Home Blog Page 257

சர்தார் படேல் மைதானம் டிரம்ப் & மோடி திறந்து வைத்தனர்

0
சர்தார் படேல் மைதானம்

சர்தார் படேல் மைதானம் டிரம்ப் & மோடி திறந்து வைத்தனர். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் பற்றிய சுவாரசிய தகவல்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மெல்போர்ன் மைதானம். இதைவிட அகமதாபாத் மோதிராவில் சர்தார் படேல் மைதானம் பெரியதாகக் கட்டப்பட்டுள்ளது.

இது நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

குஜராத் மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக மோடி இருக்கும் காலத்தில் இருந்தே குஜராத்தில் மிகப்பெரிய மைதானம் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்ததாம்.

அவர் பிரதமர் ஆகிய பிறகு அமித் சா குஜராத் கிரிக்கெட் குழு தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின் இருவரும் கலந்தோசித்து பழுதடைந்த மைதானத்தை சீரமைக்காமல் புதிய மைதானம் கட்ட முடிவு செய்தனர்.

சர்தார் படேல் மைதானம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

முதலில் பழைய மைதானத்தின் டேட்டா பார்த்து விடுவோம். பழைய மைதானம் 50 ஏக்கர் பரப்பளவு, 1982-2015 வரை இயக்கத்தில் இருந்தது.

மொத்தம் 57000 இருக்கைகள், 37 சர்வதேச போட்டிகள் இதில் 12 டெஸ்ட், 24 ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டி நடைபெற்றுள்ளது. இது குஜராத்தின் மோதிரா எனும் இடத்தில் இருந்தது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

2016-ஆம் ஆண்டில் அதை முழுவதுமாக இடித்துவிட்டு ரூபாய் 800 கோடி பட்ஜெட்டில் அதே இடத்தில் புதிய மைதானம் கட்ட தொடங்கினர்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருந்த மெல்போர்ன் 1,00,024 இருக்கைகள் கொண்டுள்ளது. இப்பொழுது மோதிரா மைதானம் 1,10,000 இருக்கைகள் கொண்டு கட்டபட்டுள்ளது.

இதற்கு முன் இந்தியாவின் மிகப்பெரிய மைதானமாக இருந்த ஈடேன் கார்டென் வெறும் 64,000 இருக்கைகள் மட்டுமே கொண்டிருந்தது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்த பாப்புளஸ் நிறுவனம்தான் இந்த மைதானத்தையும் வடிவமைத்துள்ளது. லார்சன் மற்றும் டர்போ (L&T) நிறுவனம் இதன் கட்டுமானப் பணியை ஏலம் எடுத்தது.

சர்தார் படேல் மைதானம் சிறப்பு அம்சங்கள்

63 ஏக்கர் பரப்பளவில் 800 கோடி பொருட்செலவில் 110000 இருக்கைகள் கொண்டு பிரம்மாண்டமாக வடிமைக்கப்பட்டுள்ளது. இதில் 10000 பைக் & 3000 கார் பார்க்கிங் வசதியும் உள்ளது.

ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், 76 கார்போர்ட் ஏ‌சி பெட்டிகள் மற்றும் 4 ட்ரெஸ்ஸிங் அறைகள் கொண்ட வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது.

மைதானத்துக்குள் உணவகம், பார்ட்டி ஹால் மற்றும் ரூம் வசதிகள் கொண்ட 55 கிளப் ஹவுஸ்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சர்தார் படேல் மைதானம் சிறப்பு அம்சங்கள்

மழை பெய்து 30 நிமிடத்திற்குள் மைதானத்தில் இருக்கும் அனைத்து தண்ணீரும் உலர்ந்துவிடும் அளவிற்கு மைதான மேற்பரப்பு வடிவைக்க பட்டுள்ளது. இதனால் மழையின் மூலம் போட்டி பாதிக்க வாய்ப்பு குறைவு.

மோதிரா மைதானத்தில் மொத்தம் 11 பிட்ச்கள் உள்ளன. அதில் 3 உள்விளையாட்டு பயிற்சி பிட்ச்களும் 6 வெளி விளையாட்டு பயிற்சி பிட்ச்களும் அடங்கும்.

மைதானத்தின் ஒவ்வொரு ஸ்டாண்டுகளிலும் கழிப்பறை வசதியும் சிற்றுண்டி உணவக வசதியும் செய்யப்பட்டுள்ளது.

புதிய மைதானத்தில் இன்னும் எந்த போட்டியும் நடைபெறவில்லை. இந்த வருட ஐ‌பி‌எல் நடக்க வாய்ப்பு குறைவு. முதல் சர்வதேச போட்டி ஐ‌பி‌எல் போட்டிக்கு பிறகு நடக்கலாம்.

3

25/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
25/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

25/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

சிறு சிறு உடல்நலப் பிரச்சினைகள் வந்து வந்து போகும் நாளாகக் காணப்படுகிறது. முருகரை வழிபட அவற்றிலிருந்து விடுபட வழி பிறக்கும்.

சிலர் புதிய போதைப் பழக்கத்திற்கு அடிமையாக நேரிடலாம். அதிலிருந்து விடுபடுவது அவசியம். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

நல்ல வேலைவாய்ப்பைப் பெறும் நாளாகக் காணப்படுகிறது. புதிய எதிரிகள் உருவாகலாம். அண்டை அயலாரோடு பகைமை கொள்ளாமல் இணக்கம் கொள்வது அவசியம்.

வியாபாரகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் வதந்தி பேசாமல் இருப்பது சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண்: 1

மிதுன ராசிபலன்

பஞ்சமத்தில் சந்திரன் இருப்பது பெரும் பாக்கியத்தைத் தரும் நாளாகக் காணப்படுகிறது. அலுவலகத்தில் இருந்த சிக்கல் தீர்ந்து நல்ல பெயர் எடுக்கும் நாளாகக் காணப்படுகிறது.

கண் சம்மந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும். வியாபாரிகளுக்கு சிறந்த லாபம் உண்டு.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம்

கடக ராசிபலன்

வீடு கட்ட நல்ல கடன் வசதி கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகக் காணப்படுகிறது.

சகோதரர்களுடன் பகை கூடாது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் நினைத்த வண்ணமே கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

சிம்மம் ராசிபலன்

அதீத தைரியத்தோடு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் நாளாகக் காணப்படுகிறது.

எந்த நேர்முகத் தேர்விலும் எளிதாக வெற்றியடையும் அமைப்பு காணப்படுகிறது. ஆடம்பரச் செலவு செய்யாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பவள வண்ணம், அதிர்ஷ்ட எண் : 9

கன்னி ராசிபலன் 

சந்திரன் தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் நல்ல தனவரவு உண்டு. வீடு சம்மந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

வண்டி, வாகனங்களில் வித்தைகள் வேண்டாம். வீடு கட்டும் அமைப்பு கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: தேன் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

துலாம் ராசிபலன்

ராசியிலேயே சந்திரன் உலாவுவதால் சிறு சிறு, மனக்குழப்பம், டென்ஷன் அதிகரிக்கும். சந்தனப் பொட்டிட்டு சந்திரனை வணங்க மன இறுக்கம் குறையும். முதுகு வலி ஏற்பட்டு நிவர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம். அதிர்ஷ்ட எண் : 4

விருச்சிக ராசிபலன்

எலும்பு சம்மந்தமான பிரச்சினைகள் வந்து வந்து போகலாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.

வயது முதிர்ந்தோர் தங்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். நாடகக் கலைஞர்கள் புகழ் பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஜா வண்ணம், அதிர்ஷ்ட எண் : 7

தனுசு ராசிபலன்

சந்திரன் லாபஸ்தானத்தில் இருப்பதால் எதிலும் முன்னேற்றம் உண்டு. எடுத்த காரியத்தில் ஜெயம் ஆகியவை உண்டு.

இளைஞர்கள் விபரீத விளையாட்டுக்களைத் தவிர்ப்பது நலம் பயக்கும். மின்சாதனங்களைக் கையாள்கையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண் : 3

மகரம் ராசிபலன் 

உற்சாகமான ரம்மியமான நாளாகக் காணப்படுகிறது. சந்தோஷங்கள் நிரம்பி வழியும் நாளாகக் காணப்படுகிறது.

மனைவியுடன் இணக்கம் ஏற்படும். கழுத்து வலி வந்து நீங்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: அடர்சிகப்பு வண்ணம், எண்: 9

கும்ப ராசிபலன்

அதிர்ஷ்டகரமான நாளாகக் காணப்படுகிறது. மிகவும் நல்ல நாள். நினைத்த யாவும் நினைத்தபடியே அமையும். கேளிக்கை, விளையாட்டு என நண்பர்களோடு குதூகலிக்கும் நாளாகக் காணப்படுகிறது.

தூர தேசங்களிலிருந்து நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். நிறைய ஆடம்பரப் பரிசுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பால் வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

மீனம் ராசிபலன் 

சந்திரன் எட்டில் காணப்படுவதால் சிக்கல் மிகுந்த நாளாகக் காணப்படுகிறது. சொல்லும் கருத்துக்கள், செய்யும் செயல்கள் ஆகியவற்றில் கவனம் தேவை.

தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை. சிலருக்கு ரம்மியமான மனதிற்கினிய நிகழ்வுகள் நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

25/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

பாகிஸ்தான் குடியுரிமை பெற உள்ளார் வெ.இண்டீஸ் சமி

0
வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சமி ஆரிப் அல்வி கௌரவ பாகிஸ்தான் குடியுரிமை

பாகிஸ்தான் குடியுரிமை பெற்றார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேரன் சமி. பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டி நடைபெற உதவியதற்காக கௌரவ குடியுரிமை பெற உள்ளார்.

டி20 ஆண்கள் உலககோப்பையை 2012 மற்றும் 2016-ஆம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளுக்கு வாங்கித் தந்தவர் முன்னாள் கேப்டன் டேரன் சமி.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில் 2016-ம் ஆண்டு முதல் விளையாடிக் கொண்டிருக்கும் டேரன் சமி பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.

2017-ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கோப்பையை பெஷாவர் அணிக்காக பெற்று தந்தவர் சமி. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் ஆனார்.

கௌரவ குடியுரிமை

இதையடுத்து பெஷாவர் ஜால்மி அணியின் உரிமையாளர் பாகிஸ்தான் அதிபருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகள் நடைபெற டேரன் சமியும் ஒரு காரணம், ஆகையால் அவருக்கு பாகிஸ்தான் குடியுரிமை மற்றும் விருதும் வழங்கிட வேண்டுமென்று கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்று டேரன் சமிக்கு இஸ்லாமாபாத்தில் மார்ச் 23-ந் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அரசு சார்பில் அதிபர் ஆரிப் அல்வி, கௌரவ குடியுரிமைக்கான சான்றிதழ் மற்றும் விருது வழங்குகிறார்.

3

RSAvsAUS 2nd T20: ஆஸி.க்கு பதிலடி கொடுத்த தெ.ஆப்பிரிக்கா

0
RSAvsAUS 2nd T20

RSAvsAUS 2nd T20: ஆஸ்திரேலியாவிற்கு பதிலடி கொடுத்தது தென் ஆப்பிரிக்கா. 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை வென்றது.

RSAvsAUS 2nd T20 2020

பிப்.24: போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இரண்டாவது டி20 போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை வென்றது.

டாஸ் வென்ற ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க ஆட்டகாரர் கேப்டன் குயின்டன் டிகாக் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் 21 ரன்களுக்கு 2 விக்கெட் வீழ்த்தினார். 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா கடைசி பத்து ஓவர்களில் ரன்கள் எடுக்க திணறினார்கள்.

தென் ஆப்ரிக்காவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.

ஆட்டநாயகாக தென் ஆப்பிரிக்காவின் டி காக் தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 21-தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியாவிற்கு இரண்டாவது போட்டியில் பதிலடி தந்தது தென் ஆப்பிரிக்கா.

கோப்பையை தீர்வு செய்யும் மூன்றாவது மற்றும் இறுதி ஆட்டம் வருகிற 26-ஆம் தேதி கேப் டவுனில் நடைபெறுகிறது.

3

மலேசியா பிரதமர் மகாதீர் பதவியை ராஜினாமா செய்தார்

0
மலேசியா பிரதமர் மகாதீர்பதவியை ராஜினாமா செய்தார்

மலேசியா பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தியாவுடன் மோதலைக் கடைபிடித்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

பிப்.24: மலேசியா பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மலேசியா மன்னர் சுல்தான் அப்துல்லாக்கு அனுப்பினார்.

2018-ஆம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜீப் ராசாக்கை எதிர்த்து வெற்றி பெற்ற மகாதீர் முகமது தன் நாட்டு மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அறிவித்தார்.

இந்தியாவுடன் மோதல்

மகாதீர் இந்தியாவின் காஷ்மீர் மற்றும் சிஏஏ சட்டத்திற்கு எதிராகப் பேசியதால், மலேசியாவுடன் அதிக வர்த்தகத்தில் உள்ள பாமாயில் ஏற்றுமதியை இந்தியா முறித்துக் கொண்டது.

அதுவே அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாகக் காரணமானது. பின்பு பாகிஸ்தானுக்கு அதிக பாமாயில் ஏற்றுமதி செய்வதற்கு கையழுத்தானது குறிப்பிடத்தக்கது.

இவரின் இந்த ராஜினாமா மலேசியா மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பின்னால் உள்நாட்டு அரசியல் அழுத்தம் உள்ளது.

இதன் காரணமாகவே மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

3

கர்னல் போர்; வரலாற்றில் இன்று பிப்ரவரி 24

0
கர்னல் போர்

கர்னல் போர்; வரலாற்றில் இன்று பிப்ரவரி 24, நாதிர் சா மற்றும் மொஹம்மது சா பேச்சுவார்த்தை, இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil.

1739-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாள் பெர்சியா நாட்டின் மன்னன் நாதிர் சா இந்தியாவின் வடக்கில் இருக்கும் கர்னல் என்ற இடத்தில் மோகலாய மன்னன் மொஹம்மத் சாவின் படையை துவம்சம் செய்த நாள்.

நாதிர் சா கிழக்கு ஆப்கானிஸ்தான் அதனை சுற்றிய பகுதிகளை கைப்பற்றிய பிறகு தன் படையை டெல்லியை நோக்கி அனுப்பினான்.

மோகலாயர்களை  விட எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் பெர்சியா படைகள் மிகுந்த திறன் வாய்ந்ததாகவும் பலமாகவும் இருந்தது.

கர்னல் என்ற இடத்தில் இரு படைகளும் மோதியதில் வெறும் மூன்று மணி நேரத்தில் மோகலையா படையை வீழ்த்தி நிலைகுலைந்தனர்.

நாதிர் சா மற்றும் மொஹம்மது சா பேச்சுவார்த்தை

மோகலாய வீழ்ச்சிக்கு பிறகு தங்களுக்குள் நிலங்களை பகிர்ந்து கொள்வது பற்றி இரு மன்னர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். நாதிர் சா எளிதில் சம்மதிக்கவில்லை.

தலைநகர் டெல்லியில் பெர்சியா படைகள் புகுந்து அனைத்து பொன் பொருட்களை கொள்ளையடித்து ஊரையும் நாசம் செய்தது.

பிறகு மொஹம்மது ஒரு பெரிய இழப்பீடு தொகையை கொடுத்து நிலங்களை பிரித்துக்கொண்டனர்.

இப்போரில் 30000-க்கும் மேற்பட்டோர் உயிரழந்தனர். இந்தியாவில் மோகலாய பேரரசர்களின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த காலம் அது.

வரலாற்றில் இன்று. today what special day in world. இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

IndvsNZ 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா முரட்டு தோல்வி

0
IndvsNZ 1st Test இந்தியா முரட்டு தோல்வி

IndvsNZ 1st Test: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா முரட்டு தோல்வி. இந்தியாவை வீழ்த்தி நூறாவது வெற்றியை ருசித்தது நியூசிலாந்து அணி.

IndvsNZ 1st Test

பிப்.24 : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒய்ட்வாஷ் செய்தது.

இதற்கு பழித்தீர்க்கும் விதமாக ஒருநாள் தொடரில் இந்தியாவை 0-3 என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்தது நியூசிலாந்து.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21-தேதி துவங்கியது.

முதல் இன்னிங்க்ஸ்

டெஸ்டில் தொடர் வெற்றிகளைச் சந்தித்து வந்த இந்திய அணி நியூசிலாந்துக்கு சவால் கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா, நியூசிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக ரகானே 46 ரன்களும், மயாங் அகர்வால் 34 ரன்களும் எடுத்தனர், நியூசிலாந்து தரப்பில் சவுதீ மற்றும் ஜேமிஸ்சன் தல 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய நியூசிலாநது 341 ரன்கள் குவித்து இந்தியாவை விட 183 ரன்கள் முன்னிலை பெற்றது.

நியூசிலாந்தில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 89 ரன்களும், டெய்லர் மற்றும் ஜேமிஸ்சன் தல 44 ரன்களும், கிராண்ட்கோம் 43 ரன்களும் சேர்த்தனர். இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டும், அஷ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்க்ஸ்

183 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி போராட்ட குணம் இல்லாத பேட்டிங்கை ஆடியது.

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி (2 & 19) இரண்டு இன்னிங்சிலும் ஏமாற்றினார். இந்தியாவின் ஆட்டத்தில் இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

தொடக்க ஆட்டக்காரர் பிர்த்வி ஷா, புஜாரா,ஹனுமன் விஹாரி இருவரின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமே இல்லாதது ஆட்டத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்தியா இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியாவில் அதிகபட்சமாக மயாங் 58, ரகானே 29, பந்த் 25 ரன்களும் சேர்த்தனர். நியுசிலாந்து தரப்பில் சவுதீ 5 விக்கெட்டும், போல்ட் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஒன்பது ரன்கள் என்ற ஒற்றை இலக்கு எண்ணை எடுத்தால் வெற்றி என்று இறங்கிய நியூசிலாநது அணி, 1.4 ஓவர்களில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.

இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்களை கூட இந்திய அணி கடக்கவில்லை, பும்ரா மற்றும் சமி பந்து வீச்சும் சொல்லும்படி இல்லை.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட் வீழ்த்திய டிம் சவுதீக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

100-வது டெஸ்ட் வெற்றி

441 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்துக்கு இது 100-வது டெஸ்ட் வெற்றியாகும். விராட் கோலி தலைமையில் முதலில் பேட் செய்து இந்திய அணி தோற்பது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்னர் 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் தோற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டெஸ்ட வருகிற பிப்ரவரி 29 தேதி கிரிஸ்ட்சர்ச்சில் நடைபெற இருக்கிறது.

3

24/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
24/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

24/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

லாபங்கள் பெருகக் கூடிய நாளாகக் காணப்படுகிறது. வியாபாரிகள் பழைய பகைமையை மறந்து அனைவருடனும் நட்பு பாராட்டினால் இரட்டிப்பு வெகுமானம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட எண்: 5; அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

அதிர்ஷ்டகரமான நாளாகக் காணப்படுகிறது. எந்த நேர்முகத் தேர்விலும் எளிதாக வெற்றி பெற்று நல்ல வேலைவாய்ப்பைப் பெறும் நாள். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 2

மிதுன ராசிபலன்

நல்ல நாளாகக் காணப்படுகிறது. எதிலும் முன்னேற்றம் உண்டு. ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைக்கும் நாள். எடுத்த காரியங்கள் வெற்றியடையும் சிறந்த நாளாக இந்த நாள் இருக்கிறது.

அதிர்ஷ்ட எண்: 1; அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம்

கடக ராசிபலன்

சுபமான நாளாகக் காணப்படுகிறது. தைரியம் மிகுந்து வெற்றி வாய்ப்புக்களுக்காக உழைக்கும் நாள். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மிக அவசியம். காது சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வந்து சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம் ராசிபலன்

சுபமான நாளாகக் காணப்படுகிறது. தைரியம் மிகுந்து வெற்றி வாய்ப்புக்களுக்காக உழைக்கும் நாள்.

உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மிக அவசியம். காது சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வந்து சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 5

கன்னி ராசிபலன் 

சுபமான நாளாகக் காணப்படுகிறது. தைரியம் மிகுந்து வெற்றி வாய்ப்புக்களுக்காக உழைக்கும் நாள்.

உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மிக அவசியம். காது சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வந்து சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 5

துலாம் ராசிபலன்

கொஞ்சம் விரையமான நாளாகக் காணப்படுகிறது. வேலைபார்க்கும் இடத்தில் பேசாமல் காரியமாற்றுவது அவசியம்.

தகுந்த வேலை மாற்றம் கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. அம்மன் அருள் காக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: தேன் வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிக ராசிபலன்

மிகவும் நல்ல நாளாகக் காணப்படுகிறது. அதிர்ஷ்டங்கள் கூடி வரும். சௌகரியமான நினைத்த வேலை இன்று கிடைக்க வாய்ப்புள்ளது.

தங்கு தடையற்ற செல்வ வளம் கிடைக்கும் நாள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இருக்கும் கஷ்டம் நிவர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4

தனுசு ராசிபலன்

நல்லதொரு நாளாகக் காணப்படுகிறது. எந்த நேர்முகத் தேர்விலும் அசாத்தியமாக பதில் சொல்லி அசத்துவீர்கள். கவிதை கட்டுரை என்று உங்கள் புகழ் ஓங்கும். இன்பமான நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: ரோஜா வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 7

மகரம் ராசிபலன் 

சாதுர்யமான நாளாகக் காணப்படுகிறது. எதிலும் வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது. திருமணப் பேச்சுகள் சுப முடிவை எட்டும்.

வெளிநாட்டு வேலை கிடைக்கக் கூடிய நாள். யோகமான நாளாக விளங்குகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் வண்ணம்; எண்: 3

கும்ப ராசிபலன்

எட்டில் சந்திரன் இருப்பதால் நிதானம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும்.

எதிலும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது. அளந்து அறிவோடு அமைதியாகப் பேச வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர்சிகப்பு வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 9

மீனம் ராசிபலன் 

மிகவும் சந்தோஷமான நாளாகக் காணப்படுகிறது. மனம் விரும்பியவரோடு குதூகலமாக இருக்கக் கூடிய நாள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி, நண்பர்களோடு அரட்டை என மிகவும் ஏகாந்தமாக இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 6

24/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

கேஜிஎப் 2: சோன்பத்ரா தங்கச்சுரங்கம் மர்மமான கதை

2
கேஜிஎப் 2 சோன்பத்ரா தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு மர்மமான கதை Kolar Gold Fields

கேஜிஎப் 2: சோன்பத்ரா தங்கச்சுரங்கம் மர்மமான கதை. கோலார் தங்க வயல் (KGF – Kolar Gold Fields) போன்று உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு உண்மையா?

கேஜிஎப் 2: KGF – Kolar Gold Fields

கர்நாடகத்தில் கோலார் என்ற இடத்தில் தங்கச்சுரங்கம் இருப்பது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் அந்த தகவலை வெளியில் கசிய விடாமல் அங்கு இருந்த தாதாக்கள் ரகசியமாக பாதுகாத்து பெரும் செல்வந்தர்களாக உருவெடுத்தனர்.

இதைப்பற்றிய படமும் கேஜிஎப் என்ற பெயரிலேயே வெளியானது. கேஜிஎப்-இல் சோழர்கள் காலம் தொட்டே தங்கம் எடுக்கப்பட்டு வந்ததாகவும் கல்வெட்டுகள் உள்ளன.

கோலார் தங்கச் சுரங்கம் பல அரசியல் தலைவர்கள், பல மும்பை தாதாக்கள் மத்தியில் நிழல் உலகமாகச் செயல்பட்டு வந்துள்ளது.

Sonbhadra Gold Hills 

நேற்றைய முன்தினம் அனைத்துப் பத்திரிக்கை, சோஷியல் மீடியாக்களில் இதுதான் ஹாட் டாபிக். உலக அளவில் இந்த செய்தி ட்ரெண்டிங். 3000 டன் தங்கம் என்றால் சும்மாவா?

உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ஹார்தி , சோனா பகதி ஆகிய இடங்களில் தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு எனச் செய்திகள் வெளியாகின.

இந்த செய்தியை வெளியிட்டவர் சோன்பத்ரா மாவட்ட சுரங்கத்துறை அதிகாரி கே.கே.ராய். ஊடகங்கள் முன்பு தோன்றி இதைத் தெரிவித்தார்.

அங்கு 3300 டன் தங்கம் இருக்க வாய்ப்புள்ளதாகவும், கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த தங்கச் சுரங்கங்கள் ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் அடுத்து நாளே இந்த தகவலை இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் டைரக்டர் எம்.ஸ்ரீதர் மறுத்துள்ளார். இந்த தகவல் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய புவியல் ஆய்வு மையம் எந்த ஒரு அறிக்கையும் சோன்பத்ரா சுங்கத்துறை அதிகாரிகளிடம் சமர்பிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 1998 முதல் 2000 ஆண்டுகள் வரை தங்கப் படிமங்கள் தேடும் பணி நடைபெற்றது. ஆனால் அங்கு அதிக அளவில் தங்கம் இருப்பதாக முடிவுகள் கிடைக்கவில்லை.

அப்படி அங்கு அதிக அளவில் தங்கம் இருந்தால் நிச்சயம் அதை உத்திரப்பிரதேச அரசிடம் ஒப்படைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒரு கேஜிஎப்? தங்கச்சுரங்கம் மர்மமான கதை

முதலில் ஒரு அதிகாரி மீடியா முன்பு தோன்றி தங்கம் இருக்கிறது. அதுவும் 3300 டன் தங்கம் என புள்ளி விவரங்களுடன் கூறி ஏலமும் விடப்படும் எனத் அறிவித்தார்.

தங்கம் இருக்கிறது என்றால் இருக்கிறது என்று கூறி இருக்கலாம். ஏலம் விடப்படும் என தெரிவித்து இருந்தார்.

ஏலம் விடப்படும் என்றால் உத்திரப்பிரதேச மாநில அரசு முடிவு செய்த விசயமாக இருக்கும். அந்த அரசின் அனுமதி இல்லாமல் கே.கே.ராய் இப்படி ஒரு தகவலை மீடியா முன்பு தோன்றி கூறியிருக்கமாட்டார்.

அடுத்தநாளே இந்திய புவியியல் ஆய்வு மையம் இதை மறுத்துள்ளது. ஆனால் ஏன் சுங்கத்துறை அதிகாரி இப்படி கூறினார் என முழுமையான தகவல் அளிக்கப்படவில்லை.

இதற்கு இடையில் என்ன நடந்தது? தங்கச்சுரங்கம் உண்மையில் இல்லையா? அல்லது தங்கச்சுரங்கம் இருப்பது மறைக்கப்படுகிறதா?

3000 டன் தங்கம் குட்டி மலையில் இருந்தாலும், அதைப்பார்த்து மெகா உயரத்தில் இருக்கும் இமயமலையே பொறமை கொள்ளும் உலகம் இது.

இதில் மனிதர்கள் என்ன விதிவிலக்கா? நெருப்பு இல்லாமல் புகையாது என்பதைப்போல உபியில் தங்கச்சுரங்கம் மர்ம முடிச்சாக மாறியுள்ளது. அதை அவிழ்க்க மீண்டும் ஒரு ராக்கி வருவா?

3

23/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
23/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

23/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

கல்வியில் நல்ல முன்னேற்றம் காணும் நாள். வியாபாரிகளுக்கும் பெரும் லாப முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் அசௌகரியங்கள் தீரும்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: மரகதம்

ரிஷபம் ராசிபலன்

சிறந்த வகையிலான தகவல் தொடர்புத் துறை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம். இளைஞர்களுக்கு கணினித் துறையில் வேலை கிட்டும். நண்பர்களோடு பேசுகையில் நிதானம் தேவை. விளையாட்டு விபரீதமாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: தேன்வண்ணம் அதிர்ஷ்ட எண்: 2

மிதுன ராசிபலன்

நல்ல தனவரவுடைய நாளாகக் காணப்படுகிறது. நிதானமான போக்கு தேவைப்படுகிறது. வேலை பார்க்குமிடத்தில் மேலதிகாரியை பகைத்தல் கூடாது.

அதிர்ஷ்ட எண்: 4; அதிர்ஷ்ட நிறம்: காக்கி வண்ணம்.

கடக ராசிபலன்

எதிலும் சற்று கவனம் தேவை. வெற்றியடையும் நாளாகக் காணப்பட்டாலும் சிறிது வேலைப்பளு அதிகம் இருக்கும். பொறுமையுடன் வேலையில் ஈடுபடுவது சாலச் சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா வண்ணம்; அதிர்ஷ்ட எண் : 7

சிம்மம் ராசிபலன்

நல்ல நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. தாய் தந்தையரின் நலத்தைக் கவனித்துக் கொள்வது மிக அவசியம்.

தந்தையாரின் உடல்நலத்தைப் பேணுவது சிறந்தது. உங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்; அதிர்ஷ்ட எண் : 3

கன்னி ராசிபலன் 

மிகச் சிறந்த லாபகரமான நாளாகக் காணப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளால் பெருமைகள் கூடி வரும். பெண்களுக்கு மாமியாரால் பிரச்சனை உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: அடர்சிகப்பு; அதிர்ஷ்ட எண்: 9

துலாம் ராசிபலன்

அதிர்ஷ்டம் கொட்டும் நாள். எந்த வாய்ப்புகள் வந்தாலும் தவிர்க்காமல் ஏற்றுக் கொள்வது நலம்.

சிறிய வேலையாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக அந்த வேலையைச் செய்து காட்ட வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம். அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிக ராசிபலன்

தந்தைவழி உறவுகளால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டு தொடர்பான அனைத்து விஷயங்களும் வெற்றி பெறும். வியாபாரத்தில் வெற்றி உண்டு. தூரதேசத்தில் வசிப்பவர்கள் பற்றிய பயம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஜா வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

தனுசு ராசிபலன்

இன்று நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவீர்கள். நண்பர்களுடன் உணர்ச்சிவசமாகப் பேசி மகிழ்வீர்கள். அதேநேரம் உணர்ச்சிவசப்படாமல் அறிவுக்கு வேலை கொடுத்து பணியாற்றினால் இன்று எதிலும் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம், அதிர்ஷ்ட எண்: 2

மகரம் ராசிபலன் 

நண்பர்களிடத்தில் உள்ள பகைமையை மறந்து மனம் களிக்க வேண்டிய நாள். அவசரப்பட்டு நல்ல நண்பர்களை இழந்து விட வேண்டாம்.

எதிலும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், எண்: 1

கும்ப ராசிபலன்

மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். ஆறுபடை முருகன் வீட்டில் ஒன்றை வழிபடுவது நல்லது. வெளிநாட்டில் இருப்போர் ஓம் சரவணபவ என உச்சரித்தால் உயர்வடையலாம்.

அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5

மீனம் ராசிபலன் 

பூர்வ புண்ணிய அனுக்கிரகம் முழுமையாகக் கிடைக்கக் கூடிய நாள். எல்லா அதிர்ஷ்டமும் கிடைக்கக் கூடிய நாளாகக் காணப்படுகிறது. குலதெய்வ வழிபாடு இன்னும் குதூகலத்தை அதிகப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

23/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3