Home Blog Page 258

 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் – ஜெயலலிதா பிறந்தநாள்

0
 பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் - ஜெயலலிதா பிறந்தநாள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் – செல்வி ஜெ. ஜெயலலிதா பிறந்தநாள், தமிழக பெண் குழந்தை பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாநில பெண் குழந்தைகள்  பாதுகாப்பு தினம்

பிப்ரவரி 24, மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான  செல்வி ஜெ. ஜெயலலிதா பிறந்த நாள். இந்த நாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க அரசின் முடிவு மிக சரியானது என்பதை ஜெயலலிதா அமல்படுத்திய திட்டங்களைப் பார்த்தாலே நமக்கு புலப்படும் என்பதை மறுக்க முடியாது  .

திரையுலகில் கொடிகட்டி பறந்த ஜெயலலிதா:

1980-களில் திரையுலகில் கொடிகட்டி பறந்த ஜெயலலிதா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றால் அரசியலில் நுழைந்தார்.

அவர் மரணிக்கும் வரை அரசியலில் முடிசூடா அரசியாக விளங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.

அவரது வாழ்வில் பெறாத சோதனைகளும் இல்லை சாதனைகளும் இல்லை எனலாம். அந்த அளவுக்கு அவரது வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந்தது  .

தொட்டில் குழந்தை திட்டம்:

ஜெயலலிதா கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் முறையாக முதல்வராக பதவியேற்றார். 1992-ஆம் ஆண்டு நாட்டிலேயே முதல் முறையாக பெண்சிசுக்கொலையை தடுக்கும் பொருட்டு தொட்டில் குழந்தை திட்டத்தை அமல்படுத்தினார்.

இதன்மூலம் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் பெறாத தாயாக  விளங்கினார். இந்த திட்டம் மூலம் பிறந்த பெண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர்கள், அரசின் காப்பகத்தில் ஒப்படைக்கலாம் என்று வழி ஏற்படுத்தப்பட்டது .

பெண் குழந்தை பாதுகாப்பு  திட்டம்:

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், இந்த திட்டம் மூலம் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அப்பெண்ணின் பெயரில் வங்கியில் 50000 ரூபாய் வைப்புத்தொகை மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என்றால் இருவரின் பெயரிலும் 25000  ரூபாய்  இருப்பு வைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் வழங்கப்பட்டது.

அந்த திட்டத்தில் பயனடைந்தோர் இன்று நல்ல வாழ்வு பெற்று சமூகத்தில் சிறந்து விளங்கி வருகின்றனர்

கடந்த 2011-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகப் பதவியேற்றவுடன் பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவித் தொகையும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி ஏழைப்பெண்களின் திருமண வாழ்வை சொர்க்கம் ஆக்கினார் .

அதுமட்டுமின்றி அம்மா உணவகம் , அம்மா சிறப்பு காப்பீடு, பாலூட்டும் தாய்மார்களுக்கு பொது இடங்களில் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்க்காக தனியறையை உருவாக்கி பெண்களின் மானம் காத்தார் .

பெண்களுக்கான முழு உடல் எடை பரிசோதனை திட்டம்:

ஒருவரின் உடல் நலனை உடல் எடையை வைத்து எடை போடலாம் என்ற விதிக்கேற்ப இந்த பரிசோதனை திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசு அங்கன்வாடி மையம் மூலம் குழந்தைகள், இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைத்து தரப்பு பெண்களின் உடல் எடை அளவிடப்பட்டு அதற்கேற்றாற் போல் ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டு வருகிறது .

அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம்:

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு உதவிடும் வகையில் அவர்களுக்கு சோப்பு, பொம்மை, துண்டு, ஷாம்பு, புதிய ஆடை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகம் இலவசமாக வழங்கப்படும் .

அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்:

இந்த திட்டத்தின் கீழ் கருவுற்ற பெண்களுக்கு மகப்பேறு வரை மூலிகைகள் தரப்படும். இன்னும் பல குறிப்பிடத்தக்க திட்டங்கள் உள்ளன.

பதவி ஏற்றது முதல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கே உரித்தான சீரிய திட்டங்கள் மூலம் பெண்களை பாதுகாத்தார் என்றால் மிகையல்ல.

அவர் ஆட்சியில் ஊழல், சொத்துக்குவிப்புகள் என்று பல குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனைகள் வழக்கப்பட்டாலும், பெண்களுக்கு என்று அவர் செய்த நலத்திட்டங்கள் அனைத்தும் வரவேற்கத்தக்கது.

எனவே அவருடைய பிறந்த தினம், பெண் குழந்தைகள் பாதுக்காப்பு நாளாக கொண்டாடுவது சிறந்ததே.

3

உலக சிந்தனை தினம்; வரலாற்றில் இன்று 22/02/2020

0
உலக சிந்தனை தினம் வரலாற்றில் இன்று 22/02/2020 today what special day in world இன்றைய நாள் சிறப்பு

உலக சிந்தனை தினம்; வரலாற்றில் இன்று 22/02/2020, world thinking day. women’s guide and scout. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil.

women’s guide and scout

1926-ஆம் ஆண்டு பெண்கள் வழிகாட்டும் மற்றும் பெண்கள் ஸ்கவுட் (women’s guide and scout) இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் நாள் ஒரு சிறந்த விழிப்புணர்வு நாளாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்தனர்.

அமெரிக்காவில் நடந்த 4-ஆம் உலக மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டது. முதலில் இது சிந்தனை தினம் என அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம், வருடம் ஒருமுறை பெண்கள் வழிகாட்டும் மற்றும் பெண்கள் ஸ்கவுட் இயக்கம் மென்மேலும் செல்ல, ஒவ்வொருவரும் நன்றியையும் அன்பையும் பகிர வேண்டும் என முடிவு செய்தனர்.

பிப்ரவரி 22-யை ஏன் தேர்ந்தெடுத்தனர்?

பிப்ரவரி 22-ஆம் தேதி ஸ்கவுட் இயக்கத்தை தொடங்கிய லார்ட் பேடன் பௌல் மற்றும் லேடி பேடன் பௌல் ஆகிய இருவரின் பிறந்த தினம் ஆகும்.

எனவே அவர்கள் பிறந்த பிப்ரவரி 22-ஆம் தேதியே சிறப்பு நாளாக கொண்டாடுவது என முடிவு செய்தனர். அதன்படி பிப்ரவரி 22 சிந்தனை தினமாக கொண்டாடி வந்தனர்.

World Thinking Day

1932-ஆம் ஆண்டில் இருந்து சிந்தனை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி உலகெங்கிலும் இருந்து நன்கொடை பெற்று இந்த இயக்கத்தை மேலும் உயர்த்த முடிவு செய்தனர்.

நீண்ட காலங்களுக்குப் பிறகு 1999-ஆம் ஆண்டு டப்லினில் நடந்த 30-ஆம் உலக மாநாட்டில் உலக சிந்தனை தினம் என அறிவிக்கப்பட்டது.

22/02/2020 வரலாற்றில் இன்று. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

22/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
22/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

22/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

கல்வியில் நல்ல முன்னேற்றம் காணும் நாள். வியாபாரிகளுக்கும் பெரும் லாப முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் அசௌகரியங்கள் தீரும்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: மரகதம்

ரிஷபம் ராசிபலன்

சிறந்த வகையிலான தகவல் தொடர்புத் துறை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம். இளைஞர்களுக்கு கணினித் துறையில் வேலை கிட்டும். நண்பர்களோடு பேசுகையில் நிதானம் தேவை. விளையாட்டு விபரீதமாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: தேன்வண்ணம் அதிர்ஷ்ட எண்: 2

மிதுன ராசிபலன்

நல்ல தனவரவுடைய நாளாகக் காணப்படுகிறது. நிதானமான போக்கு தேவைப்படுகிறது. வேலை பார்க்குமிடத்தில் மேலதிகாரியை பகைத்தல் கூடாது.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம்.

கடக ராசிபலன்

எதிலும் சற்று கவனம் தேவை. வெற்றியடையும் நாளாகக் காணப்பட்டாலும் சிறிது வேலைப்பளு அதிகம் இருக்கும். பொறுமையுடன் வேலையில் ஈடுபடுவது சாலச் சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா வண்ணம், அதிர்ஷ்ட எண் : 7

சிம்மம் ராசிபலன்

நல்ல நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. தாய் தந்தையரின் நலத்தைக் கவனித்துக் கொள்வது மிக அவசியம்.

தந்தையாரின் உடல்நலத்தைப் பேணுவது சிறந்தது. உங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், அதிர்ஷ்ட எண் : 3

கன்னி ராசிபலன் 

மிகச் சிறந்த லாபகரமான நாளாகக் காணப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளால் பெருமைகள் கூடி வரும். பெண்களுக்கு மாமியாரால் பிரச்சனை உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: அடர்சிகப்பு அதிர்ஷ்ட எண்: 9

துலாம் ராசிபலன்

அதிர்ஷ்டம் கொட்டும் நாள். எந்த வாய்ப்புகள் வந்தாலும் தவிர்க்காமல் ஏற்றுக் கொள்வது நலம்.

சிறிய வேலையாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக அந்த வேலையைச் செய்து காட்ட வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம் : மரகத வண்ணம். அதிர்ஷ்ட எண் : 5

விருச்சிக ராசிபலன்

தந்தைவழி உறவுகளால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டு தொடர்பான அனைத்து விஷயங்களும் வெற்றி பெறும். வியாபாரத்தில் வெற்றி உண்டு. தூரதேசத்தில் வசிப்பவர்கள் பற்றிய பயம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஜா வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

தனுசு ராசிபலன்

இன்று நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவீர்கள். நண்பர்களுடன் உணர்ச்சிவசமாகப் பேசி மகிழ்வீர்கள். அதேநேரம் உணர்ச்சிவசப்படாமல் அறிவுக்கு வேலை கொடுத்து பணியாற்றினால் இன்று எதிலும் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம், அதிர்ஷ்ட எண்: 2

மகரம் ராசிபலன் 

நண்பர்களிடத்தில் உள்ள பகைமையை மறந்து மனம் களிக்க வேண்டிய நாள். அவசரப்பட்டு நல்ல நண்பர்களை இழந்து விட வேண்டாம். எதிலும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், எண்: 1

கும்ப ராசிபலன்

மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். ஆறுபடை முருகன் வீட்டில் ஒன்றை வழிபடுவது நல்லது. வெளிநாட்டில் இருப்போர் ஓம் சரவணபவ என உச்சரித்தால் உயர்வடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5

மீனம் ராசிபலன் 

பூர்வ புண்ணிய அனுக்கிரகம் முழுமையாகக் கிடைக்கக் கூடிய நாள். எல்லா அதிர்ஷ்டமும் கிடைக்கக் கூடிய நாளாகக் காணப்படுகிறது. குலதெய்வ வழிபாடு இன்னும் குதூகலத்தை அதிகப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

22/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கப்பதக்கம் வென்ற திவ்யா கக்ரன்

0
இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன்

மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மல்யுத்த சாம்பியன்ஷிப்

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றது.

இதில் வியாழக்கிழமை நடந்தேறிய பெண்களுக்கான 68 கிலோ பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன், ஜப்பானை சேர்ந்த வீராங்கனை நருஹா மட்சுயூகியை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

இதனால் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்றுள்ள இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் .

கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் திவ்யா வெண்கலம் வென்றிருந்தார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி தங்கப்பதக்கம் வென்றார்தங்க பதக்கத்தை வெல்லமுடியாமல் போனதை எண்ணி வருத்தமும் அடைந்தார். எனினும் விட முயற்சியால் இந்தாண்டு சிங்கபெண்னென வெற்றிகண்டார்.

65 கிலோ பிரிவில் 2018 ஆம் ஆண்டில் சாதனை படைத்த முதல் இந்திய பெண்மணி நவ்ஜோத் கவுர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

முதல் காதல்: நீங்காத நினைவும் நிலைக்காத உறவும்

0
முதல் காதல் தோல்வி

முதல் காதல்: நீங்காத நினைவும் நிலைக்காத உறவும். தடுக்க இயலாத முதல் காதல் தோல்வி. இளமைப் பருவத்தை ஆட்கொள்ளும் இளம் காதல். அர்த்தம் தெரியாமல் மலரும் காதல்.

நீங்காத நினைவும் நிலைக்காத உறவும்நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் முதல் காதல் என்ற நிகழ்வை கடந்து செல்லாதவர் எவரும் இல்லை. சிலர் இதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நம் வாழ்வில் நடக்கும் முதல் அனுபவங்கள் எதையும் நாம் மறப்பதில்லை. அது தந்தையிடம் இருந்து முதல் பரிசு, முதல் நண்பன், பள்ளியில் சாதித்த நிகழ்வுகள் இதுபோல இன்னும் பல.

பெரும்பாலும் முதல் காதல் தோல்வியில் முடியும். நீங்காத நினைவும் நிலைக்காத உறவும் மட்டுமே இது உண்டாகும். ஒரு சிலருக்கு மட்டுமே முதல் காதலே இறுதிவரை செல்லும்.

அர்த்தம் தெரியாமல் மலரும் காதல்

அர்த்தம் தெரியாமல் மலரும் காதல்

பள்ளிப்பருவத்தில் 12-13 வயதுகளிலேயே நம்மில் பலருக்கு காதல் வந்து விடும். சிலருக்கு 14-17 இந்த வயதுகளில் வரலாம். அந்த தருணங்களில் அது காதலா? என்பது கூட யாருக்கும் தெரியாது.

முதல் முறை உங்கள் பெற்றவர்களிடம் இருந்து கிடைக்காத ஒரு புதிய அனுபவத்தை நீங்கள் உணர்கிறீர்கள். உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் மறந்து காதலில் மூழ்குகிறீர்கள்.

எந்த வித எதிர்பார்ப்பும் நோக்கமும் இல்லாமல் இக்காதல் மலர்வதால் இதை மிகவும் சிறப்பாக உணர்வீர்கள். வாழ்க்கை எங்கும் நம்மை எடுத்து செல்கிறது என்று உணராமல் இக்காதல் பயணிக்கும்.

ஆர்வமும் அடைதலும் 

முழுநேரமும் காதலிப்பவரை பற்றிய நினைப்பு, கற்பனை என்று காதலுக்கும் மோகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் உன்னை நீயே மாற்றிக்கொள்ளும் தருணம் இது.

புதிதாக ஒன்றை அடையப்போகும் ஆர்வம் உங்களிடையே பெருகி பொங்கிக்கொண்டிருக்கும். காதலன்/காதலி பற்றிய நினைவுகள் சுற்றிச்சுற்றி பட்டாம்பூச்சி போல் பறந்துகொண்டிருக்கும்.

முதல் சந்திப்பு, முதல் பரிசுகள், முதல் சர்ப்ரைஸ், முதல் முத்தம் மற்றும் முதல் கட்டியணைப்பு போன்றவை உங்களை எப்பொழுதும் ஒருவித ஆர்வத்துடன் வைத்திருக்கும்.

இவ்வாறு முதல் முறை அனுபவித்த இந்த நிகழ்வுகள் நம்முடைய மனதில் நீங்கா இடம் பெறுகின்றன. அதிலும் குறிப்பாக மோகம் இதில் முக்கிய இடம் வகிக்கும்.

இளமை பருவத்தை ஆட்கொள்ளும் இளம் காதல்

முதல் காதல் தோல்வி அர்த்தம் தெரியாமல் மலரும் காதல்

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். காதலுக்கும் மோகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ஹார்மோன்களின் சுழற்சியால் உங்களை ஆட்கொள்ளும் இக்காதல்.

நம்முடைய இளமைப் பருவத்தை நினைக்கும் பொழுது முதல் காதல் மட்டுமே நினைவுக்கு வரும். மற்ற நினைவுகளையெல்லாம் இது மறக்கடித்து விடும்.

காதல் இறுதி வரை சென்றதோ இல்லையோ? முதல் காதல் என்பது உங்கள் கருத்து, பார்வை மற்றும் செயல்கள்; இவை அனைத்தையும் மாற்றும். இது உங்கள் வாழ்வில் ஒரு பாடமாகக்கூட அமையலாம்.

வாழ்க்கையில் முதல் முறை நிகழும் நிகழ்வுகள் என்றும் நீங்கா எண்ணத்தைப் பெரும். இதன் பிறகு நீங்கள் எத்தனை காதல் செய்தாலும் முதல் காதலின் தடம் அலியா இடத்தைப் பெற்றிருக்கும்.

தடுக்க இயலாத முதல் காதல் தோல்வி

நீங்காத நினைவும் நிலைக்காத உறவும்மிகவும் சிறு வயதில் காதலையும் வாழ்க்கையையும் பற்றி எந்தவித புரிதலும் இருக்காது. இதுவே முதல் காரணம்.

முதலாம் காதல் தவறான நபரிடமே எப்பொழுதும் ஏற்படும். காதலுக்கும் மோகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நிகழுவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

இது காதல் இல்லை எதிர்பாலினத்தின் மீது உள்ள ஒரு ஈர்ப்பு என்பதை நீங்கள் நீண்ட காலம் கழித்தே உணர்வீர்கள்.

பெருபாலோனோர் காதலிப்பதே காதலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே. காதலில் விழுவதற்கும் காதலிக்க வேண்டும் என்பதற்காக ஒருவரை விரும்பவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

சினிமாவில் பார்க்கும் காட்சிகளை நிஜ வாழ்க்கையில் செய்ய முயற்சிப்பார்கள். ஒவ்வொரு நிகழ்வின் போது எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகமாகுமே தவிர, புரிதல் என்ற ஒன்று அவர்களின் மனதில் நிலைப்பதில்லை.

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இது காதலை மறந்து ஒருவித பழக்கமாக மாறிவிடுகிறது. பேசுவது, சந்திப்பது மற்றும் நெருங்குதல் இவை யாவுமே காதல் தவிர்த்து பழக்கமாகி விடுகிறது.

முதல் காதல் அனைத்துமே சூழ்நிலைகளால் பிரியும். பெரிதாகக் காரணம் என்றே ஒன்றே இருக்காது. வளர வளர நம்முடைய எண்ணங்களும் கருத்தும் மாறுபடும் இதுவும் ஒரு காரணம்.

முதற்காதல் பிரிவை யாராலுமே தாங்க இயலாது. சிலர் மனதில் புதைத்து வைப்பார்கள். சிலர் இதை அவ்வப்போது கொட்டித் தீர்ப்பார்கள்.

3

உலக தாய்மொழி தினம்: 21/02/2020 வரலாற்றில் இன்று

0
உலக தாய்மொழி தினம் - world mother tongue (language) day: 21/02/2020 வரலாற்றில் இன்று. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world - india - tamil.

உலக தாய்மொழி தினம் – world mother tongue (language) day: 21/02/2020 வரலாற்றில் இன்று. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil.

உலக தாய்மொழி தினம்

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தானும் வங்கதேசமும் ஒரே நாடாக இருந்தது. மேலும் வங்கதேசத்தை கிழக்கு பாகிஸ்தான் என அழைத்தனர்.

1952-ஆம் ஆண்டு வங்கதேச தலைநகரமான டாக்காவில் நான்கு மாணவர்கள் வங்கள மொழியை தங்கள் தாய்மொழியாக அறிவிக்கக்கூறி போராட்டம் செய்தனர். இதில் தங்கள் உயிரையும் நீத்தனர்.

இந்த நிகழ்வினால் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு வங்க மொழியை வங்கதேசத்துக்கு தாய்மொழியாகவும், அவர்கள் இறந்த நாளான பிப்ரவரி 21-ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாகவும் அறிவித்தது.

world mother tongue (language) day

இந்த நிகழ்வு ஒரு புறம் இருந்தாலும் தாய்மொழியை ஊக்குவிக்க வேண்டும் என்ற மற்றொரு எண்ணோத்தோடும் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.

சர்வதேச மொழியான ஆங்கிலத்தின் பிரபலாத்தால் அதிக இடங்களில் தாய்மொழி மீது இருக்கும் பற்றும் அதைக் கற்க வேண்டும் என்ற எண்ணமும் குறைந்து வருகிறது.

சர்வதேச அளவில் 40% நபர்கள் தங்கள் தாய்மொழியை சரிவர கற்பதில்லை என யுனெஸ்கோ கூறியுள்ளது.

இதனால் இந்த தினத்தின் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதும் யுனெஸ்கோவின் ஒரு முக்கிய நோக்கம்.

உலகில் மூத்த விஞஞானிகள் மற்றும் அவரவர் துறையில் சாதித்தோர் அனைவரும் தங்கள் தாய்மொழியை சரிவர கற்றவர்கள் தான்.

எனவே, உலகில் உள்ளவர்கள் எத்தனை மொழிகள் வேண்டும் என்றாலும் கற்கலாம். அதே நேரம் தங்கள் தாய்மொழியையும் கற்கவேண்டும்.

21/02/2020 வரலாற்றில் இன்று. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

21/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
21/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

21/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இத்தனைநாள் வேலை வாய்ப்பு இல்லாதிருந்தவர்களுக்கு ஒரு நல்ல வேலை இன்று கிடைக்கும்.

மஹா சிவராத்திரி நாளில் வழிபாடு செய்ய வாழ்க்கை நிலை மேலோங்கும். வயிற்று உபத்திரவம் இன்று சரியாகும்.

அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

இன்று மிகவும் சுத்தபத்தமாக இருப்பது அவசியம். இனம்புரியாத நோய் ஒன்று இன்னலைத் தர நேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5

மிதுன ராசிபலன்

தைரியமும் தன்னம்பிக்கையும் மிகுந்து காணப்படும் நாளாகக் காணப்படுகிறது. வெற்றிகரமான நாளாக அமையும். சூரியனை வழிபட வாழ்க்கை பிரகாசிக்கும். நன்னல மேம்பாடுடை காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம் : முத்து வண்ணம்

கடக ராசிபலன்

நல்ல தனவரவுடைய நாளாகக் காணப்படுகிறது. மிகச் சிறந்த யோகங்கள் காணப்படுகிறது.

கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மங்களம் உண்டாகும். பிசினஸ் பார்ட்னரிடம் இருந்த பகை மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண் : 1

சிம்மம் ராசிபலன்

நினைத்ததை வாங்கி மகிழும் நாளாகக் காணப்படுகிறது. நல்ல தனவரவு, நண்பர்களோடு கேளிக்கை, அரட்டை, மகிழ்ச்சி, என்று ஆனந்தப்படும் நாள்.

குடும்பத்தில் சந்தோஷம் கூடிவரும் நாள். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5

கன்னி ராசிபலன் 

காதலில் வசீகரம் அதிகரிக்கும் நாளாகக் காணப்படுகிறது. மனதில் நினைத்தவர்கள் மனமிறங்கி வருவார்கள்.

கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும் நாள். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வாயை அடக்கியாள்வது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

துலாம் ராசிபலன்

திருமண வாழ்க்கையின் உன்னதத்தை உணரும் நாள். மனமினிக்கும் தருணங்களை கணவன் மனைவியர் மகிழ்ந்து பாராட்டிச் சிறக்கும் நாள். உணவை அளவறிந்து உண்ண வேண்டி நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பவள வண்ணம். அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிக ராசிபலன்

பொறுமை கடைபிடிக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்தக் காரியமும் செய்தல் கூடாது.

அதேபோல கருத்தும் சொல்லக் கூடாது. மாமியாரின் உடல்நிலையில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: தேன்வண்ணம் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

தனுசு ராசிபலன்

தங்களது பிள்ளைகளின் மீதான அக்கறையை அதிகப்படுத்த வேண்டிய நாள். படிப்பில் கவனம் சிதறும் பிள்ளைகளுக்கு ஆலோசனை அளித்து ஆறுதல் சொல்லி தேற்றுவது அவசியம்.

விவாகரத்து போன்ற விவகாரங்களில் அவசர முடிவு எடுக்காமல் இருப்பது நலம்.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4

மகரம் ராசிபலன் 

மதியத்திற்கு மேல் நன்மைகள் அதிகரிக்கும் நாளாகக் காணப்படுகிறது. சகோதரருடைய உடல்நலத்தில் அக்கறை தேவை.

மனதிற்கும் செயல்பாட்டுக்கும் இடையே ஒருவித மாறுபாடு வந்து கொண்டேயிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஜா வண்ணம், எண் : 7

கும்ப ராசிபலன்

காலைப்பொழுது அருமையாக காணப்படுகிறது. மாலையிலிருந்து மௌனம் காக்க வேண்டியது அவசியம்.

எதிலும் அவசரப்பட்டு கருத்துச் சொல்லாமை நலம். சொத்துக்கள் சேரும் நாளாகக் காணப்படுகிறது. வேலைவாய்ப்பு பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மீனம் ராசிபலன் 

திடீர் திடீர் என்று கோபம் வரும் நாளாகக் காணப்படுகிறது. சகிப்புத்தன்மை, பொறுமை அவசியம்.

அலுவலகத்தில் எரிச்சலடையாமல் எச்சரிக்கையாக இருப்பது மிக உத்தமம். நல்ல வேலை கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம் : அடர்சிகப்பு வண்ணம், அதிர்ஷ்ட எண் : 9

21/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

பஸ் லாரி மோதல்: 19 பேர் உயிரிழப்பு, 23 பேர் காயம்

0
பஸ் லாரி மோதல்

பஸ் லாரி மோதல்: 19 பேர் உயிரிழப்பு, 23 பேர் காயம். அவினாஷி அருகே அரசு வல்வோ பஸ்., கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கு (கே.எஸ்.ஆர்.டி.சி) சொந்தமான பஸ் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு சென்றுகொண்டு இருந்தது.

திருப்பூர் மாவட்டம் அவினாஷி அருகே வந்தபோது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த விபத்து அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

பேருந்தின் ஒரு பக்க இருக்கைகள் பின் டயர் வரை சேதமடைந்து உள்ளது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

23-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இறந்தவர்கள் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

லாரி டிரைவர் தலைமறைவு

இந்த விபத்தில், கண்டெய்னர் லாரி தவறான பாதையில் சென்றதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி டிரைவர் விபத்து நடந்தவுடன் தலைமறைவு ஆகியுள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியின் உரிமையாளர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர்.

முதல்வர் பிணராயி விஜயன் ஆறுதல்

இந்த விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் பெரும்பாலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என கேரளா போக்குவரத்து துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கேரளா முதல்வர் பிணராயி விஜயன், மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் ஆறுதல் தெரிவிக்கும் வகையில் விஜயன் கூறினார்.

3

V Unbeatable: அமெரிக்காவின் “காட் டேலண்டை” வென்ற இந்திய நடன குழு

0
V Unbeatable

V Unbeatable : அமெரிக்காவின் “காட் டேலண்டை” வென்ற இந்திய நடன குழு மற்றும் Tribute to Vikash

இந்தியாவின் மும்பை நகரத்தைச் சேர்ந்த வி அன்ஃபீட்டபிள் (V Unbeatable) என்ற நடனக் குழுவின் இறுதி போட்டியினை பார்ப்பது கிட்டத்தட்ட ஒலிம்பிக்கில் 100 மீட்டர் இறுதிப் போட்டியைப் பார்ப்பது போன்றது.வி அன்ஃபீட்டபிள்

இது களிப்பூட்டும் வகையிலும், நரம்புகல் முறுக்கேறும் வகையிலும் மற்றும் ஒரு தடகள அற்புதம் போன்றதுபோல் இருந்தது .

இந்த குழு அமெரிக்காவின் காட் டேலண்ட் (America’s Got Talent) தி சாம்பியன்ஸ் 15 வது சீசனை வென்றது.

இறுதிப் போட்டிகளில் அவர்களின் செயல்திறன்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தியது, “பங்க் ராக் ஆக்ட் பிளிங்க் 182’ஸ் இன்” டிரம்மர் டிராவிஸ் பார்கர் மிக திறமையுடன் டிரம்ஸ் வாசித்தார்.

நம்பமுடியாத அளவிற்கு ஒரு கட்டத்தில், பார்கர் ஒரு கையில் டிரம்ஸ் குச்சியை காற்றில் வைத்திருக்கிறார். நடனக் குழுவின் ஒரு இளம் சிறுவன், குச்சியை அந்தரத்தில் பல்டி அடித்துக்கொண்டு பறந்து வந்து பறித்தான்.

பின் ​​வெற்றிகரமாக குச்சியைப் பிடித்துக்கொண்டு மற்ற நடனக் கலைஞர்கள் அவர் இறங்கும்போது, அவரை தங்கள் முதுகில் அந்த இளம் வயது சிறுவனை சுமக்கிறார்கள் .

அங்கிருந்த கூட்டம் அதனை கண்டு மனதால் எழுந்து கூச்சலிட்டு கைதட்டுகிறார்கள். நடன நீதிபதிகள் ஹோவி மண்டேல், சைமன் கோவல், ஹெய்டி க்ளம் மற்றும் அலேஷா டிக்சன் ஆகியோர் நம்பிக்கையில் தலையை ஆட்டுகிறார்கள்.

“நாங்கள் பரவசமடைந்தோம், அந்த தருணம் உண்மையற்றது” என்று குழுவின் தலைவரான ஓம் பிரகாஷ் பிபிசியின் ஆண்ட்ரூ கிளாரன்ஸிடம் கூறினார்.

“நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம், இந்த தருணத்தை நழுவ விட முடியவில்லை. நாங்கள் இப்போது சாம்பியன்கள்.” என்று வலியை சுமந்த புன்னகையோடு சொல்கிறார்.

ஆனால் இந்த நிலையை அடைவதற்கான அவர்களின் பயணம் எளிதான ஒன்றல்ல, மேலும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு குழுவின் தலைவரான திரு பிரகாஷ் வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி வேலை தேடியபோது தொடங்கியது இந்த தேடல்.

Tribute to Vikash

ஒரு கண்ணாடி தொழிற்சாலையில் வேலை கிடைத்தபோது அவருக்கு 10 வயது, அவருக்கு 5,000 ரூபாய் ($ 70; £ 54) மாத சம்பளம் வழங்கப்பட்டது.

பணத்தை மிச்சப்படுத்த, அவர் தொழிற்சாலையில் தூங்குவார், அங்கே தனது உணவை சாப்பிடுவார். அவர் சேமித்த பணத்தை வீட்டிற்கு அனுப்புவார்.

தொழிற்சாலைக்கு அருகில் ஒரு தோட்டம் இருந்தது, அங்கு ஒரு சில குழந்தைகள் நடனமாட வருவார்கள்.”நான் அவர்கள் நடனமாடுவதைப் பார்ப்பேன், ஒரு நாள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடிவு செய்தேன்.”

அந்த நேரத்தில், திரு பிரகாஷ் விகாஸை சந்தித்தார், அவர் குழந்தைகளுடன் நடனமாடுவார். ஒன்றாக, நடன குழுவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது.

“குழு குழந்தைகள் நைகான் மற்றும் மும்பையில் உள்ள பயந்தரில் உள்ள சேரிகளில் இருந்து வந்தவர்கள். அவர்களின் பயணத்திற்கு நான் பணம் கொடுப்பேன்.

நான் அவர்களிடம் எப்படி பணம் கேட்க முடியும்? அவர்கள் என் குழந்தைகள்.” அவரது சம்பளத்திலிருந்து வரும் பணம் ஆடைகள், உணவு மற்றும் குழுவிற்கான பயணம் ஆகியவற்றை நோக்கி செல்லும்.

ஆனால், பின்னர், விகாஸ் ஒரு சோகமான விபத்தை சந்தித்தார். டான்ஸ் ஸ்டண்ட் செய்யும் போது, ​​அவர் விழுந்து முடங்கிப்போயிருந்தார். அவர் மருத்துவமனையில் ஒரு மாதம் கழித்தார், ஆனால் டாக்டர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

இப்போது, ​​ஒவ்வொரு முறையும் குழு நிகழ்ச்சிகள் நிகழ்த்தும்போது, ​​அவர்கள் விகாஸின் பெயரை தங்கள் ஜாக்கெட்டுகளின் பின்புறத்தில் அணிந்து மரியாதை செலுத்துகிறார்கள்.

அவர்கள் தங்கள் குழுவின் பெயருடன் அவரது தொடக்க எழுத்தையும் சேர்த்தனர். அதனால்தான் அவர்கள் வி வெல்லமுடியாதவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

குழு விரைவில் உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் நடன போட்டிகளில் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கியது. “இந்த நிகழ்வுகளில் சிலவற்றை நாங்கள் வெல்லத் தொடங்கினோம்.

எந்தவொரு பணத்தையும் மிச்சப்படுத்தாமல் வீண் செய்யாமல் பரிசுத் தொகையைப் பயன்படுத்துவோம். அதற்கு நாங்கள் தகுதியானவர்கள்” என்று திரு பிரகாஷ் கூறுகிறார்.

அமெரிக்காவின் காட் டேலண்டிலிருந்து அவர்கள் போட்டியிடுமாறு ஒரு மின்னஞ்சல் வந்தபோது, ​​திரு பிரகாஷ், நீண்டகால ஒத்துழைப்பாளரும் நடன இயக்குனருமான ரோஹித் ஜாதவிடம், போட்டியின் மூலம் குழுவிற்கு உதவுமாறு கேட்டார்.

“ஆனால் இது எனக்கு ஒரு கனவு நனவாகியது. நானும் பெரிய கனவு கண்டு ஏதாவது செய்ய விரும்பினேன். “திரு பிரகாஷைப் பொறுத்தவரை, இந்த வெற்றி அவர் பல ஆண்டுகளாக பயிற்சி பெற்ற பல குழந்தைகளுக்கும் சேர்ந்து உள்ளது.

“இதற்காக அவர்கள் எல்லாவற்றையும் வரிசையில் வைத்திருக்கிறார்கள். எங்கள் சொந்த நடன ஸ்டுடியோவை சொந்தமாக வைத்திருப்பதுதான் திட்டம், அங்கு நாங்கள் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் அவர்களுக்கே உறிய தனித்திறமையான பயிற்சியளிக்கவும் முடியும்” என்று அவர் கூறுகிறார்.

3

Jojo Rabbit – ஜோஜோ ராபிட்: ஆஸ்கார் வென்ற ஹிட்லர் மூவி

1
Jojo Rabbit - ஜோஜோ ராபிட்: ஆஸ்கார் வென்ற ஹிட்லர் மூவி

Jojo Rabbit: 2020 ஆஸ்கார் விருது வென்ற ஹிட்லர் மூவி. ஹிட்லர் வாழ்க்கை பற்றிய கற்பனை நகைச்சுவை திரைப்படம் ஜோஜோ ராபிட் திரைவிமர்சனம். movie review in tamil.

ஜோஜோ ராபிட் திரைவிமர்சனம் (movie review in tamil)

ஒரு படம் தான் சொல்ல வந்ததை வெறுமனே சொல்லிவிடுவதற்காக அல்ல. தான் சொல்லப்போவதையோ, சொல்லியிருப்பதையோ படம் பார்ப்பவர்களிடத்தில்  கவனத்தை தூண்ட வேண்டும்.

சொல்லிய கதையை, கருத்தை ஏற்கிறார்களோ? நிராகரிக்கிறார்களோ? என்பதெல்லாம் வேறு. கதையின் கருத்தை அக்கதையினூடே பிசறாமல் சொல்லிவிட வேண்டும்.

அதற்காக நீங்கள் எந்த வழியிலும் திரைக்கதையை முன்னெடுக்கலாம். ஆனால் அது அக்கதையின் கருவினூடே நிகழ வேண்டும். இப்படியான ஒன்றை தான் ஜோஜோ ராபிட்(Jojo rabbit) எனும் ஆங்கிலப்படம் செய்துள்ளது.

ஜோஜோ ராபிட் கதைக்கரு

2020 ஆஸ்கார் விருது ஹிட்லர் வாழ்க்கை

ஹிட்லர் வாழ்க்கை சமந்தப்பட்ட கதை என்றாலே சொல்வதற்கு கடினம், நேரடியாக நடந்ததை சொன்னால் முகச்சுளிப்பு ஏற்படும்.

கொடூரமான நிகழ்வுகளைக் காட்டவேண்டும். விண்ணை மிரட்டும் அளவிற்கு போர்க்காட்சிகள் இருக்கவேண்டும்.

எனவே, சவால்களும் உயரங்களும் இருக்கும்போது நகைச்சுவையுடன் ஹிட்லர் சமந்தப்பட்ட கதையை எளிமையாக சொல்லியிருக்கிறது ஜோஜோ ராபிட் திரைப்படம்.

ஹிட்லரின் கொள்கைகளை பெரிதும் விரும்பும், ஜெர்மனி ராணுவப்படையில் சேர்ந்து போருக்கு செல்ல முற்படுபடுபவன், யூதர்களை வெறுப்பவன் போன்ற உணர்வுகளை கொண்ட பத்து வயதே ஆன ஒரு சிறுவன் பார்வையிலிருந்து இக்கதையை காண்பித்திருக்கிறார்கள்.

தனது அப்பா போரில் இருக்கிறாரென்று சொல்லிக்கொண்டிருக்கும், அச்சிறுவன் அவன் அம்மாவோடுதான் வசிக்கிறான்.

அவன் அம்மா முடிந்தவரை அவனுக்கு போர் முட்டாள்தனம் என்பதையும் யூதர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள் என்றும்  கூறுகிறார்.

ஆனால், அவன் அதை ஏற்க மறுக்கிறான். பின்னொரு நாளில் இதையெல்லாம் அவன் எப்படி ஒப்புக்கொள்கிறான் என்பதை நகைச்சுவை காட்சிகளுடன் சில கண்ணீர் வரவழைக்கும் காட்சிகளுடனும் இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

காட்சியமைப்புகள்

படத்தில் சிறுவன் அவ்வபோது தனது கற்பனை ஹிட்லருடன் பேசுவதாக தோன்றும் காட்சிகள் அனைத்துமே காமெடி கலந்த யோசிக்கதூண்டும் உரையாடல்களை கொண்டது.

ஹிட்லரின் நாசிக் கட்சி, யூதர்களை பார்த்த விதத்தையும் ஜெர்மனியில் அரங்கேறிய சில விஷயங்களையும் கூட எளிமையாக சொல்லியிருக்கிறார்கள்.

யூத இனத்தை சார்ந்த ஒரு பெண் வீட்டில் இருப்பதை கண்டறிந்த பிறகு சிறுவன் செய்யும் செயல்கள் ஹிட்லரின் கொள்கைகளில் சிலதை
எளிமையாக புரியவைக்கின்றன.

அதேசமயம் ஒரு சிறுவன் தன் எண்ணங்களில் எவ்வளவு தூய்மையாக இருப்பான் என்பதையும் உணர்த்தியிருக்கிறார்கள்.

முயலை கொல்ல சொல்லும்போதும், பெண் வருந்துகிறாள் என்பதற்காக கடிதத்தை மாற்றி மாற்றி எழுதும்போதும் சிறுவர்களின் நல்லெண்ணம் இப்படியானதுதான் என்ற கூற்றை படரவைக்கிறது கதை.

காதல் பற்றி அம்மா கதாப்பத்திரம் சொல்லும்போதும், வீட்டில் உள்ள அப்பெண் கதாபாத்திரம் சொல்லும்போதும் மனம் தெளிவாகிறது.

அம்மாவுக்கும் வீட்டில் உள்ள யூதப்பெண்ணுக்குமான உரையாடல்கள் இறுதியில் நம்பிக்கையை விதைக்கும் படியாகவே இருக்கிறது.

படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் சிறுவன் வீட்டை சோதனைச்செய்ய வரும் அனைத்து அதிகாரிகளும் “heil Hitler” என்ற கோஷத்தை அத்தனை முறை சொல்வது வேடிக்கையாய் தோன்றும் அதேசமயம் அதன் பின்னுள்ள சர்வாதிகாரமும் மடமைத்தனமும் அப்பட்டமாய் தெரியும்.

பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள்

சிறுவனின் நடிப்பு அட்டகாசம். அவனின் தேர்வும் அவனிடமிருந்து இந்தளவு நடிப்பை வாங்கியதும் பிரம்மிக்கிறது. மற்றவர்கள் நடிப்பும் சற்றும் குறைந்ததல்ல.

இசையும் ஒளிப்பதிவும் படத்தை தூக்கி பிடித்திருக்கின்றன. குறிப்பாக படத்தின் இறுதி காட்சிகளில் இசை மென்மையாக சென்று விழாவாக முடிவதெல்லாம் சிறப்பாய் அமைந்திருந்தது.

மெனக்கெடல்கள் எதுவுமே இல்லாதது போல் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருப்பது பாராட்டக்குறியது.

படத்தின் இறுதி பத்து நிமிடங்கள் காட்சி, இசை, நடிப்பு, உரையாடல் என அனைத்திலும் ஒரு புன்னகையை விதைக்கச்செய்கிறது.

இனிமையை, சிலிர்ப்பை, நம்பிக்கையை, அன்பை, படம் பார்ப்பவர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளது ஜோஜோ ராபிட்!

மேலும் ஜோஜோ ராபிட் (Jojo rabbit) திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு best adapted screenplay-விற்கான ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Let everything happen to you
Beauty and terror
Just keep going
No feeling is final.
                – rainer maria rilke.

என்ற வரிகளை மேற்கொள்காட்டி படம் நிறைவடைகிறது.

நகைச்சுவையுடன் மற்ற உணர்வுகளையும் உணர விருப்பமிருப்போர் நிச்சயம் இப்படத்தை நம்பிக்கையுடன் பார்க்கலாம்.

படத்தின் நேர அளவு இரண்டு மணி நேரத்திற்கு குறைவானதே என்பதால் நேரம் கிடைக்கும்போது இப்படத்தை பார்த்துவிடுங்கள்.

திரைப்படம் உங்களுக்கு உங்கள் வாழ்வின் மீது நம்பிக்கையை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. நிச்சயம் ஒரு முறை பாருங்கள்!

jojo rabbit 2020 ஆஸ்கார் விருது வென்ற ஹிட்லர் மூவி. சென்னையில் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது.

3