Doctor First Look: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் பெர்த் டே ட்ரீட் மற்றும் டாக்டர் படக்குழு விவரங்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள்
நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் நேற்று. ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளார்.
சிவாகார்த்திகேயன், ஹீரோ பட வெளியீட்டுக்கு பிறகு அடுத்தடுத்து டாக்டர், அயலான் ஆகிய படங்களுக்கு ஸைன் செய்துள்ளார். இன்று Doctor First Look வெளியாகி உள்ளது.
டாக்டர் ஃபர்ஸ்ட் லுக்கில் சிவா ஒரு சோபா மீது உட்கார்ந்தபடி இரண்டு கைகளிலும் ஒரே ரத்தமாக இருக்கிறது. கையில் ஆபேரேசன் செய்யும் சர்ஜிகள் கத்தி வைத்து மிரட்டுகிறார்.
சோடப்பெட்டி கண்ணாடி, போலோ டி ஷர்ட் மற்றும் ஒரு பார்மல் பேண்ட் போட்டு தன்னை சுற்றி ஒரே சர்ஜிகள் கத்தியை பரப்பி போட்டு வைத்து இருக்கிறார்.
டாக்டர் படக்குழு விவரங்கள்
சிவகார்த்திக்கேயனின் அடுத்த திரைப்படம் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். கோலமாவு கோகிலா படத்தில் பிரபலமான இயக்குனர் இவர்.
இப்படத்தை கேஜெஆர் ஸ்டுடியோஸ் மட்டும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் சேர்ந்து தயாரிக்கின்றனர். இதில் தெலுங்கு நடிகை ப்ரியா மோகன், யோகி பாபு முன்னனி கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு விஜய் கார்த்திக்கும், எடிட்டிங் வொர்க் நிர்மலும், ஆர்ட் வொர்க் கிரண் அவர்களும் செய்கிறார்கள்.
படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு அன்பரிவு காஸ்டிங்க் செய்யப்பட்டுள்ளனர்.
நாடு, மதம், இனம், நிறம் மற்றும் மொழி கடந்து நாங்கள் ஒரு குடும்பமாக செயல்பட்டு விளையாடி வருகிறோம். இம்மாதிரியான ஒரு செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ கூறினார்.
Racism in Sports
கால்பந்தாட்டத்தில் ரேசிசம் என்பது புதிது இல்லை. குறிப்பாக கறுப்பின வீரர்கள் அடிக்கடி இவ்வாறு அவமானப்பட்டிருக்கிறார்கள். நேற்று நடந்தது அதில் ஒன்று.
சில சமயங்களில் அடி தடி சண்டை வர சென்று விடும். கால்பந்தாட்டம் மட்டுமல்ல மற்ற விளையாட்டுகளிலும் இது நடப்பது உண்டு.
ஒரு வீரரின் ஜாதி, மதம், இனம், நிறம் போன்றவை பார்த்து வாய்ப்பு மறுக்கப்படுவதை நாம் கண்கூட பார்த்துள்ளோம்.
இந்தியாவில் சொல்லவே தேவை இல்லை. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியலையும் அவர்கள் பின்புறத்தையும் பார்த்தால் உங்களுக்கே புரிந்து விடும்.
இந்திய முன்னணி நட்சத்திர வீரரான எம்எஸ் தோனி கூட அவரின் பின்புறத்தை வைத்து அவமதித்த ஊர் இது. தமிழ்நாட்டு ரஞ்சி அணியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை ஒரு முறை பாருங்கள்.
இவ்வளவு ஏன் விளையாட்டை வைத்து வரும் பயோ பிக் திரைப்படங்கள், பகுதி விளையாட்டு கற்பனை திரைப்படங்களை பார்த்தால் இது எந்த அளவுக்கு உண்மை என புரியும்.
நாகரீகம் ஒரு பக்கம் வளர்ந்ததாக கூறினாலும் மனிதனின் அழுக்கு படிந்த மனதும், அவன் அழுகிப்போன புத்தியும் இன்னும் மாறவில்லை என்பதை நினைக்கையில் மிகவும் வருத்தமாக உள்ளது.
இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நேராமல் ரசிகர்களாகிய நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எடுக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். மகத்துவமான நாளாகக் காணப்படுகிறது. முதியோர் தங்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வெற்றி நிறைந்த நாளாகக் காணப்படுகிறது.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண் : 3
ராசிப்பலன் 17/2/2020: இன்றைய தின ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
இங்க்ரிட் எஸ்கமில்லா கொலை: பெண்ணின் கொடூரமான கொலைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரு இளம் பெண் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெக்ஸிகோ நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
கண்ணியம் தவறிய செய்தித்தாள்
இங்க்ரிட் எஸ்கமில்லா 25, அவருடைய கணவர் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ (46) என்பவரால் குத்திக் கொல்லப்பட்டார். பின்னர் ஆதாரங்களை மறைக்கும் முயற்சியில் அவரது உடலை சிதைத்துள்ளார்.
ஆனால் தடயவியல் நிபுணர்கள் அவரது சடலத்தின் படங்களை வெளியிட்டுள்ளனர், மேலும் அங்குள்ள ஒரு முக்கிய செய்தித்தாளில் இந்த படங்களில் ஒன்றை அதன் முதல் பக்கத்தில் வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.
மெக்ஸிகோவில் ஃபெமிசைட் என்ற அப்பாலின அடிப்படையிலான பெண்களைக் கொலைசெய்வது அதிகரித்து வருகிறது.
தற்போது 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் இதேபோல் கொலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அவர்களின் பாலினம் காரணமாக கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வை எதிர்த்தவர்கள், பெரும்பாலோர் பெண்களே ஆவார்கள். மெக்ஸிகன் தலைநகரில் “responsible journalism ” என்ற வார்த்தை பலகைகளை வைத்திருந்தனர்.
மேலும் “இன்னும் இது போல் ஒரு கொலை நிகழக்கூடாது” போன்ற கோஷங்களையும் அங்கு கூடிய மக்கள் சத்தம் எழுப்பினர்.
ஒரு இளம் பெண் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெக்ஸிகோ நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் பலத்த மழையின் காரணாமாக லா ப்ரென்சாவின் அலுவலகங்களுக்கு அணிவகுத்துச் சென்றனர்.
பத்திரிக்கை வாகனத்தை பஸ்மாக்கிய மக்கள்
இது திருமதி எஸ்கமில்லா உடலின் கொடூரமான படங்களை ”It was cupid’s fault’ “இது மன்மதனின் தவறு” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தித்தாளின் நிறுவனத்தை சார்ந்த ஒரு வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது.
மேலும் பல எதிர்ப்பாளர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதினர். அவர்கள் செய்தித்தாள் அலுவலகங்களுக்குள் நுழைவதைத் தடுக்க முயன்றதால் இம்மோதல் நடந்தேறியது.
லா ப்ரென்சா, பொது விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், அதன் முடிவிற்கு ஆதரவாக நிற்கிறது. ஆனால், சட்டப்பூர்வ தேவைகளுக்கு அப்பால் அதன் தலையங்க தரங்களை சரிசெய்வது பற்றிய விவாதங்களுக்கு இது திறந்திருப்பதாகக் கூறினார்.
இங்க்ரிட் எஸ்கமில்லா கொலை
இந்த மாத தொடக்கத்தில், பல மெக்ஸிகன் மக்கள் வனவிலங்குகள் மற்றும் இயற்கை நிலப்பரப்புகளின் வெள்ளம் புகுந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர்.
ஆனால் காய் முறியடிக்கும் விதத்தில் அதற்கு மேலான பதிவுகள் #IngridEscamilla என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஆன்லைனில் சுற்றும் அவரது உடலின் புகைப்படங்களோடு அவரது கொலைக்கு எதிராகப் பதிவிட்டனர்.
இந்த பெண்ணின் கொடூரகொலை நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் படுகொலை விவகாரத்தை பொது விவாதத்திற்கு கொண்டு வந்த படுகொலைகளில் இது தற்போதைய நிகழ்வு .
கடந்த ஆண்டு மெக்ஸிகோவில் 3,825 பெண்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன – 2018 ஐ விட 7% அதிகரித்துள்ளது.
பெரும்பான்மையான வழக்குகள் ஒருபோதும் தீர்க்கப்பட்டது இல்லை. குற்றவாளிகளில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே நீதிக்கு கொண்டு வரப்படுகிறார்கள் என்பதை ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.
ஜனாதிபதி லோபஸ் ஒப்ராடோர் உரை
ஜனாதிபதி லோபஸ் ஒப்ராடோர் பெண்ணின் படுகொலைகளின் வகைப்பாடு குறித்து கேட்டபோது, முன்னர் ஊடகங்கள் இந்த பிரச்சினையை “கையாளுகின்றன” என்று குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால் எதிர்ப்பாளர்கள் வெள்ளிக்கிழமை தேசிய அரண்மனைக்கு வெளியே கூடியிருந்தபோது, அவர் செய்தியாளர்களிடம் “தனது தலையை மணலில் புதைக்கவில்லை” என்று கூறினார்.
“நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் எப்போதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனித்துக் கொள்ளும்” என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.
20 years of Hey Ram: ஹே ராம் படம் பற்றி ஒரு பார்வை. ஹே ராம் படத்தின் முக்கிய தருணங்கள் மற்றும் ஹேராம் படத்தின் சில சுவாரசியமான தகவல்களைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
பத்மஸ்ரீ கமலஹாசன் எழுதி, இயக்கி, நடித்து 2000-ஆம் ஆண்டில் வெளிவந்த பகுதி வரலாற்று கற்பனைக் கதை கொண்ட திரைப்படம் ஹே ராம் வெளிவந்து இன்றுடன் இருபது வருடங்கள் ஆகிவிட்டது.
இதில் ஷாருக்கான், அதுல் குல்கர்னி, ராணி முகேர்ஜி, நசுரீதின் ஷா, வசுந்தரா தாஸ், சவ்ரவ் சுக்லா இன்னும் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹேராம் கதைச் சுருக்கம்
ஹீரோ சகேத் ராம் தொல்பொருள் ஆய்வாளர், பெங்கால் கலவரத்தில் பாதிக்கப்பட்டு தன் காதலியை இழப்பார். இது அவருக்கு மத வெறுப்பை உண்டாக்கிவிடும்.
இந்தியாவில் நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும் உயிர் இழப்புகளுக்கும் காந்தி தான் காரணம் என்று நம்புவார்.
இறுதியில் காந்தியுடன் இரண்டு மூன்று சந்திப்புகளுடன் அவர் முழுவதும் மாறிவிடுவார்.
இறுதியில் ராம் காந்தியின் மீதான வெறுப்பு போகி அவரின் பக்தன் ஆகி விடுவார். இதுவே இப்படத்தின் கதைச்சுருக்கம்.
ஹேராம் படத்தின் முக்கியத் தருணங்கள்
இப்படத்தில் சப்போர்டிங் ரோலில் நடித்த அபையங்கார் ஸ்ரீராம் (அதுல் குல்கர்னி) சிறந்த நடிப்பை வெளிப்படித்தி இருப்பார். சாகேத் ராம்கு காந்தி மீது இவ்வளவு வெறுப்பு வார காரணமும் இவர்தான்.
இந்தியாவில் நடக்கும் அனைத்து கலவரங்களுக்கும் காந்தி தான் காரணம் என்று நம்ப வைப்பார். ஒரு காட்சியில் அபையங்கார் ஸ்ரீராம் கூறும் வசனம் ‘there is one man behind all this, barrister Mohandas Karamchand Gandhi’.
மேலும் கிலாபாத் இயக்கத்திற்கும் காந்தி தான் காரணம் என்று கூறியும் மூளைச்சலவை செய்வார். இவையே சாகேத் ராம் காந்தியை கொள்ள நினைப்பதற்கு உந்துக்கோளாக அமைந்தது.
படத்தின் இறுதியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட 7-ஆம் வருடத்தில் சாகும் தருணத்தில் இருக்கும் சாகேத் ராம் இந்து முஸ்லிம் கலவரத்தைப் பார்த்து இன்னும் இந்த சண்டைகள் முடியவில்லையா என்று உயிர் நீப்பார்.
ஹே ராம் படத்தின் சில சுவாரசியமான தகவல்கள்
ஹேராம் படம் ரிலீஸ் ஆகி பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. இப்படம் இந்திய தேசியத் தலைவரை இழிவாக எடுத்துரைப்பதாக இடம்பெற்ற அரசியல் காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இப்படம் தமிழுக்கு பிறகு ஹிந்தி மற்றும் இங்கிலீஷ் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.
இப்படத்தில் வசனங்கள் மூன்று மொழிகளிலும் கலந்து கலந்து வந்தது. இது வணிக ரீதியில் இப்படம் தோல்வியுறக் காரணமாக அமைந்தது.
மேலும் இப்படம், non linear முறையில் கதை எடுத்து சொல்லப்பட்டதும் சில ஆபாசக் காட்சிகளும் கூட ஹே ராம் தோல்வியுற மற்றொரு காரணம்..
இந்தியாவில் ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இறுதிப் பட்டியலில் இது இடம்பெறவில்லை.
இப்படம் மூன்று தேசிய விருதுகளும் ஒரு ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றது. சப்போர்டிங் ரோல் நடித்த அதுல் குல்கர்னிக்கு தேசிய விருதும் கமல்ஹாசனுக்கு ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது.
இப்படத்தில் சுருதிஹாசன், சர்தார் வல்லபாய் பட்டேல் மகளாக நடித்துள்ளார். இப்படத்திற்கு சம்பளமாக ஷாருக்கான் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லையாம்.
உங்களுடைய அதீத தைரியத்தால் எதனையும் வெல்லும் திறன் வாய்க்கும். உடல் நலக் கோளாறுகள் இருந்தால் இன்று ராகு கேதுகளை வழிபட நிவர்த்தியாகும். சகோதர உறவினர்களின் உடல் நலத்தைப் பேணுங்கள்.
மனக்குழப்பங்கள் வரலாம். எதிலும் நிதானம் தேவை. வயதானோர்களுக்கு வாந்தி, பித்தம், மயக்கம் வரலாம். தெய்வ நாம சங்கீர்த்தனம் செய்வது அவசியம். வேலைப்பளு மற்றும் பொறுப்புகள் கூடும் நாள்.
மிகவும் பாக்யமான நாளாகக் காணப்படுகிறது. தந்தை வழி உறவுகளால் சந்தோஷம் கூடும். தூர தேசத்திலிருந்து நல்ல செய்தி வரும். நரம்பு எலும்பு சம்மந்தப்பட்ட் நோய்கள் வரலாம்.
சந்திரன் ராசியிலேயே உலவுவதால் வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்கும் நாளாகக் காணப்படுகிறது. எவரிடமும் கருத்துச் சொல்லாமல் இருப்பது நலம். பொறுமை காப்பது கூடுதல் நலம். திருமணப் பேச்சுகள் சுபமாகும்.
உடல் நலத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றலும். வாழ்க்கை நிலைமை மேம்படும். உடனுக்குடனான கடனுதவி கிடைக்கும். உத்தியோக முன்னேற்றம் உண்டு. எதிலும் லாபங்கள் பெருகி வரும் நாள்.
கரக் மொறுக் சாப்பிடும் சத்தம் ஏன் சிலரை கோபப்படுத்துகிறது. கரக் மொறுக் என யாரவது அருகில் உட்கார்ந்து சாப்பிட்டால் கோபம் கொள்பவரா நீங்கள்?
கரக் மொறுக் சாப்பிடும் சத்தம்
அப்பளம் போன்ற நொறுங்கும் உணவுகள் சாப்பிடும்போது சப்தம் உண்டாகும். சிலர் எதைச் சாப்பிட்டாலும், சத்தம் கொடுத்துக்கொண்டே சாப்பிடுவர்.
ஒரு சிலர் ரசம் அல்லது மோர் ஊற்றி பிசைந்து சாப்பிட்ட பின் கொஞ்சம் மோர் அல்லது ரசம் இலையில் இருக்கும். அதை கைகளால் வழித்து உறிஞ்சி குடிப்பர்.
இதை சிலர் ரசித்து செய்வார்கள். ஆனால் அது அருகில் அமர்ந்து சாப்பிடும் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அது ஏன்?
மிஸோஃபோனியா மற்றும் பொனோஃபோபியா
அமைதியான இடத்திலோ அல்லது உணவகத்திலோ யாரோ ஒருவர், நொறுங்கும் உணவை உண்ணும்போது வரும் சத்தத்தை பலர் விரும்புவதில்லை.
சிலருக்கு எரிச்சலைக் கிளப்புவதைவிட அதீத கோபத்தை உண்டாக்குகிறது. சிலர் அதற்கு அஞ்சுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் “flight or fight response” என்றும் அழைப்பதுண்டு.
இதற்கு காரணம் “மிஸோஃபோனியா” என்ற வியாதிதான் கரணம் என்கிறார்கள். இதே போல் ஒரு சிலர் ஒலிகளை கண்டு அஞ்சுகிறார்கள். இந்த நிலைக்கு ‘பொனோஃபோபியா’ (Phonophobia ) என்று பெயர்.
நாம் சாதாரணமாக கடந்து செல்லும் சத்தம் கூட சிலருக்கு அதிபயங்கர சத்தமாகக் கேட்கும். அந்த நிலையை “ஹைபெராகியுசிஸ்” (Hyperacusis) என்கிறார்கள். இவை இரண்டுமே “மிஸோஃபோனியா” லிருந்து வேறுபட்டவை.
இவற்றை உயரியில் விஞ்ஞானிகள் “மிஸோஃபோனியாவால்” பாதிக்கப்பட்டோர் 22 பேர், பாதிக்கப்படாதோர் 22 பேர் என பிரித்து அவர்கள் மூளைகளை ஸ்கேன் செய்து ஆராய்ந்தனர்.
அதில் மழை சத்தம், உணவு உண்ணும் சத்தம், சுவாச ஒலிகள் போன்ற விரும்பத்தகாத ஒலிகளைக் கேட்க வைத்தார்கள். அதில் எரிச்சலூட்டும் சத்தத்தை யாரும் ரசிக்கவில்லை.
ஆனால் இந்த வியாதியால் பாதிப்படைந்தோர் உடல் வியர்க்கத் துவங்கியது. மேலும், அவர்களின் இதயத் துடிப்பு அதிகாரித்துள்ளது.
அந்நேரத்தில் அவர்களின் மூளையின் இணைப்புகள் வலுவாகச் செயல்படுகிறது. மூளையின் முன்பகுதியில் உள்ள இன்சுலின் கோர்டெக்ஸ் சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
இலங்கை போன்ற நாடுகளில் இந்நோயைப் பொருட்படுத்துவதில்லை. இதை சரி செய்ய மனநல மருத்துவர்களும் உளவியலாளர்களும் சத்தத்தின் விளைவாக ஏற்படும் பதற்றம் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றை சீர் செய்ய உதவுகின்றனர்.
Minsara Kanna Parasite: பாராசைட், மின்சார கண்ணா படத்தின் காப்பியா? மின்சார கண்ணா படத்தின் தயாரிப்பாளர் PL தேனப்பன், பாராசைட் படக்குழு மீது வழக்கு தொடர உள்ளார்.
2020-ஆம் ஆண்டின் ஆஸ்காரில் நான்கு விருது வாங்கிய கொரியன் திரைப்படம் பாராசைட் (Parasite). சிறந்த படத்திற்கான விருதையும் திரைக்கதைக்கான விருதையும் பெற்று உலக சாதனை படைத்தது.
தமிழில் 1999-ல் வெளிவந்த மின்சார கண்ணா படத்தின் காப்பிதான் பாராசைட் என சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
Minsara Kanna Parasite என்று ட்விட்டர், கூகுள் என உலகம் எங்கும் உள்ளவர்கள் தேடத்துவங்கி விட்டனர்.
கொரியன் படத்தில் இருந்து தமிழில் காப்பி அடித்த காலம் மாறி, தமிழில் இருந்து கொரியன் படம் காப்பி அடிக்கப்பட்டு உள்ளது.
இதில் சிறப்பு என்னவெனில், பாராசைட் படம் சிறந்த படமாக விருது வென்று உள்ளது. இதுவரை வேற்றுமொழி படங்கள் சிறந்த படங்களாக ஆஸ்கர் விருது வென்றது இல்லை.
ஒரு காப்பி அடிக்க படம் ஆஸ்கார் விருது வெல்வதா? என்கின்ற அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொதித்து எழுந்து உள்ளனர்.
பாராசைட் கதை (Parasite Movie Story)
போங்க் ஜூன் ஹோ இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு வெளியான பாராசைட் திரைப்படம் தொடக்கம் முதலே நல்ல விமர்சனங்களைப் பெற்று வந்தது.
இதன் கதையானது சேரியில் (Slum) வாழும் ஏழைக்குடும்பம் மொத்தமும் தங்களுடைய வருமானத்திற்காக ஒரு பணக்காரக் குடும்பத்தில் வேலைக்கு சேர்வார்கள்.
இதில் அந்த ஏழைக்குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தாங்கள் வேலை செய்யும் வீட்டில் ஒருவர் மற்றொருவரை தெரியாததைப் போல் நடிப்பார்கள்.
முதலாளித்துவமும் ஏழை மற்றும் பணக்கார மக்களின் வேறுபாட்டையும் மிக அழுத்தமாக எடுத்துரைக்கும் ஒரு எதார்த்தமான வாழ்வியல் திரைப்படம் இது.
மின்சார கண்ணா கதை (Minsara Kanna Movie Story)
கேஎஸ் ரவிகுமார் இயக்கத்தில் விஜய், ரம்பா மற்றும் குஷ்பு முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
ஹீரோ தன்னுடைய காதலியின் குடும்ப சம்மதத்தை பெறுவதற்காக தன் மொத்த குடும்பத்தையும் ஹீரோயின் வீட்டில் வேலைக்குச் சேர வைப்பார்.
இதிலும் ஒவ்வொருவரும் ஏழைபோல் நடித்தும் ஒருவரை ஒருவர் தெரியாதது போல் காட்டிக்கொள்வார்கள்.
மேலும் ஹீரோயின் அக்கா குஷ்பு கதாப்பாத்திரம் ஆணிடம் ஏமாற்றம் அடைந்து ஆண்களை வெறுக்கும் கதாப்பாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருப்பார்.
இறுதியில் ஹீரோ ஹீரோயின் இணைந்தார்களா? ஆண்களை வெறுக்கும் குஷ்பு இறுதியில் மனம் மாறினாரா? என்பது தான் க்ளைமேக்ஸ்.
இந்த இரண்டு படத்தின் கதையின் ஒரு சிறு பகுதி ஒற்றுமையாக இருந்தாலும் படம் இறுதியில் நமக்குச் சொல்ல வரும் கருத்து வெவ்வேறு.
தயாரிப்பாளர் PL தேனப்பன் ஆவேசம்
பாராசைட் படம் ஆஸ்கார் வென்றவுடன் நம்முடைய இந்திய ரசிகர்கள் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இது இரண்டும் ஒரே கதை காப்பி என ஷேர் செய்தனர்.
இதன் பிறகு இந்த படத்தை பார்த்த மின்சார கண்ணா படத்தின் தயாரிப்பாளர் கூறியதாவது, “நான் பாராசைட் படத்தை பார்த்து விட்டேன்.
இது இரண்டும் ஒரே கதையே. இது தொடர்பாக நான் சர்வதேச வழக்கறிஞர் மூலம் பாராசைட் தயாரிப்பு குழுவின் மீது வழக்கு தொடர்வேன்” என்றும் கூறியுள்ளார்.
இயக்குனர் KS ரவிகுமார் கூறியதாவது, “நானும் பாராசைட் படத்தைப் பார்த்தேன். இரண்டு கதைகளிலும் சில ஒற்றுமைகள் உள்ளன. இந்தக் கதைக்கு ஆஸ்கார் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
ஹாப்பி செயலி (Hobbi App): அறிமுகம் செய்த பேஸ்புக். பின்டெரெஸ்ட் (Pinterest) ஆப்பிற்கு போட்டியா? ஆண்ட்ராய்டு ஆப் (android app) எப்போது வரும்?
பேஸ்புக் நிறுவனம் பின்டெரெஸ்ட் (Pinterest) மாதிரி போட்டோ மாற்றும் வீடியோ ஷேர் செய்யும் ஹாப்பி செயலி (Hobbi App) என்னும் செயலியை சத்தமில்லால் அறிமுகப்படுத்தியது.
ஹாப்பி ஆண்ட்ராய்டு ஆப் எப்போது வரும்?
தற்போது இந்த செயலி ஐபோன்களில் மட்டுமே இருக்கிறது. இன்னும் சில காலங்களில் ஆண்ட்ராய்டு போன்களில் வார வாய்ப்பு இருக்கிறது.
மேலும் இது தற்பொழுது 84 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்டெரெஸ்ட் (Pinterest) செயலி
Pinterest App பொதுவாக மக்களின் கிரியேட்டிவிட்டி செயல்கள் மற்றும் பிற தொழில் சார்ந்த புகைப்படங்களும் வீடியோக்களும் பகிரப்படும்.
எடுத்துக்காட்டாக சமையல், ஃபேஷன், ஓவியம், ஃபிட்னஸ், ஹைர்ஸ்டைல் மற்றும் வீட்டு அலங்காரம் போன்ற தகவல்கள் பகிரப்படும்.
பேஸ்புக் ஆப்
முகநூல் நிறுவனம் தொடர்ச்சியாக புதுப்புது செயலிகளை ரிலீஸ் செய்து கொண்டே வருகிறது.
சென்ற வருடம் bump என்னும் சேட் செய்யும் செயலி, Aux என்னும் மியூசிக் செயலி தற்போது hobbi செயலியை அறிமுகம் செய்துள்ளது.
whale என்னும் மீம் எடிட் செய்யும் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தியது. பிறகு சிறிது காலங்களிலயே அதை ஷட்டவுண் செய்துவிட்டது.