Home Blog Page 261

15/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
15/2/2020 ராசிபலன் இன்றைய தின ராசிபலன் Horoscope Tamil சிம்மம் கடகம்

15/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாகக் காணப்படுகிறது. இதுவரை இருந்த கல்யாணத்தடை விலகி சுபமுண்டாகும்.

அவ்வப்போது மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். தாயாரின் உடல்நலத்தைப் பேணுவது அவசியமாகும்.

அதிர்ஷ்ட எண்: 7அதிர்ஷ்ட நிறம்: ஊதா வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

மிகவும் தனவரவு மிகுந்த நாளாகக் காணப்படுகிறது. ராசிநாதன் உச்சம் பெற்றுள்ளதால் எதிலும் வெற்றி வாகை சூடலாம்.

காது சம்மந்தப்பட்ட கோளாறு வத்து நிவர்த்தியடையும். பொறுமையாக எதிலும் ஈடுபடுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மிதுன ராசிபலன்

மிகவும் தையரிமான நாளாகக் காணப்படுகிறது. பாக்கிய நாதன் உச்சத்தில் இருப்பதால் பூர்வ புண்ணிய பலன் கூடும். கோபத்தைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு வண்ணம்

கடகம் ராசிபலன்

சுபமான நாளாகக் காணப்படுகிறது. மனைவி வழி உறவினர்களிடையே பகைமை கொள்ளக் கூடாது.

மனைவியை அன்போடு அனுசரனையாக நடந்து கொள்வது அவசியமாகும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

சிம்மம் ராசிபலன்

ராசியிலேயே சந்திரன் உலவுவதால் சிறு சிறு மனக் குழப்புங்கள் வரக்கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் அதிகாரம் ஓங்கும். தங்கு தடையற்ற லாபம் பெருகும் நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

கன்னி ராசிபலன் 

சந்திரன் பன்னிரெண்டில் உலவுவதால் சற்று விரயம் இருக்கும். செலவினங்களைக் குறைப்பது அவசியம்.

யோகமான நாளாகக் காணப்படுகிறது. தந்தை, தாய் வழி உறவினர்களின் மகத்துவமான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம், அதிர்ஷ்ட எண்: 2

துலாம் ராசிபலன்

மிகவும் அற்புதமான ஆசீர்வாதமான நாளாகக் காணப்படுகிறது. தெய்வங்களின் அனுக்கிரகம் மிகுந்த நாளாகக் காணப்படுகிறது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. இடது காலில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. மூளை சம்மந்தப்பட்ட பிரச்சினை ஏற்படலாம் மருத்துவ சிகிச்சை தேவை.

அதிர்ஷ்ட நிறம் : நீல வண்ணம். அதிர்ஷ்ட எண் : 2

விருச்சிக ராசிபலன்

பலரும் ஏறெடுத்துப் பாராட்டும் வண்ணம் பல செயல்கள் செய்து வெற்றி பெறுவீர்கள். நிதானமாக செயல்கள் செய்து புகழ் பெறுவீர்கள்.

புத்துணர்வோடு செயல்படும் நாள். சிலருக்கு தண்ணீரில் கண்டம் ஏற்படலாம். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

தனுசு ராசிபலன்

மிகவும் பாக்யமான நாளாகக் காணப்படுகிறது. வரசித்தி விநாயகரை வழிபடுவது வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும்.

தவறான கருத்துக்களைச் சொல்ல வேண்டாம். ஏதேனும் சொல்லப் போய் வம்பில் முடியும். மாணவர்கள் கவனமுடன் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

மகரம் ராசிபலன் 

சந்திரன் எட்டில் இருப்பதால் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் அக்கறை தேவை. தனிநபர் தாக்குதல் செய்யாதிருப்பது மிக அவசியம். நம்பி மோசமடையும் நாளாகக் காணப்படுகிறது. எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பவள வண்ணம், எண் : 9

கும்ப ராசிபலன்

சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். குழந்தைகளிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீடு விற்றல், பத்திரம் பதிவு செய்தல் போன்றவற்றில் கவனம் தேவை. நல்ல வேலைவாய்ப்பைப் பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : தேன் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மீனம் ராசிபலன் 

தெய்வத்தை வழிபட தீமைகள் விலகும் நாள். கடன் கொடுத்து வசூலிக்க கஷ்டப்படும் நாள். பண விவகாரங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பணம் கொடுத்து ஏமாந்து விடும் நாளாகக் காணப்படுகிறது. ஸ்கின் நோய்கள் வந்து போகலாம்.

15/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

கரிநாள் என்றால் என்ன? அதில் உள்ள அறிவியல் உண்மைகள்

0

கரிநாள் என்றால் என்ன? கரிநாட்களில் சுப காரியங்கள் செய்யலாமா? கரிநாள் அறிவியல் காரணங்கள் என்ன? சூரிய கதிர் வீச்சு அதிகம் எழும் கரிநாட்கள் பட்டியல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் நாட்காட்டியிலும், பஞ்சாங்கங்களிலும் சில நாட்கள் கரிநாள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

மேலும் கரிநாட்களில் சுப காரியங்கள் செய்ய கூடாது என்றும் கூறுவர். அதில் உள்ள காரணங்களும் நம்மில் பலருக்கு தெரியாது. நாமும் அதை தொடர்ந்து நடைமுறையில் பின்பற்றி வருகிறோம்.

உண்மையில் அதில் உள்ள காரணங்கள் மற்றும் அறிவியல் கலந்த உண்மைகள் பற்றி நாம் விரிவாகப் பார்ப்போம்.

கரிநாள் என்றால் என்ன?

எந்த ஒரு நாளாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தலையீடு இல்லாமல் இருக்காது. வானியல் அடிப்படையில் தான் சுப நாட்கள், அசுப நாட்கள் கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் சூரியனின் நிலை பொருத்தே கரிநாள் கணக்கிடப்படும்.

தெளிவாகக்கூற வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம்” (கதிர்வீச்சு) அதிகமாக இருக்கின்ற நாட்கள் ஆகும். இவை வருடத்திற்கு வருடம் மாறாதவை.

குறிப்பிட்ட தமிழ் மாத தேதிகளில் சூரிய கதிர்வீச்சு பூமிக்கு போதுமானதை விட அதிகமாக வரும். அந்த நாட்களை கரிநாட்கள் என்று கணித்து கூறுகின்றனர்.

இவை கிழமை, திதி, நட்சத்திரம் சார்ந்தது இல்லை. தமிழ் தேதி அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும்.

ஏன் கரிநாட்களில் சுப காரியங்கள் செய்யக் கூடாது?

கரிநாள் அறிவியல் காரணங்கள் என்ன? நம் முன்னோர்கள் எதையும் காரண காரியம் இல்லாமல் செய்யமாட்டார்கள். பெரும்பாலும் அறிவியல் கலந்த உண்மை அடங்கி இருக்கும்.

கரிநாட்களில் சூரிய கதிர் வீச்சு பூமிக்கு அதிகமாக கிடைக்கும். அவை நம் உடம்பில் உள்ள அனைத்து சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்களை சராசரியை விட சற்று அதிகமாக தூண்ட வைக்கும்.

எனவே, இந்த நாட்களில் நாம் உணர்ச்சி வசப்படுதல், கோபம், யோசிக்காமல் முடிவெடுத்தல், குழப்பம் போன்றவற்றை செய்ய நேரிடும். எனவே தான் கரி நாட்களில் சுபகாரியங்கள் செய்யவேண்டாம் என்கின்றனர்.

மேலும் அன்றைய தினங்களில் அதிக வெய்யிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். சூரிய கதிர்வீச்சு உடல் உறுப்பை பாதிக்கும். இது வானியல் ரீதியாக கண்டறிந்து கூறியுள்ள உண்மையாகும்.

மொத்தம் வருடத்திற்கு 34 கரிநாட்கள் உள்ளன. இதில் சித்திரை முதல் மாசி வரை உள்ள கரிநாட்கள் உதவா நாட்கள் என்றும்.

பங்குனியில் உள்ள கரிநாட்கள் மிகுந்த தீமை தரும் நாட்கள் என்றும் முதன்மை சோதிட நூலான “சோதிட கிரஹ சிந்தாமணி” என்ற பெரிய நூலில் குறிப்பிட்டுள்ளனர்.

12 மாதம் கரிநாட்கள் பட்டியல்

சித்திரை – 6 மற்றும் 15
வைகாசி – 7, 16 மற்றும் 17
ஆனி – 1 மற்றும் 6
ஆடி – 2, 10 மற்றும் 20
ஆவணி – 2, 9 மற்றும் 28
புரட்டாசி – 16 மற்றும் 29
ஐப்பசி – 6 மற்றும் 20
கார்த்திகை – 1, 10 மற்றும் 17
மார்கழி – 6, 9 மற்றும் 11
தை – 1, 2, 3, 11 மற்றும் 17
மாசி – 15, 16 மற்றும் 17
பங்குனி – 6, 15 மற்றும் 19
ஆகிய இத்தினங்கள் கரிநாட்கள் ஆகும்.

இத்தினங்களில் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்குவதை தவிர்த்தல் வேண்டும். இவை அனைத்து வருடங்களுக்கும் பொருந்தும்.

3

கைதி வாக்குரிமை: மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951

0
கைதி வாக்குரிமை சட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் பொதுநல மனு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951

கைதி வாக்குரிமை: சட்ட மாணவர்கள் பொதுநல மனு. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 என்ன சொல்லுகிறது? சட்டக்கல்லூரி  மாணவர்கள் வழக்கு தள்ளுபடி.

சட்டக்கல்லூரி மாணவர் பொதுநல மனு:

நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி  டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது .

டெல்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களான பிரவீன் குமார் சவுத்ரி, குமார் துபே மற்றும் பிரேர்னா சிங் ஆகிய முவரும் இணைந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிறைக்கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமைகோரி ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தனர்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 1:

மனுவில்  அவர்கள் வாக்களிப்பது அடிப்படை உரிமை. மேலும் நம்முடைய அரசியல் சட்டம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் தேர்தல் ஆணையம் குற்றவாளிகளையும், சிறைக்கைதிகளையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

கைதிகள் தங்களது வாக்கினை பயன்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 1, கைதிகளின் வாக்குரிமையை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது போல் அமைந்துள்ளது. எனவே இந்தப் பிரிவினை செல்லாது என அறிவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்நீதிமன்றம் சிறைக்கைதிக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுத் தரவேண்டும் எனவும் மனுவில் அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்

இந்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி படேல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு  கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கும் விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகள் வழங்கிருப்பதை மேற்கோள் காட்டினர்.

மனுதாரர் கோரும் வாக்களிக்கும் உரிமை என்பது மக்களுக்கு சட்டப்படியான ஒரு அமைப்பினால் வழங்கப்பட்ட உரிமை.

அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அடைப்படை உரிமைகளில் அடங்காது.

தெரிவித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த பொது நலம் சார்ந்த மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர் .

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951

உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மறுபரிசீலனைக்குரியது என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரித்துள்ளனர் .

மேலும் அவர்கள் பொதுவாக வாக்களிக்கும் உரிமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவினையே நாம் செயல்படுத்தி வருகிறோம் .

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஒரு வாக்காளர் ஆவதற்கான தகுதிகள் என்பது ஒரு இந்திய குடியுரிமையை  கொண்டிருப்பவராகவும், 18  வயது பூர்த்தி அடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

மேலும் எந்த வித சட்டங்களின் படியும் அல்லது நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவராகவும் இருத்தல் கூடாது. அவ்வாறு தண்டனை பெற்றவர்கள் வாக்களிக்க தகுதி அற்றவர்கள் என கூறுகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 சட்டமானது தேர்தல் குறித்த பல்வேறு நிபந்தனைகளையும் வழிமுறைகளையும் கொண்டுள்ளது

பொதுமக்கள் பாராட்டு

நாட்டில் சாதாரணமாக வாழும் குடிமகன்கள் கூட தேர்தலில் வாக்களிக்க பெரிய ஆர்வம் காட்டுவதில்லை.

இப்படி ஒரு சூழ்நிலையில் சிறையில் இருக்கும் கைதி வாக்குரிமை பற்றி நீதிமன்ற படி ஏறிய சட்ட கல்லூரி மாணவர்களை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்

மனுதாரர் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் ஏதேனும் திருத்தம் கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும்.

3

14/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
14/2/2020 ராசிபலன் இன்றைய தின ராசிபலன் Horoscope Tamil மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

14/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

சிறு சிறு உடல் நலப் பிரச்சனைகள் வந்து வந்து போகும் நாளாகக் காணப்படுகிறது. முருகரை வழிபட அவற்றிலிருந்து விடுபட வழி பிறக்கும்.

சிலர் புதிய போதைப் பழக்கத்திற்கு அடிமையாக நேரிடலாம். அதிலிருந்து விடுபடுவது அவசியம். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

நல்ல வேலைவாய்ப்பைப் பெறும் நாளாகக் காணப்படுகிறது. புதிய எதிரிகள் உருவாகலாம்.

அண்டை அயலாரோடு பகைமை கொள்ளாமல் இணக்கம் கொள்வது அவசியம். வியாபாரகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் வதந்தி பேசாமல் இருப்பது சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண்: 1

மிதுன ராசிபலன்

பஞ்சமத்தில் சந்திரன் இருப்பது பெரும் பாக்கியத்தைத் தரும் நாளாகக் காணப்படுகிறது. அலுவலகத்தில் இருந்த சிக்கல் தீர்ந்து நல்ல பெயர் எடுக்கும் நாளாகக் காணப்படுகிறது.

கண் சம்மந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும். வியாபாரிகளுக்கு சிறந்த லாபம் உண்டு.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம்

கடக ராசிபலன்

வீடு கட்ட நல்ல கடன் வசதி கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாகக் காணப்படுகிறது.

சகோதரர்களுடன் பகை கூடாது. வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் நினைத்த வண்ணமே கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

சிம்மம் ராசிபலன்

அதீத தைரியத்தோடு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் நாளாகக் காணப்படுகிறது.

எந்த நேர்முகத் தேர்விலும் எளிதாக வெற்றியடையும் அமைப்பு காணப்படுகிறது. ஆடம்பரச் செலவு செய்யாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பவள வண்ணம், அதிர்ஷ்ட எண் : 9

கன்னி ராசிபலன் 

சந்திரன் தன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் நல்ல தனவரவு உண்டு. வீடு சம்மந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

வண்டி, வாகனங்களில் வித்தைகள் வேண்டாம். வீடு கட்டும் அமைப்பு கூடி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: தேன் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

துலாம் ராசிபலன்

ராசியிலேயே சந்திரன் உலாவுவதால் சிறு சிறு, மனக்குழப்பம், டென்ஷன் அதிகரிக்கும். சந்தனப் பொட்டிட்டு சந்திரனை வணங்க மன இறுக்கம் குறையும். முதுகு வலி ஏற்பட்டு நிவர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம். அதிர்ஷ்ட எண் : 4

விருச்சிக ராசிபலன்

எலும்பு சம்மந்தமான பிரச்சினைகள் வந்து வந்து போகலாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்.

வயது முதிர்ந்தோர் தங்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். நாடகக் கலைஞர்கள் புகழ் பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஜா வண்ணம், அதிர்ஷ்ட எண் : 7

தனுசு ராசிபலன்

சந்திரன் லாபஸ்தானத்தில் இருப்பதால் எதிலும் முன்னேற்றம் உண்டு. எடுத்த காரியத்தில் ஜெயம் ஆகியவை உண்டு.

இளைஞர்கள் விபரீத விளையாட்டுக்களைத் தவிர்ப்பது நலம் பயக்கும். மின்சாதனங்களைக் கையாள்கையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண் : 3

மகரம் ராசிபலன் 

உற்சாகமான ரம்மியமான நாளாகக் காணப்படுகிறது. சந்தோஷங்கள் நிரம்பி வழியும் நாளாகக் காணப்படுகிறது.

மனைவியுடன் இணக்கம் ஏற்படும். கழுத்து வலி வந்து நீங்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம் : அடர்சிகப்பு வண்ணம், எண் : 9

கும்ப ராசிபலன்

அதிர்ஷ்டகரமான நாளாகக் காணப்படுகிறது. மிகவும் நல்ல நாள். நினைத்த யாவும் நினைத்தபடியே அமையும். கேளிக்கை, விளையாட்டு என நண்பர்களோடு குதூகலிக்கும் நாளாகக் காணப்படுகிறது.

தூர தேசங்களிலிருந்து நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். நிறைய ஆடம்பரப் பரிசுகள் உங்களுக்குக் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பால் வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

மீனம் ராசிபலன் 

சந்திரன் எட்டில் காணப்படுவதால் சிக்கல் மிகுந்த நாளாகக் காணப்படுகிறது. சொல்லும் கருத்துக்கள், செய்யும் செயல்கள் ஆகியவற்றில் கவனம் தேவை.

தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை. சிலருக்கு ரம்மியமான மனதிற்கினிய நிகழ்வுகள் நடக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

14/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

seeman video leak: சீமான் வீடியோ – அந்த பெண் யார்?

0
seeman video leak: சீமான் வீடியோ - அந்த பெண் யார்?

seeman video leak: சீமான் வீடியோ – அந்த பெண் யார்? நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடியோக்காட்சி வைரலாகி வருகிறது.

விஜய லெட்சுமி சீமான் போட்டோ 

சீமான் நாம் தமிழர் என்ற கட்சியை ஆரம்பிக்கும் முன் அவர் சினிமா இயக்குனர். அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சென்று மேடை பேச்சுக்களிலும் ஈடுபடுவார்.

அவர் கட்சி ஆரம்பித்தவுடன், சீமானைப் பற்றி பல்வேறு விஷயங்கள் வெளிவரத் தொடங்கியது. அதற்கு முன்பே பூதகரமாகக் கிளம்பிய விஷயம்  நடிகை விஜயலக்ஷ்மி திருமணம்.

சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றினார் என விஜய்லக்ஷ்மி குற்றம் சாட்டினார். அவருடைய வீட்டில் பிறந்த நாள் கேக் ஊட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

ஆனால் இதற்கு சீமான் மறுப்பு தெரிவித்தார். விஜய லெட்சுமி வறுமையில் வாடுவதாக என்னிடம் கூறினார் எனவே நான் உதவினேன்.

இது சேரனுக்கும் தெரியும். அப்போதே விஜய லெட்சுமி என்னை மிரட்டினார். நான் புகார் அளிக்கலாமா என சேரனிடம் கேட்டேன். சேரன் விஜயலட்சுமியை கண்டிப்பதாக கூறினார்.

எனவே நான், விஜய் லெட்சுமி மீது புகார் கொடுக்காமல் அப்போது விட்டுவிட்டேன் எனத் தெரிவித்தார்.

மலேசிய பெண்ணுடன் சீமான் பேட்டோ

இதன் பிறகு சீமான் ஒரு மலேசியப் பெண்ணுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏன் என்றால் அந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் வெளியாகின. அந்த பெண் பலருடன் தனிமையில் இருந்துள்ளார். அப்பெண்ணால் ஏமாற்றப்பட்ட ஒருவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டார்.

சீமான் போன்ற பல பிரபலங்களுடன் அப்பெண்ணுக்கு தொடர்பு உண்டு. சீமான் உட்பட பலருடைய வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாக பல வெளிநாட்டு தமிழ் இணையதளங்களில் தகவல் வெளியாகின.

seeman video leak: சீமான் வீடியோ

இன்று சீமான் ஆடையின்றி உள்ள வீடியோக்காட்சி வெளியாகி உள்ளது. அதில் ஒரு பெண்ணின் குரலும் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இது குறித்து இன்னும் சீமான் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.

இந்த வீடியோவிற்கும் மேலே உள்ள இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளது போன்றே சீமான் பேசி உள்ளார்.

விஜய லட்சுமி, சீமான் என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். நாங்கள் கணவன் மனைவியாக குடும்பம் நடத்தினோம் எனத் தெரிவித்து இருந்தார்.

அதற்கு ஏற்றார் போல் சீமானும் வீடியோவில் ஏய் பொண்ணாட்டி எனச் சொல்வது போன்ற வசனங்கள் உள்ளது.

உண்மையில் இது மேலே உள்ள இருவர் சம்பந்தப்பட்ட வீடியோ என்றால் இவ்வளவு தாமதமாக வெளியாகக் காரணம் என்ன? கண்டிப்பாக மலேசிய பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை.

உண்மையில் இது சீமான் அந்தரங்க வீடியோவா?

மீம் கிரியேட்டர்கள் இந்த வீடியோவை சோஷியல் மீடியா பக்கங்களில் சீமான் அந்தரங்க வீடியோ எனப் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவை சற்று உற்று நோக்கினால் என்ன தெரிகிறது? சீமான் அதில் ஏதோ படத்திற்கான வசனத்தை பேசுவது போன்று உள்ளது.

டைலாக் டிஸ்கசன் நடக்கிறது. ஆனால் சீமான் தனிமையில் சட்டை இல்லாமல் உள்ளார். அதுவும் ஒரு பெண் பின்னணியில் உள்ளார். இது தான் அந்த சர்ச்சைக்கு காரணம்.

உண்மையில் சீமான் கதை டிஸ்கசனில் ஈடுபட்டாரா? அந்த பெண் யார்? என சீமான் விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்

3

கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாறு – Gopinath Biopic

1
கேப்டன் கோபிநாத் Captain Gopinath Biopic சூரரைப்போற்று படத்தின் கதை Simply Fly: A Deccan Odyssey

கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாறு (Captain Gopinath Biopic). சூரரைப்போற்று படத்தின் கதை Simply Fly: A Deccan Odyssey நாவலை தழுவியது.

கேப்டன் கோபிநாத் வரலாறு Captain Gopinath Biopic 

இந்திய நாட்டின் ராணுவத்திலும் இந்திய விமான போக்குவரத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிய ஒரு உன்னத மனிதரின் வாழ்க்கையைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

கோருர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோருர் என்னும் சிறிய கிராமத்தில் தன்னுடைய பெற்றோரின் எட்டில் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர்.

இவருடைய தந்தை பள்ளி ஆசிரியர் சிறு வயதில் இருந்தே தந்தையிடம் நிறைய விஷயங்கள் கேட்டுத் தெரிந்து வந்துள்ளார். 1962-ஆம் ஆண்டு பிஜாபூர் பள்ளிக்கு நடத்தப்பட்ட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அடைந்தார்.

இந்தப் பள்ளி அவருக்கு NDA நுழைவுத்தேர்வை தேர்ச்சி செய்ய உதவிகரமாக இருந்தது. பின் இந்தியா ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் ஆகி 8 ஆண்டுகள் பணி புரிந்தார்.

மேலும் 1971-இல் நடந்த இந்தியா பங்களாதேஷ் விடுதலைப் போரிலும் பங்கேற்றுள்ளார். தன்னுடைய 28 வயதில் உடல் தகுதியற்றதால் ஓய்வு பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

விவசாயத்தில் தன்னுடைய பங்களிப்பை தொடர நினைத்து பட்டு வளர்ப்பு பண்ணை வைத்து அதை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ததால் 1996-ஆம் ஆண்டு ரோலெக்ஸ் லாரியத் அவார்ட் அவருக்குக் கிடைத்தது.

மிகவும் எளிதாக இது அவருக்கு கிடைத்து விடவில்லை. பல வருடங்கள் இரவு பகலாக உழைத்து விவசாய பண்ணையில் தங்கி முழுதுமாக அதைக் கற்று பின்னரே விவசப்பண்ணை அமைத்தாராம்.

இதுபோக உடுப்பி ஹோட்டல் தொழிலும் ஈடுபட்டார். பட்டுப் பண்ணை தொழிலில் கிடைத்த லாபத்தில் ஹோட்டலில் முதலீடு செய்து தொழிலைப் பெருக்கினார்.

1997-ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் சேவை செய்து வந்த டெக்கான் ஏவியேஷன் கம்பெனியுடன் சேர்ந்தார்.

பின்னர் தனியாக ஏர் டெக்கான் (Air Deccan) என்ற மிகக் குறைந்த விலையில் அனைவரையும் பறக்க வைக்கும் முயற்சியுடன் தொடங்கினார்.

அதாவது இந்தியாவில் இருக்கும் நடுத்தர மக்கள் அனைவரையும் குறிப்பாக ரயிலில் நாள் கணக்காக பயணம் செய்வோரையும் விமானத்தில் குறைந்த விலையில் பறக்கவைப்பதே இவரின் நோக்கமாக இருந்தது.

இதில் கிடைத்த பெரும் பணத்தைக்கொண்டு கன்னடா நடிகர் ராஜேஷ் அவர்களுடன் சேர்ந்து அரசியலில் இறங்கினார்.

அந்தத் தருணத்தில் அவர் சென்று வந்த சீனப் பயணமே அவருக்கு விமானத்துறையில் கால் பதிக்க உந்துக்கோளாக அமைந்தது.

ஏர் டெக்கான் நிறுவனம் நல்ல வளர்ச்சி நிலையில் இருக்கும்பொழுது அவர்களிடம் 43 விமானங்களும் ஒரு நாளைக்கு 350 பயணங்களும் 61 இடங்களுக்கு பயணம் செய்து வந்துள்ளன.

2006-ஆம் ஆண்டு மிக உயரந்த தனி மனித விருதான “செவலியர் டி ல லேஜின் டி’ஹானர்” “Chevalier de la Legion d’Honneur” விருதை ஃபிரெஞ்சு நாடு அவருக்கு வழங்கி சிறப்பித்தது.

2007-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்த பொழுது விஜய் மல்லையா அவர்கள் பெரும்பான்மையான இதன் பங்குகளை வாங்கினார். இதன் மூலம் இந்த நிறுவனம் கிங்ஃபிஷர் நிறுவனத்துடன் இணைந்தது.

பிறகு 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த லோக் சபா தேர்தலில் பங்கேற்று அது அவருக்கு தோல்வியில் தான் முடிந்தது.

சூரரைப்போற்று படத்தின் கதை

இவ்வாறு பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு துறைகளில் கோபிநாத் கால்பதிக்க எப்படி முடிந்தது?

இந்தியா விமானத்துறையின் வளர்ச்சியில் தனக்கென்று ஒரு பெயரை எப்படி நிலைநிறுத்தினார்?அவருடைய கடினமான காலங்களில் அவருக்கு துணை நின்றவர்கள் யார்?

இதை அனைத்தையும் தெரிந்து கொள்ள 2010-ஆம் ஆண்டில் கேப்டன் கோபிநாத் எழுதிய Simply Fly: A Deccan Odyssey நாவலை படித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் அவர் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து சூரரைப்போற்று என்ற படமும் வெளிவர உள்ளது. சூரரைப்போற்று படத்தின் கதை கேப்டன் கோபிநாத் பற்றியது தான்.

3

சூரரைப்போற்று: விமானத்தில் விளம்பரம் செய்யக் காரணம்?

1
சூரரைப்போற்று soorarai pottru விமானத்தில் விளம்பரம் வெய்யோன் சில்லி பாடல் வரி veyyon silli song lyrics

சூரரைப்போற்று soorarai pottru: விமானத்தில் விளம்பரம் செய்ய முக்கிய காரணம் என்ன? வெய்யோன் சில்லி பாடல் வரி – veyyon silli song lyrics கடைசியில் உள்ளது.

சூரரைப்போற்று (soorarai pottru)

தமிழ் சினிமாவின் காமெர்சியல் வெற்றிப்பட இருக்குனராகவும், வித்தியாசமான கதைக்களம் கொண்ட இயக்குனராகவும் சுதா கொங்காரா பதிவு செய்துள்ளார்.

முதல் படம் இறுதிச்சுற்று. வெற்றிக்காக காத்திருந்த மாதவனை மீண்டும் பிஸி ஹீரோவாக மாற்றிய படம். இது சுதாவின் முதல் படம்.

சூரரைப்போற்று சுதாவின் இரண்டாவது படம். இன்னும் இது வெளிவரவில்லை. படத்தின் டீசரே பரபரப்பாக பேச வைத்துவிட்டது.

நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்பது உறுதி. அந்த அளவிற்கு டீசர் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

விமானத்தில் விளம்பரம் எதற்கு?

தயாரிப்பாளர் கலைப்புலி s.தாணு கபாலி படத்தின் ப்ரோமோசனுக்காக பெங்களூரு to சென்னை ‘ஏர் ஏசியா’ விமானத்தில் ரஜினியின் படத்தை இடம்பெறச் செய்தார்.

இதற்கு அடுத்து சூரரைப்போற்று படத்தின் போஸ்டர் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பெயிண்டிங் செய்யப்பட்டு  இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த விழாவில் சூர்யா, சுதா கொங்காரா, ஜி.வி.பிரகாஷ், சிவக்குமார் உட்பட ஏராளனமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கேப்டன் கோபிநாத் எழுதிய ‘சிம்ப்ளி ப்ளை’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு சூரரைப்போற்று படம் எடுக்கப்பட்டு உள்ளது.

எனவே படத்திற்கும் விமானத்திற்கும் தொடர்பு உள்ளது. வெறுமனே என்று விமானத்தில் விளம்பரம் செய்யாமல், காரணத்துடன் விளம்பரம் செய்துள்ளனர்.

வெய்யோன் சில்லி பாடல் soorarai pottru song lyrics சூரரைப்போற்று பாடல் வரி

ஏற்கனவே சூரரை போற்று படத்தில் இருந்து மாறா என்ற பாடல் வெளியானது. தற்பொழுது வெய்யோன் சில்லி என்ற பாடலும் வெளியிட்டுள்ளனர்.

தற்பொழுது இந்தப் பாடல் சோசியல் மீடியாப் பக்கங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பாடலில் படத்தின் நாயகி அபர்ணா பால முரளி பற்றிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

சூர்யாவின் கெட்டப் கிட்டத்தட்ட நந்தா படத்தின் சாயலில் உள்ளது. கண்களின் நிறம் மட்டும் தான் மாறியுள்ளது.

veyyon silli song lyrics: english, tanglish text and audio video

chiyan chiirukkikitta.. seevana thoalachitten
chottu valavikkulla.. maattikka valanchutten
ulla patraya pottuttu, ezhraiya kottitu, thappichu porale anguttu
iva veethiyil varaatha vedikkai pakkathaan vizhuntha mekangal emputtu

Iddukkiyei yei yei.. Iddukkiyei yei yei..
Addikkiraa, Adukkiye

Veyyon silli
Ippa nelathil yerangi anaththuraa
Lanthaa pesii
Enna oranda ilukkura
Kattaari kannalaa uttaale therikkiren
Ottaara sittaala mappaagi kedaakkuran

En usurula sallada salichi
Enchirikkura arakkiye
Un kurukula ennaiyya mudichi
Nee nadakkuraa narukkiyae

mallaatta rendaa ah.. a..
ennaattam vanthaa ah.. a..

oi.. En usurula sallada salichi
Enchirikkura arakkiye
Un kurukula ennaiyya mudichi
Nee nadakkuraa narukkiyae

enkaathu savuula esayum ovvula nee mattum pesudi
ezhettu naaluttum ethuvum ungala ichchonnu veesudi
kannulu othadu minnulu thakadu enakkuthaanadi
sattaiyil pocketta thachathu unnaiya pathukka thaanadi
thinna.. thinna.. thinnaaa aanam vachuth thinna..
ulla.. ulla.. ngokka makka ninnaa..

oi.. En usurula sallada salichi
Enchirikkura arakkiye
Un kurukula ennaiyya mudichi
Nee nadakkuraa narukkiyae

thoratti korala poratti iviya ithayam parichiye
karandu kampiya sorandik kedantha kathanda erichchiye
oh.. pathanam uthara kavananch sethara manasa kalachiye
karukka pozhuthil sirichchi tholachchi pakala padachchiye

theeyaa iva vanthaa manda vellanth thundaa
undaa intha jigarthandaa

oi.. En usurula sallada salichi
Enchirikkura arakkiye
Un kurukula ennaiyya mudichi
Nee nadakkuraa narukkiye

Veyyon silli
Ippa nelathil yerangi anaththuraa
Lanthaa pesii
Enna oranda ilukkura
Kattaari kannalaa uttaale therikkiren
Ottaara sittaala mappaagi kedaakkuran

music : GV prakash
singer : harish sivaramakrishnan
lyrics: vivek
direction: sudha kongara

வெய்யோன் சில்லி பாடல் வரி தமிழ்

சீயஞ் சிறுக்கிக்கிட்ட.. சீவன தொலைச்சிட்டேன்..
சோட்டு வளவிக்குள்ள.. மாடிக்க வளஞ்சுட்டேன்
உள்ள பட்றய போட்டுட்டு, எழ்ரைய கூட்டிட்டு, தப்பிச்சு போறலே அங்குட்டு
இவ வீதியில் வராத வேடிக்கை பாக்கத்தான் விழுந்த மேகங்கள் எம்புட்டு

இடுக்கியே ஏய்.. இடுக்கியே ஏய்..
அடிக்கிறா.. அடுக்கியே..

வெய்யோன் சில்லி
இப்ப நெலத்தில் எறங்கி அனத்துறா
லந்தா பேசி
என்ன ஒரண்ட இழுக்குறா

கட்டாரி கண்ணால உட்டாளே தெறிக்கிறன்
ஒட்டார சிட்டால மப்பாகி கெடக்குறன்

ஏ உசுருல சல்லட சலிச்சி
ஏஞ்சிரிக்குற அரக்கியே
ஓங்குறுக்குல என்னைய முடிச்சி
நீ நடக்குற தருக்கியே

மல்லாட்ட ரெண்டா ஆ… அ..
என்னாட்டம் வந்தா ஆ அ..

ஓய்.. ஏ உசுருல சல்லட சலிச்சி
ஏஞ்சிரிக்குற அரக்கியே
ஓங்குறுக்குல என்னைய முடிச்சி
நீ நடக்குற தருக்கியே

என்காது சவ்வுல எசயும் ஒவ்வுல நீ மட்டும் பேசுடி
ஏழெட்டு நாளுட்டும் எதுவும் உங்கல இச்சொன்னு வீசுடி
கன்னலு ஒதடு மின்னலு தகடு எனக்குத்தானடி
சட்டையில் பாக்கெட்ட தச்சது உன்னைய பதுக்க தானடி
தின்னா.. தின்னா.. தின்னா.. ஆணம் வச்சுத் தின்னா..
உள்ள.. உள்ள.. ங்கொக்கா மக்கா நின்னா

ஓய்.. ஏ உசுருல சல்லட சலிச்சி
ஏஞ்சிரிக்குற அரக்கியே
ஓங்குறுக்குல என்னைய முடிச்சி
நீ நடக்குற தருக்கியே

தொரட்டி கொரல பெரட்டி இவிய இதயம் பறிச்சியே
கரண்டு கம்பிய சொரண்டிக் கெடந்த  கதண்ட எரிச்சியே
ஓ.. பதனம் உதற கவனஞ்செதற மனச கலச்சியே
கருக்க பொழுதில் சிரிச்சி தொலச்சி பகல படச்சியே

தீயா இவ வந்தா மண்ட வெல்லந் துண்டா
உண்டா இந்த ஜிகர்தண்டா

ஓய்.. ஏ உசுருல சல்லட சலிச்சி
ஏஞ்சிரிக்குற அரக்கியே
ஓங்குறுக்குல என்னைய முடிச்சி
நீ நடக்குற தருக்கியே

வெய்யோன் சில்லி
இப்ப நெலத்தில் எறங்கி அனத்துறா
லந்தா பேசி
என்ன ஒரண்ட இழுக்குறா

கட்டாரி கண்ணால உட்டாளே தெறிக்கிறன்
ஒட்டார சிட்டால மப்பாகி கெடக்குறன்

இசை: ஜீவி பிரகாஷ்
பாடகர்: ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்
பாடலாசிரியர்: விவேக்
இயக்கம்: சுதா கொங்காரா

soorarai pottru song lyrics team சூரரைப்போற்று பாடல் வரி குழு

இசை: ஜீவி பிரகாஷ்
music : GV prakash
பாடகர்: ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்
singer : harish sivaramakrishnan
பாடலாசிரியர்: விவேக்
lyrics: vivek
இயக்கம்: சுதா கொங்காரா
direction: sudha kongara

 

3

தகிக்கும் கர்நாடகா: இடஒதுக்கீடு கோரி முழு அடைப்பு

0
தகிக்கும் கர்நாடகா

தகிக்கும் கர்நாடகா:  இடஒதுக்கீடு கோரி முழு அடைப்பு

கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளில் கன்னட மொழி பேசும் மக்களுக்கு 70 சதவீதக்கும் மேல்  இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி  கன்னட அமைப்புகளின் சார்பில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது .

மகாராஷ்டிரா & ஆந்திரா முன்னுதாரணம்

ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள தனியார் துறை வேலை வாய்ப்புகளில் தெலுங்கு பேசும் மக்களுக்கு சுமார் 90 சதவீத வேலைவாய்ப்புகளை வழங்கும் சட்டத்தை அண்மையில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நிறைவேற்றி வரலாறு படைத்தார்.

எனினும் இதற்கு முன்னரே மகாராஷ்டிரா மாநிலத்தில் இதே மாதிரியான சட்டம் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது .

பாமக கோரிக்கை

தமிழ்நாட்டிலும் பல பாமக உள்ளிட்ட பல அமைப்புகளும் தமிழக வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து அறிக்கைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன .

இந்த நிலையில்தான் சமீப காலமாக கர்நாடகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் கன்னடர்களுக்கே ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன .

அண்மையில் தான் கர்நாடக அரசு தன்னுடைய மாநிலத்துக்கென்று ஒரு எம்பளம் மற்றும் கொடியையும் அறிமுகப்படுத்தி இருந்தது நினைவு கூறத்தக்கது .

முழு அடைப்பு போராட்டம்

கர்நாடகாவில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தலைநகர் பெங்களூரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனினும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

கர்நாடாவில் கன்னட சங்கங்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு எந்த வித முன் அனுமதியும் இதுவரை பெறப்படவில்லை என பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர்ராவ் கூறியுள்ளார்

மேலும் பேசிய அவர் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அதே வேளையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் செயல்பாட்டை பாதிக்கும் வகையில் போராட்டக்காரர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.

மேலும் ரயில் நிலையத்திலிருந்து சுதந்திர பூங்கா வரை போராட்டக்கார்கள் பேரணி செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர், பேரணியின் போது பொது சொத்துக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு தாங்கள் முழுப்பொறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்

எனினும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கிவருகின்றன என்று அம்மாநில துணை முதல்வர் லட்சுமணன் ஸ்வதி அறிவித்துள்ளார்.

இந்த முழு அடைப்பின் காரணமாக கர்நாடக செல்லும் தமிழகப் பேருந்துகள் கர்நாடக எல்லையான ஓசூரில் நிறுத்தப்பட்டு திரும்பி வருகின்றன

கர்நாடக போராட்டம் சுமூகமாக நடந்து முடியும் பட்சத்தில் தமிழகத்திலும் இந்த போராட்டம் பரவ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

கர்நாடகாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் நாளடைவில் தமிநாட்டிலும் வெகு ஜன போராட்டமாக மாறும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே ரயில்வே துறையில் தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள் என ஒரு சில அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது

கர்நாடகாவில் போராட்டங்கள்

கர்நாடகாவில் சமீப காலங்களாக பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு , காவேரி பிரச்சினை, மேகதாது அணைப்பிரச்சினை, அரசியல் குழப்பங்கள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தகித்து வருகிறது என்றால் மிகை ஆகாது.

3

நிர்பயா வழக்கு: வினய் சர்மா தப்பிக்க முயற்சி

0
நிர்பயா வழக்கு வினய் சர்மா

நிர்பயா வழக்கு: வினய் சர்மா தப்பிக்க முயற்சி. சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி மனநலம் பாதிக்கப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நிர்பயா கற்பழிப்பு வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க அனுமதி கோரியா வழக்கில் திகார் சிறை நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிர்பயா கற்பழிப்பு வழக்கு

கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவப் படிப்பு மாணவி நிர்பயா அடையாளம் தெரியாத நபர்களால் பேருந்திலேயே வைத்து கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் கண்டனங்களை எழுப்பியது.

நாடு முழுவதும் இதுபோன்ற பெண்களுக்கெதிரான குற்றச் செயல்களுக்காக போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன.

மேலும் குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலட கோரி வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.

இன்னும் ஒருபடி மேலே போய் 2013 ஆண்டில் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தோல்விக்கு மேற்சொன்ன குற்ற சம்பவமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

நிர்பயா வழக்கின் தூக்கு தள்ளிப்போவது ஏன்

கடந்த 2012 ஆண்டு முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது.

மேலும் இதற்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் திகார் சிறை நிர்வாகம் சார்பில் நடைபெற்று வந்தது.

இதனிடையே குற்றவாளிகள் தரப்பில் ஒவ்வொருவராக கருணை மனு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு உள்ளிட்ட சட்ட நிவாரணிகளை பயன்படுத்தி வந்தனர்.

தொடர்ந்து வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த காரணங்களினால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூக்கில் போடுவது தள்ளிப் போடப்பட்டு ஒருவழியாகக் கடந்த மாதம் 1 தேதி இரண்டாவது முறையாக இறுதி செய்யப்பட்டது.

தூக்கிலிட ஒரு சில நாட்கள் மீதமுள்ள போதும் குற்றவாளிகள் கருணை மனு உள்ளிட்ட சட்ட நிவாரணிகளை முழுவீச்சில் பயன்படுத்தி இதுநாள் வரை தாமதம் செய்து வருகின்றனர் .

குற்றவாளி வினய் சர்மா சதி

நேற்று ஒருபடி மேலே போய் வினய் சர்மா, தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்கு தாக்கல் செய்தான்.

வினய் சர்மா, சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி தூக்கில் இருந்து தப்பிக்க அல்லது காலதாமதம் செய்யவே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இது உச்ச நீதிமன்ற விசரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது .

ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றம் குற்றவாளிகள் அனைவருக்கும் அனைத்து சட்ட நிவாரணிகளை முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்கக் கோரி கீழ் நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏற்கனவே உள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பினை மேற்கோள்காட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தான் புதிய தேதியை கீழ் நீதிமன்றத்தை அணுகி பெற்றுக்கொள்ள திகார் சிறை நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய இரண்டு வாரகால அவகாசம் நிறைவடைந்தவுடன் குற்றவாளிகள் அனைவரையும் தூக்கிலிட புதிய  தேதியை கீழ் நீதிமன்றம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3

13/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
14/2/2020 ராசிபலன் இன்றைய தின ராசிபலன் Horoscope Tamil மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

13/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

லாபங்கள் பெருகக் கூடிய நாளாகக் காணப்படுகிறது. வியாபாரிகள் பழைய பகைமையை மறந்து அனைவருடனும் நட்பு பாராட்டினால் இரட்டிப்பு வெகுமானம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

அதிர்ஷ்டகரமான நாளாகக் காணப்படுகிறது. எந்த நேர்முகத் தேர்விலும் எளிதாக வெற்றி பெற்று நல்ல வேலைவாய்ப்பைப் பெறும் நாள். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம், அதிர்ஷ்ட எண்: 2

மிதுன ராசிபலன்

நல்ல நாளாகக் காணப்படுகிறது. எதிலும் முன்னேற்றம் உண்டு. ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைக்கும் நாள். எடுத்த காரியங்கள் வெற்றியடையும் சிறந்த நாளாக இந்த நாள் இருக்கிறது.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம் : மாணிக்க வண்ணம்

கடக ராசிபலன்

சுபமான நாளாகக் காணப்படுகிறது. தைரியம் மிகுந்து வெற்றி வாய்ப்புக்களுக்காக உழைக்கும் நாள். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மிக அவசியம். காது சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வந்து சரியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

சிம்மம் ராசிபலன்

இன்று தீமைகளுக்கெதிராகப் பொங்கியெழும் நாளாகக் காணப்படுகிறது. எதிரிகள் பயப்படும்படி கோபம் கொள்ள நேரிடும். குடும்பப் பகைகளை மறந்து இணக்கமாகிக் கொள்வது பிரச்சினைகளைக் குறைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

கன்னி ராசிபலன் 

ராசியிலேயே சந்திரன் இருப்பதால், வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். நன்றாக உழைக்க வேண்டிய நாளாகக் காசப்படுகிறது. தங்கள் முகத்தை வெகுவாக அழகுபடுத்தி மகிழ்வீர்கள். செலவினங்கள் அதிகரிக்கும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: பவள வண்ணம், அதிர்ஷ்ட எண்: 9

துலாம் ராசிபலன்

கொஞ்சம் விரையமான நாளாகக் காணப்படுகிறது. வேலைபார்க்கும் இடத்தில் பேசாமல் காரியமாற்றுவது அவசியம். தகுந்த வேலை மாற்றம் கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. அம்மன் அருள் காக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : தேன் வண்ணம். அதிர்ஷ்ட எண் : 3

விருச்சிக ராசிபலன்

மிகவும் நல்ல நாளாகக் காணப்படுகிறது. அதிர்ஷ்டங்கள் கூடி வரும். சௌகரியமான நினைத்த வேலை இன்று கிடைக்க வாய்ப்புள்ளது. தங்கு தடையற்ற செல்வவளம் கிடைக்கும் நாள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இருக்கும் கஷ்டம் நிவர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4

தனுசு ராசிபலன்

நல்லதொரு நாளாகக் காணப்படுகிறது. எந்த நேர்முகத் தேர்விலும் அசாத்தியமாக பதில் சொல்லி அசத்துவீர்கள். கவிதை கட்டுரை என்று உங்கள் புகழ் ஓங்கும். இன்பமான நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம் : ரோஜா வண்ணம், அதிர்ஷ்ட எண் : 7

மகரம் ராசிபலன் 

சாதுர்யமான நாளாகக் காணப்படுகிறது. எதிலும் வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது. திருமணப் பேச்சுகள் சுப முடிவை எட்டும். வெளிநாட்டு வேலை கிடைக்கக் கூடிய நாள். யோகமான நாளாக விளங்குகிறது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் வண்ணம், எண் : 3

கும்ப ராசிபலன்

எட்டில் சந்திரன் இருப்பதால் நிதானம் தேவை. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும். எதிலும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது. அளந்து அறிவோடு அமைதியாகப் பேச வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர்சிகப்பு வண்ணம், அதிர்ஷ்ட எண்: 9

மீனம் ராசிபலன் 

மிகவும் சந்தோஷமான நாளாகக் காணப்படுகிறது. மனம் விரும்பியவரோடு குதூகலமாக இருக்கக் கூடிய நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி, நண்பர்களோடு அரட்டை என மிகவும் ஏகாந்தமாக இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

13/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3