கர்ணன் படத்தில் குதிரை கதாப்பாத்திரம்

கருப்பி போன்று கர்ணன் குதிரை; சம்பவம் நிச்சயம் உண்டு. பரியேறும் பெருமாள் கருப்பி என்ற நாய் கதாப்பாத்திரம் போன்று கர்ணன் படத்தில் குதிரை கதாப்பாத்திரம் உள்ளதாம்.

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இந்தப் படம் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரியேறும் பெருமாள் கருப்பி

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு ஆகியோரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் பரியேறும் பெருமாள்.

ஜாதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் கருப்பி என்ற கதாபாத்திரத்தில் ஒரு நாயும் இடம் பெற்றிருந்தது.

இதில், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த கதிர், சட்டக் கல்லூரியில் சேர்கிறார். அங்கு உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த ஆனந்தியும் படிக்கிறார். இருவரும் நட்பாக பழக, ஒரு கட்டத்தில் ஆனந்திக்கு கதிர் மீது காதல் வருகிறது.

ஆனால், இதிலிருந்து முற்றிலும் கதிர் ஒதுங்கியே இருக்கிறார். ஆனால், கதிருடன் ஆனந்தி பழகுவதை விரும்பாத ஆனந்தியின் அண்ணன், கதிரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்.

இதற்கு முதல் பலி கதிர் வளர்த்து வந்த கருப்பி என்ற நாய். இப்படி பல வன்கொடுமைகளை சந்தித்து வந்த கதிர் சட்டப் படிப்பை முடித்தாரா? இல்லையா? என்பது தான் கதை.

இது ஒரு புறம் இருக்க, அண்மைக் காலமாக வரும் படங்களில் விலங்குகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் காலத்தில்தான் நாய், குதிரை, யானை, குரங்கு ஆகியவை சினிமாவில் பயன்படுத்தப்பட்டன.

தற்போது சினிமாவும் பிந்தைய காலகட்டத்திற்குதான் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கர்ணன் குதிரை

பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி ஏற்படுத்திய தாக்கத்தைவிட தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் நடித்து வரும் குதிரையின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் தான் இயக்கி வருகிறார். அதனாலேயோ என்னவோ இந்தப் படத்தில் குதிரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தின் முக்கிய பிரச்சனை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாஞ்சோலை படுகொலை பற்றிய படமா?

மாஞ்சோலை கதைக்கருவை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டு வருவதாக முதலில் தகவல் வெளியானது.

பின்னர், அது மாஞ்சோலை குறித்த படம் இல்லை என்றும், தூத்துக்குடியில் உள்ள கொடியன் குளம் என்ற கிராமத்தில் நடந்த ஜாதி மோதல் குறித்த படம் என்று தகவல் தெரிவிக்கின்றது.

பரியேறும் பெருமாள் படத்தைப் போன்று கர்ணன் படமும் ஒரு ஜாதி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது இந்தப் படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், விரைவில் இந்தப் படம் திரைக்கு வருகிறது.

இதற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வந்த அசுரன் படமும் இதே பாணியில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இதிலும், ஜாதி கருத்து இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனுஷ் ஜாதி பற்றிய படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்பது அவரது படங்களின் மூலம் தெளிவாக தெரிகிறது.

இதற்கிடையில், கடந்த சிவராத்திரியை முன்னிட்டு தேனியில் உள்ள ஒரு கோயிலுக்கு குடும்பத்தோடு சென்று தனுஷ் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தூங்கி வழியும் நடிகை அமலா பால்?

0
நடிகை அமலா பால்

நடிகை அமலா பால் தூங்கி எழுந்தவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். விஜய், தனுஷ், விதார்த், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், சித்தார்த், அரவிந்த் சாமி ஆகிய நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இவர் இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார்.

எனினும், இவர்களது திருமண உறவில் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் பிரிந்துவிட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இயக்குநர் விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார்.

இவரைத் தொடர்ந்து அமலா பாலும் விரைவில் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விவாகரத்திற்குப் பிறகு அவ்வளவாக சினிமா வாய்ப்பு இல்லாத நிலையில், தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்போது தான் அவருக்கு ஆடை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் ரத்ன குமார் இயக்கிய இந்தப் படத்தில் அமலா பால் ஆடையின்றி நிர்வாணமாக நடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் டிரைலர் வரை தொடக்கம் முதலே சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

ஆனால், அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல், தொடர்ந்து அந்தப் படத்தில் நடித்து முடித்தார். படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்றது.

குறிப்பாக குடும்ப பெண்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. எனினும், நிர்வாணமாக நடித்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அதோ அந்தப் பறவை போல, கேடவர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அண்மையில், அதோ அந்தப் பறவை போல படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த நிலையில், நைட் உடையில் அமலா பால் தூங்கி எழுந்து, மேக்கப் இல்லாமலும் கண்ணை மூடியவாறு புகைப்படம் எடுத்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம்ப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடு, நீங்கள் ஒரு மரத்தை நடும் போது அதிலுள்ள ஒவ்வொரு இலைகளும் உங்களைச் சொல்லும்.

மேலும், நீங்கள் விதைப்பதன் மூலம் உங்களுக்கு பலனைத் தரும். அதே போன்று தான் நட்பும்.

நண்பர்களே உங்களுக்கு ஏதேனும் உணர்வு இருந்தால் அன்பைத் தவிர வேறு எதையும் விதைக்காதீர்கள்.  நீங்கள் தேடுவதன் மூலம் உங்களது அன்பைக் காட்டுகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தைக் கண்ட நெட்டிசன்கள் என்ன அமலா பால் செம போதையா என்று விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில தமிழ் படங்களைத் தவிர்த்து அமலா பாலுக்கு வேறு எந்தப் படமும் கையில் இல்லை.

இப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

3

மக்கள் என்னை கோமாளியாகவே பார்க்கட்டும் – புகழ்

0
Cook With Comali மக்கள் என்னை கோமாளியாகவே பார்க்கட்டும் புகழ் அசால்ட் பேச்சு

மக்கள் என்னை கோமாளியாகவே பார்க்கட்டும்: புகழ் அசால்ட் பேச்சு! விஜய் டிவி ரியாலிட்டி ஷோ (Cook With Comali). வனிதா டைட்டில் வின்னர். புகழ் வித் ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் தனக்கு பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சி எல்லாம் வேண்டாம் என்று அசால்டாக தெரிவித்துள்ளார்.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ (Cook With Comali)

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில், தாடி பாலாஜி, வனிதா, உமா ரியாஷ், ஞானசம்பந்தம், மோகன் வைத்யா, ரேகா, ரம்யா பாண்டியன், பிரியங்கா ரோபோ சங்கர் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் இணைந்து கோமாளிகளாக சாய் சக்தி, பப்பு, புகழ், தங்கதுரை, சிவாங்கி, பிஜிலி ரமேஷ், பாலா, மணிமேகலை ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

வனிதா டைட்டில் வின்னர்

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்நிகழ்ச்சி முடிவடைந்துள்ளது. இதில், வனிதா டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. முதல் ரன்னராக உமா ரியாஷ் அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

2 ஆவது ரன்னராக ரம்யா பாண்டியன் அறிவிக்கப்பட்டார். ரேகா கடைசி இடம் பிடித்தார். இதே போன்று கோமாளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

அதில், புகழுக்கு காதல் மன்னன், மணிமேகலைக்கு சூனிய பொம்மை, பாலாவிற்கு அடிதாங்கி, சிவாங்கிற்கு சிம்ம குரல் சிங்காரி என்று வழங்கப்பட்டது. போட்டியாளரான ரேகாவிற்கு சமாதான புறா என்று விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி முடிந்ததைத் தொடர்ந்து அடுத்து எப்போது இந்நிகழ்ச்சியின் 2-ஆவது சீசன் தொடங்கப்படும் என்று ரசிகர்கள் தற்போதே கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

புகழ் வித் ரம்யா பாண்டியன்

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ புகழ் வித் ரம்யா பாண்டியன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானது என்னவோ புகழ் மற்றும் ரம்யா பாண்டியன்.

இந்நிகழ்ச்சியை குக் வித் கோமாளிக்குப் பதிலாக புகழ் வித் ரம்யா பாண்டியன் என்று குறிப்பிட்டால் கச்சிதமாக இருக்கும். அந்தளவிற்கு புகழ் மற்றும் ரம்யா பாண்டியனின் காம்பினேஷன் இருந்தது.

கடலூரைச் சொந்த ஊராக கொண்ட புகழ், படித்து முடித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார். அவர், சென்னையில் பார்க்காத வேலையே இல்லையாம். அந்தளவிற்கு எல்லா வேலைகளையும் பார்த்துள்ளார்.

அதனால், பல பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்துள்ளார். முதலில் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் லேடி கெட்டப் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அது இது எது, சிரிச்சா போச்சு என்று வரிசையாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இப்போது குக் வித் கோமாளி.

பிக் பாஸ் தமிழ் 4

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விரைவில் தொடங்கப்பட உள்ள பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் புகழ் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக பலரும் தங்களது கருத்துக்களை இப்போதே தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தனியார் நியூஸ் சேனல் ஒன்று புகழிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த புகழ் கூறுகையில், “ஏன் இதுவரை நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கிறது.

மக்கள் என்னை இனிமேல் கோமாளியாகவே பார்க்கட்டும். என்னை தூக்கி உள்ளே போட்டு அதுக்கு பின்புறம் அங்கிருந்து வெளியில எதுக்கு தேவையில்லாத வேலை.

பிக் பாஸ் எல்லாம் வேண்டாம். கோமாளி ஆர்மி வேண்டுமென்றால் தொடங்குங்கள். ஆனால், பிக் பாஸ் ஆர்மி மட்டும் வேண்டாம். இதற்கு முன் பல சீசன்களை நாம் பார்த்துவிட்டோம்.

இப்போது, இருக்கிற மாதிரி தான் உள்ளேயும் இருப்போம். ஆனால், ஒரு சின்ன விஷயம் கூட நம்மை கோபத்திற்கு உள்ளாக்கிவிடும்.

பிரச்சனை உண்டாகும். இதெல்லாம் எதற்கு. எப்போதும் போல மக்களை ஜாலியாகவே வைத்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

கடைசிவரை கோமாளியாக இருந்து மக்களை சிரிக்க வைக்க வேண்டும். யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்பது தான் எனது நோக்கம்” என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.

3

குக் வித் கோமாளி டைட்டிலை கைப்பற்றிய பிக் பாஸ் வனிதா!

0
விஜய் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி குக் வித் கோமாளி விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மகள் பிக் பாஸ் வனிதா

குக் வித் கோமாளி டைட்டிலை கைப்பற்றிய பிக் பாஸ் வனிதா. இவர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மகள். விஜய் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி.

விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக் பாஸ் வனிதா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மகள்

நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதியரின் மகள் தான் வனிதா. இவர், விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

எனினும், அதிகளவில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 தான்.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சியே மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக காரணமாக அமைந்தது.

குக் வித் கோமாளி

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

இவருடன் இணைந்து தாடி பாலாஜி, உமா ரியாஷ், ரேகா, பிரியங்கா ரோபோ சங்கர், ரம்யா பாண்டியன், ஞானசம்பந்தம், மோகன் வைத்யா ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் இணைந்து கோமாளியாக கலக்கப்போவது யாரு பிரபலங்கள் புகழ், பாலா, தங்கதுரை, சூப்பர் சிங்கர் பிகழ் சிவாங்கி, தொகுப்பாளினி மணிமேகலை, சாய் சக்தி, பப்பு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ரக்‌ஷன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.

மிகவும் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் சென்ற இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒரு போட்டியாளர் வெளியேற இறுதியாக இறுதிப் போட்டிக்கு ரேகா, வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஷ் ஆகியோர் முன்னேறினர்.

இறுதிப் போட்டியில் பல கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் த்ரில்லாகவும், நகைச்சுவையாகவும் இருந்திருக்கும் என்பது உண்மை.

கிட்டத்தட்ட 4 ரவுண்டுகளை கொண்ட இந்த இறுதிப் போட்டியில் ஒவ்வொரு ரவுண்டுக்கும் 20, 30, 20, 30 மதிப்பெண்கள் அடிப்படையில் வின்னர் அறிவிக்கப்பட்டார்.

3 ரண்டுகள் முடிவில், ரம்யா பாண்டியன் மற்றும் வனிதா ஆகியோர் 63 மதிப்பெண்களும், உமா ரியாஷ் 61 மதிப்பெண்களும், ரேகா 50 மதிப்பெண்களும் பெற்றிருந்தனர்.

வின்னரை தீர்மானிக்கும் இறுதி ரவுண்டில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

எனினும் இதில், முதலாவது ரன்னராக உமா ரியாஷ் வெற்றி பெற்றார். அவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

2-ஆவது ரன்னராக ரம்யா பாண்டியன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வின்னராக வனிதா அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோமாளிகளுக்கு நினைவு பரிசு

குக்குகளுக்கு பரிசு கொடுத்த வேலையில், கோமாளிகளுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

அதில், பாலாவுக்கு அடிதாங்கி விருதும், மணிமேகலைக்கு சூனிய பொம்மை விருதும், புகழுக்கு காதல் மன்னன் விருதும், சிவாங்கிக்கு சிம்ம குரல் சிங்காரி விருதும், ரேகாவிற்கு சமாதான புறா விருதும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில், இந்நிகழ்ச்சியின் 2-ம் பாகம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி முடிந்த உடனேயே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராக கலந்து கொள்ள இருக்கிறாராம்.

இதனை உறுதி செய்யும் வகையில், வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு கலக்கப்போவது யாரு சீசன் 9 என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி

கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடக்கப்பட்ட இந்நிகழ்ச்சியை தற்போது தங்கதுரை, ராமர், வடிவேலு பாலாஜி ஆகியோர் சிறப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பிராட்மேன் வரலாறு: டான் பிராட் மேன் நினைவு தினம் இன்று

0
don bradman history tamil பிராட்மேன் வரலாறு: டான் பிராட் மேன் நினைவு தினம் இன்று கிரிக்கெட் ஜாம்பவான் கிரிக்கெட் கடவுள்

பிராட்மேன் வரலாறு: கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட் மேன் நினைவு தினம் இன்று. கிரிக்கெட் கடவுள் என்பவர் டான் பிராட் மேன். don bradman history tamil.

கிரிக்கெட் மாஸ்டர் பிளாஸ்டர் என்றால் அது சச்சின் தெண்டுல்கர் நினைவுக்கு வரும். ஆனால் கிரிக்கெட்டின் முதல் கடவுள் மட்டுமில்லை ஒரு ஜாம்பவானாக வலம் வந்தவர் பிராட் மேன்.

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் வரலாறு (don bradman history tamil)

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் நகரில் கூட்டமுந்தரா என்ற இடத்தில் ஜார்ஜ் மற்றும் எமிலி அவர்களின் இளைய மகனாக 1908-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி பிறந்தவர் பிராட மேன். ஆஸ்திரேலியாவில் 1928-1947 ஆண்டு வரை கிரிக்கெட்டில் நாயகனாக இருந்தவர்.

1928-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக சர்வதேச போட்டியில் கால் பதித்தார்.

மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பிராட் மேன் 6996 ரன்கள் குவித்துள்ளார். இவரின் பேட்டிங் சராசரி 99.94 யாராலும் தொட முடியாத சாதனையாக இன்று வரை இருந்து வருகிறது.

இதுவரை பிராட் மேன் 29 டெஸ்ட் சதங்களும், 13 தடவை 50 ரன்களுக்கு மேலாக குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் இவர் 334 ரன்கள் எடுத்துள்ளார்.

பிராட் மேனுக்கு நிகர் அவரே

நாம் கோலி ஆட்டத்தை அடுத்த சச்சின் என்று சொல்லலாம் ஆனால் டான் பிராட் மேனுக்கு நிகர் அவர் மட்டுமே. இதுவரை அவருக்கு நிகரான வீரர் உருவாக்கவில்லை.

தனது இளமை காலத்தில் சொந்தமாகவே பேட்டிங் பயிற்சி செய்தார். பிராட் மேன் 234 முதல் தர போட்டியில் 28067 ரன்கள் குவித்துள்ளார்.

இதில் 117 சதங்களும் 69 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 452 ரன்கள் எடுத்துள்ளார். இதிலும் இவரது சராசரி 95-ஆக உள்ளது.

1920-ஆம் ஆண்டு தனது காதலி மார்தா மென்சிஸை சந்தித்து 1932-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தனது பள்ளி பருவத்தில் “பிராட்லஸ்” என்று தனது அணியினரால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

நாம் தொலைக்காட்சியில் அவரது ஆட்டத்தை நேரடியாக பார்த்தது இல்லை. ஆனால் இவரது வரலாறு படிக்கும் போது நம் கண்முண் அவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்று பிரமிக்க வைக்கிறது.

வாழ்த்துப்பெற்ற சச்சின்

ஆகஸ்ட் 27, 1998-ஆம் ஆண்டு பிராட் மேன் பிறந்த நாள் அன்று சச்சின் தெண்டுல்கர், பிராட்மேனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்வை சச்சின் டெண்டுல்கர், தனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்று குறிப்பிட்டார்.

டான் பிராட் மேன் நினைவு தினம்

நிமோனியா என்ற நோயால் 2000-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2001-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வீடு திரும்பினார்.

ஆனால், 2001 பிப்ரவரி 25-ல் 93 வயதில் பிராட்மேன் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் இன்னும் இந்த மண்ணைவிட்டு மறையவில்லை.

3

BANvsZIM test match: வங்கதேசம் 560 ரன்கள் குவிப்பு

0
BANvsZIM test match bangladesh vs zimbabwe live match result in tamil. வங்கதேசம் vs ஜிம்பாப்வே.

BANvsZIM test match: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வங்கதேசம் 560 ரன்கள் குவிப்பு. bangladesh vs zimbabwe live match result in tamil. வங்கதேசம் vs ஜிம்பாப்வே.

BANvsZIM test match

பிப்.25 : வங்கதேசம் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கிய ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கிரெய்க் எர்வின் 107, மஸ்வுரே 64 ரன்களும் சேர்த்தனர். ஜிம்பாப்வே அணியில் ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களை மட்டுமே சேர்த்தனர்.

வங்கதேச தரப்பில் அபு ஜெயத்து 4 விக்கெட்டும், நயும் 4 விக்கெட்டும் தைஜுல் இஸ்லாம் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய வங்கதேச அணியினர் ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்க்கொண்டனர். வங்கதேச அணி ஆறு விக்கெட் இழந்து 560 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ரஹிம் 203, மொமினுல் 132, ஷான்டு 71, லித்தன் தாஸ் 53, தமீம் 41 ரன்களும் சேர்த்தனர்.

ஜிம்பாப்வே ஆறு விக்கெட் வீழ்த்தினாலும் சொல்லிகொள்ளும் படி பந்துவீச்சில் சிறப்பு எதுவுமில்லை. வங்கதேச டெஸ்ட் போட்டியில் இது மூன்றாவது அதிகபட்ச ரன் ஆகும்.

நான்காவது நாள் இன்று 295 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஜிம்பாப்வே அணி ஆடி வருகிறது.

மதிய உணவுக்கு பிறகு ஜிம்பாவே அணி 143 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து இருந்தது. கேப்டன் எர்வின் 43, ராசா 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மருமா 24 ரன்களும், ஷக்காவா 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்பில் நயிம் ஹாசன் 3 விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்டம் வங்கதேச அணி கைக்கு சென்றுவிட்டது. ஜிம்பாப்வே வெற்றி சதவீதம் குறைவாகவே உள்ளது.

இன்னும் ஒன்றை நாட்கள் மீதமுள்ளதால் ஜிம்பாப்வே அணி கைவசம் நான்கு விக்கெட்டு மட்டுமே உள்ளது.

ரஹீம் மூன்றாவது இரட்டைச்சதம்

வங்கதேச அணியின் ரஹீம் அடித்த இரட்டை சதம் அவர் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதமாகும். அதற்கு முன்னாள் 2018-ஆம் ஆண்டு இதே மைதானத்தில் இதே அணியுடன் 219 ரன்களும், 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 206 ரன்கள் சேர்த்து இருந்தார்.

3

WWCT20I: மகளிர் உலககோப்பை வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

0
WWCT20I மகளிர் உலககோப்பை பெண்கள் டி20 உலகக்கோப்பை இந்தியா vs வங்கதேசம்

WWCT20I: மகளிர் உலககோப்பை வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா.  womens t20 world cup 2020 match update. இந்தியா vs வங்கதேசம் பெண்கள் டி20 உலகக்கோப்பை.

WWCT20I: மகளிர் உலககோப்பை

பிப்.25: 7-வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. பத்து அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.

ஏ-பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும், பி-பிரிவுவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா vs வங்கதேசம்

முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்திய அணி. இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய வீராங்கனை ஷாபாலி வர்மா அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

ரோட்ரிக்ஸ் 34 ரன்களும் சேர்ந்தனர். மொத்தமாக இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. வங்கதேச தரப்பில் சல்மா கதுன் 2 விக்கெட்டும், பான கோஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதிகபட்சமாக நிகர் சுல்தானா 35 ரன்களும், மூர்ச்சித கதுன் 30 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பூனம் யாதவ் 3 விக்கெட்டும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இருவருமே மிகவும் அருமையாக பந்து வீசினார்கள். இந்த வெற்றிக்கு இவர்களின் பந்துவீச்சு அதிக பங்களிப்பு ஆற்றியது.

உலககோப்பையில் இந்திய அணி பெறும் இரண்டாவது வெற்றி இது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

அதிரடியாக ஆடிய ஷாபாலி ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இந்திய அணியினர் இப்போட்டியில் சில தவறுகள் செய்தனர்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மான்பரீத் கவுர், ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறார். இந்திய மகளிர் ரன் சேர்ப்பதில் பார்ட்னர்சிப் அமைப்பதில் தவறுகின்றனர்.

இரண்டு ஆட்டகளிலும் பூனம் யாதவ் பந்து வீச்சு மட்டுமே வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 27-ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

நேற்று நடந்த மற்றோரு ஆட்டத்தில் இலங்கையை ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இன்று பிப்ரவரி 25 உலககோப்பை போட்டி எதுவும் நடைபெறவில்லை.

3