Home Blog Page 259

20/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
20/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

20/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

சிறு சிறு உடல்நலப் பிரச்சினைகள் வந்து வந்து போகும் நாளாகக் காணப்படுகிறது. முருகரை வழிபட அவற்றிலிருந்து விடுபட வழி பிறக்கும்.

சிலர் புதிய போதைப் பழக்கத்திற்கு அடிமையாக நேரிடலாம். அதிலிருந்து விடுபடுவது அவசியம். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

நல்ல வேலைவாய்ப்பைப் பெறும் நாளாகக் காணப்படுகிறது. புதிய எதிரிகள் உருவாகலாம்.

அண்டை அயலாரோடு பகைமை கொள்ளாமல் இணக்கம் கொள்வது அவசியம். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் வதந்தி பேசாமல் இருப்பது சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண்: 1

மிதுன ராசிபலன்

பெரும் பாக்கியத்தைத் தரும் நாளாகக் காணப்படுகிறது. அலுவலகத்தில் இருந்த சிக்கல் தீர்ந்து நல்ல பெயர் எடுக்கும் நாளாகக் காணப்படுகிறது.

கண் சம்மந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும். வியாபாரிகளுக்கு சிறந்த லாபம் உண்டு.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம்

கடக ராசிபலன்

வீடு கட்ட நல்ல கடன் வசதி கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகக் காணப்படுகிறது.

சகோதரர்களுடன் பகை கூடாது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் நினைத்த வண்ணமே கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் ராசிபலன்

அதீத தைரியத்தோடு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் நாளாகக் காணப்படுகிறது.

எந்த நேர்முகத் தேர்விலும் எளிதாக வெற்றியடையும் அமைப்பு காணப்படுகிறது. ஆடம்பரச் செலவு செய்யாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பவள வண்ணம், அதிர்ஷ்ட எண்: 9

கன்னி ராசிபலன் 

தன ஸ்தானத்தில் நல்ல கிரகச்சேர்க்கை இருப்பதால் நல்ல தனவரவு உண்டு. வீடு சம்மந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. வண்டி, வாகனங்களில் வித்தைகள் வேண்டாம். வீடு கட்டும் அமைப்பு கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: தேன் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

துலாம் ராசிபலன்

நாளில் அவ்வப்போது சிறு சிறு, மனக்குழப்பம், டென்ஷன் அதிகரிக்கும். சந்தனப் பொட்டிட்டு சந்திரனை வணங்க மன இறுக்கம் குறையும். முதுகு வலி ஏற்பட்டு நிவர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம். அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிக ராசிபலன்

எலும்பு சம்மந்தமான பிரச்சினைகள் வந்து வந்து போகலாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.

வயது முதிர்ந்தோர் தங்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். நாடகக் கலைஞர்கள் புகழ் பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஜா வண்ணம், அதிர்ஷ்ட எண்: 7

தனுசு ராசிபலன்

எடுத்த காரியம் எதிலும் முன்னேற்றம் உண்டு. எடுத்த காரியத்தில் ஜெயம் ஆகியவை உண்டு. இளைஞர்கள் விபரீத விளையாட்டுக்களைத் தவிர்ப்பது நலம் பயக்கும். மின்சாதனங்களைக் கையாளபோது, கையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மகரம் ராசிபலன் 

உற்சாகமான ரம்மியமான நாளாகக் காணப்படுகிறது. சந்தோஷங்கள் நிரம்பி வழியும் நாளாகக் காணப்படுகிறது.

மனைவியுடன் இணக்கம் ஏற்படும். கழுத்து வலி வந்து நீங்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: அடர்சிகப்பு வண்ணம், எண்: 9

கும்ப ராசிபலன்

அதிர்ஷ்டகரமான நாளாகக் காணப்படுகிறது. மிகவும் நல்ல நாள். நினைத்த யாவும் நினைத்தபடியே அமையும். கேளிக்கை, விளையாட்டு என நண்பர்களோடு குதூகலிக்கும் நாளாகக் காணப்படுகிறது.

தூர தேசங்களிலிருந்து நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். நிறைய ஆடம்பரப் பரிசுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பால் வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

மீனம் ராசிபலன் 

கொஞ்சம் சிக்கல் மிகுந்த நாளாகக் காணப்படுகிறது. சொல்லும் கருத்துக்கள், செய்யும் செயல்கள் ஆகியவற்றில் கவனம் தேவை.

தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை. சிலருக்கு ரம்மியமான மனதிற்கினிய நிகழ்வுகள் நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5

20/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

இந்தியாவுடன் சமரசம் இல்லை – ட்ரம்ப்  திட்டவட்டம்

1
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் சமரசம் இல்லை

இந்தியாவுடன் சமரசம் இல்லை. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளப் போவதில்லை என ட்ரம்ப்  திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

முதல் அரசுமுறை பயணம்:

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்து  முதன்முறையாக இந்தியாவிற்கு வரும் 24 தேதி அரசுமுறை பயணமாக வருகை தர உள்ளார்.

மேலும் அவர் வருகையின் போது குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட உள்ளார் எனவும் இந்திய மற்றும் அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வருகையை கொண்டாடும் விதமாக குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் பல்வேறு புத்தாக்க பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

நமஸ்தே மோடி (ஹௌடி மோடி):

முன்பாக இந்திய பிரதமர் மோடி அமெரிக்க சென்ற பொழுது அவரது வரவேற்புக்காக பல்வேறு ஏற்பாடுகளை அமெரிக்க அரசும் அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களும் திறம்பட செய்திருந்தனர்.

குறிப்பாக நமஸ்தே மோடி (ஹௌடி மோடி) எனும் சிறப்பு நிகழ்ச்சி மோடியை மிகவும் கவர்ந்ததாக தெரிகிறது .

எனவே அதை போலவே ட்ரம்பின் இந்திய பயணத்தின் போதும் நமஸ்தே ட்ரம்ப் என்ற பெயரில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சாலைகள் மேம்பாலங்கள், நகராட்சி கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு உள்கட்டமைப்புகளும்   அலங்கரிக்கப்பட்டு வருகின்றன .

குடிசை வாழ் மக்கள் வெளியேற்றம்:

இது ஒருபுறம் இருந்தாலும் அகமதாபாத்தில் வசித்து வரும் குடிசை பகுதி மக்களை அப்புறப்படுத்த அகமதாபாத் நகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி சேரி பகுதி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது  .

அதோடன்றி குடிசை பகுதிகளை சுவர் எழுப்பி மறைக்கும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திரா பாலம் – சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்துடன் இணைக்கும் சாலையின் பக்கவாட்டில் இருக்கும் குடிசைகளை மறைப்பதற்கு சாலை ஓரத்தில் மிகப் பெரிய சுவர் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .

நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்:

இந்தியா வரும் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் சாலை வழியாக பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடைபெறும், மோட்டோரோ ஸ்டேடியம் அருகில் உள்ள சேரியில் உள்ள 45 குடும்பங்களை ட்ரம்ப் வருகைக்கு இரண்டு நாட்களுக்கு முன் காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால்  சேரி வாழ் மக்கள் அனைவரும் செய்வதறியாது கையை பிசைந்து நிற்கின்றனர் .

குடிசைப்பகுதி மக்களை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பிரச்சினையை உக்கிரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பிடத்தக்கது,  ஒருபுறம்  ட்ரம்பின் வரவேற்புக்காக அரசின் சார்பில் செயல் படுத்தப்பட்டு வரும் புத்தாக்க பணியினாலும் மறுபுறம் குடிசை பகுதி வாசிகளின் போராட்டத்தினாலும் அகமதாபாத் நகரம்  சமீப நாட்களாக அதகளப்பட்டு வருகிறது .

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்:

இருபெரும் ஜனநாயக நாட்டின் தலைவர்களும் சந்திக்கும்பொழுது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “தற்போதைய பயணம் எனக்கு உற்சாகமாக உள்ளது.

இருப்பினும் இந்த பயணத்தின் பொழுது இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளப் போவதில்லை” எனப் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே இந்தியா அமெரிக்காவின் சலுகைகளை பறித்துக்கொள்வதாகவும், வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என உலக வர்த்தக அமைப்பை அதிபர் வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது .

மேலும் உலகின் இரண்டாவது நிலை நாடான சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு சமீபத்தில்தான் இரு நாடுகளும் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்ட என்பது நினைவு கூறத்தக்கது.

3

இந்தியாவில் பறவைகள் எண்ணிக்கை குறைய காரணம்?

3
இந்தியாவில் பறவைகள் எண்ணிக்கை குறைய காரணம்

இந்தியாவில் பறவைகள் எண்ணிக்கை குறைய காரணம் என்ன? (india birds population decrease) எண்ணிக்கையில் மிகவும் குறைந்த பறவைகள், எண்ணிக்கையில் அதிகரித்த பறவைகள்

கடந்த 25 வருடங்களில் இந்திய நாட்டில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது என சமீபத்திய கணக்கெடுப்பு (report) தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானவை கழுகுகள், சிட்டுக்குருவி, பருந்துகள் மற்றும் கடற்கரையை ஒட்டிய பறவை இனங்கள் இவைதான் அதிகமாக குறைந்துள்ளன.

அதேவேளை, இந்தியாவின் தேசியப் பறவையான மயில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இந்தியாவில் பறவைகள் எண்ணிக்கை குறைய காரணம்

இந்திய பறவைகளின் எண்ணிக்கை குறைய மின்சார கம்பிகளின் மீது மோதுதல், விமானம் மீது மோதுதல், வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு இவை தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

செல்போன் கோபுரங்கள் பறவைகளை பாதிக்கிறது என்று ஒரு புறம் கூறி வந்தாலும் அதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

மனிதர்கள் தங்களின் இருப்பிடத்தை காங்கிரட் வீடுகளாக மாற்றிவிட்டனர். இதனால் மனிதன் குடியிருக்கும் வீட்டில் கூடு கட்டி வாழ்ந்த சிட்டுக்குருவி என்னும் பறவை அரிதாகிவிட்டது.

இப்படி ஒரு ஒரு பறவைகள் அழிய எதோவொரு காரணங்கள் உள்ளன. பருவமழை பொய்த்தால் தண்ணீர் இன்றி பறவைகள் அழியும்.

பறவைகள் சரணாலயம் கோடை காலங்களில் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. தண்ணீர் விநியோகம் செய்வதில்லை. இதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதுண்டு.

எண்ணிக்கையில் மிகவும் குறைந்த பறவைகள்

எண்ணிக்கையில் மிகவும் குறைந்த பறவைகள்பருந்துகள், ரிச்சர்ட்டின் பிபிட்

இந்திய கழுகுகள்,

சிட்டுக்குருவி இனவகைகள்

கடற்கரையை ஒட்டிய புறா வகைகள்

கர்லெவ் சண்ட்பைபர்

எண்ணிக்கையில் அதிகரித்த பறவைகள்

 எண்ணிக்கையில் அதிகரித்த பறவைகள்சொளப்பட்சி, சோளக்குருவி

வளர்ப்பு புறாக்கள்

அரிவாள் மூக்கன்

கதிர்க்குருவி, சாம்பல் கதிர்க்குருவி

நீல மயில்

அழிந்து வரும் பறவைகளுக்கு மத்தியில் சில பறவைகள் அதிகமான எண்ணிகையில் பெருகி வருவது சற்று ஆரோக்கியமான விஷயங்களே.

ஏன் பறவைகள் அழிந்து வருகின்றது? அதை எப்படி அழிவில் இருந்து மீட்டெடுப்பது என்பதை பற்றி முறையாக ஆராய்ந்து உலக நாடுகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவே சரியான தீர்வு ஆகும்.

ஒரு பறவை இருந்தால் ஓராயிரம் விதைகளை பூமியின் பல்வேறு பகுதிகளில் பரப்பிவிடும். இதனால் காடுகள் உருவாகும். அதன் வாழ்விடம் பெருகும்.

நாம் காடுகளை அழிப்பதும் ஒன்று தான், பறவைகளை அழிப்பதும் ஒன்று தான். அதன் மூலம் மனித இனமும் அழியப்போவதும் உறுதிதான்.

3

மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு! ஏன் நடக்கிறது?

1
மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு

மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு! மேல்மலையனூர் கோயில் தல வரலாறு! அங்காளம்மன் வழிபாட்டின் சிறப்புகள் என்ன? மாயான கொள்ளை விழா எப்படி உருவானது?

மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு மேல்மலையனூர் கோயில் தல

சக்தி வழிபாடனது நம் தமிழர்களின் பழமையான வழிபாடாகும். கொற்றவை (காளி) பாலை நில கடவுளாகவும், போர் தெய்வமாகவும் கருதப்பட்டு வழிப்பட்டு வந்தனர்.

இந்த நவீன காலத்திலும் பழமை மாறாமல் மாசி மாதம் வந்தாளே எங்கு பார்ப்பினும் விண் அதிர பம்பை மற்றும் உடுக்கை ஓசையும், பாடல்களும் ஒலித்து கொண்டு இருக்கும்.

அஷ்ட திக்கினையும் கட்டி ஆளும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி அன்னை அங்காள பரமேஸ்வரிக்கு திருவிழா எடுக்கும் சிறப்பான மாதமே மாசி மாதம் ஆகும்.

எவ்வாறு அங்காளி மலையனூரில் குடி கொண்டாள் மற்றும் மயான கொள்ளை ஏன் நடத்தப்படுகிறது? அதன் சிறப்பு என்ன? என்பதனை காண்போம்.

மேல்மலையனூர் கோயில் தல வரலாறு

மாயான கொள்ளை விழா எப்படி உருவானது?

மாயான கொள்ளை விழா எப்படி உருவானது? மேல்மலையனூர் கோயில் தல வரலாறு

பிரம்மனின் ஆணவத்தை அழிக்க பரமேஸ்வரன் பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டினார். இதனால் பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பற்றி கொண்டது.

பிரம்மனின் ஐந்தாவது தலை சிவனின் கரத்தில் பிரம்ம கபாலமாக ஒட்டி கொண்டது.

சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். பார்வதியும் சிவனின்றி அகோர ரூபம் கொண்டு ஆவேசமாக சுற்றி திரிந்தார்.

இறுதியில் அன்னை மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் வாழ்ந்து வந்தாள்.

சிவன் பிச்சையெடுக்கும் உணவனைத்தையும் அந்த பிரம்ம கபாலம் உண்டு பசியோடு சக்தியற்று அலைய வைத்தது.

இறுதியில் பரமேஸ்வரி வாழ்ந்து வந்த மயான பூமிக்கு வந்து சேர்ந்தார். மகா விஷ்ணுவின் அலோசனைப்படி உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவனுக்கு உணவு சமைத்தாள்.

பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள்.

முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது.

மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூரையாக வீசினால். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது.

ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள்.

மாயான கொள்ளை விழா எப்படி உருவானது?

அங்காளியாக மயான பூமியில் ஆவேச நடனம் புரிந்தாள். அவளை சாந்த படுத்தவே இயலவில்லை. ஆடிய ஆட்டத்தில் அகிலமே அதிர்ந்து அஞ்சின.

அன்னை பார்த்த அனைத்தும் அவள் கோப பார்வையில் பட்டு அழித்தன. தேவர்களும் பயந்து நடுங்கினர்.

போர் கோலம் பூண்டு தேரில் ஏறிப் பயணித்தாள். அம்பிகையை சாந்தப் படுத்த தேரின் அச்சாணியை மகா விஷ்ணு முறியச்செய்தார்.

தேர் உடைந்து அன்னை கீழே மல்லார்ந்தாள். மகா விஷ்ணு தனது தங்கையை தனது சக்தியால் அப்படியே கட்டுப்படுத்தினார்.

அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள்.

அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.

மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு

மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறுஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது (mayna kollai) நடைபெறுகிறது.

அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்டதாள். மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றாள் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.

அங்காளம்மன் வழிபாட்டின் சிறப்புகள் என்ன?

காட்டேரி, பாவாடை ராயன், அங்காளி வேடமிட்டவர்கள் ஆவேசமாக ஆடிக் கொண்டே அமாவாசையில் மயானத்திற்கு சென்று பூஜைகள் நடத்தி கிழங்கு, அவரை, முட்டை, சாதம் அனைத்தும் கலந்து சூரையாக வீசுக்கின்றனர்.

அதை எடுத்து சென்று விவசாய நிலத்தில் இட்டால் பயிர் செழிக்கும் என நம்புகின்றனர்.

2020 இல் மயான கொள்ளை

இந்த ஆண்டு அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் பிப்ரவரி 23-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.

சிவராத்திரி இரவிலிருந்தே திருவிழாத் துவங்குகிறது. பின் அம்மன் கண்திறப்பு, இரத்த பலி வீசுதல், அமாவாசை மதியம் மயான கொள்ளை, ஊஞ்சல் சேவை, விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

மாசி அமாவாசையில் அம்பிகை முழு சக்தி பலத்தோடு வீற்றிருப்பாள். அன்றைய தினம் சென்று அகில உலக நாயகியான அங்காள பரமேஸ்வரியை சென்று தரிசித்து வேண்டிய நலன்களைப் பெறுவோம்.

3

19/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
19/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

19/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

மிகவும் தைரியமான நாளாகக் காணப்படுகிறது. பெண்களுக்கு எதிலும் நெலிவு சுலிவு பார்த்து இருக்க வேண்டிய நாள். லாவகமாக வரும் எதிர்ப்புகளையெல்லாம் சமாளிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 5, அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை.

ரிஷபம் ராசிபலன்

மிகவும் சந்தோஷமான நாள். எதிர்பார்த்த அனைத்தும் கைகூடும் நாளாகக் காணப்படுகிறது. ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, அதிர்ஷ்ட எண்: 6

மிதுன ராசிபலன்

கொஞ்சம் பரபரப்பாக இயங்கக் கூடிய நாள். வாந்தி மயக்கம் போன்றவை இருக்கும். ராசியில் சந்திரன் சஞ்சரிப்பதில் உடல்நலத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட எண்: 9, அதிர்ஷ்ட நிறம்: மரகதம்.

கடக ராசிபலன்

மிகவும் மகிழ்ச்சியான நாள். எல்லாமே நலமாக வாய்க்கும். வெளிநாடு செல்வது, அங்கு வேலைவாய்ப்புகான முயற்சியில் முன்னேற்றம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: தேன் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் ராசிபலன்

கணவன் மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு சண்டை சச்சரவாக மாறலாம். அதனால் பொறுமை தேவை. திருமகளை வழிபடுவது நலம் பயக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: காக்கி, அதிர்ஷ்ட எண்: 5

கன்னி ராசிபலன் 

செய்கின்ற வேலை, தொழிலில் வெற்றியைக் காட்டுகிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

யாரிடமும் வீண் வாதங்கள் வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு நினைத்ததை வாங்கி மகிழ நல்ல காலம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா, அதிர்ஷ்ட எண்: 7

துலாம் ராசிபலன்

பாக்யம் சிறக்கும் நாள். நல்ல அதிர்ஷ்டம் மேலாக இருந்து விரும்பிய அனைத்தும் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்களால் குடும்பம் சுபிட்சமடையும்.

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிக ராசிபலன்

குடும்பம் மேன்மையுறும். குருவின். நல்லருள் கிடைக்கப் பெறுவதால் பாதகம் ஏதுமில்லை. வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர்சிவப்பு, அதிர்ஷ்ட எண்: 9

தனுசு ராசிபலன்

வீட்டில் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நட்பு வட்டம் பன்மடங்கு பெறுகும். நினைத்தது எல்லாம் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பால் வெள்ளை, அதிர்ஷ்ட எண்: 6

மகரம் ராசிபலன் 

இளைஞர்களுக்குப் பொன்னான நாள். வேலை வாய்ப்புகளில் நல்ல முன்னேற்றம் நிச்சயம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு நன்மையுண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மரகதம், எண்: 5

கும்ப ராசிபலன்

உங்கள் குழந்தைகள் நலம் கருதி, நன்றாக உழைப்பீர்கள். வியாபாரம் அமோக லாபம் பெறும். அனைத்திலும் நல்ல உழைப்பைச் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, அதிர்ஷ்ட எண்: 2

மீனம் ராசிபலன் 

பெற்ற தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வண்டி வாகனங்களை பராமரிப்பில்லாமல் எடுத்துச் செல்லக் கூடாது. மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, அதிர்ஷ்ட எண்: 1

19/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

தேங்காய் அழுகினால் அபசகுணமா?

1
தேங்காய் அழுகினால் அபசகுணமா? ஏன் தேங்காய் உடைத்து பூஜை செய்கிறோம்? பூஜையின் போது தேங்காய் அழுகினால் என்ன பலன்? அழுகி இருந்தால்

தேங்காய் அழுகினால் அபசகுணமா? ஏன் தேங்காய் உடைத்து பூஜை செய்கிறோம்? பூஜையின் போது தேங்காய் அழுகினால் அழுகி இருந்தால் என்ன பலன்?

நமது வழிபாட்டு முறைகளில் மிகவும் தொன்மையானது இறைவனுக்கு அமுது படைப்பது.

அமுது படைத்தலில் கண்டிப்பாக தேங்காய் உடைத்து இறைவனுக்கு சமர்பித்தல் முக்கியமானதாக இருக்கும்.

அனைவரும் கோயிலுக்குச் சென்றால் தேங்காய், வாழைப்பழம், மலர், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்லுதல் வழக்கமாக உள்ளது.

இதில் தேங்காய் உடைத்தல் மற்றும் உடையும் விதத்தை மிகவும் உன்னிப்பாகவும் சகுனம் பார்க்கவும் பயன்படுத்தி வருகிறோம்.

அப்படி என்ன உள்ளது தேங்காய் உடைப்பதில்? ஏன் தேங்காய் உடைத்து பூஜை செய்கிறோம்? தேங்காய் உடைப்பதின் தாத்பர்யம் பற்றி விரிவாகக் காண்போம்.

தேங்காய் உடைப்பதின் தாத்பர்யம்

ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படுகின்ற மும்மலங்களை உடைத்து எறிந்து இறைவனிடம் சராணாகதி அடைகிறேன் என்பதை உணர்த்தும் பொருட்டே தேங்காய் உடைக்கின்றனர்.

இதில் சகுணங்கள் பார்ப்பது நம்மில் பலரும் பல காலங்களாக வழக்கத்தில் வைத்துள்ளனர்.

தேங்காய் அழுகினால் என்ன பலன்?

நாம் இறைவனுக்கு படைக்கும் பொருட்கள் அனைத்தும் நல்ல பரிசுத்தமானதாக இருக்க வேண்டும் என்று அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங்குவோம்.

ஆனால் தேங்காய் ஒன்று மட்டுமே உள்ளே எப்படி இருக்கிறது என்று பார்க்க இயலாது.

உள்ளிருக்கும் தேங்காய் நல்ல நிலையில் உள்ளதா? என அனுபவசாலிகள் கையில் எடுத்ததுமே கண்டுபிடித்து விடுவர்.

நம்மில் பலருக்கு அது தெரியாது. மேலும், கோயிலில் அர்ச்சகர் உடைத்து அது அழுகிய நிலையில் இருந்தால் பலரும் மனம் வேதனை அடைவர்.

அந்த அளவிற்கு நாம் தவறான நம்பிக்கை கலந்த பயத்துடன் வாழ்ந்து வருகிறோம். பூஜையில் உடைக்கும் தேங்காய் அழுகினால் அபசகுணமா?

உண்மையில் கோயில் மற்றும் வீட்டு பூஜைகளில் தேங்காய் அழுகி இருந்தால் மனம் வருந்த வேண்டாம்.

நமக்கு தொல்லை தரக்கூடிய திருஷ்டி, சங்கடங்கள் இறைவன் முன் தொலைந்தது என்று அர்த்தமாகும்.

நாம் நம்முடைய கவலைகள், குறைகள் எல்லாம் நீங்கிப் போக வேண்டும் என்று இறைவனிடம் பிராத்திக்க தான் பூஜைகள் செய்கிறோம்.

அப்படி எல்லா வளங்களையும் தரக்கூடிய இறைவன் மீது நம்பிக்கை வேண்டும்.

அவரால் நாம் எல்லா கஷ்டங்களையும் தீர்த்து வைக்க இயலும் என்று இருக்கும் போது ஏன் வெறுமனே தேங்காய் அழுகியதற்கு அஞ்ச வேண்டும்.

பயமே மனிதனை கொல்லும் சக்தியாக மாறிவிடும். உண்மையில் இறைவனை முழுமையாக நம்புபவர்கள் இது போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி கிடக்கமாட்டார்கள்.

நம்முடைய எண்ணங்கள் நல்லவையாக இருக்க வேண்டும். தேங்காய் அழுகி இருப்பது அபசகுணம் என்று எண்ணி தீமை வரும் என்றே எண்ணங்கள் இருந்தால்.

அந்த பயத்தின் மீதுள்ள நம்பிக்கையே நாம் நினைத்த தீங்கை உண்டாக்கிவிடும்.

இறை நம்பிக்கை வேண்டும்

சகுணத்தின் மீது உள்ள நம்பிக்கையை இறைவனிடம் வைத்தல் வேண்டும். அவரால் செய்ய இயலாதது என்ற ஒன்று கிடையாது.

செவிவழி தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். தெளிந்த நல்மனதோடு இறை பக்தியோடு நல்லதை நினைத்தால் நல்லவையே நடக்கும்.

இயன்ற வரை, நல்ல தேங்காய்களை வாங்க தெரிந்தவர்களிடம், எப்படி சிறந்த தேங்காய் வாங்க வேண்டும்? என்று கற்பதே சிறந்தது ஆகும்.

மேலும் நாம் தேங்காய் உடைத்து பூஜை செய்தாலும் செய்யாவிட்டாலும் இறைவன் நமக்கு விதிக்கப்பட்டதை தராமல் இருக்கமாட்டார் என்பதை உணர வேண்டும்.

தேங்காய் அழுகினால் அஞ்சாமல் உண்மைத் தன்மையை உணர்ந்து இனியாவது மடமையில் குழம்பாமல் இறைவனை பக்தியோடு பூஜித்து நன்மைகளை பெறுவோம்.

3

Njan prakashan: ஞான் பிரகாஷன் படம் பற்றி ஒரு பார்வை!

0
Njan Prakashan ஞான் பிரகாஷன் Malayalam Movie Watch online Movie Review Tamil

Njan Prakashan: ஞான் பிரகாஷன் எனும் மலையாளப்படத்தை பற்றிய ஒரு பார்வை. Njan Prakashan Malayalam Movie Watch online on Netflix. Movie Review Tamil

மலையாள சினிமாக்களில் பெரும்பாலான திரைப்படங்கள் நம் சராசரி வாழ்வை ஒற்றியே இருக்கிறது. இதனை மீண்டும் நிறுபிக்கும் வகையில் வந்த திரைப்படம்தான் ஞான் பிரகாஷன்.

கதைக்கரு

எந்த ஒரு வேலையும் செய்யாமல் பொய்களையும்,கஞ்சதனத்தையும், சுயநலத்தையும்,
பொறாமையும் பிறர் மீது அன்பை வெளிப்படுத்தாமலும் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் ஹீரோ.

தன்னிடம் இருக்கும் அத்தகைய இழிவான குணங்களை, ஒரு குறிப்பிட்ட நிகழ்வினால் இழந்து வாழ்க்கையை  எவ்வாறு வாழ ஆரம்பிக்கிறான் என்பதே கதையின் ஆதிக்கரு.

கதைப்போக்கு

கதையைக்கொண்டு வெறுமனே தத்துவங்களை சுமந்தவாறே திரைப்படம் என்றிருக்கும் என்று எண்ணினால், அது தவறு.

இக்கதைகருவினுள் காதல், ஏமாற்றம், ஏமாற்றும் தனம், அன்பு, துன்பம், காமெடி போன்ற கமர்ஷியல் படங்களுக்கான கூறுகளும் உள்ளது. சண்டைக்காட்சிகளைத் தவிர!

காமெடிகளை பிரதானமாகக் கொண்டே இப்படம் நகருகிறது. அதற்காக ஏதோ இரு நகைச்சுவை கதாப்பாத்திரங்களை வைத்து கதைக்கு சிறிதும் ஒவ்வாத வசனங்களை கொண்டில்லாமல், இயல்பாய் நிகழ்கிறது அனைத்து நகைச்சுவைகளும்.

ஒரு கல்யாண வீட்டில் முந்தியடித்துக்கொண்டு சாப்பிடப்போவது; தன் நண்பனுக்கு பெண் பார்க்கும் நிகழ்வை கலைத்து, பணத்திற்காக அந்த பெண்ணை பிரகாஷன் கல்யாணம் செய்ய முயற்சிகின்றார்.

ஊழல் செய்வதற்காகவே கட்சியில் சேர ஆசைப்படுவது; தன் காதலித்த பெண்ணுக்கு வசதி இல்லாத காரணத்தால் அப்பெண்ணிடமிருந்து விலகுவது என பிரகாஷன் எனும் காதாப்பாத்திர வடிவமைப்பை, கதைக்கேற்ப நிகழ்த்தியிருக்கிறார்கள்.

படத்தின் நாயகனுக்கு ஒரு கட்டத்தில் ஏமாற்றம் ஏற்படுகிறது. அப்போது நான்தான் படத்தின் நாயகன் என்று எதிர் கேள்விகளை வீசாமல் கருத்துகளை உரைக்காமல், நாயகன் கதாப்பாத்திரம் சோர்வடைந்து அச்சூழலை விட்டு நகர்ந்து வேறு ஒரு சூழலுக்கு செல்கிறது.

ஆம்! இப்புதிய சூழலில்தான் அந்த உள்மாற்றங்கள் நிகழ்கின்றன. படம் பார்க்கும் நமக்குள்ளும் அந்த மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. படம் முடிந்தபின்னும்
அதைப்பற்றிய சிந்தனைகள் மனம் முழுக்க நிரம்பிவிடுகிறது.

அடுத்த நகர்வு

கதையின் மற்றொரு படிநிலையில் உடல் நிலை சரியில்லாத பத்தாம் வகுப்பே படித்துக்கொண்டிருக்கும், பெண்ணை பார்த்துக்கொள்வதற்காக பிரகாஷன் செல்கிறான்.

அங்கு நடைபெறும் நிகழ்வுகளை காமெடி கலந்த ஏமொஷனலாக சொல்லியிருக்கிறார்கள்.

ஏமொஷனல் என்று சொல்லும்போது, தூறலைப்போல் மென்மையாக காட்சிகளையும் வசனங்களையும் வைத்துவிட்டு நம்மை கண்கலங்கச்செய்கிறார் இயக்குநர்.

இத்திரைப்படம் தன்னை பார்ப்பவர்களை உத்தமர்களாக மாற்றுவதற்காக கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட பாணியில் இருக்காது.

ஒருவரின் கதையை, அவர் சந்தித்த மனிதர்களை, அதனால் ஏற்பட்ட மாற்றத்தை நாங்கள், உங்களுக்குச் சொல்கிறோம் பாருங்கள் என்று நம்மிடம் கொடுத்துவிடுகிறது திரைப்படம்

இயக்குனரும், கதையாசிரியரும்

கதை சீனிவாசன் அவர்கள் எழுத சத்யன் இயக்கி உருவானதுதான் “ஞான் பிரகாஷன்”. பிரகாஷன் எனும் கதாபாத்திரம் செய்யும் செயல்கள் திரைப்படத்தை பார்க்கும் மக்களின் மனங்களில் சலனத்தை ஏற்படுத்துகிற இடத்தில் இயக்குனரின் வெற்றி  நிகழ்ந்திருக்கிறது.

நாயகன் கதாப்பாத்திரம் செய்யும் செயல்களில் ஏதேனும் ஒன்றையாவது நாம் செய்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

அதுதான் அச்சலனத்திற்கு காரணமாக அமைகிறது. அதற்காக மனித மனங்களை சுயவெறுப்படைய செய்யாமல் தன்னைத்தானே ஒரு உள்ளாய்வு செய்யும் தளத்தை கதை உருவாக்கி கொடுத்துள்ளது.

ஒருவர் எழுதிய கதையை முறைப்படி உரிமைப்பெற்று மற்றொருவர் இயக்கும் நிகழ்வு மலையாள சினிமாக்களில் அவ்வபோது நடக்கிறது.

இப்படிப்பட்ட முயற்சிகள் நம் தமிழ் சினிமாக்களிலும் நடைபெற்று வருவது சந்தோஷமளிக்கிறது. ஆம்! இதுவெல்லாம் சினிமாத்துறையில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி.

நடிப்பு

ஃபகத் பாசில் எனும் நடிப்பு அரக்கனிடம் இப்படியொரு கதை சிக்கியிருப்பது இத்திரைப்படத்திற்கு ஆகப்பெறும் பலம்.

ஃபகத்தை தவிர்த்து யாரையும் கற்பனை செய்து கூட பார்க்கத்தோன்றவில்லை. அந்த கண்களும், வசன உச்சரிப்புகளும், உடல் அசைவுகளும் பிரகாஷனைத்தான் காட்டுகிறதே தவிர ஃபகத்தை காட்டவில்லை.

சீனிவாசன் அவர்களின் நடிப்பும் பாவனைகளும் படத்தை இயக்குநர் நினைத்தபடியே கொண்டு செல்ல உதவுகிறது.

நடிகர்களிடம் இருந்து எவ்வாறு நடிப்பை பெற வேண்டும் என்பதில் இயக்குநர் சத்யன் மிகவும் தேர்ந்தவர் என்பதுபோல், அனைவரின் நடிப்பும் கதைக்கு பலமாகவே உள்ளது.

இசையும், ஒளிப்பதிவும் கதைக்கு சங்கடம் விளைவிக்காமல் இருந்தாலே போதுமென்பது போன்றுதான் சமீபத்திய திரைப்படங்களில் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால் ‘ஞான் பிரகாஷனுக்கு’ அவ்விதத்திலும் ஏறுமுகம்தான். ஆம்! படத்தை, இசையும் ஒளியும் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவே இல்லை.

மலையாளத்தின் மற்றொரு தரம் “ஞான் பிரகாஷன்”. ‘ஞான் பிரகாஷனின்’ வாழ்வு நெட்பிளிக்ஸில் (Netflix) காணக்கிடைக்கிறது.

3

18/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
18/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

18/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

கல்வியில் நல்ல முன்னேற்றம் காணும் நாள். வியாபாரிகளுக்கும் பெரும் லாப முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் அசௌகரியங்கள் தீரும்.

அதிர்ஷ்ட எண்: 9; அதிர்ஷ்ட நிறம்: மரகதம்

ரிஷபம் ராசிபலன்

சிறந்த வகையிலான தகவல் தொடர்புத் துறை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம். இளைஞர்களுக்கு கணினித் துறையில் வேலை கிட்டும்.

நண்பர்களோடு பேசுகையில் நிதானம் தேவை. விளையாட்டு விபரீதமாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: தேன்வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 2

மிதுன ராசிபலன்

நல்ல தனவரவுடைய நாளாகக் காணப்படுகிறது. நிதானமான போக்கு தேவைப்படுகிறது. வேலை பார்க்குமிடத்தில் மேலதிகாரியை பகைத்தல் கூடாது.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்; காக்கி வண்ணம்.

கடக ராசிபலன்

எதிலும் சற்று கவனம் தேவை. வெற்றியடையும் நாளாகக் காணப்பட்டாலும் சிறிது வேலைப்பளு அதிகம் இருக்கும். பொறுமையுடன் வேலையில் ஈடுபடுவது சாலச் சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா வண்ணம், அதிர்ஷ்ட எண் : 7

சிம்மம் ராசிபலன்

நல்ல நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. தாய் தந்தையரின் நலத்தைக் கவனித்துக் கொள்வது மிக அவசியம்.

தந்தையாரின் உடல்நலத்தைப் பேணுவது சிறந்தது. உங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்; அதிர்ஷ்ட எண் : 3

கன்னி ராசிபலன் 

மிகச் சிறந்த லாபகரமான நாளாகக் காணப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளால் பெருமைகள் கூடி வரும். பெண்களுக்கு மாமியாரால் பிரச்சனை உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: அடர்சிகப்பு; அதிர்ஷ்ட எண்: 9

துலாம் ராசிபலன்

அதிர்ஷ்டம் கொட்டும் நாள். எந்த வாய்ப்புகள் வந்தாலும் தவிர்க்காமல் ஏற்றுக் கொள்வது நலம்.

சிறிய வேலையாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக அந்த வேலையைச் செய்து காட்ட வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம் : மரகத வண்ணம்; அதிர்ஷ்ட எண் : 5

விருச்சிக ராசிபலன்

தந்தைவழி உறவுகளால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டு தொடர்பான அனைத்து விஷயங்களும் வெற்றி பெறும். வியாபாரத்தில் வெற்றி உண்டு. தூரதேசத்தில் வசிப்பவர்கள் பற்றிய பயம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஜா வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 6

தனுசு ராசிபலன்

இன்று நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவீர்கள். நண்பர்களுடன் உணர்ச்சிவசமாகப் பேசி மகிழ்வீர்கள். அதேநேரம் உணர்ச்சிவசப்படாமல் அறிவுக்கு வேலை கொடுத்து பணியாற்றினால் இன்று எதிலும் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 2

மகரம் ராசிபலன் 

நண்பர்களிடத்தில் உள்ள பகைமையை மறந்து மனம் களிக்க வேண்டிய நாள். அவசரப்பட்டு நல்ல நண்பர்களை இழந்து விட வேண்டாம். எதிலும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 1

கும்ப ராசிபலன்

மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். ஆறுபடை முருகன் வீட்டில் ஒன்றை வழிபடுவது நல்லது. வெளிநாட்டில் இருப்போர் ஓம் சரவணபவ என உச்சரித்தால் உயர்வடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 5

மீனம் ராசிபலன் 

பூர்வ புண்ணிய அனுக்கிரகம் முழுமையாகக் கிடைக்கக் கூடிய நாள். எல்லா அதிர்ஷ்டமும் கிடைக்கக் கூடிய நாளாகக் காணப்படுகிறது. குலதெய்வ வழிபாடு இன்னும் குதூகலத்தை அதிகப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

18/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

மகா சிவராத்திரி உருவான கதை – Maha Sivarathiri Tamil

1
சிவராத்திரிகள் எத்தனை வகைப்படும்

மகா சிவராத்திரி உருவான கதை. Maha Sivarathiri Tamil மஹா சிவராத்திரி சிறப்புகள். சிவராத்திரி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? சிவராத்திரிகள் எத்தனை வகைப்படும்?

Maha Sivarathiri Tamil மஹா சிவராத்திரி சிறப்புகள் கும்ப மாதம் என்று கூறப்படும் மாசி மாதத்தில் (தேய்பிறை) கிருஷ்ண பட்சத்தில் வரும் சதுர்தசி திதியுடன் கூடிய தினமே மகா சிவராத்திரி எனப்படுகிறது.

சிவராத்திரிகள் எத்தனை வகைப்படும்?

• நித்திய சிவராத்திரி
• மாத சிவராத்திரி
• பட்ச சிவராத்திரி
• யோக சிவராத்திரி
• மகா சிவராத்திரி

இவ்வாறு சிவராத்திரிகள் ஐந்து வகைப்படும். இதில் மாசி மாதம் வரக்கூடிய சிவராத்திரியே “மகா சிவராத்திரி (Maha sivaratri)” என்று கூறப்படுகிறது.

மகா சிவராத்திரி உருவான கதை வரலாறு

மகா சிவராத்திரி உருவான கதை மஹா சிறப்புகள் விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?

பிரளயம் முடிந்து உலகம் முழுதும் உள்ள உயிர்கள் அனைத்தும் சிவனிடத்தில் ஒடுங்கின.

பிரம்மனும் சிவனிடத்தே ஐக்கியம் ஆனார். உயிர்கள் ஏதும் தோன்றவில்லை.

இதை கண்டு அகில உயிர்களுக்கும் தாயான பார்வதி தேவி மனம் வருந்தி மீண்டும் பிரபஞ்சம் உருவாகி உயிர்கள் பிறக்க சிவனை நோக்கி இரவு முழுவதும் தியானித்து சிவன் மனம் மகிழ பூசைகள் செய்தார்.

பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன் மீண்டும் உலகம் தோன்ற அருள் புரிந்தார்.

அன்னையும் அவள் பூஜை செய்து அருள் பெற்ற தினத்தில் எவர் சிவனிற்கு பூஜைகள் செய்தாலும் அவர்களுக்கு சகல சௌக்கியமும், முக்தியும் கிடைக்க வேண்டும் என்ற வரம் வேண்டினார்.

சிவனும் பார்வதியின் வேண்டுதலை ஏற்று வரமளித்தார். பார்வதி பூஜைகள் செய்த அந்த இரவே மகா சிவராத்திரி (மஹா சிவராத்திரி) தினமாகும்.

இந்நாளில் நந்தி முதல் சனகாதி முனிவர்கள் வரை பலரும் விரதமிருந்து பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றனர்.

மஹா சிவராத்திரி சிறப்புகள் – கதை

ஒரு காட்டில் வாழ்ந்து வந்த குரங்கானது வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தது.

குரங்கு வில்வம் என அறியாது இலைகளை இரவு முழுவதும் கொய்து கீழே போட்டு கொண்டே இருந்தது. அந்த இலைகள் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல் விழுந்தன.

அறியாமல் குரங்கு எறிந்த போதிலும் சிவராத்திரி அன்று இரவு முழுதும் சிவனிற்கு அர்ச்சனையாக மாறியதால் இறையருள் பெற்றது.

அந்த குரங்கே “முசுகுந்த சக்ரவர்த்தி” ஆக பிறந்தார் என்ற கதை உள்ளது.

3

உலகின் நீளமான மலை தொடர்ச்சி – டாப் 10 பட்டியல்

1
மிக நீளமான மலைத்தொடர் எது?

உலகின் நீளமான மலை தொடர்ச்சி டாப் 10 பட்டியல். மிக நீளமான மலைத்தொடர் எது? world longest mountain range in tamil. நீண்ட மலை தொடர்ச்சிகள்.

நீண்ட மலை தொடர்ச்சிகள் பற்றி அறிய ஆர்வம் நிறைய நபர்களுக்கு உண்டு. அங்கு பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் அதைவிட அதிகம்.

நிலப்பகுதியின் மேல் உயரமாக அமைந்துள்ள பெரிய செங்குத்தான நில அமைப்பு பகுதிக்கு பெயரே மலை ஆகும்.

அவற்றில், உலகின் நீளமான மலை தொடர்ச்சி எங்கு உள்ளது. (world longest mountain range in tamil) மிக நீளமான மலைத்தொடர் எது? என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இந்தப் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கும் மிக நீளமான மலைத்தொடர் எது? என்பதை கற்பனை செய்துகொண்டே படியுங்கள்.

நீங்கள் சரியாக கண்டுபிடித்துள்ளீர்களா என இறுதியில் கமெண்ட் செய்யுங்கள் பார்க்கலாம்.

10. அல்தாய்  மலைத்தொடர்

அல்தாய்  மலைத்தொடர்

இந்த மலை தொடர் ஆசியா கண்டத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது இதன் நீளம், 2000 கீ.மீ.  இதில் 4500 மீ உயரத்தில் பெலுகா என்ற சிகரமும் அமைந்துள்ளது.

இது ரஷ்ய மங்கோலிய சீனா கஜகஸ்தான் போன்ற நாடுகளை இணைக்கின்றது அதிகமான மலை பகுதிகள் மங்கோலியா நாட்டில் தான் அமைந்துள்ளது.

9. இமயமலை தொடர்ச்சி

இமயமலை தொடர்ச்சி நீண்ட மலை தொடர்ச்சிகள்

இது ஆசிய கண்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது . இந்த மலைத்தொடர் மற்ற மலைத்தொடர்களைவிட மிக இளமையான மலைத்தொடர் ஆகும்.

இதன் நீளம் 2400 கிமீ ஆகும். இங்குதான் உலகின் மிக உயரமான மலை என அறியப்படும் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது இதன் உயரம் (8848 மீ ) ஆகும்.

8. அப்பலாசியின் மலைத்தொடர்

அப்பலாசியின் மலைத்தொடர் நீண்ட மலை தொடர்ச்சிகள்

உலகின் நீண்ட மலைத்தொடர்ச்சியில் எட்டாவது இடத்திலிருக்கிறது. இதன் நீளம் 2444 கிமீ மற்றும் அகலம் 300 கிமீ.

இது உலகின் மற்ற மலைகளைவிட உயரம் குறைவானது இம்மலைத் தொடரில் மிக்செல் என்னும் சிகரம் அமைந்துள்ளது.

இதன் உயரம் 2037 மீ ஆகும். கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகளுக்கு கிழக்கு கடற்கரை எல்லையாக அமைந்துள்ளது.

7. அட்லஸ் மலை தொடர்கள்

அட்லஸ் மலை தொடர்கள்

அட்லஸ் மலைத்தொடர் நீண்ட மலை தொடர்கள்  ஏழாவது  இடத்தில்  உள்ளது. இதன் நீளம் 2500 கிமீ ஆகும்.

ஆப்பிரிக்க கண்டத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதில் டுப்கால் என்ற சிகரம் உள்ளது.

இதன் உயரம் (4165 மீ) ஆகும். இந்த  அட்லஸ் மலை தொடர்கள்  சகாரா பாலைவனத்தின் எல்லைப் பகுதியாக காணப்படுகிறது.

மேலும் இந்த மலை நான்கு குவியமாக பிரிக்கப்படுகிறது.
1. மத்திய அட்லஸ்
2. ஆண்டி அட்லஸ் 
3. உயர் அட்லஸ்
4. சகரான் அட்லஸ்

6. யூரல் மலைத்தொடர்

யூரல் மலைத்தொடர் உலகின் நீளமான மலை தொடர்ச்சி டாப் 10 பட்டியல்கள்

யூரல் மலைத்தொடர் ஆறாவது நீண்ட மலைத்தொடராக உள்ளது. இதன் நீளம் 2500 கிமீ மற்றும் அகலம் 150 கிமீ ஆகும்.

இது ரஷ்யாவில் வடமேற்கு பகுதியில் தொடங்கி கசகஸ்தானில் வடக்கு பகுதிகளில் நீண்டுள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பா கண்டங்களுக்கு எல்லையாக அமைகிறது.

5. குன்லுன் மலை தொடர்ச்சி

குன்லுன் மலை தொடர்ச்சி மிக நீளமான மலைத்தொடர் எது?

உலகின் நீண்ட மலைத்தொடர்களில் ஐந்தாவது இடத்தில் இருப்பது  குன்லூன் மலை தொடர்ச்சி ஆகும்.

இதன் நீளம் (3000 கிமீ).
வடக்கு எல்லையில் கோபிப்பாலைவனம், தெற்கு எல்லையில் திபெத் பீடபூமி, கிழக்கு எல்லையில் பாபிர்  முடிச்சு, மேற்கு எல்லையாக வடகிழக்கு சீனா அமைந்த்துள்ளது.

இந்த மலையில் “குன்லுன் தேவதை” என்ற சிகரம் (1895 மீ ) உயரத்தில் அமைந்துள்ளது.

4. டிரான்டான்டிரிடிக்  மலைத்தொடர்

டிரான்டான்டிரிடிக்  மலைத்தொடர் world longest mountain range in tamil

இதன் அமைவிடம் அண்டார்டிகா கண்டம் 98% விழுக்காடு பனி உரைவுகளாக காணப்படுகின்றன.

இங்கு சீல்கள், பெங்குவின்கள், கடல்வாழ் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் வாழ்கின்றன.

இதன் நீளம் 3500 கிமீ மற்றும் அகலம் 100 முதல் 280 கி.மீ. இது குறுகிய மலைத்தொடர் ஆகும். இதில் கிர்க் பாட்டிரிக் என்ற சிகரம் 4528 மீ உயரம் கொண்டுள்ளது.

3. கிரேட்டிவைட்டிங் ரேஞ்சர்

கிரேட்டிவைட்டிங் ரேஞ்சர் நீண்ட மலை தொடர்ச்சிகள்.

ஆஸ்திரேலியா கண்டத்தில் அமைந்துள்ள மலை தொடர். இதன் நீளம் 3500 கிமீ ஆஸ்திரேலியா வடகிழக்கு குயின்லாந்து தொடங்கி மேற்கு விக்ட்டோரிய வரை கிழக்கு கடற்கரை ஒட்டிய மாலைத் தொடர் அமைந்துள்ளது.

இம்மலையில் கோஸ் சியுஸ்கோ என்ற சிகரம் 2228 மீ உயரத்தில் இங்கு காணப்படுகிறது. அதேபோல் இங்கு அழகான டேஞ்சர் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது.

2. ராக்கி மலைத்தொடர்

ராக்கி மலைத்தொடர் world longest mountain range in tamil. நீண்ட மலை தொடர்ச்சிகள்.

இந்த மலைத்தொடர் வட அமெரிக்கா கண்டத்தில் மேற்கு பகுதியில் 4800 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது. 4400 மீ உயர அளவில் எல்பேர்ட் சிகரம் அமைந்துள்ளது.

இந்த மலை சிறந்த சுற்றலாத் தளமாக இருக்கின்றது.  எனவே, சுற்றுலாப்பயணிகள் முகம் இட்டு தங்கி பொழுதைக் கழிக்கின்றனர்.

நடைப்பயணம், பனிச்சறுக்கு, மீன்பிடித்தல், மலையேறுதல் மற்றும் வேட்டையாடுதல் போன்றவை இந்த மலையின் பொழுது போக்கு அம்சங்கள்.

1. ஆண்டிஸ் மலைத்தொடர்

ஆண்டிஸ் மலைத்தொடர் உலகின் நீளமான மலை தொடர்ச்சி டாப் 10 பட்டியல்கள். மிக நீளமான மலைத்தொடர் எது?

நீண்ட மலைத்தொடரில் முதல் இடத்தில உள்ளது ஆண்டிஸ் மலைத்தொடர். இது தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ளது.

இதன் நீளம் 7000 கிமீ மற்றும் அகலம் 500கிமீ ஆகும். தென் அமெரிக்கா மேற்கு கடற்கரை ஒட்டி வடக்கு தெற்காக அமைந்துள்ளது. அஃக்கோன்காகுவ என்ற சிகரம் 6962 மீ உயரம் கொண்டுள்ளது.

இமையமலைக்கு அடுத்த படியாக உயரமான சிகரங்கள் இந்த மலை தொடரில் காணப்படுகிறது. மிகப்பெரிய பீடபூமி அலிபிளாலோ இங்குள்ளது.

ஓஸோஸ் எல் சாலடோ சிலி என்ற எரிமலை  இங்குள்ளது. 3500 வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் இந்த மலைத்தொடரில் வாழ்கின்றன.

இந்த மலைத்தொடர் பருவ நிலையை அடிப்படையாகக் கொண்டு மூன்று பகுதியாகப் பிரித்துள்ளனர். வெப்பமலை ஆண்டிஸ், உலர் ஆண்டிஸ், வெப்பமண்டல மலைமிகு ஆண்டிஸ் என மூன்று பிரிவு உண்டு.

உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்
உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை

உலகின் நீளமான கடற்கரைகள் டாப் 10 பட்டியல்

Indian Borders: இந்தியாவின் எல்லைகள்
உலகின் மிக உயரமான மலைகள் டாப் 10 பட்டியல்
3